சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Professor Cole gloats over Gaddafi’s murder

கடாபி கொலை பற்றிப் பேராசிரியர் கோல் காழ்ப்புடன் மகிழ்கின்றார்

By Bill Van Auken 
 25 October 2011
use this version to print | Send feedback

மத்தியதரைக் கடலோர நகரான சிர்ட்டேயை காட்டுமிராண்டித்தன முற்றுகை மற்றும் கொடூரமுறையில் நாட்டின் பதவி அகற்றப்பட்ட தலைவர் கேர்னல் முயம்மர் கடாபி அடித்துக் கொல்லப்பட்டத்தில் உச்சக்கட்டத்தை அடைந்த எட்டு மாதக் கால லிபியாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோப் போர், ஆரம்பத்தில் இருந்தே உலகம் முழுவதும் தம்மைஇடது என்று அழைத்துக் கொள்ளும் பல அரசியல் கட்சிகளினதும் மற்றும் அவற்றின் முக்கிய ஆதரவுத்தளமான உயர் மத்தியதரவர்க்க சமூக-அரசியல் பிரிவினதும் ஆதரவிற்கு உட்பட்டிருந்தது.

அமெரிக்காவில் இந்த நிகழ்வு அத்தகைய கட்சிகள் மற்றும் இப்பிரிவினர் இந்நிர்வாகம் உலகெங்கிலும் இராணுவ ஆக்கிரமிப்பை செயல்படுத்தி, படுகொலை செய்வதை ஒரு முக்கிய கொள்கைக்கருவியாகவும் அணைத்துக்கொண்ட ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்குக் கொடுத்த ஆதரவுடன் பிணைந்து நின்றது.

இப்போக்கை மிக முக்கியமாகப் பிரதிபலிப்பவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு வரலாற்றுப் பேராசிரியர் ஜுவான் கோல் ஆவார். இவர் லிபியா பற்றி ஒரு வல்லுனர் என்று தன்னைக் காட்டிக் கொள்கிறார். அதே நேரத்தில் விமர்சனமற்று ஒபாமா நிர்வாகம் மற்றும் நேட்டோவின் போர்ப் பிரச்சாரங்களுக்கும் ஆதரவு கொடுக்கிறார்.

தன்னையேஇடது என விவரித்துக்கொள்ளும் கோலின் புகழ் ஒரு குறுகிய காலத்தில் அவர் புஷ் நிர்வாகத்தின் ஈராக்கிற்கு எதிரான போருக்குப் போலிக் காரணங்களுக்கு தெரிவித்த ஒரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனத்தில் இருந்து பெருகியது. ஆனால் போர் ஆரம்பிக்கபட்டபின், அவர் அமெரிக்கப் படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்து, “தியாகங்கள் செய்ய உகந்தது என்று விவரித்தார். அப்போரோ உலகில் இருந்து சதாம் ஹுசைனை அகற்றுவதற்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஈராக்கிய உயிர்களைக் பலிகொண்டது.

இதேபோல், தற்போதைய லிபியாவிற்கு எதிரான போரின் ஆரம்பத்தின்போதும், கோல், “கடாபியின் கொலைக்கார ஆட்சியை அகற்றுவதில் வெற்றிபெற்று லிபியர்கள் ஒரு இயல்பான வாழ்க்கை நடத்த அனுமதிக்கும் என்றால், வாழ்வு, சொத்துக்கள் ஆகியவற்றில் தியாகங்கள் செய்வது உகந்ததே என்று அறிவித்தார். “நேட்டோவிற்கு நான் தேவைப்பட்டால், நான் அதற்குத் தயார் என்றும் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்கா மற்றும் பிற முக்கிய சக்திகள் தங்கள் மூலோபாய, இலாப நலன்களுக்காகத் ஆரம்பித்த சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு போருக்கு வக்காலத்து வாங்கிய செயல் என்றுதான் அவருடைய லிபியா பற்றிய பேச்சுக்களும், எழுத்துக்களும் இருந்தன. அண்டைய எகிப்து, மற்றும் துனிசியாவில் நடந்த எழுச்சிகளால் தோற்றுவிக்கப்பட்ட நிலைமையைப் பயன்படுத்தி, லிபியாவில் நடைபெற்ற எதிர்ப்புக்களை வேண்டுமென்றே ஆட்சி மாற்றத்திற்கு உரிய நிலைமைகளை கொடுக்க வைக்கும் நோக்கத்துடன் தூண்டிய வகையில், மேலைச் சக்திகள் நாட்டின் பாரிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகங்கள் மீது இறுக்கி பிடிக்கவும் அவற்றின் போட்டி நாடுகளான ரஷ்யா, சீனா ஆகியவை அங்கு காலூன்றுவதை மறுக்கவும்தான் முக்கியமாக தலையிட்டன.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் மேலை ஐரோப்பிய நட்பு நாடுகளும் மனித உரிமைகளைக் பாதுகாத்தல், குடிமக்களைப் பாதுகாத்தல் மற்றும் ஜனநாயக வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் என்னும் இந்த தனித்த உந்துதல்களைத்தவிர வேறு எந்த நோக்கத்தையும் இத்தலையீட்டில் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதியாக கோல் வலியுறுத்தினார்.

அவருடைய சமீபத்திய கட்டுரைகடாபியின் மக்கள் கோயில் என்பது கோலை இன்னும் மோசமாகவும் பொறுப்பற்ற வகையிலும் வலதிற்கு நகர்ந்துள்ள நபராக அம்பலப்படுத்தியுள்ளது.

இக்கட்டுரையின் விந்தையான அடித்தளம் சிர்ட்டே மீது நடைபெற்ற இரத்தக்களரியான முற்றுகை, அடித்துக் கடாபி கொலைசெய்யப்பட்டது ஆகியவற்றை 1978ம் ஆண்டு கயானாவில் Peoples Temple என்னும் அமைப்பின் உறுப்பினர்கள் பெருமளவில் ஜிம் ஜோன்ஸின் தலைமையில் தற்கொலை செய்து கொண்டதுடன் ஒப்பிடப்பட்டுள்ளது ஆகும்.

ஆட்சி மாற்றத்திற்காக நடத்தப்பட்ட அமெரிக்க-நேட்டோச் செயற்பாடு எந்தவிதத்தில் ஒரு மதப் பிரிவினரின் தற்கொலை நிகழ்வுகளுடன் சமன்படுத்துகிறது? கோலின் கருத்துப்படி, தவிர்க்க முடியாத தோல்வியை எதிர்ப்பது என்பதுதற்கொலை ஆகும்”; அதுபகுத்தறிவற்ற தன்மை”, “வெறித்தனம் ஆகியவற்றின் வெளிப்பாடுகள் ஆகும்.

பல முறையும் கடாபி நாட்டை விட்டு வேறுநாட்டிற்குச் செல்லலாம் என்று கூறப்பட்டிருந்தார்”, என கோல் எழுதுகிறார்.ஆனால் அவர் தன்னுடைய தாய்நகரான சிர்ட்டேக்கு தப்பி ஓடி ஒரு கடைசித் தற்கொலை நிலைப்பாட்டு முயற்சியைத்தான் மேற்கோண்டார்.”

லிபியத் தலைவருக்கு விசுவாசமாக இருந்த படைகளை அவர் குற்றம்சாட்டுகிறார்.அவருடைய கண்ணாடி போன்ற கண்களின் சிறு உருவங்கள் என சிர்ட்டேயின் அழிவிற்காக அவர்களைப் பற்றி விவரிக்கிறார். ஆனால் 120,000 பேர் கோண்ட இந்நகரம் கருகிப்போன இடிபாடுகள் மற்றும் கணக்கிலடங்காத அதன் மக்கள் கொல்லப்பட்டு, உறுப்புக்களை இழந்த நிலை நேட்டோ குண்டுத்தாக்குதல் இடைவிடாமல் நடத்தப்பட்டதால்தான் ஏற்பட்டது, அதைத்தவிர நேட்டோ ஆதரவிற்கு உட்பட்டகிளர்ச்சியாளர்களால் நகரத்தின்மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றாலும்கூட அவருடைய விவரிப்பு இவ்வாறாக உள்ளது.

அதாவது அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகியவை எதைத்தடுப்பதற்காக தலையீடு செய்வதாகக் கூறினவோ, அத்தகைய நிலைக்குத் துணை நின்ற முற்றுகையைத்தான் துல்லியமாகச் செய்தன.

கடாபி கொலையைப் பொறுத்தவரை, இணைய தளத்தில் வெளிவந்துள்ள பல கைத்தொலைபேசி வீடியோக்கள் மோசமாக அவர் கொலையுண்டார் என்பதைக் காட்டினாலும், கோல் லிபியத் தலைவர் ஒருகடைசித்தாக்குதலில் இறந்தார் அல்லது தப்பியோட முயல்கையில் கொல்லப்பட்டார் என்ற மாற்றீட்டுக் கட்டுக்கதைகளை முன்வைக்கிறார்.

பல பிரதேசங்களுக்கிடையையான மற்றும் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆயுதக்குழுக்களுக்கு இடையையான பதட்டங்கள் பற்றிய அதிகரித்துவரும் தகவல்களை கோல் உதறித்தள்ளுகிறார்அதேபோல் மேலை மற்றும் அரபு வளைகுடா நாடுகளின் பல சக்திகள் அவற்றைத் தோற்றுவிக்கத் தலையிடுகின்றன என்பதையும் மறுத்து, லிபியப் போர்ஜனநாயகப்படுத்தல் என்னும் முறையின் நான்காம் அலைக்கு ஒரு வெற்றி என்று வலியுறுத்துகிறார்.

இக்கட்டுரை பற்றிக் கூறுகையில் அவருடைய வாசகர்களில் ஒருவர், “கிளர்ச்சியாளர்கள் கறுப்பின லிபியர்களைப் படுகொலை செய்கின்றனர், அதிக கறுப்பினத்தவர்கள் மிஸ்ரடாவிற்குத் தெற்கே வசிக்கும் சிறுநகரான டவர்கா முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்ற அறிக்கைகளையும் காண்கிறேன். இப்பிரச்சினைகளை பற்றித் தாங்கள் ஏதேனும் கூறமுடியுமா என்று எழுதினார்.

இதற்கு கோல் கொடுத்த விடை மனத்தை உறைய வைப்பதாக உள்ளது: “லிபியாவில் மிகக் குறைந்த கறுப்பினத்தவர்கள்தான் உள்ளனர் இது ஒன்றும் ஒரு முக்கியமான பிரிவு அல்ல.” என எழுதினார்.

உண்மையில், கறுப்பின லிபியர்கள், பல ஆண்டுகளாக லிபியாவில் வசித்துவரும் இரண்டு மில்லியன் கறுப்பு ஆபிரிக்கக் குடியேறிய தொழிலாளர்களுடன் இணைந்த வகையில் மொத்த மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பகுதி என உள்ளனர். ஏகாதிபத்திய வெற்றிக்கான இவருடைய குருதி கொட்டும் ஆர்வத்தில், கோல் அவர்கள் தோலின் நிறத்திற்காக மட்டுமே இம்மக்களில் ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்னர் அல்லது கைதுசெய்யப்பட்டனர் என்பது குறித்து முற்றிலும் பொருட்படுத்தாமல் உள்ளார்.

பேராசிரியரின் முடிவுரை வெற்றியைப் பாராட்டுவதாக உள்ளது என்பதுடன் லிபியப் போரின் ஒரே பிரச்சினை மனித உரிமைகள் பற்றியது என்ற அவர் கூற்றைப் பொய்யாக்குவதாகவும்தான் உள்ளது.

லிபியாவில் அத்தகைய அக்கறைகள் அதிகம் இல்லை [வரவுள்ள மோதல்கள்] என்று  கூறிய முதலீட்டு மூலதனம் உடையவர்கள் ஒரு பெரிய வாய்ப்பைத்தான் இழந்துவிடுவர் என்று அவர் எழுதுகிறார். “இடைக்காலத் தேசியக் குழுவிற்கு-TNC- நம்முடைய ஆதரவு இப்பொழுது தேவை; புதிய விடுதலை பெற்ற லிபியா இந்த உறுதியற்ற நாட்களில் அதனிடம் நட்பு காட்டியவர்களை நினைவிற்கொள்ளும். டிரிபோலிடானியா மற்றும் சைரேனைக்காவில் ஏற்றங்கள்தான் காணப்படுகின்றன.”

வேறுவிதமாகக் கூறினால், வாஷிங்டன் மற்றும் நேட்டோவின் தயவினால் அதிகாரத்தைப் பெறும் ஓர் ஆட்சி, பதவியகற்றப்பட்ட கடாபி அரசாங்கத்தைவிட மிக அதிக ஆதாயமான முறைகளில் எண்ணெய் பற்றிய உடன்பாடுகளை வழங்கும் என  நம்பப்படலாம், மற்றும் நேட்டோவின் குண்டுத்தாக்குதலால் தகர்க்கப்பட்டுவிட்ட பாரிய உள்கட்டுமானம் மறுகட்டமைப்பதற்கு தேவையான கொழுத்த ஒப்பந்தங்களையும் அளிப்பதற்கு நம்பப்படலாம் என்பது பொருளாகும்.

இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது மற்றும் அரசியல் அளவில் முக்கியம் வாய்ந்தது என்னவெனில், தன்னை ஒருஇடது என்று அடையாளம் காட்டிக் கொள்ளும் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒரு ஏகாதிபத்திய வன்முறைச் செயல், மறு காலனித்துவமுறை மற்றும் படுகொலை நிகழ்வுகளுடன் வெட்கம் கெட்டத்தனமாகத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளுவதுதான்.

கோலின் எழுத்துக்களும் செயல்களும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் அரசியல் சூழ்நிலையினால் ஆழ்ந்து ஊழலுக்குள்ளான உயர்கல்வியாளர்களின் வலதினை நோக்கிய போக்கின் ஒரு அடையாளம்தான். அந்த அடுக்கு தனது முயற்சியால் மத்தியதர வர்க்கத்தின் உயர்மட்டத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கூடக்கொண்டுவிட்டது.

கோலின் படைப்புக்களில் பாசிசத் தன்மையைவிடச் சற்றே கூடுதலான வாடை காணப்படுகிறது. உளவுத்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளுக்குத் தான் கொடுக்கும் கருத்துக்கள் பற்றி பீற்றிக் கொள்ளுதல் என அதிகாரத்தில் இருப்பவர்களை ஊக்கம் கொடுக்கும் தன் திறன் பற்றி பேரார்வம் கொண்டுள்ள ஒரு நபராகத்தான் அவர் உள்ளார். மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்தும் வன்முறை மற்றும் கொலைகளில் ஒரு பிரதிநிதியாக அதில் பங்கு கொள்ளும் தன் நிலைமை குறித்தும் பெருமை பேசுகிறார். லிபியாவைப் பொறுத்தவரையில் அவை ஏதோ இயல்பாக நடக்கும் நிகழ்வுகள் என்று அவர் வெளிப்படையாக கருதுகின்றார்.

சமூக நெருக்கடி தீவிரமாகும் சூழ்நிலையில், சமூகத்தில் பெருகிய துருவமுனைப்படுத்தல் வந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் வர்க்கப்போராட்டம் வெளிப்பட்டுவரும் நேரத்தில், இத்தகைய பரிமாணங்கள் ஆழ்ந்த வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

1920களில் வைமார் ஜேர்மனியில் பல ஜேர்மனிய உயர்கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் வலதிற்கான ஒரு வளர்ச்சியைத் தொடங்கினர். அது ஒரு தசாப்தத்திற்குப்பின் அத்தட்டில் இருந்த மார்ட்டனி ஹெடெக்கர், கார்ல் ஸ்மிட் போன்ற தனிநபர்கள் கிட்லருக்கு வெற்றி” (“Sieg Heil!”) என்று கூக்கூரலிடும் நிலையை ஏற்படுத்தியது. அத்தட்டு நாசிசத்தின் வன்முறை, படுகொலைகளில் ஒரு நோய்வாய்ப்பட்ட தன்மை உடைய ஈர்ப்பையும் கண்டனர்.

அமெரிக்காவில் ஒரு சர்வாதிகார ஆட்சி அதிகாரத்திற்கு வருமுன்னரே, ஆளும் உயரடுக்கிற்கு உயர்கல்வியாளர்கள் மற்றும் கோல் போன்ற இழிந்த அறிவுஜீவிகளைக் கொண்ட அடுக்கின் பணிகள், ஒரு சிந்தனைப்போக்கிற்கான தளத்தை அமைக்கவும், அரசாங்கத்தின் குற்றங்களை ஆதரித்து, நியாயப்படுத்துவதற்குப் பொதுமக்களைத் தயார் செய்பவை, தேவைப்படுகின்றன.

ஓர் இடது சார்புடையவர் என்று கோல் தன்னைக் காட்டிக் கொள்வது மிக அதிக அளவில் திமிர்த்தனம் நிறைந்தது. அவருடைய பங்கைப் பற்றி நன்கு அறிந்துள்ள பெருகிய மக்களிடையே, அவருடைய பெயர் கூறப்படுதவதே அரசியலில் கணப்புணர்வை ஏற்படுத்துகிறது. அப்பட்டமாகக் கூறினால், அவருடைய அறிவார்ந்த புகழ்கள் பற்றி ஒரு துர்நாற்றம்தான் வீசுகிறது.

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்:

லிபியா, ஏகாதிபத்தியம் மற்றும் "இடது" புத்திஜீவிகளின் சரணாகதி: பேராசிரியர் ஜூவான் கோல் விவகாரம்

பேராசிரியர் ஜுவன் கோலிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்: ஒரு அவதூறுக்கு பதில்

லிபியா பற்றி பேராசிரியர் கோல் பதில் கூறுகிறார் புத்திஜீவித அரசியல் திவால்தன்மை பற்றிய ஒப்புதல்