WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
தொடர்ச்சியான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அமெரிக்க ஆதரவு முடியாட்சி ஜோர்டானை
கொள்ளையடிக்கிறது
By Jean Shaoul
6 September 2011
use
this version to print | Send
feedback
கடந்த ஜனவரி மாதம் ஜோர்டனில்,
அம்மான் மற்றும் பிற சிறுநகரங்கள்,
பெருநகரங்களின் தெருக்களுக்கு சீற்றத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்து,
உயரும் விலைகள்,
வேலையின்மை,
வேண்டியவருக்கு வேலை கொடுத்தல்,
ஊழல் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அரசியல் சீர்திருத்தம் தேவை
என்றும் குரல் கொடுத்தனர்.
தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்களுக்குப் பொறுப்புக்கூறக்
கடமைப்பட்டுள்ள அரசாங்கத்தை மக்கள் விரும்புகின்றனர்;
அதே நேரத்தில் அரசர்,
உளவுத்துறைப் பிரிவுகள் மற்றும் இராணுவ நீதிமன்றங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட
வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
சிறிய ஆர்ப்பாட்டங்களும்,
எதிர்ப்புக்களும் வாராந்திர அடிப்படையில் தொடர்கின்றன;
இவை பற்றி அதிகத் தகவல்கள் வெளிவருவதில்லை.
முதலாம் உலகப் போருக்குப் பின் எண்ணெய் வளமுடைய பிராந்தியத்தில்
பிரிட்டனின் மூலோபாய நலன்களைக் காப்பதற்கு ஒரு முன்னணி அரசாக ஓட்டமன் பேரரசில்
சிரியாவில் இருந்து ஜோர்டான் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
இப்பொழுது சௌதி அரேபியா என அழைக்கப்படும் பகுதியிலுள்ள ஹெஜஸ்ஸில் இருந்து ஹஷேமைன்
குடும்பத்தால் ஆளப்படும் என இருந்தது.
ஆரம்பத்தில் இருந்தே ஹஷேமைட் முடியாட்சி நிதியுதவியை நம்பித்தான் இருந்தது—முதலில்
பிரிட்டனிடம் இருந்தும் பின்னர்
1957ல்
இருந்து அமெரிக்காவிடம் இருந்தும்.
தற்பொழுது வாஷிங்டன்,
நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் பாதியை ஏற்கிறது.
1998ல்
இருந்து,
குறிப்பாக ஈராக் போரைத் தொடர்ந்து,
அமெரிக்கப் பொருளாதார,
இராணுவ நிதிகள் ஜோர்டனுக்கு மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளன;
ஆண்டிற்கு
$223
மில்லியன் என்பதில் இருந்து
2008ல்
ஆண்டிற்கு
$912
மில்லியன் என்ற அளவிற்கு.
இவை குறைந்த பட்ச எண்ணிக்கைத்தான் என்பது அறியப்பட வேண்டும்.
ஜோர்டான் மன்னர் அப்துல்லாவிற்கு அமெரிக்கக் காங்கிரஸ் வேறு பல வழிவகைகளில் உதவ
முடியும்,
உதவுகிறது.
கடந்த ஆண்டு உதவி நிதியாகக் காங்கிரஸ்
$150
மில்லியனைக் கொடுத்தது.
ஜோர்டான்
டைம்ஸ்
கருத்துப்படி இது அனைத்து வகைகளிலும் மொத்த நிதி உதவியை,
வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் இருந்து பெறப்படுவது உட்பட,
$1.3
பில்லியன் உயர்த்தியுள்ளது.
இத்தகைய
“நிதியுதவி”
பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது அல்ல.
இது பாலஸ்தீனிய மக்களை அடக்குவதற்கும்,
ஈராக்கில் அமெரிக்கப் போரை ஆதரிப்பற்கும் கொடுக்கப்பட்டது;
ஏனெனில் அவை ஜோர்டானிய பொருளாதாரத்தில் பேரழிவுப் பாதிப்பை ஏற்படுத்தின.
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் ஜோர்டனுக்கு அடைக்கலம் நாடி வந்தனர்.
மேலும் வாஷிங்டனுடைய அசாதாரண கடத்தல் திட்டத்திற்கும் ஜோர்டன் முனைபட்டு உதவுகிறது;
சமீபத்தில் பஹ்ரைனில் எழுச்சியை அடக்குவதற்குப் பாதுகாப்புப் படைகளையும் அனுப்பியது.
ஜோர்டான் நாட்டில் அமெரிக்க இராணுவத் தளங்கள் ஏதும் இல்லை என்று
கூறினாலும்,
வாஷிங்டன் ஆயிரக்கணக்கான துருப்புக்களை இரகசியமாக ஜோர்டானின் ஈராக்,
சிரிய எல்லைகள் வழியே நிலைநிறுத்தியுள்ளது என்பது நன்கு அறியப்பட்டுள்ளதுதான்.
அம்மானில் உயர்மட்ட புறநகரில் உள்ள இதன் தூதரகம் ஒரு இராணுவக் கோட்டை போல் உள்ளது;
பிராந்தியத்தின் செயற்பாடுகளை இயக்குகிறது.
அங்கு புகைப்படம் எடுத்தால்கூட கைது செய்யப்படுவதில் முடிந்துவிடும்.
ஜோர்டானுக்குக் கொடுக்கப்படுதம் நிதி உதவியின் முழு அளவு
வெளியிடப்படவில்லை.
அது தெரியவந்தால்,
ஒரு சமீபத்திய ஜோர்டான்
வணிகம்
குறிப்பிட்டுள்ளதுபோல்,
நிதி அனைத்தும் எங்கு செல்லுகிறது என்ற வினாக்களை அது எழுப்பும்.
12
ஆண்டுகளுக்கு முன் தன் தந்தையிடம் இருந்து அரியணையை ஏற்றுக் கொண்ட அரசர் அப்துல்லா
ஒரு வரம்பிலா அதிகாரம் உடைய மன்னர் போல் ஆள்கிறார்.
அவர் பிரதம மந்திரியை நியமிக்கிறார்,
பாராளுமன்றத்தை கலைத்து அவர் விரும்பும்போது தேர்தல்களை நடத்துகிறார்.
சாதாரண உரையாடல்களில்கூட அவரைப் பற்றி குறைகூறுவது கைது செய்யப்படுவதற்கு
வழிவகுத்துவிடும்.
உள்ளூர் அரேபிய மக்களை பாலஸ்தீனிய அகதிகளுக்கு எதிராகத் தூண்டுவதின்
மூலம் முடியாட்சி தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது;
அகதிகள் கிட்டத்தட்ட மொத்த மக்கட் தொகையில் பாதி என்ற எண்ணிக்கையில்,
இல்லாவிடில் அதிகமாகக் கூட உள்ளனர்.
ஒரு சிலர் பெரும் செல்வந்தர்களாகியுள்ள நிலையில்,
பரந்த பெரும்பான்மையினர் மிருகத்தனமாகச் சுரண்டப்பட்டு,
அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளனர்.
1988ல்
ஜோர்டான் மேற்குக்கரை குறித்த உரிமையை கைவிட்டபின் நீங்கிய பாலஸ்தீனியர்கள்
ஜோர்டானிய குடியுரிமைக்குத் தகுதி பெறவில்லை;
இது அவர்களை மேலும் பாதிப்பிற்கு உட்படுத்திவிட்டது.
ஜோர்டனின் இராணுவமும் இரகசியப் படைகளும் அதிகமாக பாலஸ்தீனியர் அல்லாதவர்களைத்தான்
தேர்ந்தெடுக்கின்றன.
ஜோர்டானிய மக்களில் பெரும்பாலானவர்களின் இழப்பில் பெரும் செல்வந்தை
ஈட்டிய ஊழல் மிகுந்த சமூக அடுக்கிற்குத்தான் அப்துல்லா தலைமை வகிக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான பல பிரமிட் திட்டங்கள்,
மடோஃப் ஊழலைப் போல் உள்ளன.
எல்லா இடங்களிலும் ஊழலின் அடையாளங்கள் காணப்பட முடியும்.
மாபெரும் அப்டாலி வளர்ச்சித் திட்டம் இதற்குச் சிகரம் வைத்தாற்போல்
உள்ளது.
முன்பு அம்மான் நடுப்பகுதியில் ஒரு இராணுவ முகாமாக இருந்த,
அப்தாலியில் ஒருகாலத்தில் ஜோர்டானின் கட்டமைப்புத்திட்ட கிரேன்களில் பாதி இருந்தன.
“ஒரு
புதிய நகர்ப்பகுதி
[மற்றும்]
உலகத் தொடர்புடைய பகுதி,
பண்பாட்டு முக்கியத்துவம் நிறைந்தது”
என்று கூறப்பட்ட வகையில்,
இராணுவ அதிகாரம் மாவரெட் ஒப்பந்தங்களை பல கல்ப் தளமுடைய பல நிறுவனங்களுக்கு மிகக்
குறைந்த நிதியில் அளித்தது.
இவற்றுள் லெபனானின் ஹரிரி குடும்பத்திற்குச் சொந்தமான
Solidere
ம்
அடங்கும்;
அது பெய்ரூட் நகர்ப்பகுதியை மறுகட்டமைக்கிறது.
கட்டி முடித்த சொத்துக்களை வாங்குதல்,
விற்றல் ஆகியவற்றைக் குறித்த கட்டுப்பாடுகள் முதலீட்டாளர்களுக்கு இடர்களைக்
குறைத்து இலாங்களை அதிகப்படுத்தும் வகையில் தளர்த்தப்பட்டன.
இப்பொழுது இத்திட்டம் முற்றிலும் தேக்க நிலையில் உள்ளது;
மாவரெட் இப்பொழுது ஒரு உத்தியோகபூர்வ விசாரணைக்கு உட்பட்டுள்ளது.
நெறிப்படி இராணுவத்திற்குச் சொந்தமானலும்,
இதன் இயக்குனர்குழுவின் தலைவராக அரசர் உள்ளார்,
இதில் இருந்து கிடைக்கும் வருமானங்கள் இராணுவத்தின் ஓய்வூதிய நிதி இன்னும் பிற
இராணுவத் தொடர்புடையவை எனக்கருதப்படும் திட்டங்களுக்குச் செல்கிறது.
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு,
தண்டனைகள் அளிக்கப்பட்டாலும்கூட விசாரணையின் முடிவு ஏதும் வரும் என்று எவரும்
நம்பவில்லை.
பல வாரங்கள் செய்திகளில் பிரபலமாக இருந்த இரு ஊழல் வழக்குகளில்
ஒன்று ஒரு முக்கிய வணிகரான கலீட் ஷஹீடை பற்றி இருந்தது.
ஊழல்,
இலஞ்சம் ஆகியவற்றிற்காக தண்டனைக்குட்படுத்தப்பட்டு,
சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சிலரில் அவரும் ஒருவராவார்.
ஆனால் சில மாதங்களுக்கு பின்னர் அவர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குப்
பயணிக்க அனுமதிக்கப்பட்டார்;
ஆனால் ஒரு லண்டன் ஓட்டலில் நேர்த்தியுடன் இறங்கினார்.
இதையொட்டி எழுந்த கூக்குரல்களில் அவருடைய விடுதலைக்குக் காரணமாக இருந்த இரு
மந்திரிகள் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம மந்திரி மரௌப் பகித்,
2007
பெரிய
குற்றவிசாரணை அவர் மீது நடத்தப்படுவதில் இருந்து குறுகிய முறையில் தப்பினார்;
அது
Dead Sea
க்கு
அருகே ஒரு கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை அடுத்து ஏற்பட்டது.
அநேகமாக உடனடியாக இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு,
அதன் பின் மறு ஆண்டு புதிய பேச்சுவார்த்தைகள் நடந்தன;
தொடக்க உடன்பாட்டில் ஊழல் இருந்ததா மற்றும்/அல்லது
அது இரத்து செய்யப்பட்டதில் இருந்ததா என்பது தெளிவாக இல்லை.
பகித் இன் மந்திரிசபையில் பல மந்திரிகள் அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பதவியை
விட்டு விலகினர்.
தடையற்ற சந்தை முறையைப் பெரும் ஆர்வத்துடன் அப்துல்லா தழுவியுள்ளார்;
ஆர்வத்தில் அவர் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள்,
மற்றும் லெபனானையும் விட அதிகம் கொண்டுள்ளார்.
அதிக இயற்கை ஆதாரங்கள் இல்லாத ஜோர்டான் சொத்துக்கள்,
கட்டுமைப்பு,
நிதியப் பணிகள்,
சுற்றுலா ஆகியவற்றைப் பெரிதும் நம்பியுள்ளது.
உதவித்தொகைகள் அகற்றப்படுதல் அல்லது குறைக்கப்படுதல்,
தனியார்மயம் ஆக்கப்படல்,
பிற்போக்குத்தன நுகர்வோர் வரிகள்,
தடையற்ற வணிக உடன்பாடுகள்,
சிறப்புப் பொருளாதாரப் பகுதிக்கள் ஆகியவை பல பில்லியனர்களை உருவாக்கியிருந்தாலும்,
பெரும்பாலான ஜோர்டானியர்கள் செலவிற்குத் தக்க வருமானம் இன்றித் தத்தளிக்கின்றனர்.
ஜோர்டானின் மொத்த
6.5
மில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலானவர்கள் வசிக்கும் அம்மான்,
மத்திய கிழக்கில் மிக அதிக செலவுடைய நகரங்களில் ஒன்றாகும்.
பணவீக்கம் ஆண்டிற்கு ஐந்து சதவிகிதம் எனக் கூடுகிறது.
இதற்குக் காரணம் மிகவும் அதிகமாகிவிட்ட சொத்துக்கள் ஊகமும்,
எண்ணெய்,
உணவு ஆகியவற்றில் விலை உயர்வும்தான்.
ஒரு ஜோர்டானியத் தெரு
உலகில் மிக அதிக சமத்துவம் இல்லாத நகரங்களில் அம்மான் ஒன்றாகும்.
மேற்கில் பல பிரத்தியேக அலுவலகங்கள் உயர்ந்த கண்ணாடிக் கோபுரங்கள் வடிவில்,
அழகிய வில்லாக்கள்,
வேலிக்காவல் உடைய செழிப்பான சமூகங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களின் தனி
உறைவிடங்கள் என்று உள்ளன.
ஆனால் கிழக்கேயோ குறைந்த வருமானம் உடைய,
சேரி வீடுகள் உள்ளன;
இவற்றில் அலையெனத் தொடரும் பாலஸ்தீனிய மக்கள் வசிக்கிறார்கள்.
நெரிசல் இங்கு பரந்துள்ளது;
இரு குடும்பங்கள் ஒரு சிறிய வீட்டில் வசிப்பது என்பது சாதாரண நிகழ்வுதான்.
ஜோர்டானிய வீடுகள்
மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த
10
ஆண்டுகளில் ஆண்டிற்கு
6
முதல்
7%
என
உயர்ந்தாலும்கூட,
இது ஒரு சிறிய அடுக்கிற்குத்தான் நலன்களைக் கொடுத்துள்ளது.
வேலையின்மை உத்தியோகபூர்வமாக
12.5 %
என்று
உள்ளது;
ஆனால்
30%க்கு
அருகே இது இருக்கலாம் என்றுதான் பரந்த முறையில் நம்பப்படுகிறது.
இது அதிகமாக தலைநகருக்கு வெளியே அந்த நிலையில் உள்ளது.
இளைஞர்கள்
—சனத்தொகையில்
70%
மக்கள்,
30
வயதிற்குட்பட்டவர்கள்—
குறிப்பிடத்தக்க வகையில் மோசமான பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர்.
மக்களில் கால் பகுதியினர் வறுமையில் வாழ்கின்றனர்.
வேலைகளுக்கு நல்ல ஊதியம் கிடையாது.
குறைந்தப்பட்ச ஊதியம் மாதம் ஒன்றிற்கு
$211
ஆகும்.
ஆசிரியர்களுக்கு மாதம்
$400
ஊதியம்
கிடைக்கிறது.
நல்ல தகுதியுடைய மக்கள் இரு வேலைகள் செய்வது சாதாரணம்தான்.
ஜூலை மாதம் மருந்துக் கடை ஊழியர்கள் அதிக ஊதியம் நாடி வேலைநிறுத்தம் செய்தனர்.
தொழிற்சங்கத்தில் இருக்கும் தொழிலாளர்கள்தான் வேலைநிறுத்தம் செய்யும் உரிமை
பெற்றவர்கள்;
அதுவும் அரசாங்கத்தின் அனுமதியுடன்தான் செய்யப்பட வேண்டும்.
பிராந்தியம் முழுவதும் உள்ள அரசியல் அமைதியின்மை ஜோர்டானுக்கு ஒரு
பொருளாதாரப் பேரழிவு ஆகும்;
ஏனெனில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
12%
ஆதாரமான
இது சரிந்துள்ளது.
வளைகுடாப்பகுதியில் ஒரு சிலர் ஓட்டல்களில் காணப்படுகின்றனர்.
பல ஆண்டுகளாக பெருந்திகைப்பு அளிக்கும் பொருளாதார நிலைமை ஒரு
மில்லியனுக்கும் மேற்பட்ட ஜோர்டானியர்களை,
அதாவது தொழிலாளர் தொகுப்பில் கால்வாசிப் பேரை வெளிநாடுகளில்,
முக்கியமாக வளைகுடாப் பகுதியில் வேலை தேட வைத்துள்ளது.
இது ஜோர்டானை உலகில் திறமை உடைய தொழிலாளர்களை அதிகம் அனுப்பி வைக்கும் நாடாக உலகில்
செய்துள்ளது.
ஒப்புமையில் நல்ல ஊதியம் கிடைக்கும் வெள்ளைக் காலர் வேலைகளில் பணி புரிந்துகொண்டு
அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கும் பணம் அவர்களுடைய குடும்பங்களுக்கு உயிர்நாடி
போல் உள்ளது.
அதே நேரத்தில் ஜோர்டானில்
70,000
குடியேறிய தொழிலாளர்கள் உள்ளனர்;
இவர்கள் முக்கியமாக எகிப்து,
சிரியா,
இந்தியத் துணைக்கண்டம் ஆகியவற்றில் இருந்து வருகின்றனர்;
பொதுவாக குறைந்த ஊதியம் கொடுக்கும் கட்டமைப்புத் தொழிலிலும் தரமுடைய தொழில்துறைப்
பகுதிகளிலும் உள்ளனர்.
இதைத்தவிர
300,000
வீடுகளில் வேலை செய்பவர்கள் இந்தோனிசியா,
பிலிப்பைன்ஸ்,
ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலைமைகள்தான்—மத்திய
கிழக்கின் பிற பகுதிகளில் இருந்து அதிகம் வேறுபட்டவை அல்ல—ஜனவரி
மாதம் வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தூண்டின.
துனிசியாவில் பென் அலி,
எகிப்தின் ஹொஸ்னி முபாரக் ஆகியோர் அகற்றப்பட்ட வெகுஜன இயக்கம் பரவுதலை அப்துல்லா
$500
மில்லியன் உதவிநிதித் தொகுப்பு அறிவித்ததின் மூலம் தவிர்க்க முடிந்தது.
நிதிகள் அடிப்படைப் பொருட்களுக்கு உதவி,
மற்றும் ஒரு புதிய பிரதம மந்திரி நியமனம்,
மக்களின் கோரிக்கைகளைக் கேட்க
“தேசிய
உரையாடல்”
அமைப்பு உறுதியளிக்கப்பட்டது ஆகியவை அதில் இருந்தன.
அரசியல்,
பொருளாதார நெருக்கடி ஆழ்ந்துள்ளது அப்துல்லாவை அவருடைய அண்டை நாடான சௌதி
அரேபியாவிடம் உதவி நாட வைத்தது;
மேலும் வளைகுடா ஒத்துழைப்புக் குழுவையும் இன்னும் அமைதியின்மை வந்தால் கூடுதல்
உதவிகளை நாடவும் வைத்தது.
அவருடைய சமீபத்திய அறிவிப்பான,
அரசியலமைப்பில் ஒரு சில பூச்சு மாற்றங்கள் என்பது உறுதியளிக்கப்பட்டதைவிட மிகக்
குறைவாக இருந்து,
கிட்டத்தட்ட அனைவராலும் இகழ்வுடன் நோக்கப்பட்டுள்ளது. |