சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Euro crisis divides European Central Bank

யூரோ நெருக்கடி ஐரோப்பிய மத்திய வங்கியை பிளவுபடுத்துகிறது

By Peter Schwarz
12 September 2011

use this version to print | Send feedback

ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) தலைமைப் பொருளாதார வல்லுனர் Jürgen Stark திடீர் இராஜிநாமா யூரோ நெருக்கடியில் எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது பற்றிய ஆழ்ந்த வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.

வெள்ளியன்று ஜேர்மனிய அதிகாரியும், ECB நிர்வாகக் குழுவின் உறுப்பினருமானவர், பிரதான தொழில்துறை நாடுகளின் நிதி மந்திரிகள் கூட்டம் மார்சேயில் நடைபெற்றபோது இராஜிநாமா செய்த செய்தி பங்கு சந்தைகளை ஒரு கொந்தளிப்பில் தள்ளியது. ஜேர்மனியின் DAX குறியீடு 4 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்தது. ஆகஸ்ட் முதல் அது அதன் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை இழந்துள்ளது. யூரோ ஆறு மாத காலம் இல்லாத அளவிற்கு டாலருக்கு எதிராக தன் மதிப்பை இழந்தது; தங்கத்தின் விலை இன்னும் அதிகம் உயர்ந்தது.

ஸ்டார்க்கின் இராஜிநாமா “ECB நிதிய நெருக்கடியை தீர்த்தல் மற்றும் பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்தும் திறன் பற்றிய சில முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்று செய்தி ஊடகத்திடம் ஒரு பங்குத் தரகர் கூறினார்.

ECB யின் பருந்துகள் என்ற அழைக்கப்படுவோரில் ஸ்டார்க் ஒருவராவார்; நிதிய உறுதிப்பாடு கடுமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கை மற்றும் சிக்கனப் போக்கில் சமரசத்திற்கு இடமில்லாத நிலைப்பாடு ஆகியவற்றிற்கு அவர் ஆதரவு கொடுத்தார். கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற அதிக கடன்பட்டுள்ள நாடுகளின் அரசாங்க பத்திரங்களை ECB வாங்குவதை அவர் எதிர்த்தார். இவருடைய இராஜிநாமா ECB தலைவரான Jean-Claude Trichet க்கு ஒரு கண்டனம் ஆகும்; அவர் அத்தகைய பத்திரங்கள் வாங்கப்படுவதற்கு ஒப்புதல் கொடுத்திருந்தார்; அதேபோல் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஆகியோரைக் கண்டித்த செயலுமாகும்; இருவரும் அத்தகைய நடவடிக்கைக்கு ஊக்கம் கொடுத்திருந்தனர்.

 

ஸ்டார்க்கின் இராஜிநாமாவிற்குதனிப்பட் காரணங்கள் மேற்கோளிடப்பட்டாலும், ECB யின் விரிவாக்க நிதியக் கொள்கையை அவர் நிராகரித்தது நீண்ட நாளாகவே நன்கு அறியப்பட்டிருந்தது. தன்னுடைய நடவடிக்கையை ஒரு பொது எதிர்ப்பு என ஸ்டார்க் கருதுகிறார் என்பது இராஜிநாமா செய்யும் முன்பு நிதிய நாளேடான Handelsblatt க்கு அவர் அனுப்பிய கட்டுரையில் இருந்து தெரியவருகிறது; செய்தித்தாள் அதை அவருடையமரபியம் என்று விளக்கியுள்ளது.

இந்த அறிக்கையில் ஸ்டார்க்நிதிய ஊகங்கள்”, அதாவது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பணப் புழக்கத்தை அதிகரித்தல் என்னும் கொள்கையை உறுதியாக எதிர்க்கிறார். “நிதிய ஊக்கம் என்பது கடன்மட்டங்களை இன்னும் அதிகப்படுத்தத்தான் செய்யும் என அவர் எழுதியுள்ளார். பொதுக் கருவூலத்திற்கு இடர்களை இது உயர்த்தும், வளர்ச்சி, உறுதிப்பாடு ஆகியவற்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். மாறாக ஒருஉறுதியான நிதியக் கொள்கை” “நேரிய நம்பிக்கையைத் தூண்டும் என்று ஸ்டார்க் எழுதுகிறார். “பெரிய விழைவுகளுடன் மாற்றி ஏற்கப்படும் திட்டங்கள் நேரிய வளர்ச்சி விளைவுகளுடன், ஒரு குறுகிய காலத்திற்குப் பின் தொடர்பு கொள்ளும்.”

பொருளாதார வல்லுனரின் கருத்துக்களை சுருக்கிக் கூறும் வகையில் Handelsblatt, இதனால் ஸ்டார்க்சேமிப்புக்கள் என்ற பொருளைக் கூறுகிறார், வேறு ஏதும் இல்லை என எழுதியுள்ளது.

ஸ்டார்க்கின் நிலைப்பாட்டிற்கு கணிசமான ஆதரவு உள்ளது; குறிப்பாக ஜேர்மனி மற்றும் பிறவசதி வாய்ந்த ஐரோப்பிய நாடுகளில். பண்டெஸ்பாங்க் தலைவர் Axel Weber ஏப்ரல் மாதம் இராஜிநாமா செய்தபின் கொள்கை வேறுபாடுகளை ஒட்டி ECB ஐ விட்டு நீங்கும் இரண்டாவது உயர்மட்ட ஜேர்மனிய அதிகாரி ஸ்டார்க் ஆவார். வேபருக்குப் பின் ஜேர்மன் மத்திய வங்கியில் பொறுப்பேற்ற Jens Weidmann ஸ்டார்க்கின் அரசாங்கப் பத்திரங்கள் வாங்குவது குறித்த தயக்கங்களை பகிர்ந்து கொள்கிறார்.

63 வயது Jürgen Stark 1978ல் இருந்து ஜேர்மனியப் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சரகங்களிலும், சான்ஸ்லரியிலும் பணிபுரிந்து வந்தார்; அதன் பின் இவர் 2002ல் ஜேர்மன் மத்திய வங்கிற்கு மாற்றப்பட்டார், பின் 2006ல் ECB க்கு மாற்றப்பட்டார். 1990 களில் நிதித்துறைக்கு அரசாங்கச் செயலர் என்னும் முறையில் அவர் யூரோ உறுதிப்பாட்டு உடன்படிக்கையை இயற்றுவதில் தொடர்பு கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் ஜேர்மனியானது ஜேர்மனிய ஜேர்மன் மத்திய வங்கியின் மாதிரியை ECB பின்பற்ற வேண்டும் என்று முயன்றது; ECB முற்றிலும் நிதிய உறுதிப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கு உறுதி கொண்டது ஆகும்.

ஜேர்மனிய அரசாங்கமானது ஜேர்மன் மத்திய வங்கிற்கு உத்தரவுகளைக் கொடுக்கவோ, பொருளாதார ஊக்கத்திற்கு நிதியக் கொள்கையைப் பயன்படுத்தவோஅனுமதிக்கப்படுவது இல்லை. பணவீக்கத்தை எதிர்த்துப் போராடும் இக்குவிப்பிற்கு முக்கிய காரணம் 1923ம் ஆண்டு அனுபவம் ஆகும்; அப்பொழுது ஜேர்மனி மார்க் மிக, மிக உயர்வான பணவீக்க அலையில் சிக்கியது, ஜேர்மனிய மார்க்கை ஒரு சில மாதங்களுக்குள் மதிப்பற்றதாக ஆக்கி, வைமார் குடியரசைப் புரட்சியில் விளிம்பில் நிறுத்தியது.

போருக்குப் பிந்தைய காலத்தில், ஜேர்மனியப் பொருளாதாரத்தின் விரைவான மீட்சி ஜேர்மன் மத்திய வங்கியை மார்க்கின் ஒப்புமை உறுதிப்பாட்டை காக்க உதவியது; அதே நேரத்தில் பிரான்ஸ், இத்தாலி போன்ற மற்ற நாடுகள் உயர்பண வீக்க விகிதங்களை அனுபவித்தன. யூரோ அறிமுகமானதிலிருந்து, கன்சர்வேடிவ் நிதிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும், எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி மிக அதிகக் கடன்பட்டுள்ள நாடுகளுக்கு ECB உதவுவதால் ஏற்படும் பணவீக்கப் புயல் என்னும் விளைவில் ஜேர்மனியும் இழுக்கப்பட்டுவிடக் கூடாது என்பது குறித்து அச்சம் கொண்டுள்ளனர்.

இந்த வட்டங்களின் சார்பில்தான் ஸ்டார்க் பேசுகிறார்: இவை யூரோ நாடுகளில் வரவு-செலவுத் திட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க ECB யின் நிதியக் கொள்கை பயன்படுத்தப்படலாம் என்னும் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளை நிராகரிக்கின்றன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் குறிப்பாக இப்போக்கைத்தான் பின்பற்றுகிறது என்று வெளிப்படையாக ஸ்டார்க் தன் குறைகூறலில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பெரும்பான்மைக் கருத்து, அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார வல்லுனர்களிடையே, நிதிய மற்றும் நிதிச் சார்புடைய கொள்கை ஊக்கம் விரிவாக்கப்படும் திசையில் செல்லுவது போல் தோன்றுகிறது என்று வருத்தத்துடன் அவர் எழுதுகிறார்.

மிக அதிக கடன்பட்டுள்ள நாடுகளுக்கு ECB நிதியங்கள் மூலம் உதவுதலை ஸ்டார்க் நிராகரித்தாலும், அவர் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மூலம் ஐரோப்பிய நிறுவனங்கள் இந்த இலக்கை அடைவதற்கு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஆதரவளிக்கிறார். “மாபெரும் பாய்வு தேவை என்பதற்கு அழைப்புவிடும் அவர், “அதுதான் ஐரோப்பிய மட்டத்தில் நிறுவன விதிகளை வலுப்படுத்தத் தேவையானது”, “தொலைநோக்குடைய முடிவெடுக்கும் மற்றும் அனுமதி அளிக்கும் கருவிகளை அவை உத்தரவாதப்படுத்தும்”. அவருடைய கருத்துப்பதிவு, “தேசிய வரவு-செலவுத் திட்ட அதிகாரங்களை பொதுவான ஐரோப்பியத் தரத்திற்கு முன்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமான அளவிற்கு மாற்ற வேண்டியது இன்றியமையாதது ஆகும்.”

ஸ்டார்க்கின் நிலைப்பாடு ஜேர்மனிய ஆளும் கூட்டணிக்கும் அதிக ஆதரவைக் கொண்டுள்ளது. ஜேர்மனியக் கூட்டாட்சியின் பிரதிநிதிகளும் அதேபோல் மிக அதிகக் கடன் கொண்டுள்ள நாடுகள் இன்னும் ஆழ்ந்த வரவு-செலவுத் திட்டச் செலவுக் குறைப்புக்களை செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். கூட்டாட்சி பாராளுமன்றமான பண்டேஸ்டாக்கில் கடந்த வாரம் நடைபெற்ற வரவு-செலவுத் திட்ட விவாதத்தில், நிதி மந்திரி வொல்ப்காங்க் ஷௌபிள கிரேக்கத்திற்கு யூரோ மீட்பு நிதியில் இருந்து கொடுக்கவுள்ள அடுத்த கடன் தவணையை, அந்நாடு முற்றிலும் அதன் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை நடவடிக்கைகளைத் திருப்தியுடன் செயல்படுத்தாவிட்டால், அளிக்காது என அச்சுறுத்தினார்.

தன் பங்கிற்கு கிரேக்கம் இந்த உறுதிப்பாடுகளை அது தொடர இயலாது, ஏனெனில் ஏற்கனவே சுமத்தப்பட்ட வெட்டுக்கள் ஆழ்ந்த மந்த நிலையை ஏற்படுத்திவிட்டன, அவை அரசாங்க வருமானங்களைக் குறைத்துவிட்டன என்று எச்சரிக்கை கொடுத்துள்ளது. Spiegel Online ல் வந்துள்ள அறிக்கை ஒன்றின்படி, ஜேர்மனிய நிதிய அமைச்சரகம் ஏற்கனவே அதன் கடன்களை கிரேக்கம் திருப்பித்தரமுடியாத நிலை பற்றி தயாரிப்புக்களை கொண்டுள்ளது என்று தகவல் கொடுத்துள்ளது. கிரேக்க அரசாங்கத் திவால் ஏற்பட்டால் விளையக்கூடிய அனைத்துக் காட்சிகளையும் நன்கு பரிசீலிக்குமாறு ஷௌபில் தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Spiegel Online, ஜேர்மனிய அரசாங்கம் ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கை வகையிலான கடன்கள் அவற்றை திவாலின் உச்சக் கட்டத்தில் தள்ளப்படுவதில் இருந்து காப்பாற்றும் என்று நம்புகிறது. வங்கிகள் கிரேக்க அரசாங்கப் பத்திரங்களை இழப்புக்கள் எனத் தள்ளுபடி செய்யும் கட்டாயத்திற்கு உட்படுபவை, யூரோ மீட்புக் கருவியினால் பல பில்லியன்கள் ஆதரவைப் பெறும்.

ஆனால் ஷௌபிள மற்றும் சான்ஸ்லர் மேர்க்கெல் ஸ்டார்க் கருத்து வரை செல்லாமல், ECB அரசாங்கப் பத்திரங்கள் வாங்குவதை நிராகரிக்கின்றனர். இக்கொள்கை இதுவரை ஸ்பெயின் மற்றும் இத்தாலிய அரசாங்கப் பத்திரங்களுக்கான வட்டிவிகிதம் யூரோ மீட்புக் கருவியை அணுகும் கட்டாயத்தைக் கொடுக்கும் வட்டித்தர உயர்வில் இருந்து தடுத்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜேர்மனிய ஏற்றுமதித் தொழில்களின் பிரதிநிதிகள் கடன்பட்டுள்ள நாடுகளுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு என்பது யூரோவின் தோல்விக்கு வழிவகுக்கும் என்று அஞ்சுகின்றனர். அது ஜேர்மனிய ஏற்றுமதிகளுக்குப் பேரழிவு விளைவுகளைத்தரும்; ஜேர்மனியின் ஏற்றுமதிகளில் 62 சதவிகிதம் யூரோ ஒன்றியப் பகுதிக்கும் 43 சதவிகித யூரோ வலையத்திற்கும் செல்கிறது. ஜேர்மனிய தொழில்துறைக் கூட்டமைப்பின் (BDI) தலைவர் Hans-Peter Keitel, சமீபத்தில் யூரோநிச்சயம் இருக்க வேண்டியது என்று விவரித்தார்.

நாம் ஒன்றும் கணிக்க முடியாத விளைவுகள் உடைய தீரச்செயல்களை விரும்பவில்லை. முன்னேற விரும்புகிறோம், ஐரோப்பாவில் முதலீடு செய்ய விரும்புகிறோம், யூரோ மூலம்அது நமக்குப் பாதிப்புக் கொடுத்தாலும் என்றார் அவர்.

சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமைவாதிகளின் ஆதரவு யூரோவைக் காப்பாற்றத் தேவை என்று கீடெல் கூறுகிறார். ஜேர்மனிய அரசாங்கத்தைப் போல் இந்த இரு எதிர்க்கட்சிகளும் கூட கடுமையான நிதிய ஒருங்கிணைப்புப் போக்கிற்குத்தான் வாதிடுகின்றன.

மேர்க்கெல் அரசாங்கம் இதுவரை யூரோ நெருக்கடியில் ஒரு நேர்ப் போக்கைத் தொடர்ந்தது இல்லை. மிக அதிக கடன்பட்டுள்ள நாடுகளுக்கு நிதி கொடுப்பதை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் இவர்களுக்கு இடையே தந்திரோபாயங்களை அது இதுவரை செய்துவந்துள்ளது. “வேண்டாம் என்று கூறும் முகாமில் மேர்க்கெலின் ஆளும் கூட்டணியின்சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU), மற்றும் அவருடைய சொந்த கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) ஒரு சிறு பிரிவு ஆகியவை உள்ளன. மேர்க்கேல் பலமுறை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே அத்தகைய நிதி ஆதரவு கொடுப்பதற்கு எதிராக வாதிட்டுள்ளார்; ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கி யூரோ சரிவதைத் தடுக்கும் வகையில் அவசர நடவடிக்கைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

இக்கொள்கை இப்பொழுது அரசாங்கத்தை சிதற அடிக்கும் அச்சத்தைக் கொண்டுள்ளது. ஸ்டார்க் சுட்டிக்காட்டும் வகையில் செய்த இராஜிநாமாவை அடுத்து, ஐரோப்பா தழுவிய ஆதரவு நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் தங்கள் செல்வாக்கு மீண்டும் உயர்கிறது என்று உணர்கின்றனர். மேர்க்கெல் அரசாங்கம் செப்டம்பர் இறுதியில் யூரோ மீட்புக் கருவிக்கான வாக்கெடுப்பு நடைபெறுகையில் பெரும்பான்மை பெறுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் SPD ஏற்கவே கருவிக்காக வாக்களிக்க உறுதியளித்துள்ளது; இத்தகைய அடிப்படைப் பிரச்சினையில் தன் கட்சியின் தெளிவான பெரும்பான்மை இல்லாத நிலையில், அரசாங்கம் அதிகாரத்தில் நீண்ட காலம் இருக்க முடியாது.

FDP கூட்டணியில் இருந்து அடுத்த வார இறுதியில் பேர்லின் சட்டமன்றத் தேர்தலில் அது பெரிய தோல்வியைச் சந்தித்தால் விலகக்கூடும் என்ற ஊகமும் உள்ளது. அதன்பின் அது தன் செல்வாக்கை மீட்கும் வகையில் அதிக கடன்பட்டுள்ள நாடுகளின் யூரோப் பத்திரங்களை வாங்கக்கூடாது, இன்னும் பிற நடவடிக்கைகள் என்று தேசியவாத வெகுஜனப் பிரச்சாரம் மூலம் ஈடுபடலாம். கருத்துக் கணிப்புக்கள் தற்பொழுது அத்தகைய உதவிக்கு பெரும் எதிர்ப்பைத்தான் குறிக்கின்றன.

ECB,  EU மற்றும் ஜேர்மனிய அரசாங்கத்திற்குள் இருக்கும் ஆழ்ந்த வேறுபாடுகள் பங்குச் சந்தைகளிலும் நிதியச் சந்தைகளிலும் இன்னும் கூடுதலான ஊகத்திற்குத்தான் எரியூட்டம்; இது அப்பட்டமான உலக மந்த நிலை என்னும் அச்சறுத்தலைக் கொடுக்கும்.