WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
30,000
பேர்களைக் கைது செய்யத் திட்டமிடப்படுகிறது
லண்டன் புறநகர்ப் பகுதிகள் பொலிஸ் சோதனைகளால் அச்சுறுத்தப்படுகின்றன
By Paul Stuart
1 September 2011
use
this version to print | Send
feedback
ஆகஸ்ட்
4ம்
திகதி வடக்கு லண்டனில் பொலிசார் மார்க் டுக்கனைக் கொன்றதால் தூண்டுதல் பெற்ற
முக்கியக் கலவரங்கள் நடந்து ஒரு மாதம் கழிந்தபின்,
தலைநகரின் மெட்ரோபொலிட்டன் பொலிசார் தொழிலாள வர்க்க சமூகங்களில் சோதனைகளை
தீவிரப்படுத்தியுள்ளனர்.
முழுப் புறநகர்ப் பகுதிகளும் மூடப்பட்டுள்ளன;
பொலிஸ் கலகப் பிரிவுப் படையினர் வீட்டின் கதவுகளை உடைத்து மக்களை இழுத்துச்
செல்கின்றனர்.
இதுவரை லண்டனில் மட்டும்
2,000க்கும்
மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்;
கலகம் தொடங்கியதில் இருந்து இது சராசரியாக நாள் ஒன்றிற்கு
100
என
ஆகிறது.
முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும் செய்தி ஊடகம் இந்த நடவடிக்கைகளை திரைப்படம்
எடுக்கின்றன,
உண்மையான சோதனைகள்,
பொலிசாரால் அவர்களுடைய வாகனங்களில் இளைஞர்கள் உள்ளே எறியப்படுவது உட்பட.
சண்டே
டைம்ஸிடம்
ஒரு பொலிஸ் ஆதாரம் கலகங்களில் தொடர்புடைய
30,000
பேரைத்
தாங்கள் தேடி அலைவதாக கூறியுள்ளது.
தேசிய அளவில்
40,000
மணிநேர
CCTV
ஒளிக்காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன,
மூத்த பொலிஸ் அதிகாரிகள் பல ஆண்டுகள் விசாரணை தொடரும் என எதிர்பார்க்கின்றனர்.
ஆகஸ்ட்
22
அன்று
மெட்ரோபொலிட்டன் பொலிஸ் லண்டனில்
3,296
குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
“இதில்
பங்கு பெற்ற அனைவரையும் கண்டுபிடிப்பதில் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் தீவிரமாக உள்ளது”
என்று ஒரு பொலிஸ் ஆதாரம் தெரிவிக்கிறது.
முழு அரசியல் அமைப்புமுறையின் ஆதரவையும் பெற்ற மெட்ரோபொலிட்டன்
பொலிசார் கலகங்கள் தொடங்கியதில் இருந்தே வெறியாட்டத்தில்தான் ஈடுபட்டுள்ளனர்.
ஆகஸ்ட்
11ம்
திகதி
50
பொலிஸ்
அதிகாரிகள் வெஸ்ட்மினிஸ்டரில் பிம்லிகோ எஸ்டேட் பகுதியிலுள்ள சர்ச்சில்
தோட்டங்களைச் சோதனையிட்டனர்.
இதைப் பற்றிய வீடியோக் காட்சியை டெய்லி
டெலிகிராப் வெளியிட்டு,
“இங்கிலாந்தை
அடித்து நொருக்கி எடுத்துச் செல்லுபவர்கள் தங்கள் மருந்தையே இன்று பெற்றுள்ளதை
உணர்ந்துள்ளனர்”
என்று கூறியது.
“ஒரு
செயற்பாட்டைப் பற்றிக் கூறுகையில்,
ஸ்காட்லான்ட் யார்ட் பொலிஸ் தலைவர் ஒரு நிறுவனத்தை திருப்பித் தாக்குகையில்
பிரிட்டஷ்காரர்களுக்கு ஏற்பட்ட கொடூரத்தை மனத்தில் நினைவு கொள்ளுமாறு
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்,
ஆனால்
“இது
சட்டப்படி உறுதியான வகையில் செய்யப்பட வேண்டும்”
என்றார்.
அதே நாளில்,
லாம்பெத் நகரவைக் குடியிருப்பில் நடந்த சோதனை ஒன்றில்,
120
பொலிஸ்
கலகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு,
வீட்டுக் கதவுகளை உடைத்து,
இளைஞர்களை இழுத்துச் சென்றனர்.
கண்காணிப்பு அதிகாரியான நிக் செட்ஜிமோர்,
சோதனைக்கு தலைமை தாங்கியவர்,
அறிக்கை ஒன்றை வெளியிட்டுக் கூறியது:
“நாங்கள்
சென்று அவர்களைப் பிடிப்போம்,
ஒவ்வொருவரையும்;
சட்டத்தில் இயன்றளவு குற்றச்சாட்டுக்களை முன்வைப்போம்…
சமூகத்தின் ஒரு பிரிவைக் குற்றவாளிகளாக்குவது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
நாங்கள் ஒன்றும் இங்கு விரும்பப்படுபவர்கள் என்ற பெயரைப் பெற வரவில்லை,
மதிக்கப்படுவதற்கு வந்துள்ளோம்….
பொறுத்தது போதும்.
அவர்கள் உள்ளங்களில் அச்சத்தை சிறிது புகட்ட விரும்புகிறோம்.”
இதே தினத்தில் நடத்தப்பட்ட
100
சோதனைகளில் இவையும் அடங்கியிருந்தன.
மெட்ரோபொலிட்டன் பொலிசின் வலைத் தளத்தில் முன்மாதிரியான அறிக்கை ஒன்று
கீழ்க்கண்டவகையில் இருந்தது:
“Operation Withern
நடவடிக்கையை எதிர்கொள்ளும் வகையில் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் படையின் விசாரணை,
லண்டன் ஒழுங்கீனத்திற்கு பின்,
லாம்பெத் உள்ளூர் பொலிஸ் குழுக்களும் சிறப்புப் பயிற்சிபெற்ற தேடும் அதிகாரிகளும்
ஸ்டாக்வெல் மற்றும் பிரிக்ஸ்டன் குடியிருப்புப் பகுதிகளில் சோதனைகளை நடத்தி,
ஏராளமான ஆயுதங்களையும் குற்றம் பற்றியச் சான்றுகளையும் மீட்டனர்.
ஆகஸ்ட்
14
சனிக்கிழமை அதிகாரிகள் ஸ்டாக்வெல் தோட்டக் குடியிருப்பு
SW9
ல்
சோதனைகளை நடத்தினர்;
இதற்கு துப்பறியும் சார்ஜன்ட் லூக்காஸின் மேற்பார்வை இருந்தது.
இவர்கள் மூன்று கத்திகள்,
ஒரு அடிக்கும் சுத்தியல்,
ஒரு கைப்பேசி மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
ஆகஸ்ட்
15
ஞாயிறன்று அதிகாரிகள் மூர்லாந்து குடியியிருப்பு
SW9
ல்
சோதனையிட்டனர்.”
வடமேற்கு லண்டனில் ஹார்லெஸ்டன் கார்டெனர் குடும்ப வீட்டில்
மெட்ரோபொலிட்டன் பொலிஸ் நடத்திய ஆயுதமேந்திய சோதனையை ஒட்டிய கிட்டத்தட்ட வெளிவராத
மனத்திற்கு அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் பொலிசார் நடத்திய அத்துமீறல்களுக்கு ஒரு
உதாரணம் ஆகும்.
ஆகஸ்ட்
16ம்
திகதி,
ஒரு அநாமதேய அழைப்பை ஒட்டி,
ஏராளமான ஆயுதமேந்திய அதிகாரிகள் லியோனி ரீஸ் மற்றும் டில்ரோய் கார்டனரின் குடும்ப
இல்லத்திற்குள் முன்,
பின் கதவுகளை தகர்த்தெறிந்து நுழைந்தனர்;
கார்டனரும் அவருடைய துணைவியும் தொலைக்காட்சியை படுக்கையில் இருந்து பார்த்துக்
கொண்டிருந்தனர்,
அவர்களுடைய மூன்று குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தன.
அவர்களுடைய முகத்திற்கு எதிரே துப்பாக்கிகள் குறிவைக்கப்பட்டு
இருந்தன;
இதில் பெரும் அச்சத்துடன் விழித்து எழுந்த அவர்களுடைய மூன்று வயது மகன் ஜியோனும்
இருந்தான்.
அரை ஆடையுடன் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர்;
அதில் அவர்களுடைய
10
மாதக்
குழந்தையும் அடங்கும்;
அது குளிர்காய்ச்சலில் இருந்து அப்பொழுதுதான் மீண்டு கொண்டிருந்தது.
வீடு முற்றிலும் நாசப்படுத்தப்பட்டது.
25
வயதான
லியோனி ரீஸ் கடுமையான ஆஸ்த்மாத் தாக்குதலினால் கஷ்டப்பட்டிருந்தவர் பின்னர் ஒரு
அம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டார்.
காட்சியைப் பற்றி அவர் கூறுவது:
“இதன்
பின் என்னுடைய மகன் உறைந்துபோனான்….
எல்லா இடங்களில் இருந்தும் துப்பாக்கிமுனைகள் எங்களை நோக்கி
குறிவைக்கப்பட்டிருந்ததால் அவன் வெளியேற முடியாது என்றான்.
எனக்கு ஏற்பட்ட அச்சத்தில் நான் மூச்சுவிடக்கூடத் திணறினேன்.
என்னுடைய மூன்று வயது மகன் குழப்பத்தில் மேலும் கீழும் ஓடினான்;
அவர்கள் கூக்குரலிட்டுத் துப்பாக்கையை அவனை நோக்கிக் காட்டியதால் வெளியேறவும்
அச்சப்பட்டான்.”
லியோனியின் துணைவரான உள்ளூர் இளந்தொழிலாளி டெல்ரோய் கார்டனர்
கூறினார்:
“இது
ஒரு கொடூரத் திரைப்படக் காட்சியைப் போல் இருந்தது.
பொலிசார் அனைவரும் முகமூடி அணிந்து கொண்டிருந்தனர்;
நீங்கள் அவர்களுடைய கண்களை மட்டுமே பார்க்க முடியும்.
ஆயுதமேந்திய கொள்ளையர்கள்தான் அவர்கள் என்று வீட்டில் முறையற்று நுழைந்ததைப்
பார்த்து நான் முடிவிற்கு வந்தேன்;
ஏனெனில் அவர்கள் சாதாரண உடை அணிந்திருத்தனர்.
வெளியே நான் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர்தான் அங்கு பொலிசாரைச் சீருடையில்
பார்த்தேன்.
…எங்கள்
வீட்டை பெரும் சூறாவளி தாக்கியது போல் இருந்தது.”
“பின்னர்
ஒன்றும் நடக்காதது போல் பொலிஸ் பெருந்தன்மையுடன் என்னிடம்
“நல்ல
நாளாக இருக்கட்டும்”
என்றனர் என அவர் தொடர்ந்தார்.
“தங்களுக்கு
அனாமதேய அழைப்பு வந்ததாகவும்,
நான் ஆயுதமேந்திய கொள்ளையன் என்றும் கூறப்பட்டதாக தெரிவித்தனர்.
என்னைப் பற்றி இத்தகைய குற்றச்சாட்டுக்களைக் கூறியவர் அந்த முடிவிற்கு எப்படி
வந்தார்?”
“பிறருடைய
குற்றச்சாட்டுக்களை ஒட்டி,
மக்கள் அடிப்படையில் பாதிப்பிற்கு உட்படுகின்றனர்.
உண்மை பற்றிய சான்று ஏதும் இல்லாமல் அவர்கள் வெறும் வதந்தியைக் கேட்டு இதைச்
செய்தார்கள் என்றால்,
எவரும் தன்னுடைய வீட்டிலேயே பாதுகாப்புடன் இல்லை என்பதுதான்.
இது எவருக்கும் நடக்கக்கூடும்.”
ஒரு துப்பாக்கிமுனை தன்னை எதிர்கொண்டதில் தன் மகன் ஜியோன் பெரும்
மனப்பீதிக்கு உட்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளான் என்று கார்ட்னர் கூறினார்.
“ஜியான்
பெரும் பீதி அடைந்தான்:
இப்பொழுது கட்டுப்பாடின்றி எப்பொழுதும் சிறுநீர் கழிக்கிறான்;
இரவில் தீய கனாக்களைக் காண்கிறான்.”
இத்தகைய அப்பட்டமான வர்க்கப் பழிவாங்குதலில் அரசின் அனைத்து
நிறுவனங்களும் தொடர்பு கொண்டுள்ளன.
சிறை நிர்வாக கவர்னர்கள் சங்கத்தின்
(PGA)
தலைவரான
Eoin McLennan-Murray
மாஜிஸ்ட்டிரேட்டுக்களைப் பற்றி கூறினார்:
“சுறாக்கள்
நீரில் இருப்பது,
நீரில் இரத்தம் இருப்பது போல் காணப்படுகிறது;
இது உரமூட்டும் வெறித்தனம் ஆகும்.
தண்டனை கொடுப்பதில் வெறித்தனம் உள்ளது;
ஒரு விகித நெறி பற்றி அனைத்துக் கருத்துக்களையும் இழுந்துவிட்டது போல் தோன்றுகிறது.
ஜனரஞ்சக உணர்விற்கு ஏற்ப நடப்பது போல் உள்ளது;
சிலருக்குத் தண்டனை வழங்குவதற்கு அது ஒரு சிறந்த தளம் அல்ல.”
“தண்டனை
கொடுக்கப்படும்போது கவனிக்க வேண்டிய நெறிகள் புறக்கணிக்கப்படுகின்றன…
இத்தகைய உடனடி நீதி வழங்குதல் என்பது பல மக்கள் நியாயமற்று தண்டனை பெறுகின்றனர்
என்ற பொருளைக் கொடுப்பதாகும்.”
மக்லென்னன்-முர்ரேயின்
அறிக்கை சிறையில் இருப்போர் எண்ணிக்கை
1,000
க்கு
மேலாக உயர்ந்து மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக புதிய நிலைக்கு வந்துள்ளதற்கு
விடையிறுப்பாகும்;
இதன் செயற்பாட்டு திறனான கிட்டத்தட்ட
87,000
கைதிகள்
என்பதைவிட சற்று குறைவாகத்தான் இப்பொழுது உள்ளனர்.
சமீபத்திய நீதித்துறை அமைச்சரகத்தின் கலகங்களில் தொடர்புடையதாக
கூறப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்ட பற்றிய புள்ளிவிபரங்களை
BBC
பகுப்பாய்ந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில்
70
விகிதமானோர்களை காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது;
இது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களில்
2010ல்
காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்கள்
10%
தான்
என்பதுடன் ஒப்பிடத்தக்கது.
கலகங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களில்,
46
சதவிகிதத்தினர் சிறை தண்டனை பெற்றனர்.
2010ல்
இதே போன்ற குற்றங்களுக்கு
12.3
சதவிகிதத்தினர்தான் சிறைத் தண்டனை பெற்றனர்.
இதை எதிர்கொள்ளுகையில்,
சிறை அதிகாரிகள்
“அவசரக்கால
நடவடிக்கைகள் எடுத்து பயன்படுத்தக்கூடிய திறனை அதிகப்படுத்த,
இன்னும் அதிக அழுத்தம் சிறை வளாகத்திற்கு வந்தால் செய்வதற்கு திட்டமிடுகின்றனர்.”
சிறைக் கப்பல்களை அமைத்தல் என்பது ஒரு திட்டத்தில் உள்ளது.
நீதி தவறாகப் போதல்,
மனித உரிமைகள் பறிக்கப்படுதல் ஆகியவை நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆயினும்கூட மனித உரிமை அமைப்புக்கள் இத்தவறுகளுக்கு கணிசமான விடையிறுப்புக்களை
செய்யவில்லை;
கைது செய்யப்பட்டவர்கள்,
இரவிலும் கூடச் செயல்படும் நீதிமன்றங்களால் சிறைக்கு அனுப்பப்படுபவர்கள் சட்டத்தின்
நெறியைப் பொருட்படுத்தாமல் இவ்விதம் தண்டனைக்கு உட்படுவது பற்றி அவைகள் ஏதும்
கூறவில்லை.
மர்டோக்கின் தொலைப்பேசி ஒற்றுக் கேட்டல் ஊழலில்,
பரந்த குற்றம் சார்ந்த நடவடிக்கைகளில் தொடர்புடைய பொலிஸ்,
செய்தி ஊடகத்தின் செயற்பாடுகள் வெளிப்பட்டுள்ள நிலையில்,
பொலிசாருக்கு பரந்த கைது செய்வதற்கு தங்கள் விடையிறுப்பிற்கு தடையற்ற ஒருங்கிணைப்பு
கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட்
12
அன்று
டெய்லி
மெயிலில் எழுதப்பட்டுள்ளது தக்க மாதிரியாக உள்ளது:
“பல
நாட்கள் தடிகளாலும் பெட்ரோல் குண்டுகளாலும் தாக்கப்பட்டபின்,
இப்பொழுது அதைத் திருப்பிக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.” |