சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European finance ministers delay loan, press Greece for deeper cuts

ஐரோப்பிய நிதி மந்திரிகள் கடன் கொடுத்தலைத் தாமதப்படுத்தி, கிரேக்கம் ஆழ்ந்த வெட்டுக்களைச் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர்

By Barry Grey 1
7 September 2011

use this version to print | Send feedback

ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரிகள், அடுத்த மாதம் கிரேக்கம் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமற் போவதைத் தடுக்கத் தேவையான 8 பில்லியன் யூரோக் கடனை வழங்குவது பற்றிய முடிவைத் தாமதப்படுத்தியுள்ளனர்; மேலும் அமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்னர் ஐரோப்பிய பிணைஎடுப்பு நிதி விரிவாக்கப்பட வேண்டும், புதிய நிதியக் கரைப்பு என்னும் அச்சறுத்தலைச் சமாளிக்க குறுகிய கால, குறைந்த வரம்புடைய நிதிய ஊக்க நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியதையும் நிராகரித்துவிட்டனர்.

EU பொருளாதார மற்றும் நிதிய விவகாரங்கள் குழுவின் (Ecofin) அவசரக்காலக் கூட்டம், வெள்ளியன்று போலந்தில் ரோக்ளாவில் நடைபெற்றது அமெரிக்க ஜேர்மனியத் தலைமையிலான ஐரோப்பியச் சக்திகளுக்கு இடையேயும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்குள்ளேயும் இருக்கும் பரந்த பிளவுகளை உயர்த்திக் காட்டியது.

கிரேக்கம் சர்வதேசக் கடன்களைத் திருப்பிக் கொடுத்தலில் தவிர்க்க முடியாமல் தவறு ஏற்படக்கூடும் என்னும் வாய்ப்பு சமீபத்திய வாரங்களில் நிதியச் சந்தைகள் அனைத்திலும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது; இது முக்கிய ஐரோப்பிய வங்கிகள், குறிப்பாக பிரான்ஸில் உள்ளவற்றின் உறுதித் தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா ஆகியவற்றில் பொருளாதார வளர்ச்சி வியத்தகு அளவில் குறைவதற்கு வகை செய்துள்ளது.

கீத்னரைக் கூட்டத்திற்கு அனுப்பியதிலிருந்தே வாஷிங்டனின் கவலை அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது; இதுதான் முதல் தடவையாக ஒரு அமெரிக்கர் ஐரோப்பிய நிதிமந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுவதாகும். கீத்னர் நிதி மந்திரிகளுடன் 30 நிமிடங்களுக்கு மேலாகச் செலவழித்து, இன்னும் விரைவான, உறுதியான நடவடிக்கைகள் அரசாங்கத் திவால்களைத் தவிர்க்க எடுக்கப்பட்டால், அவை பொது ஐரோப்பிய நாணய குறைமதிப்பு மற்றும் உலக வங்கி முறைச் சரிவைத் தவிர்த்தல் ஆகியவற்றைச் செய்யும் என்று கூறினார்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்பேரழிவு இடர் பற்றி எச்சரிக்கும் வகையில் கூறினார்: “அரசியல்வாதிகளும் வங்கிகளும் சந்தைக்கு வரக்கூடிய பேரழிவு இடர்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும் தொடர்ந்து வரக்கூடிய திருப்பிக் கொடுக்காத்தன்மை என்னும் அச்சுறுத்தலை உறுதியாக அவர்கள் அகற்ற வேண்டும் யூரோ நிறுவனங்களை அகற்றும் பயனற்ற பேச்சுக்களைக்கூட தவிர்க்க வேண்டும்.”

கீத்னரின் எச்சரிக்கையை பிரிட்டனின் நிழல் நிதிமந்திரி (தொழிற் கட்சி) எட் பால்ஸும் எதிரொலித்தார். BBC செய்தியிடம் அவர் வெள்ளியன்று, “கிரேக்கத் தவறைப் பற்றி மக்கள் பேசியுள்ளார்கள் என்றால், அதை இன்னும் தீர்க்கில்லை, கிரேக்கத்தை நல்ல போக்கில் இன்னும் செலுத்தவில்லை, சந்தைகள் இப்பொழுது, “நல்லது, நீங்கள் கிரேக்கப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்றால், இது ஏன் ஸ்பெயினுக்கும் இத்தாலிக்கும் பரவாது?” எனக் கேட்பர் என்றார்.

நீங்கள் ஒன்றும் திவாலாகிவிட்ட இத்தாலிய வங்கி முறையைக் கொண்டு, ஒரு இத்தாலியத் தவறையும் ஏற்படுத்தியபின், பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றிலும் பேரழிவை ஏற்படுத்தாமல் இருக்க முடியாது; அதைத்தான் நாம் காண்கிறோம், ஒரு துப்பாக்கி முனையை.”

கூட்டத்தைச் சூழ்ந்திருந்த நெருக்கடி நிலைமைகள் முந்தைய நாள் ஐந்து முக்கிய மத்திய வங்கிகள்அமெரிக்க பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி, பாங்க் ஆப் இங்கிலாந்து, ஸ்விஸ் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆப் ஜப்பான்ஆண்டு இறுதி வரை ஐரோப்பிய வங்கிகளுக்கு வரம்பற்ற முறையில் அமெரிக்க டாலர்களைக் கொடுக்கும் என்ற அறிவிப்பினால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

ஐரோப்பிய வங்கிகளில் மிகப் பெரியவை சில, இரு பெரிய பிரெஞ்சு வங்கிகள் வாரத் துவக்கத்தில் மூடியினால் குறைத்தரத்திற்கு உட்படுத்தவை, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் முக்கிய வங்கிகள் ஆகியவை அமெரிக்க வங்கிகளிடம் இருந்து அல்லது நிதியச் சந்தை நிதிகளில் இருந்து கடன்களைப் பெற முடியவில்லை: காரணம், அவை பெரிதும் கிரேக்கக் கடனில் ஈடுபட்டுள்ளன.

மத்திய வங்கிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை இந்த வங்கிகள் கொண்டுள்ள அழுத்தங்களை அகற்றும் வடிவமைப்பைக் கொண்டவை; சில வங்கிகள் தங்கள் பங்குகளின் மதிப்புக்களில் பேரழிவு தரும் சரிவுகளைக் கண்டுள்ளன; வரவிருக்கும் நாட்கள் அல்லது வாரங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை தோல்வியைத் தவிர்க்க முயல்கின்றன.

வியாழனன்று ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சி பற்றிய அதன் கணிப்பை 0.2 சதவிகிதம் என்று மூன்றாவது காலாண்டிற்கும் 0.1 சதவிகிதம் என நான்காம் காலாண்டிற்கும் வெட்டியுள்ளது; இது இரு காலங்களிலும் முன்னதாக 0.4 எனக் கூறப்பட்டத்திலிருந்து ஏற்பட்டுள்ள குறைவாகும்.

போலந்தில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, மூடி இத்தாலியின் அரசாங்கக் கடன் தரத்தை குறைக்கப்போவதாக வதந்திகள் வந்தன; இத்தாலி கண்டத்தின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரம் ஆகும்.

பிரான்ஸில் பங்குச் சந்தை வணிகத்தில் கடைசி மணிநேரத்தின்போது நிதிய மந்திரிகள் கடன் நெருக்கடியைத் தடுக்கும் நடவடிக்கைகள் எதிலும் உடன்பாடு காணவில்லை என்று வந்த செய்தி வங்கிச் சந்தைகள் பங்குகளில் தீவிரச் சரிவை ஏற்படுத்தி CAC 40 குறியீட்டை எதிர்மறைப்பகுதியில் தள்ளியது.

ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் அமெரிக்கா, ஜப்பான் ஆகியற்றின் ஒருமித்த விடையிறுப்பு தொழிலாளர் வர்க்கம் உலக முதலாளித்துவ நெருக்கடிக்கான விலையைக் கொடுக்க வேண்டும், இதற்கு வேலைகள், ஊதியங்கள் வெட்டப்பட வேண்டும், சமுகநலப் பணிகள் குப்பையில் போடப்பட வேண்டும், ஓய்வூதியங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதாகும். முன்னதாகவே EU, ECB மற்றும் IMF ஆகியவற்றினால்  கிரேக்கத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட பிணைஎடுப்பு அடுத்தக் கட்ட நிதியை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம், நிதிய மந்திரிகள் கிரேக்க அரசாங்கம் இன்னும் செலவுக் குறைப்புக்கள், அரசாங்கச் சொத்துக்களை இன்னும் விரைவான, பரந்த தனியார்மயமாக்கல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என்ற அழுத்தங்களைக் கொடுக்கின்றனர்.

கூட்டத்திற்கு முன் IMF ன் நிர்வாக இயக்குனர் Christine Lagarde, வாஷிங்டனுக்கு நெருக்கமானவர், இதேபோன்ற கொள்கைகள் ஐரோப்பியக் கடன் நெருக்கடியைத் தீர்க்கப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிடுபவர், கிரேக்கத்திடம் IMF ஆனது 8 பில்லியன் யூரோக்களை பிணை எடுப்பிற்கு ஈடாக அது கடன் மற்றும் பற்றாக்குறைக் குறைப்பு இலக்குகளை நிறைவு செய்தால் ஒழிய வழங்காது என்று எச்சரித்தார்.

கிரேக்கம் உறுதியளிக்கப்பட்டுள்ள யூரோ உதவி நிதியான 8 பில்லியன் யூரோக்களைப் பெற்றால் ஒழிய தன்னிடம் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியங்கள், ஓய்வூதியங்களைக் கொடுக்கக்கூட பணம் இல்லை என்று கூறியுள்ளது.

ஆனால் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை அழிப்பதற்கு நெருக்கடியைப் பயன்படுத்துவது குறித்து ஒற்றுமை இருந்தாலும், தேசிய, பிராந்தியப் பிளவுகளை ஒட்டி, அரசாங்கங்கள் தங்கள் நாட்டுப் பெருநிறுவன-நிதிய உயரடுக்குகளைத் தனிமைப்படுத்த முற்பட்டு, தங்கள் போட்டியாளர்கள் மீது மிக அதிக தீயவிளைவுகளைச் சுமத்த முயலுகையில், அழுத்தங்கள் தீவிரமாகப் பெருகிவிட்டன.

நிதிமந்திரிகள் கூட்டம் EU வின் 440 பில்லியன் யூரோ பிணைஎடுப்பு நிதியை அதிகரிக்க ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு நிறுவனத்தை (EFSF) வளப்படுத்துதல் தோல்வியுற்றுள்ளது; இது கடந்த ஜூலை மாதம் கொள்கையளவில் ஏற்கப்பட்டிருந்தது. கூட்டம் அடுத்த மாதம் வரை இத்திட்டத்தின் இசைவு யூரோப் பகுதியிலுள்ள 17 நாடுகளின் தேசியப் பாராளுமன்றங்களின் ஒப்புதல் பெறுவதற்காக ஒத்தி வைத்துள்ளதுஇத்தகைய இசைவு கிடைக்குமா என்பது சந்தேகத்திற்கு உரியது; ஏனெனில் பல நாடுகளிலும் அரசியல் எதிர்ப்புக்கள் ஏற்பட்டுவிட்டன.

பின்லாந்து கிட்டத்தட்ட திவாலாகிவிட்ட நாட்டிற்கு இன்னும் மீட்பு நிதியில் தன் பங்கிற்காக கிரேக்கத்திடம் இருந்து அடைமானத்தைக் கோருகிறது; இத்தகைய கோரிக்கை முழுத் திட்டத்தையும் தகர்க்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. ஆஸ்திரியா உட்பட மற்ற நாடுகள் பின்லாந்திற்குக் கொடுக்கப்பட்டால்  தாங்களும் அடைமானம் கோருவோம் என்று கூறியுள்ளன. வெள்ளிக்கிழமைக் கூட்டத்தில் அடைமானப் பிரச்சினை பற்றி முடிவு ஏதும் ஏற்படவில்லை.

வாஷிங்டன் ஐரோப்பிய வங்கிகள் பிணைஎடுப்பில் இன்னும் அதிக நிதி தேவை என்று கோருகிறது; இது அமெரிக்காவில் 2008-10 ல் கொண்டுவரப்பட்ட Troubled Asset Relief Programme ஐ ஒத்து இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது, TARP ஐப் போல் புதிதான ஐரோப்பிய வங்கிகளுக்குக் கொடுக்கப்படும் நிதிகள் வரிகொடுப்போர் நிதியிலிருந்து கொடுக்கப்படும். வெள்ளிக் கூட்டத்தில், கீத்னர் ஜேர்மனிய நிதிமந்திரி வுல்ப்காங் ஷௌபிள EFSF விரிவாக்கம் என்பது நிதிய நடவடிக்கைகள் மீதான வரியினால் திரட்டப்படும் நிதியாக இருக்க வேண்டும் என்றார். இது வாஷிங்டனால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

பல ஐரோப்பிய மந்திரிகள் கீத்னர் குறுக்கீட்டிற்குப் பின்னர் கூறிய கருத்துக்கள் கூட்டத்தில் இருந்த ஒற்றுமையற்ற தன்மையைத்தான் தெளிவாக்கியது.

பெல்ஜியத்தின் நிதிமந்திரியான Didier Raynders, ராய்ட்டர்ஸிடம், “அமெரிக்கா அதன் பற்றாக்குறைகளையும் …. அதன் கடன்களையும் எப்படி குறைக்கப்போகிறது என்பது பற்றி நான் கேட்க விரும்புகிறேன் என்றார்.

லக்சம்பர்க்கின் பிரதம மந்திரி Jean-Claude Juncker, யூரோ நிதிமந்திரிகள் குழுவின் தலைவராகவும் இருப்பவர், “EFSF விரிவாக்கம் அல்லது அதிகப்படுத்துவது குறித்து யூரோப் பகுதி உறுப்பினர் அல்லாத நாட்டுடன் நாம் விவாதிக்கவில்லை என்றார்.

நிருபர்களிடம் குறுகிய கால நடவடிக்கைகளைப் பற்றி அவர் திட்டவட்டமாக நிராகரித்தார். “யூரோப் பகுதியில் புதிய நிதிய ஊக்கப்பொதியைத் தொடக்கும் தந்திர உத்திக்கு இடமில்லை என்று நாங்கள் நினைக்கிறோம்; அது இயலாத செயல்.”

ஆஸ்திரிய நிதி மந்திரி மரியா பெல்டர் கூறினார்: அவர் [கீத்னர்] வியத்தகு முறையில் நாம் எமது அமைப்பு முறை இடர்படாமல் செய்ய நிதி கொடுக்க வேண்டிய தேவை பற்றிக் கூறினார். ஷௌபிள அவரிடம் சிரமத்தை வரி செலுத்துவோரிடம் தள்ளுவது இயலாது என்றார், குறிப்பாக முக்கியமான மூன்று A தரம் கொண்ட நாடுகள் மீது சுமை செலுத்தப்பட்டால்.”

கட்டுரை ஆசிரியர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்:

பிரெஞ்சு வங்கிகள் தரம் குறைக்கப்பட்டதானது ஐரோப்பா முழுவதும் சிக்கன நடவடிக்கைகளுக்கான அழுத்தத்தை அதிகரிக்கிறது

யூரோ நெருக்கடிக்கு ஒரு சோசலிச பதில்