சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!
|
|
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இந்திய
ஸ்ராலினிஸ்டுகளும்,
ஊழல்-எதிர்ப்பு
லோக்பால் போராட்டமும்
By
Sarath Kumara and Peter Symonds
September 2011
use
this version to print | Send
feedback
ஓர்
ஓம்பட்ஸ்மென் அமைப்பை ஸ்தாபிப்பதற்காக,
ஜன் லோக்பால் சட்டமசோதா கோரி அன்னா ஹசாரேவினால் நடத்தப்பட்ட ஊழல்-எதிர்ப்பு
பிரச்சாரம்,
வாரக்கணக்கில் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
ஒவ்வொரு திருப்பத்திலும் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் இந்திய
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
(சிபிஎம்)
கட்சியினர் காட்டிய விடையிறுப்பு,
முதலாளித்துவ ஆட்சியின் நம்பிக்கையான பாதுகாவலர்களாக அவர்கள் இந்திய
அரசியலமைப்போடு முழுமையாக ஒன்றுகலந்திருப்பதை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
இந்திய
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் பொதுவானபோக்கு முதலில் வெளிப்பட்டது.
வளர்ந்துவந்த ஹசாரேவின் ஊழல்-எதிர்ப்பு
போராட்டங்களுக்கு எதிராக சிபிஎம்,
“நாடாளுமன்றத்தின்
மேலதிகாரத்தைத்”
தூக்கிப்பிடித்தது.
ஏப்ரலில் நடந்த ஹசாரேவின் முதல் உண்ணாநிலை போராட்டத்தின் போது,
அதன் மக்கள் ஜனநாயகம் இதழில்
“ஜனநாயகத்திற்கு
முரணாக நிற்பதை அனுமதிக்க முடியாது”
என்ற தலைப்பில் வெளியான ஒரு தலையங்கத்தில்,
நாடாளுமன்ற வழிமுறையைச் சாராமல் நிற்க தவறியமைக்காகவும்,
வாக்காளர்களை புறக்கணிக்கும் அவருடைய மனோபாவத்திற்காகவும் ஹசாரேவை
விமர்சித்ததுடன்,
“மதசார்பற்ற,
ஜனநாயக இந்தியா”
என பிரகாசமான சொற்களில் எழுதியது.
ஹசாரே
போராட்டத்தால் தொழிலாள வர்க்கமும் நிஜமான அபாயங்களை முகங்கொடுக்கிறது என்பதும்
உண்மையே.
இரண்டு தசாப்தகால சந்தைசார் சீர்திருத்தங்களுக்கு பின்னர் கணிசமான
அளவிற்கு விரிவடைந்துள்ள மத்தியதட்டு வர்க்கத்தின் பிரிவுகளின்மீது ஹசாரேவின்
போராட்டம் தங்கியுள்ளது.
“ஊழல்”
மீதிருக்கும் அவர்களின் விரோதமும்,
“ஒரு
வலுவான லோக்பாலுக்கு”
அவர்கள் அளிக்கும் ஆதரவும்,
செழிப்படையும் அவர்களின் விருப்பங்களை அரசாங்கமும்,
அரசு அதிகாரத்துவமும் தடுப்பதாக அவர்கள் கருதும் விரக்தியிலிருந்து
முளைத்தெழுகிறது.
எவ்வாறிருந்தபோதினும்,
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலதிக அக்கறையானது,
1947க்குப்
பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியில் எவ்வித சவாலையும் சந்திக்காத இந்திய
முதலாளித்துவம் எதன்மீது தங்கியுள்ளதோ அந்த நாடாளுமன்ற அமைப்புமுறையை
தாங்கிப்பிடிப்பதில் நிலைத்துள்ளது.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில்,
“மக்களின்
அரசைக்”
கொண்டிருப்பதாக தவறாக கருதப்படும்,
அந்த இந்திய அரசியலமைப்பைவிட உயர்ந்த நெறிமுறை வேறெதுவும் கிடையாது.
அந்த தலையங்கம் அறிவித்தது:
“இதை
அவமதிப்பதும்,
ஏளனமாக கையாள்வதும் இந்த அரசியலமைப்பு முறைக்குக் குழிபறிக்கும்
அபாயங்களை தோற்றுவிக்கும்.
இதை அனுமதிக்க முடியாது.”
எவ்வாறிருந்தபோதினும்,
ஹசாரேவின் பிரச்சாரம் வேகம் பிடிக்க தொடங்கியதும்,
இந்த வலதுசாரி வெகுஜன போராட்டத்திற்கு அதன் நியாயநெறிகளைக் காட்டி,
உடனடியாக சிபிஎம் ஊழல் எதிர்ப்பு முகாமிற்குள் தாவியது.
பல்வேறு சமீபத்திய ஊழல் மோசடிகளில் பெருநிறுவனங்கள் கொண்டிருந்த
தொடர்பின் மீதிருந்த கவனத்தை ஒரு பயனுள்ள திசையில் திசைதிருப்பவும்,
அதிகரித்துவரும் உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையில்
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் சந்தைசார் சீர்திருத்தங்களை அதிகரிக்க
அளித்துவரும் அழுத்தத்தை தீவிரப்படுத்தவும் ஹசாரேவின் போராட்டங்களை
பெருவியாபாரங்களும்,
பிரதான ஊடகங்களும் விசிறிவிட்டன.
“ஒரு
வலுவான மற்றும் சுயாதீனமான லோக்பால்”
கோரி சிபிஎம் ஜூலையில் அதன் சொந்த ஊழல்-எதிர்ப்பு
பிரச்சாரத்தை அறிவித்திருந்தது.
“சட்டப்பூர்வமாக
பரந்தளவில் தேசிய சீரழிவிற்கு”
இட்டுச்செல்லுமளவிற்கு ஊழல்
“நமது
சமூகத்தின் நெறிமுறையில் இழையோடி”
இருப்பதாக அதன் துண்டறிக்கை பிரஸ்தாபித்தது.
அந்த அறப்போரிற்கு அதன் சொந்த
“இடது”
பின்னலை அளித்து சிபிஎம் குறிப்பிட்டதாவது:
“இன்று
இந்தியாவிலுள்ள ஊழலின் தலைநுனியை நாம் புரிந்துகொண்டு,
அதை அம்பலப்படுத்தி அதற்கெதிராக போராட வேண்டியுள்ளது...
பெருவியாபாரங்கள்,
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்துவத்திலிருப்பவர்களின் கூட்டணி நவ-தாராளவாத
திருமூர்த்திகளைக்
[மூன்று
இந்து கடவுள்கள்]
குறிக்கிறது.”
“நவ-தாராளவாதத்திற்கு”
எதிரான சிபிஎம்-இன்
பிரச்சாரம்,
ஆத்திரமூட்டும் வகையில் போலித்தனமாக உள்ளது.
“ஊழலின்”
வேர்காரணம்,
கடந்த இரண்டு தசாப்தங்களின் நவ-தாராளவாத
கொள்கைகள் என்றழைக்கப்படுவனவை அல்ல மாறாக இந்த இலாப அமைப்புமுறையே ஆகும்.
பெருவியாபாரங்கள்,
அரசாங்கம் மற்றும் அரசு இயந்திரங்களுக்கு இடையிலுள்ள கூட்டானது,
முதலாளித்துவத்தின் அஸ்திவாரமாக உள்ளது.
அதில் அரசாங்கம் மற்றும் அரசு,
“மக்களுக்காக”
வேலை செய்வதில்லை,
மாறாக அவை முதலாளித்துவ நலன்களுக்காக வேலை செய்கின்றன.
அவற்றின் உறவு நாடாளுமன்ற ஆட்சியின்கீழ் மறைக்கப்பட்டுள்ளது.
“ஊழலானது"
அரச சக்கரங்களுக்கு எண்ணெய் போட உதவுகிறது என்பது இந்தியாவில்
மட்டுமல்ல,
மாறாக ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளும் ஏற்பட்டு வருவதாகும்.
அரசாங்கம்
“ஊழலின்
ஓர் அடையாளமாக”
மாறியுள்ளதாக தற்போது சிபிஎம் முறையிடுகின்ற போதினும்,
2004
தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு
வந்தபோது,
அதற்கும் அதன்
“நவ-தாராளவாத”
கொள்கைகளுக்கும்,
சிபிஎம் அதன் முக்கிய ஆதரவை அளித்தது.
அரசாங்க கொள்கைகளுக்கு எதிராக எழுந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பை
ஒடுக்குவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த அக்கட்சி,
2009
தேர்தலுக்குப் பின்னர் அதன் நாடாளுமன்ற எண்ணிக்கைக்கு அவசியமில்லை
என்றான போது விலகிக்கொண்டது.
அனைத்திற்கும் மேலாக,
மேற்கு வங்காளம் மற்றும் கேரளா என சிபிஎம் ஆட்சியிலிருந்த இந்திய
மாநிலங்களிலேயே,
சந்தைசார் சீர்திருத்தங்களை அதாவது நவ-தாராளவாதத்தை
நடைமுறைப்படுத்துவதில் நேரடியாக பொறுப்பு வகிக்கிறது.
சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி கூட்டணி
34
ஆண்டுகள் மேற்கு வங்காளத்தில் ஆட்சியிலிருந்த பின்னர்,
வலதுசாரி திரிணாமுல் காங்கிரஸிடம் மே மாதம் நடந்த மாநில தேர்தலில்
தோல்வியடையும் அளவிற்கு மக்களின் அதிருப்தியும்,
கோபமும் இருந்தன.
ஆட்சியிலிருந்தபோது,
அன்னிய முதலீட்டாளர்களுக்காக அம்மாநிலத்தை மலிவுக்கூலித் தொழிலாளர்
தளமாக திருப்புவதற்காக,
அதாவது விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்தியும்,
அரசுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடியும்,
வியாபாரங்களுக்கு வரிவிலக்கு அளித்தும்,
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த
தொழில்துறையில் வெடித்த வேலைநிறுத்தங்களைச் சட்டவிரோதமாக்கியும் சிபிஎம்
இரக்கமில்லாத ஒரு வேலைத்திட்டத்தைப் பின்பற்றியது.
நாடாளுமன்றத்தில் தமது ஜான் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென்ற
கோரிக்கைக்காக தாம் இரண்டாவது உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கப் போவதாக ஹசாரே
அறிவித்த பின்னர் தான்,
கடந்தமாதம் லோக்பால் போராட்டங்கள் மேலெழும்பி வந்தன.
இதற்கு விடையிறுப்பாக,
புது டெல்லியில் உள்ள ஒரு பொது-மைதானமான
ராம்லீலால மைதானத்தை விதிகளைமீறி பயன்படுத்த முனைந்தனர் என்ற போலிக்காரணத்தின்
அடிப்படையில் ஆகஸ்ட்
16இல்
ஹசாரே மற்றும் அவரின் ஆதரவாளர்களைக் கைது செய்து,
அரசாங்கம் அப்போராட்டத்தை ஒடுக்க விரும்பியது.
ஆனால் அந்த நடவடிக்கை மேலும் போராட்டங்களைத் தூண்டிவிட்டும்,
ஊடகங்களின் மற்றும் எதிர்கட்சிகளின் கண்டனங்களைப் பெற்றும் மிக
மோசமாக அதனையே திருப்பித் தாக்கியது.
உடனடியாக
சிபிஎம் அந்த கூச்சலில் சேர்ந்து கொண்டது.
அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான முறைமைகளுக்கு கண்டனம்
தெரிவித்த அக்கட்சி,
ஹசாரேவின் மீதோ அல்லது இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி போன்றவை
அவரின் ஆதரவிற்கு தாவிக் கொண்டிருந்ததன் மீதோ எவ்வித விமர்சனத்தையும் வைக்கவில்லை.
ஆகஸ்ட்
23இல்,
கைது நடவடிக்கைக்கு எதிராகவும்,
“ஒரு
வலுவான லோக்பால் உட்பட,
ஊழலுக்கு எதிராக துல்லியமான முறைமைகளைக்”
கோரியும்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த அவர்களின் சக ஸ்ராலினிஸ்டுகள்
மற்றும் பல்வேறு முதலாளித்துவ கட்சிகள்,
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் இனவாத கட்சியான அகில இந்திய அண்ணா
திராவிட முன்னேற்ற கழகம் போன்ற பிராந்திய கட்சிகள் ஆகியவற்றோடு சிபிஎம்
போராட்டத்தில் ஒன்று சேர்ந்தது.
பிரதம
மந்திரி மன்மோகன் சிங் பின்வாங்கியதோடு,
ஹசாரே அவரின் உண்ணாநிலையைத் தொடரவும் அனுமதி அளித்தார்.
எவ்வாறிருந்த போதினும்,
போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியதும்,
அரசாங்கத்திற்கும் ஹசாரேவிற்கும் இடையிலிருந்த பிளவு குறித்து ஆளும்
வட்டாரங்களில் அதிகமான கவலைகள் எழத்தொடங்கின.
சந்தைசார் சீர்திருத்தங்களுக்கான நிகழ்ச்சிநிரலைத்
தூக்கிப்பிடிக்கும்
“ஊழல்”
பிரச்சினை மட்டுமின்றி,
மாறாக சமூகத்தின் ஏனைய அடுக்குகளையும்,
குறிப்பாக தொழிலாள வர்க்கம் அதன் வேலைகள் பாதுகாப்பதற்காகவும்,
வாழ்க்கை நிலைமைகளுக்கும் இந்த விவகாரத்தை அதன் சொந்த கரங்களில்
எடுக்கும் அபாயத்தைக் காட்டியது.
திட்டமிட்ட
முயற்சிகள் நெருக்கடியை தணிக்கச் செய்தன.
வலையில் விழ விரும்பாத அரசாங்கம்
“நாடாளுமன்றத்தின்
மேலதிகாரத்தை”
வலியுறுத்தி,
ஜான் லோக்பால் சட்டமசோதாவை நிறைவேற்ற மறுத்தது.
மீண்டுமொருமுறை,
முதலாளித்துவத்தின் தேவைகளுக்கு விடையிறுப்பாக,
நாடாளுமன்ற ஆட்சியின் நம்பிக்கையான பாதுகாவலர்களாக சிபிஎம்
உருவெடுத்தது.
நாடாளுமன்றத்தின் சிபிஎம் உறுப்பினரான சீதாராம் யெச்சூரி கூறியது:
“இங்கே
அரசியலமைப்பு விஷயங்கள் உள்ளன;
ஒரு சட்ட அமைப்புமுறையின் நிகழ்முறைகளைக் கைவிட முடியாது”
என்று கூறியதோடு,
ஹசாரேவும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் அழைப்புவிடுத்தார்.
ஆகஸ்ட்
24இல்
அரசாங்கம் ஓர் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டியது.
சிபிஎம்,
சிபிஐ உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன்,
ஹசாரேவைப் பாராட்டி,
ஆனால் அவர் அவரது உண்ணநிலை போராட்டத்தைக் கைவிடக்கோரி,
சட்ட வழிமுறைகளோடு இசைந்து போகுமாறும் அக்கூட்டம் ஓர் அறிக்கையை
வெளியிட்டது.
திரைக்குப்பின்னால்,
ஹசாரேவின் உண்ணாநிலையை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு சமரசத்தை எட்ட
அன்னா குழுவினரோடு விறுவிறுப்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.
கொண்டு வரப்படும் எவ்வித லோக்பால் சட்டமசோதாவிலும் ஹசாரேவின் மூன்று
முக்கிய நிபந்தனைகளை உள்ளடக்கும்
“அவை
தீர்மானத்தைக்”
கொண்டு வர,
கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தைக் கூட்ட காங்கிரஸ் ஒப்புக்
கொண்டது.
இறுதியாக
சனியன்று,
இரண்டு நாடாளுமன்ற அவைகளும் அத்தீர்மானத்தை ஒருமனதாய் நிறைவேற்றின.
பின்னர் ஞாயிறன்று ஹசாரே அவரின் உண்ணாநிலையை முடித்துக் கொண்டார்.
அரசாங்கத்திற்கும்,
எதிர்கட்சிகளுக்கும் இடையில் கூட்டுறவின் ஒரு சகாப்தத்திற்கான
அறிகுறியாக அத்தீர்மானத்தை இந்திய ஊடகங்கள் பாராட்டின.
“கட்சிபேதமற்ற”
இந்த உற்சாகத்தில் சேர்ந்திருந்த சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளும்
ஹசாரேவின் நிபந்தனைகளுக்கு ஆதரவாக வாக்களித்தன.
மாநிலங்களில் லோக்பால்களை ஸ்தாபிப்பது,
சட்ட எல்லைகளுக்குள் மாநில கீழ்மட்ட அதிகாரத்துவத்தையும்
உள்ளடக்குவது,
மற்றும் சரிவர செயல்படாத மற்றும் ஊழலில் ஈடுபடுவோருக்கு அபராததுடன்
அனைத்து அரசுத்துறையிலும்
“மக்கள்
சாசனத்தை”
கொண்டு வருவது ஆகியவை அவரின் நிபந்தனைகளில் உள்ளடங்கும்.
ஒரு
“வலுவான
லோக்பாலை”
ஆதரித்ததன் மூலமாக,
நாடாளுமன்றத்தின் குறைந்தபட்ச மேற்பார்வையில் அல்லது அதுவும்கூட
இல்லாமல்,
அரசின் அனைத்து மட்டத்திலிருப்பவர்களையும் விசாரிக்கவும்,
தண்டிக்கவும் அதீத பொலிஸ் அதிகாரத்துடனான ஒரு புதிய அதிகாரத்துவ
கருவியை ஸ்தாபிக்க சிபிஎம் ஒப்புதல் அளித்துள்ளது.
தவிர்க்கவியலாமல்,
இத்தகைய புதிய அமைப்புகள்,
உழைக்கும் மக்களின் நலன்களுக்காக செயல்படுவதிலிருந்து விலகி,
ஊழலுக்கெதிரான போராட்டமென்ற பெயரில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக
உரிமைகளுக்கு மேலும் குழிபறிக்க பயன்படுத்தப்படும்.
சிபிஎம்
தொடக்கத்தில் என்னமாதிரியான தயக்கத்தை வெளியிட்டிருந்தாலும் கூட,
ஹசாரேவின் பொதுவான முகஸ்துதியில் அதுவும் இணைந்திருந்தது.
“அன்னாவின்
உண்ணாநிலை முடிந்துவிட்டதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி,
ஆனால் இடதைப் பொறுத்த வரையில்,
ஊழலின் அஸ்திவாரம்,
அரசாங்கத்தின் நவதாராளவாத கொள்கையின் கட்டமைப்பிற்குள்ளேயே
இருக்கும் பெருநிறுவனம்-அதிகாரத்துவம்-அரசியல்வாதிகளின்
கூட்டில் தங்கியுள்ளதால்,
அதன் போராட்டம் இன்னும் தீர்ந்துவிடவில்லை,”
என்ற அறிவிப்போடு பொலிட்பீரோ உறுப்பினர் ப்ரிந்தா காரத் ஹசாரேவிற்கு
வாழ்த்து தெரிவித்தார்.
ஊழலுக்கெதிரான போராட்டமே தேசம் முகங்கொடுக்கும் முக்கிய
பிரச்சினையாகும் என அவர் தெரிவித்தார்.
எதார்த்தத்தில்,
இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகையில்,
வேலை இழப்புகள்,
வறுமை,
ஏழை-பணக்காரர்களுக்கு
இடையில் ஆழமடைந்துவும் பிளவு ஆகியவற்றின்மீது தொழிலாள வர்க்கத்திடையே கோபம்
நிலவிவரும் நிலையில்,
ஆழமடைந்துவரும் வர்க்க பதட்டங்களிலிருந்து சௌகரியமாக கவனத்தைத்
திசைதிருப்ப ஹசாரேவின் ஊழல்-எதிர்ப்பு
போராட்டம் உதவியுள்ளது.
நாளொன்றுக்கு
$2க்கும்
குறைவாக ஒவ்வொரு நாளும் எவ்வாறு உயிர்வாழ்வதென்பதே பெரும்பான்மை இந்தியர்கள்
முகங்கொடுத்துவரும் அழுத்தமிகு பிரச்சினையாக உள்ளது.
மத்தியதட்டு
வர்க்கத்தின் மிகவும் செழிப்பான பிரிவுகளின் அடிப்படையில் ஒரு வலதுசாரி,
ஊழல்-எதிர்ப்பு
போராட்டத்தை ஹசாரே முழக்கமிட முடிந்ததென்பது,
தொழிலாள வர்க்கத்தின் எவ்வித சுயாதீனமான அரசியல் போராட்டத்தையும் பல
தசாப்தங்களாக ஒடுக்குவதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்திருந்த
காட்டிக்கொடுப்புகளின் ஒரு விளைபொருளாகும் என்பதே உண்மை.
வர்க்க கூட்டு மற்றும் நாடாளுமன்ற முடக்குத்தனத்தின் திவாலாகிபோன
சிபிஎம் முன்னோக்கின் இந்த சமீபத்திய ஆதாரத்திலிருந்து,
தொழிலாளர்கள் தேவையான படிப்பினைகளைப் பெற்று,
உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால்
போராடப்படும் சர்வதேச சோசலிசத்திற்கான வேலைதிட்டத்திற்குள் திரும்ப வேண்டும். |