WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
எகிப்து
எகிப்தின் இராணுவ ஆட்சிக்குழு இஸ்ரேலின் தூதரகம் தாக்கப்பட்டதை
அடுத்து எச்சரிக்கை நிலையை அறிவிக்கிறது
By Johannes Stern
12 September 2011
use
this version to print | Send
feedback
செப்டம்பர்
9ம்
திகதி கெய்ரோவிற்கு அருகே கிசாவிலுள்ள இஸ்ரேலிய தூதரகத்தை எதிர்ப்பாளர்கள்
சூழ்ந்தபின்,
அதை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க ஆதரவு எகிப்தின் இராணுவ ஆட்சிக்குழு பெரும்
வன்முறையைப் பயன்படுத்தியுள்ளது.
எகிப்தின் மத்திய பாதுகாப்புப் படைகளின் பிரிவுகள்
(CSF)
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய தூதரகத்திற்கு எதிரே வெள்ளியன்று பதிலடி
கொடுத்து,
மூன்று எதிர்ப்பாளர்களை கொன்றன;
1,000க்கும்
மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் தூதரகத்தைச் சுற்றி
எழுப்பப்பட்டிருந்த சுவரையும் மீறி கட்டிடத்திற்குள் நுழைந்து தூதரக முன்னறையில்
நுழைந்த வேளையில்
CSF
அவற்றின் தாக்குதல்களைத் தொடங்கியது.
எதிர்ப்பாளர்கள் பல பொருட்களையும் ஆவணங்களையும் சன்னல்கள் வழியே தூர
எறிந்தனர் என்று கூறப்படுகிறது;
இவற்றுள் எகிப்திய,
இஸ்ரேலிய ஆட்சிகளுக்கு இடையே நிலவும் நெருக்கமான உறவுகள் பற்றிய
“இரகசிய
ஆவணங்களும்”
உள்ளன எனத் தெரிகிறது.
எகிப்திய மக்களிடைய பெரும் இகழ்வைக் கொண்டுள்ள இந்த ஒத்துழைப்பு புரட்சியின்
ஆரம்பத்தில் இருந்தே ஒரு பிரச்சினையாகத்தான் இருந்தது.
சியோனிச நாட்டிற்கு எதிராக மக்கள் சீற்றம்,
ஆகஸ்ட்
18ம்
திகதி
6
எகிப்திய படையினர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் ஒரு எல்லைச் சோதனையின் போது
கொல்லப்பட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது.
சமீபத்திய வாரங்களில் இஸ்ரேலின் தூதரை அகற்றக் கோரி பல எதிர்ப்புக்கள் தூதரகத்தின்
முன் நடத்தப்பட்டன.
இரு இஸ்ரேலிய தூதர்களும் ஆறு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர்களும்
தூதரகக் கட்டிடத்திற்குள் எதிர்ப்பாளர்கள் நுழைந்தபோது உள்ளே இருந்ததாகக்
கூறப்படுகிறது.
எஃகுக் கதவைக் கொண்ட ஒரு பாதுகாப்பான அறையில் அவர்கள் மறைந்திருந்தனர்.
எகிப்திய சிறப்புக் கமாண்டோப் பிரிவு தூதரகத்திற்குச் சென்று தூதர்களை மீட்கச்
சென்றது;
இது இஸ்ரேலியத் தூதர்
Yitzhak Levaon
இராணுவக்குழு உறுப்பினர் ஒருவரை உதவிக்கு அழைத்தபின் நடந்தது.
பின்னர் எகிப்திய சிறப்புப் படைகள் தூதரக ஊழியர்களை,
லெவனோன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உட்பட,
விமான நிலையத்திற்குக் கொண்டுவந்தனர்.
அவர்கள் ஒரு இஸ்ரேலிய விமானப் படையைச் சேர்ந்த விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒரு துணை இஸ்ரேலிய தூதர்தான் எகிப்தில் எஞ்சியிருந்தார்;
அவர் இப்பொழுது அமெரிக்கத் தூதரகத்தில் தங்கியுள்ளார்.
தூதரகத்தில் நடந்த எதிர்ப்புக்கள் மற்றும் அதைத்தொடர்ந்த
தாக்குதல்கள்,
வெள்ளியன்று இஸ்ரேலிய தூதரகத்திற்கு ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள்
SCAF
என்னும்
இராணுவப் படையின் தலைமைக்குழுவிற்கு எதிராகக் கெய்ரோவிலுள்ள தஹ்ரிர் சதுக்கத்திலும்
இன்னும் பல முக்கிய எகிப்திய நகரங்களிலும்,
அமைதியான வெகுஜன எதிர்ப்புக்களை நடத்திய மறுதினம் நடந்தது.
ஆறு மாதக்கால இராணுவ ஆட்சி,
மற்றும் புதிப்பிக்கப்பட்டுள்ள வெகுஜன வேலைநிறுத்தங்களுக்குப் பின்,
தொழிலாளர்களிடையே சமூக மற்றும் அரசியல் அடக்குமுறை அதிகம் மாறாமல் அமெரிக்க ஆதரவு
சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் அகற்றப்படுவதற்கு முன் இருந்தது போலவே தொடர்வதாக
உணரப்படுகிறது.
தொழிலாள வர்க்கத்தின் புதிய எழுச்சியை முகங்கொடுக்கையில்
—அதுதான்
முபாரக்கை அகற்றப் பெரும் சமூக சக்தியாக இருந்தது—
இராணுவ ஆட்சிக்குழு பெரிதும் கவலை கொண்டுள்ளது.
ஏற்கனவே வெள்ளி எதிர்ப்புக்களுக்கு முன்
SCAF
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை வெளியிட்டது.
தன்னுடைய
74வது
அறிக்கையில் அது
“ஆயுதப்படைகள்,
அதன் நிலையங்கள்,
பிற அரசாங்கக் கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு எதிரான தீவிர நடவடிக்கைகள்,
கடுமையாக எதிர்கொள்ளப்படும்,
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்”
என்று எச்சரித்திருந்தது.
ஆட்சிக்குழு பிரதம மந்திரி எசம் ஷரப்பின் அரசாங்கத்திற்கு உடனடியாகப் பின்பற்றப்பட
வேண்டிய ஆறு இயக்க நெறிகளையும் அனுப்பி வைத்தது.
இவற்றுள்
“செய்மதி
மூலம் செயல்படும் தொலைக்காட்சி வலையமைப்புக்கள்,
வன்முறையையும் எதிர்ப்புக்களையும் தூண்டுபவற்றிற்கு எதிராக”
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,
“அனைத்து
வேலைநிறுத்த நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்”
மற்றும் இராணுவக்குழுவின் வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்
ஆகிய அழைப்புக்கள் இருந்தன.
CSF
எதிர்ப்பாளர்களை தாக்கியபின்,
இராணுவ ஆட்சிக்குழு எச்சரிக்கை நிலையை அறிவித்தது;
மேலும் பிரதம மந்திரி எசம் ஷரப்,
மந்திரிசபை உறுப்பினர்கள் மற்றும்
SCAF
ஆகியவற்றின் அவசரகால கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் சனிக்கிழமையன்று,
எகிப்திய தகவல்துறை மந்திரி ஒசாமா ஹீகல் தொலைக்காட்சியில் அறிக்கை ஒன்றைக் கூட்ட
முடிவுகளை சுருக்கமாகத் தெரிவித்தார்.
“கடுமையான
நடவடிக்கைகள் எடுக்கப்படும்”
என்று அறிவித்த அவர்,
முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று அவசரக்கால சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவது
ஆகும் என்றார்.
எகிப்து சர்வதேச உடன்பாடுகள்,
ஒப்பந்தங்கள் இவற்றிற்குக் கட்டுப்பட்டு நிற்கும் என்றும் அவர் கூறினார்;
இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கை பற்றி இது ஒரு வெளிப்டையான குறிப்பு ஆகும்.
அதன்பின் அவர் எகிப்திய அரசியல் சக்திகளை
“தற்போதைய
பாதுகாப்பு மற்றும் நெறித்தன்மை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தளர்ச்சிக்குப்
பொறுப்பேற்க வேண்டும் என்றும்”
கோரினார்.
சனிக்கிழமையன்று எகிப்தின் அரசிற்கு சொந்தமான அல்-அஹ்ரம்
இராணுவப் பொலிசார் ஏற்கனவே
130
எதிர்ப்பாளர்களை கைது செய்துள்ளனர் என்று கூறியது;
இவர்கள் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களிடையே இருந்தவர்கள்.
கெய்ரோ தளமுடைய செய்தி நிறுவனமான
MENA
கருத்துப்படி,
இவர்கள் விசாரணைக்குப் பின் ஒரு அவசரக்கால அரசாங்கப் பாதுகாப்பு நீதிமன்றத்திற்கு
அனுப்பி வைக்கப்படுவர்.
பாதுகாப்புப் படையினர் ஞாயிறன்று அல்-ஜசீரா
அலுவலகத்திலும் சோதனையிட்டனர்;
இத்தொலைக்காட்சி நிலையம் பொலிஸுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இஸ்ரேலிய தூதரகத்தில்
நடந்த மோதல்களை நேரடியாக ஒளிபரப்பியது.
எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு இந்நிகழ்வுகளை தொழிலாள வர்க்கத்தின்
எழுச்சி பெறும் போராட்டங்களை அடக்கவும் தொழிலாளர்களின் சார்பைச் சிதைக்கும்
முயற்சிகளுக்கும் பயன்படுத்துகிறது என்பது தெளிவு.
துணைக்கோள் தொலைக்காட்சி நிறுவனமான அல்-அரேபியாவிற்குக்
கொடுத்த பேட்டி ஒன்றில்,
ஹீக்கல்
“ஜனவரிப்
புரட்சி உண்மையானது,
அமைதியான முறையில் நடைபெற்றது,
பழைய ஆட்சியை வீழ்த்தி அதற்குப் பதிலாக வேறு ஒன்றைக் கொண்டுவர முற்பட்டது.
தற்போதைய எகிப்து நிகழ்வுகள் நாட்டை அழித்து பெரும் குழப்பத்தைத் தூண்டும் தன்மை
உடையவை”
என்றார்.
இது
ஒரு பொய் என்று ஹீக்கலுக்கு தெரியும்.
எகிப்திய புரட்சி ஒன்றும் அமைதியானது அல்ல;
1,000க்கும்
மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் இராணுவ ஆட்சியினால் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
இராணுவ ஆட்சிக்குழுவும் இடைக்கால அரசாங்கமும் முபாரக் ஹொஸ்னியின்
விரிவாக்கங்கள்தாம்;
இவை ஒரு சிறிய,
செல்வம்படைத்த ஆளும் உயரடுக்கு,
அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் நலன்களைத்தான் காக்கிறது.
இராணுவ ஆட்சி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் இளைஞர்களையும் கைது செய்துள்ளது,
எதிர்ப்புக்களையும் வேலைநிறுத்தங்களையும் நசுக்குகிறது.
இஸ்ரேலிய தூதரகத் தாக்குதலை நடத்தியோர் மீது தொடுக்கப்பட்ட
வன்முறைத்தாக்குதல் எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு,
அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்ரேலிய அரசு ஆகியவற்றிற்கு இடையேயுள்ள நெருக்கமான
ஒத்துழைப்பைத் தெளிவாக்குகிறது.
இவை இப்பொழுது சமூக சமத்துவமற்ற நிலைக்கு எதிராக இஸ்ரேலிலேயே வெகுஜன எதிர்ப்புக்களை
சந்திக்கிறது.
எகிப்திய பாதுகாப்புப்
படைகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தலையீட்டிற்கு பின்தான் தொடங்கின எனத்
தோன்றுகிறது.
இஸ்ரேலிய நாளேடு ஹார்டெஸ் கருத்துப்படி அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன்
பானெட்டா தலைமைக் குழுவின் தலைவர் பீல்ட் மார்ஷல் மஹம்மது ஹுசைன் தந்தவியை தூதரகத்
தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரினார் எனத் தெரிகிறது.
“வீணடிப்பதற்கு
நேரம் இல்லை”
என்று பனேட்டா தந்தவியிடம் நள்ளிரவு
1
மணிக்குக் கூறி,
“மிகச்
சோகமான விளைவுகளும் கடுமையான விளைவுகளும் ஏற்படலாம்”
என்று எச்சரித்ததாக தெரியவந்துள்ளது.
பிரதம மந்திரி பென்ஞமின் நேடன்யாகு மற்றும் பல மூத்த இஸ்ரேலிய
அதிகாரிகளும் தூதரகத்தில் பொருத்தப்பட்டுள்ள நேரடிக் கண்காணிப்பு காமராக்கள் மூலம்
ஜெருசலத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணிக்கின்றனர்.
நேடன்யாகுவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கும் இடையே பேச்சுக்கள் நடந்தன
என்றும் கூறப்படுகிறது.
சனிக்கிழமையன்று,
நேடன்யாகு அமெரிக்க,
எகிப்திய அரசாங்கங்களுக்கும் அவற்றின் சிறப்புக் கமாண்டோக்களுக்கும் அவர்களுடைய
உதவிக்காக ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் கூட்டத்தில் நன்றியைக் கூறினார்.
மத்திய கிழக்கு ஒரு
“வரலாற்றுத்தன்மை
உடைய நில அதிர்வில்”
இருப்பதாகவும்,
இந்த நிலைமை முதல் உலகப் போருக்குப் பின் இருந்த நிலைமையோடு ஒப்பிடத்தக்கது என்றும்
அவர் கூறினார்;
அப்பொழுது இப்பகுதி பிரிட்டிஷ்,
பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களிடையே பிரிக்கப்பட்டு இருந்தது;
1916
சைக்ஸ்-பிகோ
உடன்பாட்டில் கூறப்பட்ட விதிகளுக்கேற்ப.
அமைதியாக இயங்க வேண்டிய காலம் வந்துள்ளது என்ற நேடன்யாகு
“மேற்பரப்பிற்கும்
அடியிலான சக்திகளால் நிகழ்வுகள் நடப்பதால் பெரும் பொறுப்புடன் நடந்து கொள்ள
வேண்டும்”
என்றார்.
இஸ்ரேல் எகிப்துடன் சமாதனத்தைத் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்;
துருக்கியுடன் உறவுகளை முன்னேற்றுவிக்கும்,
பாஸ்தீனியர்களுடன் நேரடிப் பேச்சுக்களைக் கொள்ளும்;
அதே நேரத்தில் தன் நலன்களையும் பெருக்கிக் கொள்ளும்.
இதன் நோக்கம்
“இஸ்ரேல்
அரசிற்கு பேரழிவு வருதலை தடுத்தல் ஆகும்”
என்றார்.
இது இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்திற்குள் இஸ்ரேலுக்குள்ளேயே பெருகியுள்ள
சமூக எதிர்ப்பு பற்றிய கவலைகளைப் பிரதிபலிக்கிறது.
மேலும் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரின் போது
கடந்த ஆண்டு
MV Kavi Mamara
என்னும்
கப்பல் மூழ்கடிக்கப்பட்டபோது எழுந்துள்ள அழுத்தங்களையும் குறிக்கிறது.
எகிப்திய இராணுவ ஆட்சியின் பனேட்டாவின் அழைப்பிற்கான விடையிறுப்பு
இஸ்ரேலுடன் அதன் உறவுகளைத் தேக்க நிலையில் வைக்க அது விரும்பவும் இல்லை,
தயாராகவும் இல்லை என்பதைக் காட்டுகிறது.
எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவினர் எகிப்தின் இஸ்ரேலிய சார்புடைய கொள்கைகளை பல
ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் என்பது மட்டும் இல்லாமல்,
இஸ்ரேலுடன் சேர்ந்து எகிப்து மிகப் பெரிய அளவில் அமெரிக்க உதவியை பெறுகிறது
என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேடன்யாகுவின் அரசாங்கத்தை போலவே இராணுவ ஆட்சிக்குழுவின் பெரும் கவலை சர்வதேச
தொழலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் நோக்குநிலையை இழக்கச் செய்தல்,
அடக்குதல் என்பது ஆகும்;
அதுவோ மத்திய கிழக்கு முழுவதும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிர்ப்பைக்
காட்டுகிறது |