WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
எகிப்து
Mass protests in Egypt against
US-backed military junta
எகிப்தில் அமெரிக்க ஆதரவு இராணுவ
ஆட்சிக்குழுவிற்கு எதிராக வெகுஜன எதிர்ப்புக்கள்
By
Johannes Stern
10 September 2011
Back to
screen version
சமீபத்திய
நாட்களில் நாடுமுழுவதும் புதிய வேலைநிறுத்த அலைகளை
அடுத்து,
எகிப்தில் பல
நகரங்களிலும் நேற்று தொழிலாளர்களும் இளைஞர்களும் வெகுஜன எதிர்ப்புக்களை நடத்தினர்.
கெய்ரோவில்
பல்லாயிரக்கணக்கான
எதிர்ப்பாளர்கள் எகிப்திய புரட்சியில் முக்கிய மையங்களில் ஒன்றான அடையாளச் சின்னமான
தஹ்ரிர் சதுக்கத்தில் கூடினர்.
எகிப்திய
இராணுவமும் பொலிஸும் எதிர்ப்புக்கள் தொடங்குவதற்கு முன் தஹ்ரிர் சதுக்கத்தில்
இருந்து பின்வாங்கின. ஆனால் நள்ளிரவில் எஞ்சியிருக்கும் கூட்டத்தைக் கலைப்பதற்கு
திரும்பிவரும் அச்சத்தைக் கொடுத்தன.
சதுக்கத்தின்
மையப்பகுதியை ஆகஸ்ட்
1 முதல் இராணுவம்
ஆக்கிரமித்துள்ளது. இராணுவஆட்சிக்குழு அப்பொழுது முந்தைய உள்ளிருப்புப் போராட்டத்தை
வன்முறையுடன் நசுக்கியது.
வெவ்வேறு
அணிவகுப்புக்கள் நாள் முழுவதும் தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச் செல்லுமாறு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தன.
ஒரு ஆர்ப்பாட்டம்
கிசாவில் உள்ள கெய்ரோ பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு,
இஸ்ரேலியத்
தூதரகத்தைக் கடந்தது. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேல் மற்றும்
SCAC என்னும்
ஆயுதப்படையின் தலைமைக் குழுவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
காசாப் பகுதியில்
பாலாஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய அரசாங்கத்தின் மிகச் சமீபத்திய மூர்க்கத்தனம்
மற்றும் ஐந்து எகிப்திய படையினர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கடந்த மாதம்
கொல்லப்பட்டதை அடுத்து,
தூதரகத்தின் முன்
தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
இஸ்ரேலுடன்
வெளிப்படையான நட்பாக இருக்கும்
SCAF
ஆட்சி தூதரகத்தைச் சுற்றி
எதிர்ப்பாளர்களை தடுக்கும் வகையில் காங்க்ரீட் சுவர் ஒன்றை எழுப்பியுள்ளது.
நாளின்
பிற்பகுதியில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தூதரகத்திற்குத் திரும்பி வந்து,
சுவரைத் தகர்த்து,
தூதரகத்திற்குள்
நுழைந்து,
கட்டிடத்தின் உயரே பறந்த
இஸ்ரேலியக் கொடியை அகற்றினர்.
எதிர்ப்பாளர்கள்
பாதுகாப்புப் பிரிவினரால் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களால்
தாக்கப்பட்டனர்.
எகிப்திய சுகாதார
அமைச்சரகத் தகவல்படி
88 பேர் காயமுற்றனர்.
மற்றொரு
ஆர்ப்பாட்டம் வடக்கு கெய்ரோவில் தொழிலாள வர்க்கப் புறநகரான ஷுப்ராவில் தொடங்கியது.
ஆர்ப்பாட்டக்கார்கள்
அரசாங்கத்திற்கு சொந்தமான
Al-Gomhoreya
செய்தித்தாள்
அலுவலகங்களைக் கடக்கையில்,
அவர்கள் தங்கள்
இகழ்வுணர்வை வெளிப்படுத்தச்
செருப்புக்களை
உயர்த்திக்காட்டி, “பொய்யர்கள்”
என முழக்கமிட்டனர்.
“கல்லறைகளில்
வசிப்பவர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியம்”,
“அரண்மனைகளில்
வசிப்பவர்களுக்கு அதிக பட்ச ஊதியங்கள்”
என்ற பதாகைகளை
அவர்கள் ஏந்தியிருந்தனர்.
தஹ்ரிர்
சதுக்கத்தில் நடந்த வெகுஜன எதிர்ப்புக்களில் விவசாயிகளும் சேர்ந்து கொண்டனர்.
அவர்கள் டொக்கியில் விவசாய அமைச்சரகத்திற்கு வெளியே ஒரு அணிவகுப்பிற்கு ஏற்பாடு
செய்திருந்தனர். அதே போல் கெய்ரோவின் இரு பெரிய கால்பந்துக் குழுக்களான அல்-அஹ்லி
மற்றும் ஜமதேக் ஆகியவற்றின் ஆதரவளார்களாலும் அமைக்கப்பட்டிருந்தன.
அல்-அஸ்லியின்
ஆதரவாளர்கள் செவ்வாயன்று ஒரு உதைபந்தாட்ட போட்டிக்குப் பின் பொலிசால்
மிருகத்தனமாகத் தாக்கப்பட்டிருந்தனர். ஏனெனில் அவர்கள் அகற்றப்பட்ட சர்வாதிகாரி
ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியிருந்தனர்.
5,000 தீவிர
ஆதரவளார்கள் சதுக்கத்தில் கூடி பொலிஸ் மிருகத்தனத்திற்கும் உள்துறை மந்திரிக்கு
எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
எதிர்ப்பாளர்கள்
சாதாரணக் குடிமக்கள் இராணுவ நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்துவதை எதிர்த்தும்
கண்டித்து, “நீதித்துறையில்
இருந்து முபராக் ஆதரவாளர்கள் அனைவரும் அகற்றப்பட வேண்டும்”
என்று குரல்
கொடுத்தனர்.
மற்ற
கோஷங்களும் எகிப்தின் நடைமுறை ஆட்சியாளர்,
20 ஆண்டுகள்
முபாரக்கின் பாதுகாப்பு மந்திரியாக இருந்த,
பீல்ட் மார்ஷல்
மஹமத் ஹுசைன் தந்தவிக்கு எதிராக முழக்கப்பட்டன:
மார்ஷல்
“உன்
செவிகளுக்கு ஒரு சொல்,
புரட்சி தஹ்ரிரில்
தொடர்கிறது.”
மற்றும்
“தந்தவியும்
முபாரக்தான்.”
கடலோர நகரான
அலெக்சாந்த்ரியாவில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் எல்-கவிட்
இப்ரஹிம் மசூதிக்கு முன் கூடினர்.
அவர்கள் இராணுவக்
குழுவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி,
“கொலைக்கார
அதிகாரிகள் அனைவர்மீதும் விசாரணை நடத்துக”
என்று கோரினர்.
“புரட்சிக்கும்
பின்னும் அனைத்தும் முன்மாதிரியேதான் உள்ளது”
என்றும் அவர்கள்
கோஷமிட்டனர்.
சூயஸில்
எதிர்ப்பாளர்கள் அரசாங்க அலுவலகங்களை நோக்கிச் செல்ல முற்பட்டனர். ஆனால் இராணுவ
பொலிசால் தாக்கப்பட்டு, கைத்தடிகளையும் குண்டாந்தடிகளையும் பயன்படுத்திக்
கூட்டத்தைக் கலைத்தனர்.
இராணுவம்
மற்றும் பொலிஸ் கெய்ரோவிலும் சூயஸிலும் வன்முறையைக் கடைப்பிடிப்பது
புதுப்பிக்கப்படும் எதிர்ப்புக்கள் வேலைநிறுத்தங்களை முகங்கொடுக்கும் எகிப்திய
ஆளும் உயரடுக்கினரிடையே உள்ள ஆழ்ந்த கவலையின் அடையாளம் ஆகும்.
ரம்ளான் பண்டிகை
முடிவில் இருந்தே எகிப்து முழுவதும் வேலைநிறுத்தங்கள் பரவியுள்ளன. தொழிலாளர்கள்
அதிக ஊதியங்கள்,
மேலதிக
கொடுப்பனவுகளையும், ஆலைகளிலும் நிறுவனங்களிலும் முபாரக்-சகாப்த
ஊழல் அதிகாரிகள் அகற்றப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர்.
ஆயிரக்கணக்கான அஞ்சல் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்து,
பணவீக்கத்திற்கு
ஈடுகட்டும் வகையில் ஊதியத்தில்
7% உயர்வையும்,
ஆண்டு உற்பத்தி இலக்குகளை எட்டியதற்கு
200% மேலதிக
கொடுப்பனவுகளையும் கோருகின்றனர்.
இந்த வேலைநிறுத்தம்
ஊழல் மிகுந்த மேலாளர்கள்,
அதிக ஊதியம் பெறும்
ஆலோசகர்கள் என்று அரசநிறுவனமான அஞ்சல் பணிகளுக்குள் இருப்பவர்களுக்கு எதிராகவும்
இயக்கப்படுகிறது.
செப்டம்பர்
6ம் திகதி
அரசாங்கத்திற்குச் சொந்தமான நாளேடு அல்-அஹ்ரம்
வேலைநிறுத்தம், “பல
பொதுத்துறை ஊழியர்கள் ஷராப் அரசாங்கத்தின்கீழ் முன்னேற்றம் ஏதும் இல்லாதது பற்றிய
பரந்த ஏமாற்றத்தைத்தான்”
பிரதிபலிக்கிறது
என்று எழுதியுள்ளது.
“SCAF
வேலைநிறுத்தத்தை முறிக்க முயன்று இஸ்மைலியாவில் வலுக்கட்டாயமாக அஞ்சல்பணியைத்
தொடக்க முற்பட்டது. ஆனால் வேலைநிறுத்தக்காரர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக
இருந்த்தால் இராணுவம் தோற்றது”
என்றும் கட்டுரை
கூறியுள்ளது.
வாரத்
தொடக்கத்தில் இருந்து எகிப்திய செய்தி ஊடகம் வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும்
வேலைநிறுத்தங்கள் பற்றித் தகவல்கள் கொடுத்துள்ளது.
திங்களன்று
High Dam Electrical and Industrial Company
யில் இருந்து தொழிலாளர்கள்
அமைச்சரவைக் குழுக் கட்டிடத்திற்கு முன் சந்தித்து சிறந்த ஊதியங்களுக்கு
ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
அதே நேரத்தில்
சட்டப் பயிலக பள்ளியின் பட்டதாரிகளும் உயர்நீதிமன்றத்தின் முன் நீதித்துறையில்
உறவினர்களுக்கு ஆதரவு கொடுத்தல் என்பதற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பெஹைரா கடலோர
ஆட்சிப்பகுதியில் எட்கு நகரமக்கள் நெடுஞ்சாலை ஒன்றை மறித்து எகிப்திய அரசாங்கம்
பிரிட்டிஷ் எண்ணெய் பெருநிறுவனமான
BP உடன்
ஒத்துழைப்பது குறித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மற்றச்
செய்தி ஆதாரங்கள் இன்னும் அதிக தொழில்துறை நடவடிக்கை மற்றும் எதிர்ப்புக்கள் கார்த்
தொழிலாளர்கள்,
இரசாயனப் பிரிவுத்
தொழிலாளர்கள்,
மீன்பிடிப்போர்
மற்றும் ஜவுளித்துறைத் தொழிலாளர்கள் ஆகியோரால் காட்டப்பட்டன என்று கூறியுள்ளன.
செப்டம்பர்
3ம் திகதி
22,000 ஜவுளித்
தொழிலாளர்கள் எகிப்தில் பொதுத்துறை ஜவுளிப்பிரிவில் மிகப் பெரிய இடமான மஹல்லா
நகரத்தில் செப்டம்பர்
10 முதல் காலவரையற்ற
வேலைநிறுத்தம் பற்றிய திட்டத்தை அறிவித்தனர்.
தங்கள் குறைபாடுகளை
அறிவித்த அறிக்கை ஒன்றை அவர்கள் வெளியிட்டனர்;
குறைந்தப்பட்ச
ஊதியம் அதிகப்படுத்தப்பட வேண்டும்,
தாமதிக்கப்பட்டுள்ள
தகுதி ஊதியக் காசோலைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.
அவர்களுடைய நோக்கம்
தங்கள் நிலைமையை உயர்த்துவது மட்டும் அல்ல,
அனைத்து எகிப்திய தொழிலாளர்களும் கௌரவமான வாழ்க்கைத்தரங்களை அடைய
வேண்டும் என்பதற்கு போராடுவதாக கூறினர்.
மஹல்லா
தொழிலாளர்கள் ஒரு நீண்ட போராளித்தனப் போராட்டங்கள்,
வேலைநிறுத்தங்கள்
என்ற வரலாற்றைக் கொண்டுள்ளனர்.
2006 மற்றும்
2008ல் அவர்கள்
நடத்திய எதிர்ப்புக்கள் அலையென வெகுஜன வேலைநிறுத்தங்களைத் தூண்டின,
இறுதியில் அவை ஜனவரி
25 புரட்சியிலும்
முபாரக்கை அகற்றியதிலும் உச்சக்கட்டத்தை அடைந்தது.
வர்க்கப்
போராட்டங்களின் எழுச்சி பற்றி ஆழ்ந்த கவலை கொண்ட
SCAF ஆட்சிக்குழு
மஹல்லா ஆலையில் இருந்து ஒரு தூதுகுழுவைச் சந்தித்து வேலைநிறுத்தத்தை
நிறுத்தமுற்படுகிறது.
தொழில்துறை மந்திரி
அஹ்மத் போரையுடன் பேச்சுக்களுக்குப் பின் தூதுகுழு வேலைநிறுத்தத்தை இரத்து செய்ய
ஒப்புக் கொண்டது.
மாத உணவிற்கான
ஊக்கத்தொகை 120 EGP
யில் இருந்து
210 EGPக்கு
உயர்த்தப்படுவதற்கும்,
மாத ஊக்கத் தொகை
200%
உயர்வையும் ஒப்புக்
கொண்டுள்ளது.
Holdinjg Company for Cotton, Spinning and Textile
உடைய பொது மன்றம் கூடும்
வரை இலாபத்தைப் பகிர்ந்து கொள்ளுவது பற்றிய விவாதத்தைத் தாமதப்படுத்தவும் தூதுகுழு
ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கிடையில் இராணுவ ஆட்சிக்குழு தொழிலாள வர்க்கத்துடன் மோதலுக்கு தெளிவாகத்
தயாரிக்கிறது.
புதன் இரவு
SCAF பிரதம மந்திரி
எசம் ஷராப்,
அவருடைய மந்திரிகளை
சந்தித்து “நிலைகுலையும்
பாதுகாப்பு நிலைமை”
என்று மந்திரிசபைச்
செய்தித் தொடர்பாளர் விவரித்தது குறித்து பேச்சுக்களை நடத்தினார்.
ஆட்சிக்குழு ஷரப்
அரசாங்கம் உடனடியாக பின்பற்றுவதற்கு ஆறு இயக்க நெறிகளைக் கொடுத்தது.
இவற்றுள்,
“துணைக்கோள்
தொலைக்காட்சி நிலையங்களுக்கு புதிய உரிமங்கள் வழங்குதல்”
தற்காலிகமாக
நிறுத்தப்பட வேண்டும்,
“வன்முறை,
எதிர்ப்புக்களை
தூண்டும் எந்த துணைக்கோள் தொலைக்காட்சி வலைப் பின்னலுக்கு கொடுக்கப்பட்டுள்ள
உரிமங்களை மறு ஆய்வு செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள்”
துவக்கப்பட வேண்டும்
என்றும் இருந்தன.
இன்னும் பிற நெறிகள்,
“மந்திரிசபை அனைத்து
வேலைநிறுத்த நடவடிக்கைகளையும் நிறுத்த தலையிடவேண்டும்,
பொது வாழ்வைத்
தடைக்கு உட்படுத்தும் சில வேலைநிறுத்தங்கள் குற்றம் சார்ந்தவை என அறிவித்த கடந்த
வசந்தகாலம் அது இயற்றிய சட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்”
என்பவையும்
அடங்கியுள்ளன.
ஷராப்
“வேலைநிறுத்தக்காரர்களுடன்
அவர்கள் பணியிட நடவடிக்கைகளை நிறுத்தம் வரை எந்தக் கோரிக்கைகள் பற்றியும்
பேச்சுக்கள் நடத்தக்கூடாது”
என்றும்
கூறப்பட்டுள்ளது.
மஹல்லா
மற்றும் எகிப்து முழுவதும் ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்வதைத் குறைந்த
சலுகைகள் தடுக்கும் என்பது
அநேகமாக நடைபெறாது.
ஏற்கனவே கப்ர் அத்-டவர்
இன்னும் பிற இடங்களில் இருக்கும் ஜவுளித் தொழிலாளர்கள் மஹல்லாத் தொழிலாளர்களுக்குக்
கொடுக்கப்பட்டது போன்ற ஊக்கத் தொகைகள் கொடுக்கப்படாவிட்டால் தாங்கள் வேலைநிறுத்தம்
செய்யவுள்ளதாக அறிவித்தனர்.
தொழிலாள
வர்க்கத்தின் மற்ற பிரிவுகள் செப்டம்பர் நடுப்பகுதியில் எதிர்ப்புக்களை நடத்த உள்ளன
என்று செய்தி ஊடகத்தில் தகவல்கள் வந்துள்ளன.
ஆசிரியர்களும்,
பல்கலைக்கழகப்
பேராசிரியர்களும் நாடு தழுவிய நடவடிக்கைகளை மாத நடுவில் திட்டமிட்டுள்ளனர்.
வைத்தியர்கள் பூர்த்தி செய்யப்படாத கோரிக்கைகள் குறித்து வேலைநிறுத்தம் செய்யத்
திட்டமிட்டுள்ளனர். |