சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Growing anger over state repression of anti-Wall Street protests

வோல் ஸ்ட்ரீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்மீது அரசாங்க அடக்குமுறையை எதிர்த்துச் சீற்றங்கள் பெருகுகின்றன

By Bill Van Auken 
 28 October 2011
use this version to print | Send feedback

செவ்வாயன்று, கலிபோர்னியாவில் ஓக்லாந்தில் பொலிசார் வோல்ஸ்ட்ரீட் எதிர்ப்பில் ஈடுபட்ட ஒரு இளம் முன்னாள் இராணுவத்தினர் மீது கிட்டத்தட்ட உயிர்போகும்படியான தாக்குதல் நடத்தியது அடக்குமுறை அலையின் ஒரு பகுதிதான். இது ஜனநாயக உரிமைகள்மீது பெருகிய முறையில் நடத்தப்படும் தாக்குதல் பற்றி நாடு முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

ஓக்லாந்து, நியூ யோர்க் நகரம் இன்னும் பல அமெரிக்க நகரங்களில் இரண்டு ஆண்டுகள் ஈராக்கில் கடமையாற்றித் தப்பித்து, பொலிஸாரினால் மட்டுமே தாக்கப்பட்ட 24 வயதான ஸ்காட் ஓல்சன் மீதான தீயதாக்குதலைக் கண்டிப்பதற்குத் தெருக்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர்.

ஆபத்துக் கொடுக்காது எனக்கூறப்பட்ட ஒரு பொலிஸ் குண்டினால் ஓல்சன் அது நேரடியாக அவர்தலைமீது பாய்ந்தபோது கீழே விழுந்தார். இத்தாக்குதல் செவ்வாயன்று இரவு ஓக்லாந்தை ஆக்கிரமிக்கவும் என்னும் ஆர்ப்பாட்டக்குழுவின் மீது நகரத்தின் பிராங்க் ஒகவா பிளாசாவில் முகாமிட்டிருந்தவர்களை அகற்றுவதற்கும், கைதுசெய்வதற்குமான பொலிஸ் நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டன அணிவகுப்புக்களுக்கு இடையே இத்தகைய பொலிஸாரின் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரின் உதவிக்கு சென்றபோது அவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் நடாத்தப்பட்டது.

ஓக்லாந்தின் ஹைலாண்ட் மருத்துவமனையில் பெரும் ஆபத்தான நிலையின் ஓல்சன் அனுமதிக்கப்பட்டார்; மண்டையோடு முறிந்த நிலையில், நினைவற்ற கோமா கட்டத்தில், செயற்கை சுவாசக்கருவிகள் மூலமே சுவாசித்துவரும் நிலையில் அவர் உள்ளார். வியாழன் அன்று அவருடைய நிலைமை ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்பட்டது. அவருடன் ஒன்றாக வசிக்கும் கீத் ஷானன் உலக சோசலிச வலைத்தளத்திடம் செயற்கை சுவாசக் கருவி எடுக்கப்பட்டுவிட்டது, ஆனால் ஓல்சன் இன்னும் மயக்க மருத்தின்கீழ்த்தான் உள்ளார் எனத் தெரிவித்தார். விஸ்கோன்சினில் இருந்து விமானத்தில் வந்த அவருடைய பெற்றோர்கள் ஓல்சனுடன் உள்ளனர்.

ஈராக்கில் ஓல்சனுடன் இருந்த ஷானன், ஓல்சன் பகல் நேரங்களில் ஒரு சான் பிரான்ஸிஸ்கோ மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாகவும், இரவில் வோல்ஸ்ட்ரீட் எதிர்ப்புக்களில் சேர்ந்துகொள்ளுவார், சான் பிரான்ஸிஸ்கோ மற்றும் கலிபோர்னியா ஓக்லாந்தில் உள்ள முகாம்களில் உறங்குவார் என்றும் தகவல் கொடுத்துள்ளார்.

 “பணி முடிந்து, முகாமிற்கு அவர் செல்லுவார், அங்கு உறங்கியபின் மறுநாள் பணிக்குச் செல்லுவார் என்று ஷானன் WSWS இடம் தெரிவித்தார். “சான் பிரான்ஸிஸ்கோவை ஆக்கிரமிக்கவும் இயக்கத்தில் ஸ்காட் பங்கு பெற்றுவந்தார். ஏனெனில் அவர் பொருளாதாரச் சரிவிற்கு எந்த வங்கிகளும் பெருநிறுவனங்களும் பொறுப்புக் கூறப்படவில்லை என்ற நிலைப்பாட்டுடன் உடன்படவில்லை. மாறாக, அரசியல்வாதிகள் அவற்றுடன் இணைந்து செயல்பட்டு இன்னும் அதிகமாக அவர்களுக்கு நலன்கள்தரும் சட்டங்களை ஆதரவாக இயற்றுகின்றனரே ஒழிய வேலைகள், சுகாதாரக் காப்பீடு என்று உண்மையில் தேவை இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதில்லை.”

வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்பு இயக்கத்தின்பால் ஸ்காட்டின் அணுகுமுறை ஈராக் போர் பற்றிய அவருடைய கருத்துக்களுடன் இணைந்து இருந்தது. 2006ம் ஆண்டு மரைன்ஸில் சேரந்த அவர் அந்நாட்டில் இருமுறை இராணுவத்தில் செயல்பட்டபின் போர் எதிர்ப்பாளராக மாறினார். “நாம் அங்கு இருக்கத் தேவையில்லை என்று அவர் உணர்ந்தார் என்று அவர் கூறினார். “ஈராக்கிய மக்களுக்கும் அது நன்மை பயக்காது என்று அவர் நினைத்ததுடன் அமெரிக்க மக்களுக்கும் நல்லது அல்ல என்று கருதினார். இப்போரினால் நலன் பெற்றவர்கள் பெருவர்த்தகர்கள்தான்.”

ஓக்லாந்தில் நடைபெற்ற அடக்குமுறையில், 18 வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் இருந்து போலிசார் கலகத்தை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு கடலோரப் பகுதியில் இருந்து மறு கடலோரப் பகுதி வரை கட்டவிழிக்கப்பட்டுள்ள திமிரத்தன அடக்குமுறையின் மிகத்தீவிர உதாரணம்தான் ஓக்லாந்தில் நடைபெற்றது.

புதன் இரவு நியூயோர்க் நகரில் சில நூறுபேர் கொண்ட கூட்டம் ஒன்று நகர அரங்கில் இருந்து லிபர்ட்டி பிளாசாவில் உள்ள வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு முகாமிற்கு அணிவகுத்துச் சென்று ஓக்லாந்தில் நடந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்டது. ஆனால் பொலிசாரின் தடுப்புக்களைச் சந்தித்துப் பலமுறை தாக்குதல்களையும் அவர்கள் எதிர்கொண்டனர். குறைந்தப்பட்சம் 10 நபர்களாவது கைது செய்யப்பட்டனர். செப்டம்பர் 17 அன்று எதிர்ப்புக்கள் துவங்கியதில் இருந்து நகரம் 900 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டதைக் கண்டுள்ளது.

இதற்கிடையில் பல நகரங்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக மோதல்கள் தவிர்க்க முடியவில்லை எனத் தோன்றுகிறது. வியாழன் அன்று பொலிசார் சான் பிரான்ஸிஸ்கோவில் இருப்புப் படைகளை அழைக்க வேண்டியதாயிற்று. நூற்றுக்கணக்கான தலைக்கவசம் அணிந்த கலகப் பிரிவுப் பொலிசார் டிரஷர் ஐலந்தில் அதிகாலையிலேயே திரட்டப்பட்டு என்று ஜஸ்டின் ஹெர்மன் பிளாசாவில் உள்ள Occupy SF முகாம் மீது தாக்குதலைத் திட்டமிட்டனர். ஆனால் கடைசி நிமிடத்தில் இது கைவிடப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸில் நகரசபைத்தலைவர் அன்டோனியோ வில்லரைகோசா நகர அரங்கிற்கு வெளியே ஆக்கிரமிப்பு என்பதுகாலவரையின்றித் தொடர முடியாது என்று அறிவித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். புல் தரைக்கு ஆபத்து கூடாது என்ற கவலை இதற்குக் காரணம் என்று விளக்கப்பட்டது.

இதேபோல் பிலடெல்பியாவில் நகர நிர்வாகம் டில்வோர்த் பிளாசாவிலுள்ள நகர அரங்கிற்கு வெளியே நிறுவப்பட்டுள்ள கூடார நகரை அகற்ற முயல்கிறது. பிலடெல்பியாவின் நிர்வாக இயக்குனர் ரிச்சர்ட் நெக்ரின்எவரேனும் எங்களை வலுவான நடவடிக்கைகளை எடுக்கக் கட்டாயப்படுத்தினால் நகரவை அவ்வாறு செய்யும் என்று கூறினார்.

ரோட் ஐலந்தில் பிராவிடன்ஸில் பொதுப் பாதுகாப்பு ஆணையாளர் எழுத்து மூலமான முன்னறிவிப்பு ஒன்றை வியாழக்கிழமை அன்று வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்களுக்கு வெளியிட்டு, 72 மணி நேரமாக அவர்கள் முகாமிட்டுள்ள நகர மைய பூங்காவில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்படும் என்று எச்சரித்தார். பால்ட்டிமோரில் உள்ள அதிகாரிகளும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.

நியூ யோர்க் அல்பனியில் மாநிலத்தின் ஜனநாயகக் கட்சி ஆளுனரான ஆண்ட்ரூஸ் குவோமோ நகரத்தின் மேயர் ஜேரி ஜேன்னிங்ஸ் மீது அகடமி பார்க்கை ஆக்கிரமித்துள்ள எதிர்ப்பாளர்களை அகற்றிக் கைது செய்ய அழுத்தம் கொடுக்கிறார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்துள்ள ஜேன்னிங்ஸ் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிப்பதறகு பலாத்காரம் பயன்படுத்தப்பட்டால் நகரவைகுடிமை உரிமை சட்ட கடப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தினால் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார்.

அட்லானடாவில் நகரசபைத்தலைவர் காசிம் ரீட் புதன் கிழமை அன்று நகரமையப் பூங்கா ஒன்றில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு SWAT குழு ஒன்றை அனுப்பினார். 50 பேரை அது கைது செய்தது. கடந்த வார இறுதிக்காலத்தில், பொலிசார் சிக்காகோ, பிலடெல்பியா, சின்சினாட்டி, பினிக்ஸ், டல்லாஸ், ஓர்லாண்டோ, தம்பா ஆகிய இடங்களில் எதிர்ப்பாளர்களைத் தாக்கியதுடன் 200க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.

அடக்குமுறையைச் செயல்படுத்தும் பல நகரவைகள், உள்ளாராட்சிகள் ஆகியவை ஜனநாயகக் கட்சியின் வசம் உள்ளவை. இது இருவழி மூலோபாயத்தை வோல் ஸ்ட்ரீட் எதிர்ப்புக்களைப் பொருத்தவரை காட்டுகிறது. ஒருபுறம் இது தொழிற்சங்கங்கள் மற்றும் பல மத்தியதரவகுப்புக் குழுக்களை இத்தன்னார்வ இயக்கங்களில் இணைந்து செயல்படப் பயன்படுத்துகிறது. இதை ஒபாமாவின் 2012 மறுதேர்தல் பிரச்சார இயக்கத்தின் ஒரு கருவியாக மாற்ற முற்படுகிறது. ஆனால் மறுபுறமோ குண்டாந்தடிகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள், மிளகாய்ப்பொடி தூவல் மற்றும் ஓக்லாந்தில் ஸ்காட் ஒல்செனைக் கிட்டத்தட்ட கொல்ல முயன்ற வகையிலான பொலிஸ் வன்முறை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தில் தளத்தில் குடியரசுக் கட்சியனரைப் போலவே ஜனநாயகக் கட்சியினரும் இயக்கத்தின்மீது தீவிர விரோதப் போக்கைக் கொண்டுள்ளனர். இதை அவர்கள் வோல் ஸ்ட்ரீட்டுடன் தாங்கள் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளை முறிக்கும் என்று கருதுகின்றனர்.

ஒபாமா நிர்வாகம் நிபந்தனையற்று கைதுகளுக்கு ஆதரவு கொடுக்கிறது. வன்முறை பற்றி ஒபாமா ஏதும் கூறவில்லை. செவ்வாயன்று வெள்ளை மாளிகையின் செய்தித்துறைச் செயலர் ஜே கார்னே ஓக்லாந்து வன்முறை பற்றி வினவப்பட்டார். எதிர்ப்பாளர்களைக் குறை கூறும் வகையில் அவர்வன்முறையைப் பொறுத்தவரை, சட்டப்பூர்வமாக ஒவ்வொருவரும் நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம், நடப்பர் என நம்புகிறோம், அதே நேரத்தில் நியாயப்படி தங்கள் வெறுப்புக்களை வெளிப்படுத்தலாம் என்று கூறினார்.

கலிபோர்னியாவில் ஜனயாகக் கட்சி செனட்டரான டியான் பின்ஸ்ரைன் ஓக்லாந்து வன்முறையை உடனடியாகத் தொடரந்து கூறுகையில்எதிர்ப்பாளர்கள் எப்பொழுதும் ஆக்கிரமிக்கும் உரிமையைப் பெற்றிருப்பதாகத் தான் நம்பவில்லை என்றார். உதாரணமாக மக்கள் ஒரு சதுக்கத்தில் பல வாரங்கள் உறங்கலாம். ஆனால் ஒரு ஒழுங்கு இதில் வர வேண்டும் என்றார் அவர்.

எதிர்ப்புக்களின் நோக்கம் குறித்தும் அவர் வினா எழுப்பினார். “பலவிதச் செயல் திட்டங்கள் கூறப்படுகின்றன”, “மக்கள் என்ன வேண்டும் என விரும்புகின்றனர் எனக் கூறுவது கடினம் என்றார்.

பின்ஸ்ரைன் ஆர்ப்பாட்டக்காரர்கள் என்ற விரும்புகின்றனர் எனக்கண்டறியாமல் இருப்பதற்கு முக்கிய தடை அவர் காபிடொல் ஹில்லில் உள்ள 10 மிக உயர்ந்த செல்வந்தர்களில் ஒருவராக இருப்பது என்பதில் சந்தேகம் இல்லை. இவருடைய சொந்தச் சொத்துக்களின் மதிப்பு குறைந்தப்பட்சம் $50 மில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தவிர இவருடைய கணவர் ஒரு முதலீட்டு வங்கியாளர் ஆவார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் விரும்புவது ஒன்றும் ஒரு புதிர் அல்ல. அமெரிக்காவின் பொருளாதாரச், சமூக, அரசியல் வாழ்வைச் சுற்றியுள்ள பிரச்சினையைத்தான் அவர்கள் எழுப்பியுள்ளனர்: அதாவது சமத்துவமின்மை, உயர்மட்ட 1 சதவிகிதத்தினருக்கும் மக்கட்தொகையில் பெரும்பான்மையில் உள்ள உழைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய சமூகப் பிளவு ஆகியவையே அது. அவர்கள் சமத்துவம், கௌரவமான ஊதியங்கள், வேலைகள், பணிநீக்கங்கள் மற்றும் கல்விக் கடன்கள் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி ஆகியவற்றைத்தான் கோருகின்றனர்.

அமெரிக்காவிலுள்ள சமூக உண்மை பற்றிய அவர்களின் மதிப்பீடு புதிய உறுதிப்பாட்டை Europe Thursday ல் வந்துள்ள அறிக்கை மூலம் பெற்றுள்ளது. இது அமெரிக்காவில் செல்வப் பகிர்வு வளர்ச்சியுற்ற நாடுகள் என அழைக்கப்படுபவற்றிலேயே மிக சமத்துவமற்ற நிலையில் உள்ளது எனக் கண்டறிந்துள்ளது.

பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD)வெளியிட்டுள்ள இந்த மதிப்பீடு சமத்துவத்தின் அடிப்படையில் 31 OECD நாடுகளில் கிட்டத்தட்ட கடைசியில் அமெரிக்காவை இருத்தியுள்ளது. “வாய்ப்பை நல்கும் நாடு” (“land of opportunity”) என்பதற்கு மிக அப்பால், இந்த அறிக்கை அமெரிக்கா சமூக ஏணியில் தலைமுறைகள் ஏற்றம் காண்பதில் மிக இடர்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று எனக் கூறுகிறது. “அபாயகரமான வறுமை நிலைபற்றிக் கூறுகையில், அது அமெரிக்காவை மோசமானவற்றில் மூன்றாம் இடத்தில் உள்ளது என்றும் இங்குள்ள நிலைமைகளைவிட மோசமாக சிலியிலும் மெக்சிகோவிலும்தான் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமைகளை மாற்றுவது என்பதற்கு எதிர்ப்பையும் மீறிய செயல்பாடுகள் தேவையாகும். ஆக்கிரமிப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஏராளமான தொழிலாளர் வர்க்கத்தினர் எதிர்கொள்ளுவது முதலாளித்துவ முறையின் தோல்வி ஆகும்; அத்துடன் வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் அவை கட்டுப்படுத்தும் இரு பெரு வணிகக் கட்சிகள் நெருக்கடிக்குத் தொழிலாளர் வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதைத்தான்.

ஓக்லாந்து எதிர்ப்பாளர்கள் நவம்பர் 2 அன்று ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும், மாணவர்கள் வகுப்புக்களில் இருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதேபோன்ற வகையில் விவாதங்கள் நியூயோர்க் வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்களாலும் கோரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

போராடுவதற்கான பாதையை உண்மையில் காண வேண்டும் என விரும்புபவர்களுக்கு பொது வேலை நிறுத்தத்திறகான அழைப்பு சந்தேகத்திறகு இடமின்றி தொழிலாளர் வர்க்கத்தின் சக்தியை நோக்கி திரும்பும் முயற்சியைப் பிரதிபலிக்கிறது. ஆனால் போலி இடது அமைப்புக்களிடையே அத்தகைய கோரிக்கை தொழிற்சங்கங்கள்மீது போலித் தோற்றங்களை வளர்க்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

இக்கோரிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி ஜனநாயகக் கட்சிக்குத் தாழ்ந்து நின்று, அவற்றின் பொறியில் அகப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு என்று இல்லாமல் நிர்வாகம் மற்றும் அதன் சொந்த சலுகை பெற்ற அதிகாரிகளின் நலன்களைப் பிரதிபலிக்கும் நடைமுறையில் உள்ள தொழிற்சங்கங்கள்மீது இயக்கப்படுகிறது என்ற வகையில், இது அதிகப்பட்சமாக மற்றொரு பயனற்ற வகையிலான எதிர்ப்பு என்றுதான் விளங்கும்.

உண்மையான பொது வேலைநிறுத்தம் ஒன்றை அமைப்பதற்கு தொழிலாளர் வர்க்கம் மற்றும் இளைஞர்களை, ஜனநாயகக் கட்சி மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகத திரட்டுதல் என்பது தேவையாகும். அத்தகைய போராட்டத்திற்கான தயாரிப்புக்கள் பணியிடங்கள், பள்ளிகள், வசிக்கும் பகுதிகளில் அடிமட்டத்தில் உள்ளவர்கள் நிறைந்த குழுக்கள் அமைத்தலுடன் துவங்க வேண்டும். வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு என்பது ஆலைகள் ஆக்கிரமிப்பு என விரிவாக்கப்பட வேண்டும். பணியிடங்கள் அனைத்தையும் தொழிலாளர் வர்க்கத்தின்மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பு மையங்களாக மாற்ற வேண்டும்.

வேலைகள், கௌரவமான வாழ்க்கத் தரங்கள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதிய வாழ்வு மற்றும் பிற சமூகநலத் தேவைகளுக்கான போராட்டம் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு புரட்சிகரப்போராட்டத்தின் மூலம்தான் வெற்றியைக் காண முடியும். அப்போராட்டம் உயர்மட்ட 1 சதவிகிதத்தினரின் பொருளாதார, அரசியல் இடுக்கிப்பிடியை முறிக்க வேண்டும், அரசியல் அதிகாரத்தைத் தன் கரங்களிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வகையில்தான் பொருளாதார வாழ்வு சோசலிச வழவகையில் இலாபங்கள் மற்றும் நிதிய உயரடுக்கின செல்வத்தை பாதுகாத்தல் என்பதற்குப் பதிலாக மனிதத் தேவைகளைக் காக்க உதவும். இத்தகைய போராட்டம் அரசியல் வகை, ஒரு சர்வதேசப் போராட்டம் ஆகும். இதற்கு சமூகத்தை இந்த அடிப்படைப் புரட்சித் தன்மையில் மாற்றுவதற்கான தலைமை, ஒரு சோசலிச, சர்வதேச வேலைத்திட்டத்தின்கீழ் மாற்றுவது என்ற திட்டம் தேவை. வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான போராட்டத்தை முன்னேற்றுவிக்கும் பாதையை நாடும் அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாம் எங்கள் திட்டத்தைப் படிக்குமாறும், சோசலிச சமத்துவ கட்சியில் சேருமாறும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஈடுபடுமாறும் வலியுறுத்துகிறோம்.