World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A new constituency for imperialism

ஏகாதிபத்தியத்திற்கு ஒரு புதிய அரசியல் தளம்

Peter Schwarz
3 September 2011

Back to screen version

ஏகாதிபத்திய சாத்தியக்கூறுகள் மீதான பொதுவான உற்சாகம், அதற்களிக்கப்படும் மூர்க்கத்தனமான ஆதரவு, அதை கண்கவரும் வர்ணங்களால் தீட்டுவதுஇவை தான் இக்காலக்கட்டத்தின் அறிகுறிகள்.” இந்த சொற்கள் 95 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை. ஆனால் இன்றைய அரசியல் சூழலுக்கு முன்பைவிட மிக அதிகமாக பொருந்துகின்றன. லிபிய யுத்தத்திற்கு தாராளவாத இதழாளர்கள், இடதுசாரி அறிவுஜீவிகள் மற்றும் முன்னாள் தீவிரகொள்கையாளர்கள் காட்டும் விடையிறுப்பில் ஒரு சிறந்த விளக்கத்தைக் காண முடியாது.

மேற்கூறிய வரிகள் லெனினின்ஏகாதிபத்தியம் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. அதில் அக்டோபர் புரட்சியின் அந்த எதிர்கால தலைவர் முதலாம் உலக யுத்தத்தின் காரணங்களை ஆராய்ந்திருந்தார். லெனின் பொருளாதார பின்புலங்களின் ஆய்வோடு மட்டும் தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை, மாறாக மனிதகுலத்தின் வரலாற்றில் முன்னர் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருந்த சமூக மற்றும் அரசியல் மாற்றங்களையும் கையாண்டிருந்தார்.

ஒருசிலரின் கரங்களில் குவிந்திருந்த நிலையில், பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் நிலவிய நிதி மூலதனத்தின் செல்வாக்கும், உலகைப் பிளவுபடுத்தும் அவர்கள் விருப்பத்தோடு, பெரும் சக்திகளுக்கு இடையில் அதிகரித்துவந்த முரண்பாடுகளும்... சொத்துடைமை வர்க்கங்கள் முற்றிலுமாக ஏகாதிபத்தியத்தின் பக்கம் திரும்புவதற்கு காரணமாகியிருந்தன.

ஏகாதிபத்திய நோக்கங்களுக்கு ஆதரவளிப்பது, நல்ல வடிவமென ஜேர்மனியின் குட்டி முதலாளித்துவத்திற்குள் அப்போது கருதப்பட்டது. 1898இல் ஸ்தாபிக்கப்பட்ட ஜேர்மன் கடற்படை கழகம் (German Navy League), பிரிட்டிஷ் கடற்படைக்கு இணையாக ஜேர்மன் கடற்படையை கட்டமைக்க வேண்டுமென ஆர்பரித்தது. 1908இல் அதில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். இவையனைத்தும் யுத்த காய்ச்சலுக்கு இட்டுச் சென்றது. 1914இல் அது சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) அதிகமாக ஆக்கிரமித்திருந்த்து; அத்தோடு ஒரு தொடர்ச்சியான உலக பேரழிவையும் கட்டவிழ்த்துவிட்டது. இந்த தொடர்ச்சியான உலக பேரழிவு, இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவிற்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு தற்காலிக இடைவெளியை மட்டுமே எட்டியிருந்தது.     

லிபிய சூறையாட்டத்திற்கு விடையிறுப்பாக இன்றைய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்களும், அரசியல்வாதிகளும் என்னமாதிரியான உற்சாகத்தையும், பிதற்றல்களையும் காட்டுகிறார்களோ அது முதலாம் உலக யுத்தத்திற்கு முந்தைய காலக்கட்டத்தை நினைவூட்டுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் யுத்தங்களில் மூளையை குளிர்ச்சியாக வைத்துக் கொண்டிருந்த பல இதழாளர்களும், புத்திஜீவிகளும் எவ்வித விமர்சனரீதியிலான ஆய்வுகளையும் கைவிட்டிருந்தனர். முன்னர் யுத்த முரசுகளோடு நகர்ந்தவர்கள், இப்போது எந்த தடையுமின்றி உள்ளனர்.

யுத்தம் தொடுத்த சக்திகள் அவற்றின் சூறையாடும் நோக்கங்களை மூடிமறைக்க பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நேட்டோவால் ஆறு மாதங்கள் அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதல், தேசிய இடைக்கால சபையின் போலித்தனமான கூட்டுக்கலப்பு, இஸ்லாமிய போராளிகளை பயன்படுத்தியமை, போராளிகள் தரப்பில் இருந்த அன்னிய மேற்தட்டு துருப்புகள் மற்றும் கடாபி ஆதாரவாளர்கள் மற்றும் கறுப்பு ஆப்ரிக்கர்களின் படுகொலை (இவர்கள் குறித்து மேற்கத்திய இதழ்கள் பெருமளவிற்கு மௌனமாக காக்கின்றன) இவையனைத்தும் அப்பாவி மக்களின் பாதுகாப்பிற்காக மற்றும் ஒருஜனநாயக புரட்சிக்காக என்ற உத்தியோகபூர்வ பிரச்சாரத்தை மெய்பிக்க, பலவீனமாகவே நிலைநிறுத்தப்பட்டிருந்தன.

வியாழனன்று பாரிசில் லிபியா குறித்து நடந்த சர்வதேச கூட்டம், எண்ணெய், பணம், ஆதிக்கம் மற்றும் ஒட்டுமொத்த மத்தியகிழக்கையும் மறுபிளவு செய்தல் என நிஜமான யுத்த நோக்கங்களை எடுத்துக்காட்டியது. அதில் கலந்து கொண்டிருந்த பெரிய சக்திகள் வெளிப்படையாகவே அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் மற்றும் உறைந்துபோயுள்ள பில்லியன் கணக்கான சொத்துக்களைப் பங்கு போடுவதில் தொங்கி கொண்டிருந்தன.  

ஆனால் ஊடக மற்றும் அரசியல் பிரச்சாரகர்கள், வேண்டுமென்றே அவர்கள் பார்க்க விரும்பாத ஒவ்வொன்றின்மீதும் அவர்களின் கண்களை மூடிக்கொண்டு, “லிபிய சுதந்திரத்தின்பிம்பத்திற்கு பொருந்தாத அனைத்தையும் நிராகரிக்கிறார்கள்.

இவ்விஷயத்தில், ஐரோப்பிய பாராளுமன்றத்திலுள்ள பசுமைக்கட்சி தலைவர் டானியல் கோஹ்ன்-பென்டிட், அவருடைய இறுமாப்பிற்கும், திமிர்தனத்திற்கும் ஈடு இணையின்றி இருக்கிறார். 1968இல் பாரீஸ் மாணவர் கலகத்தில் ஒரு செய்திதொடர்பாளராக முன்னிலைக்கு வந்த கோஹன்-பென்டிட், “அரேபிய உலகில் மேற்கின் மதிப்பை உயர்த்தி இருப்பதற்காக”, இந்தவெற்றிகரமான இராணுவ தலையீட்டைபுகழ்ந்துள்ளார். அவர் ஜேர்மனியிலுள்ள அவரின் பசுமைக்கட்சி தோழர்களைபுத்திசாலி-உளவாளிகள் என்றும்அறிவாளிகள் என்றும் ஏளனம் செய்தார். ஏனெனில் அவர்கள் தொடக்கத்திலிருந்தே யுத்த முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கவில்லை. அவர்கள் நேட்டோவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி சார்கோசிக்கு பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அளித்திருந்த பாராட்டில் அது தன்னைத்தானே மெய்மறந்து விட்டிருந்தது. “பிரான்ஸ் இதற்கான முன்முயற்சி எடுத்தமைக்காக மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்த கட்சி தலைவர் மார்டீன் ஆப்ரி, “சரியான சமயத்தில் செயல்பட்டமைக்காக சார்கோசியை பாராட்டினார். முன்னதாக கல்வி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகங்களுக்குத் தலைமை வகித்தவரும், கட்சியின் சிறந்த அறிவுஜீவி என்று மதிக்கப்படுபவருமான ஜாக் லோங், பின்வரும் சொற்களோடு திரிப்போலி விஷயம் குறித்து கருத்து வெளியிட்டார்: “லிபிய சுதந்திர யுத்தத்தில் அது தீர்க்கமாகவும் இருந்தமைக்காகவும், வெற்றிகரமாக அதில் ஈடுபட்டமைக்காகவும் பிரான்சின் மதிப்பு உயர்ந்துள்ளது என்ற உண்மைக்காக இன்று ஒவ்வொருவரும் அதை பாராட்ட வேண்டும்,”என்றார்.

புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியும் (NPA) யுத்த பிரச்சாரத்தில் நுழைந்துள்ளது. அதன் வாரயிதழ் Hebdo Tout est à nous!, நேட்டோ தலையீட்டிற்கு ஆதரவாக வீரியத்தோடு வாதிட்ட விவாத பங்களிப்புகளைப் பிரசுரித்தது. மார்ச் மாத இறுதியில், அவர்கள் எழுதினார்கள்: “ஐக்கிய நாடு சபையின் 1973 தீர்மானத்தைச் செயல்படுத்துவதை யாரெல்லாம் இன்று எதிர்க்கிறார்களோ அவர்கள், ‘நாங்கள் உங்களின் வாழ்க்கையை, உங்களின் சுதந்திரத்தை, உங்களின் நம்பிக்கையை எங்களின் ஏகாதிபத்திய-எதிர்ப்பிடம் தியாகம் செய்கிறோம் என்று பெங்காசியில் மற்றும் கிழக்கு லிபியாவிலுள்ள போராளிகளிடம் நேரடியாக கூறுங்கள். நம்மில் சிலர் அதை செய்யக்கூடும், ஆனால் நான் அவ்வாறு செய்ய மாட்டேன்.”  

திரிப்போலி வீழ்ந்த பின்னர், புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி ஓர் உத்தியோகபூர்வ செய்தி வெளியீட்டில் அறிவித்தது: “சர்வாதிகாரி கடாபி தூக்கியெறியப்பட்டிருப்பது மக்களுக்கு நல்ல செய்தி தான்... லிபிய மக்களைப் பொறுத்த வரையில், இப்போது ஒரு புதிய வாழ்க்கை தொடங்குகிறது. பண்டங்களின் வளங்களிலிருந்து பரந்த வருவாய்களைப் பயன்படுத்தி மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வது, சுதந்திரம், மற்றும் ஜனநாயக உரிமைகள் ஆகியவை இப்போதைய பட்டியலில் உள்ளவை.”

உத்தியோகபூர்வ பிரஸ்தாபங்களில், புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி பொதுவாகஅதிதீவிர இடதின் பாகமாகவே விவரிக்கப்படுகிறது. இத்தகைய ஓர் ஏகாதிபத்திய யுத்தத்தைப் பகிரங்கமாகவும், உறுதியாகவும் நியாயப்படுத்தும் ஓர் அமைப்பிற்குபுதிய வலதுஎன்பதே பொருத்தமான பெயராக இருக்கும்.  

ஜேர்மனியிலும் இதேபோன்ற போக்கைக் காண முடிகிறது. அங்கே ஈராக் யுத்தத்திற்கு எதிராக நூறு ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினர். ஆனால் லிபிய யுத்தத்திற்கு எதிராக ஒரேயொரு முக்கிய ஆர்ப்பாட்டத்திற்கும் கூட அழைப்புவிடுக்கப்படவில்லை. அமைதி இயக்கமென்று (peace movement) அழைக்கப்படுவது ஓய்வுபெற்று போய்விட்டிருக்கிறது

யூகோஸ்லேவியாவிற்கு எதிரான யுத்தத்தில் ஜேர்மனியின் பங்களிப்பை உறுதி செய்வதில் 1999இல் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவரும், கோஹன்-பென்டிட்டின் நீண்டகால நண்பருமான பசுமைக்கட்சியின் சக உறுப்பினர் ஜோஸ்கா பிஸ்ஷெர், லிபிய யுத்தத்தில் இணைய ஜேர்மனி மறுத்ததை, “மத்திய குடியரசு ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர் அதன் வெளிநாட்டு கொள்கையில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய வீழ்ச்சியெனஇடித்துரைத்திருந்தார். SPDக்கு ஆதரவான வாரயிதழ் Die Zeit, அதைஒரு ஜேர்மன் அவமதிப்பு என்று குறிப்பிட்டது. நேட்டோ தலையீட்டிலிருந்து ஜேர்மன் விலகியிருந்ததை ஆதரித்து, ஊடகங்களிலிருந்தோ அல்லது அரசியலமைப்பின் அரசியல் கட்சியிலிருந்தோ ஒரேயொரு குரலைக் கூட காண்பதென்பது ஏறத்தாழ சாத்தியமே இல்லாமல் இருந்தது.  

அமெரிக்காவில், புஷ் சகாப்தத்தின் பிரதான யுத்த எதிர்ப்பாளர்களும் லிபிய யுத்தத்திற்கு உற்சாகமாக ஆதரவளித்தனர். இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு, மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஜூவான் கோலே ஆவார். ஈராக் யுத்த விமர்சகர் என்று பெயரெடுத்திருந்த இவர், தற்போது லிபிய யுத்தத்தை மும்முரமாக ஆதரிக்கிறார். உலக சோசலிச வலைத் தளம் அவரின் பரிணாமத்தை பல கட்டுரைகளில் ஆழமாக பகுத்தாராய்ந்துள்ளது

முன்னாள் தாராளவாதிகள் மற்றும் சமரசவாதிகள் ஏகாதிபத்திய யுத்த முகாமிற்குள் மாறியிருப்பது மிகவும் பரந்துவிரிந்துள்ளது. அதை ஒருவர் தனியொருவரின் நிகழ்வுப்போக்காக எடுத்தாள முடியாது. பாரிய சமூக போராட்டங்கள் இதுபோன்ற அரசியல் மாற்றங்கள் மூலமாக அவற்றைஅவையே அவ்வபோது வெளிப்படுத்துகின்றன. எதிர்கால வர்க்க போராட்டங்களில் தங்களின் பாத்திரத்தை வகிக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்த அபிவிருத்தியொன்றும் புதிதல்ல. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யூகோஸ்லேவியா யுத்தத்தின் போது, சமரசவாதிகள் மற்றும் பசுமை கட்சியினரிடையே இருந்த பல உட்கூறுகள், பாதுகாப்பற்ற அந்நாட்டின் மீது நேட்டோ குண்டுவீசுவதை ஆதரித்தன. ஆனால் லிபிய யுத்தத்தில், இந்த அபிவிருத்திகள் ஒரு புதிய கட்டத்தை வந்தடைந்துள்ளன.

முக்கியமாக இது செல்வவளத்தோடு இருக்கும் மத்தியதட்டு வர்க்கங்களின் பிரதிநிதிகளால் வந்தடைந்துள்ளது. இவர்கள், அவர்களின் முன்னாள் சமரசவாத, தாராளவாத அல்லதுஇடது கண்ணோட்டங்களுக்குப் இறுதி வணக்கம் தெரிவிக்க விரும்புகின்றனர். இத்தகைய அடுக்குகள் பசுமை கட்சி, சமூக ஜனநாயக கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் குட்டி-முதலாளித்துவ இடதான புதிய முதலாளித்து-எதிர்ப்பு கட்சி ஆகியவற்றில் வலுவாக குடிகொண்டுள்ளனர். அவர்கள் கூர்மையான வர்க்க துருவமுனைப்பாட்டிற்கு விடையிறுப்பு காட்டி வருகின்றனர். அது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச நிதியியல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து ஆழமடைந்துள்ளது. Geert Wilders அல்லது Thilo Sarrazin போன்ற இனவாத தலைவர்களுக்கு இத்தகைய அடுக்குகளிடம் இருக்கும் ஆதரவு, அதே அரசியல் இயல்நிகழ்வின் மற்றொரு பக்கமாக உள்ளது.  

வரவிருக்கும் வர்க்க போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கம் தயாராக வேண்டும். சமூக ஜனநாயகக் கட்சியினரும், புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற குழுக்களும் லிபிய சூறையாடலுக்கு அவர்கள் காட்டிய ஆதரவுடன், அவர்கள் எங்கே நிற்கிறார்கள் (ஆளும் வர்க்கத்தின் பக்கம் நிற்கிறார்கள்) என்பதை துல்லியமாக தெளிவுபடுத்தியுள்ளனர்

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே, இன்று ஒரு சோசலிச முன்னோக்கை இடைவிடாமல் அறிவுறுத்திக் கொண்டு, சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை பாதுகாத்து வரும் உலகின் ஒரே அரசியல் இயக்கமாக உள்ளது. இந்த கட்சியைக் கட்டுவதே இன்றைய நொடிப்பொழுதின் முக்கிய பணியாக உள்ளது.