World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government admits to wiretapping journalists in Bettencourt scandal

பெத்தன்கூர் ஊழலில் செய்தியாளர்களை ஒற்றுக் கேட்டதை பிரெஞ்சு அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது

By Antoine Lerougetel and Alex Lantier
9 September 2011

 

Back to screen version
 

செப்டம்பர் 1ந் திகதி, பிரான்ஸின் உள்துறை மந்திரி Claude Guéant கடந்த ஜூலையில் பிரெஞ்சு உள்நாட்டு உளவுத்துறையானது பிரான்ஸின் முக்கிய நாளேடான Le Monde இன் நிருபர் Gérard Davet உடைய தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக் கேட்டது என்பதை ஒப்புக்கொண்டார். ஓராண்டிற்கும் மேலாக Guéant அத்துடன் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி உட்பட பல அதிகாரிகள்Le Monde முன்வைத்த புகார்களை மீறிஅத்தகைய ஒற்று வேலை நடக்கவில்லை என்று உறுதியளித்தபின் இப்பொழுது இவ்வாறு கூறப்படுகிறது.

பிரான்ஸின் DCRI ஆனது(மத்திய உள்துறை தகவல் துறை) Davet உடையதொலைபேசி உரையாடல்களை ஒற்றுக் கேட்டது என உறுதி செய்தார். இந்நடவடிக்கையின் நோக்கம் L’Oreal பில்லியனர் லில்லியன் பெத்தன்கூர் பற்றிய சட்டபூர்வ விசாரணைகளை Davet எந்த ஆதாரங்கள் மூலம் அறிந்து தகவல் கொடுத்தார் என்பதை அறிவதாகும். நீதிமன்றங்கள் பொலிஸ் ஒற்று வேலையின் சட்டத்தன்மை குறித்துஇருக்கும் நிலையை முடிவெடுக்கும் என்றும் Guéant சுருக்கமாகக் கூறினார்.

கடந்த கோடை காலம் தொலைபேசி வணிக நிறுவனமான Orange இடம் DCRI ஆனது Davet செய்த தொலைபேசி அழைப்புக்கள் பற்றிய விபரங்களைக் கேட்டது. அது அவர்களை பின்னர் தகவல் பரிமாற்றக்காரர் David Sénat ஐ அடையாளம் காண உதவியது; அவர் நீதித்துறையில் வேலைபார்த்து வந்தார். அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இவ்வகையில் Le Monde ஜனவரி 4, 2010 செய்தித்துறைச் சட்டத்தை மேற்கோளிட்டது; அதில் ஒரு பிரிவு கூறுவதாவது: “செய்தியாளர்களின் ஆதாரங்கள் பற்றிய இரகசியம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தீமைக்கு உட்படுத்தப்படக்கூடாது.”

DCRI தலைவர் Bernard Squarcini மற்றும் தேசியப் பொலிசின் Frédéric Péchenard ஆகியோர் விசாரணை நடுவர் சில்வியா சிம்மர்மனின் விசாரணையை எதிர்கொள்வர். “தேசிய நலன் என்னும் கோட்பாட்டைத் தங்கள் கண்காணிப்பை நியாயப்படுத்தப் பயன்படுத்தும் திட்டம் உடையதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி வெளிப்படையான நீதித்துறை இசைவு அத்தகைய ஒற்றுக் கேட்டலுக்குத் தேவைப்படாது என்னும் சட்டம் மேற்கோளிடப்படும். ஆனால் 1999 குழுவின் தீர்ப்பு ஒன்றை, அதாவது அச்சட்டம் தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயுள்ள தொடர்புகளை ஒற்றுக் கேட்பதற்குப் பொருந்தாது என்று கூறுவதை Le Monde மேற்கோளிட்டுள்ளது. இதையொட்டி அரசாங்கத்தின் பாதுகாப்பு மூலோபாயம் செயலற்றுப்போகலாம்.

சார்க்கோசி நிர்வாகம் இந்த வழக்கை எப்படி நடத்தப்போகிறது என்பது பற்றி முரணான தகவல்கள் வந்துள்ளன; Guéant அல்லது முன்னாள் உள்துறைமந்திரி Brice Hortefeux, சார்க்கோசியின் நெருக்கமான மந்திரிகள்தொடர்புபடுத்தப்படுவரா என்பதும் தெரியும்.

Squarcini அல்லது Péchenard க்கு சட்டப்பூர்வ தண்டனைகள் இருக்காது என்று Guéant  கூறியுள்ளார். ஆனால் Le Monde பெயரிடப்படாத ஜனாதிபதி ஊழியர் ஒருவர் “Bernard Squarcini அதிக நாள் நீடித்திருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அவர்அனைத்தையும் செய்தது நான்தான்”, “எல்லாம் வெளிவந்துவிட்டது என்று கூறினார் எனக் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

Guéant ஒப்புக் கொண்டதில் வெடிப்புத்தன்மை அரசாங்கத்தின் அப்பட்டமான சட்டவிரோதச் செயல் மற்றும் ஒற்றுக்கேட்டலின் நோக்கம் ஆகியவற்றில் இருந்தே வெளிப்படுகிறது. இவை சார்க்கோசி நிர்வாகம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீது இகழ்வான தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுவது பற்றிய பகிரங்க விவாதத்தைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை.

Davet ன் அறிக்கைகளில் பெத்தன்கூர் சட்டவிரோதமாக சார்க்கோசியின் 2007 தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி கொடுத்தது பற்றிய வெளிப்பாடுகள் உள்ளன; மேலும் அப்பொழுது நிதி மந்திரியாக இருந்த எரிக் வோர்த்தின் மனைவிக்கு உயர்ந்த ஊதியத்தில் வேலைக்கு உதவியதும் இருந்தது. அப்பொழுது வோர்த் பிரான்ஸின் தொழிற்சங்கங்களுடன் முக்கிய ஓய்வூதியக் குறைப்பிற்கு பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தார்; இச்சட்டத்தை பாராளுமன்றம் மூலம் விரைவில் இயற்றவும் செயல்பட்டு வந்தார். (See “Bettencourt tax-evasion scandal rocks French government”)

பெத்தன்கூர் விவகாரம் மற்றும் வெட்டுக்கள் குறித்த கோபம், தொடர்ந்து பெரும் ஆர்ப்பாட்டங்களை தூண்டின; கடந்த அக்டோபரில் தொழில்துறை வேலை நிறுத்தங்களையும் தூண்டியது; இவை இறுதியில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தாலும் பிரான்ஸின் மத்தியதர வர்க்கப் போலி இடது கட்சிகளாலும் நெரிக்கப்பட்டுவிட்டன.

இப்போக்குகள் பிரெஞ்சு முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஆழ்ந்த இழிசரிவை அம்பலப்படுத்துகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் இன்னும் பிற மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளைப் போலவே, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாத்தல் பற்றிய வெறித்தனக்கூச்சலும், “பயங்கரவாதத்தின் மீதான போர் என்பதும் உள்நாட்டு மற்றும் வெளியுறவு உளவு அமைப்புக்களை பயனுடைய கண்காணிப்பில் இருந்து விடுவித்துவிட்டன.

பிரான்சின் நிர்வாகக் கிளை இப்பொழுது செய்தி ஊடகச் சுதந்திரம் இன்னும் பிற அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் மிதிக்கிறது; ஒரு குறுகிய நிதியத் தன்னலக்குழுவின் சமூக நலன்களைக் காப்பதற்கு பொலிஸ் அரசைப் பெருமைப்படும் வழிவகைகளைப் பயன்படுத்துகிறது.

Le Monde ஒற்றுக் கேட்கப்பட்டது, சார்க்கோசி நிர்வாகம் வளர்த்துள்ள ஆழ்ந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் தொடர்ச்சியின் சமீபத்தியதுதான்; இது முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகளையும் பிற இனரீதியான வெறுப்புக்களையும் தூண்டியுள்ளது; நவ பாசிச வாக்குகளுக்கு அழைப்பு விடுவதற்கும் தொழிலாள வர்க்கத்தைப் பிரிப்பதற்கும் இவை நடைபெற்றன. இந்த நடவடிக்கைகளில் மத விவகாரங்களில் அரசின் நடுநிலைமை வேண்டும் என்னும் அரசியலமைப்புக் கோட்பாட்டை மீறி பர்க்கா அணிவது தடை செய்யப்பட்டது, ரோமாக்களை இலக்கு வைத்து இனரீதியான நாடு கடத்தல் ஆகியவையும் அடங்கும்.

இது சர்வதேச அளவில் முதலாளித்துவம் பரந்த முறையில் பொலிஸ் அரச வடிவமைப்பு ஆட்சிமுறைகளுக்கு மாற்றம் காண்பதன் ஒரு பகுதியாகும்; சமூகச் சீற்றம் மற்றும் எதிர்ப்பை அடக்க இவை பயன்படுகின்றன; இன்னும் அப்பட்டமாக பிரிட்டஷ் அரசு கடந்த மாதம் லண்டன் மற்றய பிரிட்டிஷ் நகரங்களில் நடைபெற்ற கலகங்களுக்காக 30,000 பேரைக் கைது செய்துள்ளது.

இத்தகைய விரைவான வலதுசாரி மாற்றத்திற்கு முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளின் ஆதரவும் உண்டு. பிரான்சில் முதலாளித்துவஇடது கட்சிகள், பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) உட்பட, சார்க்கோசியின் ஜனநாயக விரோதக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளனஆப்கானிய போரில் பிரான்ஸ் பங்கு பெறுதல், சார்க்கோசியின் பர்க்காத் தடைத் திட்டம் இயற்றுதல், ஆகியவற்றில் பங்கு கொண்டதுடன், அவருடைய சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்தன.

இப்பின்னணியில் PS தன்னை செய்தி ஊடகச் சுதந்திரத்தின் காப்பாளர் என்று காட்டிக் கொள்ளும் முயற்சி, சார்க்கோசிக்குக் கொள்கையளவில் எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளுவது இழிந்ததும், தவறானதும் ஆகும்.

PS ன் முதன்மைச் செயலர் Martine Aubry,  2010 இல் ஜனாதிபதித் தேர்தல்களில் PS வேட்பாளராக போட்டியிடுவதில் முக்கியமாக இருப்பவர் இவ்விடயம்மிகத் தீவிரமானது என்றார். அவர் மேலும் கூறியது: “அடுத்த வாரம் தொடங்கி, நாம் பாராளுமன்றம் மறுபடியும் கூடுவதைப் பயன்படுத்தி இவ்விஷயம் பற்றிப் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அரசாங்கத்திற்குக் கூறவேண்டும். தேவையானால், பாராளுமன்றக் குழு விசாரணை ஒன்று அமைக்கப்படும் வாய்ப்பையும் பரிசீலிப்போம்.”

ஆப்ரியின் கருத்துக்களுக்கு PS ன் செய்தித் தொடர்பாளர் Benoît Hamon இசைவு தெரிவித்தார் என்றாலும், அவர்கடந்த காலத்தில் பலரும் இதே தவறுகளைச் செய்துள்ளனர் என்றார்.

இது ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் (PS) சட்டவிரோத ஒற்றுக் கேட்டலை தொழில்துறை அளவில் அவருடைய முதல் பதவிக் காலத்தில் செய்தது பற்றிய கெட்டிக்காரத்தனக் குறிப்பு ஆகும்அப்பொழுதும் Le Monde செய்தியாளர்களுக்கு எதிராகவும் நடந்துகொண்டது; இது அவர் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களுக்கு எதிராகசிக்கனத் திருப்பத்தை தொடங்கிய பின்னர் நடைபெற்றது. அவர் காலத்தில் இருந்து இப்பொழுதும் தப்பிப் பிழைத்தவர்கள் 2005ம் ஆண்டு இந்த ஊழலில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டிருந்தனர்.