சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Greek workers plunged into social misery

கிரேக்கத் தொழிலாளர்கள் சமூகப் பேரழிவுக்குள் தள்ளப்படுகின்றனர்

By Robert Stevens
15 September 2011

use this version to print | Send feedback

330 பில்லியன் யூரோக்களை ஒட்டிய கடன்களைத் திருப்பித்தரா நிலையில் கிரேக்கம் இருக்கையில், யூரோப் பகுதியில் இருந்து கட்டாயமாக வெளியேறும் நிலையில் இருக்கையில், பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் PASOK அரசாங்கம் அதன் சிக்கன நடவடிக்கைத் திட்டத்தை ஏற்கனவே திவாலாகிவிட்ட மக்கள் மீது அதிகப்படுத்தி வருகிறது.

அக்டோபர் 2009ல் அது தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து PASOK பல சமூக எதிர்ப் புரட்சிகளைத் தொடக்கி தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை அழித்துவருகிறது.

வேலையின்மை ஜூன் மாதம் உத்தியோகபூர்வமான 16 சதவிகிதத்தை (800,000) அடைந்தது; உண்மையில் இது 30 சதவிகிதத்திற்கும் அருகேதான் இருக்கும். அரசாங்கம் கிட்டத்தட்ட 120,000 பொதுத்துறை வேலைகளை இல்லாமல் செய்தல் அல்லது குறைந்த ஊதியம் கொடுத்து ஓராண்டிற்குள் மொத்தப் பணிநீக்கங்கள் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில் வேலையின்மை விகிதம் இன்னும் அதிகமாகும். திங்களன்று அரசாங்கம் 150 பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து 3,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது; அரசாங்க நிறுவனங்கள் ஒருதொழிலாளர் தொகுப்பு இருப்பு ஒன்றைக் கொள்ளும், அவர்கள் பெறும் ஊதியம் வேலையின்மை நலன்களைவிடச் சற்றே கூடுதலாகத்தான் இருக்கும்.

சனிக்கிழமையன்று பாப்பாண்ட்ரூ பிரதம மந்திரியின் ஆண்டு உரையில், பொருளாதாரம் பற்றி தெசலோனிகி சர்வதேச ஆண்டு விழாவில், ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழப்பர், இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் ஊதியங்களில் வெட்டுக்களைக் காண்பர் என்பதை உறுதிபடுத்தினார். இந்த நடவடிக்கைகள் கடந்த வாரம் மந்திரிசபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டன; இந்தக் கடுமையான நடவடிக்கைகளை ஈடாகவைத்துத்தான் IMF இடம் இருந்து இரண்டாவது 109 யூரோக்கள் பில்லியன் கடனை கிரேக்கம் பெற முடியும். ஒரு சர்வதேச நாணய நிதிய / ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு கிரேக்கத்திற்கு புதனன்று வருகை புரிந்து, 6வது கடன் தொகையான 8 பில்லியன் யூரோக்களுக்கு ஒப்புதல் தரலாமா என ஆய்கிறது. இக்கடன் இல்லாவிடில் கிரேக்கம் உடனே தன் கடன்களைத் திருப்பித்தர முடியாமல் போகும்.

கிட்டத்தட்ட அன்றாட வாடிக்கை நடவடிக்கையாகியிருப்பதில், முக்கிய அரசாங்க நபர்கள் கிரேக்கம் சரிந்துவிடாது என்னும் உத்தரவாதத்தை நிதியச் சந்தைகளுக்கு கொடுக்க முயல்கின்றனர். வெள்ளியன்று நிதிமந்திரி Evangelos Venizelos வார இறுதியில் கிரேக்கம் திவாலாகாது என்று கூறும் கட்டாயத்திற்கு உட்பட்டார். “இக்கட்டத்தில் கிரேக்கம் மிகத் தெளிவான தகவலைக் கொடுக்கிறது நாங்கள் முற்றிலும் உறுதியாக இருக்கிறோம், எந்த தற்காலிக அரசியல் இழப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது, நாங்கள் எங்கள் பங்காளிகளுக்குக் கொடுக்க வேண்டிய கடப்பாடுகளை முற்றிலும் பூர்த்தி செய்வோம் என்றார்.

திங்களன்று துணை நிதி மந்திரி Filippos Saschinidis  கிரேக்கம் அக்டோபர் வரை செலவழிக்கத்தான் பணத்தைக் கொண்டுள்ளது என்று உறுதிப்படுத்தினார்.

சமூக நிலைமைகளை அழிப்பதில் எந்த முயற்சியும் ஒதுக்கப்படவில்லை. தெசலோனிகியில் நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பாப்பாண்ட்ரூ  திட்டமிட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தில் அரசாங்கப் பணியாளர்களின் வேலைக் காலத்தை அகற்றிவிடுவாரா என்று கேட்கப்பட்டார். அவர் பதிலளித்தார்: “நாம் என்ன விவாதிக்கிறோம் என்பதில் வரையறை ஏதும் இல்லை.”

2010 இதே காலத்தில் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், 2011 இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவிகிதம் எனக் குறைப்பதற்கு தூண்டியிருந்த மந்த நிலையை உருவாக்கியது சிக்கன நடவடிக்கைகளே.

GSEE/Adedy தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் கொடுத்துள்ள அறிக்கை ஒன்றின்படி, ஒரு மில்லியனுக்கும் மேலான கிரேக்கர்கள் ஆண்டு இறுதிக்குள் வேலையின்றி இருப்பர், உத்தியோகபூர்வ வேலையின்மை 2012ல் 26 சதவிகிதத்தை எட்டும். இது 11 மில்லியனுக்கு சற்றே மேலான மக்கட்தொகையை கொண்ட நாட்டில், உழைக்கும் மக்கள் அந்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதிப்பேராக இருக்கையில்.

தேசிய வேலையின்மை அதே காலம் 2008 உடன் ஒப்பிடுகையில், 2011 முதல் காலாண்டில் 95 சதவிகிதம் உயர்ந்தது.

Elstast அமைப்பு தொகுத்துள்ள புதிய புள்ளிவிவரங்கள் மேற்கத்தைய மாசிடோனியா வடக்குப் பிராந்தியத்தில், மந்த நிலையில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் சிறு வணிகங்கள் மூடப்பட்டன என்று மதிப்பிடப்பட்டிருக்கையில், உத்தியோகபூர்வ வேலையின்மை இப்பொழுது ஜூன் 2010ல் இருந்த 14.9 என்பதை விட 22 சதவிகிதம் என உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில்சமூக சமத்துவமின்மை அதிகரித்துவிட்டது, சமுகநலச் செலவுகள், பொதுவாக சமூக உரிமைகளே குறைந்துவிட்டன என்று காணப்படுகிறது. பொது வருமானங்கள் 20 சதவிகிதம் குறைந்துவிட்டன, ஓய்வூதியங்கள் 25 முதல் 50 சதவிகிதம் வரை குறைந்துவிட்டன.

ஒரு சமீபத்திய ராய்ட்டர்ஸ் தகவல்படி, Klimaka NGO கிரேக்கத்தில் வீடுகள் இல்லாமல் தெருக்களில் வசிப்பவர் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 17,000 த்தில் இருந்து 20,000 என உயர்ந்துவிட்டது. ஏதென்ஸில் வீடு இல்லாதவர்களுக்கான நகரசபை சேவைகள் 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாகிவிட்டது என்று கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தில் ஆகஸ்ட் 24ம் திகதி, கல்விச் சீர்திருத்த வரைவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் உயர்கல்விக்கான செலவுகளில் கடுமையான தாக்குதல்கள் கொடுக்கும் சட்டங்களை இயற்றியுள்ளது. இச்சட்டவரைவு, கல்வி மந்திரி Anna Diamantopoulou சமர்ப்பித்தது உயர்கல்வி தனியார்மயமாக்கப்படலுக்குத் தளம் அமைக்கிறது; பயிற்சிக் கட்டணமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது; இது பிரிட்டன் மாதிரியை ஒட்டிய தன்னாட்சிப் பல்கலைக்கழக நிர்வாகத்தை அனுமதிக்க உள்ளது. இலவசக் கல்வி என்பது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும்தான் கொடுக்கப்படும்; இதற்குப் பிந்தைய ஆண்டுகளில் கட்டணங்கள் சுமத்தப்படும். உயர்கல்வித் தகுதி அற்றவர்கள், பல்கலைக்கழகங்களுக்குப் புறத்தே உள்ளவர்கள் நிறுவனங்களை நடத்த அனுமதிக்கப்படுவர்; இவை மதிப்பீட்டுத் தரத்தைத் தளமாகக் கொண்டிருக்கும்; தொழில்துறைச் சார்பை ஒட்டி நிதியம் அளிக்கப்படும். இருக்கும் தேசிய ஊதிய அளவுகள் நீக்கப்பட்டு உற்பத்தித் தொடர்புடைய ஊதிய விகிதங்கள் நடைமுறைக்கு வரும்.

பல்கலைக்கழக வரவு-செலவுத் திட்டங்கள் ஏற்கனவே 2010ல் 30 சதவிகிதம் குறைக்கப்பட்டுவிட்டன; மற்றும் ஒரு 20 சதவிகிதம் குறைவு 2011ல் நடைபெறுகிறது.

IMF/EU உடன் 2010ல் அது கையெழுத்திட்ட முதல் 110 பில்லியன் யூரோக்கள் கடன் நிதியை கிரேக்கம் இன்னும் நம்பியுள்ளது; அதுவும் சமீபத்திய ஜூலை உடன்பாடுகளும் நைந்து உள்ளன. பைனான்சியல் டைம்ஸ்  செவ்வாயன்று ஜூலை மாத IMF/EU கடன் பொதியைப் பற்றி, “இருமாதங்களுக்குப் பின் புதிய பொதியின் ஒவ்வொரு பகுதியும், கடந்த மே மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட முந்தைய 110 பில்லியன் யூரோ பிணை எடுப்பும் சரியும் தன்மையில் உள்ளன என எழுதியுள்ளது.

கிரேக்கத்தின் தேவைகளை நன்கு அறிவதற்கும், இதன் இரண்டாவது பிணை எடுப்பு ஏன் அச்சறுத்தலில் உள்ளது என்பதை அறிவதற்கும் ஏதென்ஸ் அதன் அன்றாட நடவடிக்கைகைச் செயல்படுத்துவதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேவைப்படும் தொகையான 172 பில்லியன் யூரோக்கள் என்பதைக் காண்பது தெளிவைக் கொடுக்கும். கிரேக்கத்தில் வரிசெலுத்துபவர்கள், சர்வதேசக் கடன் கொடுப்பவர்கள் அல்லது தனியார் முதலீட்டாளர்கள் என்று யாரேனும் போதுமான பணம் கொண்டுவந்து கிரேக்கத்தின் தேவையை நிரப்ப முடியாவிட்டால், நாடு பெரும் ஒழுங்கற்ற, திருப்பிக் கொடுக்க முடியாத நிலையை எய்தும் என்று பைனான்சியல் டைம்ஸ் சேர்த்துக் கொண்டது.

இந்த ஆண்டு முன்னதாக IMF/EU ஏதென்ஸ் உடனடியாக 50 பில்லியன் யூரோ மதிப்புடைய தனியார்மயமாக்குதலை தொடங்க வேண்டும் என்று கோரின. இதற்கு PASOK உடனே ஒப்புக் கொண்டது. ஜூலை உடன்பாட்டின்படி புதிய கடன்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில், ஏதென்ஸ் 28 பில்லியன் யூரோக்களை அரசாங்கச் சொத்துக்களை அடுத்த 3 ஆண்டுகளில் விற்பனை செய்வதின் மூலம் எழுப்புவதாக உறுதியளித்தது. இதுவரை ஒரு தனியார்மயச் செயல்தான் முடிந்துள்ளதுஅது ஹெலெனிக் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் 10 சதவிகித பங்குகள் Deutsche Telekom ற்கு 390 மிலியனுக்கு விற்றுள்ளது ஆகும்.

தனியார்மயமாக்குதல் இலக்கை எட்டுவதில் தோல்வி என்பது கடன்கள் திருப்பிக் கொடுக்கப்பட முடியாவிட்டால் அரசாங்கச் சொத்துக்கள் மிக மலிவாக வாங்கப்பட முடியும் என்ற உண்மையில்தான் உள்ளது.

 

கிரேக்க அரசாங்கக் கடனின் அளவின் நெருக்கடி நிலை, மற்றும் யூரோ வலையப்பகுதி முழுவதுமே மலைபோல் உள்ள கடன் ஆகியவற்றின் தன்மை, இந்நடவடிக்கைகள் அடிப்படைப் பிரச்சினைகளைக்கூட தீர்க்க முடியாது என்ற வகையில் உள்ளன நியூ யோர்க் டைம்ஸில் ஞாயிறன்று வந்த கட்டுரை ஒன்றில், “கிரேக்கம் ட்ரஷ்மாவிற்குத் திரும்புகிறது என்ற தலைப்பில் வந்துள்ளதில், 2008ல் கிரேக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலைக்கு 30,400 டொலர்களில் வருமானம் இருந்தது, அது ஐரோப்பிய ஒன்றியச் சராசரிக்கு அருகில் இருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பல்கேரியாவின் 14,000 டொலர்கள், மாசிடோனியாவின் 10,700 டொலர்கள் இவற்றுடன் ஒப்பிடத்தக்கது, இதுகிரேக்கம் போட்டித்தன்மை பெற வேண்டுமானால் அதன் வாழ்க்கைத் தரங்களில் 40 சதவிகிதம் வரை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற பொருளாகும் என்று எழுதப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கி UBS சமீபத்தில் நடத்திய பகுப்பாய்வு கிரேக்கம் யூரோவை விட்டு வெளியேறினால், ஒவ்வொரு குடிமகனும் முதல் ஆண்டில் 9,500 முதல் 11,500 யூரோக்கள் பாதிப்பிற்கு உட்படுவர் எனக் கூறியுள்ளது. இது முன்னோடியில்லாத வகையில் முதல் ஆண்டில் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 40க்கும் 50 சதவிகிதத்திற்கும் இடையே இழப்பு என்ற பொருளைத்தரும். மக்கள் தொடர்ந்த ஆண்டுகளில் தலைக்கு 3,000 முதல் 4,000 யூரோக்களை இழப்பர் என்றும் UBS கண்டறிந்துள்ளது.

இப்படித் தேவையை நிறைவேற்றுவதை சுமத்துவதற்கு சர்வாதிகார வழிவகைகளால்தான் முடியும். குறிப்பிடத்தக்க வகையில் கல்வி பற்றி சட்டவரைவும் வரலாற்றுத் தன்மை மிகுந்த Academic Asylum என்பதை அகற்றியுள்ளது (இதன்படி பொலிசார் உயர்கல்விக் கூடங்களில் நுழைவதில் இருந்து தடுக்கப்பட்டிருந்தனர்). இச்சட்டம் முதலில் 1974ம் ஆண்டு இயற்றப்பட்டது; அதற்குக் காரணம் 1973ல் ஏதென்ஸ் தொழில்நுட்பக் கூடத்தில் அப்பொழுது ஆட்சியில் இருந்து இராணுவக் குழுவிற்கு எதிரான ஒரு எழுச்சியில் மிருகத்தனமாக மாணவர்கள் ஏராளமாகக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் கட்டுமீறி விரிவாகாமல் உறுதி செய்ய உழைக்கின்றன. கிட்டத்தட்ட 25,000 பேர் அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிராகப் பங்கு பெற்ற தெசலோனிகியின் 2 வார இறுதி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, இன்னும் எதிர்ப்புக்களும் வேலைநிறுத்தங்களும் இவ்வாரமும் நடைபெற்றன.

செவ்வாயன்று தங்கள் தொழில்தாராளமயமாக்கப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான வேலைநிறுத்தம் செய்த டாக்ஸி டிரைவர்கள், பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அரசாங்க ஊழியர்கள் PASOK யின் திட்டமான வேலைகள், ஊதியங்கள் குறைக்கப்படுவதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர்; அதே சமயம் வரி வசூலிப்பவர்கள் மற்றும் சுங்க அதிகாரிகள் ஒரு இரு-நாள் வேலைநிறுத்தத்தை முடித்தனர். குப்பை சேகரிப்பவர்கள் ஞாயிறன்று மற்றொரு வேலைநிறுத்தத்தைத் தொடங்கி குறுகிய கால ஒப்பந்தம் முடிந்துவிட்ட தங்கள் சக ஊழியர்கள் மீண்டும் பணியில் இருத்தப்பட வேண்டும் என்று கோரினர்.

வரிவசூலிப்பவர்களின் வாழ்க்கைத் தரங்கள் சரிவைப் பற்றிக் கூறுகையில், POE-DOY வரிவசூலிப்போர் சங்கத்தின் தலைவரான Yiannis Grivas கூறினார்: “கடந்த ஒன்றரை ஆண்டில் 60 சதவிகிதத்திற்கும் மேலாக எங்கள் வருமானம் வெட்டிற்கு உட்பட்டது குறித்து நாங்கள் கூறுகிறோம்கடந்த ஆண்டு 30 சதவிகிதம், இந்த ஆண்டு 30 சதவிகிதம் என; புதிய ஊதிய முறை இப்படித்தான் உள்ளது. எனவே நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத்தான் வேண்டும்.”

கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிற்சங்கங்கள் கணக்கிலடங்கா இத்தகைய எதிர்ப்புக்களை நடத்தியுள்ளன; பாப்பாண்ட்ரூ சுமத்தும் தொடர்ந்த வெட்டுக்களில் இவை எந்தப் பாதிப்பையும் கொடுக்காது என்பதை அவை நன்கு அறியும்.

இந்த வாரம் முக்கிய GSEE தொழிற்சங்கக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை அரசாங்கத்தின்தொழிலாளர் இருப்பு நடவடிக்கைகள்முட்டுச் சந்துக் கொள்கைகள், இவை வேலையின்மை பட்டியலைப் பெருக்கும், சமூக ஒழுங்கில் இடைவெளியை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. GSEE ஆனது, PASOK ஆட்சியின் முக்கியத் தளம் தான்தான் என்னும் அதன் அடிப்படைப் பங்கை வெளிப்படுத்தியுள்ளது; மேலும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த உதவும் நிலையைத் தெளிவாக்கும் வகையில், பணிநீக்கங்களுக்கு வகை செய்யும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் பணிகளையும் அமைப்புக்களையும் ஒழுங்காக மறுசீரமைக்க வேண்டும்; அது தான் அமைப்புக்கள் மற்றும் பரந்த பொதுத்துறைப் பிரிவுகளிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனையும் பயன்படுத்தும் என்று கூறியுள்ளது.