சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Left Party in crisis

நெருக்கடியில் ஜேர்மனிய இடது கட்சி

By Dietmar Henning and Peter Schwarz 
3 September 2011

use this version to print | Send feedback

ஆகஸ்ட் 27-28 வார இறுதியில், இடது கட்சியின் பாராளுமன்றப் பிரிவு வடகிழக்கு ஜேர்மனிய நகரான றொஸ்ரொக்கில் மூடிய கதவுகளுக்குப் பின் ஒரு கூட்டம் நடத்தியது. முதலில் இக்கூட்டம் கிழக்கு மாநிலங்களான மெக்லென்பேர்க்-மேற்கு பொமெரேனியா மற்றும் பேர்லினில் நடக்க இருக்கும் தேர்தல்களில் கட்சியின் பிரச்சாரத்தை ஆதரிப்பது பற்றித் திட்டம் இட்டிருந்தது; இம்மாநிலங்களில் தேர்தல்கள் செப்டம்பர் 4, 18 திகதிகளில் முறையே நடக்க இருக்கின்றன. மாறாக, இக்கூட்டம் இடது கட்சியில் கொந்தளிப்பை இப்பொழுது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நெருக்கடி பற்றி விவாதித்தது.

இடது கட்சியின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பல மாதங்களாகக் குறைந்து வருகிறது.2008 க்கும் 2010க்கும் இடையே இடது கட்சி பவேரியா தவிர மற்ற ஜேர்மனிய மாநிலங்கள் அனைத்திலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்குத் தேவையான குறைந்த பட்ச 5% வாக்குகளை பெற்றுவந்தது. ஆனால், இந்த ஆண்டு இக்கட்சி பேடன்-வூர்ட்டம்பேர்க் மற்றும் ரைன்லாந்து-பாலாடினேட் மாநிலப் பாராளுமன்றங்களில் மீண்டும் நுழைவதற்குத் தேவையான குறைந்தப்பட்ச 5% வாக்குகளைப் பெறத் தவறிவிட்டது.

இதன் முன்னோடிக் கட்சியான ஜனநாயக சோசலிசத்திற்கான கட்சி (PDS) 1998 ல் இருந்து 2006 வரை நிர்வாகத்திற்குத் தலைமையைத் தாங்கியிருந்த மெக்லென்பேபர்க்-வோர்பொம்மெர்னில் இடது கட்சி மீண்டும் பாராளுமன்றத்தில் நுழைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சமூக ஜனநாயக கட்சியின் SPD- கூட்டணிப் பங்காளியான கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தினை பிரதியீடுசெய்யவேண்டும் என்னும் நோக்கத்தை அடைவதற்குப் போதுமான ஆதரவைப் பெறுமா என்பது சந்தேகத்திற்கு உரியதுதான். கடந்த 10 ஆண்டுகளாக சமூக ஜனநாயக கட்சியுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் அதனுடைய கோட்டையான பேர்லினில்கூட, பசுமைவாதிகளுடன் ஒரு எதிர்காலக் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சமூக ஜனநாயக கட்சி விரும்புகையில் ஆட்சியில் இருந்து வெளியேறக்கூடும் நிலையை எதிர்கொள்ளுகிறது.

செய்தி ஊடகங்களும், உள்ளிருக்கும் விமர்சகர்களும் தன்னுடைய சரிவிற்குக் கட்சி அதன் இணைத் தலைவர்களான கெசீன லொட்ஷ், கிளவுஸ் எர்ன்ஸ்ட் ஆகியோரைக் குறைகூறுகின்றன். இவர்கள் ஓராண்டிற்கு முன்பு ஒஸ்கார் லாபொன்டைன், லோதர் பிஸ்கி ஆகியோரிடம் இருந்து பதவியை எடுத்துக் கொண்டனர். கட்சின் பிளவுற்றிருக்கும் பிரிவுகளை ஒன்றாகச் சேர்க்கும் முயற்சியில் அவர்கள் ஒரு பரபரப்பான அங்குமிங்குமாக அலையும் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். அவை பூசலை அதிகரிக்கத்தான் செய்துள்ளன.

உதாரணமாக, லொட்ஷ் கட்சியின் முன்னாள் கிழக்கு ஜேர்மனிய ஸ்ராலினிசத் தொண்டர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் கம்யூனிசத்திற்கான பாதைஎன்று குறிப்பிட்டார். இதில் அவர் பேர்லின் சுவர் கட்டப்பட்டது இரண்டாம் உலகப் போரின் விளைவு என்றார். கிழக்கு ஜேர்மனி பற்றி மிகவும் மிருதுவாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட முறையில் செய்தி ஊடகம் மற்றும் அரசியல் விரோதிகளின் அழுத்தத்தினால், அவர் ஒரு அவமானகரமான பின்வாங்களைச் செய்ய நேர்ந்தது.

 அன்புள்ள தோழர் பிடெல் காஸ்ட்டோ அவர்களேஎன்று கெசீன லொட்ஷ், கிளவுஸ் எர்ன்ஸ்ட் ஆகியோர் கையெழுத்தைக் கொண்டிருந்த பிறந்த நாள் வாழ்த்திற்கும் இதே கதிதான் ஏற்பட்டது. அதில் கியூபா உலகின் பல மக்களுக்கு ஒரு முன்மாதிரி, குறிப்பிடத்தக்க அடையாளம்என்று விவரிக்கப்பட்டு இருந்தது; மேலும் 85 வயதான காஸ்ட்ரோ போர் நிறைந்த வாழ்வைப் பெருமிதத்துடன் நினைவுகூறலாம், கியூபா புரட்சியில் தலைவர் என்று வெற்றிகரமாகச் செயல்பட்டதையும் குறித்துஎன்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இருவரும் பின்னர் இக்கடிதத்தில் இருந்து தங்களை விலக்கிவைத்துக் கொண்டனர். தான் அதைப் பார்த்ததுகூட இல்லை என்று எர்ன்ஸ்ட் கூறிவிட்டார்.

பகிரங்கமாக உட்கட்சிப் பூசல் நடத்தப்பட்ட நிலையில், செய்தி ஊடகம் இரு கட்சித் தலைவர்களின்மீதும் தாக்குதல் நடத்திய நிலை பேர்லின் மற்றும் மெக்லென்பேர்க்-வோர்பொமெமெரினில் இருந்த கட்சிப் பிரசாரகர்களிடையே சீற்றமான விடையிறுப்பிற்கு வகை செய்தன. அவர்கள், அரசாங்கத்தில் தங்கள் பங்காளித்தனத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்க அரும்பாடு பட்டனர்.

ஆனால் கெசீன லொட்ஷ், கிளவுஸ் எர்ன்ஸ்ட் ஆகியோரைக் குறித்த பூசல்கள் இடது கட்சியில் உள்ள நெருக்கடி பற்றி ஒரு அடையாளம்தான்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டதில் இருந்து இடது கட்சி ஒரு இரட்டைப் பங்கைத்தான் கொண்டுள்ளது. முதலில் அது சமூக ஜனநாயக கட்சியினால் ஏமாற்றம் அடைந்த வாக்காளர்களின் ஆதரவைப் பெற முயன்று, சமூக ஜனநாயக கட்சி, தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை மீறி வளரும் எதிர்ப்பு இயக்கத்தைத் தடை செய்ய முற்பட்டது. இரண்டாவதாக, அது சமூக ஜனநாயக கட்சி, பசுமைவாதிகள் ஆகியோருக்கு ஒரு கூட்டணிப் பங்காளியாகவும், பாராளுமன்றத்தில் முட்டுக் கொடுக்கும் அமைப்பாகவும் விளங்கியது.

எப்பொழுதாவது வெளிவரும் தீவிரவாதம் எனக் காட்டிக் கொள்ளுதல், போலி சோசலிசச் சொற்றொடரைப் பயன்படுத்துதல் இவற்றை ஒதுக்கிவைத்துப் பார்த்தால், இடது கட்சியின் முன்னுரிமை தன்மை ஒரு பெரிய அரசியல் நிபுணர் போல் நடத்திக் கொள்ளும் முறை, அதே நேரத்தில் சமூகத்தில் இழப்புக்களைக் கொண்ட பிரிவினரை இரும்புக் கரத்தால் ஒடுக்குவது என்று இருந்தது. சர்வதேசப் பொருளாதார நெருக்கடி தீவிரமானது கட்சியை இத்தகைய கழைக்கூத்தாடிச் செயற்பாட்டைத் தக்க வைப்பதைக் கடினமாக்கி கட்சியை அதன் உண்மையான வண்ணத்தை காட்ட நிர்ப்பந்தித்துள்ளது.

இதன் விளைவு வலதிற்குப் பாய்தலாக இருந்தது.  அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்று மட்டும் இல்லாமல், கட்சியில் இடதுபுறம்இருப்பதாகக் கூறப்படுபவர்களாலும்தான். கம்யூனிஸ்ட் அரங்கின் முன்னாள் பெருமிதச் சின்னமான ஸாரா வாகன்கினெக்ட் 1960 களில் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் சான்ஸ்லராக இருந்த லுட்விக் ஏர்ஹர்டைப் புகழ்ந்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பேர்லினில் இடது கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்திய SAV எனப்படும் சோசலிச மாற்றீடு போன்ற குழுக்கள், இப்பொழுது பேர்லினில் மதிப்பிழந்துவிட்ட இக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுக்கின்றன.

அரசியல் வேறுபாடுகள் எதையும் களையும் முயற்சியில் ரொஸ்ரொக் கூட்டம் ஈடுபடவில்லை. மாறாக இக்கூட்டம் ஒற்றுமைக்கான அழைப்புகளுடன் துவங்கியது. துவக்கத்தில், பாராளுமன்றக் கட்சிப் பிரிவித் தலைவர் கிரெகோர் கீசி ஒரு மூடிய கதவுகளுக்குப் பின் நடந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவரைப் பற்றிக் குறைகூறுவதைத் தங்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். ஒஸ்கார் லாபோன்டைன் வேறுபாடுகளைப் பகிரங்கமாக்கினால், கட்சி உறுதியாகத் தோற்றுவிடும்என்று எச்சரித்தார். கட்சித் தலைவர்களிடம் ஏதேனும் நான் கூறவிரும்பினால், அதைத் தனியேதான் கூறுகிறேன்.என்று அவர் எச்சரித்தார்.

கட்சியின் முன்னாள் தலைவர் ஒரு கடுமையான வார்த்தைஜாலங்களை ஏற்க வேண்டும் என்று பிரதிநிதிகளுக்கு வாதிடுவதற்காக ஒரு சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டு இருந்தார்.

ஐரோப்பாவின் நிதிய நெருக்கடி இடது கட்சிக்கு தன் கருத்துக்களை வளர்க்க ஒரு சிறப்பான நிலைமையைஉருவாக்கியுள்ளது என்றார் அவர். இந்த இலக்கை அடைவதற்குக் கட்சி மக்களை உண்மையில் பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி இறுதியாகப் பேச வேண்டியதேவை வந்துவிட்டது. நிதிய முறையின் சர்வாதிகாரம்ஜனநாயகத்தை உள்ளிருந்து சீரழிக்கிறது. நடக்க வேண்டியதில் விதிமுறைகளை நிர்ணயிப்பதற்குப் பதிலாக, அரசியல் தலைவர்கள் நிதிய உயரடுக்கின் முடிவுகளை அவசரமாகச் செயல்படுத்துவதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. வங்கிகள் தோற்றுவிட்டதுதான் பொருளாதார முறையின் சரிவிற்குக் காரணம் என்ற அவர், வங்கு முறை மற்றும் நிதியச் சந்தைகள் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும், செல்வந்தர்கள் ஐரோப்பாவில் இருக்கும் கடனைக் குறைக்கும் பணிக்கு அழைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

ஆனால் அரசியல் உள்ளடக்கத்தில், லாபோன்டைன் புதிதாக எதையும் கூறுவதற்கு இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே தான் யூரோப்பத்திரங்கள் eurobonds- அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தைக் கூறியதாக அவர் பெருமை அடித்துக் கொண்டார். அத்தகைய யூரோப்பத்திரங்கள் இப்பொழுது BDI எனப்படும் ஜேர்மனிய முதலாளிகள் சங்கம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பிற முக்கிய முதலாளித்துவ நிறுவனங்களால் கோரப்படுகிறது. இவை நிதியச் சந்தைகளின் சக்தியை அதிகரிக்கும்; அத்துடன் பாரிய சிக்கன நடவடிக்கைகளும் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே லாபோன்டைன் 2008ல் ஜேர்மனிய அரசாங்கம் பல பில்லியன் யூரோ மீட்பு நிதித் தொகுப்பை வங்கிகளுக்கு கொடுத்ததை இதைத்தவிர வேறு மாற்றீடு இல்லைஎனக்கூறி ஒப்புதல் கொடுத்திருந்தார்.

தன்னுடைய நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் லாபோன்டைன் ஹெனர் பிளாஸ்பெக்கை சுட்டிக்காட்டினார். பொருளாதார வல்லுனரான பிளாஸ்பெக் 1998/99 இல் லாபோன்டைன் ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழ் கூட்டாட்சி நிதி மந்திரியாக ஒரு குறுகிய காலத்திற்கு இருந்தபோது அவரின் செயலாளராக இருந்தார். இப்பொழுது பிளாஸ்பெக் ஜெனீவாவில் உள்ள .நா.வணிக, அபிவிருத்தி  அமைப்பின் (UNCTAD) தலைமைப் பொருளாதார வல்லுனராக உள்ளார்.

யூரோப்பத்திரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று பிளாஸ்பெக்கும் கூறியிருந்தார். கட்டுப்பாட்டிற்குட்பட்ட உலகப் பொருளாதார முறைக்காக அவர் வாதிட்டு, கெயினீசிய வகைக் கொள்கைகள் தேவை எனக் கோரினார். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகியவை இன்னும் கூடுதலான நுகர்வு மூலம்தான் மீட்சி பெற முடியும்: இல்லாவிடின் அவை அழிந்துவிடும்என்றார். அத்தகைய நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு அவர் முந்தைய சந்தர்ப்பங்களில் தெளிவாக்கியது போல் G20, .நா. போன்ற நிறுவனங்களைப் பரிந்துரைத்தார். இரு அமைப்புக்களும் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அதிகாரங்களின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டவை ஆகும்.

இத்தகைய குறைதீர்க்கும் நடவடிக்கைகள் இடது அல்லது சோசலிச அரசியலுடனோ எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. முதலாளித்துவ நெருக்கடியின் தீவிரத் தன்மையைக் காண்கையில், இடது கட்சி முதலாளித்துவ ஒழுங்கமைப்பை பாதுகாப்பதற்கு இன்னும் கூடுதலான பொறுப்பை எடுக்கத் தயாராக உள்ளது. தான் சமூக ஜனநாயக்கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அரசாங்கத்தை நிறுவ விரும்பும் உண்மையை லாபோன்டைன் ஒருபொழுதும் இரகசியமாக வைத்ததில்லை. சமூக ஜனநாயக்கட்சி மற்றும் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் முக்கியச் செயற்பாடுகளைச் செய்துள்ள அனுபவர் நிறைந்த அரசியல் வாதியாவார் அவர்; சமூக ஜனநாயக்கட்சிக்கு ஆதரவு சரிவதை நிறுத்தும் வகையில் இடது கட்சியை நிறுவுவதற்குமுன் 40 ஆண்டுகள் அதைத்தான் அவர் செய்துள்ளார்.

ஆனால் வலதுசாரி அரசியலை இடது சொற்றொடர்களால் மூடிமறைக்கும் காலம் முடிந்துவிட்டது. இடது கட்சி தன் உண்மை நிறத்தை வெளிப்படுத்தும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளது. சமூக ஜனநாயக்கட்சி, பசுமைவாதிகள் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் பக்கம்தான் அது நிற்கிறதுஅதுவும் பெரும்பாலான மக்களுக்கு எதிராக. லாபோன்டைனின் திட்டம்இடது கட்சியின் பணியை விளக்க அவர் பயன்படுத்தும் சொல்உண்மை என்னும் சுவரில் மோதி நிற்கிறது.

இதற்கிடையில், முதலாளித்துவச் செய்தி ஊடகம்கூட இடது கட்சி முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்கு இடது மறைப்பு கொடுக்கும் பங்கைக்கூட இழக்கலாம் என்ற கவலையைத் தெரிவித்துள்ளது 

Süddeutschen Zeitung பத்திரிகையில் திங்களன்று வந்த ஒரு தலையங்கம் இடது கட்சியின் வீழ்ச்சி ஒரு ஆபத்தான வெற்றிடத்தைஏற்படுத்தியுள்ளது என்று எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஜனநாயகத்தின் கண்ணோட்டத்தில், குறைந்த பட்சம் ஒரு கட்சியாவது இன்னும் சில ஆண்டுகள் பாராளுமன்றத்தில் ஆப்கானிஸ்தானத்தில் ஜேர்மனிய இராணுவச் செயலுக்கு எதிராக வாக்களித்தல்” “முற்றிலும் ஆரோக்கியமானதுஎன்று டானியல் புரோஸ்லர் எழுதியுள்ளார்.