WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany’s Left Party and Nichi Vendola offer their services to the European
Union
ஜேர்மனியின் இடது கட்சியும் நிஷ்சி வென்டோலாவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தங்களது
சேவைகளை அளிக்க முன்வருகின்றனர்
By Johannes Stern
8 September 2011
Back to
screen version
1930களுக்குப்
பின் மிக ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடியில்,
ஜேர்மனிய இடது கட்சி தன்னுடைய சேவைகளை ஐரோப்பிய ஒன்றியம்,
யூரோ மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கு வழங்க முன்வந்துள்ளது.
இதுதான் கடந்த ஞாயிறன்று பேர்லினில் நடைபெற்ற இடது கட்சிக் கூட்டத்தின் பிரதான
தகவல் ஆகும்.
நூறு பேர் கலந்து கொண்ட
(பெரும்பாலானவர்கள்
கட்சி உறுப்பினர்கள்)
க்ரூஸ்பேர்க்கில் நடைபெற்ற இடது கட்சியின் கூட்டத்தில் பேசிய முக்கியமானவர்கள்
ஜேர்மனிய இடது கட்சியின் தலைவர்
Klaus Ernst,
இத்தாலிய அபுலீயா பிராந்தியத் தலைவரும் சினிஸ்ட்ரா எகோலோஜியா லிபேர்டாவின்
(SEL)
தலைவருமான நிஷ்சி வென்டோலா ஆகியோர் ஆவர்கள்.
அவர்களுடைய பேச்சின் கவனம்
“உத்தியோகபூர்வ
அரசாங்கங்கள் ஐரோப்பிய நெருக்கடியை சமாளிக்கும் திறன் அற்றவர்கள்”
(க்ளாவுஸ்
ஏர்ன்ஸ்ட்),
“எனவே
ஒரு வலுவான புதிய ஐரோப்பிய இடது,
ஐரோப்பாவைக் காப்பாற்றவும் அதை புதிய அஸ்திவாரங்களில் நிறுவவும் அவசியம்”
(நிஷ்சி
வெண்டோலா)
என்பதாக இருந்தது.
ஏர்னெஸ்ட் மற்றும் வென்டோலா பேர்லினில் நடத்திய கூட்டம்
குறிப்பிடத்தக்கது.
இருவரும் பழுத்த அரசியல்வாதிகள்,
நிதியச் சந்தைகளால் கோரப்படும் கடும் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த உதவிக்கு
அழைக்கப்பட்டுள்ளனர்.
Klaus Ernst, IG Metall
தொழிற்சங்கத்தின் மூத்த அதிகாரி,
மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக
1974
முதல்
2004
வரை
இருந்தவர்;
அதற்குப் பின்னர் அவர் தேர்தல் மாற்றீடு
(WASG)
என்பதின் இணை நிறுவனரானார்.
WASG
இன்
இலக்கு
SPD-பசுமைக்கட்சி
கூட்டணி ஹெகார்ட்
ஷ்ரோடர்
மூலம் அறிவித்திருந்த ஹார்ட்ஸ்
IV
பொதுநலச் சீர்திருத்தங்களுக்கு எழுந்த மக்கள் எதிர்ப்பைக் குறைப்பதாகும்.
அவர்
2007ல்
இருந்து இடது கட்சி உறுப்பினராகவும்
2010ல்
இருந்து அதன் தலைவராகவும் உள்ளார்.
Ernst
ம் இடது
கட்சியும் இப்பொழுது கூட்டாட்சி மட்டத்தில் அரசாங்கத்தில் ஒரு பங்கைக் கொள்ள
விரும்பி,
கடுமையான வெட்டுக்களையும் சுமத்த விழைகின்றன.
இடது கட்சி
SPD
உடன்
ஒரு கூட்டணியில்
10
ஆண்டு
காலம் ஆட்சியை நடத்தியபோது,
அது நகரத்தில் முன்னோடியில்லாத வெட்டுக்களைச் சுமத்தியது.
நிஷ்சி வென்டோலா ஏர்ன்ஸ்ட்டைப் போலவே வெட்டுக்களைச் செயற்படுத்துதல்
என வரும்போது அனுபவம் மிக்கவர்.
2005ல்
அவர் புக்லியாவின் தலைவராக நியமிக்கப்பட்டார்;
ரோமனோ ப்ரோடியின் மைய-இடது
கூட்டணியில் சேர்ந்தார்.
தன்னுடைய அரசியல் வாழ்வை ஸ்ராலினிச இத்தாலியக் கம்யூனிஸ்ட்
கட்சியின்
(PCI)
இளைஞர்
குழுவில் வென்டோலா தொடங்கி,
அதன் மத்திய குழுவில்
1990ல்
சேர்ந்தார்.
சோவியத் ஒன்றியம் சரிந்தபின்,
PCI
கரைக்கப்பட்டபின்—இதை
அவர் இறுதிவரை எதிர்த்தார்—வெண்டோலா
மீள்ஸ்தாபக கம்யூனிஸ்ட் கட்சியின்
(PRC)
நிறுவன
உறுப்பினரானார்.
PRC
ஆனது
எல்லாவித முன்னாள் இடதுகளுக்கும் முற்றிலும் கொள்கையற்ற அடிப்படையில் ஒன்று சேரும்
தளமாயிற்று.
ரோமனோ ப்ரோடி அரசாங்கத்துடன்
2006ல்
சேர்ந்து அவருடைய பொதுநலச்செலவுக் குறைப்புக்களுக்கு ஆதரவு கொடுத்துடன்,
ஆப்கானிய போரில் பங்கு பெறுவதற்கும் ஆதரவைக் கொடுத்த வகையில் இக்குழு அதன் உண்மைத்
தன்மையைக் காட்டியது.
இரு ஆண்டுகளுக்குப் பின்னர்
PRC
வாக்களார்களால் பெரும் தோல்விக்கு உட்படுத்தப்பட்டு,
பாராளுமன்றத்தில் மீண்டும் நுழையமுடியாமற் போய்விட்டது.
இப்போக்கிற்கு முகங்கொடுக்கும் முறையில் வெண்டோலா இன்னும்
வலதிற்குப் பாய்ந்தார்.
PRC
யில்
இருந்து இராஜிநாமா செய்து,
SEL
ஐ
நிறுவினார்—இது
கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள்,
ஸ்ராலினிஸ்ட்டுக்கள்,
சுற்றுச்சூழல்வாதிகள்,
முன்னாள் தீவிரப்போக்காளர்கள் ஆகியோரின் கூட்டணி ஆகும்.
அப்பொழுது முதல் இவர் அபுலியாவை நிர்வகித்து வந்தார்;
பரந்த சமூகநலச் செலவுக் குறைப்புக்களை ஏற்படுத்தி இப்பிராந்தியத்தை உள்ளூர் மற்றும்
சர்வதேச மூலதனம் சுரண்டுவதற்கு ஊக்கம் கொடுத்தார்—குறிப்பாக
புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தித் துறையில்.
வெண்டோலாவின் நிர்வாகம் மிகவும் வெளிப்படையாக பெருவணிக நலன்களுடன்
அடையாளம் காணப்படுகிறது;
இதையொட்டி ஊழியர்கள் சங்கமான
Confindustri
வின்
தலைவர் எம்மா மார்சிகக்லியா சமீபத்தில் கூறினார்:
“தெற்கு
இத்தாலியில் வெண்டோலா மிகச்சிறந்த கவர்னர்.
அபுலியாப் பிராந்தியம் மிகச்சிறந்த நிர்வாகத்தைக் கொண்டுள்ளது.”
இத்தாலிய முதலாளித்துவத்தின் முக்கியப் பிரதிநிதி என்னும் முறையில்
வெண்டோலா தற்போதைய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு அடுத்து பதவிக்கு வரும்
திறனுடையவர் என்று கருதப்படுகிறார்;
பிந்தையவரோ புதிய சுற்று மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த போதுமான
திறன் அற்றவர் என்று பெருகிய முறையில் குறைகூறலுக்கு உட்பட்டுள்ளார்.
ஏர்ன்ஸ்ட் மற்றும் வெண்டோலா பேர்லினில்
“யூரோ
நெருக்கடியைக் கடப்பதற்கு”
என எழுப்பிய கோரிக்கைகள் அவர்களுடைய முந்தைய கொள்கையின் தர்க்கரீதியான தொடர்ச்சியை
பிரதிபலிக்கின்றன.
அவர்கள் முன்வைக்கும் நடவடிக்கைகள் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளாலும்
விவாதிக்கப்பட்டு,
நிதிய உயரடுக்கினாலும் கோரப்படுகின்றன.
இவை இடது அல்லது சோசலிஸ்ட் அரசியலுடன் எத்தொடர்பையும் கொண்டவை அல்ல.
ஒரு ஐரோப்பிய பொருளாதார அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படல்,
யூரோப் பத்திரங்கள் வெளியிடப்படல் மற்றும் அதிக கடன்பட்டுள்ள நாடுகள் திவாலாகாமல்
இருப்பதற்கு நேரடியாக ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து பணம் வாங்குவதற்கு
அனுமதிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
இடது கட்சியும் ஐரோப்பாவின் இடதும்
“ஐரோப்பா
மீண்டும் செயல்படுவதற்கு உறுதியளிக்கும் ஒரே சக்தி.”
அத்தகைய கொள்கைகள் வெற்றியடைவதற்கு ஒரு முன்னிபந்தனை
“வலுவான
தொழிற்சங்கங்கள்”
ஆகும்.
நெருக்கடியின் ஆழ்ந்த தன்மையை ஒட்டி,
இப்பொழுது விரைவில் செயல்பட வேண்டும்,
“எப்படியும்
நடப்புக்கள் மீது பிடியை இறுக்க வேண்டும்”
என உள்ளது.
நெருக்கடி பற்றி வெண்டோலா கவலை தெரிவித்து ஐரோப்பாவிற்கு முற்றிலும்
தேவை என தான் கருதும்
“புதிய
இடது”
விரைவில் நிறுவப்பட வேண்டும் என்றார்.
ஐரோப்பிய நெருக்கடி
“பழைய
கருத்துப் படிவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.”
ஐரோப்பிய மாதிரியான சமூக நலன்புரி அரசுகள்,
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நிறுவப்பட்டது இப்பொழுது
“தூக்கி
மாட்டப்பட்டு விட்டன.”
பின் நவீனத்துவ சிந்தனையின் செல்வாக்கை வெளிப்படையாகக் கொண்டுள்ள
நிலையில்,
வெண்டோலா ஐரோப்பாவின் வருங்காலத்தை ஒரு தீர்க்க தரிசன வண்ணத்தில் சித்தரித்தார்.
“ஐரோப்பாவைப்
பற்றிய கதை”
அதன் எதிர்தன்மையை கொண்டுவிட்டது,
வருங்காலம் என்பது
“ஒரு
அச்சுறுத்தலாக”
காணப்படுகிறது,
ஐரோப்பா
“வெடிப்பை”
முகங்கொடுக்கிறது என்றார்.
இப்பொழுதுள்ள ஆட்சியாளர்கள்
“நாம்
பெற்றதிலேயே மிகக் குறைந்த திறன் உடையவர்கள்”.
இதன் பின் வெண்டோலா கேட்டார்:
“எங்கு
ஒரு அடினாரைக் காண்போம்?
எங்கு ஒரு பிராண்டைப் பார்ப்போம்?
எங்கு ஐரோப்பிய கிறிஸ்துவ மற்றும் சமூக ஜனநாயக மரபுகள் சென்றன?”
ஐரோப்பாவின் மரபார்ந்த சக்திகள் ஒன்றுபட்ட ஐரோப்பாவிற்கு தங்கள் உறுதிப்பாட்டை
அளித்துவிட்டன;
இதன் பொருள்
“ஒரு
புதிய அரசியல் இடது”
இப்பொழுது இத்திட்டத்தை முன்னேற்றுவிக்கும் நிலையில் உள்ளது என்றார்.
இந்தப்
“புதிய
இடது”
அனைத்து அரசியல் சக்திகளுடனும் ஒத்துழைக்கத் தயார் என்று இரு பேச்சாளர்களும்
தெளிவாக்கினர்.
வெண்டோலா அறிவித்தார்:
“எங்கள்
கட்சிகள் எங்கள் கொள்கையை முன்னேற்றுவிக்கப் போதுமானவை அல்ல.”
ஏர்ன்ஸ்ட்,
கன்சர்வேடிவ்கள் உட்பட அனைத்துக் கட்சிகளும் இடது கட்சியின் கருத்துக்களை எடுத்துக்
கொண்டுவிட்டன என்றார்.
சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடன்
(CDU)
அவர்
நடத்திய பேச்சுக்களை அடுத்து சான்ஸ்லரும் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்
என்றார்.
இது
“சற்றே
உவப்பற்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்”
ஆனால் அடிப்படையில்,
“இது
மிகப் பெரிய முன்னேற்றப் படி”
என்றார் ஏர்ன்ஸ்ட்.
“சமூகத்தின்
அனைத்துத் தட்டுக்களிலும்”
இடது ஊடுருவ முடிந்துள்ளது,
இதன் பணி இப்பொழுது
“அனைத்து
கட்சிகளிலும் தன் நிலைப்பாட்டை அடைவதுதான்”.
ஒரு ஐரோப்பிய பொருளாதார அரசாங்கத்திற்கான கோரிக்கை மற்றும் ஐரோப்பிய
ஒன்றிய நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான கோரிக்கை பெரும்பாலான வணிகத் தலைவர்கள்
மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளின் ஐரோப்பாவில் ஆதரவைப் பெற்றுள்ளது.
சமீபத்தில்
Berliner Zeitung
இற்குக் கொடுத்த பேட்டி ஒன்றில்,
ஜேர்மனிய தொழிற்துறைக் கூட்டமைப்பின்
(BDI) Hans-Peter Keitel, “ஐரோப்பிய
ஒருங்கிணைப்பிற்கு வலுவாக வாதிடும் அமைப்பு”
BDI
என
வலியுறுத்தினார்.
நாணய ஒற்றுமை பாதிப்பிற்கு உட்படுத்தப்படக்கூடாது,
அதற்காக நிறைய செலவானாலும் சரி,
என்றார் அவர்.
திங்களன்று
Deutsche Bank
இன்
தலைவர்
Josef Ackermann 200
வங்கியாளர்கள் அடங்கிய கூட்டத்தில் உரையாற்றும்போது யூரோ பற்றி அவநம்பிக்கை
உடையவர்களுக்கு எதிராகப் பேசி,
ஒரு தெளிவான ஐரோப்பிய சார்புக் கொள்கை தேவை என்றார்.
“ஐரோப்பிய
ஒன்றியம் இல்லாவிடின் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் அரசியல்,
பொருளாதார அளவில் உலக அரசியலில் இன்னும் சில ஆண்டுகளில் அதிக பங்கைக் கொள்ள
மாட்டார்கள் என்பதை குடிமக்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.”
“பொது
விவாதங்களில் நாணய பறிமாற்றக் கட்டணத்தில் இருந்து வரும் வருவாய்,
குறைந்த நிதிப் பொதி உதவிகள் இவற்றைப் பற்றி மட்டுமே பொது விவாதங்கள் உள்ளன,
பரந்த முன்னோக்குகள் காணப்படவில்லை”
என்றார்.
Keitel
மற்றும்
Ackermann
உடைய
நிலைப்பாடு ஏர்ன்ஸ்ட் மற்றும் வென்டோலா ஆகியோரின் நிலைப்பாட்டில் இருந்து
வேறுபடுகிறது.
தன்னுடைய உரையில்,
Ackermann
நிதியச்
சந்தைகளில் சில வண்ணப்பூச்சுக்கள் தேவை என்பது குறித்துக்கூட குறிப்பிட்டார்.
“பல
தற்கால நிதியப் பொருள்களின் பயன்பாடு”
குறித்து அவர் வினா எழுப்பி,
வங்கித்துறை அதன்
“முழுச்
செயற்பாட்டையும்ம ஆராய வேண்டும்,
“உண்மையான
பொருளாதாரத்தின் உண்மையான ஊழியர்களாக உள்ளோமா”
என்னும் தன் பங்கிற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
ஒரு ஐரோப்பியப் பொருளாதார அரசாங்கம் என்பது நிதியச் சந்தைகளை கோரும்
வெட்டுக்களைச் செயல்படுத்தும் ஒரு கருவியாகத்தான் இருக்கும்.
அத்தகைய அரசாங்கம் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் என்று ஏற்கனவே கிரேக்கம்,
அயர்லாந்து,
போர்த்துக்கல் ஆகியவற்றில் உள்ளவை ஐரோப்பா முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும்
என்றும் தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு நிதியக் கொள்கைகளை
ஆணையிடவும் செய்யும்.
உழைக்கும் மக்களுக்கு இத்தகைய ஆட்சியின் விளைவு,
தேசிய சக்திகள் வெளிப்படையாக வாதிடும் யூரோவில் இருந்து வெளியேறுதல் கொடுக்கும்
அழிவைத்தான் கொடுக்கும்.
சமீபத்திய வாரங்களில் ஜேர்மனிய அரசாங்கம் யூரோ பற்றி அதனுடைய
தொடர்ச்சியற்ற கொள்கைக்காக அதிக குறைகூறலுக்கு உட்பட்டுள்ளது.
CDU, CSU, FDP
ஆகியவற்றின் அரசாங்கக் கூட்டு
23
செப்டம்பர் நடக்கவுள்ள யூரோ பிணை எடுப்பு நிதி விரிவாக்கம் பற்றிய முக்கிய
வாக்களிப்பில் பாராளுமன்றத்தில் வெற்றி பெறுமா என்பது தெளிவாக இல்லை.
இந்தப் பின்னணியில் ஏற்கனவே செய்தி ஊடகத்தில் கூட்டணி சரியலாம்,
SPD
மற்றும்
பசுமைவாதிகள் பதவிக்கு வரலாம் என்ற ஊகம் வெளிப்பட்டுவிட்டது.
இரு கட்சிகளும் ஐரோப்பிய பொருளாதார அரசாங்கத்திற்கு வாதிடுகின்றன—அத்துடன்
கடுமையான சிக்கன நடவடிக்கைகளும் இணைக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன.
இடது கட்சி இப்போக்கிற்கு ஆதரவு கொடுக்கத் தயாராக உள்ளது,
தேவையானால் அத்தகைய அரசாங்கத்தில் சேருவதற்கும் தயாராக உள்ளது.
ஜேர்மனியத் தொலைக்காட்சியில் கொடுக்கப்பட்ட ஒரு பேட்டி ஒன்றில் சில
நாட்களுக்கு முன் இடது கட்சியின் தலைவர்
Gregor Gysi,
பிரச்சினை என்னவென்றால் தன் கட்சி
“கூட்டாட்சி
அரசாங்கத்தில் இருந்ததே இல்லை என்பதுதான்”
என்றார்.
இடது கட்சி அதையொட்டி அந்த அனுபவத்தை நிரூபிக்க இயலவில்லை,
“தயாராக
இருக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் ஆற்றலை.”
பேர்லின் கூட்ட முடிவில்,
வெண்டோலா பார்வையாளர்கள் ஒருவரால் அவர் எப்படி
“பரிந்துரைகளை”
நடைமுறையில் செயல்படுத்துவார் என்று வினவப்பட்டார்.
இடது கட்சி உறுப்பினர் ஒருவர்,
அவர் அபுலியாத் தலைவர் என்னும் முறையில் எப்படி
“அரசாங்கத்திற்கும்
இயக்கத்திற்கும் இடையே உள்ள அழுத்தம் பற்றிச் சமாளிப்பார்”
என்று கேட்டார்.
பேர்லினில் இடது கட்சியும் இதே பிரச்சினையை முகங்கொடுக்கிறது,
ஏனெனில் அது நகர செனட்டில்
SPD
உடன்
கூட்டைக் கொண்டிருந்தது.
தான் ஒருபொழுதும் அனைத்து சமூக இயக்கங்களும் தன் முடிவுகளுக்கு
ஒப்புதல் கொடுக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதில்லை என்று வெண்டோலா
விடையளித்தார்.
ஒரு இடது மறைப்பு என்ற முறையில் அவற்றை அவர் நாடுகிறார்.
“சமூக
இயக்கங்கள் என்னைக் குறைகூறுவதை நிறுத்திவிட்டால் அது என்னுடைய வீழ்ச்சியைக்
குறிக்கும்”
பேர்லினின் இடது,
கட்சி இடிமுழக்கம் போன்ற கரவொலியுடன் இந்தப் பதிலை ஒப்புக் கொண்டது.
|