WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இந்தியா:
மாருதி சுஷூகி நிர்வாகத்தின் கதவடைப்பை பொலிஸ் ஆதரித்து,
ஆலையை கட்டுப்படுத்துகின்றது
By
Sathish Simon
10 September 2011
use
this version to print | Send
feedback
இந்தியாவின்
மிகப் பெரிய கார்
உற்பத்தி
நிறுவனமான மாருதி சுஷூகி
இந்தியா லிமிடெட்,
அதனால்
வரையறுக்கப்பட்ட
"நன்னடத்தை
பத்திரத்தில்"
மூவாயிரத்திற்கும்
மேற்பட்ட
தொழிலாளர்களை
கையொப்பமிட
பலவந்தப்படுத்தும்
முயற்சியாக,
ஆகஸ்ட்
29இல்
இருந்து அதன்
மானேசர் ஆலையை
மூடியுள்ளது.
ஏற்கனவே
நிறுவனத்தின்
சார்பில் மாருதி
உத்யோக் காம்கர்
தொழிற்சங்கம் (MUKU)
இருக்கிறது
என்கின்ற
அடிப்படையில்,
மாருதி
சுஷூகி தொழிலாளர்கள்
தொழிற்சங்கம் (MSEU)
என்ற
தொழிலாளர்களின்
புதிய
தொழிற்சங்கத்தின் பதிவு
விண்ணப்பத்தை
காங்கிரஸ்
தலைமையிலான ஹரியானா
அரசாங்கம்
நிராகரித்தது.
அதற்கடுத்த
வெறும் இரண்டு
வாரங்களுக்குப்
பின்னர்,
மாருதி
சுஷூகி இந்த
கதவடைப்பைக்
கொண்டு வந்தது.
நிர்வாகத்திற்கு
ஆதரவாக இருக்கும்
சச்சரவுமிக்க
அரசாங்கத்தின் நிலைப்பாடு,
நிறுவனத்தின்
தலையாட்டி
தொழிற்சங்கமான MUKUஇல்
இருந்து
தொழிலாளர்கள் அனைவரும்,
ஆனால்
ஒருமித்து
வெளியேறியுள்ளார்கள்
என்ற உண்மையை
அடிக்கோடிடுகிறது.
கதவடைப்பிற்கு
அரசாங்கமளிக்கும்
ஆதரவும்
சமமான அளவில்
தெளிவுபடுத்துகின்றதாக உள்ளது.
MSEU
தொழிற்சங்கமானது,
இந்திய
ஸ்ராலினிய
கம்யூனிஸ்ட்
கட்சிக்கு
(CPI) ஆதரவான
தொழிலாளர்
சம்மேளனமான
அகில-இந்திய
வர்த்தக காங்கிரஸின்
(AITUC)
அங்கீகாரத்தைப்
பெற்றுள்ளதால்,
அது
தொழிலாளர்களின்
சட்டப்பூர்வ
பிரதிநிதித்துவ அமைப்பாகாது
என்ற நிர்வாகத்தின்
வாதங்களையே
அரசாங்கமும்
எதிரொலித்துள்ளது.
கதவடைப்பு
கொண்டு
நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முதல்நாள்
மாலையில்,
அரசாங்கத்தின்
தடை உத்தரவுகளோடு
சேர்ந்து,
கலக தடுப்பு
பொலிஸ் உட்பட
ஐந்நூறு பொலிஸ்
சிப்பாய்கள் ஆலைக்குள்
நிறுத்தப்பட்டனர்.
இன்றைய
தினம் மாருதி சுஷூகி
மானேசர்
ஆலையின் உள்ளே
நூற்றுக்கணக்கான
பொலிஸ்
நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்
கதவடைப்பு
திட்டங்கள்
தொழிலாளர்களிடையே வெளியில்
பரவினால்,
அவர்கள்
கடந்த ஜூனில் இரண்டு
வாரங்கள்
உள்ளிருப்பு போராட்டம்
நடத்தியதைப் போல
போர்குணத்தோடு
உள்ளிருப்பு போராட்டத்தைத்
தொடரக்கூடுமென
தெளிவாக
நிறுவனம் அஞ்சியது.
கதவடைப்பு
செய்யப்பட்டதிலிருந்து,
மாருதி
சுஷூகி
23 தொழிலாளர்களை
வேலையிலிருந்து
நீக்கியுள்ளதோடு,
ஒழுங்கு
நடவடிக்கை,
கீழ்படியாமை
மற்றும் உற்பத்தியை
நிறுத்த
தொழிலாளர்களைத் தூண்டியமை
ஆகிய
குற்றச்சாட்டுக்களைக்
காட்டி
34 தொழிலாளர்களை
தற்காலிகமாக
வேலைக்கு வர
தடைவிதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட
பல தொழிலாளர்களுக்கு
எதிராக
பொலிஸ்
குற்றச்சாட்டுக்களும்
பதிவு
செய்யப்பட்டுள்ளன.
இந்த
வேலைநீக்கங்களும்,
தற்காலிக
வெளியேற்றங்களும்,
ஜூன்
16இல்
நடந்த உள்ளிருப்பு
போராட்டம்
முடிந்ததிலிருந்து
கதவடைப்பு
கொண்டு வரப்பட்டது வரையிலான
இடைப்பட்ட
காலக்கட்டத்தில்
இரண்டு டஜன் தொழிலாளர்கள்
நீக்கப்பட்டதைவிட
மேலதிகமாக செய்யப்பட்டவையாகும்.
இந்திய
தலைநகர் புது
டெல்லியிலிருந்து 30
கிலோமீட்டர்
தூரத்தில்
அமைந்துள்ள மானேசர்
ஆலை
3,500
தொழிலாளர்களைக்
கொண்டுள்ளது.
இவர்களில்
900 பேர்,
அல்லது
வெறும் கால்
பகுதியினரையும்
விட சற்று அதிகமானவர்களே
"வழக்கமான"
அல்லது
நிரந்தர
தொழிலாளர்கள். 1,500
தொழிலாளர்கள்
தொழிற்பயிற்சி
பெறுவோராகவும்,
பயிற்சி-தொழிலாளர்களாகவும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
1,100 பேர்
ஒப்பந்த
அடிப்படையில் அல்லது
குறுகிய-கால
அடிப்படையில்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது
அவர்களுக்கு வேலை
பாதுகாப்பு
கிடையாது என்பதோடு குறைந்த
வேலைவாய்ப்பு காலமே
அளிக்கப்படும்
என்பதை இது குறிக்கிறது.
மானேசர்
அலையின்
அருகாமையிலுள்ள
பல்வேறு குடியிருப்புகளில்
இருந்து சுமார் 150
ஒப்பந்த
தொழிலாளர்களைக்
கூட்டிவர,
செப்டம்பர்
2ஆம்
தேதி காலை,
அந்நிறுவனம்
தனியார்
ஒப்பந்ததாரர்களை
நியமித்ததாக செய்திகள்
தெரிவிக்கின்றன.
ஒருமுறை
திரட்டப்பட்ட அந்த
தொழிலாளர்கள்,
வேலைக்குத்
திரும்ப
அழுத்தமளிக்கும்
ஒரு முயற்சியில்
அடியாட்களால்
அவர்கள்
அச்சுறுத்தப்பட்டார்கள்;
தாக்கப்பட்டதும்
உண்டு.
என்ன
நடந்து
கொண்டிருக்கிறதென்பது
ஏனைய
தொழிலாளர்களுக்குத்
தெரிய வந்த போது,
அவர்கள்
அவசரமாக தலையீடு
செய்தார்கள்.
அவர்களும்
அடியாட்களால்
தாக்கப்பட்டார்கள்,
ஆனால்
அனுமானிக்கப்பட்டதைப் போலவே
நிர்வாகத்தால்
வேலையில் இருந்து விலக்கப்பட்ட
தொழிலாளர்கள்
மட்டுமே பொலிஸால்
கைது செய்யப்பட்டனர்.
மேலாளர்கள்
மற்றும் சில ஒப்பந்த
தொழிலாளர்களைக்
கொண்டு,
உற்பத்தியைத்
தொடங்க முடியுமென
நிறுவனம்
கூறுகிறது.
பெரும்பான்மை
தொழிலாளர்களும்,
அனைத்திற்கும்
மேலாக தொழிற்திறமை
பெற்ற
தொழிலாளர்கள் இல்லாமல்,
பேருக்கு உற்பத்தி
செய்வது என்பதை தவிர வேறொன்றும்
சாத்தியமில்லை
எனக்கூறி,
தொழிற்சங்கங்கள்
இந்த வாதங்களை
மறுக்கின்றன.
மாநிலத்தில்
தொழிற்துறை
குழப்பத்தைத்
தூண்டிவிட,
இந்த மாருதி
சுஷூகி
வேலைநிறுத்தம் இடது
கட்சிகளின் ஓர்
அரசியல்
சூழ்ச்சியே தவிர
வேறொன்றுமில்லை
என காங்கிரஸ் கட்சி
தலைமையிலான
ஹரியானா அரசாங்கம்
முறையிடுகிறது.
“பங்களாதேஷ்
மற்றும் கேரளாவில்
தங்களின்
கோட்டைகளை இழந்துவிட்ட
அரசியல்
உட்கூறுகளால்,
தொழிற்சங்க
அரசியலை ஹரியானாவில்
கொண்டு
வருவதற்கான நகர்வு அங்கே
நடத்தப்படுகிறது,”
இது அம்மாநில
முதல்மந்திரியின்
ஆலோசகர்
ஷிவ் பாட்டியா கூறியது.
“தொழிலாளர்களுக்கும்,
நிர்வாகத்திற்கும்
இடையில்
குழப்பத்தையும்,
கலகத்தையும்
ஏற்படுத்தும்
அவர்களின்
அரசியலை இங்கே அனுமதிக்க
முடியாது,”
என்றவர்
தெரிவித்தார்.
இத்தகைய
அறிக்கைகள்
தொழில்துறை
தொழிலாளர்கள் மத்தியில்
அதிகரித்துவரும்
அதிருப்தி
குறித்து மாநில
அரசாங்கத்தின்
அச்சத்தை
எடுத்துக்காட்டுவதோடு,
அவற்றை
முறியடிக்க
ஒடுக்குமுறையை எடுக்க அது தயாராக
இருப்பதையும்
காட்டுகிறது.
உண்மையில்
வர்க்க போராட்டத்தை
ஒடுக்குவதில்
இடது முன்னனி ஒரு
தீர்க்கமான
பாத்திரம் வகித்துள்ளது.
கடந்த
நான்கு ஆண்டுகளில்,
மே
2004இல்
இருந்து ஜூன்
2008 வரையில்,
அது காங்கிரஸ்
தலைமையிலான தேசிய
கூட்டணி
அரசாங்கமான ஐக்கிய
முற்போக்கு
கூட்டணிக்கு ஆதரவளித்தது.
மேலும்
மேற்கு வங்காளம்
மற்றும்
கேரளா போன்ற அது
ஆட்சியிலிருந்த
மாநிலங்களில் கூட,
ஸ்ராலினிய
கட்சிகளும்,
அவற்றின்
இடது முன்னனியும்
பகிரங்கமாகவே "முதலீட்டாளர்கள்-சார்ந்த"
கொள்கைகளைப்
பின்பற்றின.
அவர்களின்
பங்கிற்கு,
சிபிஐ
மற்றும் சிபிஐ
(மார்க்சிஸ்ட்)
கட்சிகளின்,
முறையே
AITUC மற்றும்
இந்திய
தொழிற்சங்கங்கள்
கழகம்
(சிஐடியு)
பக்கம்
சாய்ந்திருந்த
தொழிற்சங்க
சம்மேளனங்கள்,
தொடர்ந்து
நிர்வாகத்துடனான
வெற்று
உடன்படிக்கைகளோடு
வேலைநிறுத்தங்களை
உடனடியாக
முடிவுக்குக் கொண்டு
வந்தன.
கடந்த
நவம்பரில்
தமிழ்நாட்டின்
Foxconn
மற்றும்
BYD Electronics
ஆலைகளில்
நடந்த தொழிற்சங்கத்தால்
அங்கீகரிக்கப்பட்ட
போர்குணம்மிக்க
போராட்டங்களிலிருந்து
சிஐடியு
தப்பி ஓடியமையே இதற்கு ஒரு
உதாரணமாக உள்ளது.
(பார்க்கவும்:
“India:
Lessons of the Stalinist CITU’s betrayal of the Foxconn and BYD strikes”)
மாருதி
சுஷூகி விஷயத்தைப்
பொறுத்த
வரையில்,
கடந்த
ஜூனில் நடந்த
13 நாள்
வேலைநிறுத்தத்தில்
AITUCஇன்
காட்டிக்கொடுப்பானது,
நிர்வாகம்
அதன் தொழிலாளர்கள்-விரோத
ஒடுக்குமுறையை
முன்னெடுக்க
துணிவை அளித்தது.
அந்த
போராட்டத்திற்கான
ஆதரவு
மானேசரின் ஏனைய ஆலைகளிலும்
மற்றும் குர்கான்
தொழிற்துறை
மண்டலம் முழுவதிலும் பரவி,
ஒரு பரந்த
போராட்டம்
கட்டவிழ்ந்து
வருவதற்கான அச்சுறுத்தல்
ஏற்பட்ட போது,
ஜூன்
16இல்
AITUC தலைவர்கள்
தொழிலாளர்களின்
உள்ளிருப்பு
வேலைநிறுத்தத்தை
முடிவுக்குக்
கொண்டு வர முனைந்து
வந்தார்கள்.
ஜூன்
10இல்,
ஏனைய
வாகனத்துறை மற்றும்
உதிரிபாகங்கள்
உற்பத்தி
நிறுவனங்களிலிருந்து
ஆயிரக்கணக்கான
தொழிலாளர்கள்
மாருதி சுஷூகி ஆலையின்
முன்னால்
ஆர்ப்பாட்டத்திற்குத்
திரண்டனர்.
இந்த
பொங்கியெழுந்த
ஆதரவால்,
காங்கிரஸ்
கட்சியின் மாநில
அரசாங்கம்
மாருதி சுஷூகி
வேலைநிறுத்தத்திற்குத்
தடைவிதித்ததோடு,
ஸ்ராலினிய
தொழிற்சங்கங்கள்
அரசு தொழிலாளர்
மேம்பாட்டு அதிகாரிகள்
மற்றும்
நிர்வாகத்துடன் வெறித்தனமான
பேச்சுவார்த்தைகளுக்குள்
நுழைய செய்தது.
ஜூன்
20இல்
குர்கான் தொழில்துறை
வளாகத்திலுள்ள
200,000
தொழிலாளர்களும்
இரண்டு மணிநேர அனுதாப
வெளிநடப்பு
செய்ய திட்டமிட்டிருந்த
நிலையில்,
அந்த
வேலைநிறுத்தம்
விலக்கிக்
கொள்ளப்பட்டது.
அதுகுறித்து
தொழிற்சங்க
தலைவர்களின்
வெற்றி முழக்கங்கள் இருந்த
போதினும்,
MSEUஐ
தொழிலாளர்களுக்காக
பேரம்பேசும்
பிரதிநிதித்துவ அமைப்பாக
ஏற்க வேண்டுமென்ற
தொழிலாளர்களின்
அடிப்படை கோரிக்கையை
நிர்வாகம்
ஏற்க மறுத்தது.
நிர்வாகம்
வேலையிலிருந்து
நீக்கப்பட்ட
பல தொழிலாளர்களை
நிபந்தனைக்குட்பட்டு
மீண்டும்
சேர்த்துக்கொள்ள
உடன்பட்டது.
பாதிக்கப்பட்ட
தொழிலாளர்கள்
இன்னமும் கூட
ஒழுங்கு நடவடிக்கை குறித்த
விசாரணையை
முகங்கொடுத்து
வருகின்றனர்.
தென்னிந்திய
மாநிலமான
தமிழ்நாட்டில்
ஒரகடம் சிறப்பு பொருளாதார
மண்டலத்தில் மற்றும்
ஸ்ரீபெரும்புத்தூர்
அருகிலுள்ள
சிறப்பு பொருளாதார
மண்டலத்தில்
நடந்த வேலைநிறுத்தத்தில்
அவர்கள் வகித்த
பாத்திரங்களுக்காக,
கடந்த
ஆண்டும்,
இவ்வாண்டின்
தொடக்கத்திலும்
பாக்ஸ்கான், BYD,
சான்மினா
மற்றும் ஹூண்டாய்
ஆகிய
நிறுவனங்களில் இருந்து பல
தொழிலாளர்கள்
நீக்கப்பட்டனர்.
அவர்களின்
பாதுகாப்பிற்காக
ஸ்ராலினிய
சிபிஎம் மற்றும் சிஐடியு
எந்தவொரு
பிரச்சாரத்தையும்
முன்னெடுக்கவில்லை.
மாறாக,
அரசு
தொழிலாளர் நலத்துறை
ஆணையாளர்,
முதலாளித்துவ
நீதிமன்றங்கள்
மற்றும் அடுத்த
மாநில தேர்தல்களில் அரசாங்க
மாற்றம் ஆகியவற்றின்
மீது
நம்பிக்கை வைக்குமாறு
பாதிக்கப்பட்டவர்களுக்குக்
கூறப்பட்டது.
தொழிலாள
வர்க்கத்தை
முதலாளித்துவத்தின்
ஏதோவொரு பிரிவிடம்
அரசியல்ரீதியாக
அடிபணிய வைக்கும் ஸ்ராலினிய
கட்சிகளின்
அரசியலில் இருந்தே,
நேரடியாக
அவற்றின்
தொழிற்சங்கங்களின்
பாத்திரங்களும்
முன்வருகின்றன.
அவர்களின்
வெறும் கோரிக்கைகளை
வெல்வதற்காக
இருந்தாலும்
கூட,
மாருதி
சுஷூகி ஆலையிலுள்ள
தொழிலாளர்களும்,
அதைப்போலவே
இந்தியா முழுவதிலும்
உள்ள
தொழிலாளர்களும்,
கூட்டு
பேரம்பேசும் கவசத்தை
உடைக்க
வேண்டும்.
அதில் தான்
ஸ்ராலினிஸ்டுகள்
போராட்டங்களை
தணிக்கவும்,
அவற்றை
வேறொரு புதிய
அச்சில் நிறுத்தவும்
முனைகின்றனர்.
உத்தியோகபூர்வ
தொழிற்சங்கங்கள்
மற்றும்
முதலாளித்துவ கட்சிகளின்
கட்டுப்பாட்டிற்கு
வெளியில்,
சாமானிய
தொழிலாளர்களின்
கட்டுப்பாட்டில்
இருக்கும் புதிய போராட்ட
அமைப்புகள்,
ஒருமித்த
எதிர்ப்பை
ஒன்றுதிரட்ட
தொழிலாள வர்க்கத்தால்
கட்டியெழுப்பப்பட
வேண்டும்.
இந்திய
வாகனத்துறை
தொழிலாளர்கள்
வரவிருக்கும் உலகளாவிய
வாகனத்துறை
அதிர்வுக்கு
எதிராகவும்,
அனைத்து
தொழிலாளர்களின்
வேலைகள்
மற்றும் வேலையிட சூழல்கள்
மீதான
தாக்குதல்களுக்கு
எதிராகவும் ஆசியா,
ஐரோப்பா,
இலத்தீன்அமெரிக்கா
மற்றும் அமெரிக்கா
ஆகிய
நாடுகளில் உள்ள அவர்களின்
சர்வதேச சகோதர,
சகோதரிகளைத்
அணுகவேண்டும்.
உலக
முதலாளித்துவத்திற்கு
இந்தியாவை
மலிவுக்கூலி
தொழிலாளர்களை உருவாக்கும்
உற்பத்தியாளராக
ஆக்க முனையும்
பெருவியாபாரங்களுக்கு எதிராக
தொழிலாள வர்க்கத்தை
ஒன்றுதிரட்டுவதற்கான
போராட்டமானது,
எல்லாவற்றிற்கும்
மேலாக,
ஓர்
அரசியல்
போராட்டமாகும்.
தொழிலாளர்களின்
அதிகாரத்திற்காகவும்
மற்றும்
சோசலிச அடிப்படையில்
சமூகத்தை
மாற்றியமைக்கவும் போராடும்
தொழிலாள
வர்க்கத்தின் ஒரு
பெரும் அரசியல்
கட்சியைக்
கட்டியெழுப்புவது அதற்கு
அவசியப்படுகிறது.
|