WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
லிபியாவில்
NTC-NATO
தாக்குதலில் சிர்ட்டே அழிக்கப்பட்டது
By
Chris Marsden
18 October 2011
use
this version to print | Send
feedback
லிபிய
நகரான
சிர்ட்டே
கிட்டத்தட்ட
அழிக்கப்பட்டுள்ளது,
அதில்
வசிக்கும்
மக்கள்
வீடற்ற
அகதிகளாக
மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலைமைகள்
பற்றி
பெரிதும்
தகவல்
வெளிவரவில்லை;
ஆனால்
வெளிவந்துள்ள
செய்தி
ஊடகத்
தகவல்கள்
“எழுச்சியாளர்களின்”
தேசிய
இடைக்கால
சபையின்
(TNC)
மற்றும்
நேட்டோத்
தாக்குதலினால்
அழிக்கப்படும்
ஒரு
நகரத்தின்
தன்மையைத்தான்
சித்தரிக்கின்றன.
அவற்றின்
குண்டுத்
தாக்குதல்களுக்கு
எதிராக
நகரத்தில்
பாதுகாப்பு
ஏதும்
இல்லை.
“பல
வாரங்கள்
தீவிர
மோதலுக்குப்
பின்,
முயம்மர்
கடாபியின்
தாயக
நகரம்
சனிக்கிழமையன்று
பெரிதும்
அழிக்கப்பட்டுவிட்டது
போல்
தோன்றுகிறது;
பெரும்பாலான
மக்கள்
தப்பி
ஓடிவிட்டனர்;
வீட்டுக்
கட்டிடங்களில்
தெரு
வடிகால்
மூடிகள்
போன்ற
அளவில்
பெரும்
ஓட்டைகள்
விழுந்துவிட்டன;
அகற்றப்பட்டுவிட்ட
தலைவரின்
பெருமைச்
சின்னமான
மாநாட்டு
மையத்தின்
நிலைமையும்
இப்படித்தான்
உள்ளது”
என்று
வாஷிங்டன்
போஸ்ட்
முயம்மர்
கடாபியின்
கடலோர
நகரான
100,000 மக்கள்
வசித்த
இடத்தைப்
பற்றி
எழுதியுள்ளது.
ஒருகாலத்தில்
லிபியாவில்
நகர்ப்புற
வளர்ச்சிக்கு
எடுத்துக்
காட்டாகக்
கருதப்பட்ட
சிர்ட்டே
நகரம்,
நேட்டோ
குண்டுத்தாக்குதல்
மற்றும்
தேசிய
இடைக்கால
சபையின்
தாக்குதல்களுக்கு
ஆகஸ்ட்
கடைசியில்
திரிப்போலி
வீழ்ச்சியைத்
தொடர்ந்து
இலக்காகி
உள்ளது.
கடந்த
10 நாட்களில்
இதன்
மீதான
தாக்குதல்
மிகத்
தீவிரமாயிற்று.
“சிர்ட்டேயில்
விளைவிக்கப்பட்டுள்ள
சேதம்
அதில்
வாழும்
மக்கள்
அமைதியாக
கடாபிக்குப்
பின்
என்ற
வருங்காலத்தில்
நுழைவார்களோ
அல்லது
நீறுபூத்த
நெருப்பு
போன்ற
அவர்கள்
சீற்றம்
ஒரு
எழுச்சியைத்
தூண்டிவிடுமோ
என்ற
வினாவை
எழுப்பியுள்ளது”
என்று
போஸ்ட்
கூறியுள்ளது.
கடாபி
அகற்றப்பட்டதற்கு
ஆதரவு
கொடுக்கும்
பிரிட்டனின்
டெலிகிராப்,
ஒருகாலத்தில்
“பல்கலைக்கழகம்,
மருத்துவமனைகள்,
பளபளக்கும்
கடல்
முகப்பு
மற்றும்
பளிங்குத்தரை
மாநாட்டு
மையத்தைக்
கொண்டு
உலகெங்கிலும்
இருந்து
வந்த
தலைவர்களை
வரவேற்ற
சிர்ட்டே
இப்பொழுது
‘இழிந்த
அழிவுகளில்’
உள்ளது”
எனக்
கருத்தைத்
தெரிவித்துள்ளது.
“எதிர்ப்புப்
போராளிகள்கூட
பேரழிவைக்
காணும்
நகரம்
எந்த
அளவிற்கு
மறுசீரமைப்பு
மூலம்
மீண்டும்
மக்கள்
வசிக்கும்படி
செய்ய
இயலும்
என்பதைக்
கூறுவது
கடினம்
என
ஒப்புக்
கொண்டுள்ளனர்”
என
அது
குறிப்பிட்டுள்ளது.
“ஒரு
காலத்தில்
மிகவும்
வசதியுடன்
இருந்த
வீடுகளின்
தொகுப்புக்களில்
இப்பொழுது
தகர்ப்புக்களும்,
அழிவுகளும்தான்
எஞ்சியுள்ளன.
…இது
சேச்சினியில்
குருதி
கொட்டிய
ரஷ்யப்
போரின்
முடிவிற்குப்
பின்
க்ரோஸ்னி
இருந்த
கொடூர
நிலையைத்தான்
நினைவுபடுத்துகின்றது;
லிபியாவில்
வேறு
எங்கும்
இந்த
அளவு
நாசம்
இல்லை.
200 முதல்
500 கடாபி
விசுவாசிகள்
இன்னும்
தாக்குதலில்
ஈடுபட்டுள்ள
தெருத்
தொகுப்புக்கள்
பகுதி
ஒரு
கொலைக்களமாக
மாறியுள்ளது;
இதில்
கடாபி
விசுவாசிகள்,
சாதாரணக்
குடிமக்கள்
மற்றும்
புதிய
லிபிய
அரசாங்கத்தின்
படைகள்
ஆகியவை
ஒவ்வொரு
நாளும்
மடிந்து
வருகின்றனர்.”
மீண்டும்
திரும்பி
வந்த
முன்னாள்
குடியிருப்பாளர்கள்
“கிட்டத்தட்ட
ஒவ்வொரு
வீடும்
கட்டிடமும்
ராக்கெட்
அல்லது
எறிகுண்டுத்
தாக்குதலினால்
சேதம்
அடைந்துள்ளது,
எரிந்துவிட்டது,
அல்லது
குண்டுத்துளைகளைக்
கொண்டுள்ளது
எனக்
காண்கின்றனர்.
தெருக்களில்
நீர்
வெள்ளம்
போல்
செல்லுகிறது,
நகரத்தின்
உள்கட்டுமானம்
பெரும்
நாசத்தில்
சிதைந்துள்ளது”
என்று
ராய்ட்டர்ஸ்
எழுதுகிறது.
இந்நிகழ்வுகள்
லிபியாவிற்கு
எதிரான
போரை
நேட்டோ
தொடங்கும்போது
கூறிய
போலிக்காரணங்களை
சிதைக்கின்றன—அதாவது
எதிர்ப்பாளர்கள்
மீது
பெரும்
பதிலடியை
கடாபி
கொடுக்காமல்
தடுப்பதற்கு
அவரிடம்
இருந்து
ஆயுதங்களைக்
களைவதற்கு
ஒரு
நேட்டோ
குறுக்கீடு
தேவை
என
நியாயப்படுத்திய
கூற்றுக்கள்
அம்பலமாகிவிட்டன.
பாதுகாப்பற்ற
எதிர்ப்பாளர்கள்
மீதான
பதிலடி
என்று
திட்டமிடுவதற்குப்
பதிலாக
லிபிய
இராணுவப்
படைகளே,
நேட்டோ
சக்தி
தலையிட்டு
“எதிர்ப்பாளர்களுக்கு”
ஆதரவு
கொடுக்கும்
வகையில்
அதிக
எண்ணிக்கையில்
வந்த
போரைத்தான்
எதிர்கொண்டனர்.
சிர்ட்டேயில்
இருந்து
இப்பொழுது
வரும்
தகவல்கள்
NTC படைகள்
இப்பொழுது
நகரத்தின்
மீது
கூட்டுத்
தண்டனையை
செயல்படுத்துகின்றன
என்பதைத்தான்
தெரிவிக்கின்றன.
ராய்ட்டர்ஸ்
கூறுகிறது:
“சிர்ட்டே
மீதான
குண்டுத்தாக்குதலின்
தீவிரக்
கொடுமை
மற்றும்
கடாபி
குடும்ப
உறுப்பினர்கள்
மற்றும்
ஆதரவாளர்களுக்கு
சொந்தமான
வீடுகள்
எரிக்கப்படுதல்
என்பது
தேசிய
இடைக்கால
சபைக்கு
விசுவாசமான
சில
பிரிவினர்
பதிலடி
கொடுக்கத்தான்
முற்படுகின்றனர்
என்ற
சந்தேகத்தை
எழுப்பியுள்ளது.”
சிர்ட்டேக்குத்
திரும்பிய
நகர
மக்கள்
தேசிய
இடைக்கால
சபையின்
சண்டையிடுபவர்கள்
“வீடுகள்,
கடைகள்,
பொதுக்
கட்டிடங்கள்
ஆகியவற்றைத்
தகர்த்துக்
கொள்ளை
அடிக்கின்றனர்”
எனக்
கூறியுள்ளனர்.
“அவர்கள்
இங்கு
முயம்மர்
இருந்தார்
என்பதால்
எங்கள்
மீது
பொறாமையும்
வெறுப்பும்
கொண்டுள்ளனர்.
இங்கு
பழிதீர்க்கவும்
தகர்க்கவும்தான்
புரட்சியாளர்கள்
வந்துள்ளனர்”
என்று
ஒரு
சிர்ட்டே
வாழ்பவர்
கூறினார்.
மற்றொரு
நகரவாசி
அபு
அனஸ்
கூறினார்:
“சிர்ட்டேயில்
இப்பொழுது
நடப்பது
பழிவாங்கும்
செயல்;
விடுதலை
அளிப்பது
அல்ல.
உங்கள்
சொந்தக்
காரை
எடுத்துக்
கொண்டு
உங்கள்
வீட்டையும்
வருபவர்
எவரேனும்
அழித்தால்
அது
ஒன்றும்
விடுதலை
கொடுப்பது
அல்ல.”
தேசிய
இடைக்கால
சபையின்
படைகள்
“கடாபி
விசுவாசிகள்
மீது
தாக்குதலை
நடத்துவதில்
நிதானம்
தேவையில்லை
என்றுதான்
தெளிவாக
உணர்கின்றனர்.
இது
மிஸ்ரடாவில்
இருந்து
வந்துள்ள
பல
தாக்குதல்காரர்களைப்
பற்றி
குறிப்பிடத்தக்க
வகையில்
உண்மையாகும்;
மேற்கில்
மிஸ்ரடா,
வசந்த
காலத்தில்
கடாபியின்
துருப்புக்களால்
மோசமான
பாதிப்பிற்கும்
குருதி
கொட்டிய
முற்றுகைக்கும்
உட்படுத்தப்பட்டது.
கணக்கிலடங்காத்
தகவல்கள்
தேசிய
இடைக்கால
சபையின்
படைகள்
நகரைக்
கொள்ளையடிக்கின்றன
என்பதைத்தான்
காட்டுகின்றன.
“தேசிய
இடைக்கால
சபையின்
உத்தரவான
கொள்ளையடித்தல்
சட்டவிரோதம்
என்பது
எழுச்சியாளர்கள்
கைவிடப்பட்ட
கட்டிடங்களைத்
தகர்ப்பதை
நிறுத்திவிடவில்லை”
என்று
டெலிகிராப்
தெரிவித்துள்ளது.
தேசிய
இடைக்கால
சபை
போராளிகள்
“சிர்ட்டே
நகரத்தில்
தங்கள்
வாகனங்களில்
நாற்காலிகள்,
டயர்கள்
மற்றும்
கணினிகளை
எடுத்துக்
கொண்டு
சுற்றுகின்றனர்.
புதிய
BMW, டோயோடா
கார்கள்
போராளிகளால்
ஓட்டிச்
செல்லப்படுகின்றன,
நகரத்திற்கு
வெளியே
வரிசையாகச்
செல்லுகின்றன”
என்று
ராய்ட்டர்ஸ்
கூறுகிறது.
அசோசியேட்டட்
பிரஸ்ஸின்
நிருபர்கள்
“சிர்ட்டே
விமான
நிலையத்தில்
இருந்து
வாகனங்கள்
பல
கருவிகளை
எடுத்துச்
செல்வதையும்
பார்த்தனர்;
இதில்
சிவப்புக்
கம்பளம்
விரித்த
நகரத்தக்கூடிய
படிக்கட்டுக்கள்,
பொருட்களை
எடுத்துச்
செல்லும்
வண்டிகள்,
விமானத்தை
இழுக்கும்
வாகனங்கள்
மற்றும்
பாதுகாப்புக்
கண்காணிப்புக்
கருவிகள்
ஆகியவை
உள்ளன;
இவை
அனைத்தும்
மிகச்
சேதம்
அடைந்த்த
மிஸ்ரடாவின்
விமான
நிலையத்திற்குச்
செல்லுகின்றன
எனத்
தோன்றுகிறது.
சிறிய
வாகனங்களில்
கம்பளங்கள்,
குளிர்ப்பெட்டிகள்,
குளிர்சாதனக்
கருவிகள்,
பயன்பாட்டுப்
பொருட்கள்
மற்றும்
இல்லப்
பொருட்கள்
ஆகியவை
எடுத்துச்
செல்லப்பட்டன;
இவைகள்
தங்கள்
வீடுகளில்
பயன்படுத்தப்படவோ
அல்லது
விற்கவோ
குடிமக்களாலும்
போராளிகளாலும்
எடுத்துச்
செல்லப்படுகின்றன.”
பல்லாயிரக்கணக்கான
மக்கள்
நகரத்தில்
இருந்து
ஓடிவிட்டனர்.
ஆனால்
சிர்ட்டேயில்
எல்லைகளற்ற
மருத்துவர்கள்
என்னும்
அறக்கட்டளை
அமைப்பின்
நெருக்கடிக்கால
ஒருங்கிணைப்பாளரான
Gabriele Rossi
வாஷிங்டன்
போஸ்ட்டிடம்
இன்னும்
மோதல்கள்
நடக்கும்
நகரத்தின்
பகுதிகளில்
ஆயிரக்கணக்கான
மக்கள்
பொறியில்
அகப்பட்டதுபோல்
இருக்கக்
கூடும்
என்று
மருத்துவர்கள்
அஞ்சுவதாகக்
கூறினார்.
“சிர்ட்டேக்குள்
உள்ள
அம்மக்களைப்
பற்றி
நாங்கள்
பெரிதும்
கவலை
கொண்டுள்ளோம்,
அவர்களுக்கு
சுகாதார
பாதுகாப்பு
ஏதும்
கிடைக்காது.”
எல்லைகளற்ற
மருத்துவர்கள்
அமைப்பின்
மருத்துவர்
ஒருவர்
சிர்ட்டேயில்
குறைந்தபட்சம்
10,000 பேர்
பொறியில்
அகப்பட்டுக்
கொண்டிருப்பது
போல்
இருக்கலாம்,
இதில்
பெண்களும்
குழந்தைகளும்
அடங்குவர்,
சிலர்
நோய்வாய்ப்பட்டிருக்கலாம்,
காயமுற்றிருக்கலாம்
என்று
மதிப்பிட்டுள்ளார்.
CNN
கருத்துப்படி,
Ibn Sina
மருத்துவனையிலுள்ள
எல்லைகளற்ற
மருத்துவர்கள்
அமைப்பின்
ஊழியர்கள்
இன்னும்
வெளியேற்றப்பட
வேண்டிய
50 நோயாளிகளைக்
கவனிக்கின்றனர்.
அவர்கள்தான்
“பெரும்பாலும்
மிகப்
பெரிய
மன
அதிர்ச்சிகள்,
தீக்காயங்கள்,
எலும்பு
முறிவுகள்
ஆகியவற்றிற்கு
உட்பட்டவர்கள்
என்று
MSF கூறுகிறது.
அநேகமாக
எல்லா
நோயாளிகளுக்கும்
அன்றாட
சிகிச்சை,
உடனடி
மருத்துவப்
பாதுகாப்பு
தேவைப்படுகிறது.
மருத்துவமனையில்
சில
கர்ப்பவதிகளும்
உள்ளனர்.
“மருத்துவமனைக்கு
நீர்வசதி
இல்லை;
நான்கு
அறுவை
சிகிச்சை
அரங்குகளில்
ஒன்று
தாக்குதலுக்கு
உட்பட்டுவிட்டது.
மருத்துவ
ஊழியர்கள்
24 மணி
நேரமும்
உழைக்கின்றனர்,
பெரும்
களைப்பு,
மற்றும்
அதிர்ச்சி
அழுத்த
ஒழுங்கீனத்தையும்
காட்டத்
தொடங்கியுள்ளனர்”
என்று
அறக்கட்டளை
கூறியுள்ளது.
தாக்குதலில்
இறந்த,
காயமுற்றோரின்
எண்ணிக்கை
உறுதிப்படுத்தப்படவில்லை.
NTC/NATO
தாக்குதலின்
கீழ்
பல
வாரங்களாக
இருக்கும்
Bani Walid ல்
இருந்தும்
அதிகத்
தகவல்கள்
கிடைக்கவில்லை.
இதை
இப்பொழுது
NTC
கைப்பற்றிவிட்டதாகக்
கூறுகிறது.
நேட்டோவின்
லிபியாவில்
“மனிதாபிமானத்
தலையீடு”
என்பதின்
உண்மைத்
தன்மைக்கு
சிர்ட்டே
அழிப்பு
ஒரு
உரிய
சான்றாக
உள்ளது.
இராணுவத்
தாக்குதல்
பெங்காசியைக்
காப்பாற்றும்
என்ற
கூற்றுக்களுடன்
தொடங்கிய
இச்சட்டவிரோத
ஆக்கிரமிப்புப்
போர்
நாட்டின்
ஏராளமான
பகுதிகளை
அழிவிற்கு
உட்படுத்தியுள்ளது.
மறுகட்டமைப்பைப்
பொறுத்தவரை,
ஏகாதிபத்திய
சக்திகள்
லிபியாவிற்காக
ஒதுக்கி
வைக்கப்பட்டுள்ள
நிதியங்களை
பேரழிவிற்குட்டபட்ட
நாட்டை
மறுகட்டமைப்பிற்கு
என்று
இல்லாமல்
இன்னும்
போருக்கு
ஒதுக்கத்தான்
பயன்படுத்தும்
என்பதற்கான
அடையாளங்கள்தான்
வெளிப்பட்டுள்ளன.
நெருக்கடி
“உதவி
நிதி”
என்று
பொருளாதாரத்
தடைகளை
மீறும்
வகையில்
கட்டாரில்
வைக்கப்பட்டுள்ள
நிதி
—இப்பொழுது
அரை
பில்லியன்
அமெரிக்க
டாலர்
மதிப்பு
உடையது—
“அவசரக்கால
ரொக்கத்தை
அளிக்கப்
பயன்படுத்தப்பட
மாட்டாது”;
மாறாக
“நீண்டகாலத்
திட்டங்களில்
முதலீடு
செய்யப்
பயன்படுத்தப்படும்….முற்றுகைக்கு
உட்பட்ட
சிர்ட்டே,
பனி
வாலிட்
ஆகிய
போர்ப்
பகுதிகளில்
இருந்து
தப்பி
ஓடியுள்ள
ஆயிரக்கணக்கான
லிபியக்
குடிமக்கள்
அருகில்
இருக்கும்
நகரங்களில்
ஆதாரங்களுக்குப்
பெரும்
பாதிப்பைக்
கொடுக்கின்றனர்;
ஆனால்
வெளிநாட்டு
நன்கொடையாளர்கள்
கொடுத்துள்ள
நெருக்கடிக்கால
நிதி
அதன்
பணியான
உதவி
செய்வதற்கு
இல்லை
எனக்
கூறப்படுகிறது.”
உண்மையில்
தற்காலிக
நிதிய
அமைப்பிலுள்ள
500 மில்லியன்
டாலர்கள்
பணத்தில்
130
மில்லியன்
டாலர்கள்தான்
எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளது;
இது
எரிபொருள்,
மருத்துவமனைச்
செலவுகள்,
ஊதியங்கள்
ஆகியவற்றிற்குச்
செலவழிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி
அதிகாரிகள்
“சிர்ட்டே
மற்றும்
பனி
வாலிட்
ஆகிய
இடங்களில்
இருந்து
தப்பி
வந்துள்ள
குடும்பங்கள்
வெள்ளம்
போல்
வருபவற்றை
பாதுகாத்திட
தேவையான
நிதியில்
மிகச்
சிறிய
பகுதியையேதான்
பெறுவதாகக்”
கூறுகின்றனர்.
திரிப்போலியில்
அதிகாரிகள்
தலைநகரின்
ஆதாரங்கள்
ஆயிரக்கணக்கான
உள்நாட்டில்
தத்தம்
இடங்களில்
இருந்து
குடிபெயர்ந்து
அங்கு
வந்துள்ள
குடும்பங்களால்
பாதிப்பிற்கு
உட்பட்டுள்ளதாகவும்,
தலைநகரத்தில்
சேவைகளை
வழங்க
இன்னும்
அதிக
பணம்
தேவை
என்றும்
கூறியுள்ளனர்.”
ஓர்
உள்ளூராட்சி
அதிகாரி
திரிப்போலி
உண்மையில்
அற்பத்தொகையான
15
மில்லியன்
தினர்கள்
அல்லது
12.2 மில்லியன்
டாலர்கள்
மட்டுமே
பெற்றுள்ளது
என்று
கூறினார்.
“உறைந்த
சொத்துக்கள்
என்று
மதிப்பிடப்பட்டுள்ள
லிபியாவின்
170 பில்லியன்
டாலர்களில்
பெரும்பாலான
நிதி
எவராலும்
பெற
முடியாது;
உலக
சக்திகள்
நிதி
கொடுப்பதாக
உறுதி
கூறியும்,
உறுதியளிக்கப்பட்ட
15 பில்லியன்
டாலர்களில்
மூன்றில்
ஒரு
பகுதிதான்
கொடுக்கப்பட்டுள்ளது”
என்று
அறிக்கை
முடிவுரையாகக்
கூறுகிறது.
நேற்று
பிரிட்டனின்
வெளியுறவு
மந்திரி
வில்லியம்
ஹேக்
மே
மாதம்
நேட்டோ
வான்
தாக்குதலை
சீற்றத்துடன்
எதிர்கொள்ளும்
வகையில்
கொள்ளையடித்து
தீக்கிரையாக்கப்பட்ட
பிரிட்டிஷ்
தூதரகத்தை
மீண்டும்
திறப்பதற்காக
திரிப்போலிக்கு
வருகை
புரிந்தார்.
இந்த
“பெரும்
கணத்தை”
குறிக்கும்
வகையில்
அவர்
லிபிய
உறுதிப்பாட்டு
நிதிக்கு
20 மில்லியன்
பவுண்டுகள்
($32 மில்லியன்)
என்னும்
அற்பத்தொகையையும்,
மற்றும்
ஒரு
20 மில்லியன்
பவுண்டுகளை
“அரசியல்,
பொருளாதாரச்
சீர்திருத்தம்”
மற்றும்
போரில்
காயமுற்ற
50 லிபியர்களுக்கு
பிரிட்டனில்
அதிகபட்சமாகக்
கவனிப்பதற்கும்
கொடுக்கப்படும்
என்ற
உறுதிமொழியையும்
கொடுத்தார். |