WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா &
தென்பசுபிக்
Australian government aligns with Washington’s anti-China
stance in Asia
ஆஸ்திரேலிய அரசாங்கமானது ஆசியாவில்
வாஷிங்டனின்
- சீன
எதிர்ப்பு
நிலைப்பாட்டுடன் இணைந்து கொள்ளுகிறது
By James Cogan
29 October 2011
பிரதம மந்திரி ஜூலியா கில்லர்டின் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி
அரசாங்கம் இந்த வார இறுதியில் காமன்வெல்த் நாட்டுத் தலைவர்கள்
மாநாடு
(CHOGM)
மேற்கு
ஆஸ்திரேலியப் பெர்த்தில் நடைபெற உள்ளதைப் பயன்படுத்தி,
ஒபாமா
நிர்வாகத்துடன் தன் நிபந்தனையற்ற இணைந்த நிலைப்பாட்டை
உறுதிப்படுத்துவதுடன்,
ஆசிய-பசிபிக்
பிராந்தியத்தில் பெருகிவரும் சீனச் செல்வாக்கைத் தடுக்கும்
வாஷிங்டனின் முயற்சிகளுக்கு உறுதுணையாக நிற்கும்.
கடந்த திங்களன்று ரூபர்ட் மர்டோக்கின் நியூஸ் லிமிடெட்டின்
முக்கிய வெளியீடான
Australian
அதன் முதல்
பக்கத்தில்
CHOGM
கூட்டத்திற்கு முன்னதாக கில்லர்டுடன் நடத்திய சிறப்புப் பேட்டி
ஒன்றை பிரதானமாக வெளியிட்டது;
இதில்
கில்லர்ட் தன் அரசாங்கம் எப்படி அமெரிக்க வெளியுறவுக்
கொள்கையைத் தழுவி நிற்பதின் அடிப்படைக் கூறுபாடுகளை
வரையறுத்தார்—சில
இடங்களில் இது பெரும் பாராட்டுரையாக இருந்தது.
1930களின்
பெருமந்த நிலைக்குப் பின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு
நடுவே,
கில்லர்ட்
அமெரிக்காவில் உலக மேலாதிக்கத்தின சரிவு பற்றிய மதிப்பீடுகள்
“மிகைப்படுத்தப்பட்டவை’’
என்று
வலுயுறுத்தினார்.
இந்தோனேசியாவில் அடுத்த மாதம்
EAS
எனப்படும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டிற்குச் செல்லும் வழியில்
ஆஸ்திரேலியாவிற்கு முதல் முறையாகத் தன் உத்தியோகப்பூர்வ
வருகையை மேற்கோள்ள இருக்கும் ஒபாமா
“பெரும்
வலிமையையும் பொறுமையையும் உடையவர்”,
“தான்
நினைப்பதைச் சாதிப்பவர்”
என்று
கில்லர்ட் வலியுறுத்தினார்.
இன்னும் தீவிர எதிரிடையான முறையில்,
யூரோப்பகுதியில் இருக்கும் பெரும் பிரச்சினை கொடுக்கும் அரச
கடன் நெருக்கடி பற்றிய ஐரோப்பிய உச்சிமாநாட்டிற்கு முன்
கில்லர்ட் இகழ்ச்சியுடன்
“ஐரோப்பிய
நாடுகள் தங்கள் சக்திக்கு மீறி வாழ்கின்றன”
என்றும்
அவை “எப்படியும்
தன்வழியில் செல்ல முற்படுவதை”
அவை
நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.
தன்னுடைய அரசாங்கத்தின் நோக்கம் அமெரிக்க-ஆஸ்திரேலிய
இராணுவ உடன்பாட்டை
“புதுமைப்படுத்திப்
புதுப்பிப்பதாகும்”
என்று
கில்லர்ட் அறிவித்தார்.
அமெரிக்காவுடனான ஆஸ்திரேலிய உறவுகள்
“நம்
வெளியுறவுக் கொள்கை மற்றும் மூலோபாயக் கண்ணோட்டம்
ஆகியவற்றிற்கு முற்றிலும் இன்றியமையாதவை”
என்று அவர்
வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு
அமெரிக்கா
EAS ல்
சேர்ந்துள்ளது பற்றிக் குறிப்பாக அவர் பாராட்டினார்—இதில்
முன்பு
ASEAN
என்னும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சங்க உறுப்பு நாடுகளான
சீனா,
ஜப்பான்,
தென்
கொரியா,
ஆஸ்திரேலியா,
நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகியவை மட்டுமே இருந்தன.
“அமெரிக்கா
பசிபிக் மற்றும் ஆசியாப் பிராந்தியங்களில் தன் கொள்கையை
“மறுநோக்குநிலை
செய்து கொண்டிருக்கிறது”
என்று அவர்
Australian
இடம்
கூறினார்.
EAS ல்
சேரும் இந்த முடிவு
“அந்த
ஈடுபாட்டின் தீவிரம் எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றிய
குறிப்பாகும்.”
ஒபாமா நிர்வாகத்திற்கு கில்லர்ட்டின் புகழுரைகள்
Foreign Policy
ஏட்டின் சமீபத்திய
பதிப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகந்தழுவிய மூலோபாயம்
பற்றி அமெரிக்க அரச செயலர் ஹில்லாரி கிளின்டன் கோடிட்டுக்
காட்டிய கருத்துக்களால் உந்துதல் பெற்றுள்ளன என்பது தெளிவு.
அக்கட்டுரையில் ஹில்லாரி அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஒரு
“முக்கிய
கட்டத்தில்”
இருப்பதாக
வரையறுத்து,
அதற்காக
ஒபாமா நிர்வாகம் பதவிக்கு வந்ததிலிருந்து பாடுபட்டு வருவதாகக்
கூறியிருந்தார்.
கடந்த
தசாப்தத்தில் அமெரிக்காவானது ஆப்கானிஸ்தான்,
ஈராக்
ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தது.
அடுத்த
தசாப்தத்தில் அது அந்த ஈடுபாட்டைக் கொண்டிருக்காது.
“அமெரிக்க
அரசியல் திறனின்”
முக்கியக்
குவிப்பும் ஆசிய-பசிபிக்
பிராந்தியத்தில் இருக்கும்.
இதில் தொடர்புடைய பொருளாதார இடர் பற்றிக் கோடிட்டுக் காட்டிய
கிளின்டன் எழுதியது:
“ஆசியாவில்
திறந்த சந்தைகளானது அமெரிக்காவிற்கு முதலீடு,
வர்த்தகம்
மற்றும் புதிய தொழில்நுட்ப வழிவகை ஆகியவற்றிற்கு
முன்னோடியில்லாத வாய்ப்புக்களைத் தருகின்றன.
உள்நாட்டில் நம் பொருளாதார மீட்பு என்பது ஏற்றுமதிகளை
நம்பியிருக்கும்,
அமெரிக்க
நிறுவனங்கள் ஆசியாவிலுள்ள பரந்த,
பெருகிவரும் நுகர்வோர் தளத்தைப் பயன்படுத்துவதை ஒட்டி
இருக்கும்.”
சீனாவின் சந்தைகள் அமெரிக்கா மற்றும் பிற வெளிநாட்டு
நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும்,
பெய்ஜிங்
தன் நாணயத்தின் மதிப்பு உயர்வதை அனுமதிக்க வேண்டும் என்று
கிளின்டன் வலியுறுத்தினார்.
உட்குறிப்பாக சீனா தென் சீனக் கடலில் தன் நில உரிமைகளைக் கைவிட
வேண்டும்,
அதன்
இராணுவ விரிவாக்கத்தைக் கைவிட வேண்டும் மற்றும் அமெரிக்காவின்
உலக மேலாதிக்கத்திற்குத் தாழ்ந்து நிற்க வேண்டும் என்றும் அவர்
கூறினார்.
உடன்பாடுகளின் வலையமைப்புகளைப் பற்றியும் அரச செயலர் கூறினார்—இவை
ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் மையம் கொண்டுள்ளன,
அமெரிக்காவானது இந்தியா,
இந்தோனோசியாவுடன் கொண்ட நெருக்கமான உறவுகளிலும் மையம்
கொண்டுள்ளன.
இவற்றைத்தான் வாஷிங்டன் பலப்படுத்தி இணைத்து,
சீனா அதன்
வளரும் பொருளாதார வலிமையை அரசியல்,
இராணுவச்
செல்வாக்காக மாற்றாமல் இருக்கத் திறமையுடன் தடுத்து வருகிறது.
அக்கட்டுரையில் உலகத்தை அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார,
அரசியல்,
இராணுவரீதியாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதானது,
ஒபாமா
நிர்வாகத்தின் பார்வையில் ஆஸ்திரேலியா ஓர் உயர்ந்த
அந்தஸ்த்தைக் கொண்டுள்ளது என்பதும் கூறப்படுகிறது.
அமெரிக்க-ஆஸ்திரேலிய
உடன்பாடு
“ஒரு
பசிபிக் பங்காளித்தனத்தில் இருந்து இந்திய-பசிபிக்
உடையதாக மாற்றப்படும்,
உண்மையில்
ஒரு உலகப் பங்காளித்தனமாக மாற்றப்படும்.”
வெளியுறவு மந்திரி கெவின் ரூட் மூலமாக அரபு அரசுகள் ஒரு ஐ.நா.
“பறக்கக்
கூடாது”
பகுதியை
லிபியாவிற்கு எதிராகப் பெறுவதற்கு உடன்பாட்டைக் காண்பதில்,
ஆஸ்திரேலிய
அரசாங்கம் பங்கைக் கொண்டிருந்தது பற்றியும் கிளின்டன்
உட்குறிப்பாகக் கூறியுள்ளார்.
இது
அந்நாட்டை பேரழிவிற்கு உட்படுத்திய குண்டுத்தாக்குதல்,
இறுதியில்
கடாபி ஆட்சி அகற்றப்படுவதற்கு ஒரு போலிக் காரணத்தை அளித்தது.
லிபியா
மீது நடத்தப்பட்ட போரின் கொள்ளை மற்றும் காலனித்தன்மைகளில்
ஒன்று சீன,
ரஷியப்
பெருநிறுவனங்களில் இருந்து இலாபம் கொடுக்கும் எண்ணெய்,
எரிவாயு
இருப்புக்களின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டு அவற்றை
அமெரிக்க மற்றும் ஐரோப்பியப் பெருநிறுவனங்களுக்கு அளித்தது
என்பதாகும்.
கிளின்டனின் ஆவணத்துடைய உட்குறிப்பு ஆஸ்திரேலியாவின்
குறிப்பிடத்தக்க செயல்பாடு பசிபிக்,
இந்தியப்
பெருங்கடல் மற்றும் ஆபிரிக்காவில் சீனாவிற்கு எதிராக அமெரிக்க
நலன்களை உறுதி செய்வதில் துணை நிற்றல் என்பதாகும்.
CHOGM
முன்னர் இந்த
வாரம் பெர்த்தில் நடைபெற்ற வணிக உச்சிமாநாட்டின் குவிப்பு
ஆபிரிக்காவாக இருந்தது.
முன்னாள்
பிரிட்டிஷ் காலனிகளாக இருந்த பல ஆபிரிக்க நாடுகள்
காமன்வெல்த்திலும் உள்ளன.
முக்கிய
சர்வதேச சுரங்க நிறுவனங்களான
Rio Tinto, BHP-Billion
மற்றும் பல
ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட சுரங்கப் பெருநிறுவன
நிர்வாகிகள் சீன நிறுவனங்களுக்கு நேரடிப் போட்டி என்னும்
வகையில் ஆபிரிக்க இருப்புக்களில் அதிக முதலீடு செய்யும் தங்கள்
திட்டம் பற்றி வெளிப்படையாகப் பேசினர்.
கூட்டாட்சியில் கில்லர்ட் தலைமையிலான தொழிற் கட்சி அரசாங்கம்
மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய மாநில லிபரல் அரசாங்கமும்
நெருக்கமான ராஜதந்திர உறவுகளை பல ஆபிரிக்க நாடுகளுடன்
கொண்டுள்ளன—ஒரு
ஆஸ்திரேலிய-நைஜீரிய
வணிக,
முதலீட்டுக் குழு என்பது மிக முக்கியமான அமைப்பாக உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திராலியாவின் ஒரு பெரும் விரிவாக்க
இராணுவப் பிணைப்பானது மிகவும் முன்னேறியாதாக இருக்கிறது.நேற்று
Australian
கிளின்டனின் அறிக்கையை
“இந்தோ-பசிபிக்”
உறவாக
என்று உயர்த்திக் காட்டியது.
ஒபாமாவின்
வருகையின்போது அறிவிக்கப்படவுள்ள முக்கிய உடன்பாடு புதிய
அமெரிக்கத் தளங்களை நிறுவுதல்,
மற்றும்
ஆஸ்திரேலியாவுடன் நடவடிக்கைகளுக்கு ஏற்றம் கொடுப்பது என
இருக்கும் என அது தகவல் கொடுத்துள்ளது.
இச்செய்தித்தாள்
“ஆஸ்திரேலியப்
பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்கர்களுடன் அமெரிக்காவின் உலக
வலிமையைப் பற்றிய பரிசீலனையை ஆராய்கின்றனர்,
அதாவது
சீனாவுடைய பெருகும் இராணுவ வலிமையைச் சமாளிப்பதற்கு ஒரு
மூலோபாயத்தை எப்படி வளர்ப்பது என்பது பற்றிப் பேசுகின்றனர்”
என்று
குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கடற்படைத் தளங்கள்
மேற்கு ஆஸ்திரேலியாவில் நிறுவப்படுவது குறித்து ஒப்பந்தங்கள்
இருக்கலாம்;
இப்பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் மற்றும்
நீர்மூழ்கிக் கப்பல்கள்,
இந்தியப்
பெருங்கடலில் செயல்படுபவை,
“சீன
ஏவுகணைகளின் தாக்குதலுக்கு அப்பாற்பட்டு”
தங்களுக்குத் தேவையான பராமரிப்பு,
மறுவிநியோகங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இன்னும் பல
அமெரிக்கப் பயிற்சிகள் வடக்கு,
வடமேற்கு
ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும்;
சீனாவில்
பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான பரந்த தாதுப்பொருட்கள்,
எரிவாயு
இருப்புக்கள் நிறைந்த இடங்களும் பரிசீலிக்கப்படும்.
கான்பெர்ராவில் ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பின்
ஒபாமா வடக்கு நகரமான டார்வினுக்குச் செல்லுவார்;
அது
விரிவாகும் அமெரிக்க இராணுவ நிலைக்கான இடங்களில் ஒன்றாக
இருக்கக்கூடும்.
தொழிற் கட்சி அரசாங்கத்தன் தொடரும் செயற்பட்டியல்,
அதன்
வெளிநாட்டுக் கொள்கையின் மையத்தானத்தை மீண்டும்
அடிக்கோடிட்டுக் காட்டுகிறது--ஆஸ்திரேலிய
தொழிற் கட்சிக்குள்
ஜூன்
2010
அரசியல் வழியில் நடந்த ஆட்சி மாற்றம்,
பிரதம
மந்திரி கெவின் ரூட்டை அகற்றி கில்லர்டைப் பதவியில் இருத்தியது
குறிப்பாக இந்த அமெரிக்காவுடனான உடன்பாட்டினால் தான் வந்தது.
சீனாவிற்கு
எதிராக ஒபாமா நிர்வாகத்துடன் நிபந்தனையற்ற முறையில் இணைந்து
கொள்ளுவது குறித்து ரூட் முழு ஆதரவைக் கொடுக்கவில்லை—சீனாவோ
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வணிகப் பங்காளியாக
வந்துவிட்டிருந்தது, மிக அதிக வெளிநாட்டு முதலீட்டைக் கொண்ட
நாடு என்ற திறனையும் கொண்டாதாக ஆகியது. மாறாக அவர் ஆஸ்திரேலிய
முதலாளித்துவம் இரு சக்திகளுக்கும் இடையே “ஆசிய பசிபிக்
சமூகத்தின் மூலம்” மத்தியஸ்தர் பங்கைக் கொள்ள வேண்டும் எனக்
கருதினார். ஆட்சி மாற்றத்திற்குச் சற்று முன்னர், ரூட்டும்
அவருடைய பாதுகாப்பு மந்திரியும் ஆப்கானிஸ்தானில் நடக்கும்
போருக்கான ஆஸ்திரேலிய ஆதரவு குறித்து ஊசலாடினர்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்கத் தூதரகத் தகவல் ஆவணங்கள்
ஒபாமா நிர்வாகம் எந்த அளவிற்கு ரூட்டின் சர்வதேச ராஜதந்திர
உறவுகளின் முயற்சிகள் மற்றும் வாஷிங்டனிலிருந்து ஒரு சுயாதீன
நிலைப்பாட்டை மேற்கொள்ள அவருடைய தற்காலிக முயற்சிகள் பற்றிக்
கொண்டிருந்த ஆழ்ந்த சீற்றம் மற்றும் விரோதப்போக்கு ஆகியவற்றைத்
தெரிவிக்கின்றன.
ரூட் பிரதம
மந்திரியாக இருந்தபோது இரண்டு முறை ஆஸ்திரேலியாவிற்கு வருகை
புரிவதைக் குறிப்பாக ஒபாமா ரத்து செய்திருந்தார்.
ஆஸ்திரேலிய வெளியுறவுக் கொள்கையின் திசைக்கு அமெரிக்க
எதிர்ப்பு என்பது தொழிற் கட்சி அரசாங்கத்தின் காலம் முழுவதும்
அமெரிக்கத் தூதரக
“ஆதாரங்களால்”
தெரிவிக்கப்பட்டது;
இவற்றுள்
தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகார இடைத்தரகர்கள் மார்க்
அர்பிப்,
பில்
ஷார்ட்டன் மற்றும் பால் ஹௌஸ் ஆகியோர் இருந்தனர்.
இவர்கள்
ஜூன்
23, 2010ல்
நடந்த ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதில் முக்கிய பங்கைக்
கொண்டிருந்தனர்;
இது
ஆஸ்திரேலிய மக்களின் ஆதரவு இன்றி நடந்தது மட்டுமின்றி
பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மை தொழிற் கட்சி
உறுப்பினர்களின் ஆதரவற்றும் நடைபெற்றது.
ஒரு
சர்வாதிகார
ஒலிக்குறிப்புக்களைக் கொண்டிருந்த நிகழ்வு,
கில்லர்டைச் சுற்றி அரசியல் நெறியற்ற தன்மை என்னும் நிரந்தர
துர்நாற்றத்தை விட்டுச் சென்றுள்ளது;
24 மணி
நேரத்திற்குள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி
அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டார்.
அதிகாரத்தை
எடுத்துக் கொண்ட உடன்,
கில்லர்ட்
தன் முழு ஆதரவையும் ஆப்கானியப் போருக்கும் அமெரிக்காவுடனான
உடன்பாட்டிற்கும் அறிவித்தார்.
இதன் விளைவுகள் இப்பொழுது தெளிவாகியுள்ளன.
ஆஸ்திரேலிய
நிதிய மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் சார்பில் தொழிற் கட்சி
அரசாங்கம்,
கன்சர்வேடிவ் எதிர்க்கட்சி மற்றும் பசுமைவாதிகளின் முழு மௌனம்
என்ற ஆதரவிற்கு இடையே சீனாவுடன் ஆக்கிரோஷமான மோதல் என்னும்
போக்கை நிர்ணயித்துள்ளது.
ரூட்டிற்கு
எதிரான ஆட்சிமாற்றம் போலவே,
இச்செயற்பட்டியலும் ஆளும் வட்டங்களுக்குப் புறத்தே எந்த
விவாதமும் கருத்துப் பறிமாற்றமும் இல்லாமல்
செயற்படுத்தப்படுகிறது.
இது
ஆஸ்திரேலியா,
அப்பிராந்தியம் மற்றும் உலகையே ஒரு பேரழிவுப் போருக்கு
இழுத்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. |