சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK unemployment reaches 17-year high

பிரிட்டனில் வேலையின்மை விகிதம் 17 ஆண்டுகளில் இல்லாத அளவை அடைந்திருக்கிறது

By Julie Hyland
14 October 2011

use this version to print | Send feedback

புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் பிரிட்டனில் வேலையின்மை 17 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு உயர்ந்த நிலையை அடைந்துள்ளதைக் காட்டுகின்றன.

கிட்டத்தட்ட 2.57 மில்லியன் மக்கள்மொத்த மக்கள் தொகையில் 8.1 சதவிகிதம்வேலையில் இல்லை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்; இந்த எண்ணிக்கை ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 114,000 அதிகம் ஆயிற்று. இளைஞர்களிடையே வேலையின்மை இப்பொழுது எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது, 16-21 வயதில் இருப்போர் 991,000 எனவும், அதாவது மொத்த  எண்ணிக்கையில் 21.3 சதவிகிதமாகவுள்ளது. 16-17 வயதில் இருப்போரிடையே வேலையின்மை 3,000த்திலிருந்து 205,000 என உயர்ந்துள்ளது.

பிரிட்டனின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இப்பொழுது பொருளாதார அளவில் செயலற்று உள்ளனர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்அதாவது 9.35 மில்லியன் மக்கள். சமீபத்திய வேலையின்மைப் புள்ளிவிவரங்களுடன் இணைக்கும்போது, இது 16 முதல் 25 வயது வரை இருப்பவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் வேலையில் இல்லை என்ற மதிப்பீட்டிற்கு உட்படுகிறது.

வேலையில்லாதவர்களுக்கான உதவிப்படியைக் கோருவோரின் எண்ணிக்கை செப்டம்பர் மாதம் 17,500 அதிகரித்தது. அதே நேரத்தில் 60,000 பேர் நீண்டகால வேலையின்மை பட்டியலில் சேர்ந்தனர்அதாவது ஓராண்டிற்கும் மேலாக வேலையில்லாதவர்கள் என்ற நிலைக்கு; இது மொத்த எண்ணிக்கையை 867,000 என ஆக்கியுள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களானது 178,000 வேலைகளின் சரிவைக் காட்டின, பகுதி நேர வேலை என்பது இதுகாறும் இல்லாத அளவிற்கு 175,000 சரிவைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றன. கிட்டத்தட்ட150,000 பேர் கடந்த காலாண்டில் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்இது முந்தைய காலாண்டை விட 6,000 அதிகம் ஆகும்.

ஊதியங்களும் தொடர்ந்து சரிகின்றன. சராசரி வருமானங்கள் (போனஸ் நீங்கலாக) 1.8 சதவிகிதம் தான் உயர்ந்தன; அதே நேரத்தில் வரிகள் மற்றும் விலை உயர்வுகள் 5 சதவிகிதம் என உள்ளன.

இப்புள்ளிவிபரங்கள் பல குடும்பங்கள் பொருளாதாரப் பேரழிவைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன. 100 பில்லியன் பவுண்டுகள் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் அரசாங்கம் பொதுநலன்களில் பெரும் தாக்குதலை நடத்தி, வீடுகள், இயலாதோர் உதவிப்படிகளில் வெட்டுக்களை ஏற்படுத்தி, வேலைத் திட்டங்களிலும் குறைப்புக்களைக் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட 18 பில்லியன் பவுண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் சமூக பாதுகாப்புச் செலவுகளில் குறைக்கப்படுகின்றன; இதுவோ உயரும் வேலையின்மை, வறுமை வந்துள்ள காலத்தில் நிகழ்கிறது.

Institute of Fiscal Studies  நடத்தியுள்ள ஆய்வு ஒன்றின்படி, வரிகள் மற்றும் நலன்களில் அரசாங்கம் கொண்டுவந்துள்ள மாற்றங்களின் பொருள் ஒரு சாதாரண குடும்பம் அதன் ஆண்டு வருமானத்தில் அடுத்த ஆண்டு 2,000 பவுண்டுகள் சரிவு என்பதைக் காணும்; அதே நேரத்தில் வீட்டுச் செலவுக்கான சக்தி உண்மையில் 7 சதவிகிதம் குறைந்துவிடும். ஜோசப் Joseph Rowntree Foundation ஆல் கொடுக்கப்பட்ட இந்த ஆய்வு இது 1970களுக்குப் பின் மூன்று ஆண்டுகளில் மிக அதிக குறைவு ஏற்பட்டுள்ளதைப் பிரதிபலிக்கிறது எனக் கணக்கிட்டுள்ளது.

வரிகள் மற்றும் நலன்களில் அரசாங்கம் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் 400,000 குழந்தைகளை 2020க்குள் ஒப்புமையில் வறுமை என்ற நிலைக்குத் தள்ளும்; இதுவோ ஓராண்டின் சராசரி வீட்டு வருமானத்தில் 60 சதவிகிதத்திற்கும் கீழ் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3.3 மில்லியன் குழந்தைகள்கிட்டத்தட்ட நான்கில் ஒருவர்அந்தத் தேதியில் ஒப்புமையில் வறுமையில் வாழ்வர். முழு வறுமையில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை (2010-2011 சராசரியில் 60 சதவிகிதத்திற்கும் கீழாக வாழ்பவர்கள்அரசாங்கம் நிர்ணயித்துள்ளது) அரை மில்லியன் உயர்ந்து 3 மில்லியனாக இருக்கும்.

Graduate Fog நடத்தும் இணைய தளப் பிரச்சாரம், எப்படி பெரு வணிகம் ஊதியம் இல்லாத அல்லது குறைவூதிய உட்பயிற்சியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு அதிகம் உயரும் வேலையின்மை விகிதங்களைப் பயன்படுத்துகிறது, குறிப்பாக இளைஞர்களிடையே, என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

உதாரணமாக நகர்ப்புற நிறுவனங்கள் பல பிரிட்டனின் நகரங்களிலும் வணிகப் பிரிவுகள் கடைகளில் ஊதியமற்ற பயிற்சிக்காலம் 9 மாதம் என நடத்துகின்றன. Reed தேர்ந்தெடுக்கும் நிறுவனம் 46 ஊதியமற்ற பயிற்சிக்கால பணிகளுக்கான விளம்பரங்களை அகற்றும் கட்டாயத்திற்கு உட்பட்டது; இதற்குக் காரணம் தேசிய குறைந்தப்பட்ச ஊதியச் சட்டம் ஆகும்.

தொடர்ச்சியான பயிற்சிக்காலம் என்பது பெருகிவரும் நிகழ்வாகிவிட்டது; கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி பயிற்சியாளர்கள் இளம் பட்டதாரிகள்இரண்டு அல்லது மூன்று இடங்களில் வேலை செய்தல், பல நேரமும் மாதக்கணக்கில், செலவுத்தொகை மட்டும் பெற்றுக்கொள்வது என்பது வழக்கமாகிவிட்டது.

Graduate Fog “நிர்வாகி ஒருவர் பிரிட்டனின் விஞ்ஞான உயர்கூடத்தில் சேர்ந்துள்ள பயிற்சியாளர் ஒருவரிடம் இருந்து வந்துள்ள மின்னஞ்சல் பற்றிக் கூறினார்; இளம் பட்டதாரிகளிடையே வேலையின்மை என்பது எந்த ஊதியமும் பெறாமல் வேலைசெய்யத் தயாராக இருக்கும்மிகச் சிறந்த நபர்கள் வெள்ளமென வருகின்றனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

.நா. மற்றும் ஐரோப்பிய ஆணையத்திற்கு இந்த உயர்கூடம் ஆலோசனை கூறுகிறது; இதன் அர்த்தம் ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஆணையம்ஊதியம் இல்லாத பட்டதாரிகள் உழைப்பில் இருந்து பயன்பெறுகின்றன, ஏனெனில் இப்பட்டதாரிகள் ஒரு வேலைக்காகத் தவிக்கும் நிலையில் ஊதியமின்றியும் உழைக்கத் தயாராக உள்ளனர் என்று Graduate Fog இணைய தளம் கூறியுள்ளது.

“1990களில் பிரிட்டிஷ் வர்ஜின் ஐலண்ட்ஸில் ஒரு நிறுவனத்தை கோல்ட்மன் நிறுவினார். கோல்ட்மன் சாஷ்ஸ் சர்வீசஸ் லிமிடெட் என அழைக்கப்பட்ட இந்நிறுவனம் கோல்ட்மனின் லண்டன் வங்கியாளர்கள் அனைவரையும் நியமித்தது; இவர்கள் பின்அங்கு வேலைசெய்யுமாறு பணிக்கப்பட்டனர் என்று செய்தித்தாள் எழுதியுள்ளது.

இதன் நோக்கம்லண்டனில் பணிபுரியும் அதன் வங்கியாளர்களுக்கு பெரும் போனஸ் தொகையில் தேசியக் காப்பீடு கொடுப்பதைத் தவிர்த்தல் ஆகும்.

பிரிட்டனின் மோசமான வங்கி நெருக்கடியின்போது 100 லண்டன் பங்காளிகள் தங்கள் போனஸ்களை 1 மில்லியன் பவுண்டு ஒவ்வொருவருக்கும் என நிர்ணயித்தனர். இந்த அளவு, நிதானத்தின் அளவு என்றும் கருதப்பட்டது என்று கார்டியன் தெரிவித்துள்ளது.

ஊழியர் நலன்அறக்கட்டளையைப் (EBT) பயன்படுத்தும் 21 முதலீட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் கோல்ட்மன் சாஷ்ஸும் ஒன்றாகும். இவற்றில் போனஸ்கள் மறைமுகமாக விருப்பப் பங்குத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டன. 2005ம் ஆண்டில் பிரிட்டனின் வருமானவரித்துறை EBT க்கள் வரிதவிர்க்கும் திட்டம் என நிரூபித்தது; ஆனால் கோல்ட்மன் சாஷ்ஸ் அது கொடுக்க வேண்டிய 30 மில்லியன் பவுண்டுகளைத் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டது. வட்டியுடன் இந்தப் பணம் கடந்த ஆண்டு 40 மில்லியன் பவுண்டுகள் என ஆகியுள்ளது.

ஏப்ரல் 2010ல் கோல்ட்மன் லண்டன் வங்கியாளர்கள் பிரிட்டிஷ் வர்ஜின் ஐலண்டாஸைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தில் வேலைபார்க்கின்றனர் என்பதை ஒரு நீதிமன்றம் நிராகரித்தது. இதையொட்டி முழுப் பணமும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக உயர்மட்ட வரி அதிகாரி Dave Harnett, வருமானம் மற்றும் சுங்கத்துறையின் நிரந்தரச் செயலர், டிசம்பர் மாதம் கோல்ட்மன் சாஷ்ஸுடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்; அதன்படி கிட்டத்தட்ட 10 மில்லியன் பவுண்டுகள் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டது என்று கார்டியன் தெரிவிக்கிறது.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட ActionAid என்னும் வறுமை எதிர்ப்பு அறக்கட்டளை நடத்திய ஆய்வு ஒன்று வரிஏய்ப்புக்களுக்கு வசதியான இடங்கள் பரந்த அளவில் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளது, குறிப்பாக வங்கித்துறையினால். இத்தகைய பட்டியல் இயற்றப்படுவது இதுதான் முதல் தடவை ஆகும்.

பிரிட்டினிலுள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் துணை நிறுவனங்கள், அவை பதிவு செய்யப்பட்டுள்ள நாடு ஆகியவற்றை பட்டியலிட்டுக் கொடுக்க வேண்டும் என்ற சட்டபூர்வக் கடைமையைக் கொண்டுள்ளன. ஆனால் பிரிட்டினின் FTSE நிறுவனங்களில் 98 சதவிகிதம் வெளிநாட்டு நிறுவனங்களை வரி ஏய்ப்பு வசதி இடங்களாக கேமன் தீவுகள், சுவிட்சர்லாந்து மற்றும் சானல் தீவுகள் ஆகியவற்றில் வைத்துள்ளன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மெக்சிக்கோவின் Fresnillo சுரங்க நிறுவனமும் நிதியப் பணிகள் குழுவான Hargreaves Lansdown ஆகியவைத்தான் வெளிநாட்டுத் துணை நிறுவனங்கள் ஏதும் இல்லை என்று அறிவித்துள்ளன.

வங்கித்துறை மிக அதிக எண்ணிக்கையை வெளிநாட்டுத் துணை நிறுவனங்களாகக் கொண்டுள்ளது; இதில் பிரிட்டனின் உயர்மட்ட நான்கு வங்கிகள்--HSBC, பார்க்ளேஸ், வரிகொடுப்போர் நிதியில் நடத்தப்படும் RBS மற்றும் Lloyds ஆகியவைமொத்தம் 1,649 வெளிநாட்டுத் துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளன. பட்டியலில் முதல் இடத்தில் HSBC உள்ளது; இது உலகின் இரண்டாவது மிகப் பெரிய வங்கி மற்றும் நிதியச் சேவைகள் நிறுவனம் ஆகும்; இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. ActionAid அறிக்கையின்படி இதற்கு 556 துணை நிறுவனங்கள் வரி ஏய்ப்பு வசதிகள் உள்ள பகுதிகளில் உள்ளன. பார்க்ளேஸ் 174 துணை நிறுவனங்களை கேமன் தீவுகளில் மட்டும் கொண்டுள்ளது