World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian government seeks to lower official poverty line to 50 cents per day

இந்திய அரசாங்கம் உத்தியோகப்பூர்வ வறுமைக்கோட்டு நிலையை நாள் ஒன்றிற்கு 50 அமெரிக்க சென்ட்டுகள் என குறைக்க முற்படுகிறது

By R.V. Singh and Colleen Redcliffe
19 October 2011
Back to screen version

இந்திய திட்டக் குழுவின் துணைத் தலைவரான மான்டேக் சிங், மற்றும் கிராமப்புற வளர்ச்சி மந்திரி ஜெய்ராம் ரமேஷ் இருவரும் அக்டோபர் 3ம் திகதி ஒரு செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டில் அரசாங்கம் ஏற்படுத்தும் மாற்றங்களை நியாயப்படுத்த முயன்றனர்.

காங்கிரஸ் கட்சித் தலைமையிலான அரசாங்கம் இந்தியாவில் உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டிற்கான தரத்தை கீழ்நோக்கித் திருத்தும் கடந்த மாதம் தயாரிக்கப்பட்ட தன்னுடைய திட்டத்தில் இருந்தே தன்னை ஒதுக்கி வைத்துக் கொள்ள முற்பட்டதுஇத்திட்டங்கள் ஓர் அரசியல் புயலை உருவாக்கின.

திட்டக் குழுவின் புதிய கருத்தின்படி, புறநகரப் பகுதிகளில் நாள் ஒன்றிற்கு 32 இந்திய ரூபாய்களுக்கு மேல் செலவழிப்பவர்கள் (அமெரிக்க 64 சென்டுக்கள், அல்லது அரை யூரோ- 0.50), மற்றும் கிராமப்புறப பகுதிகளில் நாள் ஒன்றிற்கு 26 ரூபாய்களுக்கு மேல் செலவழிப்பவர்கள் (அமெரிக்க 52 சென்டுக்கள்) உத்தியோகபூர்வமாக ஏழைகள் எனக் கருதப்படமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக திட்டக்குழு இதைவிடக் குறைந்த வறுமைக் கோட்டை நிர்ணயித்திருந்தது; நாள் ஒன்றிற்கு ரூபாய் 20 (அமெரிக்க 40 சென்ட்டுக்கள்) நகர்ப்புறத்திலும் 15 ரூபாய்கள் (அமெரிக்க 33 சென்ட்க்கள்) கிராமப் புறத்திலும் செலவழிப்பவர்கள் அதில் அடங்குவர் என நிர்ணயித்திருந்தது; ஆனால் அத்திட்டம் இந்திய உயர் நீதிமன்றத்தின் அழுத்தத்தின் கீழ் கைவிடப்படும் கட்டாயத்திற்கு உட்பட்டது.

உணவிற்கான உரிமை பிரச்சாரம் (RFC-Right to Food) என்னும் அரசு சாரா அமைப்புக்களின் கூட்டானது திட்டக் குழுவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியது; அதில் அலுவாலியாவை எப்படி இப்புதிய நிலைப்பாட்டு செலவுத் தொகை போதுமானது எனக் கருதப்படுகிறது என விளக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது; “இதற்கு விளக்கம் கொடுக்க முடியவில்லை என்றால், பின் பிரமாணப் பத்திரம் திரும்பப் பெறலாம் அல்லது நீங்கள் இராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

RFC யின் பகிரங்கக் கடிதம் உத்தியோகபூர்வ வறுமைக்கோடு திருத்தப்படுவது பணவீக்கம் அதிகரித்துள்ள நேரத்தில் வந்துள்ளது; அந்தப் பணவீக்கமோ ஏழை குடும்பங்களைச் சுவரில் சாய வைத்துள்ளது; அதே நேரத்தில் 60 மில்லியன் டன் உணவுத் தானியங்கள் இந்திய உணவு நிறுவனத்தின் கிடங்குகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது; “இது அரசாங்கமே தானியங்களை உணவு விலை அதிகரிப்பிற்காக சேமிக்கிறது என்பதை உட்குறிப்பாகக் காட்டுகிறது எனக் கூறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய சேரிவாழ்வோர் கூட்டமைப்பின் துணைத்தலைவரான அனுபமா தத்தா, Agence France-Press (AFP) இடம் கூறினார்: “ஒரு நபர் தனக்கும் தனது குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் ஒரு நகரத்தில் 32 ரூபாய்க்குள் உணவளிக்க முடியும் என்பது இயலாது. இந்தத் தொகையால் சாதாரண மக்களுக்கு எப்பயனும் இல்லை.”

புது டெல்லியிலுள்ள வீடுகளில் வேலை செய்பவரான அம்பிகா முத்துச்சாமி AFP யால்  மேற்கோளிடப்பட்டார்: “ஒரு கிலோ அரிசி 40 ரூபாய்க்கு (அமெரிக்க 80 சென்ட்டுகள்) விற்கப்படுகிறது; இது ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்குத்தான் போதுமானதாக இருக்கும்.”

உணவிற்கான உரிமை உத்தியோகபூர்வக் குழு ஒன்றின் அதிகாரி ஒருவருக்கு ஆலோசகராக உள்ள பீரஜ் பட்நாயக், “ஏழைகளுக்கு உதவுதல் என வரும்போது, அரசாங்கம் எவ்வளவு குறைவான நபர்களுக்கு, எவ்வளவு குறைந்த நன்மைகள் கிடைக்குமோ அத்திட்டத்தைத்தான் விரும்புகிறது என்றார்.

இந்திய அரசாங்கத்தில் முன்வைக்கப்படும் வறுமைக் கோடு மிக மிகக் குறைந்து உள்ளது. சந்தைச் சார்பாக கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும், தனியார்மயம் தேவை, பெருநிறுவனங்களுக்கு வரிக் குறைப்புக்கள் தேவை, பொதுநலப் பணிகள் தகர்க்கப்பட வேண்டும் என அனைத்து இந்திய அரசாங்கங்களும் இரு தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து செய்பவற்றிக்கு மேற்படி முரசு கொட்டும் பெருநிறுவன நாளேடான டைம்ஸ் ஆப் இந்தியா  கூட கண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. “திட்டமிடுபவர்கள் புதிதாக இயற்றியுள்ள தர அளவின்படி, மும்பை, டெல்லி, பெங்களூர் அல்லது சென்னையில் ஒரு குடும்பம் 3,860க்கு மேல் ($77) மாதம் ஒன்றிற்குத் தன் உறுப்பினர்களுக்குச் செலவழித்தால் அது ஏழைக்குடும்பம் எனக் கருதப்பட மாட்டாது. இத்தகைய வரையறை பலரையும் எத்தனை கேலிக்கூத்து இது எனக் கருத வைக்கும், உண்மைக்குப் புறம்பானது. இப்புதிய வறுமைக் கோடு பற்றிய வரையறை ஏற்கனவே சமூக செயற்பாட்டாளர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது பற்றி வியப்பு இல்லை; அவர்கள் இது இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் தந்திரோபாயம் எனத்தான் கருதுகின்றனர் என்று டைம்ஸ் கூறியுள்ளது.

நகர்ப்புறப் பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மொத்த மாத எண்ணிக்கையைப் பிரித்துப் பார்க்கத் தான் முற்பட்டதாக டைம்ஸ் எழுதியுள்ளது. இதன்படி திட்டக்குழு “5.5 ரூபாய் (அமெரிக்க 11 சென்ட்டுக்கள்) நாள் ஒன்றிற்கு தானிய வகைகளில் செலவழிப்பது ஒரு குடும்பத்தைச் சுகாதார நிலையில் வைக்கும் எனக் கருதுகிறது.” இதேபோல் நாள் ஒன்றிற்கு 1.02 ரூபாய் (அமெரிக்க 2 சென்ட்டுக்கள்) பருப்பு வகைகள் மீது, 2.33 ரூபாய் (அமெரிக்க 5 சென்ட்டுக்கள்) பால் மீது, 1.55 (அமெரிக்க 3 சென்ட்டுக்கள்) எண்ணெய் மீது செலவழித்தல் போதுமான ஊட்டச் சத்தைக் கொடுத்து மக்களை வறுமைக்கோட்டிற்கு மேலே அரசாங்கத்திடம் இருந்து உணவுப்பொருட்களுக்கு உதவி பெறாமல் வைக்கப் போதுமானது என்றும் கருதப்படுகிறது. மேலும் நாள் ஒன்றிற்கு ரூபாய் 1.95 (அமெரிக்க 4 சென்டுக்கள்) காய்கறிகளுக்குச் செலவழிப்பது போதுமானது என்றும் அரசாங்கம் கருதுகிறது. இன்னும் சற்றுச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு நபர் சமூகப் பாதுகாப்பு வலைக்கு வெளியே இருக்க வேண்டும்.”

வறுமைக்கோட்டிற்குக்  கீழே உள்ளவர்கள் (BPL - Below Poverty Line) பட்டியலில் இடம் பெறத் தகுதி பெற்று, பல அரசாங்கத் திட்டங்களின் கீழ் பயனடையவேண்டும் என்றால், மக்கள் அன்றாடம் பழங்கள் மீது 44 பைசாக்களுக்கு குறைவாக, 70 பைசாக்களுக்கும் குறைவாக சர்க்கரையில், மற்றும் 78 பைசாக்களுக்கும் குறைவாக உப்பு, ஊறுகாய் போன்றவற்றில் செலவழிக்க வேண்டும் என்று டைம்ஸ் மேலும் கூறியுள்ளது. ஒரு ரூபாயில் நூறு பைசாக்கள் உள்ளன, எனவே 44 பைசா என பழங்களுக்கு ஒதுக்கப்படுவது 1 அமெரிக்க சென்ட் எனலாம் (0.88 யூரோ சென்ட்.)

இதே கருத்துவகையைத் தொடர்கையில் டைம்ஸ் குறிப்பிடுவதாவது, ஒரு நாளைக்கு ஒரு நபர் பயன்படுத்தும் சமயலறை எரிபொருளுக்கான 3.75 ரூபாவிற்கு மேலாக (அமெரிக்க 8 சென்ட்டுக்கள்) இந்த தொகைகள் இருக்கின்றன. எரிபொருளின் விலை ஏற்றத்தை மறந்தாலுமோ மற்றும் வானாளவில் உயரும் வாடகையை மறந்தாலுமோ ஒரு நகரத்தில் ஒரு மாதத்திற்கான 49.10 ரூபாவிற்கு மேலாக வாடகையில் ஒருவர் வாழ்ந்தால், ஒருவர் BPL அளவைத் தாண்டிவிட முடியும்

திட்டக்குழு இப்பொழுது திட்டமிட்டுள்ள வறுமைக் கோட்டின் கீழ், தனிநபர்கள் மாதம் ஒன்றிற்கு 2 டாலருக்கு குறைவாகத்தான் தங்கள் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பிற்கு செலவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 3ம் தேதி நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், அலுவாலியாவும் ரமேஷும் திருத்தப்பட்ட தரம் கூட மிகவும் குறைவு என்பதை ஒப்புக் கொண்டு, தேவையைப் பொருட்படுத்தாமல் தனிப்பட்ட மாநிலம் ஏழைகளின் எண்ணிக்கை பற்றித் திட்டமிடும் உயர்ந்த அளவு என்பது அகற்றப்பட வேண்டும் என்பதற்கு இசைந்தனர். ஆனால் அரசாங்கக் கொள்கையின் முக்கிய உந்துதல், திட்டக்குழு நாட்டின் வறுமையை நவீனப்படுத்தும்”  முயற்சிக்குப் பின் இருக்கும் உந்துதல் பற்றி அவர்கள் வலியுறுத்திக் கூறினர்: அதாவது தற்பொழுது ஏற்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டுத் தரம் குறைக்கப்பட வேண்டும், அது உணவு, இன்னும் பிற சமூக நலத்திட்டங்களில் இருந்து பிரிக்கப்பட வேண்டும் (அதாவது உதவிநிதி பெற்று வாங்கப்படும் எரிபொருள், உரம் போன்றவற்றில் இருந்து).

இப்புதிய அளவு, ஏற்கனவே பிரதம மந்திரி மன்மோகன்சிங் அலுவலகத்தால் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது 2009 ம் ஆண்டு செயல்பட்ட டெண்டுல்கர் குழுவில் இருந்து பெறப்பட்ட எண்ணிக்கையின் அளவாகும்; அது இந்தியாவில் 2004-05 ல்ஏழைகளின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 27.5 சதவிகிதம் என்பதில் இருந்து 37.2 சதவிகிதம் என உயர்ந்துவிட்டது எனக் கண்டறிந்தது.

முன்னதாக வறுமை என்பது குறைந்த பட்ச கலோரிச் சத்து எடுத்துக் கொள்ளுவதை அளவாகக் கொண்டிருந்தது; ஆனால் டெண்டுல்கர் குழு அவ்அளவை விரிவாக்கும் வகையில் உணவு, கல்வி, சுகாதாரம், எரிபொருள், உடை ஆகியவற்றையும் சேர்த்திருந்தது.

ஆனால் டெண்டுல்கர் குழு அறிக்கையும் துல்லியத்தில் இருந்து மிகத் தொலைவில் உள்ளது, அல்லது இந்தியாவில் வறுமை பற்றிய சமீபத்திய கணக்கீட்டை விட இழிந்ததாகத்தான் இருந்தது. 2009ல் வெளிவந்த என்.சி. சாக்சேனாக் குழு அறிக்கை இந்தியாவில் 50 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர் என்றும் கலோரி எடுப்பில் தொடர்ச்சியான சரிவு என்பதையும் நிரூபித்தது; குறிப்பாக தானிய வகை நுகர்வில்; 1972-73ல் இருந்து 1999-2000 த்திற்கு இடையே ஏழைமக்களிடையே இந்நிலை இருந்தது எனக் கூறப்பட்டது. 2010ல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்று தன் பங்கிற்கு இந்திய மக்கள்தொகையில் 55 சதவிகிதம் அல்லது 645 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வதாகக் கூறியது.

முந்தைய தசாப்தங்களின் புள்ளிவிபரத் தகவல்களைப் பயன்படுத்தி 2009ம் ஆண்டு NCEUS எனப்படும் முறைசாராப் பிரிவில் முயல்வோருக்கான தேசியக் குழு, மறைந்த டாக்டர் அர்ஜுன் சென்குப்தா தலைமையில் தயாரித்த அறிக்கை ஒன்று இந்திய மக்களில் ஒரு பகுதியினர் நாள் ஒன்றிற்கு 20 ரூபாய்க்கும் குறைவான தனிநபர் நுகர்வில்தான் வாழ்கிறது எனக் கண்டறிந்தது; இது அதிர்ச்சி தரும் 836 மில்லியன் நபர்கள் அல்லது மொத்த மக்களில் 77 சதவிகிதம் என உயர்ந்தது.

இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் சந்தைச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் உலக வங்கி, இந்தியாவில் வறுமை 41 சதவிகிதம் இருப்பதாக அதாவது நாள் ஒன்றிற்கு 1.25 டாலருக்கும் குறைவாக பணத்தில் வாழ்பவர்கள்மதிப்பீடு செய்துள்ளது.

இக் கண்டறிதல்கள் அதிர்ச்சி அளிப்பவை என்றாலும், இந்த அறிக்கைகளில் உள்ள தகவல்கள் அனைத்துமே கிட்டத்தட்ட அரசாங்கம், பெருநிறுவனச் செய்தி ஊடகம், இந்திய, சர்வதேச முதலீட்டாளர்கள் விரைவான பொருளாதார வளர்ச்சி நிறைந்த, “இந்திய ஏற்றம் காணப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டது (1993ல் இருந்து 2005 வரை) என்பது குறிப்பிடப்பட வேண்டும். தற்பொழுதைய உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள், மற்றும் அதன் உடனடி விளைவுகளான பெருகும் வேலையின்மை, உணவுப் பொருட்களில் ஊக வணிகம் அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகளைப் பெரிதும் ஏற்றியுள்ளது ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஹிந்து நாளேட்டில் வந்துள்ள எவ்வளவு குறைந்த பணத்தில் ஒரு நபர் வாழமுடியும் என்ற தலைப்புக் கட்டுரையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்ட மையத்தில் முன்னாள் பேராசிரியர் உத்சா பட்நாயக் இந்திய அரசாங்கத்தின் புதிய தர நிர்ணயம் உண்மையில் வறுமை என்று இல்லாமல் தரித்திரத்தின் (பெரும் வறுமை) அடையாளமாக உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

திட்டக்குழுவின் வறுமைக் கோடு பற்றிய நகைப்பிற்கு இடமான மதிப்பீடுகள் எந்த அளவிற்கு வறுமைக் கோடுகள் உண்மைக்குப் புறம்பானவை என்பதைத்தான் அம்பலப்படுத்தியுள்ளன என்று பட்நாயக் எழுதியுள்ளார். பல தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த தொகையானது உணவுச் செலவுகளை மட்டும் குறிப்பிடுவதாக நினைத்து இன்றைய விலைகளில்  மிகக் குறைந்தப்பட்ச ஊட்டச் சத்துத்தேவைகள் அவை பூர்த்தி செய்யமுடியாது எனக் காட்டுகின்றன. ஆனால் இந்த அற்ப அளவு உணவு மட்டும் இன்றி, அனைத்து உணவு அற்ற மற்ற அடிப்படைகளையும் அடக்கியுள்ளது; அதில் ஆடைகள், காலணிகள், சமைப்பதற்கான எரிபொருள், வெளிச்சம் தருவதற்கான சாதனங்கள், போக்குவரத்து, கல்வி, மருத்துவச் செலவுகள் மற்றும் வீட்டு வாடகை ஆகியவையும் அடங்கும். நகர்ப் பகுதிகளில் இந்த மொத்தம் 18 ரூபாய் (அமெரிக்க 36 சென்ட்டுகள்), 14 ரூபாய் (அமெரிக்க 28 சென்ட்டுக்கள்) உணவு, உணவைத்தவிர மற்றவை எனவும், 16 ரூபாய் (29 சென்ட்டுக்கள்), ரூபாய் 10 (20 சென்ட்டுக்கள்) கிராமப்புறப் பகுதிகளிலும் எனவும் அவற்றில் விவசாயிகள் தாங்களே உற்பத்தி செய்து, நுகரும் உணவின் மதிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு சிறு குழந்தைக்குக்கூட இந்த மிக அற்பமான பணத்தில் நடைமுறைச் சுகாதார நிலை தக்க வைக்கப்பட முடியாது, தேவைகளைப் பெற முடியாது என்பது தெரியும். ஆனால் 450 மில்லியன் இந்தியர்கள் வியக்கத்தக்க வகையில் இந்த அளவுகளுக்குக் கீழேதான் வாழ்கின்றனர். இவர்கள் வாழ்கிறார்கள் என்று எந்தப் பொருளுரையிலும் கூறமுடியாது. அவர்களுடைய சக்தி மற்றும் புரதப் பயன்பாடு சராசரியைவிட மிகக் குறைந்தது ஆகும். அவர்கள் குறைந்த எடை கொண்டவர்கள், குன்றிய உடல்வாகைப் பெற்றுவிட்டனர். பொதுமான உணவு, மருத்துவ வசதியைப் பெற முடியாத நிலையில் அதிக நோய்வாய்ப்படும் தன்மைக்கு உட்பட்டவர்களாவர்.”

தலா சக்தி மற்றும் புரத நுகர்வு கடந்த இரு தசாப்தங்களாக பெரும் சரிவுற்றுள்ளது, ஏனெனில் மக்களில் பெரும்பாலானவர்கள் போதுமான உணவைப் பெற முடியவில்லை என்று பேராசிரியர் பட்நாயக் தெரிவித்துள்ளார். “மனித நிலையை ஒட்டி இதை விளக்க வேண்டும் என்றால் 1979 தேசிய மாதிரி அளவு நுகர்வு பற்றிய அறிக்கை ஒன்றில் கொடுத்துள்ள விவரங்களை அடிப்படையாக வறுமைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது, அது ஒரு நபர் 2,400 கலோரிகள் சக்தியை நாள் ஒன்றிற்கு கிராமப் பகுதிகளிலும், 2,100 கலோரிகள் நகரப் பகுதியிலும் பெற்றால் போதும் எனக் கூறியிருந்தது.

ஆனால் தொடர்ந்த தசாப்தங்களில் இந்த அடிப்படை, மிக குறைந்த தன்மையுடைய வாழ்வு கூட பெரும்பான்மையான கிராமப்புற, நகர்ப்புற இந்திய மக்களுக்கு அரிக்கப்பட்டுவிட்டன; இதையொட்டி பட்நாயக் கூறுகிறார்; “இன்று தற்போதைய உத்தியோகபூர்வ வறுமைக் கோடுகள் ரூபாய் 26, (அமெரிக்க 52 சென்ட்டுகள்), ரூபாய் 32 (அமெரிக்க 64 சென்டுக்கள்) என முறையே நகர, கிராமப் பகுதிகளுக்குக் கூறப்படுவது, வாழ்க்கைச் செலவினங்கள் என்பவை மிக மிகக் குறைவாகக் கருதப்படுகின்றன என்பதைத்தான் காட்டுகின்றன; நுகர்வோரால் இப்பணத்தில் இந்த உணவைக்கூடப் பெறமுடியாது. அரசாங்கத்தின் வறுமைக் கோடுகள்  மாறலாம், பல மாநிலங்களில் சக்தி நுகர்வு என உத்தியோகப்பூர்வ வறுமைக் கோடு 1,500 கலோரி நாளொன்றிற்கு என இருந்தால் போதும் எனக் கூறுகின்றன.”

வறுமை சரிந்துள்ளது என்பது உண்மையல்ல, ஏனெனில் பயன்படுத்தப்படும் குறியீட்டு முறை ஊட்டச் சத்துத் தரத்தை நிரந்தரமாக வைத்திருக்கவில்லை; அதையொட்டித்தான் வறுமை அளக்கப்படுகிறது; ஆனால் ஊட்டச்சத்துத்தரமோ தொடர்ந்து குறைக்கப்பட்டுவருகிறது என்று அவர் முடிவுரையாகக் கூறியுள்ளார்.

பட்நாயக் கருத்துப்படி இன்னும் உண்மையான ஊட்டச்சத்து தரம் பயன்படுத்தப்பட்டு, வாழ்க்கையின் வட்டங்கள் முறையாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், 2009-10ம் ஆண்டு சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, குறைந்தப்பட்சம் இந்திய மக்களில் 75 விகிதமாவது வறுமையில் வாழ்வதாகத்தான் வகைப்படுத்திக்கூற முடியும்.

எந்த வரம்பில் வருமான அளவு பயன்படுத்தப்பட்டாலும், தற்கால இந்தியா அதன் சமூக சமத்துவமின்மையைத்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. உலகின் மொத்த ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதி இந்திய எல்லைக்குள் வசிக்கின்றனர். பிகார், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எட்டு இந்திய மாநிலங்களில் நிலவும் வறுமை 26 மிக வறிய நிலையில் உள்ள ஆபிரிக்க நாடுகளையும் விட அதிகமாகத்தான் உள்ளது.

ஆனால் இந்திய சமூகத்தின் எதிர்முனையில், 55 டாலர் பில்லியனர்கள் இப்பொழுது உள்ளனர்உலகிலேயே மொத்தம் 1,210 என்னும் தொகையில் கிட்டத்தட்ட 4.5 விகிதம் இவர்கள் ஆவர். இவர்களுடைய மொத்த செல்வம் 246.5 பில்லியன் டாலர்கள் ஆகும். முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடிக் காலத்தில்கூட, இந்திய பில்லியனர்கள் குழுவின் உறுப்பினர்கள் கடந்த ஆண்டு 10 விகிதம் அதிகமாயினர்.

எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போலவே, இந்திய முதலாளித்துவமும் பொருளாதார நெருக்கடியின் சுமையை சமூகத்தில் குறைந்த அளவு கொடுக்கக் கூடியவர்கள் மீதுதான் சுமத்த முற்படுகிறது; முதலில் அவர்கள் இந்த நெருக்கடிக்குக் காரணமே இல்லை. இந்தியப் பொருளாதாரம் கடந்த இரு தசாப்தங்களில் ஏற்றம் அடைவதற்குத் தேவையான ஆற்றலைப் பல இடர்பாடுகளுக்கு இடையே வாழ்ந்து அளித்த நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்களும் கிராமப்புறத் தொழிலாளர்களும் இன்று பொருளாதாரத் தோல்விக்கு விலை கொடுக்கமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நெருக்கடி இந்தியாவின் பெரும் பாராட்டிற்கு உரிய மத்தியதர வகுப்பில் சேர்ந்துள்ள பல மில்லியன் மக்களின் வாழ்க்கைத் தரங்களில் இருந்தும் பிடுங்கி எடுக்கப்படுகிறது. இதற்கிடையில் 1990களின் தொடக்கத்தில் இந்தியா உலக முதலாளித்துவ சந்தையில் இணைக்கப்பட்டதின் முழு நலன்களை உண்மையில் பெறுபவர்களான பல மில்லியன்ளையும், பில்லியன்களையும் செல்வங்களைக் கொண்ட ஒரு மிக மிகச் சிறிய அடுக்குகளானது ஒரு பில்லியன் மக்களுக்கும் மேலாக உள்ள ஒரு வறிய சமூகத்தின் உயர்மட்டத்தில் வாழ்கின்றனர்.