World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

New York, Washington in security lockdown on 9/11 anniversary

9/11 ஆண்டு தினத்தை ஒட்டி நியூ யோர்க் வாஷிங்டனில் பலத்த பாதுகாப்பு

By Patrick Martin 
10 September 2011

Back to screen version

நியூ யோர்க் நகரமும், வாஷிங்டன் டி.சி.யும் வெள்ளியன்று முழு அளவுப் பாதுகாப்பு  சிறைக்கூடமாக இருந்தது. மத்திய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இரு நகரங்கள்மீதும் உலக வணிக மையம் மற்றும் பென்டகன் ஆகியவற்றின்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு 10 ஆண்டுகள் நினைவுதினத்தில், மற்றும் ஒரு பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்த  “நம்பகமானசெய்திகள் வந்துள்ளன என்று அறிவித்துள்ளதை அடுத்து இந்த ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தாக்குதல் என்னும் அச்சுறுத்தலின் தீவிரத்தன்மை அல்லது திட்டவட்டமான குறிப்பினை ஆதாரப்படுத்தும் வகையில் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை; ஆனால் உள்ளூர் பொலிஸ் மற்றும் மத்திய முகவர்கள் முழு அளவில் அணிதிரட்டப்பட்டுள்ளமை இரு நகரங்களிலும் அழுத்தங்களை அதிகரித்துள்ளது.

உடல் கவசம், தாக்கும் ரைபிள்கள் ஆகியவை தரித்த அதிக ஆயுதமேந்திய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுகள் நகரத்தின் பல முக்கிய போக்குவரத்து இடங்களில் ரோந்து பணிபுரிந்தனர். கார் அல்லது டிரக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டு பாலங்கள் அல்லது நிலவடிப்பாதைகளை பயங்கரவாதிகள் தாக்கும் நோக்கம்கொண்டுள்ளனர் என்பதை அடுத்து இவை மேற்கோள்ளப்பட்டுள்ளன.

வியாழன் இரவு காங்கிரஸின் இணைப்புக் கூட்டத்தில் அவர் உரையாற்றுமுன் ஜனாதிபதி ஒபாமா மூன்று முறை வியாழன் அன்று உளவுத்துறை அறிக்கைகளைப் பற்றி அறிவிக்கப்பட்டார் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர். அமெரிக்க உளவுத் துறைப் பிரிவுகள்எச்சரிக்கையுடன் இருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்என்று அவர் கூறியதாகத் தெரிகிறது; ஆனால் அச்சுறுத்தல் என்று கூறப்படுவது பற்றிய கூடுதல் தகவலோ அது பற்றிய நடவடிக்கைகளோ மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

புதன்கிழமை வரை, அமெரிக்க அதிகாரிகள் 9/11 தாக்குதல்களின் பத்தாவது ஆண்டு நினைவுதினம் அமெரிக்காவிற்குள் தாக்குதல் நடத்துவதற்கு அல் குவேடாவால் புதிய முயற்சிகளுக்கான நேரமாக இருக்கலாம் என்னும் கருத்தை குறைமதிப்பிற்குத்தான் உட்படுத்தியிருந்தனர். மே 2 அன்று ஒசாமா பின் லேடன் கொலையுண்டது மற்றும் பாக்கிஸ்தானில் இருப்பதாகக் கூறப்படும் அல்குவேடா கீழ்மட்ட நடவடிக்கையாளர்கள்மீது நடத்தப்படும் ட்ரோன் ஆளற்ற விமானத் தாக்குதல்கள் அந்த அமைப்பைப் பெரிதும் சிதைத்துவிட்டன என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் வியாழனன்று அதிகாரிகள் செய்தி ஊடகத்திடம் அல்குவேடா முகவர்கள் பலரின் நடமாட்டம் பாக்கிஸ்தானில் இருந்து அமெரிக்காவிற்குள் வந்துள்ளன என்ற குறிப்பான தகவல்கள் பற்றிக் கூறினர்.

நியூயோர்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பேர்க் மற்றும் வாஷிங்டன் மேயர் வின்சென்ட் கிரே இருவரும் பொலிசார் 12 மணி நேரப் பணியில் இருத்தப்பட வேண்டும் என்றும் காணக்கூடிய அளவிற்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் வியத்தகு முறையில் அதிகரிக்கப்பட வேண்டும், இதில் நிலத்தடி நடைபாதைகள், பஸ் இறுதி நிறுத்துமிடங்கள், நெடுஞ்சாலைச் தடைகள் ஆகியவற்றில் எதிர்பாராச் சோதனைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அவற்றுள் அதிகமாக நாய்ப்படைகள் பயன்படுத்தப்படுவது, மற்றும் பரந்த பொதுக் கவலையைத் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளும் அடங்கும்.

FBI அமெரிக்கத் தலைநகரைச் சுற்றி எல்லா இடங்களிலும் அடையாளப்படுத்தப்பட்ட கார்களை நிலைநிறுத்தியுள்ளது. இது பொதுவாக முக்கிய மத்திய உள்நாட்டுபாதுகாப்புப் படை இத்தகைய உயர்ந்த அசாதாரண பொது அணிதிரட்டலாகும்.

இத்தகைய நடவடிக்கைகளை கலிபோர்னியாவிலும் நடத்தியதாக அறிவிக்கப்பட்டது. பொலிஸ் அணிதிரட்டு கோல்டன் கேட் பாலம் போன்ற சான் பிரான்ஸிஸ்கோவில் முக்கிய இடங்களில் முடுக்கிவிடப்பட்டது.

FBI மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை வியாழன் அன்று இரவு அனைத்து அமெரிக்கச் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு 9/11 தாக்குதல்கள் நினைவு தினத்தை ஒட்டி தாக்குதல்கள் ஏற்படலாம் என்ற அறிக்கையை வெளியிட்டபின் பாதுகாப்பு எச்சரிக்கை உத்தியோகபூர்வமாக தொடங்கியது.

FBI ன் நியூயோர்க் தள அலுவலகத்தின் உதவி இயக்குனரும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவரும் ஒரு மாதிரியான சொற்களைப் பயன்படுத்திகுறிப்பான, நம்பகத்தன்மை உடைய, ஆனால் உறுதி செய்யப்படாத அச்சுறுத்தல் தகவல் பற்றித்தெரிவித்தனர்.

இதேபோன்ற எச்சரிக்கை அறிவிப்புக்கள் கடந்த 10 ஆண்டுகளாக புஷ், ஒபாமா நிர்வாகங்களினால் வெளியிடப்பட்டபோது இருந்ததைப்போல், வேறு ஏதும் இல்லாவிடினும், இந்த எச்சரிக்கையும் பொது மக்களிடையே கவலையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஏனெனில் அச்சுறுத்தல் பற்றி வரையறுத்துகூறப்படவில்லை மற்றும் திறமையுடன் தவிர்க்கப்பட முடியுமானதுமாகும்.

கூடுதல் தகவல் ஏதுமின்றி வெள்ளி கடந்தது. ஆனால் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறைய மேற்கொள்ளப்பட்டன. நியூயோர்க் நகரத்தில் ப்ரூக்லின் பாலத்தைக் கடக்கும் வாகனங்களை பொலிசார் சோதனையிட்டனர்; சாலைத்தடுப்புக்களும் சோதனைச் சாவடிகளும் நகர் முழுவதும் காலையில் பரபரப்பு நேரத்திற்கு முன்னரே நிறுவப்பட்டன.

நியூ யோர்க் டைம்ஸ் வலைத் தளத்தில் வெள்ளி பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று இதற்கு உதாரணமானதாக இருந்தது. பெயரிடப்படாத இரு அமெரிக்க பொலிஸ் அதிகாரிகளை அது மேற்கோளிட்டிருந்தது. அவர்கள்அரபுப் பகுதியில் இருந்து வந்துள்ள இரு அமெரிக்கக் குடிமக்கள்ஆப்கானிஸ்தானத்தில் இருந்து அமெரிக்காவிற்கு வந்துகொண்டிருப்பதாக எச்சரிக்கை கொடுத்த ஒரு தகவல் கொடுப்பவரை அவர்கள் மேற்கோளிட்டிருந்தனர். தகவல் கொடுத்தவர், ஒருவர் 5 அடி உயரம் மற்றவர் 5 அடி 8 அங்குல உயரம், ஒருவருடைய முதற்பெயர் மத்திய கிழக்கில் பொதுவாக இருக்கும் ஒன்றுஎன்று தெளிவற்ற வகையில் இருவரின் உடல் அமைப்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

செய்தி ஊடகத்திற்கு இத்தகைய கசிவின் நோக்கம் பொது மக்களுடைய அச்சங்களை மேலும் எரியூட்டி, அவர்களை தெளிவற்ற உடலமைப்பு விவரத்தைஎவரொருவருக்காவது பொருந்த செய்வதில் கவனம்செலுத்த வைப்பதாகும். இது கிட்டத்தட்ட எந்த அரபு-அமெரிக்க சராசரி உயர மனிதன், சராசரியைவிடக் குறைந்த உயரம் கொண்டவருக்கும் பொருந்தும்.

நான்கு மாதங்களுக்கு முன்பு பின் லேடன் கொல்லப்பட்டதில் இருந்து அமெரிக்க அதிகாரிகள் செய்தி ஊடகத்திடம் தாங்கள் 9/11 ஆண்டுதினத்தன்று தாக்குதல் நடத்தப்படுவது குறித்த விவாதத்தை ஒரு குறிப்பு புத்தகத்தில் கண்டுள்ளதாகக் கூறிவருகின்றனர். ஆனால் குறிப்பான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் ஆகியோர் வெள்ளியன்று காலை தொலைக்காட்சிப் பேட்டிகளில் பொதுவான முறையில் அச்சுறுத்தல்கள் பற்றிக் கூறினர், ஆனால் வேறு விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்காவிற்குச் சமீபத்தில் எவரேனும் நுழைந்துள்ளதுஉறுதியற்றதுஎன்று பிடென் ஒப்புக் கொண்டார்.

நாம் அனைவரும் கவலைப்படுவதுதனி நடவடிக்கையாளரைபற்றித்தான், உலக வணிக கோபுரங்களை வீழ்த்துவதற்கான மிகத் தீவிர சிக்கல் நிறைந்த திட்டம் அல்ல.” என்றார் அவர். அத்தகைய அச்சுறுத்தலுக்கு எதிராக எத்தகைய திறமையான நடவடிக்கை இருக்கும் என்று அவர் விளக்கவில்லை.

ஞாயிறன்று 9/11 பாதிப்பாளர்களுக்கு, உலக வணிக மையத்தின் மீதான தாக்குதலில் இறந்தவர்களுக்கு, ஒரு தேசிய நினைவுச் சின்னம் அர்ப்பணம் செய்யப்படும் தனித்தை ஒட்டி மிகப் பெரிய பாதுகாப்பு அணிதிரட்டல் எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ஒபாமா மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் இருவரும் கலந்து கொள்கின்றனர்.

உலக வணிக மையத்தை சுற்றிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிசார் கூறும்உறைந்த பகுதிதோற்றுவிக்கப்படும்: இதன் பொருள் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூட தங்கள் வீடுகளில் இருந்து புறப்பட்டு மீண்டும் வருவதற்கு பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்கப்படும் என்பதாகும்.

வெள்ளியன்று வெள்ளை மாளிகை ஒபாமாவின் நிகழ்ச்சிநிரலில் மாறுதல் ஏதும் இல்லை என்று கூறியது. அவர் 9/11 தாக்கப்பட்ட மூன்று   இடங்களான மன்ஹட்டன் கீழ்ப்பகுதி, பென்டகன், மற்றும் United Airlines 93 விமானம் வீழ்ந்த பென்சில்வேனியாவில் உள்ள ஷாங்ஸ்வில்லே ஆகியவற்றிற்கு செல்லவிருக்கிறார்.