World Socialist Web Site www.wsws.org |
NATO prepares bloodbath in Sirteசிர்ட்டேயில் நேட்டோ இரத்தக்களரிக்கு தயாரிக்கின்றதுBill Van
Auken லிபியாவில் ஒரு விமானம் பறக்காத பகுதியை உருவாக்கல், “குடிமக்களை பாதுகாப்பதற்கும், தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உட்படும் குடிமக்கள் வசிக்கும் பகுதிகளைக் பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்தல்” என்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைத் தீர்மானத்தைப் பெற்றுக் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர், அமெரிக்காவும் முன்னாள் காலனித்துவ சக்திகளான அதன் நேட்டோ நட்பு நாடுகளும் இப்பொழுது மிகப்பெரியளவில் குடிமக்களுக்கு இறப்புக்கள் ஏற்படுத்தக்கூடிய வகையில் மக்கள் அதிகமாக வாழும் நகரங்களின் மீது மிருகத்தனமான முற்றுகையை மேற்கொண்டுள்ளன. லிபியாவில் அமெரிக்க நேட்டோவின் உண்மையான நோக்கமான ஆட்சி மாற்றத்தை அடைவதற்கான “இறுதிப் போருக்கு” பரபரப்பாகத் தயாரிக்கையில் மேலைச் செய்தி ஊடகத்தில் எவையும் முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் எதைத்தடுப்பதற்குப் போரை மேற்கொண்டதாகக் கூறினவோ, அதைத்தான் துல்லியமாகச் செய்துகொண்டிருக்கின்றன என்பது பற்றி கருத்திற்கொள்ள முற்படவில்லை. கடாபியின் துருப்புக்கள் பெங்காசியை நோக்கிச் செல்கின்றன, ஒரு “மனிதாபிமான” தலையீடு நேட்டோவால் மேற்கோள்ளப்பட்டாதல்தான் நகரத்தின் நிரபராதியான மககள் பாதுகாக்கப்பட முடியும் என்று உலகத்திற்கு கூறப்பட்டது. இப்பொழுது “எழுச்சியாளர்கள்” சிர்ட்டே நகரை சூழ்ந்துள்ளனர். இதற்கு பிரிட்டிஷ் மற்றும் கட்டார் சிறப்புப்படைப் பிரிவினர், உளவுத்துறை நடவடிக்கையாளர்கள் மற்றும் கூலிப்படை இராணுவ ஒப்பந்தக்காரர்கள் தலைமை தாங்குகின்றனர், அதே நேரத்தில் நகரத்தின் மக்கள் நேட்டோ குண்டுக்களால் தாக்கப்பட்டு, உணவு, எரிபொருள் இன்னும் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பெறமுடியாமல் தத்தளிக்கின்றனர். அமெரிக்க மற்றும் மேலை ஐரோப்பிய சக்திகள் சட்டபூர்வத்தன்மை மற்றும் உலக மக்கள் கருத்திற்குக் காட்டும் இகழ்வுணர்வு பாரியளவில் உள்ளது. நேட்டோ ஐ.நா.தீர்மானத்திற்குட்பட்டு நடக்கிறது என்ற போலித்தனம், தலையீட்டிற்கு ஒரு போலிமறைப்பைக் கொடுத்தமை ஒரு கேலிக்கூத்தைவிட மோசமாகி இழிந்த தன்மையை எடுத்துக்கொண்டது. 1930 களிலும் 1940 களிலும் பாசிச சக்திகள் நடத்திய குற்றங்களுக்குத்தான் பின்னோக்கிச் சென்று இதற்கு சமாந்தரமான ஒரு முற்றுகையை காண வேண்டியுள்ளது: அதாவது ஸ்பெயினின் உள்நாட்டுப்போரின்போது குர்னிகா மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது, லெனின்கிராட் முற்றுகை, வார்சோ குடியிருப்புகள் மீது தாக்குதல் போன்றவை. நேட்டோப் போர்விமானங்கள் கடந்த சில நாட்களாக ஏராளமான வான்தாக்குதல்களை சிர்ட்டேயிலும் அதற்கு மேற்கே உள்ள பனி வலிட்டிலும், இரு நகர்களையும் இணைக்கும் சாலைகள் மீதும் நடத்துகின்றன. சிர்ட்டேயில் இருந்து சுயாதீனமான தகவல்கள் வரவில்லை என்றாலும்கூட, கடாபி ஆட்சியின் செய்தித்தொடர்பாளர் மௌசா இப்ரஹிம் தொடர்ச்சியான குண்டுத்தாக்குதல்களும் ஏவுகணைத் தாக்குதல்களும் நகரத்தில் 1,000 பேருக்கும் மேலாகக் கொன்று இன்னும் பலரையும் காயப்படுத்தின. இக்கடும் தாக்குதலின் ஒரு பகுதி இந்நகரத்திலோ அதன் சுற்றுப் பகுதிகளிலோ அடைக்கலம் புகுந்திருக்கலாம் என நம்பப்படும் கேர்னல் முயம்மர் கடாபியைப் படுகொலை செய்யும் நோக்கத்தைக் கொண்டது. மேலைச் சிறப்புப் படைகள் கடாபியை தரைப்பகுதிமூலம் தேடுவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் நிறைய அமெரிக்க ஒற்று விமானங்கள் கடாபி தங்கியிருக்கும் இடங்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப் படுகின்றன. நேட்டோ தலைமையிலான எழுச்சியாளர்கள் சிர்ட்டேக்கு கிழக்கேயும் மேற்கேயும் முக்கிய கடலோரப் பாதையில் நிலைகொண்டுள்ளன. நேட்டோவின் மின்னல் தாக்குதல்கள் நகரத்தை பாதுகாப்பவர்களை போதுமான வரை அழிக்கும் வரை இதைத்தொடரவும் உத்தரவு பெற்றுள்ளனர். லிபியாவின் சட்டபூர்வமான அரசாங்கம் என்று பெரும் சக்திகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முன்னாள் கடாபி மந்திரிகள், மேற்கத்தைய உளவுத்துறை ஆதரவாளர்கள், இஸ்லாமியவாதிகள் மற்றும் பழங்குடிச் செயலர்களை கொண்டு தம்மைத்தாமே தேசிய இடைக்கால குழு என நியமித்துக்கொண்டவர்களுக்கும் இது சரணடைக அல்லது இறந்துமடிக என்ற இறுதி எச்சரிக்கையை நகரத்திற்குக் கொடுத்துள்ளது. சனிக்கிழமைக்குள் சரணடைதல் நிகழவில்லை என்றால், நகரம் இராணுவத் தாக்குதலுக்கு உட்படுத்தப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர். “ஒரு அமைதியான சரணடைதல் பற்றி குறிப்பு ஏதும் எங்களுக்கு வரவில்லை” என்று தேசிய இடைக்கால குழு இராணுவச் செய்தித் தொடர்பாளர் கேர்னல் அஹ்மத் ஒமர் பனி பெங்காசியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். “ஒரு சமாதானத் தீர்வைக் காணவிரும்புகிறோம், ஆனால் சனிக்கிழமையில் இருந்து நாங்கள் இந்தக் குற்றவாளிகளுக்கு எதிராக வேறு வழிவகைகளைக் கையாள்வோம்.” “சில சமயம் குருதி கொட்டுவதைத், தவிர்க்க நாமே குருதியைக் கொட்ட வேண்டியுள்ளது; இதை விரைவாகச் செய்தால், குறைந்த குருதிதான் கொட்டப்படும்” என்று தேசிய இடைக்கால குழுவின் துணைத்தலைவர் அலி தார்ஹௌனி கூறினார். மேலைச் செய்தி ஊடகம் முன்கூட்டியே இரத்தக்களரியை நியாயப்படுத்தும் வகையில், “எழுச்சியாளர்கள்” சிர்ட்டேயைக் பாதுகாப்பவர்களுடன் “இன்னமும் முற்றுப்பெறா நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்”, “கணக்குகளைத் தீர்க்க வேண்டும்” என்று எழுதுகின்றனர்; நகர பாதுகாப்பாளர்களுக்குள் மிஸ்ரடா, பெங்காசி மீது தாக்குதல் நடத்திய இராணுவப் பிரிவுகள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நகரம் கடாபியின் தாயகம் ஆகும்; அவருடைய பழங்குடியான கடாபிபஹ்களின் மையமும் ஆகும். நேட்டோ பயன்படுத்தும் குற்றம்சார்ந்த வழிவகைகள் மற்றும் நகரங்களைத் தாக்குதல், அரசியல் படுகொலை முயற்சிகள், படுகொலைகள், கறுப்பின துணைச் சகாரா ஆபிரிக்க குடியேறிய தொழிலாளர்களை அடித்துக் கொல்லுதல் போன்றவை போரின் நோக்கத்துடன் இணைந்துள்ளன—அதாவது ஏகாதிபத்திய வெற்றி அடைதல் என்பதுடன். மேற்கத்தைய ஆதரவுடைய துனிசியாவின் ஜேன் எல் அபிடைன் பென் அலி, எகிப்தின் ஹொஸ்னி முபாரக்கின் சர்வாதிகாரங்களுக்கு இறுதி முடிவு வரை மக்கள் எழுச்சிகளுக்கு எதிராக ஆதரவைக் கொடுத்தபின், அமெரிக்காவும் நேட்டோ நட்பு நாடுகளும் இந்த இரு நாடுகளுக்கும் இடையே மூலோபாய முறையில் உள்ள லிபியாவில் தலையீடு செய்ய முடிவெடுத்தன. கடந்த பெப்ருவரி மாதம் கடாபி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தவற்றைத் தாங்களே பயன்படுத்திக்கொண்டு உள்நாட்டுப் போர் ஒன்றைத் தூண்டி நேரடி நேட்டோத் தலையீட்டிற்கும் வகை செய்தன. இந்த இலக்கை ஒட்டி பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுச் சிறப்புப் படைகள் லிபியாவின் நிலப்பகுதியில் எந்த ஐ.நா.தீர்மானமும் விவாதிக்கப்படு முன்னரே நிலைநிறுத்தப்பட்டன. இத்தலையீடு குடிமக்களை காப்பதற்கு என்று ஒருபோதும் இருந்தது இல்லை. புதன்கிழமை அன்று தேசிய இடைக்கால குழுவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கடந்த ஆறு மாத காலத்தில் கொல்லப்பட்ட லிபியர்களின் மொத்த எண்ணிக்கை—குடிமக்கள் மற்றும் போரில் ஈடுபட்டோர்—50,000க்கும் மேல் இருக்கும் என மதிப்பிட்டுள்ளார். நேட்டோ இப்போரை மனித உயிர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் ஈடுபட்டது என்ற போலிக்காரணத்தை நல்ல நாணயம் என்று ஒப்புக்கொண்டால்கூட, இத்தலையீடு பெரும் தோல்வி என்றுதான் தீர்மானிக்கப்பட வேண்டும். இப்போர் இதற்கு முன் இருந்த அடக்குமுறையைவிட மிகப்பெரிய பேரழிவைத்தான் தோற்றுவித்துள்ளது. நேட்டோ நடத்தும் போரின் இலக்கு திரிப்போலியில் மேற்கத்தைய அரசாங்கங்கள் மற்றும் எரிசக்தி பெருநிறுவன்களின் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை அங்கு நிறுவுதல் என்பதாலும். வாஷிங்டன், லண்டன், பாரிஸ் மற்றும் ரோமில் உள்ள ஆளும் வட்டங்கள் 42 ஆண்டுகளுக்கு கடிகாரத்தை பின்னோக்கி வைக்கும் நாட்களை நினைத்து நாவில் நீர்சொட்ட நின்கின்றன. அப்பொழுது ஊழல் நலிந்த அரசர் ஐட்ரிஸின் முடியாட்சி Standard Oil லிபியாவின் பெட்ரோலிய விதிகளை எழுத வைத்து, அமெரிக்கா, பிரிட்டன் இரண்டிற்கும் இராணுவத் தளங்களையும் அளித்தது. இத்தகைய நவகாலனித்துவ நோக்கங்களை ஒருங்கிணைத்தல் என்பதற்கு இன்னும் அதிக இரத்தக்களரி லிபியாவில் மக்கள் எதிர்ப்பை நசுக்குவதற்கு தேவைப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. லிபிய மக்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்றங்கள் மற்றும் நாட்டின் எண்ணெய் வளத்தை எவர் கட்டுப்படுத்துவர் என்னும் ஏகாதிபத்தியத்திற்கு இடையேயான அழுத்தங்களில் இயல்பாக இருக்கும் இன்னும் பரந்த போர் அச்சுறுத்தல்கள், ஒரு புதிய போர் எதிர்ப்பு இயக்கத்திற்கான அவசர தேவையை எழுப்பியுள்ளன; இவை தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிச முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும். போருக்கு எதிரான போராட்டம் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அடிப்படை சமூக, ஜனநாயக உரிமைகள் என்று ஒவ்வொரு நாட்டிலும் கிட்டத்தட்ட நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபடுத்தப்பட வேண்டும். அது முழு நனவான முறையில் இராணுவவாதம் மற்றும் சமூக எதிர்ப்புரட்சி இவற்றின் மூலங்களுக்கு எதிராக இயக்கப்பட வேண்டும்—அதாவது முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு எதிராக. |
|