WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France announces emergency budget 
அவசரகால வரவு செலவுத்
திட்டத்தை பிரான்ஸ் அறிவிக்கிறது
By
Antoine Lerougetel
2 September 2011
Back to
screen version
ஆகஸ்ட்
24ம்
திகதி பிரதம மந்திரி பிரான்சுவா பியோன் அறிவித்த அவசரகால வரவு-செலவுத்
திட்டமானது அரசாங்கம் அதன் வரவு-செலவுத்
திட்டத்தில் பற்றாக்குறையை குறைப்பதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால்
பிரான்ஸின்
AAA
தர
நிர்ணயம் அகற்றப்படும் என்னும் தர நிர்ணய நிறுவனங்களின் அச்சறுத்தலுக்கு
விடையிறுப்பு ஆகும்.
அத்தகைய நடவடிக்கை பிரான்சின் கடன் வாங்கும் செலவுகளை அதிகரித்து பொது ஐரோப்பிய
நாணயத்தின் நிலைப்பாட்டிற்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
ஜேர்மனிக்கு அடுத்தாற்போல்
17
நாடுகள்
கொண்ட யூரோ வலையப் பகுதியில் பிரான்ஸ் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கு மூத்த பொருளாதார ஆலோசகராக இருக்கும்
Alain Minc “பிரான்சின்
AAA
தரம்
ஒரு தேசிய பொக்கிஷமாகும்”
என்று
Le
Figaro
விடம்
தெரிவித்தார்.
பொதுச் சுகாதாரத்தை அபிவிருத்தி செய்தல் என்னும் மறைப்பில்,
புதிய வரவு-செலவுத்
திட்டமானது புகையிலை சார்ந்த பொருட்கள்,
மதுபானங்கள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றின் மீதான வரிகளை உயர்த்தும்
திட்டத்தைக் கொண்டுள்ளது;
இது தேசிய வரவு-செலவுத்
திட்டப் பற்றாக்குறையை
2012க்குள்
12
பில்லியன் யூரோக்களைக் குறைத்துவிடும்.
வருமானங்களை
1.3
பில்லியன் யூரோக்கள் அதிகப்படுத்தும் வகையில் கணக்கிடப்பட்டுள்ள வரி உயர்வுகள்
குறைந்த வருமானம் உடையவர்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும்.
பொதுச் சுகாதாரத்தை முன்னேற்றுவிப்பது பற்றி சார்க்கோசி அரசாங்கம் பேசுகையில்,
அது மருத்துவமனைகளை தொடர்ந்து மூடுகிறது,
ஊழியர்களை குறைக்கிறது மற்றும் மக்கள் மீது கூடுதலான மருத்துவப் பாதுகாப்பிற்கான
செலவுளைச் சுமத்துகின்றது.
ஆண்டு வருமானம்
500,000
யூரோக்களுக்கு மேல் உடையவர்களுக்கு தற்காலிகமாக
3
விகித
வரி உயர்வானது வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறைகளுக்காக விதிக்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
3
சதவிகிதம் வரம்பிற்கு கீழே குறைந்தவுடன் அகற்றப்படும்;
இது
2007ல்
சார்க்கோசி ஜனாதிபதியான பின் இயற்றப்பட்ட செல்வந்தர்களுக்கான வரிக் குறைப்புக்களில்
மீண்டும் பகுதியாக
1.8
பில்லியனைக் கருவூலத்திற்குக் கொண்டுவரும்.
ஐரோப்பிய ஒன்றியம்
3
சதவிகிதம் பற்றாக்குறை உச்சியை அடைவதற்கு இலக்கு வைத்துள்ள கால அவகாசம்
2013
ஆகும்.
ஆயினும்கூட,
12
பில்லியன் பற்றாக்குறையின் பெரும்பகுதி பெருவணிகம் மற்றும் செல்வந்தர்களால்
ஏற்கப்படும்;
இதில் இரண்டு வீடுகளை உடையவர்களும் அடங்குவர்.
புதிய நடவடிக்கைகளானது பிரான்ஸ் தன் வரவு-செலவுத்
திட்டப் பற்றாக்குறையை
GDP
யில்
5.7
சதவிகிதத்திலிருந்து அடுத்த ஆண்டு
4.5
சதவிகிதம் என்றும்
2013
ஐ ஒட்டி
3
சதவிகிதம் எனக் குறைத்துவிடும் என்ற உறுதிமொழியை செயல்படுத்திவிடும்.
இந்த இலக்கை அடைவதற்குத் தேவையான வெட்டுத்தரங்கள் மேல்நோக்கி உயர்த்தப்பட்டுள்ளன;
அரசாங்கம் அதன்
GDP
வளர்ச்சியின் கணிப்பைத் திருத்திக் குறைத்துள்ளது.
கடந்த காலாண்டில் பிரெஞ்சுப் பொருளாதாரம் பூஜ்ய வளர்ச்சி விகிதத்தைத்தான் பதிவு
செய்தது.
புதிய வரவு-செலவுத்
திட்டம் சார்க்கோசியின் உறுதிமொழியான வரிகளை உயர்த்துவதில்லை என்பதில் இருந்து
ஓரளவு பின்வாங்கியுள்ளதைக் குறிக்கிறது.
மேலும் தொழிலாளர்களின் வேலைகள்,
ஊதியங்கள் மற்றும் சமூக நலன்களில் பெரும் தாக்குதல்கள் என்று கிரேக்க,
போர்த்துக்கேய,
ஸ்பெயின் அரசாங்கங்களானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்
ஆணையில் செயல்படுத்தியவற்றையும் தவிர்க்கிறது.
வரவு-செலவுத்
திட்டத்தை இயற்றும்போது பிரிட்டனில் இம்மாதம் நடைபெற்ற இளைஞர் கலகங்களுக்கு பின்
பிரான்சிலும் சமூக வெடிப்புக்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சமும் ஒரு காரணியாக
இருந்தது.
2005ல்
பாரிஸ் புறநகரங்கள் மற்றும் பிற நகரங்களில் குடியேறியவர்களின் சமூகங்களுடைய கலக
அலைகளினால் பிரான்ஸ் பாதிப்பிற்கு உட்பட்டிருந்தது.
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தேர்தல்களில் சார்க்கோசி மீண்டும்
ஒருமுறை ஜனாதிபதி பதவியை நாடுகிறார்;
அவரைப் பற்றிய ஆதரவான கருத்துக் கணிப்புக்கள் கடந்த மாதம்
24
சதவிகிதத்திற்கும்
35
சதவிகிதத்திற்கும் இடையில் சரிந்துவிட்டன.
“மைய
வலதுசார்பில் தற்பொழுதுள்ள நிக்கோலா சார்க்கோசியானாலும்,
அல்லது அவருடைய சோசலிச எதிர்ப்பாளர்களில் ஒருவரானாலும் சரி,
அடுத்த ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுபவர் பொதுச் செலவுகள்
மற்றும் பொதுநல அரசாங்கத்தின் வருங்காலம் பற்றிக் கடுமையான விருப்பத் தேர்வுகளை
எதிர்கொள்வர்.
இதுதான் கடந்த புதன்கிழமை அன்று சார்க்கோசி அரசாங்கம் அறிவித்த குறைந்த வரம்புடைய
சிக்கன நடவடிக்கைகளில் இருக்கும் மைய ஆனால் பயனுடைய தகவல் ஆகும்….
யூரோப் பகுதியின் அரசாங்கக் கடன்கள்,
மற்றும் பிரான்சை சூழ்ந்துள்ள வங்கி நெருக்கடிகள் ஆகியவற்றால் நிதியச் சந்தைகளில்
காணப்படும் உளைச்சல் தரும் அடையாளங்களுக்கு அரசாங்கம் விரைவாகச் செயல்படும் தன்மையை
நிரூபிக்கின்றன”
என்று
பைனான்சியல்
டைம்ஸின்
மூத்த பகுப்பாய்வாளர்
Wolfgang Münchau
ஆகஸ்ட்
29
பதிப்பில் கூறியுள்ளார்.
பிரான்சில்
“பொதுக்கடன்
கடந்த
40
ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
80
சதவிகிதத்திற்கும் மேலாகப் போய்விட்டது”
என்று சுட்டிக்காட்டிய
Münchau “இது
இன்றைய கடுமையான சந்தைச் சூழ்நிலைக்கு உகந்ததாக இல்லை”
என்று முடிவுரையாக கூறியுள்ளார்.
தொழிலாள வர்க்கத்துடன் போராடி வெற்றுபெறுவதற்காக பிரான்சின் அரசியல் உயரடுக்கு பல
ஆண்டுகள் கடன்களை வாங்கிய நிலைமை இப்பொழுது முடிந்துவிட்டது என்ற கருத்தை அவர்
கூறியுள்ளார்.
முக்கிய தொழிற்சங்கத் தலைவர்களுடன்,
குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாகவுள்ள
CGT
யின்
(தொழிலாளர்
பொதுக் கூட்டமைப்பு)
பேர்னார்ட் தீபோ,
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சிச் செல்வாக்கின் கீழுள்ள ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பின்
(CFTD)
பிரான்சுவா ஷெரோக் ஆகியோருடன் தொலைபேசி மூலம் ஆலோசனைகள் நடத்திய பின்னர் இந்த புதிய
வரவு-செலவுத்
திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அப்பேச்சுக்களின் நடவடிக்கைகள் அமைதியான முறையில் செயல்படுத்துவதை
உத்தரவாதப்படுத்தும் வகையில் தொடரும்.
ஆகஸ்ட்
18ம்
திகதி தொழிற்சங்கங்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு அரசாங்கத்துடனும்
முதலாளிகளுடனும் இணைந்து தங்கள் பங்கைச் செய்ய உறுதியளித்தன;
இது
“வளர்ச்சிக்கு
ஆதரவளிக்கும்,
வேலைவாய்ப்பிற்கு ஆதரவு கொடுக்கும்,
கடனைக் குறைக்க உதவும்,
அதே நேரத்தில் சமூக இணக்கத்தை உத்தரவாதப்படுத்தும்”
என்று அதில் கூறப்பட்டுள்ளது.
செல்வந்தர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள குறைந்தபட்ச வரிகள் தொழிற்சங்கங்களைத்
திருப்தி செய்வதற்காகும்;
அவற்றிற்கு இது தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன எதிர்ப்பு எதையும் தடுப்பதற்கான
அரசியல் மறைப்பாக உதவும்.
அக்டோபர் தொடக்கத்தில் ஒரு நாள் நடவடிக்கைக்கு அழைப்புக்
கொடுப்பதற்கு
CGT
முனைந்துள்ளது.
கடந்த ஆண்டு சோசலிஸ்ட் கட்சி,
கம்யூனிஸ்ட் கட்சி,
Jean-Luc Mélenchon
உடைய
இடது கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகியவை தொடர்ச்சியாகப் பல
ஒரு நாள் எதிர்ப்புக்களைச் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தியதைத் தொடர்ந்து
வருகிறது.
இவை தொழிலாளர்களின் சீற்றத்தைத் தணித்து,
ஓய்வூதியத்தின் மீது தாக்குதல்கள்,
ஆலை மூடல்கள்,
பணிநீக்கங்கள்,
குறிப்பாக கார்த் தொழிலில் நடந்தவற்றிற்கு எதிரான சீற்றத்தை தணித்து கரைத்துவிடப்
பயன்படுத்தப்பட்டன.
தொழிற்சங்கங்களும் அவற்றின் நட்பு அமைப்புக்களும் சார்க்கோசி அரசாங்கத்தை
வீழ்த்தும் போராட்டம் எதையும் நிராகரித்தன;
மேலும் தொழிலாளர்களின் பல பிரிவுகள் நடத்திய வேலைநிறுத்தங்களையும் தனிமைப்படுத்தின.
இதற்கிடையில்
CGT, CFDT
ஆகியவற்றின் தலைமையில் தொழிற்சங்கங்கள் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவது
குறித்து அரசாங்கத்துடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தின.
2013
இலக்கான
GDP
யில்
3
சதவிகிதம் என்ற வரவு-செலவுத்
திட்டக் குறைப்பை நிலைநிறுத்துவதற்கு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விரும்பும்
எல்லா சோசலிஸ்ட் கட்சி போட்டியாளர்களும் ஆதரவு கொடுத்துள்ளனர்.
தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் தீவிர பாதிப்பு ஏதும் இன்றி இது
சாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
“சட்டம்
மற்றும் ஒழுங்கை”
செயல்படுத்தத் தவறியதற்காக சிலர் சார்க்கோசியை குறைகூறியுள்ளனர்;
ஜனாதிபதித் தேர்தலில் இது முக்கிய பிரச்சினையாக்கக் கூடும்.
சோசலிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலரான மார்ட்டின் ஆப்ரி,
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான முக்கிய போட்டியாளர்,
பொலிஸ் படையில் இன்னும்
10,000
பேர்களை
நியமிப்பதாக உறுதியளித்துள்ளார்.
2007
ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான செகோலீன் ரோயால்,
2012
போட்டியில் வேட்பாளராக நிற்க விழைவு உடையவர்,
சீரற்ற இளைஞர்கள் இராணுவத்தின் பொறுப்பில் வைக்கப்பட வேண்டும் என்னும் தன் கொள்கையை
மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தொழிற்சங்கங்களும்
“தீவிர
இடது”
என அழைக்கப்படுபவைகளும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளுக்கேற்ப அழுத்தம் கொடுப்பதன்
மூலம் சலுகைகளை அரசாங்கத்தை கொடுக்க வைக்கலாம் என்ற போலித்தோற்றத்தை வளர்த்துக்
கொண்டிருக்கின்றன. |