WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
Growing conflicts over euro crisis
யூரோ நெருக்கடி பற்றிப்
பெருகும் மோதல்கள்
By Peter
Schwarz
9 September 2011
Back to
screen version
அநேகமாக
அனைத்து வல்லுனர்களும் இந்த இலையுதிர்காலத்தில் ஆழ்ந்த உலக மந்தநிலையை
எதிர்பார்க்கின்றனர்.
அதே நேரத்தில்
முக்கிய அரசியல் வாதிகளும் பொருளாதார வல்லுனர்களும் இதை எதிர்கொள்வது பற்றி
முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
எத்தனை வல்லுனர்கள்
உள்ளனரோ அத்தனை கருத்துக்களும் உள்ளன. முன்வைக்கப்படும் பெரும்பாலான ஆலோசனைகள்
ஒன்றையொன்று ஒதுக்குபவையாக உள்ளன.
நெருக்கடி
முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது.
அமெரிக்கா
மற்றும் ஐரோப்பாவிற்கு வளர்ச்சி சரியும் என்னும் கணிப்புக்களை தவிர,
யூரோவின்
வருங்காலம்தான் நெருக்கடியின் மீது ஆதிக்கம் கொண்டுள்ளது.
கிரேக்கத்திலும் பிற
அதிக கடன்பட்டுள்ள நாடுகளிலும் அரசாங்கத் திவாலை தவிர்க்கும் இலக்கை உடைய பல
பில்லியன் டாலர் நிதிப் பொதி எந்த விளைவையும் கொடுக்கவில்லை.
கடந்த ஆண்டு
தற்காலிக வழிவகையாக ஏற்கப்பட்ட ஸ்திரப்பாட்டு முறையை
2013ல் யூரோ
மீட்புப் பொதி முறையாக ஏற்க உள்ளது. ஆனால் இதற்கு பிரெஞ்சுப் பாராளுமன்றம்
ஒன்றுதான் இசைவு கொடுத்துள்ளது.
மற்ற
16 யூரோப்பகுதி
நாடுகள் இன்னும் இசைவு கொடுக்க வேண்டும்.
ஆயினும்கூட
இம்முன்மொழிவு ஏற்கனவே பல நிகழ்வுகளினால் கடக்கப்பட்டுவிட்டது.
பிணையெடுப்புப் பொதியுடன் இணைக்கப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகள் கிரேக்கத்தை
கடுமையான மந்தநிலையில் தள்ளிவிட்டன.
இந்த ஆண்டின் முதல்
காலாண்டுப் பகுதியில்,
கிரேக்கப்
பொருளாதாரம் உண்மையில்
8.1% சரிந்தது.
இதன் விளைவாக
கிரேக்க கடன் அதிகமாகிறதே அன்றி குறைந்துவிடவில்லை.
இதேபோன்ற விதிதான்
எதிர்பார்க்கும் வகையில் பொருளாதாரம் நலிவுற்றால் அயர்லாந்து,
இத்தாலி,
போர்த்துக்கல்,
ஸ்பெயின்,
பிரான்ஸ்,
ஜேர்மனி
ஆகியவற்றையும் எதிர்நோக்கியுள்ளது.
அரசாங்கப்
பத்திரங்களின் பெரும் பங்கைக் கொண்டுள்ள வங்கிகள்
2008ல் லெஹ்மன்
பிரதர்ஸ் திவாலான போது இருந்த நிலைமை போலவே இப்பொழுதும் எதிர்கொள்கின்றன.
அவநம்பிக்கை
அதிகரிப்பதுடன், அவை தங்கள் பணத்தை தக்க வைத்துக் கொள்வதால் நெருக்கடியை
அதிகரிக்கின்றன.
பங்குச் சந்தைகளில்
இதன் விளைவு அப்பட்டமான பீதியாகும்.
வங்கிப் பங்குகள்
முக்கியமாக பாதிக்கப்பட்டுள்ளன.
திங்களன்று ஜேர்மனிய
DAX பங்குக்
குறியீடு 5%
சரிந்தது;
ஏற்கனவே ஆகஸ்ட்
மாதம் இது அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கை இழந்துவிட்டது.
“யூரோப்பகுதி
ஒரு நச்சு வளையத்திற்குள் அகப்பட்டுள்ளது”
என்று
பைனான்சியல் டைம்ஸில் பொருளாதார வல்லுனர் பாரி ஐஷென்க்ரீன் எழுதியுள்ளார்;
“அரசாங்கக் கடன்
சீர்குலைந்துவிட்டது,
வங்கி முறைகளின்
மீதான நம்பிக்கையை குறைத்துவிட்டது,
அதையொட்டி
அரசாங்கங்கள் கூடுதலான வங்கி இழப்புக்களை மேற்கோள்ள நேரிடலாம்.
இது இன்னும் மோசமாக
அரசாங்கக் கடனைப் பாதிக்கும்;
அது வங்கிகள் மீதான
நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும்.
ஐரோப்பிய தலைவர்கள்
இந்த நச்சு வளையத்தை முறிக்கும் திறனற்றவர்களாகத்தான் தங்களை வெளிப்படுத்தியுள்ளனர்;
இந்த ஐரோப்பிய
நெருக்கடி ஓர் உலக நெருக்கடியாகும் ஆபத்தை எழுப்பியுள்ளது.
நெருக்கடி
பற்றி உத்தியோகபூர்வக் கொள்கையின் இயலாத்தன்மை அதைப்பற்றி அடுத்து என்ன செய்வது
என்று முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களில் நன்கு வெளிப்படையாகிறது.
ஐரோப்பாவின் முக்கிய
வணிகச் செய்தித்தாளான பைனான்சியல் டைம்ஸில் ஒரே நாள் பதிப்பில்
குறைந்தப்பட்சம் 3
மாறுபட்ட
கருத்துக்களை காண முடியும்.
ஆகஸ்ட்
6ம் திகதிப்
பதிப்பில்,
மேலே கூறப்பட்ட பேர்க்லே
பல்கலைக்கழகப் பேராசிரியர் ஐஷன்க்ரீன் சர்வதேச நாணய நிதியம் மற்றும்
G20 ஆகியவை
குறுக்கிட வேண்டும் என்பதற்கு வாதிடுகிறார்.
அவை ஐரோப்பிய
வங்கிகள்மீது இன்னும் கடுமையான கண்காணிப்பைக் கொள்ள வேண்டும்,
பணத்தைத் திருப்பிக்
கொடுப்பதில் தாமதத்தைத் தவிர்ப்பதற்குப் போதுமான பங்கு கூடுதல் மூலதனம் அவற்றிற்கு
அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கூறியுள்ளார்.
ஆகஸ்ட்
மாதக் கடைசியில் சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்ரின் லகார்ட்,
அமெரிக்காவில்
மத்திய வங்கியாளர்கள் மாநாட்டில் ஐரோப்பிய வங்கிகளுக்கு
“உடனடியாக கூடுதல்
மூதலனம்”
தேவை என்று அழைப்பு விடுத்த
தாக்குதலை ஹஷென்க்ரீன் தாக்குகிறார்.
“இது தொற்றுச்
சங்கிலிகளை வெட்டும் திறவுகோல்”
என்று லகார்ட்
வாதிட்டிருந்தார். “இது
தீர்க்கப்படவில்லை என்றால்,
நாம் பொருளாதார
நலிவு இன்னும் முக்கிய நாடுகளுக்கு பரவுதலை எளிதில் காண்போம்,
மோசமாகிவிடும்
நீர்மை நெருக்கடி கூட ஏற்படலாம்.”
வங்கிகளுக்கு
கூடுதல் மூலதனம் வழங்க ஐரோப்பிய உறுதிப்பாட்டு அமைப்புமுறை தீவிரப்படுத்தப்பட
வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஜேர்மனிய
நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌய்பிள அரசாங்க நிதிகள் இன்னும் வங்கிகளுக்கு வழங்குவது
என்னும் கருத்தை முற்றிலும் உதறித்தள்ளி,
“அரசியல் அளவில்
வேதனை கொடுத்தாலும்.”
கடும் சிக்கன
நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறார். பைனான்சியல் டைம்ஸ் அதே பதிப்பில் வேறு
பிரிவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அவர்
“யூரோப்பகுதிக்கு
சிக்கன நடவடிக்கை ஒன்றுதான் நிவாரணம் தரும்”
என்று
வலியுறுத்தியுள்ளார்.
“ஊக
வணிகர்களை கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்,
மத்திய வங்கிகள்
நிதியக் கொள்கையை இன்னும் தளர்த்த வேண்டும்,
அமெரிக்காவும்
ஜேர்மனியும் அவற்றின்
“நிதிய வசதி”
என இருப்பதாகக்
கூறப்படுவதை தேவைக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும்,
ஐரோப்பியத்
தலைவர்கள் நிதிய ஒன்றியத்திற்கு உடனே நகர வேண்டும்,
கூட்டுப் பொறுப்பை
ஏற்க வேண்டும் என்று அழைப்புக்கள் வந்துள்ளன.”
என்று ஷௌபிள
எழுதியுள்ளார்.
இதன்பின் அத்தகைய
திட்டங்கள் அனைத்தையும் அவர் நிராகரிக்கிறார்.
“இன்னும் கூடுதலான
கடனைக் குவித்தல் என்பது நீண்டக்கால அளவில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குப் பதிலாக
குன்றச் செய்யும்.
யூரோப்பகுதிக்குள்ளும் புறத்தேயும் இருக்கும் அரசாங்கங்கள் நிதிய
ஒருங்கிணைப்பிற்கும் போட்டித்தன்மையை அதிகரிக்க மட்டும் உறுதியளித்தால் போதாது—அவை
இப்பொழுதே அவற்றை செயல்படுத்த வேண்டும்.”
சர்வதேச
அளவில் வெளிப்படையாகக் காண்படும் மோதல்கள் தேசிய அளவிலும் அதேபோன்ற வகையில்
வந்துள்ளன.
தன் பொருளாதார
பலத்தினால் முக்கிய பங்கைக் கொண்டுள்ள ஜேர்மனியில்,
ஆளும் கூட்டணி
அடுத்த நடவடிக்கை என்னும் பிரச்சினை குறித்து ஆழ்ந்த பிளவுகளைக் கொண்டுள்ளது.
ஜேர்மனியின்
சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் யூரோவிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
“இது ஒரு
நாணயத்தைவிட மிக,
மிக அதிகமானது”
என்றார் அவர்.
“இது ஒரு
ஐக்கியப்பட்ட ஐரோப்பாவை உத்தரவாதப்படுத்தும்”
என்று புதன்கிழமை
பாராளுமன்றத்தில் வரவு-செலவுத்
திட்ட விவாதத்தின்போது அவர் கூறினார்.
“யூரோ தோற்றால்,
ஐரோப்பாவும்
தோற்றுவிடும்.”
நிதி மந்திரி ஷௌபிள
கூட யூரோவை ஒரேயோரு மாற்றீடாக பாதுகாத்தார்.
“பூகோளமயமாக்கப்பட்ட
உலகில் நமக்கு ஒரு பொது ஐரோப்பிய நாணயம் தேவை”
என்றார் அவர்.
ஆனால்
கிரேக்கத்திற்கு கொடுக்க இருக்கும் அடுத்த நிதி உதவி அந்நாடு சேமிப்புத் தேவைகளை
நிறைவேற்றாவிட்டால் கொடுக்கப்பட மாட்டாது என்றும் ஷௌபிள அச்சுறுத்தினார்.
“இங்கு
தந்திரோபாயத்திற்கு இடமில்லை”
என்றார் அவர்.
கிரேகத்திற்கு
நிதிகள் மறுக்கப்பட்டால்,
அதன் விளைவு தேசியத்
திவால் ஆகும்;
அதன் விளைவுகள்
சர்வதேச நிதிய முறையில் கணிப்பிடமுடியாதவையாக இருக்கும்.
தாராளவாத
ஜனநாயக கட்சியின்
–FDP-
பிரதிநிதி ஹேர்மான ஒட்டோ சொல்ம்ஸ் ஏற்கனவே கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து
ஒதுக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அந்நாடு மற்ற
நாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்குத் தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி
செய்யவில்லை என்று அவர் வாதிட்டுள்ளார்.
“ஒரு நீண்டகாலத்
தன்மையில் இதை அனுமதிக்கக் கூடாது.”
கூட்டணி
அரசாங்கத்தின் ஒரு பிரிவு யூரோ மீட்புத் திட்டங்களை உறுதியாக நிராகரிக்கிறது.
திங்களன்று
கூட்டணிப் பிரிவில் நடந்த வாக்களிப்பு அரசாங்கத்திற்குப் போதிய பெரும்பான்மை இல்லை
என்பதைக் காட்டியது.
பழைமைவாத ஒன்றியக்
கட்சிகளின் 19
உறுப்பினர்களும்
தாராளவாத ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களில்
6 பேரும்
பிணையெடுப்பு வாக்களிப்பில் எதிராக வாக்களித்திருந்தனர் அல்லது கலந்து கொள்ளவில்லை.
இதன் பொருள்
அரசாங்கம் செப்டம்பர் இறுதியில் பாராளுமன்றத்தில் மீட்புப் பொதிக்கான இறுதி
வாக்கெடுப்பில் சமூக ஜனநாயக கட்சியின்
–SPD-
ஆதரவை நம்பவேண்டியிருக்கும் என்பதாகும்.
இதன் பின்
புதன்கிழமை அன்று கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் பிணை எடுப்பை எதிர்த்து பல
பேராசிரியர்கள் பதிவு செய்திருந்த வழக்கு ஒன்றைத் தள்ளுபடி செய்தது.
இத்தீர்ப்பு
அரசாங்கத்தாலும் சர்வதேச நிதியச் சந்தைகளாலும் வரவேற்கப்பட்டது.
ஒரு எதிர்த்
தீர்ப்பு யூரோவிற்கு முடிவு என்பதற்கு வழிவகுத்திருக்கும்.
ஆனால்
பாராளுமன்றத்தில் எந்த வருங்காலக் கடனையும் இருக்கும் மீட்பு அமைப்பிற்கு இசைவு
கொடுக்க வேண்டும் என்பது பற்றித் தீர்ப்புக் கூறவில்லை.
ஜேர்மனியின்
முன்னுதாரணம் மற்ற நாடுகளிலும் பின்பற்றப்பட்டால்,
இன்னும்
பிணையெடுப்புக்கள் பெரும்பாலும் இயலாமல் போய்விடும்.
ஐரோப்பிய
நிறுவனங்களுக்கு தேசிய அதிகாரங்கள் இன்னும் கொடுக்கப்படுவதற்கும் நீதிமன்றம்
நிறுத்தியுள்ளது.
சான்ஸ்லர்
மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி விழையும் ஐரோப்பிய
பொருளாதார அரசாங்கம் ஜேர்மனிய அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்டதால்தான்
செயல்படுத்தப்பட முடியும்.
யூரோ
நெருக்கடியைத் தீர்ப்பது பற்றிய சூடான விவாதங்கள்,
தீவிர மோதல்கள்
இருப்பவை முதலாளித்துவ அமைப்புமுறை முறிவின் வெளிப்பாடு ஆகும்.
இந்த நெருக்கடி
இருக்கும் சமூக உறவுகள் மற்றும் அரசியல் நிறுவனங்களால் தீர்க்கப்பட முடியாது.
1990களின்
ஆரம்பத்தில் விரைவுபடுத்தப்பட்ட,
பல தசாப்தங்களின்
வருமானம்,
செல்வம் ஆகியவற்றின்
மறுபங்கீட்டு முறையின் விளைவுதான் ஐரோப்பியக் கடன் நெருக்கடி ஆகும்.
சமூகச் செல்வத்தின்
பெருகிய விகிதங்கள் வங்கிகளின் கணக்கில் பாய்ந்து செல்வந்தர்களை அடைந்தன,
அதே நேரத்தில்
தொழிலாளர்களின் ஊதியங்கள் தேக்கம் அடைந்தன,
உற்பத்தி குறைந்தது,
பொதுநலச் செலவுகள்
குறைக்கப்பட்டன.
1990
களின் பங்குச் சந்தை ஏற்றத்தின்போது குவிக்கப்பட்ட செல்வத்தின் பெரும்பகுதி
ஊகத்தன்மையைத்தான் கொண்டிருந்தது.
அது உண்மையான
மதிப்பைப் பிரதிபலிக்கவில்லை.
அந்தக் குமிழி
2008ல் வெடித்தவுடன்,
வங்கிகள் தேசிய வரவு
செலவுத் திட்டங்களில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களைப் பெற்றன.
இப்பொழுது வங்கிகள்
இந்த நிதிகள் மக்களின் பெரும்பாலோரைப் பாதிக்கும் பாரிய சிக்கன நடவடிக்கைகள் மூலம்
மீட்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
எனவே நெருக்கடி
மீண்டும் செல்வப் பங்கீட்டிற்கு ஒரு கருவியாகிவிட்டது. அதே நேரத்தில்
தொழிலாளர்களுக்கு சமீப தசாப்தங்களின் சமூக வெற்றிகள் அனைத்தையும் அகற்றிவிட்டது.
நெருக்கடிக்கு ஐரோப்பிய மற்றும் தேசியத் தீர்வு தேவை என்று கூறுபவர்கள்
நெருக்கடியின் செலவுகளை மக்கள் ஏற்க வேண்டும் என வலியுறுத்துவதில் ஒன்றுபட்டுள்ளனர்.
கிரேக்கம்
“உதவியை”
யூரோ மீட்பு
நிதியில் இருந்து பெறுவதற்காக செயல்படுத்த வேண்டிய சிக்கன நடவடிக்கைகள் பெரிதும்
சராசரி வருமானம் ஈட்டுபவர்களுடைய வாழ்க்கைத் தரங்களை
30% முதல்
40%
குறைத்துவிட்டது. மேலும் அரச உள்கட்டுமானத்தின் பெரும் பகுதிகளையும் அழித்துள்ளன.
யூரோவின் சரிவு
மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவு என்பது முழு நாடுகளைத் திவாலாக்கும்,
தேசிய மோதல்கள்
மற்றும் போர்களை ஐரோப்பாவில் மீண்டும் தலையெடுக்கச் செய்யும்.
இப்பாதைகளில் எதுவுமே ஜனநாயக வழிவகைளுடன் சமரசத்திற்கு உட்படாது.
இதுதான் ஆளும்
வர்க்கம் மற்றும் அதன் கட்சிகளுக்குள் நடக்கும் ஆழ்ந்த விவாதத்தின் பின்னணி ஆகும்.
அரசியல் நெருக்கடி
தொழிலாள வர்க்கம் அரசியல் வாழ்வில் குறுகிட்டு தன் மாற்றீட்டுத் தீர்வை நிறுவப்
போராடாவிட்டால்,
சர்வாதிகார
அமைப்புக்களைத்தான் கொண்டுவரும்.
ஒரு சமூகப்
பிரச்சினைகூட நிதியச் சந்தைகள் முழுப் பொருளாதாரங்களை தீர்மானிக்கும் வரை
தீர்க்கப்பட முடியாது.
எனவே முக்கிய நிதிய
நிறுவனங்களும் பெரும் நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டு ஜனநாயகக்
கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
பொருளாதார வாழ்வு
சமூகத்தின் தேவைக்கேற்பத் திட்டமிடப்பட வேண்டுமே ஒழிய,
சந்தைக்குழப்பங்கள்,
வங்கிகளின் இலாப
நலன்கள் ஆகியவற்றிற்கு விட்டுவிடக்கூடாது.
இதற்கு
தொழிலாளர்கள் அரசாங்கங்களையும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளையும் நிறுவுவதற்கு
மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் சுயாதீனமான அணிதிரள்வு அவசியமாகும்.
அதற்கு ஒரு உலகப்
புரட்சிக்கான கட்சியை கட்டமைத்தல் தேவையாகும். அதுதான் நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவும் மற்றும் அதன் ஜேர்மனிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியும்
ஆகும். |