சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : துனிசியா

Islamists claim victory in Tunisia’s Constituent Assembly elections

துனிசியாவில் அரசியலமைப்புச் சட்ட மன்றத் தேர்தல்களில் இஸ்லாமியவாதிகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றனர்

By Kumaran Ira and Alex Lantier
28 October 2011

use this version to print | Send feedback 

ஞாயிறன்று 217 உறுப்பினர்கள் அடங்கிய அரசியலமைப்புச் சட்டமன்றத்திற்கு 217 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க துனிசியா தேர்தல்களை நடத்தியது. இம்மன்றம் ஓராண்டிற்குள் ஒரு புதிய அரசியலமைப்பை இயற்றும் பணியைப் பொறுப்பாகக் கொள்ளும். இச்சட்டமன்றம் ஒரு புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைத்து, ஒரு ஜனாதிபதியையும் தேர்ந்தெடுக்கும்; இவர்கள் அடுத்த ஆண்டுக் கடைசியில் திட்டமிடப்பட்டுள்ள பொதுத்தேர்தல் வரை பதவியில் இருப்பர்.

அரசியலமைப்புச் சட்டமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள நோக்கம் ஒரு புதிய அரசியலமைப்பு மற்றும் அரசியல் ஆட்சியை துனிசியாவிற்கு வடிவமைப்பது ஆகும்; இங்கிருந்த அமெரிக்க ஆதரவுடைய சர்வாதிகாரி ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலி ஜனவரி மாதம் தொழிலாளர் வர்க்க வெகுஜன எதிர்ப்பையொட்டி நாட்டை விட்டு ஓட நேர்ந்ததுஇந்த எதிர்ப்புக்கள் ஒரு வேலையின்றி இடருற்ற கறிகாய்கள் விற்பவர் மகம்மத் பௌவஜிசி என்பவர் சிடி பௌஜித்தில் தன்னையே சமூக வறுமை, அரச அடக்குமுறை இவற்றை எதிர்த்துத் தீக்கிரையாக்கிக் கொண்டதை அடுத்துத் துவங்கின. எதிர்ப்புக்களை அடக்க பென் அலி மேற்கொண்ட முயற்சிகள் தோற்று அவருடைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தன; அவை அரபு உலகம் முழுவதிலும் எதிர்ப்புக்களைத் தூண்டின; இதில் எகிப்தில் அமெரிக்க ஆதரவுடைய சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சியும் அடங்கும்.

பென் அலிக்குப் பின் பதவிக்கு வந்த ஜனாதிபதி பௌவட் மெபாசா, பெப்ருவரி மாதம் பிரதம மந்திரி மஹம்மத் கன்னோச்சியைப் பதவியில் இருந்து அகற்றிய வெகுஜன எதிர்ப்புக்களைத தொடர்ந்து, ஆட்சியை உறுதிப்படுத்த முயலவும், வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்களை நிறுத்தவும் ஒரு சீர்திருத்த ஆணையத்தை நிறுவினார். இந்த ஆணையம் அரசியலமைப்புச் சட்டமன்றத் தேர்தலுக்கு ஏற்பாடு செய்தது. இதில் துனிசிய ஆட்சியில் நியமனம் செய்திருந்தவர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், UTICA வணிகக் கூட்டமைப்பினர், குட்டி முதலாளித்துவ முன்னாள் இடது கட்சிகளான முற்போக்கு ஜனநாயகக் கட்சி (PDP) மற்றும் எட்டஜ்டிட், முன்னாள் துனிசிய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவற்றின் உறுப்பினர்களும் இருந்தனர்.  (See “Tunisian Reform Commission defends capitalist regime”)

இக்கட்டுரை எழுதும் தருணத்தில், இறுதித் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை; 217 இடங்களில் 101 இடங்களுக்கான முடிவுகளே வந்துள்ளன. வலதுசாரி இஸ்லாமியவாதக் கட்சியான என்னஹ்டா பெரும்பான்மை வாக்கைப் பெறும் என்றும், அதைத்தொடர்ந்து மைய-இடதுகட்சிகளான எட்டாகடோல் மற்றும் CPR என்னும் குடியரசிற்கான காங்கிரஸ் ஆகியவையும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக வந்துள்ள முடிவுகளின்படி, என்னஹ்டா 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, CPR 16 இடங்களிலும், எட்டகடோல் 10 இடங்களிலும், அரிதா சாபியா (மக்கள் விண்ணப்பம்) 12 இடங்களிலும், முற்போக்கு ஜனநாயகக் கட்சி (PDP) 5 இடங்களிலும, அபேக டோனிஸ் 3 இடங்களிலும், ஹம்மா ஹம்மாமியின் மாவோயிச துனிசிய கம்யூனிச தொழிலாளர் கட்சி (PCOT) 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

வெளிநாட்டுகளில் இருந்து வரும் வாக்கை ஒட்டி என்னஹ்டா 18 இடங்களில் 9 இடங்களைக் பெற்றுக்கொண்டது; மீதி இருப்பவை எட்டக்கடோல் மற்றும் CPR க்குச் சென்றன.

பென் அலி ஆட்சியின்போது தடைசெய்யப்பட்டிருந்த என்னஹ்டா, எட்டக்கடோல் மற்றும் CPR உட்பட மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கப் பேச்சுக்களைத் துவங்கியது. 1981ல் நிறுவப்பட்டு எகிப்தின் முஸ்லிம் பிரதர்ஹுட்டின் ஊக்கத்தைப் பெற்ற என்னஹ்டா இப்பொழுது Rachid Ghannouchi யின் தலைமையை கொண்டுள்ளது; இவர் பிரிட்டனில் 22 ஆண்டுகளாக நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்தவர். தன் கட்சிக்கு துருக்கியப் பிரதம மந்திரி தாயிப் எர்டோகனின் இஸ்லாமியவாதக் கட்சியுடன் சிந்தனைப்போக்குத் தொடர்புகள் உள்ளன என்று இவர் கூறுகிறார்.

1994ம் ஆண்டு ஒரு மருத்துவரான முஸ்தாபா பென் ஜாபரால் எட்டகடோல் அமைக்கப்பட்டது. பென் அலி அகற்றப்பட்டபின் பென் ஜாபர் பிரதம மந்திரி மகம்மத் கன்னௌச்சியின் முதல் இடைக்கால அரசாங்கத்தில் பொதுச் சுகாதார மந்திரியாகப் பணியாற்றினார். துனிசிய அரசாங்கத்தில் பென் அலியின் எடுபிடிகளின் பங்குக்கு எதிரான தொடர்ந்த எதிர்ப்புக்களை ஒட்டி பென் ஜாபர் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.

குடியரசிற்கான காங்கிரஸ் என்பது மனித உரிமைகள் ஆர்வலர் Moncef Marzouki யினால் 2001ல் தோற்றுவிக்கப்பட்டது; இது பென் அலியினால் தடைக்கு உட்பட்டது. மார்ஜௌகியும் நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸுற்குச் சென்றார்; பென் அலி நாட்டை விட்டு ஓடியதும்தான் துனிசியாவிற்குத் திரும்பி வந்தார்.

இத்தேர்தல் பரந்த அளவில் மேற்கத்தையச் செய்தி ஊடகத்தால் ஜனநாயக மாற்றத்திற்கான வழிவகைசெய்யும் அரங்கு என்று ஊக்கம் அளிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இதை ஒரு முன்னேற்றகரமான முன்னோக்கிய அடிவைப்புஎனப் புகழ்ந்தார்.

உண்மையில் இந்த வலதுசாரித் தேர்தல் முடிவுகள் குளிர்காலத்தில் தொழிலாளர் வர்க்கம் மேற்கோண்ட எழுச்சியைப் பிரதிபலிக்கவில்லைஅதில் இஸ்லாமியவாதிகள் முக்கியப் பங்கு எதையும் கொண்டிருக்கவில்லை; ஆனால் இடைக்கால ஆட்சியின் வலதுசாரித்தன்மை மற்றும் செல்வாக்கற்ற சீர்திருத்த ஆணையத்தின் ஆழ்ந்த எதிர்ப்புரட்சி நோக்கங்களும்தான் பிரதிபலிக்கின்றன.

ஞாயிறன்று தேர்தல்களில் வாக்குப்பதிவு 70 சதவீத்திற்கும் மேல் இருந்தது என்று துனிசியத் தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை 4.1 மில்லியன் பதிவுசெய்யப்பட்டுள்ள வாக்காளர்களைத்தான் கணக்கில் கொள்ளுகிறது; ஆனால் மொத்தத்தில் 7.5 மில்லியன் வாக்காளர்கள் பதிவிற்குத் தகுதி படைத்தவர்கள் ஆவர்கள். உண்மையில் மொத்த வாக்காளர்களில் பாதிக்கும் மேலானவர்கள் வாக்களிப்பில் பங்கு பெறவில்லை; இது தேர்தல்கள் குறித்த வெகுஜன விரோதப் போக்கை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் அரசியல் ஸ்தாபனத்திற்கு விரோதப் போக்கையும் அடிக்கோடிடுகிறது. . (See “Tunisians distrust upcoming Constituent Assembly election)
 

இடைக்கால ஆட்சி, ஏராளமான முன்னாள் பென் அலி ஆட்சி அதிகாரிகளைக் கொண்டதும், தொழிலாளர் வர்க்கத்தின் சமூகக் கோரிக்கைகள் எதையும் பொருட்படுத்தவில்லை. சிடி பௌஜிட்டில் 24 வயது வேலையில்லாத் தொழிலாளர், கறிகாய்கள் விற்பவர், Djamai Bouallegue, பிரான்ஸின் ஸ்ராலினிச நாளேடு l’Humanite இடம், “ஜனவரி 14 முதல் நாங்கள் இன்னும் சுதந்திரமாகப் பேச முடியும் என்பது உண்மைதான், ஆனால் என் நிலைமை இன்னும் மாறவில்லைநான் எந்தக் கட்சியையும் நம்பவில்லை. நிரூபணம் இல்லாத உறுதிமொழிகளை நான் நம்பவில்லைஎன்றார்.

சிடி பௌஜிட்டில் இருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள, ஒரு 34 வயது வேலையில்லாத் தொழிலாளி, முதுகலைப்பட்டத்தை நிலவியல் அறிவித்துறையில் பெற்ற பென் மஹ்மூத் கத்ரியுடனும் l’Humanite பேசியது. அவர் தன்னுடைய குடும்பத்தின் மொத்த வருமானம் மாதம் ஒன்றிற்கு 90 தினர்கள் (45 யூரோக்கள்) என்றும் மூன்று பேருக்கு இதில் உதவி செய்யவேண்டும் என்றும்; இதில் 60 தினர்கள் (30 யூரோக்கள்) அவருடைய தந்தையின் மருந்துகளுக்குச் செலவிடப்படுகிறது என்றும் கூறினார்; அவருடைய தந்தைக்கு சுகாதாரக் பாதுகாப்பு எதையும் அரச அதிகாரம் கொடுக்கவில்லை.

கத்திரி கூறினார்; “எங்களிடம் எஞ்சிய 30 தினர்கள்தான் உள்ளன (14 யூரோக்கள்)—அதாவது 250 மில்லிம்ஸ்கள். (13 யூரோ சென்ட்டுக்கள்), நாள் ஒன்றிற்கு ஒரு நபருக்கு என. இது ரொட்டி வாங்கக்கூடப் போதுமாது அல்ல.” அவர் மேலும் கூறியது: “துனிசியப் புரட்சி சமத்துவமின்மையைப் பொறுத்தவரை எதையும் மாற்றவில்லை. வேலை என்னும் என் உரிமையைப் பெறும் வரை நான் வாக்களிக்கப் போகமாட்டேன்.”

ஆட்சிக்குத் தெளிவான இடதுசாரி எதிர்ப்பு இல்லாத சூழ்நிலையில், என்னஹடா சமூக அதிருப்தியின் ஒரே பிரதிநிதி என்று காட்டிக் கொள்ள முடிந்தது. இது சீர்திருத்த ஆணையத்திற்கு எதிராக நின்றது; அதற்கு மைய இடது குட்டி முதலாளித்துவ இடது கடசிகளான PDP, எட்டஜ்டிட் போன்றவை ஆதரவு கொடுத்தன.

சீர்திருத்த ஆணையத்தில் முதலில் பங்கு கொண்டிருந்தபின், என்னஹ்டா அதைவிட்டு ஜூன் மாதம் விலகியது; புரட்சியின் நோக்கங்கள் அடையப்படவில்லை என்று எதிர்ப்புக் காட்டிய முறையில். சீர்திருத்த ஆணையம் எடுத்த நடவடிக்கைகளுக்கு இது ஆதரவு அளித்தாலும், அவநம்பிக்கையுடன் வெகுஜன எதிர்ப்பைக் காட்டியது.

மறுபுறத்தில் PDP, Ettajdid ஆகியவற்றை வாக்காளர்கள் அவைகள் ஆட்சியுடன் ஒத்துழைத்ததால் தண்டனைக்கு உட்படுத்தினர். ஞாயிறு தேர்தலுக்கு முன்பு PDP கணிசமான தொகுதிகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது அவமானகரமான தோல்வியைத் தழுவியது; ஐந்து இடங்களை மட்டுமே பெற்றது. இதேபோல் ஜனநாயக நவீனத்துவவாதக் கோளம் (Democratic Modernist Pole) என்னும் குடியுரிமைச் சங்கங்கள், அரசியல் கட்சிகள் என்று எட்டஜ்டிட் இயக்கத்தின் கூட்டணியும் தண்டிக்கப்பட்டது.

PDP மற்றும் Ettajdid இரண்டும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பென் அலியின் கீழ் இருந்தன; 1988 ம் ஆண்டு ஆட்சியுடன் தேசிய உடன்பாட்டிலும் கையெழுத்திட்டிருந்தன.

என்னஹ்டாவின் முக்கிய இலக்குகள் இப்பொழுது துனிசிய வணிகச் சமூகத்திற்கும் உலக நிதிய மூலதனத்திற்கும் தான் வணிகச் சார்புடைய கொள்கைகளைத் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகத் தொடரும் என்பதை உறுதிப்படுத்துவதாகும்; அதே நேரத்தில் மைய இடது மற்றும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்து போதுமான ஆதரவை நடைமுறைக்கேற்ற பெரும்பான்மையைப் பெறுவதற்காக ஆதரவைப் பெறுதல் என்றும் உள்ளது.

என்னஹ்டாவின் தலைமைச் செயலர் ஹமதி ஜபெலி என்னஹ்டாவின் பிரதம மந்திரியாகக் கூடியவர் என்றும் கூறப்பட்டவர் UTICA ஊழியர்கள் கூட்டமைப்பினரை செவ்வாயன்று சந்தித்தார். உத்தியோகப்பூர்வ TAP செய்தி அமைப்பிற்குத் தெரிவித்த கருத்துக்களில் அவர் என்னஹ்டா வங்கித்துறை அல்லது மதுபானங்கள், பெண்களின் உரிமை போன்ற  சமூகப் பிரச்சினைகளில் பெரிய மாற்றங்களைச் செய்யாது என்றார்.”சுற்றுலாத் துறை போன்ற முக்கிய மூலோபாயத்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வைனைத் தடை செய்வது அல்லது குளியல் உடை மீது தடைவிதிப்பது ஆகியவை தர்க்கரீதியானதா? இவை துனிசியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகும்என்றார் அவர்.

என்னஹ்டாவில் தலைவர் Rached Ghannouchi பங்குச் சந்தை நிர்வாகிகளை புதன் அன்று சந்தித்தார்; இதைத் தொடர்ந்து பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. கன்னௌச்சியின் மகன், ஒரு பொருளியலாளரான மோவஸ் கூறினார்: “அவர்களுக்கு அவர்கள் பக்கத்திற்கு ஆதரவாக இருப்பதைத்தான் உத்தரவாதம் செய்ய நாங்கள் விரும்பினோம்; அவர்கள் துனிசியப் பொருளாதாரத்தில் நேரியப் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.”

அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட மேற்கத்தைய ஏகாதிபத்தியச் சக்திகளின் பிரதிநிதிகளுக்கும் என்னஹ்டா உறுதியளிக்கிறது; அவைகள் என்னஹ்டாவின் பங்கு ஒரு வருங்கால ஆட்சியில் இருப்பதற்கு ஆதரவு கொடுத்துள்ளன. பிரெஞ்சுச் செய்தி ஏடான Jeune Afrique  கூறுகிறது: “துனிசில் உள்ள அமெரிக்கத் தூதரக ஆதராங்களின்படி அமெரிக்கர்கள் இஸ்லாமியவாதிகள் மற்றும் Destourians [துனிசியாவின் முன்னாள் ஆட்சிபுரிந்த சமூக ஜனநாயகவாதிகள்] ஆகியோருக்கு இடையே கூட்டணிக்கு ஆதரவளிக்கலாம்; அவர்கள் கருத்துப்படி இவைதான் அரசியலமைப்புச் சட்ட மன்றத் தேர்தலுக்குப் பின் நாட்டை வெற்றிகரமாக நடத்தும் திறன் கொண்டவை.”

துனிஸில் பெயரைக் கூற விரும்பாத மேற்கத்தைய ராஜதந்திரி ஒருவர் என்னஹ்டா பற்றி ஏகாதிபத்தியச் சக்திகளின் உளப்பாங்கை ராய்ட்டர்ஸுக்குக் கொடுத்த பேட்டியில் விவரித்தார்: “அவர்கள் என்ன செயல்படுத்துகின்றனர் என்பதைக் கவனத்துடன் நோக்குவோம்; ஆனால் பொருளாதாரத்துறையில் நாம் கவலைப்படத் தேவையில்லை. நம் பெரும் கவலை அரசாங்கம் அமைக்கப்படுவதில் நீண்ட தாமதங்கள்தான். அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வணிக வர்த்தகத்தில் இருப்பவர்கள்; அவர்கள் ஒரு தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைக் கருத்துப் பற்றி ஆர்வம் கொண்டுள்ளனர்; முந்தைய அரசாங்கங்களின் பொருளாதார கொள்கைகளை மாற்றுவது பற்றித் தீவிரத் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை.”

பென் அலியின் செல்வாக்கற்ற கொள்கைகளைத் தொடரத் தயாரிப்பு நடத்துகையில், என்னஹ்டா பரந்த முறையில் குட்டி முதலாளித்துவ இடது”, தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், தொழில்நேர்த்தி அமைப்புக்கள் இன்னும் பிற மத்தியதர வகுப்புக் குழுக்களை தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகத் தங்களுக்கு ஆதரவு கொடுக்க நாடுகின்றது; அதேபோல் புதிய புரட்சிப் போராட்டங்கள் என்ற அச்சுறுத்தலுக்கு எதிராகவும நாடுகிறது.

என்னஹ்டாவின் தேர்தல் பிரச்சார மேலாளர் Abelramid Jlassi கூறினார்: “துனிசியாவின் முன்னுரிமைகள் தெளிவாக உள்ளன. அவை உறுதிப்பாடு, ஒரு கௌரவமான வாழ்க்கைக்குத் தேவையான நிலைமைகள் மற்றும் துனிசியாவில ஜனநாயக நிறுவனங்கள் கட்டமைக்கப்படல். இந்த இலக்குகளைப் பகிர்ந்து கொள்ளும் எவருடனும் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.”

எங்கள் ஆலோசனைகளில இருந்து எவரையும் நாங்கள் விலக்க மாட்டோம் அதில் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அரசியல் கட்சிகளும் அடங்கும்; அதேபோல் சிவில் சமூகக் குழுக்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவையும் அடங்கும்.”

இந்த அழைப்பு மாவோயிச PCOT க்கும் அனுப்பப்படும என்பதற்கான குறிப்புக்கள் உள்ளன; அதற்கு உட்குறிப்பான ஆதரவு இருந்தாலும் சீர்திருத்த ஆணையத்தில இருந்து அது விலக்கி வைக்கப்பட்டு இருந்தது. எக்ஸ்டெர் பல்கலைக்கழகத்தில் மத்திய கிழக்கு அரசியலில மூத்த விரிவுரையாளராக உள்ள Larbi Sadild எழுதிய கருத்துக் கட்டுரை ஒன்றை அல் ஜசீரா  வெளியிட்டது. அதில் அவர் எழுதியது: “ஹம்மா ஹம்மாமின் PCOT டும் வாக்குகளைப் பெறலாம், கம்யூனிச எதிர்ப்புக் குரல்கள் அரக்கத்தனம் உடையது என்று கண்டித்தாலும்கூட அதன் தொடர்ச்சியான நிலைப்பாட்டிற்கு வெகுமதி பெறக்கூடும். Marzouki உடன்கூட ஹம்மாமியும் அல நஹடா கட்சி தலைமையில் வழிநடத்தப்பட உள்ள வருங்காலக் கூட்டணியில் பங்காளியாகும் திறனைக் கொண்டுள்ளது.”