சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

welfare cuts and poverty requires the building of a new political party

வீட்டு வாடகை உயர்வுகள் பொதுநலச் செலவு வெட்டுக்கள் மற்றும் வறுமைக்கு எதிராகப் போராட ஒரு புதிய அரசியல் கட்சி கட்டமைக்கப்பட வேண்டும்

Statement of the Socialist Equality Party Germany (PSG) 
7 September 2011

 

use this version to print | Send feedback

கடந்த சனிக்கிழமை அன்று கீழ்க்கண்ட அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அதிகாரிகளால் பேர்லினில் ஓர் ஆர்ப்பாட்டத்தில் துண்டுப்பிரசுரமாக விநியோகிக்கப்பட்டது.

பொறுத்தது போதும்என்ற இலக்கில், பல நகரவைத் தொகுதிகள், வாடகைக்கு இருப்பவர்கள் மற்றும் வேலையில்லாதோரைப் பிரதிபலிக்கும் முனைப்புக் கூட்டணி ஒன்று தொழிற்சங்கங்கள் மற்றும் பிற குழுக்களுடன் சேர்ந்து கொண்டு இச்சனியன்று வாடகை உயர்வுகள், சமூகத்தில் ஒதுக்கப்படுதல் மற்றும் பேர்லின்-க்ரொஸ்பேர்க்கில் வறுமை ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதன் அமைப்பாளர்கள் வெளிப்படையாக அரசியல் கட்சிகள் பங்கு பெறுவதைத் தடை செய்துள்ளனர். கட்சிகளும் அவற்றின் அடையாளங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இடம் பெறக்கூடாதுஎன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இத்தடை தலைநகரிலும் நாடு முழுவதும் வாடகை உயர்வுகள், சமூகப் பணிகளில் பல குறைப்புக்களுக்கு பொறுப்புடைய கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), தாராளவாத ஜனநாயக்கட்சி (FDP), சமூக ஜனநாயகக் கட்சி (SPD), மற்றும் இடது கட்சி என்பவற்றிற்கு மட்டும் இல்லாமல் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (PSG) பொருந்தும். ஒரு விசாரணைக்கு விடையளிக்கையில் அமைப்பாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் நோக்கம் பற்றிய அறிக்கைகள், கட்சிப்  பதாகைகள் மற்றும் கட்சியின் கொடிகள் ஆர்ப்பாட்டத்தில் அனுமதிக்கப்படமாட்டாஎன்று அறிவித்தனர்.

இது அப்பட்டமான தணிக்கை முறையாகிறது. சோசலிச சமத்துவக் கட்சி சமூக ஜனநாயக கட்சி-இடது கட்சி செனட்டின் சமூக விரோத கொள்கைகளை எதிர்த்து கீழ்மன்ற நகரவைத் தேர்தல்களில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் தேர்தலில் பங்கு பெறும் ஒரே கட்சியாகும். பேர்லின் முழுவதும் ஆயிரக்கணக்கில் காணக்கூடிய எங்களுடைய சுவரொட்டிகளில் ஒன்று வலியுறுத்துவதாவது: மிக உயர்ந்த வாடகைகள் வீழ்க! நியாயமான வாடகையில் வீடு என்பது அடிப்படை உரிமையாகும். வாடகைக் கொள்ளை அடிக்கும் வீட்டு உரிமையாளர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்க! மின்சாரம், எரிவாயு, நீர் விநியோகம் ஆகியவற்றை தொழிலாளர்கள் மற்றும் வாடகைக்கு இருப்பவர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருக!

இந்த கோஷங்களை அமைப்பாளர்கள் நசுக்குவது ஆர்ப்பாட்டம் ஒரு முழுக் கேலிக்கூத்து என்பதை அம்பலப்படுத்துகிறது. கொள்ளையடிப்பது போன்ற வாடகை, பொதுநலச் செலவுக் குறைப்புக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஓர் அரசியல் முன்னோக்கு முற்றிலும் தேவையானது ஆகும். ஆனால் அத்தகைய முன்னோக்கு அது வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறும் ஒவ்வொருவருக்கும் தன் கருத்தைக் கூறும் வாய்ப்பைக் கொடுத்தால்தான் அபிவிருத்திசெய்யப்பட முடியும். இதைத்தான் துல்லியமாக அமைப்பாளர்கள் தங்கள் தடை உத்தரவின்மூலம் தடை செய்யும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

கட்சிகள்அரச வீட்டு திட்டங்களை அகற்றி, நகரசபை கட்டிடச் சங்கங்களை விற்றுவிட்டதால் தான் கட்சிகள் தடைக்கு உட்படுத்தப்படுகின்றன என்று அவர்கள் நியாயப்படுத்துகின்றனர். ஆனால் இக்கொள்கைகளுக்கு அரசியல் கட்சிகள் என்றிருக்கும் அனைத்தும் பொறுப்பல்ல. குறிப்பிட்ட சில கட்சிகளான பேர்லினில் இடது கட்சி மற்றும் சமூக ஜனநாயக் கட்சி மற்றும் ஜேர்மனியின் பிற பிராந்தியங்களில் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், கிறிஸ்துவ சமூக ஒன்றியம், தாராளவாத ஜனநாயக் கட்சி கூட்டணி, மற்றும் பசுமைவாதிகள் மட்டுமே குற்றம் சாட்டப்படவேண்டும்.

இத்தகைய கட்சிகளை நிராகரிப்பது முற்றிலும் சரியானதுதான். ஆனால் பொதுவாகவே அரசியல் கட்சிகளை உதறித் தள்ளுவது என்பது தவறானதாகும்.

அவ்வாறு செய்வது இடது கட்சி மற்றும் சமூக ஜனநாயக் கட்சிக்கு இணங்கி நடப்பது என்று ஆகும். அவற்றைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மாற்றீட்டு அரசியல் நிறுவப்படவேண்டும்; வங்கிகள் மற்றும் வாடகைகளை அதிகரிக்கும் சுறாக்களின் நலன்களைக் காப்பவற்றை அல்ல. அதைத்தான் சோசலிச சமத்துவக் கட்சி சரியாகச் செய்து வருகிறது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் இருந்து கட்சிகளை தடைசெய்வது என்பது ஆழ்ந்த ஜனநாயக விரோதப் போக்கு ஆகும். பேர்லின் சுவரின் வீழ்ச்சிக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு பேர்லினில் வசித்து வந்தவர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் தனிப்பட்ட கருத்துக்கள் தணிக்கைக்கு உட்படும்போது என்ன நேர்கிறது என்பதை அனுபவித்துள்ளனர். தொழிலாளர்களின் ஜனநாயகம் நசுக்கப்பட்டது இறுதியில் முன்னாள் ஸ்ராலினிச ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (GDR) சரிவிற்கு வகை செய்தது. ஆயினும்கூட, சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தை அமைப்பவர்கள் எந்தக் கருத்துக்கள் வெளியிடப்படலாம், எவை வெளியிடப்படக்கூடாது என்பதை நிர்ணியக்க முயல்கின்றனர். இது தன்னைப் பற்றியே உயர்வாக நினைத்தல், திமிர்த்தனம் ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.

உண்மையில் இவர்கள் இடது கட்சி மற்றும் சமூக ஜனநாயக் கட்சி ஆகியவை பேர்லின் நகரவை மன்றத்தில் இருந்து அகற்றப்படுவதைத் தடுக்க விரும்புகின்றனர். எனவேதான் இரண்டாம் மன்றத் தேர்தல்களுக்கு இரண்டு வாரங்கள் முன்பு அவர்கள் மதிப்பிழந்த அரசியல் கட்சிகளுக்கு எதிராக இடதிலிருந்து மாற்றீட்டைக் கட்டமைக்கத் தயாராக இருக்கும் சோசலிச சமத்துவக் கட்சி மீது தணிக்கை முறையைக் கொண்டுவந்துள்ளனர்.

சமூக ஜனநாயக் கட்சி -இடது கட்சி செனட் அகற்றப்பட வேண்டும் என்று அமைப்பாளர்கள் விரும்பவில்லை; மாறாக அதற்கு அழுத்தம் கொடுத்தால் போதும் என நினைக்கின்றனர்அந்த மூலோபாயத்திற்கு சமூக ஜனநாயக் கட்சி மற்றும் இடது கட்சி அதிகாரத்தில் தொடர வேண்டும் என்ற தேவை உள்ளது! வாடகை உயர்வுகள், பொதுநலச் செலவுக் குறைப்புக்களுக்கு எதிரான எதிர்ப்பை அவர்கள் சமூக ஜனநாயக் கட்சி மேயர் கிளவுஸ் வோவரைட் இன் செனட் மற்றொரு பதவிக்காலத்தினை தொடர்வதற்கு உதவப் பயன்படுத்துகின்றனர். ஆனால் தெருக்களில் இருந்து வரும் அழுத்தத்தினால் செனட் தன் கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவது இல்லை. இது கடந்த 10 ஆண்டுகளில் பலமுறையும் நிரூபணமாகியுள்ளது.

தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய அதிகாரிகளோ சமூக ஜனநாயக் கட்சி, இடது கட்சி, பசுமைவாதிகள் என்னும் கட்சிகளின் அடையாள அட்டை கொண்ட உறுப்பினர்கள் ஆவர். குறிப்பாக வேர்டி பொதுப் பணி தொழிற்சங்கம் நகரசபை வேலைகள் குறைக்கப்படல், ஊதியங்கள் குறைக்கப்படல் ஆகியவற்றிற்கு கடந்த 10 ஆண்டுகளில் மிகநெருக்கமாக ஒத்துழைத்துள்ளது.

பேர்லின்-பிராண்டன்பேர்க் மாநில பிராந்தியத்தின் வேர்டியின் தலைவர் சுசான ஸ்ரும்பன்ஹூஸன் பேர்லினில் பொதுநலச் செலவுக் குறைப்புக்களுக்கு ஆதரவு கொடுக்கிறார், இடது கட்சி மற்றும் சமூக ஜனநாயக் கட்சியுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதுடன், இடது கட்சியின் செனட்டர் ஹரால்ட் வொல்வ் இன் தலைமையிலான பேர்லின் நீர்வழங்கல் மேற்பார்வைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை வகிக்கிறார்.

ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தவற்றில் பெரும்பாலான குடியிருப்புபகுதி முன்னெடுப்புக்கள், ஆதரவுக் குழுக்கள் மற்றும் சமூக அமைப்புகள் இடது கட்சி மற்றும் சமூக ஜனநாயக் கட்சியுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டுள்ளன. அவை இக்கட்சிகளின் ஆதரவைக் கொண்டுள்ளன; சில நேரங்களில் அவற்றின் நிதி உதவியையும் பெறுகின்றன. பல தங்கள் அரசியல் அடையாளத்தை மறைக்க முயன்றாலும், அவை நகரவை மற்றும் தொழிற்சங்கத் தலைமைகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன.

ஆர்ப்பாட்டத்திற்கு தங்கள் பெயரையும் கொடுத்துள்ள அமைப்புக்கள் பற்றிய உதாரணங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

--இணைத்து செயற்படு” (Acting Together) என்னும் அமைப்பு மற்றவற்றுடன் இடது கட்சி, சமூக ஜனநாயக் கட்சி, பசுமைக்கட்சியினர் ஆகியோரின் ஆதரவையும் கொண்டுள்ளது. இதைத்தவிர வேர்டி மற்றும் ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் (DGB) ஆதரவையும் கொண்டுள்ளது.

--Berlin S-Bahn-Tisch (ஒரு நகர்ப்புறப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் அமைப்பு) சோசலிஸ்ட் மாற்றீடு (SAV) உடைய திட்டம் ஆகும். இக்குழு இடதுகட்சிக்கு உள்ளே செயல்பட்டு வருவதோடு இடது கட்சிக்காக வரவிருக்கும் தேர்தல்களில் பிரச்சாரம் செய்ய உள்ளது. S-Bahn-Tisch உடைய முக்கிய தலைவர் முன்பு PDS எனப்படும் ஜனநாயக சோசலிசக் கட்சியின் தேசிக்குழு உறுப்பினராவார்: அதைத்தவிர, கூட்டாட்சி அரசியலில் கட்சியின் செய்தித் தொடர்பாளாராகவும் இருந்தவர். பின்னர் அவர் பேர்லின் சமூக கூட்டமைப்பு என்பதற்குத் தலைமை தாங்கி, WASG எனப்படும் வேலைகள், சமூக நீதிக்குத் தேர்தல் மாற்றீடு என்பதின் நிர்வாகக் குழுவில் இருந்தார். இப்பொழுது அது இடது கட்சியின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.

-- IG Metall தொழிற்சங்கத்திற்குள் ஒரு குழுவாக உள்ள GEW-Jugend (ஜேர்மனிய கல்வித்துறை தொழிற்சங்க இளைஞர் குழு) மற்றும் Attac Berlin (வெளி நாணய மாற்றுச் செயல்களுக்கு வரிவிதிப்பைக் கோரும் குழு) ஆகியவை செனட் கட்சிகள் மற்றும் பசுமைவாதிகளின் நிரந்தர உறுப்பினர்களை முக்கியமாகக் கொண்டவை. GEW-Jugend உடைய செய்தித் தொடர்பாளர் ஸ்ரெபானி ஹானிஷ் Neukölln நகர இடது கட்சியின் உறுப்பினர் ஆவார். Attac Berlin உடைய செய்தித் தொடர்பாளரான பிராக்கிள் லேனா சமூக ஜனநாயக் கட்சியின் தேசியக் குழுவில் உறுப்பினர் ஆவார்.

--பேர்லின் வேலையில்லாதோர் தொழிற்சங்கவாதிகள் அமைப்பு (KOK) என்பதின் ஒருங்கிணைக்கும் குழுவில் வேர்டி பொதுப் பணிச் தொழிற்சங்கத்திற்குள் வேலையில்லாதவர்கள் குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் DGB எனப்படும் ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பேர்லின் கிளையும் உள்ளது. செய்தி ஊடகத்துறையில் வேலையற்றோருக்கான வேர்டியின் குழு இடதுகட்சி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

--Stop the Rent Increases (வாடகை உயர்வை நிறுத்துஎன்னும் இணைய தளப் பிரிவு உல்றிக்க ஹாஸ வை தொடர்பு நபராகப் பட்டியலிட்டுள்ளது. இவர் க்ரொயிட்ஸ்பேர்க் நகர இடது கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்பதுடன் இடது கட்சியின் வேட்பாளராக பிரீட்றிஸ்ஹெய்ன்-க்ரொயிட்ஸ்பேர்க் மாவட்டக்குழு மன்றத்திற்கும் வேட்பாளராக நின்றுள்ளார்.

கட்சி நடுநிலை என்று கூறப்படும் ஆர்ப்பாட்டத்தின் முன்னெடுப்பாளர்கள் மற்றும்  ஆதரவாளர்களின் தன்மை இதுதான். செனட் கட்சிகளான சமூக ஜனநாயக் கட்சியினரும் மற்றும் இடது கட்சியினரும் தொழிற்சங்கவாதிகள், பல முன்னெடுப்புகளின் உறுப்பினர்கள் என்று மறைந்துள்ள நிலையில் இதில் பங்கு பெறுவர். ஆனால் சோசலிச சமத்துவக் கட்சி வெளிப்படையாக தன்னை அன்று முன்வைக்க அனுமதிக்கப்படவில்லை. அரசியல் கட்சிகள் தடை என்பது செனட் கட்சிகளை குறைகூறலில் இருந்து பாதுகாக்கத் தூண்டப்பட்டுள்ளது என்றுதான் வெளிப்படையாகத் தோன்றுகிறது. உண்மையான அரசியல் விவாதம் வேண்டுமென்ற நசுக்கப்படுகிறது.

1930களுப் பின்னர் முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி ஆளும் கட்சிகளுக்கு எதிராக மக்களின் பரந்த அடுக்குகளை தட்டி எழுப்பியுள்ளது. துனிசியா, எகிப்து, கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் இஸ்ரேலில் தொடங்கி மற்றைய நாடுகளுக்கும், ஜேர்மனி மற்றும் பேர்லினுக்கும் பரவ உள்ளது.

இந்த இயக்கங்களுக்கு ஒரு நிலைநோக்கையும் ஒரு முன்னோக்கையும் வழங்க சோசலிச சமத்துவக் கட்சி தயாரிப்புக்களை மேற்கொண்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களைத் தொடர்ச்சியாக வளர்ப்பதற்கு அது ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுகிறது. முதலாளித்துவத்தின் தேவையை ஒட்டிய கட்டுப்பாடுஎன்பதற்கு சலுகைகளை வழங்க அது மறுக்கிறது. ஆனால் வங்கிகள் மற்றும் பெரு வணிக நிறுவனங்களை எடுத்துக் கொண்டு அவற்றை மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர வாதிடுகிறது. நான்காம் அகிலத்தின் ஜேர்மனியப் பிரிவு என்னும் முறையில், இது ஸ்ராலினிசத்திற்கு எதிரான, மார்க்சிசம் மற்றும் இடது எதிர்ப்பு என்னும் மரபியத்தில் வேறூன்றியுள்ளது.

மிக அதிகமாகிவிட்ட வாடகைகள் மற்றும் பொதுநலச் செலவுக் குறைப்புக்களுக்கு எதிராக உண்மையில் போராட நினைக்கும் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டங்கள், முன்னோக்கினை படிக்குமாறும், உலக சோசலிச வலைத் தளத்தைப் வாசிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் கூட்டங்களில் பங்கு பெறுமாறும், செப்டம்பர் 18ம் திகதி சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்குமாறும் அழைப்பு விடுகிறோம்.