WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Occupy Wall Street: The ISO promotes the
unions against workers’ interests
வோல்
ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக ISO
தொழிற்சங்கங்களுக்கு ஆதரவைக் கொடுக்கிறது
By David Walsh
28 October 2011
சர்வேதேச
சோசலிச
அமைப்பு
என்னும் ISO
பரந்த
அரசியல் பிரிவுகள் அனைத்திலும் அமெரிக்கத்
தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக தளராமல்
வாதிடும்
பிரிவுகளில்
ஒன்றாகும்.
சமூகச்
சமத்துவமின்மைக்கு
எதிராக
வோல்
ஸ்ட்ரீட்
ஆக்கிரமிப்பு
எதிர்ப்புக்கள்
வெடித்ததில்
இருந்தே, ISO
தொடர்ச்சியாக
இந்த
இயக்கம்
தொழிற்சங்கங்களின்
ஆதரவை
நாட
வேண்டும்
என்று
வாதிட்டு
வந்துள்ளது;
மேலும்
நடைமுறையில்
அவற்றின்
தலைமையை
ஏற்க
வேண்டும்
என்றும்
கூறுகிறது.
இந்த
விவாதத்தின்படி,
தொழிற்சங்கங்க அமைப்புகளுடன்
தொடர்பு என்பது
தொழிலாளர்
வர்க்கத்துடன் வலுவான
உறவுகளை
நிறுவுதல்
என்று
பொருள்படும்.
உதாரணமாக,
அக்டோபர் 5ம்
தேதி
வெளிவந்த ISO/Socialist Worker
தலையங்கம்
ஒன்று,
“முக்கிய
தொழிற்சங்கங்கள்
நுழைந்துள்ளது….
ஆக்கிரமிப்பு
இயக்கத்திற்கு
அதன்
சமூக
வேர்களை
ஆழ்மைப்படுத்தும்
சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது”
என்று
வலியுறுத்துகிறது.
அக்டோபர் 6ம்
திகதி
Socialist Worker
தலையங்கம் ISO
உறுப்பினர்
டௌவ்
சிங்சன், “தொழிற்சங்கங்கள்
மற்ற
நகரங்களிலும்
ஆக்கிரமிப்புடன்
பிணைந்து
கொண்டால்,
இந்த
இயக்கம்
முழுவதுமே
பெரிய
விடயமாக தீவிரமாகும்”
என்று
கூறியதை
மேற்கோளிட்டுள்ளது.
அதன்
அக்டோபர் 12
தலையங்கத்தில், Socialist Worker
மீண்டும்
இப்பிரச்சினையை
எழுப்பி, “ஆக்கிரமிப்பில்
ஈடுபட்டுள்ளவர்கள்
தொழிலாளர்
வர்க்கத்தை
அணுகித்
தங்கள்
ஐக்கியத்தை வெளிப்படுத்துவது
முக்கியமாகும்”
என
அறிவித்தது.
அதே
வலைத்தளத்தில்
அக்டோபர் 25ம்திகதி
வந்த
கட்டுரையில்
உந்துதல்
அதன்
தலைப்பான “வோல்
ஸ்ட்ரீட்
ஆக்கிரமிப்பு
தீவிரமாதல்
தொழிலாளர்களுடன்
பிணைகிறது”
என்பதில்
குறிப்புக்
காட்டப்படுகிறது;
இக்கட்டுரை
பெயரிடப்படாத
“ஆக்கிரமிப்பாளர்கள்”
தொழிற்சங்கங்களை
அணுகுவதற்கான
முயற்சிகளில்
ஈடுபட்டுள்ளதைப்
பாராட்டுகிறது.
அமெரிக்காவிலுள்ள
முழுப்
போலி
இடதுகளாலும்
ஏற்கப்படும் இத்தகைய
காரணம்
கற்பிக்கப்படாத கருதுகோள்,
வலுவற்ற அல்லது தற்பொழுது
போதிய
தலைமை
இல்லாவிடினும்கூட, AFL-CIO
மற்றும் Change to Win
கூட்டமைப்புக்களும்
அவற்றின்
உள்ளூர்ப்
பிரதிநிதிகளும்தான்
நெறியான
தொழிலாளர்
வர்க்க
அமைப்புக்கள்
என்பது
ஆகும்.
இங்கு
ISO
பெரும்பாலும்
இளைஞர்களைக்
கொண்ட
வோல்
ஸ்ட்ரீட்
எதிர்ப்பு
ஆர்ப்பாட்டக்காரர்களின்
அரசியல்
அனுபவமின்மையைக்
கருத்திற்
கொண்டிருப்பதுடன்,
மக்களுடைய
சிந்தனைப்போக்கில்
இருக்கும்
தவிர்க்கமுடியாத
தேக்க
நிலை,
பின்தங்கும்
நிலை
இவற்றையும்
கணக்கில்
கொள்ளுகிறது. “தொழிற்சங்கம்”,
“தொழிலாளர்”
என்னும்
சொற்களை ISO
மற்றும்
பிற
இடது
என
அழைக்கப்படும்
அமைப்புக்கள்
பயன்படுத்துவது,
வேண்டுமென்றே 1930களில்
இருந்து 1970
களின்
முற்பகுதிவரை
நிகழ்ந்த
வெகுஜனப்
போராட்டங்களை பற்றியும்,
வேலைநிறுத்தக்காரர்களுக்கும்
பொலிசாருக்கும்
இடையே,
மற்றும்
நிறுவனம்
கூலிக்கு
அமர்த்திய
குண்டர்களுக்கும்
இடையே
நிகழ்ந்த
கடும்
மோதல்கள், அதே
போல்
பொதுவாக
பெருவணிகம்
மற்றும்
அரசியல்
நடைமுறைக்கு
எதிரான
பரந்த
சமூக
இயக்கத்துடன்
தொடர்புடைய
நிகழ்வுகளின்
பற்றிய
தோற்றங்களை
முன்கொண்டுவரும் நோக்கம்
உடையது.
ஆனால்
தற்பொழுதைய
யதார்த்தநிலையுடன்
இது
ஒன்றும்
பொருத்தமானது
அல்ல.
சமீபத்திய
தசாப்தங்களில்
உலகப்
பொருளாதாரம்
பூகோளந்தழுவிய
நிலையில்
இருப்பது,
எல்லாவற்றிற்கும்
மேலாக
தேசிய
அரசுகளை அடித்தளமாக கொண்ட
தொழிலாளர்
அமைப்புக்களின்
முயற்சிகளைச்
செயலற்றவையாகவும்,
பிற்போக்குத்தனமாகவும்
ஆக்கிவிட்டது. AFL-CIO
உம் அதன் பிரிந்துபோன அமைப்பான
Change to Win
உம்
அந்த மாற்றத்தை கடுமையாக எதிர்க்கின்றன. தேசியத்
தீவிர
உணர்வு
மற்றும்
பெருநிறுவன
வர்க்க
கூட்டுழைப்பினால்
முழுதும்
நிறைந்துபோன அமெரிக்கத்
தொழிற்சங்கங்கள்
பல
தசாப்தங்களுக்கு
முன்பே
அவற்றின்
துரதிருஷ்டவசமாக
உறுப்பினர்களின்
நலன்களையும்
உரிமைகளையும்
பாதுகாப்பதைக்
கைவிட்டுவிட்டன.
அமெரிக்காவில்
உள்ள
தொழிற்சங்கங்கள்
கௌரவமான
வேலைகள்,
வாழ்க்கத்தரங்கள்
இவற்றின்
துரிதமான வீழ்ச்சிக்குத்தான்
வழிவகுப்பதுடன் தலைமை
தாங்குகின்றன
என்பதோடு
தற்பொழுதைய
எதிர்ப்பு
இயக்கத்தைத்
தூண்டியுள்ள
அவற்றின்
சமூகச்
சமத்துவமின்மையின்
வளர்ச்சிக்கும்
உதவுகின்றன.
சராசரி
அமெரிக்க
இல்ல
வருமானம்
மந்தநிலையின்
உத்தியோகப்பூர்வ ஆரம்பமான டிசம்பர்
2007ல்
இருந்து 2011
ஜூன்
வரை
நான்கு
ஆண்டுகளுக்குள் 9.8%
சரிந்துவிட்டது
என்று
காட்டும்
ஒரு
சமீபத்திய
அறிக்கை,
தற்பொழுதுள்ள “தொழிலாளர்
இயக்கம்”
முதலாளித்துவத்தின்
கொள்ளைமுறைகளில்
இருந்து
தொழிலாளர்
வர்க்கத்தைக்
பாதுகாப்பதில்
எப்படிச்
சிறிதும்
மதிப்பற்றது
என்பதின்
அடையாளம்
ஆகும்.
இப்பொழுது
அமெரிக்கத்
தொழிற்சங்கங்கள்
தங்கள்
உறுப்பினர்களைக்
கண்காணிக்கத்தான்
உதவிசெய்கின்றன. காட்டிக்கொடுக்கப்பட்ட
ஒப்பந்தங்களைச்
சுமத்தி,
தங்கள்
சொந்த
அதிகாரத்துவத்தைச்
செல்வக்
கொழிப்புடையதாக
மாற்றி,
தங்களைக்
குறைகூறுவோர்மீது
சொற்களாலும்,
உடல்ரீதியாகவும்
தாக்குதலையும்
நடத்துகின்றன.
அவை
வணிக
அமைப்புக்களாகிவிட்டன;
முற்றிலும்
பெருநிறுவன
அமெரிக்காவுடன்
தங்களை
அடையாளம்
கண்டு
கொண்டு,
தொழிலாளர்களை
தற்பொழுதைய
அரசியல்
அமைப்புமுறைக்குத்
அடிபணியவைக்கின்றன. இதற்காக
அவை
ஜனநாயகக்
கட்சிக்கு
தங்கள்
ஆதரவைக்
கொடுக்கின்றன
(இன்னும்
சமீபத்தியக்
காலத்தில் 2012
ஒபாமா
மறுதேர்தல்
முயற்சிக்கு
உதவுகின்றன).
அகமகிழ்ச்சிகொண்ட,
நல்ல
வசதியான நிலையில்
இருக்கும் 6
இலக்க
வருமானங்களைக்
கொண்ட
அதிகாரிகள்,
முதலாளிகளுடனும்
அரசாங்கத்துடனும்
பின்கதவு வழியாக
உடன்பாட்டைக்
கொண்டவர்கள்
என்ற
இந்தத்
தோற்றம்தான்
இப்பொழுது “தொழிற்சங்கம்”
“தொழிலாளர்”
என்ற
சொற்கள் ISO
வின்
கட்டுரைகளை,
பேச்சுக்களில்
வரும்போது
மனத்திற்கு
தோன்றுகின்றது. (இந்த
முகங்களைப்
பார்க்கவும்,
அவர்களுடன்
தொடர்புடைய
வருமானங்கள்
பற்றிய
விசாரணையின் அக்கறையற்றவர்களால்
http//aflcio.com/ aboutus/
thisistheaflcio/leaders/ecmembers.cfm
என்ற
இணையத்தினை பார்ப்பது உதவும்).
இருக்கும்
தொழிற்சங்கங்களில் “இடது
என்பதின்
நோக்கமே தொழிலாளர்
வர்க்கத்திற்கு
புறநிலையாக விரோதமான
அமைப்புக்களை
வளர்ப்பதுதான்;
அதேபோல்
பெரு
வணிகம்
மற்றும்
இரு
கட்சி
முறைக்கு
எதிரான
எழுச்சியைக்
காண
வேண்டும்
என்று
நினைப்பவர்களிடைய
மரணபயத்தை
ஏற்படுத்துவதும்தான்.
தற்பொழுதைய இந்த பின்னணியில்தான்
ISO
செயல்படுகிறது. இது
அதன்
உயர் மத்தியதரவர்க்க
கலவை,
சார்பு
இவற்றுடன்
இயைந்து
உள்ளதுடன், ஒரு
அரசியல்
வடிகட்டி அல்லது இடைத்தாங்கி போல்தான்
அது
செயல்படுகிறது. AFL-CIO
மற்றும்
பிற
தொழிற்சங்கங்கள்
தமது
அங்கத்தவர்களாகவும், அங்கத்தவர்களற்ற பெருநிறுவன
அமெரிக்கா
தொழிலாளர்களை வறிய
நிலைக்குத்
தள்ளுவதற்கும்,
பெருவணிகத்தின்
ஜனநாயகக்
கட்சியை
வளர்ப்பதற்கும்தான்
செயல்படுகின்றன. அக்கட்சிக்குத்தான்
இவை
பல
மில்லியன்
கணக்கான
உறுப்பினர்கள்
கட்டணத்தை
நன்கொடையாக
வழங்குகின்றன.
இதற்கிடையில் ISO,
குறிப்பாக
மாணவர்,
இளைஞர்கள்
பிரிவுகளுக்கு
அழைப்பு
விடுகையில், “கட்டுக்கதை”
இயற்றுவதில்
ஈடுபடும்
பொது
உறவுகள்
நிறுவனம்
போல்
செயல்பட்டு
தொழிற்சங்கங்கள்
நம்பகத்தன்மை
உடைய
முற்போக்கான
அமைப்புக்கள்
என்ற
சித்திரத்தைத்
தீட்டுகிறது.
பொதுவாக
சாதாரணத்
தொழிலாளர்களின்
நலன்களைத்
தொடர்கிறது,
எவ்வாறான வேறுபட்ட முன்னுரிமைகளின்
தேவைகளிலும் நிட்சயமாக இதைத்தான்
முக்கியமாகக்
கொண்டுள்ளது
என்கிறது.
இவ்விதத்தில்
ISO
வோல்
ஸ்ட்ரீட்
எதிர்ப்புக்கள்
இன்னும்
அதே
போன்ற
கூட்டங்களில்
கணக்கிலடங்கா
முக்கியத்
தொழிற்சங்க
அதிகாரிகளின்
வெற்றுக்
கருத்துக்களை
மேற்கோளிடுகிறது.
ஆனால்
இதே
நபர்கள்
தங்கள்
அமைப்பின்
உறுப்பினர்கள்
மீது
வெட்டுக்களைச்
சுமத்துதல்
மற்றும்
தாக்குதல்கள்
பற்றிய
புள்ளிவிவரங்களை
முற்றிலும்
கூறாமல்
விட்டுவிடுகிறது.
வோல்
ஸ்ட்ரீட்
ஆக்கிரமிப்பு
எதிர்ப்புக்களில்
தோன்றும்
பல
அமெரிக்கத்
தொலைத்தொடர்பு
தொழிலாளர்கள்
நிர்வாகிகள்(CWA- Communication
Workers of America)
பற்றியயும் மற்றும்
இக்கோடைகாலத்தில்
வெரிஜோன்
(Verizon)
வேலைநிறுத்தத்தில்
அவர்களின்
முக்கிய
பங்கு
தெளிவான உதாரணமாகும். CWA
தலைவர்கள்
ஆகஸ்ட்
மாதம்
இரண்டு
வாரங்கள் 45,000
வெரிஜோன்
ஊழியர்கள்
வெளிநடப்புச்
செய்திருந்த
வேலைநிறுத்தத்தைத்
திடீரென
நிறுத்தி
விட்டனர். அதே
நேரத்தில்
நிறுவனம்
தொடர்ந்து
பல
விட்டுக்கொடுப்புகளை தொழிலாளர்களிடம்
இருந்து
கோருவதை நிறுத்தும்
வகையில்
செயல்படவில்லை,
தொழிலாளர்களுக்கு
ஆதரவான
எந்தப்
புதிய
ஒப்பந்தத்தை
நிறுவனத்துடன்
செய்துகொள்ளுவதிலும்
தோற்றது. AFL-CIO
தரங்களின்
அடிப்படையில்கூட
இந்தக்
காட்டிக்
கொடுப்பு
அதன்
இழிந்த,
திமிர்த்தன்மையில்
தன்
உறுதியைக்
காட்டியது.
நம்பகத்தன்மை
தமக்கு
தேவை
என்ற
தீவிரமான நிலையில் உள்ள CWA
தலைவர்கள்,
வோல்
ஸ்ட்ரீட்
எதிர்ப்பு
ஆர்ப்பாட்ட
அணிவகுப்புக்களில்
பெருநிறுவனப்
பேராசையைக்
கண்டிப்பது
வசதி
என்று
காண்கின்றனர்.
இது
அவர்களுக்கு
எந்த
பொறுப்பினையும் மற்றும் இழப்பையும்
கொடுக்கவில்லை.
இத்தகைய
முறையில்
பேசுதல்
Socialist Worker, In These Times, The Nation
இன்னும்
அதே
போன்ற
வெளியீடுகளில்
ஆதரவுடன்
மேற்கோளிடப்படுகின்றன.
அக்டோபர்
6ம்
திகதி
Socialist Worker,
CWA
பிராந்தியம்-1
சட்ட/அரசியல்
இயக்குனரான
பாப்
மாஸ்டரை
மேற்கோளிட்டது;
அவர்
வோல்
ஸ்ட்ரீட்
ஆக்கிரமிப்பு
எதிர்ப்பாளர்களிடம்
அவர்களுடைய
இயக்கம் “ஜனநாயகம்
எப்படி
இருக்க
வேண்டுமோ
அப்படி
உள்ளது”
என்றார்.
வெரிஜோன்
காட்டிக்கொடுப்பில்
பாப்
மாஸ்டர்
கொண்டிருந்த
பங்கினை நாம்
குறிப்பிட்டிருந்தோம் (பார்க்கவும்-
“The Nation, ISO seek to channel Wall Street protests back
to the Democratic Party”);
மேலும்
நாம்
, “விட்டுக்கொடுப்புக்கள்
மற்றும்
வேலைக்
குறைப்புக்களை
விரோதப்
போக்கான உறுப்பினர்களின்மீது சுமத்துவதுதான்
CWA
க்கு
ஜனநாயகம்
எப்படி
இருக்க
வேண்டும் என்பது
போலும்.”
என்றும்
எழுதியிருந்தோம்.
“OWS
தொழிலாளர்களுடன்
கொள்ளும்
உறவினை
ஆழமாக்கல்”
என்ற
கட்டுரையில் ISO/Socialist Worker
இன்னும்
ஒரு
படி
மேலே
செல்லுகிறது.
அக்கட்டுரை
அக்டோபர் 20ம்
திகதியன்று
எதிர்ப்பு
இயக்கம் “வெரிஜோன்
தொழிலாளர்களின்
போராட்டத்தில்
தொழிலாளர்
பங்கு
பெற்றதை
விரிவாக்கியது”
என்று
குறிப்பிடுகிறது.
நூற்றுக்கணக்கான
வோல்
ஸ்ட்ரீட்
ஆக்கிரமிப்பின்
ஆதரவாளர்கள் CWA
மற்றும் International Brotherhood of
Electrical Worker-IBEW
தொழிற்சங்கம் ஆகியவை மான்ஹட்டன்
கீழ்ப்பகுதியில்
வெரிஜோன் தலைமையகத்தின் முன்
நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில்
பங்கு
பெற்றனர்
என்று
அக்கட்டுரை
கூறுகிறது.
வேறுவிதமாகக்
கூறினால்,
இந்த
“தொழிலாளர்
பங்கு
பெறுதலின்” “விரிவாக்கம்”
CWA
மற்றும் IBSW
ஆகியவை
இளம்
எதிர்ப்பாளர்களின்
ஒரு
பிரிவை
வெரிஜோனில்
இழிந்த
முறையில்
தொழிற்சங்கங்கள்
செய்த
துரோகத்தில்
இருந்து
கவனத்தைத்
திசைதிருப்பும்
தந்திர
நடவடிக்கை
ஆகும்.
எப்படியும்,
வெகு
சிலரே
இதற்கு
ஆதரவு
கொடுத்தனர்.
(நேஷன்
இதழ்
மிகக்குறைந்த
எண்ணிக்கையில்தான்
எதிர்ப்பாளர்கள்
பங்கு
பெற்றது
குறித்து
அமைப்பாளர்கள் “ஏமாற்றம்
அடைந்தனர்”
என்று
குறிப்பிட்டுள்ளது.) CWA-IBEW
அணிவகுப்பு
முக்கியமாகத்
தொழிற்சங்க
அதிகாரிகள்,
அதிகார
அமைப்பிற்கு
நெருக்கமான
தொழிலாள்கள்
மற்றும் “இடது
குழுக்களில்”
தொழிற்சங்கங்களுக்கு
ஆதரவு
கொடுப்பவர்களைத்தான்
கொண்டிருந்தது.
பல
வோல்
ஸ்ட்ரீட்
எதிர்ப்பாளர்கள்
தொழிற்சங்கத்
தலைவர்கள்மீது
ஒரு
காத்திரமான,
இயற்கையாகவே அவநம்பிக்கையைத்தான்
கொண்டுள்ளனர். இதுதான்
ISO
வின்
தொடர்ச்சியான,
சற்றே
ஆத்திரமுற்ற குரலை
விளக்குவதற்கு
உதவுகிறது.
இதற்காகக்
கலக்கம்
அடையாமல், Socialist Worker ,
CWA
உடைய
துணைத்
தலைவர்
கிறைஸ்
ஷெல்டன்
அக்டோபர் 20
கூட்டத்திற்கு
வந்தவர்களிடம்
வெளியிட்ட
கருத்தை
கடமையுடன் மேற்கோளிடுகிறது: “இந்நாட்டில்
பெருநிறுவனப்
பேராசையின்
முழு
அடையாளம்தான்
வெரிஜோன்.”
இந்த
ஷெல்டன்தான்
ஆகஸ்ட்
21, 2011ல்
CWA
வெரிஜோனில்
காட்டிக்
கொடுக்கையில், “செவ்வாயன்று
நாம்
மீண்டும்
வேலைக்குச்
செல்லுகிறோம்.
அங்கே
அமர்வோம்.
தங்கள்
சொற்களைக்
காப்பாற்றாவிட்டால்,
நமக்கு
மீண்டும்
வெளிநடப்பு
செய்யும்
உரிமை
உண்டு
என்பதை
அவர்களுக்கு
எடுத்துக்கூறி பேரம்
பேசுவோம். முன்பு
அதைத்தான்
செய்தோம்,
இனி
இன்னும்
அதிகம்
மோசமானதாக இருக்கும்”,
என கூறினார்.
இரண்டரை
மாதக்
காலத்திற்குப்
பின்
CWA
உடைய
பாப்
மாஸ்டர்
நேஷன்
இதழிடம்,
வெரிஜோன்
அதிகாரிகள் “
நாம்
வேலைநிறுத்தம்
செய்யத்
துவங்கியபோது
கொண்டிருந்த
அதே
நிலைப்பாடு
போல்தான்
இப்பொழுதும்
கொண்டுள்ளனர்”
என்று
ஒப்புக்
கொண்டார்.
தொழிற்சங்கங்கள்
ஏற்கனவே
அவற்றின்
ஒரே
தீவிர
ஆயுதமான
வேலைநிறுத்த
நடவடிக்கையைக்
கைவிட்ட
நிலையில்,
பெருநிறுவன
அதிகாரிகளை
எவர்
குற்றம்
கூறமுடியும்?
தவறாகப்
பெயரைக்
கொண்டுள்ள
Socialist Worker
ஆகஸ்ட்
வேலைநிறுத்தம்
விற்கப்பட்டது
குறித்து
எதுவும்
எழுதவில்லை.
அதேபோல்
வெரிஜோன்
தொழிலாளர்களுக்கு CWA, IBEW
இரண்டும்
அவர்கள்மீது
சுமத்த
இருக்கும்
உழுத்துப்போன ஒப்பந்தம்
பற்றியும்
எச்சரிக்கை
ஏதும்
கொடுக்கவில்லை.
முக்கிய
செய்தி
ஊடகங்கள்
மற்றைய
விடயங்களுடன் சேர்த்து தற்பொழுதைய
இயக்கம்
கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவரப்பட
முடியும்
என்று
உத்தரவாதம்
அளிக்க
முனையும் நிலையில்,
வோல்
ஸ்ட்ரீட்
ஆக்கிரமிப்பு
இயக்கம்
குறித்து
தொழிற்சங்கங்கள்
என்ன
நிலைப்பாடு
கொண்டுள்ளார்கள்
என்பதைப்
பற்றிய
இன்னும்
அப்பட்டமான,
நேர்மையான
மதிப்பீடு
கிடைக்கிறது (அதன்
விரிவாக்கமாக, ISO
என்ன
செய்ய
முற்படுகிறது
என்பதும்
தெரிகிறது).”
Washington Post
அக்டோபர் 20
இல் (“வோல்
ஸ்ட்ரீட்
ஆக்கிரமிப்பு,
தொழிற்சங்கங்கள்
தங்கள்
செயல்களை ஒன்றாக
இணைக்கின்றன),
தொழிற்சங்கங்கள் “அலுவலக
இடம்,
கூட்ட
அரங்குகள்,
நகல்
எடுக்கும்
பணிகள்,
சட்டப்பூர்வ
உதவி,
உணவு
இன்னும்
எதிர்ப்பாளர்களுக்குத்
தேவையான
மற்றவற்றைக்
கொடுக்கின்றன”.
பொதுவாக “தடையற்ற,
அமைப்புமுறைச்
சாராத்
தன்மை
எனப்
பெருமை
கொண்டிருக்கும்
இயக்கத்திற்கு
சில
நிறுவனத்
தன்மைகளைக்
கொடுக்கின்றன.”
அவ்விடயத்தின் மையத்தானத்திற்கு
வருகையில்,
எதிர்ப்புக்களை
ஜனநாயகக்
கட்சிக்கு
ஆதரவாக
மாற்றும்
தொழிற்சங்கங்களின்
முயற்சியில்
போஸ்ட்
தொழிற்சங்கங்களுக்கும்
வோல்
ஸ்ட்ரீட்
ஆக்கிரமிப்பு
இயக்கத்திற்கும்
இடைய
“நயமான
உணர்வுகள்
நிறைந்த”
உறவைச்
சுட்டிக்
காட்டுகிறது: “ஆக்கிரமிப்பு
ஆர்வலர்கள்
புதிய
இயக்கத்தை
தேர்தல்
பிரச்சாரங்களில்
தொழிலாளர்களின்
வாக்குகளைப்
பெற
முயலும்
புதிய
இயக்கமாக
மாற்றும்
முயற்சியை
நிராகரிக்கவில்லை
என்பதைத்தான்
தெளிவாக்கியுள்ளனர். 2008ம்
ஆண்டில்
தொழிற்சங்கங்கள்
ஒபாமா
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு
தொழிலாளர்களைத்
திரட்டுவதில்
உதவின.
ஒபாமா
நிர்வாகத்துடன்
பல
விரக்திகள் இருந்தபோதிலும்கூட,
தொழிற்சங்கங்கள்
மீண்டும்
அதே
போக்கைத்தான்
அடுத்த
ஆண்டும்
காட்டும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.”
Service Employees Internal
Union
இன்
நிர்வாகக்
குழுத்
துணைத்
தலைவரும், 1199 SEIU (சகாதாரப்
பாதுகாப்புத்
தொழிலாளர்கள்)
அமைப்பின்
தலைவருமான
ஜோர்ஜ்
கிரெஸ்காமை போஸ்ட்
குறிப்பிடுகிறது;
அவர்
“வோல்
ஸ்ட்ரீட்
ஆக்கிரப்பாளர்களுடன்
ஒருங்கிணைந்து
செயல்படுவது
இறுதியில்
ஆர்வலர்களை 2012
தேர்தலில்
குவிப்புக்
காட்ட
வைக்கும்”
எனக்
கூறியிருந்தார். “நாம்
இப்பொழுது
வாழும் உலக யதார்த்ததின்படி,
இன்னும்
ஒன்றரை
ஆண்டுகளில்
ஒரு
தேர்தல்
நடக்க
உள்ளது,
நாட்டை
வழிநடத்த
அத்தேர்தல்
மூலம்
ஒருவர்
வெளிப்படுவார்”
என்றும்
அவர்
கூறினார்.
American Federation of
State, County and Municipal Employees
கூட்டமைப்பின் தலைவரான
கேரால்ட்
மக்என்டி
போஸ்ட்டிடம்
தன்னுடைய
தொழிற்சங்கம்
மீண்டும் $100
மில்லியனை
ஒபாமா,
ஜனநாயகக்
கட்சியனருக்குச்
செலவழிக்கத்
திட்டமிட்டுள்ளது
என்றார். “ஆர்வலர்கள்
தங்கள்
ஆற்றலைப்
பிரச்சாரத்தில்
ஈடுபடுத்துவர்
எனத்
தான்
எதிர்பார்ப்பதாகவும்
அவர்
கூறினார். ‘வேறு
என்ன
மாற்றீடு
உள்ளது?’
என்றும்
அவர்
கேட்டார்.”
AFL-CIO
வின்
ரிச்சர்ட்
ட்ரும்கா
தொழிற்சங்கங்கள் “ஆர்வலர்களை
முழுவதும்
வழிநடத்த
முயலாது”
என்று
வலியுறுத்தினார். “இது
ஒரு
முறையாக
அமைக்கப்பட்டுள்ள
இயக்கம்,
எந்த
வகையிலும்
அதை
நாங்கள்
பயன்படுத்திக்
கொள்ள
விரும்பவில்லை”
என்றார்
அவர்.
“அத்துடன்
நாங்களும்
கூடவே
செல்லுகிறோம்.”
இருந்தாலும்
ட்ரும்காவின்
சமீபத்திய
நிகழ்ச்சிப்
பட்டியில்
நடைமுறைக்கும்
நடைமுறை
எதிர்ப்பிற்கும்
இடையே
ஒரு
சமசீர்
நிலை
காண்தல்
என்னும்
சவாலை
எதிர்கொண்டிருப்பதை
விளக்குகிறது.
இரண்டு
வாரங்களுக்கு
முன்பு
அவர்
ஆக்கிரமிப்பு
ஆர்வலர்களுக்கு
மகிழ்ச்சி
தரும்
வகையில்
நேரடி
வருகை
புரிந்து
தின்பண்டங்களை
நூற்றுக்கணக்கில்
வினியோகித்தார்.
ஆனால்
இந்த
வாரம்
அவர்
ஒரு
ஆளுமதட்டின் உள்ளாளரான நிதி
மந்திரி
டிமோதி
எப்.
கீத்னர்
உடன்
தனிப்பட்ட பேச்சுக்களை
நடத்தினார்.”
இதுதான்
மிகத்துல்லியமாக
சுருக்கிக்
கூறப்பட்டதாக இருக்கும்.
ஆளும்
உயரடுக்கின் நலன்களுக்கான அரசியல்
சூழ்ச்சி கையாள்கை நிகழ்போக்கு என்பது
வெள்ளை
மாளிகையில்
துவங்கி, AFL-CIO
இன்னும்
ஏனைய
தொழிற்சங்கங்கள்
ஊடாக
கடந்து
Socialist Worker
கட்டுரைகளிலும்
பக்கங்களிலும்
முடிவடைகிறது. |