WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சு வங்கிகள் தரம் குறைக்கப்பட்டதானது ஐரோப்பா முழுவதும் சிக்கன
நடவடிக்கைகளுக்கான அழுத்தத்தை அதிகரிக்கிறது
By Barry Grey
15 September 2011
use
this version to print | Send
feedback
தர நிர்ணய நிறுவனம் மூடிஸ் புதன்கிழமை அன்று பிரான்சின் இரு மிகப்
பெரிய வங்கிகளின் தரத்தைக் குறைத்துள்ளது ஐரோப்பா முழுவதுமுள்ள அரசாங்கங்கள்
தொழிலாள வர்க்கத்தின் மீது சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்தும் அழுத்தங்களை
அதிகரித்துள்ளது.
பிரான்சின் மிகப் பெரிய வங்கியான
Société Générale
இன்
தரத்தை மூடிஸ்
Aa2
வில்
இருந்து
Aa3
என்று
குறைத்துடன்,
மூன்றாவது மிகப் பெரிய வங்கியான
Crédit Agricole
இன்
தரத்தை
Aa1
ல்
இருந்து
Aa2
எனக்
குறைந்துள்ளது;
அவை கிரேக்க அரசாங்கக் கடன் பத்திரங்களைப் பெரிதும் வைத்திருப்பது காரணமாகக்
கூறப்பட்டுள்ளது.
பிரான்சின் மிகப் பெரிய வங்கியான
BNP Paribas
இனை
Aa2
தரத்திலேயே வைத்துள்ளது,
ஆனால் அது எதிர்மறைக் கண்காணிப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நடவடிக்கை கிரேக்கம்
கடனைத்திருப்பித்தர முடியாது,
அதையொட்டி கிரேக்கப் பத்திரங்களை அதிகமாகக் கொண்டிருக்கும் பிரெஞ்சு மற்றும்
ஐரோப்பிய வங்கிகள் சரியக்கூடும் என்ற பெருகிய அச்சங்களுக்கு நடுவே வந்துள்ளது.
ஜேர்மனி,
பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலுள்ள அரசியல் தலைவர்கள் செவ்வாயன்றும்,
புதனன்றும் செயல்படும் வகையில் குறுக்கிட்டு நிதியச் சந்தைகளுக்கு கிரேக்கம்
ஒன்றும் திவாலின் விளிம்பில் இல்லை என்று உத்தரவாதம் அளிக்க முற்பட்டனர்;
சமூக ஜனநாயகக் கட்சியான
PASOK
அரசாங்கமானது கிரேக்கத் தொழிலாளர்களின் வேலைகள்,
வாழ்க்கைத்தரங்கள் ஆகியவற்றின் மீதான தாக்குதலை விரிவாக்கும் என்றும்
வலியுறுத்தினர்.
ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் செவ்வாயன்று தன்னுடைய
துணைச் சான்ஸ்லரும் பொருளாதார மந்திரியுமான
Philipp Rösler
விடுத்த
அறிக்கைகளை உதறித்தள்ளினார்;
அவற்றில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இன்னும் பிணை
எடுப்புக்களை அதற்குக் கொடுப்பதற்கு ஈடாக கிரேக்கத்தின்
“திருப்பிக்
கொடுக்காத்தன்மை முறையாக இருக்கும்”
என்பதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
110
பில்லியன் யூரோ நிதி கிரேக்கத்திற்கு என்பதைக் கண்காணிக்கும்
EU, IMF
மற்றும்
ECB
என்னும்
“முக்கூட்டு”
அடுத்த கட்ட நிதியமான
8
பில்லியன் யூரோக்களுக்கு ஒப்புதல் கொடுக்கும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்;
இது சில நாட்களுக்குள் வந்தால்தான் தான் கடன் திருப்பிக் கொடுத்தல்களைப் பிழை
இல்லாமல் செய்யமுடியும்,
மற்றும் ஊழியர்களுக்கான ஊதியம்,
ஓய்வூதியப் பொறுப்புக்களை நிறைவேற்ற முடியும் என்று கிரேக்கம் கூறியுள்ளது.
மிகவும் கவனத்துடன் சொற்களைத் தேர்ந்தெடுத்த அவர் கொள்கையளவில்
கிரேக்கம் திவாலாகப் போவதை
அனுமதிக்கவில்லை என்றார் அவர்.
“ஆனால்
நம் உயர் முன்னுரிமை கட்டுப்பாடற்ற திருப்பிக் கொடுக்காத தன்மை தவிர்க்கப்பட
வேண்டும் என்பதுதான்”
என்றார் மேர்க்கெல்.
புதன்கிழமையன்று,
அவர் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மற்றும் கிரேக்கப் பிரதம மந்திரி
ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவுடன் தொலைத்தொடர்புப் பேச்சுக்களை நடத்தினர்;
இதன் பின் மூவரும் அறிக்கைகளை வெளியிட்டு,
கிரேக்கத்திற்கு உதவுவதற்கான தங்கள் பொது உறுதிப்பாட்டை உத்தரவாதம் செய்து,
அதை யூரோப் பகுதியிலும் வைத்திருக்கப்படும் என்பதையும் வலியுறுத்தினர்;
ஆனால் கிரேக்கம் மிகக் கடுமையான பற்றாக்குறை மற்றும் கடன் குறைத்தல் நடவடிக்கைகளைச்
செய்யவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே நாட்டை மந்தநிலைக்குத் தள்ளிவிட்டன.
அமெரிக்க நிதிமந்திரி டிமோதி கீத்னரும் நிதியச் சந்தைகளுக்கு
உறுதியளிக்க முயன்றார்.
நியூ
யோர்க்கில் கேபிள் நிதியத் தொலைக்காட்சி இணையம்
CNBC
மற்றும்
Institutional Investor
ஏடு
ஆகியவை ஒன்றாக நடத்திய மாநாட்டு உரையிலும் பின்னர் கொடுத்த பேட்டிகளிலும் அவர்
ஐரோப்பிய சக்திகள் ஒரு கிரேக்கத் தவறு நேராமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை
எடுக்கும்,
யூரோ நாணயம் மற்றும் வங்கிகளைக் குறைமதிப்பு என்னும் அச்சறுத்தலுக்கு
உட்படுத்தியுள்ள அரசாங்கக் கடன் நெருக்கடியைக் கட்டுப்படுத்திவிடும் என்ற தன்
நம்பிக்கையை அறிவித்தார்.
ஆனால் ஐரோப்பா இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது என்று
அமெரிக்க கருதுகிறது என்பதைக் கீத்னர் தெளிவுபடுத்தினார்.
ஐரோப்பிய அரசாங்கங்கள்
“பெரும்
சக்தியைப்”
பயன்படுத்தி கண்டத்தின் நிதிய நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்று அழைப்புவிடுத்த
அவர்,
“இன்னும்
வேகமாக அவை செயல்பட வேண்டும்”
என்றார்.
ஐரோப்பிய நிதிய நிலைமை சரிவிற்குட்பட்டுள்ளது பற்றி தீவிர கவலையை
வாஷிங்டன் கொண்டுள்ளது என்று குறிப்புக் காட்டிய கீத்னர் முன்னோடியில்லாத
நடவடிக்கையான வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார,
நிதிய விவகாரக் குழு
(Ecofin)
கூட்டத்தில் கலந்து கொள்கிறார்;
இது போலாந்தில்
Wroclaw
வில்
நடைபெறுகிறது.
புதன்கிழமை நடைபெற்ற மூவரிடையேயான தொலைத்தொடர்புப் பேச்சுக்களின்
முக்கிய நோக்கம் கிரேக்கத்திற்கு விதியை நிர்ணயித்து,
இன்னும் பணிக்குறைப்புக்கள்,
வரவு-செலவுத்
திட்ட குறைப்புக்களுக்கான உறுதிமொழியை அதனிடம் இருந்து வாங்குவதுதான்.
வார இறுதியில்
EU, IMF
மற்றும்
ECB
ஆகியவற்றின் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள்,
கிரேக்கம் அதன் பற்றாக்குறை இலக்கில் வரவு-செலவுத்
திட்டத்தில்
2
பில்லியன்களுக்கும் மேல் இருக்கிறது எனக்கூறி அடுத்த தவணை நிதி கொடுப்பது பற்றி,
முறித்துக் கொண்டபின்,
பாப்பாண்ட்ரூ சொத்து வரிகளின் மீது
2
பில்லியன் யூரோக்களை அறிவித்தார்.
ஆனால் நிதியச் சந்தைகள் இத்தகைய நடவடிக்கையை ஒதுத்கிவிட்டு,
கிரேக்கம் திருப்பிக் கொடுக்காது என்பதற்கான ஊகப் பணயத்தை விரிவாக்கின.
பைனான்சியல்
டைம்ஸ்
புதன்கிழமை கூறியது போல்,
“ஜேர்மனி
மற்றும் பிரான்ஸுடன் திரு பாப்பாண்ட்ரூ விவாதிக்க இருக்கும் நடவடிக்கைகளுள்,
பொதுத்துறை ஊழியர்கள் மேலும் அடுத்த ஆண்டு குறைக்கப்படுவர் என்ற முடிவு உள்ளது;
இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்
IMF
ஆகியவற்றின் பேச்சுவார்த்தைக்காரர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகும்.
புதிய குறைப்புக்கள் மொத்தத்தில்
40,000க்கும்
மேல் இருக்கும்.”
ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள மாபெரும் வெட்டுக்கள் கிரேக்கப்
பொருளாதாரத்தில் பெரும் சுருக்கத்தை ஏற்படுத்தியுள்ளன;
வேலையின்மை அதிகரித்துவிட்டது,
வரிமூலம் வருமானங்கள் குறைந்துவிட்டன,
கிரேக்கக் கடன் நெருக்கடி மோசமாகிவிட்டது.
கிரேக்க வரி மூலமான வருவாய்கள் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில்
5.3
சதவிகிதம் குறைந்துவிட்டன.
புதிய வெட்டுக்கள் இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தும்;
ஆனால் சர்வதேச முதலாளித்துவம் நிதிய நெருக்கடியைப் பயன்படுத்தி கடந்த நூற்றாண்டு
கொடுக்கப்பட்ட அனைத்து சமூக ஆதாயங்களையும் அகற்றவும்,
தொழிலாள வர்க்கத்தை வறுமையில் தள்ளவும் உறுதி கொண்டுள்ளது.
நிதியச் சந்தைகளின் தாக்குதலுக்கு உட்பட்டுள்ள இத்தாலி புதனன்று
புதிய சிக்கன நடவடிக்கைகளை இறுதிப்படுத்தியது.
முந்தைய தினம் இத்தாலிய அரசாங்கம் மிக அதிகமான
5.6%
வட்டியை
6.5
பில்லியன் யூரோ மதிப்பு உடைய
5
ஆண்டுப்
பத்திரங்களுக்குக் கொடுக்க நேர்ந்தது;
கடந்த மாதம் நாட்டின் கடனை முட்டுக்கொடுத்து நிறுத்த
ECB
மேற்கொண்ட பெரும் தலையீட்டையும் மீறி இது நடந்துள்ளது.
இத்தாலியப் பாராளுமன்றம் நாட்டின் பற்றாக்குறையை
2013க்குள்
அகற்றும் நோக்கம் கொண்ட
54
பில்லியன் யூரோ மதிப்புடைய சிக்கன நடவடிக்கைகள் கொண்ட வரவு-செலவுத்
திட்டத்தை இறுதியில் இயற்றியது.
ஆனால் இது ஒரு ஆரம்ப முயற்சியாகத்தான் காணப்படுகிறது.
அரச சொத்துக்களை விரைவில் விற்று
400
பில்லியன் யூரோக்களை எழுப்புவது குறித்த பேச்சுக்கள் உள்ளன.
தனியார்மயமாக்கும் இலக்குகளை எரிசக்தி நிறுவனம்
ENEL,
எண்ணெய்,
எரிவாயுக்குழு
ENI
ஆகியவற்றில் அரசாங்கத்தின் பங்குகளும் உள்ளன.
தன்னுடைய பங்கிற்கு பிரான்ஸ் அதன் வங்கிமுறைக்கு மிகப் பெரிய பிணை
எடுப்பு நடத்த முயல்கிறது;
இது தவிர்க்கமுடியாமல் பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிக்கன
நடவடிக்கைகளை தீவிரமாக்கப்படுவதற்கு வகை செய்யும்.
இது அமெரிக்கா மற்றும்
IMF
ஆல்
குறிப்பாகக் கோரப்பட்டுள்ளது;
அவை பிரெஞ்சுப் பெரிய வங்கிகள் ஒன்று அல்லது இரண்டு சரிந்தால் ஏற்படக்கூடிய சர்வதேச
விளைவுகளைப் பற்றி கவலை கொண்டுள்ளன.
PNP Paribas, Societe Generale, Credit Agricle
ஆகியவை
உட்பட முக்கிய பிரெஞ்சு வங்கிகள் தங்கள் சந்தை மதிப்பு சமீபத்திய வாரங்களில்
சரிவைப் பார்த்துள்ளன;
ஏனெனில் நிதியச் சந்தைகள் கிரேக்கத் திவாலைக் கணக்கில் கொண்டு தங்கள் மதிப்பீட்டில்
ஐரோப்பிய வங்கி முறை அனைத்தையும் கருத்திற்கொண்டுள்ளன.
Société Générale
உடைய
பங்குகள் ஆகஸ்ட் துவக்கத்தில் இருந்து
50%க்கும்
மேலாகக் குறைந்துவிட்டன.
இதே காலத்தில்,
BNP Paribas
பங்குகள்
38%
குறைந்துவிட்டன,
Crédit Agricole 37%
இழந்துவிட்டது.
Société Générale
இன்
சந்தை மதிப்பு
2007
மத்தியில்
110
பில்லியன் யூரோக்களாக இருந்து திங்களன்று
12
பில்லியனாக வீழ்ச்சியடைந்தது.
சமீபத்திய வாரங்களில் பிரெஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய வங்கிகள்
குறுகிய கால நிதியைத் தனியார் சந்தையிலிருந்து பெறுவதில் பெருகிய இடர்களைக்
கொண்டுள்ளன.
JPMorgan Chase
கருத்துப்படி,
யூரோப்பகுதிக்கு குறுகியகாலக் கடன் தொகை ஆகஸ்ட் மாதம்
50
பில்லியன் டொலர்கள் குறைந்துவிட்டது;
இது ஜூலையில் இருந்து
14%,
மற்றும்
ஜூன் மாதத்தில் இருந்து
23%
சரிவு
என்று
JPMorgan
கூறுகிறது.
இதில் பிரெஞ்சு வங்கிகளுக்குக் கொடுக்கப்படும் கடன்கள்
39
பில்லியன் டொலர்கள் குறைந்துவிட்டன.
ஐரோப்பிய வங்கிகளின் பெருகும் இடரின் மற்றொரு அடையாளமாக ஐரோப்பிய மத்திய வங்கி தான்
$575
மில்லியன்
(418
மில்லியன் யூரோக்களை)
இரு யூரோப் பகுதி வங்கிகளுக்கு இந்த வாரம் கடன் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
IMF
இன்
நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் ஐரோப்பிய வங்கிகள் விரைவில்
மறுமூலதனப்படுத்தப்படாவிட்டால் ஒரு நிதியக் கரைப்பு ஏற்படும் என்று
எச்சரித்துள்ளார்,
அதாவது பொது நிதிகளில் இருந்து பிணை எடுக்கப்படாவிட்டால்.
புதனன்று அமெரிக்க நிதி மந்திரி கீத்னர் ஐரோப்பிய நிதி மந்திரிகள் வெள்ளியன்று
போலந்தில் கூடுகையில் ஜூலை மாதம் உடன்பாடு காணப்பட்ட
440
பில்லியன் யூரோ நிதிய உறுதிப்பாட்டு அமைப்பை விரிவாக்க அழுத்தம் கொடுப்பார் என்று
ராய்ட்டர்ஸ் தகவல் கொடுத்துள்ளது.
இதையொட்டி தோல்வி அடையக்கூடிய வங்கிகளுக்கு பிணை எடுப்பு கொடுக்கலாம்.
நல்ல தொடர்புடைய நிதிய ஆதாரம் ஒன்று ராய்ட்டர்ஸிடம்,
“கீத்னர்
ஐரோப்பிய வங்கிகள் இடருக்கு ஒரு தீர்வு அமெரிக்காவிலுள்ள
TARP
திட்டத்தை ஒட்டி தேவை என வலியுறுத்துகிறார்,
ஆனால் அதுவோ அதிக பலன்களைக் கொடுக்கவில்லை”
என்று கூறியது எனச் செய்தி நிறுவனம் எழுதியுள்ளது.
ஒரு புதிய இன்னும் பெரிய வங்கிப் பிணை எடுப்பு ஐரோப்பாவில் என்பது
அமெரிக்க மக்களுக்கு
TARP
திட்டத்தில் என்ன செய்ததோ,
அதைத்தான் ஐரோப்பிய மக்களுக்கும் செய்யும்.
நிதிய மற்றும் பெருநிறுவன அடுக்குகளின் மோசமான கடன்களைத் தீர்க்கப் பயன்பட்ட முதல்
அலை பிணை எடுப்புக்கள்,
தேசியக் கருவூலங்களை திவாலாக்கி,
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத்
தரங்கள் மீது வரலாற்றுத்தனத் தாக்குதலை நடத்த போலிக் காரணத்தை அளித்தது.
அடுத்த திங்களன்று ஜனாதிபதி ஒபாமா தன் திட்டமான சமூகநலச் செலவுகளில் டிரில்லியன்
கணக்கான டாலர் குறைப்புத்திட்டத்தை அறிவிக்க உள்ளார்;
இது வெகுஜன வேலையின்மை,
பெருகும் வறுமை இவற்றிற்கு இடையே வருகிறது.
சர்வதேச முதலாளித்துவத்தின் கடன் மற்றும் வங்கி நெருக்கடியை
எப்படிச் சமாளிப்பது என்பது பற்றிய வேறுபாடுகள் இருந்தபோதிலும்கூட,
ஒருமித்த உணர்வு ஒன்று,
அதாவது முதலாளித்துவ முறிவின் செலவு தொழிலாள வர்க்கத்தால் சுமத்தப்பட வேண்டும்
என்று உள்ளது.
கிரேக்கம் மற்றும் சில நாடுகள் சரியட்டும் என்று சில பிரிவுகளில் இருந்து வரும்
குரல்கள் உடன்பாட்டின் மூலம் வரும் நிதியக் கரைப்பைத் தவிர்ப்பதற்கான
நடவடிக்கைகளின் செலவுகள் தொழிலாள வர்க்கத்தினால் சுமக்கப்படுவதை உறுதிபடுத்தத்தான்
பயன்படுத்தப்படுகின்றன.
|