WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
அமெரிக்காவும்
நேட்டோவும் முயம்மர் கடாபியைக் கொலை
செய்தன
By Bill Van Auken
21 October 2011
use
this version to print | Send
feedback
வியாழனன்று பதவியில் இருந்து இறக்கப்பட்ட லிபியத் தலைவர் முயம்மர் கடாபியை
காட்டுமிராண்டித்தனமாகக் கொன்றது கடந்த எட்டு மாதங்களாக அமெரிக்கா மற்றும் நேட்டோ
தொடர்ந்திருந்த போரின் குற்றம்சார்ந்த தன்மையை எடுத்துக் காட்டஉதவுகிறது.
கடாபியின் சொந்த ஊரும்,
அவருடைய ஆதரவு மையமுமான லிபியக் கடலோர நகரத்தை நேட்டோப் படைகள் ஒரு மாதக்
காலத்திற்கும் மேலாக முற்றுகை நடத்தியதைத் தொடர்ந்து இப்படுகொலை நிகழ்ந்துள்ளது.
100,000
மக்களைக் கொண்ட இந்நகரத்தின் மீதான தாக்குதல் அநேகமாக ஒவ்வொரு கட்டிடத்தையும்
தகர்த்தது;
கணக்கிலடங்கா குடிமக்கள் மடிந்தனர்,
காயமுற்றனர்,
நோய்வாய்ப்பட்டனர்;
அவர்களுக்கு உணவு,
குடிநீர்,
மருத்துவ வசதிகள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டிருந்தன.
நேட்டோ ஆதரவுடைய
“எழுச்சியாளர்களுக்கு”
எதிர்ப்பின் கடைசிக் கோட்டையும் விழுந்தவுடன் முற்றுகையிலிருந்து தப்பிக்க வாகன
வரிசையில் ஒரு வாகனத்தில் கடாபி பயணத்திருக்க வேண்டும்.
நேட்டோ போர் விமானங்கள் இந்தக் கார் வரிசையை வியாழன் காலை
8.30
க்குத் தாக்கின;
பல வாகனங்கள் எரிந்ததுபோய்விட்டன;
இதையொட்டி அவைகள் முன்னே நகரமுடியாமற் போயின.
இதன்பின் ஆயுதமேந்திய கடாபி எதிர்ப்புப் குடிப்படைகள் கொலை செய்வதற்குச் செயல்பட்டன.
பல கடாபியின் உயர்மட்ட உதவியாளர்கள்,
விசுவாசமாக போரிட்டவர்கள் மற்றும் அவருடைய இரு மகன்கள் மொடாசிம்,
சைப் அல்-இஸ்லாம்
ஆகிய பல உயிர்களை கொன்றதாக தெரியவந்துள்ள ஒரு பெரிய படுகொலையின் ஒரு பகுதியாகத்தான்
கடாபியின் இறப்பு தோன்றுகிறது.
கொலைகளின் விபரங்கள் இன்னும் தெளிவற்று இருக்கும் நிலையில்,
நேட்டோ ஆதரவு பெற்ற
“எழுச்சியாளர்கள்”
வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் கைபேசி வீடியோக்கள் காயமுற்ற கடாபி தன்னைக்
கைப்பற்றியவர்களுடன் போராடுவதையும் ஒரு வாகனத்தின் பின்புறத்தில் தள்ளப்படுகையில்
கூச்சலிடுவதையும் காட்டுகின்றன.
இதன்பின் அவருடைய உயிரிழந்த சடலம் இரத்தம் கொட்டிய நிலையில் காட்டப்படுகிறது.
ஒருவேளை நேட்டோ வான் தாக்குதல்களில் முதலில் காயம் அடைந்த பின் முன்னாள் லிபியத்
தலைவர் உயிருடன் பிடிபட்டிருக்க வேண்டும் அதன் பின் கொலை செய்யப்பட்டிருக்க
வேண்டும் என்பது தெளிவாகிறது.
ஒரு புகைப்படம் அவரைத் தலையில் ஒரு தோட்டாத் துளையுடன் காட்டுகிறது.
கடாபியின் உடல் பின்னர் மிஸ்ரடா நகரத்திற்கு மேற்கே கொண்டு செல்லப்படுகிறது;
அங்கு ஒரு மசூதியில் கொடுக்கப்படுவதற்கு முன் தெருக்களில் இழுத்துச்
செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடாபியின் உடல் எங்குள்ளது என்பது அரசியல் முக்கியத்துவம் கொண்டது;
ஏனெனில் இது
(தேசிய
இடைக்காலக் குழுவின்
(NTC))
பெங்காசியைத் தளமாகக் கொண்ட
மிஸ்ரடா போராளிப் பிரிவினால் கைப்பற்றப்பட்டது.
அது இடைக்காலக் குழுவிற்கு விசுவாசமற்ற பிரிவாகும். தேசிய இடைக்காலக் குழுவை
வாஷிங்டன் மற்றும் நேட்டோ ஆகியவை லிபிய மக்களின்
“ஒரே
நெறியான பிரதிநிதி”
என பட்டம் சூட்டியுள்ளனர்.
எனவே ஜனாதிபதி பாரக் ஒபாமா வெள்ளை மாளிகை ரோசாத் தோட்டத்தில்
“ஒரு
புதிய மற்றும் ஜனநாயக லிபியாவின்”
வருகை என்று போற்றப்பட்ட இந்த கோர நிகழ்வு,
உண்மையில் பிராந்திய மற்றும் பழங்குடி பூசல்களைத்தான் வெளியே கொண்டுவந்துள்ளது;
இது ஒரு நீடித்த உள்நாட்டுப் போருக்கு வகை செய்யும்.
அமெரிக்கா,
பிரான்ஸ் இரண்டுமே கடாபி கொலையில் தன் பங்கைப் பற்றி உரிமை கோரின.
வியாழனன்று அமெரிக்க பிரிடேட்டர் ஒன்று லிபிய தலைவரின் வாகன வரிசை மீது ஹெல்பைர்
ஏவுகணையை வீசியாதாகக் கூறியது;
பிரான்ஸின் பாதுகாப்பு மந்திரியோ பிரெஞ்சு போர் விமானங்கள் வாகனவரிசையைத்
தாக்கியதாகக் கூறினார்.
அமெரிக்காவும் நேட்டோவும் திரிப்போலியின் கடாபி வளாகங்கள் மற்றும்
அவர்கள் கடாபி மறைந்திருந்த இடம் என்று சந்தேகித்த பல இடங்களில் பல முறை வான்
தாக்குதல்களை கடந்த மார்ச் மாதம் லிபியாவிற்கு எதிரான மிருகத்தன
வான்தாக்குதல்களுக்குப் பின் தொடர்ந்து நடத்தின.
இத்தாக்குதல்களில் ஒன்று கடந்த ஏப்ரல் மாத முடிவில் அவருடைய இளைய மகன் மற்றும்
மூன்று சிறுவர்களின் உயிர்களைக் கொன்றன.
வாஷிங்டன் பலமுறை கடாபியைத் தேடும் முயற்சியில் ஏராளமான டிரோன்களுடன் கண்காணிப்பு
விமானங்களையும் பயன்படுத்தியது;
அதே நேரத்தில் அமெரிக்க,
பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு உளவுத்துறை முகவர்கள்,
சிறப்புப் படைத் துருப்புக்கள் மற்றும் இராணுவ
“ஒப்பந்தக்காரர்கள்”
தரையில் செயல்பட்டு மனித வேட்டையில் ஈடுபட்டனர்.
கடாபி கொலைக்கு இரண்டு நாட்கள் முன்பு அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி
கிளின்டன் திரிப்போலிக்கு பெரும் ஆயுதக் கவசத்தைக் கொண்டிருந்த இராணுவ விமானத்தில்,
முன்கூட்டி அறிவிக்கப்படாத வருகை புரிந்தார்.
அங்கு அவர் கடாபி
“உயிருடனோ
அல்லது மடிந்தோ”
கொண்டுவரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அசோசியேட்டட் பிரஸ் தகவல் கொடுத்துள்ளது போல்,
கிளின்டன்,
“அசாதாரணமான
அப்பட்டமான முறையில் அமெரிக்க முன்னாள் சர்வாதிகாரி முயம்மர் கடாபி மடிதலை
விரும்புகிறது”
என்றார்.
“அவரை
விரைவில் கைப்பற்றமுடியும் அல்லது கொல்லமுடியும் என நாங்கள் நம்புகிறோம்;
இதையொட்டி அவரைப் பற்றி நீங்கள் அச்சம் இனிக் கொள்ள வேண்டியதில்லை”
என்று கிளின்டன் தலைநகரில் நகர அரங்கு மாதிரிக் கூட்டத்தில் மாணவர்களுக்கும்
மற்றவர்களுக்கும் கூறினார்.
“இதுவரை
அமெரிக்கா பொதுவாக கடாபி கொல்லப்பட வேண்டும் எனக் கூறுவதைத் தவிர்த்துள்ளது”
என்று AP
மேலும் கூறியுள்ளது.
ஆனால் உண்மையில் வாஷிங்டன் பகிரங்கமான அரச கொலை என்னும் கொள்கையை தொடர்கிறது.
இங்கு அது அதை வெளிப்படையாக வாதிட்டு கடந்த எட்டு ஆண்டுகளாக அமெரிக்க அரசாங்கம்,
அரசியல் வணிக உறவுகளை நெருக்கமாக நிறுவியிருந்த ஒரு நாட்டின் தலைவரைக் கொலை
செய்வதற்கு அனைத்து ஆதாரங்களையும் அளித்தது.
கடாபியின் மகன் உயிரோடு பிடிக்கப்பட்டு பின்னர் கொலையுண்ட மொடாசின்னின்
சிதைக்கப்பட்ட சடலமும் மிஸ்ரடாவில் பார்வையாளர்கள் காணுமாறு வைக்கப்பட்டது.
ஏப்ரல்
2009ல்தான்
அவர் அமெரிக்க வெளிவிவகார அலுவலகத்தில் ஹில்லாரி கிளின்டனால் வரவேற்கப்பட்டார்.
வியாழனன்று ரோசாத் தோட்டத்தில் நிகழ்த்திய உரையில் ஒபாமா தன்னுடைய நிர்வாகம் அல்
கெய்டா தலைவர்களைச் செயலற்றுச் செய்துவிட்டதாகப் பெருமை பேசிக்கொண்டார்;
இது ஒரு மாபியாத் தலைவர் பெருமை பேசிக் கொள்வது போல் விளங்கியது.
அவரால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட இரு அமெரிக்கக் குடிமக்கள்,
கடந்த மாதம் கொல்லப்பட்ட அரிசோனாவில் பிறந்த யேமனி அமெரிக்க முஸ்லிம் மதகுரு,
அன்வர் அவ்லகி,
மற்றும் இரு வாரங்களுக்குப் பின்னர் கொலையுண்ட டென்வரில் பிறந்த அவருடைய
16வயது
மகன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர்.
இருவரும் அமெரிக்கப் பாதுகாப்புக் குழுவின் துணைக்குழு ஒன்றினால்
“கொலைசெய்யப்பட
வேண்டியவர் பட்டியலில்”
இருத்தப்பட்டனர்.
அப்துல் ரஹ்மான் அவருடைய
17
வயது நெருங்கிய உறவினர் மற்றும் ஏழு நண்பர்களுடன் விருந்து உட்கொண்டிருந்தபோது
கொலையுண்டார்.
கடாபியின் கொலை கணக்கிலடங்கா லிபியர்களைக் கொன்று நாட்டின் பெரும்பகுதியை
அழித்துவிட்ட ஒரு குற்றம் சார்ந்த போரின் உச்சக்கட்டம் ஆகும்.
இந்த நடவடிக்கை குடிமக்களைப் பாதுகாத்தல் என்ற போலிக்காரணம் காட்டித்
தொடக்கப்பட்டது;
கடாபி,
கிழக்கே உள்ள பெங்காசி நகரில் வாழும் அவருடைய எதிர்ப்பாளர்களைப் படுகொலை செய்ய
அந்நகரை முற்றுகையிடத் தயார் என்ற தயாரிக்கப்பட்ட கூற்றைத் தளமாகக் கொண்டிருந்தது.
இது நேட்டோ வழிநடத்திய சிர்ட்டே முற்றுகையுடன் முடிந்தது;
இதில்
“எழுச்சியாளர்களுக்கு”
எதிர்ப்புக் காட்டியதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் கொலையுண்டனர்,
காயமுற்றனர்,
நசுக்கப்பட்டனர்.
தொடக்கத்தில் இருந்தே,
முழு நடவடிக்கையும் வட ஆபிரிக்காவை மறு காலனியாக்கத்திற்கு உட்படுத்த வேண்டும் என்ற
நோக்கத்தில் இயக்கப்பட்டது;
இது அமெரிக்கா,
பிரிட்டன்,
பிரெஞ்சு,
இத்தாலிய மற்றும் டச்சு எண்ணெய் நலன்களுக்காக தொடக்கப்பட்டது.
கடந்த தசாப்தத்தில் கடாபி அமெரிக்கா,
பிரிட்டன்,
பிரான்ஸ் மற்றும் பிற மேற்கத்தையச் சக்திகளின் தயவை நாடி நின்று,
பெரும் செல்வம் கொடுத்த எண்ணெய் உடன்பாடுகளைக் கொண்டு,
ஆயுதங்கள் வாங்கும் உடன்பாடுகளையும் பிற ஒப்பந்தங்களையும் கொண்டிருந்த நிலையில்,
அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதேபோன்ற ஐரோப்பிய சக்திகளும் அவருடைய ஆட்சியை
அப்பிராந்தியத்தில் தங்கள் நோக்கங்களுக்கு ஒரு தடை எனக் கண்டன.
வாஷிங்டன்,
லண்டன் மற்றும் பாரிஸின் முக்கிய அக்கறைகளுள் ஒன்றாக லிபியாவிலும் இன்னும் பொதுவாக
ஆபிரிக்கா முழுவதுமே பெருகிய சீன,
ரஷ்யப் பொருளாதார நலன்கள் இருந்தன.
சீனா இருதரப்பு வணிகத்தில்
5.5
பில்லியன் டொலர்களை எட்டியது:
முக்கியமாக எண்ணெய்த்துறையில்;
அதே நேரத்தில்
30,000
சீனத் தொழிலாளர்கள் பரந்த உள்கட்டுமைப்புத் திட்டங்களில் பணிபுரிந்தனர்.
இதற்கிடையில் ரஷ்யா பரந்த எண்ணெய் ஒப்பந்தங்களைக் கொண்டது,
ஆயுத விற்பனைகளை மில்லியன் கணக்கான டாலர்களுக்குச் செய்தது;
அதைத்தவிர சிர்ட்டேயையும் பெங்காசியையும் இரயில் மூலம் இணைக்கும்
3
பில்லியன் டாலர்கள் திட்டத்தையும் கொண்டிருந்தது.
ரஷ்யக் கடற்படைக்கு பெங்காசிக்கு அருகே ஒரு மத்தியதரைக்கடல் துறைமுகம் ஒன்றை
அளிப்பது பற்றிய பேச்சுக்களும் இருந்தன.
பிரான்ஸின் நிக்கோலா சார்க்கோசியின் அரசாங்கத்தின் கோபத்தைத் தூண்டும் வகையில்
கடாபி அவருடைய மத்தியதரைக் கடல் ஒன்றியம் தோற்றுவித்தல் என்னும் திட்டத்திற்கு
விரோதப் போக்கைக் காட்டினார்;
அதுவோ பிரான்சின் முன்னாள் காலனிகள் மற்றும் அப்பாலும் பிரான்சின் செல்வாக்கை
மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கம் கொண்டிருந்தது.
மேலும் முக்கிய அமெரிக்க,
மேற்கத்தைய எரிசக்திப் பெருநிறுவனங்கள் கடாபி அரசாங்கம் கோரிய ஒப்பந்த விதிகளைக்
கடுமையெனக் கொண்டுப் பெருகிய முறையில் கொதித்தன;
மேலும் ரஷ்ய எண்ணெய் நிறுவனம் காஸ்ப்ரோம் நாட்டின் ஆதாரங்களில் பெரும் பங்கைப்
பெறும் என்ற அச்சுறுத்தலையும் உணர்ந்தன.
இப்பொருளாதார,
மூலோபாய உந்துதல்களுடன் அரசியல் காரணிகளும் இணைந்தன.
கடாபி மேற்குடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டது,
வாஷிங்டன் மற்றும் பாரிசை நாட்டை ஏகாதிபத்தியச் சக்திகள் எடுத்துக் கொள்ள
ஒத்துழைக்கத் தயாராக இருக்கும் கூறுபாடுகளுடன் நெருக்கமாகப் பழக உதவியது.
இவர்களுள் கடாபியின் முன்னாள் நீதித்துறை மந்திரியும் இப்பொழுது நேட்டோ ஆதரவு பெற்ற
இடைக்கால தேசிய குழுவின் தலைவர் முஸ்தாபா அப்துல் ஜலீல் மற்றும் முன்னாள்
பொருளாதாரத்துறை அதிகாரியும் இப்பொழுது
இடைக்கால தேசிய குழுவின்
அமைச்சரவையின் தலைவருமான மஹ்முத் ஜிப்ரிலும் உள்ளனர்.
லிபியாவின் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் உள்ள துனிசியா மற்றும் எகிப்தில்
மக்கள் எழுச்சி ஏற்பட்ட நிலையில் அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும்
லிபியாவில் ஆட்சி மாற்றம் குறித்துச் சிறிது நாளாகத் தாயரிக்கப்பட்ட செயற்பட்டைச்
செயற்படுத்த உகந்த வாய்ப்பு எனக் கருதின.
நாட்டில் முகவர்களைக் கொண்டு அவைகள் கடாபி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி கடாபி
விரோத ஆர்ப்பாட்டக்காரர்களை தம் பக்கம் ஈர்த்து ஆயுதமேந்திய மோதலுக்குத்
தயாரிப்புக்களைக் கொடுத்தன.
ஒரு நேரடி ஏகாதிபத்திய சக்தி எடுத்துக் கொள்வதற்கான தயாரிப்பாக,
அவைகள் நன்கு தெரிந்த பாதையான நாட்டின் தலைவரை இழிவுபடுத்தும் பிரச்சாரம்,
வெளித் தலையீடு ஒன்றுதான் படுகொலை என்னும் அச்சுறுத்தலில் இருந்து நிரபராதியான
குடிமக்களைக் காக்கும் என்ற கருத்தை வளர்த்தன.
பெங்காசி தவிர்க்கமுடியாமல் அழிக்கப்பட்டுவிடும் என்று கூறப்பட்டது ஏகாதிபத்திய
போருக்கு ஆதரவைப் பயன்படுத்த உதவியது;
ஒரு முழு அளவு முன்னாள் இடதுகள்,
தாராளவாதிகள்,
உயர்கல்விக் கூடத்தினர் மற்றும் மனித உரிமைகளை வாதிடுவோர்,
இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு,
கொலைகள் என்ற செயற்பாட்டிற்குத் தங்கள் அறநெறி ஆதரவு,
அறிவார்ந்த பலம் ஆகியவற்றைக் கொடுத்தனர்.
மிச்சிக்கன் பல்கலைக்கழகத்தின் மத்தியதரைக் கிழக்குப் பகுதி வரலாற்றுப் பேராசிரியர்
ஜுவன் கோல் போன்றவர்கள்,
ஈராக் படையெடுப்பை புஷ் நிர்வாகம் நடத்தியது குறித்துக் குறைந்த அளவு குறைகூறலைத்
தெரிவித்தவர்கள்,
லிபியாவின் பென்டகன் மற்றும் நேட்டோவின்
“மனிதாபிமான”
பணி வளர்ச்சி குறித்து ஆர்வத்துடன் வரவேற்றனர்.
ஏகாதிபத்தியத்திற்கு புதுத் தளமாகிவிட்ட மத்தியதர உயர்மட்ட வர்க்கத்தின் சமூக
அடுக்கின் பிரதிநிதிகள் அரசியல்,
அறநெறி வழிகளில் முற்றிலும் சமரசத்திற்கு உள்ளாயினர்.
இந்த முயற்சியின் முழுச் சட்டவிரோதத்தன்மை பற்றியும் அவர்கள் பொருட்படுத்தவில்லை;
அதேபோல் எழுச்சியாளர்கள் எனப்பட்டவர்கள் குடியேறிய கறுப்பு லிபியர்களைக் கொலை
செய்தது மற்றும் சித்திரவதை செய்தது குறித்துப் பெருகிய சான்றுகளையும்
பொருட்படுத்தவில்லை.
லிபிய ஆட்சி மாற்றத்தை மக்கள் புரட்சி எனச் சித்தரித்த அவர்கள் முயற்சி ஒவ்வொரு
நாள் கடக்கப்படும்போது இன்னும் அயோக்கியத்தனமாயிற்று.
உறுதியற்ற கைப்பாவை அரசாங்கம்,
இப்பொது பெங்காசியிலும் திரிப்போலியிலும் உருவாகிக் கொண்டிருப்பது இடைவிடாத பெரும்
நேட்டோ குண்டுத்தாக்குதல்கள்,
கொலைகள்,
சர்வதேசச் சட்டங்கள் மீறப்படுவது ஆகியவற்றால் சாதிக்கப்பட்டது.
உலகிற்கு லிபியா ஓர் எச்சரிக்கையாக வெளிப்பட்டுள்ளது.
அமெரிக்க நலன்களுக்குக் குறுக்கே நிற்கும் எந்த ஆட்சியும்,
பெருநிறுவனங்களுக்கு இயைந்து நடக்காத எந்த ஆட்சியும்,
நேட்டோ ஆணையைச் செயல்படுத்தாத எந்த ஆட்சியும்,
இராணுவ வலிமையினால் அகற்றப்படலாம்,
அதன் தலைவர்கள் கொலை செய்யப்படலாம் என்பதே அது.
ஏற்கனவே சிர்ட்டேக்கு வெளியே குருதி கொட்டப்பட்டது குறித்து இழிந்த களிப்பைக்
கொண்டாடிய அமெரிக்கச் செய்தி ஊடகம் நேட்டோவை லிபிய தலையீடு போல் சிரியாவிலும் செய்ய
வேண்டும் எனக் கூவுகிறது.
தன்னுடைய பங்கிற்கு வியாழனன்று கிளின்டன் பாக்கிஸ்தான் தலைவர்களை ஆப்கானிஸ்தானில்
நடைபெறும் அமெரிக்கப் போருக்குப் போதுமான ஆதரவு இல்லை என்றால் அவர்கள் அதற்கு
“மிகப்
பெரிய விலை கொடுக்க வேண்டும்”
என்று எச்சரித்தார்.
இன்னும் வருங்கால நடவடிக்கைகள் வரவுள்ளன என்பதில் ஐயமில்லை;
பெரிய போர்கள் குவிப்பில் உள்ளன;
பேரழிவுதரும் விளைவுகள் வரும் என அச்சுறுத்துகின்றன.
ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே ஈரானுக்கு அனைத்து விருப்பத் தேர்வுகளும்
“மேசை
மீது உள்ளன”
என்று தெரிவித்து விட்டது;
வாஷிங்டனில் சவுதி அரேபியத் தூதரைப் படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுச் சதி
செய்துள்ளது என்ற கட்டுக்கதை இதையொட்டிப் பரப்பப்பட்டுள்ளது.
மேலும் லிபியத் தலையீடு சீன,
ரஷ்யச் செயல்வாக்கை இப்பகுதியிலும் உலகளவிலும் எதிர்ப்பதில் பெரிய பங்கைத்தான்
கொண்டுள்ளது;
எனவே சீனா,
ரஷ்யா இரண்டுமே வருங்கால இலக்குகளாகக் காணப்படுகின்றன.
லிபியாவில் இரத்தக்களரியும்,
அவற்றினால் எடுத்துக்காட்டப்படும் பொருளாதார உந்துதல்கள் ஆகியவை ஏகாதிபத்தியத்தின்
உண்மைக் குணத்தைப் பற்றிப் புதுப் படிப்பினையை அளிக்கின்றன.
உலக முதலாளித்துவத்தைப் பீடித்துள்ள நெருக்கடி மீண்டும் உலகப் போர் என்னும்
அச்சுறுத்தலைக் காட்டுகிறது.
இந்த அச்சுறுத்தலை தொழிலாள வர்க்கம் தன் சுயாதீன அரசியல் வலிமையைத் திரட்டி,
உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தில் தன்னை மீண்டும் ஆயுதபாணியாக்கி,
இராணுவவாதத்திற்கு ஆதாரமாக இருக்கும் இலாப முறைக்கு முற்றுப் புள்ளிவைப்பதின்
மூலம்தான் முடியும். |