World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US and Gaddafi: The murderer calls for an investigation of the crime

அமெரிக்காவும் கடாபியும் குற்றம் பற்றிய விசாரணைக்கு கொலையாளி அழைப்புவிடுகின்றார்

Bill Van Auken
24 October 2011
Back to screen version

ஞாயிறன்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர், லிபியாவின் பதவியகற்றப்பட்ட அரச தலைவர் முயம்மர் கடாபி காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டது குறித்து ஒரு சுயாதீன விசாரணைக்கு வாஷிங்டன்வலுவான ஆதரவு கொடுக்கும் என ஆர்ப்பாட்டமாக அறிவித்தார்.

அவருக்கு ஏற்கனவே தெரியாத எதைப்பற்றி திருமதி கிளின்டன் விசாரணைக்கு உட்படுத்த விரும்புகிறார்?

தனது பிறந்த நகரான சிர்ட்டேயில் இருந்து தப்பியோடுகையில் வியாழன் அன்று கடாபி கைப்பற்றப்பட்டார். முந்தைய மாதம் முழுவதும் சிர்ட்டே தொடர்ச்சியாக நேட்டோ குண்டுத்தாக்குதல் மற்றும் மிருகத்தனமான முற்றுகை என்றுகிளர்ச்சியாளர்கள் எனக்கூறப்படுவோரால் நடத்தப்பட்டது. இதில் நகரம் முழுவதும் அழிந்தது, கணக்கிலடங்காக் குடிமக்கள் கொல்லப்பட்டதுடன், காயமுற்றனர்.

அமெரிக்க ஒற்று விமானங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கடாபியின் கார் வரிசை முதலில் ஒரு அமெரிக்க பிரிடேட்டர் ஆளற்ற ட்ரோன் விமானத்தால் தாக்கப்பட்டது; இது தொலைதூரக் கட்டுப்பாட்டு முறையில் நெவடா விமானத்தளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டது. அமெரிக்க AWAC கண்காணிப்பு விமானம் ஒன்று அதன் பின் பிரெஞ்சுப் போர் விமானங்களை அழைத்தது. அவை இரு 500 இறாத்தல் நிறையுள்ள குண்டுகளை கேர்னல் கடாபி மற்றும் அவருடைய குழு தப்பியோடிச் சென்று கொண்டிருந்த வாகன வரிசைகள் மீது போட்டன.

இந்த விமானத் தாக்குதல்கள் பல டஜன் நபர்களைக் கொன்றதுடன், லிபியத் தலைவரையும் காயப்படுத்தியது. அதன் பின் அவர் நேட்டோ ஆதரவு பெற்ற மற்றும் SAS பிரிட்டிஷ் சிறப்புப் படையில் இருந்து வந்தஆலோசகர்களுடன் இணைந்து செயற்பட்ட கிளர்ச்சியாளர்களால் வேட்டையாடப்பட்டார்.

கடாபியின் இறுதிக் கணங்கள் அவரைத் தாக்கியவர்களின் கைத்தொலைபேசிகளில் இருந்த வீடியோக்கள் பலவற்றில் பதிவாகியுள்ளன. இவை அவரை தூசித்து தாக்குதல் நடந்திவந்த வெறிபிடித்த ஆயுதக்கும்பலிடம் காயமுற்ற கடாபி நலிந்த முறையில் கூக்குரலிட்டு எதிர்ப்புக் காட்டியதையும், அதே நேரத்தில் அக்கும்பல்அல்லாஹு அக்பர்” –“இறைவன் மிகப் பெரியவன் என்று கூவியதையும் காட்டுகின்றன. அவர் தரையில் இழுக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, குருதி கொட்டும் வகையில் துப்பாக்கிகளாலும் கரங்களாலும் தாங்கப்பட்டு பின் ஒரு வாகனத்தின் பின்பக்கத்தில் உதைத்துத்தள்ளப்பட்டார். அவருடைய தலையில் ஒரு துப்பாக்கி வைக்கப்படுவதை ஒளிப்படங்கள் காட்டுகின்றன, அதன் பின் அவருடைய சடலம் மண்டையோட்டில் பின்பகுதியில் இருந்து குருதி கொட்டிய வகையில் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவருகிறது.

நேட்டோ ஆதரவிற்குட்பட்ட, பெங்காசியைத் தளமாகக் கொண்ட தேசிய இடைக்காலக்குழு (TNC) உறுப்பினர் ஒருவர் தெளிவாகக் கூறியது போல், “அவர்கள் அவரைக் கடுமையாக அடித்தனர், அதன் பின் அவரைக் கொன்றனர்.”

ABC யின் நிருபரான கிறிஸ்ரியான ஆமன்பூர் இனால் இந்த கொடூரக் கைத்தொலைபேசி பதிவுகள் பற்றி அவருடையஉள் உணர்வு பற்றி  கேட்கப்பட்டதற்கு கிளின்டன் கூறினார்: “ம், உங்களுக்குத் தெரியும் கிறிஸ்ரியான, வெளிப்படையாக எவரும் எந்த மனிதரையும் அத்தகைய நிலைமையில் காண விரும்பமாட்டார்கள்.” என்றார்.

கிளின்டனுடைய அறிக்கைகள் நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டவை என்பது தெளிவு; இவை கடாபி கொடுமையாக தாக்கப்பட்ட காட்சி பற்றி உலகம் முழுவதும் கசப்பான உணர்வு ஏற்பட்டதைச் சமாதானப்படுத்தும் நோக்கம் கொண்டவை. அவருடையஉள்உணர்வு கூறுவது பற்றி, கொலை நடந்த அன்றே அது ஒரு நிருபரிடம் அவர் சிரித்துக் கொண்டு, “நாங்கள் வந்தோம், நாம் அவர் இறந்ததை பார்த்தோம் என்று கூறியதில் இருந்தே நன்கு வெளிப்பட்டது.

உண்மையில் கடாபி கடுமையாக தாக்கிக் கொலை செய்யப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்புதான் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் திரிப்போலிக்கு வந்திருந்தார். அங்கு அவர் லிபியத் தலைவர் மிக விரைவில்கைப்பற்றப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்று அறிவித்தார்.

இது ஒன்றும் எழுந்தமானத்தில் கூறியதாக எடுத்துக் கொள்ள முடியாது. லிபியாவிற்கு எதிராக நடந்த எட்டுமாதக் கால அமெரிக்க-நேட்டோ நடத்திய போர்ஆட்சி மாற்றத்திற்காத்தான் நடந்தது.  கடாபியை அகற்றிவிட்டு, வாஷிங்டன் மற்றும் நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் மேற்கு நாடுகளின் எரிசக்தி பெருநிறுவனங்கள் ஆகியவற்றின் ஆணைகளுக்கு வளைந்து கொடுத்து இயங்கும் ஒரு கைப்பாவை ஆட்சியை இருத்துவதற்காக இது நடைபெற்றது.

அண்டை நாடுகளான துனிசியா, எகிப்து ஆகியவற்றில் ஏற்பட்ட வெகுஜன எழுச்சிகளை ஒரு மறைப்பாகப் பயன்படுத்தி, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வேண்டுமென்றே லிபியாவில் ஓர் ஆயுத மோதலுக்குத் திட்டமிட்டு ஊக்கம் கொடுத்து, பின் அதற்கு ஆதரவு முரசு கோட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலையைம் தலையிடுவதற்காக பொதுமக்களைக் காப்பாற்றுதுதல் என்னும் போலிக்காரணத்தைக் கொண்டு பெற்றன.

இத்தகையமனிதாபிமான பதாகையின் கீழ் அவை இடைவிடா, குற்றம்சார்ந்த வான் தாக்குதலை எண்ணெய் வளமுடைய வட ஆபிரிக்க நாடு மீது நடத்தின. இதே நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் குண்டுத்தாக்குதல்களையும் கடாபி மற்றும் அவர் குடும்பத்தை இலக்கு கொண்டு நடத்தின. நேட்டோ ஏவுகணைத் தாக்குதல் ஒன்று மே 1ம் தேதி திரிப்போலியின் கடாபி இல்லம் ஒன்றின்மீது நடுத்தப்பட்டதில், கடாபியின் மகன்களில் ஒருவரும் மூன்று பேரர்களும் கொல்லப்பட்டனர். அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தொழில்நுட்ப ஆதாரங்கள் அனைத்தும் லிபியாமீது இயக்கப்பட்டன. இவை லிபியத் தலைவரைக் கண்டறியவும் அவரைக் கொலைசெய்யும் முயற்சியிலும் ஈடுபடுத்தப்பட்டன.

இது ஒன்றும் இத்தகைய முயற்சிகளில் முதலாவதும் அல்ல. 1969ம் ஆண்டிலேயே ஹென்ரி கிசிஞ்சர் தன் நினைவுக் குறிப்புக்களில் எழுதியுள்ளதுபோல், அமெரிக்க அரசாங்கத்திற்குள் கடாபியைப் படுகொலை செய்ய இரகசியத் திட்டம் ஒன்று விவாதிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அவருடைய தீவிர அரபுத் தேசிய உணர்வு, பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிற்கு (OPEC) எண்ணெய் விலைகள் மீது அமெரிக்க-சவுதி கட்டுப்பாட்டில் தலையிட அவர் விரும்பியது மற்றும் ஆபிரிக்கக் கண்டத்தில் பென்டகனின் மிகப் பெரிய விமானத்தளத்தை அவர் மூடியது ஆகியவை ஆகும். 1986ல் ரேகன் நிர்வாகமும் கடாபியின் திரிப்போலி வளாகத்தின்மீது அமெரிக்கக் குண்டுத் தாக்குதலை நடத்தியது. 1990 களில் பிரிட்டனின் உளவுத்துறைப்பிரிவான M16 இஸ்லாமியக் பிரிவுகளுடன் இணைந்து அவரைக் கொல்லும் முயற்சியில் ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபின், கடாபி மேலைச் சக்திகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள முற்பட்டு, “பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்பைக் கைவிட்டு, அமெரிக்காவுடன் அதன் உலகளாவியபயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு ஒத்துழைக்கையில், ஏகாதிபத்தியச் சக்திகள் அவருடைய முந்தைய குற்றங்களை மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை.

ஹில்லாரி கிளின்டன் மற்றும் ஒபாமா நிர்வாகமும் கடாபி கொலையைப் பற்றி விசாரணை தேவை எனக் கூறுவது மிகஇழிந்த தன்மைக்கும் அப்பால் செல்கின்றது. ஐசனோவர் நிர்வாகம் பட்ரிஸ் லுமும்பா படுகொலை பற்றி விசாரணை கோருவது போலவும், நிக்சனின் வெள்ளைமாளிகை சால்வடோர் அலெண்டேயின் மரணத்தைப் பற்றிச் சர்வதேச விசாரணை தேவை என அழைப்புவிடுவது போலவும் இது உள்ளது.

இதில் முக்கியமான வேறுபாடு, அக்காலத்தில் CIA தான் அதன் மறைமுகமான நடவடிக்கைகளுக்காக கொலைக்கார நிறுவனம் என்று அறியப்பட்டிருந்தது. இப்பொழுது அமெரிக்க அரசாங்கமே முழுமையாக, வெளிப்படையாக, வெட்கம் கெட்டத்தனமாக, வெளியறவுக் கொள்கையின் ஒரு முக்கிய கருவியாக படுகொலை செய்தலைத் தழுவியுள்ளது.

ஆறு மாதங்களுக்குள மூன்று முறையாவது குறைந்தப்பட்சம் ஜனாதிபதி ஒபாமா தொலைக்காட்சி காமெராக்களுக்குமுன் சட்டவிரோதப் படுகொலைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மாதம் இது அமெரிக்கச் சிறப்புப் படைகளின் துருப்புக்களால் ஆயுமற்று இருந்த ஒபாமா பின் லேடனை அழித்தது பற்றி இருந்தது. செப்டம்பர் மாதம் அமெரிக்கக் குடிமகன் ஒருவரான அன்வர் அல்-அவ்லகியே யேமனில் ஒரு ஹெல்பைர் ஏவுகணைமூலம் கொலைசெய்யப்பட்டது கூறப்பட்டது. அத்தாக்குதலில் ஓர் இரண்டாம் அமெரிக்கக் குடிமகன் சமீர் கான் கொலையும் இருந்தது. இப்பொழுது, மூன்றாம் தடவையாக ஒபாமா கடாபி கொடூரமாக  கொலையுண்டதற்குப் பெருமை கோருகிறார்.

கணக்கிலடங்கா மற்றவர்கள் இதேபோல் அதிகம் வெளிப்பரபரப்பு இல்லாமல் பாக்கிஸ்தான், யேமன், சோமாலியா இன்னும் பல இடங்களில் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்லகி கொலைக்கு இரண்டு வாரங்களுக்குப் பின், ஒரு ஹெல்பைர் ஏவுகணை அவருடைய 16 வயது மகன் அப்துல் ரஹ்மானைக் கொன்றது; இவரும் அவருடைய தந்தையைப் போல் ஒரு அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கக் குடிமகன் ஆவார். இத்தாக்குதல் இன்னும் எட்டு பேர்களையும் கொன்றது; பெரும்பாலானவர்கள் சிறு வயதினர். இச்செய்தி பற்றியும் அமெரிக்க வெகுஜன ஊடகத்தால் அதிக தகவல் கொடுக்கப்படவில்லை.

இதற்கு பதிலாக, செய்தித்துறை பண்டிதர்கள், இந்த வெளிநாட்டு கொள்கை வெற்றிகள், ஒபாமா கொலைகார தலைவர் என்ற வரலாற்றுடன் அநேகமாக போட்டியிட்டு, அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு புதிய அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட பிரிவாக வரக்கூடிய ஒரு இரகசிய குழுவினால் வரையப்படும் கொலைப்பட்டியலை  ஏற்றுக்கொண்ட ஜனாதிபதியின் மீள்தேர்விற்கு சற்று உதவி செய்யுமா என விவாதிக்கின்றனர். 

முயம்மர் கடாபியின் மோசமான கொலை அமெரிக்க ஆளும் உயரடுக்கின் முற்றிலும் சட்டத்தன்மையற்ற, வன்முறைக் கொள்கையின் அடையாளம்தான். இந்த உயரடுக்கு அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சரிவை ஈடுசெய்யும் வகையில், முடிவில்லாத தொடர்ந்த போர்களை நடத்துகிறது, முக்கிய இருப்புக்கள், சந்தைகள்மீது கட்டுப்பாடு கொள்ளும் இலக்கைக் கொண்ட ஆத்துரமூட்டும்  செயல்களை நடத்துகிறது.

கடாபி கொலை பற்றிய ஒரு விசாரணை ஐக்கிய நாடுகள் சபையினாலோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தாலோ நடத்தப்பட்டால் பயப்பட வேண்டிய தேவையில்லை என்று தக்க காரணத்துடன் ஒபாமாவும் ஹில்லாரி கிளின்டனும் நம்புகின்றனர். ஆயினும்கூட, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் மீண்டும் காலனித்துவ முறையைச் சுமத்தும் பொறுப்பற்ற முயற்சி, அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத பொருளாதார, சமூக முரண்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்தத்தான் செய்யும்.

இந்த நெருக்கடி தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியாக போராட்டத்திற்கு இட்டுச்செல்வதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களுடன் புரட்சிகரமான முறையில் கணக்குத் தீர்ப்பதற்கான நிலைமைகளையும் தோற்றுவிக்கும்.