சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s Socialist Party nominates “Mr. Normal” as its presidential candidate

பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி “திரு. இயல்பானவரை” அதனுடைய ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கிறது

By Antoine Lerougetel
21 October 2011

use this version to print | Send feedback

ஞாயிறன்று சமூக ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஆரம்ப தேர்தலில் பிரான்சுவா ஹோலண்ட் வெற்றி பெற்று 2012 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் கட்சியின் வேட்பாளராக நிற்க உள்ளார். இவர் 1997-2002 லியோனல் ஜோஸ்பன் உடைய பன்முக இடது அரசாங்கத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த மார்ட்டின் ஒப்ரிக்கு எதிராக 56.6% க்கு 43.4% என்ற விகிதத்தில் வாக்குகளை பெற்றார். வாக்களிப்பில் 3 மில்லியனுக்கு சற்றே குறைவானவர்கள் பங்கு பெற்றிருந்தனர்.

அதிக சிறப்புப் பெற்றிராத உயர்மட்ட PS அதிகாரத்துவத்தைச் சேர்ந்த ஹோலண்ட் இப்பொழுதுதிரு. இயல்பானவர் என்ற பரந்தமுறையில் குறிப்பிடப்படுகிறார்: அதாவது ஒருசாதாரண”, “இயல்பான ஜனாதிபதியாக செயலாற்றுவார் என்ற பொருளில். இன்று தேர்தல்கள் நடைபெற்றால் அவர் மிகவும் செல்வாக்கிழந்துள்ள பதவியிலுள்ள கன்சர்வேடிவ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியை தோற்கடிப்பார் என்று கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன.

ஹோலண்ட் மற்றும் ஒப்ரியின் கொள்கைகள் கிட்டத்தட்ட வேறுபடுத்தப்பட முடியாதவை; தங்களுடைய ஆதரவுத் தளத்தை, சார்க்கோசி தொடர்ந்திருந்த சிக்கனக் கொள்கைகள் மீதும் ஐரோப்பாவில் நிதி நெருக்கடி வெடித்தபின் செயல்படும் முழு ஆளும் வர்க்கத்தின் மீதும் கொண்டுள்ளனர். இருவருமே அரச வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை 5.7 சதவிகிதத்திலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2013க்குள் 3.0 சதவிகிதமெனக் குறைத்துவிடுவதாக உறுதியளித்தனர். இது மாஸ்ட்ரிஸ்ட் உடன்பாட்டிற்குக் கீழ்ப்படிதல் ஆகும். இதையொட்டி பெரும் வெட்டுக்கள் அரச செலவுகளில் ஏற்படுத்தப்படும். இவர்கள் வங்கிகளுக்கும் நிதி மூலதனத்திற்கும் முற்றிலும் தாழ்ந்து நடப்பவர்கள்.

தன்னுடைய சிக்கன சார்புக் கொள்கைக்கு ஹோலண்ட் ஏமாற்றுத்தனமாக செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் வகையில் நிதியச் சந்தைகள் மீது மக்களின் சீற்றத்திற்கு ஜனரஞ்சக முறையீடுகளைக் கொடுத்தார். “இடது மற்றும் பிரான்சின் மிக மோசமான விரோதி கடன்தான் என்றார் அவர்; பொதுச் செலவுக் குறைப்பு என்ற செல்வாக்கற்ற செயலில் ஒரு வலதுசாரி அரசியல்வாதி பேசுவது போல் அவர் குறிப்பிட்டார்: “நம்முடைய கணக்குகளை 2013ல் இருந்து சமச்சீர் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் நமது நாடு மீண்டும் நம்பகத்தன்மையைப் பெறும்.”

தன்னுடைய முக்கிய இலக்கு தொழிலாளர்களாகத்தான் இருப்பர் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். Parlons de la France (பிரான்ஸைப் பற்றி நாம் பேசுவோம்) என்று கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அவருடைய புத்தகத்தில், ஹோலண்ட் நலன்புரி அரசுகள் என்னும் கருத்தாய்வுகளையும்கோட்பாட்டில் வளைந்து கொடுக்காத தன்மை என்னும் இடது கருத்துக்களையும் தாக்கினார். “உண்மை நிலை மற்றும் வரவு-செலவுத் திட்ட கட்டுப்பாடு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். அதாவது PS பொதுமக்களைக் கொள்ளையடித்து வங்கிகள் மற்றும் நிதியப் பிரபுத்துவத்திற்கு நிதியளிக்கும் என்பதுதான் இதன் பொருள்.

2012 தேர்தல்களில் மூன்று முன்னணி முதலாளித்துவ வேட்பாளர்கள் சார்க்கோசி, ஹோலண்ட் மற்றும் நவ பாசிசக் கட்சியின் வேட்பாளரான மரின் லு பென் என்று இருப்பார்கள். PS க்கு ஸ்தாபன அரசியல் சார்பு மற்றும் அதன்இடது துணைக் கட்சிகள் இருக்கையில், லு பென், இருக்கும் அரசியல் கட்சிகளிடையே மக்களின் எதிர்ப்பிற்கு தக்க பிரதிநிதி என்று காட்டிக் கொள்ளும் வலுவான நிலையில் உள்ளார்.

அரசியல் ஸ்தாபனத்தில் தொழிலாள வர்க்கம் முற்றிலும் வாக்கற்ற தன்மையில் உள்ளது; தொழிலாளர்கள் இதைச் சீர்திருத்தும் வகையிலோ அழுத்தம் கொடுக்கும் வகையில் எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை. ஒரே முன்னேற்றப்பாதை, முதலாளித்துவத்திற்கு எதிராகவும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA), முன்னாள் PS மந்திரி Jean-Luc Mélenchon தலைமையிலுள்ள இடது முன்னணி போன்றவற்றிற்கு எதிராக புரட்சிகரப் போராட்டத்தை நடத்துவதுதான்இவைதான் PS பற்றிய போலித் தோற்றங்களுக்கு ஊக்கமும் வளர்ச்சியும் அளிக்கின்றன.

ஹோலண்டை தேர்வு செய்தது, PS இன் நீண்டகால வலதுசாரி வரலாற்றையும், தொழிலாள வர்க்கத்தின் மீது அது கொண்டுள்ள ஆழ்ந்த விரோதப் போக்கையும் பிரதிபலிக்கிறது. 57 வயதான ஹோலண்ட் 1979ல் PS ல் சேர்ந்து ஜாக் அட்டாலியின் தலைமையில் இருந்த முதலாளித்துவப் பொருளாதாரக் குழுக்களில் பணிபுரிந்து மித்திரோன் ஜனாதிபதிப் பதவியைப் பெறுவதற்கு ஆலோசனைகளை கொடுத்தார். 1981ல் தேர்ந்தெடுக்கப்பட்டபின், ஹோலண்டிற்கு எலிசே ஜனாதிபதி அரண்மனையில் பொருளாதார ஆலோசகர் என்னும் உத்தியோகபூர்வப் பதவியை மித்திரோன் கொடுத்தார்.

1982-83ல் மித்திரோன் அவருடைய சீர்திருத்தம் கொண்ட தேர்தல் வேலைத்திட்டத்தை கைவிட்டு, சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தி பல ஆலைகளை மூடியதற்கு விசுவாசமாக ஹோலண்ட் இருந்தார்.

1999ல் ஹோலண்ட் சமூக ஜனநாயக சோசலிஸ்ட் இன்டர்நேஷனலின் துணைத் தலைவர் ஆனார். அங்கு அவர் சக ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்வாதிகளைச் சந்தித்தது மட்டும் இல்லாமல், மூன்றாம் உலக சர்வாதிகாரிகள், இந்த ஆண்டு தொழிலாள வர்க்க புரட்சிகரப் போராட்டங்களால் அகற்றப்பட்டவர்களையும், அதாவது துனிசியாவின் ஜேன் எல்-அபிடைன் பென் அலி, எகிப்தின் ஹொஸ்னி முபாரக் ஆகியோரையும் சந்தித்தார். பிந்தைய இருவரும் அவர்கள் அகற்றப்பட்டபின் அவசர அவசரமாக அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

2004ம் ஆண்டு அவர் ஐரோப்பிய அரசியலமைப்பின் தடையற்ற சந்தை முறைக்காக பொது வாக்கெடுப்பில் PS க்குப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தார்; PS ன் முதல் செயலாளர் என்ற முறையில் ஜாக் சிராக்கின் கோலிச அரசாங்கத்துடன் இணைந்துஆம் வாக்கிற்குக் கடுமையாக உழைத்தார். தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதி இந்த அரசியலமைப்பை நிராகரித்தது.

பிரான்சின் ஏகாதிபத்திய போர்களுக்கு இவர் ஆதரவு கொடுத்துள்ளதுடன், 2001ல் ஜோஸ்பன் கீழ் தொடக்கப்பட்ட நேட்டோவின் ஆப்கானிய ஆக்கிரமிப்பு பங்குபெறுவதற்கும் ஆதரவு கொடுத்தார்; இப்பொழுது நவ காலனித்துவ வகையில் லிபிய சீரழிப்பிலும் பங்கு பெற்றுள்ளார்.

ஹோலண்ட் ஜனாதிபதிப் பதவியை வென்றால், தொழிலாளர்களுக்கு எதிரான இடையாறா சமூகப் போரை தொடக்க அவர் முற்படுவார். அவருடைய முன்மாதிரிகளில் ஒருவராக கிரேக்க சமூக ஜனநாயகப் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ இருப்பார்; அவரோ 2009ல் சிறு சமூகச் சீர்திருத்தங்கள் பற்றிய தெளிவற்ற உறுதிமொழிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்பொழுது சர்வதேச நிதிய மூலதனத்தின் கோரிக்கைகளைத் திருப்தி செய்வதற்காக கிரேக்க மக்களைத் திவால் ஆக்கிக் கொண்டிருக்கிறார். கடந்த வெள்ளியன்று துப்பரவுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறிப்பதற்கு பாப்பாண்ட்ரூ இராணுவத்தை திரட்டுவதாகவும், சிறைத் தண்டனை கொடுக்கப்படும் என்ற அச்சுறுத்தலையும் கொடுத்தார். (see “Greek refuse workers threatened with army intervention on eve of general strike”).

அடுத்த அரசாங்கத்திடம் இருந்து சிக்கனக் கொள்கைகள் தேவை என வங்கிகள் ஏற்கனவே அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஹோலண்ட் ஆரம்ப தேர்தல்களில் வெற்றி பெற்ற மறுநாள் கடன்தரத்தை நிர்ணயிக்கும் அமைப்பான மூடிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரெஞ்சு பொருளாதாரம் தாமதப்பட்டுவருவதையும், கிரேக்கத்தின் மோசமான கடன்கள் அனைத்திற்கும் பிரெஞ்சு வங்கிகளுக்கு இழப்பீட்டை அவர் கொடுத்தால் பிரான்சிற்கு ஏற்படக்கூடிய கடன்கள் பற்றியும் எச்சரித்துள்ளது. பொதுச் செலவுக் குறைப்புக்களை தீவிரமாக மூன்று மாத காலத்திற்குள் நடத்த வேண்டும் என்று மூடிஸ் பிரான்சிற்கு அவகாசம் கொடுத்துள்ளது. இல்லாவிடின் பிரான்சின் AAA தரம் குறைக்கப்படும் என்று கூறியுள்ளது; இத்தரம்தான் பிரான்சை குறைந்த வட்டி விகிதத்திற்குக் கடன்களைப் பெற உதவியுள்ளது.

கணிசமான வலதுசாரி முதலாளித்துவப் பிரிவுகள் ஹோலண்டைத் தங்கள் வேட்பாளர் போல் கருதுகின்றன. முன்னாள் வலதுசாரி ஜனாதிபதி ஜாக் சிராக் சார்க்கோசிக்கு எதிராக ஹோலண்டிற்கு வாக்களிப்பதாகக் கூறியுள்ளார். தன்னுடைய பிரச்சாரக் குழுவிற்குள் PS ன் Jean-Pierre Jouyet ஐ ஹோலண்ட் கொண்டுவந்துள்ளார்; அவர் 2008 ல் வலதுசாரி சார்க்கோசி நிர்வாகத்தில் ஐரோப்பிய விவகாரங்களுக்கான மந்திரியாக இருந்தார். ஹோலண்ட் ஜனாதிபதிப் பதவியை வென்றால் Jouyet எலிசியின் தலைமைச் செயலராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னுடைய பங்கிற்கு முதலாளித்துவ ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வஇடது இப்பொழுது முழுவீச்சில் ஹோலண்டிற்கு ஆதரவைத் திரட்டுகிறது. PS ன் Arnaud Montebourg—ஆரம்ப தேர்தல்களில் ஒருஇடது வேட்பாளர் எனக் காட்டிக் கொண்டவர், சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களை அகற்றி, பாதுகாப்புவாதம் நிறைந்த வணிகக் கொள்கையைச் செயல்படுத்துவதாகக் கூறியவர்ஹோலண்டின் சிக்கனச் சார்புடைய வேட்பாளர் தன்மைக்கு நாணமற்ற ஆதரவாளராகப் போய்விட்டார். தன்னுடைய ஆதரவாளர்களிடம் தேர்தலில் தான் ஹோலண்டிற்கு வாக்களிக்க இருப்பதாக மொன்டபேர்க் கூறினார். ஹோலண்டிற்கு வெற்றி என்பது PS இப்பொழுதுசவாலுக்கு இடமில்லாத தலைவரைக் கொண்டுள்ளது”, என்று அவர் பாராட்டி, “கட்சியின் புதுப்பித்தல் முறையில் அசாதாரணத் தன்மை நிலவுகிறது என்று கேலிக்கூத்தான கருத்தையும் வெளிப்படுத்தினார்.

இவருடைய பாதுகாப்புவாதம் ஆதரவு அரங்கு போலி இடது கட்சிகளான இடது முன்னணி போன்றவற்றிற்கு அழைப்புவிடும் வகையில் உள்ளது; அக்கட்சியில் ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF), புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ஆகியவை உள்ளன. இக்கட்சிகள் PS ஐப் பற்றிய போலித்தோற்றங்களை தக்க வைக்க முற்படுகின்றன; ஹோலண்டின் தொழிலாளர் எதிர்ப்பு வேட்பாளர் தன்மையை இடதின் எதிர்ப்புத் தடுக்க முற்படுகின்றன. நிதிய, அரசியல் ஆதரவிற்கு PS ன் உதவியைத்தான் PCF நம்பியுள்ளது; NPA யில் பெரும் பிரிவுகள் PS உடன் கூட்டு ஆட்சிக்கான தன்மையை வளர்க்க விரும்புகின்றன. (see “French New Anti-Capitalist Party’s summer school marks new rightward lurch”).

ஹோலண்டின் திட்டத்தைமுற்றிலும் குறைந்த இடது தன்மை என்று இடது முன்னணியின் Mélenchon கூறியதுடன், அக்டோபர் 18ம் திகதி Mediapart  க்குக் கொடுத்த பேட்டியில் ஹோலண்டைஅறிவார்ந்தவர், நேர்த்தியுடன் பழகக் கூடியவர், பல விளக்கங்களை எடுத்துக் கூறுபவர் என்று பாராட்டினார்.