WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
பேர்லின் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி பெற்ற வாக்குகள்
By Christoph Dreier
20 September 2011
use
this version to print | Send
feedback
ஞாயிறன்று நடைபெற்ற பேர்லின் செனட் தேர்தலில்
சோசலிச சமத்துவக் கட்சி
(PSG)
மொத்தம்
1,687
வாக்குகளைப் பெற்றது.
இது ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் அது பெற்ற வாக்குகளோடு
ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகம் ஆகும்;
மேலும் ஐரோப்பிய,
கூட்டாட்சி மற்றும் மாநிலத் தேர்தல்களில் தலைநகரில் அது நடத்திய பிரச்சாரங்களில்
கட்சி பெற்ற மிக அதிக வாக்குகளைப் பிரதிபலிக்கிறது.
மக்களுடைய அதிருப்தியைக் காட்டும் வகையில்
“பாதுகாப்பானதாக”
செய்தி ஊடகத்தினால்
Pirates
மற்றும்
அங்கதக் குழுவான
“The Party”
ஆகிய
இரு கட்சிகளும் உருவாக்கப்பட்டதைக் காட்டிலும் எமது வாக்குகள் குறைந்தவைகள் இல்லை.
இதன் பொருள்
PSG
க்குக்
கிடைத்த வாக்குகள் பொது அதிருப்தி மற்றும் எதிர்ப்பின் வெளிப்பாடுகள் என்று
மட்டுமில்லாமல்,
அதன் புரட்சிகரத் திட்டத்திற்கு ஆதரவு என்ற முழு நனவுடனான முடிவும் ஆகும்.
இந்த முடிவு இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பானது ஆகும்;
ஏனெனில்
PSG
யின்
தேர்தல் பிரச்சாரம் பற்றி முதலாளித்துவச் செய்தி ஊடகம் முழு மௌனம் என்னும்
மறைப்பைக் கொண்டிருந்தது.
இரு பேர்லினை தளமாகக் கொண்ட செய்தித்தாள்களில் ஏதோ ஒரு புறத்தில் வெளியிடப்பட்ட இரு
சிறு கட்டுரைகளைத் தவிர,
PSG
க்கு
அதன் கொள்கைகளை முதலாளித்துவச் செய்தி ஊடகத்தின் மூலம் விளக்கும் வாய்ப்பு அதன்
வேட்பாளர்களில் ஒருவர் ஒரு உள்ளூர்த் தொலைக்காட்சி நிலைய நிகழ்வு ஒன்றில் மிகக்
குறுகிய நேரம் கொடுக்கப்பட்டு கலந்துகொண்டதுதான்.
மற்றய செய்தித்தாள்கள்,
வானொலி,
தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவை
PSG
பிரச்சாரம் பற்றி ஒரு சொல் கூடக் கூற மறுத்துவிட்டன.
இது முற்றிலும் வெளிப்படையான அரசியல் விரோதப்போக்கை ஒட்டித்தான்.
இதைத்தவிர,
மற்றக் கட்சிகளைப் போல் அன்றி,
தன்னுடைய முன்னோக்கைப் பிரச்சாரம் செய்யும் வகையில் உதவுவதற்காக,
PSG
அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவிகளையோ,
பெருநிறுவனங்களில் இருந்து நன்கொடைகளையோ பெறவில்லை.
எனவே வாக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது பிரச்சாரத்தின்போது
PSG
பெற்ற
பெரும் ஆதரவின் விளைவினால்தான்.
கடந்த ஏழு வாரங்களாக,
டஜன் கணக்கான தேர்தல் பிரச்சாரகர்கள் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை ஒட்டினர்,
200,000
துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்,
மற்றும்
PSG
யின்
அரசியல் பிரச்சாரத்தை சமூக இணையத் தளங்களில் பரப்பினர்.
நகரம் நெடுகிலும் நிறுவப்பட்டிருந்த நூறு தகவல் மேசைகளில் கணக்கிலடங்கா விவாதங்கள்
நடைபெற்றன.
இச்செயற்பாடுகள் அனைத்தும்
PSG
க்குக்
கணிசமான ஆதரவு இருப்பதைத் தெரிவித்துள்ளன;
பல புதிய தொடர்புகளையும் உறுப்பினர்களையும்
PSG
பெறமுடிந்தது.
PSG
க்குக்
கிடைத்துள்ள வாக்குகள் அது பிரச்சாரத்தில் அதிகக் குவிப்பைக் காட்டிய பகுதிகளில்
குறிப்பிடத்தக்க வகையில் இருந்தன.
Steglitz, Charlottenburg Köpenick
ஆகிய
இடங்களில் முடிவுகள் மிகக் குறைவுதான்;
ஆனால்
Neukölln
ல்
கட்சி அதன் வாக்கை ஆறுமடங்கு அதிகரித்து
0.2
சதவிகிதம் எனக் கொண்டுவந்தது;
மேலும்
Friedrichshain-Kreuzberg
ல்
ஐந்து மடங்கு அதிகரித்து
0.3
சதவிகிதம் என ஆக்கியது.
Neukölln
ல்
PSG
க்கு
185
வாக்குகள் கிடைத்தன
(2006ல்
30); Friedrichshain-Kreuzberg
ல்
270
வாக்குகள் கிடைத்தன
(2006ல்
55).
BVV
என்னும்
Friedrichshain-Kreuzberg
மாவட்டக் குழுத் தேர்தல்களில்
PSG 0.4
சதவிகித
வாக்குகளைப் பெற்றது—இது
ஒரு தேர்தலில் மிகச் சிறந்த சதவிகிதம் ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களும்
16
வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களும்
BVV
தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
இதே புறநகரில் சில தேர்தல் பிரிவுகளில்
PSG
கிட்டத்தட்ட மொத்தம் போடப்பட்ட வாக்குகளில்
3.1
சதவிகிதத்தைப் பெற்றது.
மற்ற கட்சிகளின் வெற்றுத்தனப் பிரச்சாரத்துடன் ஒப்பிடுகையில்,
PSG
எரியும்
சர்வதேசப் பிரச்சினைகளில் குவிப்புக் காட்டி,
ஒரு புரட்சிகர முன்னோக்கின் தேவையை வலியுறுத்தியது.
வங்கிகள் சுவீகரிக்கப்பட்டு அவைகள் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டுவரப்பட வேண்டும் என அது அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று அதன் கடைசித் தேர்தல் கூட்டம் பிரான்ஸ்,
பிரிட்டன் ஆகியவற்றில் இருந்து வந்த பிரதிநிதிகளாலும் பங்கு பெறப்பட்டது;
அதைத்தவிர பேர்லினில் இருந்து பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
“இப்பிரச்சாரத்தில்
நாம் ஒரு முக்கியமான அடி முன்னோக்கி வைத்துள்ளோம்”
என்று முக்கிய வேட்பாளரான உல்ரிச் ரிப்பேர்ட் சனிக்கிழமை மாலை நடந்த தேர்தல்
கூட்டத்தில் அறிவித்தார்.
“ஒரு
தன்னம்பிக்கை உடைய,
புரட்சிகர மாற்றீடு கொடுப்பவர்களாக பிரச்சாரம் நடத்தினோம்,
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் முகங்கொடுத்தனர்,
இந்நகரில் மட்டுமின்றி,
சர்வதேச அளவிலும்.
பல்லாயிரக்கணக்கான பேர்லின்வாசிகள் எமது வேலைத்திட்டத்தை பற்றி தகவலை அறிந்தனர்;
நூற்றுக்கணக்கானவர்கள் நம்முடன் தொடர்பு கொண்டுள்ளனர்.”
அதே நேரத்தில் எமது வேலைத்திட்டம் பற்றி தொழிலாளர்கள் ஆர்வத்தை
வெளிப்படுத்தி,
நம் சர்வதேச முன்னோக்குகளை அறிந்தனர் என்றாலும்,
இன்னும் பலர் புரட்சிகர முடிவுகளை எடுப்பது,
PSG
உடைய
பணி,
செயற்பாடுகளில் சாதகமாக ஈடுபடுவதில் தயக்கமாகவே உள்ளனர்.
“இப்பொழுது
பலர் நம்மைக் கவனிக்கின்றனர்,
நாம் என்ன கூறுகிறோம் என்பதைக் கருத்திற் கொள்ளுகின்றனர்.”
என்றார் ரிப்பேர்ட்.
“அவர்கள்
எந்த அளவிற்கு வர்க்கப் போராட்டங்கள் ஜேர்மனியில் வெளிப்படையாக அபிவிருத்தியடைகிறதோ
அந்த மட்டத்திற்கு நம்மை நோக்கி
செயலூக்கத்துடன் வருவர்.” |