WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
வாஷிங்டனும்
ஈரானும் ஆத்திரமூட்டும் பொறுப்பற்ற கொள்கை
Bill Van Auken
14 October
2011
use
this version to print | Send
feedback
வியாழன்
அன்று
வெள்ளை
மாளிகையில்
நடந்த
ஒரு
செய்தியாளர்
கூட்டத்தில்
ஜனாதிபதி
பாரக்
ஒபாமா
தன்னுடை
நிர்வாகம்
அமெரிக்காவிலுள்ள
சவுதி
அரேபியத்
தூதரைப்
படுகொலை
செய்யும்
திட்டம்
எனக்
கூறப்படும்
நிகழ்விற்கு
ஈரானை
“சரியான
விலை
கொடுக்குமாறு
செய்யும்”
என்று
கூறினார்.
“ஈரானிய
அரசாங்கத்தின்
ஆபத்தான,
பொறுப்பற்ற
நடவடிக்கைகள்
என்னும்
வடிவமைப்பின்
ஒரு
பகுதிதான்
இது”
என்றும்
அவர்
விளக்கினார்.
இதையொட்டிக்
கூறும்போது
ஒபாமா
தன்
நிர்வாகம்
“ஈரானுடன்
நடந்து
கொள்ளுவது
பற்றி
அனைத்து
விருப்பங்களும்
மேசை
மேலிருந்து”
அகற்றப்படமாட்டாது
என்று
வலியுறுத்தினார்:
இந்தச்
சொற்றொடர்
பொதுவாக
அமெரிக்க
இராணுவ
ஆக்கிரோஷம்
என்ற
அச்சுறுத்தல்தான்
என
அறியப்படுகிறது.
இக்கருத்துக்கள்
இந்த
விந்தையான
விடயத்தை
பயன்படுத்த
விரும்பும்
வாஷிங்டனின்
முடிவை
அடையாளம்
காட்டுகிறது.
இது
பற்றி
அதிக
விடைகளைத்
தவிர
வினாக்கள்தான்
உள்ளன.
மேலும்
இது
போர்
அச்சுறுத்தலுக்கான
போர்முரசுகொட்டும் அளவிற்கு செல்லக்கூடியயளவிற்கு ஈரானுடன்
அழுத்தங்களை
அதிகரிக்க
ஒரு
போலிக்காரணமாகும்.
ஈரானியர்கள்
அமெரிக்காவிற்கான
சவுதி
அரேபியத்
தூதரைப்
படுகொலை
செய்வதற்கான
“பயங்கரவாதத்
சதி”
என்று
கூறப்படுவதில்
இருந்து
அதிகம்
வெளிப்படுவது,
ஈரானைக்
கொடுமையாகச்
சித்தரிக்கும்
அமெரிக்க
அரசாங்கக்
அமைப்புகள்
சிலவற்றின்
நயமற்ற
இட்டுக்
கதை
என்றுதான்
தோன்றுகிறது.
மேலும்
அமெரிக்க
ஆக்கிரோஷம்
விரிவாக்கப்படுவதற்குப்
போலிக்காரணத்தை
இது
தோற்றுவிக்கிறது.
CNN, Fox News
என்று
தவிர்க்கமுடியாமல்
உரக்கக்
கூச்சலிடும்
ஊடகத்தைத்
தவிர
மற்றவையும்
வெள்ளை
மாளிகை
மற்றும்
நீதித்துறையின்
குற்றச்
சாட்டுக்களைக்
குறித்து
அவநம்பிக்கையான
கருத்தைத்தான்
கொண்டுள்ளன.
உதாரணமாக
பைனான்ஸியல்
டைம்ஸின்
தலையங்கம்
கூறுவது:
“ஆனால்
ஈரானிய
ஆட்சியின்
ஆதரவை
இச்சதித்திட்டம்
கொண்டிருந்தது
என்பது
ஒன்றும்
அவ்வளவு
தெளிவாக
இல்லை.
உண்மையில்
அத்தகைய
ஆதரவை
அது
கொடுத்திருக்கும்
என்பது
பற்றி
அவநம்பிக்கை
கொள்வதற்குத்தான்
காரணங்கள்
உள்ளன.”
அப்பட்டமாகக்
கூறினால்,
இதைப்பற்றி
எதுவுமே
அர்த்தமற்றது.
நிர்வாகம்
அதன்
குற்றச்
சாட்டுக்களில்
உள்ள
பொருத்தமற்ற
தன்மையைக்
குறிக்கும்
கட்டாயத்திற்கு
உட்பட்டுள்ளது. FBI
இயக்குனரான
ரோபர்ட்
முல்லர்
நீதித்துறையின்
குற்றச்சாட்டு
“ஹாலிவுட்
திரைப்படக்
கதையின்
பக்கங்களைப்
படிப்பது
போல்
உள்ளது”
என்றார்.
வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி
கிளின்டன்,
இந்நிகழ்வில்
உள்ள
ஒவ்வாத
தொடர்புகளைப்
பற்றிக்
குறிப்பிட்டார். ஈரானுடைய
இரகசியப்
பிரிவு
ஒரு
மெக்சிக்கோ போதைப்
பொருள்
கும்பலான Los Zetas
ஐ
படுகொலை
செய்வதற்காக
நாடுதல்
என்பதுதான்
அது.
இவ்வாறான பணம் கொடுத்து கொலை செயெவதற்கு அது போதைத்
தடுப்பு
நிறுவனத்திற்கு
உளவுத்
தகவல்
கொடுப்பவருடன்
அது
செயல்பட
வேண்டி
இருந்தது. “இதனை
எவரும் செய்யமுடியாது
அல்லவா?”
என்று
அவர்
வனப்புரையாக
வேறு
கூறினார்.
உண்மையில்
அவர்கள்
இட்டுக்
கதை
கட்டியிருக்கலாம்,
கட்டியுள்ளனர்.
கூலி
கொடுக்கப்பட்ட
FBI
தகவல்
கொடுப்போர்
பயங்கரவாதிகள்
போல்
காட்டிக்
கொண்டு
மியாமியில்
லிபர்ட்டி
சிட்டி
செவன்
என்று
அழைக்கப்படுவோரைப்
பொறியில்
கொண்டுவந்தனர்.
இது
சிக்காகோ
சீயர்ஸ்
டவரைத்
தகர்ப்பதற்கான
திட்டம்
என்ற
புனைதலுக்காக
நடந்தது.
இதைத்தவிர Newburgh Four
விவகாரமும்
உள்ளது;
இதில்
ஒரு
ஆத்திரமூட்டும் மூத்த FBI
முகவர் நிறைய
பணத்தைக்
கொடுத்து
நான்கு
இளம்
ஆபிரிக்க
அமெரிக்கர்களை
ஒரு
சதித்திட்டத்தில்
பொறிக்கு
உட்படுத்தினர்;
அது
நியூயோர்க்நகரத்தின்
யூதரின்
ஆலயங்களில்
வெடிமருந்துப்
பொருட்களை
வைக்கும்
திட்டம்
எனப்பட்டது.
இதேபோல்
டஜன்
கணக்கான
நிகழ்வுகள்
செய்யப்பட்டுள்ளன;
இச்சதித்திட்டங்கள்
உண்மையில்
எந்த
அச்சத்தையும்
கொடுக்கவில்லை,
அரசாங்க
முகவர்கள்
போலி
“பயங்கரவாதத்தின்
மீதான
போர்”
என்பதற்காகத்
தோற்றுவித்தவற்றின்
பகுதிகள்தான்
இவை.
சவுதி
தூதரைக்
கொல்வதற்காகத்
தீட்டப்பட்டது
என்று
கூறப்படும்
திட்டத்தில்,
சதித்திட்டத்தின்
“மூளை”
டெக்சாஸில்
வசிக்கும்
ஒரு
ஈரானிய-அமெரிக்க
பழைய
கார்களை
விற்பனை
செய்யும்
நபரான
மன்சார்
அர்பாபசியர்
ஆவார்.
இவர்
முன்னதாக
பணம்
இல்லாமல்
காசோலைகள்
கொடுத்ததற்காகக்
கைது
செய்யப்பட்டிருந்தார். அவருடன்
கல்லூரியில்
படித்தவர்கள்
அவர்
ஈரானிய
ஆட்சிக்கு
விரோதம்
கொண்டிருந்தார்
என்று
நினைவு
கூறுகின்றனர்.
உலகின்
மிகத்
தொழில்
நேர்த்தியான
இரகசியப்
படைப்
பிரிவுகளில்
ஒன்று
எனப்
பெரும்பாலான
பகுப்பாய்வாளர்களால்
கருதப்படும்
ஈரான்
நாட்டின்
Quds Force,
அமெரிக்க
மண்ணில்
ஈரானியப்
பயங்கரவாதத்தை
முதல்
தடவையாக
நடத்துவதற்கு
இத்தகைய
நபரைப்
பயன்படுத்துவர்
என்று
கூறுவது,
துவக்கத்திலேயே
மிகவும்
அபத்தமானது
ஆகும்.
இந்த
அநேகமாக
நடந்திருக்காத
சூழ்நிலைக்கு
ஓரளவு
விளக்கும்
தரக்கூடியது
அமெரிக்க
முகவர்கள்
ஒரு
போதைப்
பொருள்
விவகாரத்தில்
திரு.
அர்பாபசியரைப்
பொறியில்
அகப்பட
வைத்திருக்கலாம்,
பின்னர்
அவரை
ஈரான்
மீதான
பயங்கரவாதக்
குற்றச்சாட்டுகளுக்கான
தயாரிப்பில்
முக்கியமான
நபராகச்
செய்திருக்கலாம்.
இத்தகைய
“அநேகமாக
இயலாத
ஹாலிவுட்
திரைக்கதைக்
கூறுபாட்டைத்தான்”
ஜனாதிபதி
ஒபாமாவில்
இருந்து
அனைத்து
அமெரிக்க
அதிகாரிகளும்
இணைந்து
நின்று
ஈரானிய
ஆட்சியை
“பொறுப்பற்றது”
என
முத்திரையிடத்
தளமாகக்
கொண்டுள்ளது.
ஒபாமாவிற்கு
போட்டியாக 2008
தேர்தலில்
நின்ற
குடியரசுக்
கட்சியின்
செனட்டர்
ஜோன்
மக்கெயின்
வியாழன்
அன்று
சதித்திட்டத்தின்
“கேலிக்குரிய
மடைத்தனமான”
தன்மை
ஈரான்
எப்படி
“பொறுப்பற்ற
வகையில்
உள்ளது”
என்பதை
நிரூபிக்கிறது,
அது
அணுவாயுதங்களைக்
கொண்டால்
“உண்மையில்
தீவிரமான
பிரச்சினைகளை
எப்படிக்
கொடுக்கும்”
என்பதைக்
காட்டுகிறது
என்றார்.
வாஷிங்டன்
“பொறுப்பற்ற
தன்மைக்கு”
கொடுக்கும்
வரையறை
அமெரிக்க
நலன்களுக்குக்
குறுக்கே
மற்றொரு
அரசாங்கம்
எடுக்கும்
எந்த
நடவடிக்கையையும்
குறிப்பது
போலுள்ளது. இதனால் அந்த
நாடு
அமெரிக்க
ஆக்கிரமிப்பிற்கு
ஒரு
இலக்காகச்
செய்யப்படும்.
ஒரு
தசாப்தமாக
ஈரான்
அண்டை
ஈராக்
மற்றும்
ஆப்கானிஸ்தானையும்
ஆக்கிரமித்துள்ள, மேலும்
சுற்றிலும்
அமெரிக்க
இராணுவ
தளங்களை
கொண்ட உலகின்
பெரும்
ஏகாதிபத்திச்
சக்தியான
அமெரிக்காவுடன்
இடைவிட
உளச்சல்
தரும்
மனப்போரை
முகங்கொடுத்து
வருகிறது.
ஈரானின்
நடத்தை
எப்படி
“பொறுப்பற்றது”
என
விவரிக்கப்படலாம்?
அமெரிக்க
ஆணைகளை
அது
கீழ்ப்படிந்து
நடக்கவில்லை
என்பதைத்
தவிர?
இந்த
விவகாரத்தில்
“பொறுப்பற்ற”
என்னும்
சொல்
பயன்படுத்தப்பட
வேண்டுமானால்,
அது
வாஷிங்டனின்
கொள்கைகளைப்
பற்றித்தான்
இருக்க
முடியும்.
மீண்டும்
அமெரிக்க
ஏகாதிபத்தியம்
தன்
உலக
நலன்களை
முன்னேற்றுவிக்க
நயமற்ற
ஆத்திரமூட்டல்கள்,
இராணுவ
ஆக்கிரோஷ
அச்சுறுத்தல்கள்
ஆகியவற்றைப்
பயன்படுத்த
முயல்கிறது.
போலியாக இட்டுக்கட்டப்பட்ட
“பயங்கரவாதச்
சதி”
என்பது
ஒன்றும்
தனிமையான
நிகழ்வு
அல்ல.
வியாழன்
அன்று
செய்தியாளர்
கூட்டத்தில்
ஒபாமா
ஈரான்
“சர்வதேச
நடைமுறை பற்றி ஏற்கப்பட்டுள்ள நெறிகளுக்கு”
புறம்பாக
நடக்கிறது
என்பதாகக்
குற்றம்
சாட்டினார்.
ஆனால்
அமெரிக்க
ஒன்றுதான்
உலகிலேயே
தான்
அச்சுறுத்தும்
திறன்
எனக்
கருதும்
எவரையும்,
அதன்
குடிமக்கள்
உட்படப்
படுகொலை
செய்யும்
“உரிமை”
உள்ளது
என
வலியுறுத்தும்
நாடு
ஆகும்.
இதற்காக
அது
தேசியப்
பாதுகாப்புக்குழுவிற்குள்
ஒரு
இரகசிய
துணைக்குழுவைக்கூடத்
தோற்றுவித்துள்ளது;
அது
ஆளற்ற
விமானத்தினால் சர்வதேசச்
சட்டத்தை
முற்றிலும்
மீறி
எவர்கள்
கொலைசெய்யப்பட
வேண்டும்
என்னும்
“பட்டியலையே”
தயாரிக்கிறது.
இத்தகைய
செயற்பாடுகளை
எதிர்கொள்ளும்
முனையில்
ஈரான்
உள்ளது;
அந்நாட்டின்
அணுசக்தித்
திட்டத்தில்
தொடர்புடைய
முக்கிய
விஞ்ஞானிகள்
தொடர்ந்து
படுகொலை
செய்யப்பட்டுள்ளனர்;
அதைத்தவிர
CIA
ஆதரவுடைய
ஆயுதப்படைக்
குழுக்களினால்
மோசமான
பயங்கரவாதத்
தாக்குதல்களுக்கும்
உட்பட்டுள்ளது. 2008ம்
ஆண்டு
புஷ்
நிர்வாகம்
ஈரானுக்கு
எதிராக
உறுதிப்பாட்டை
அங்கு
குலையச்
செய்யும்
இரகசியத்
திட்டம்
ஒன்றிற்கு
ஜனாதிபதி
ஒப்புதல்
கொடுக்கப்பட்டது
என்பது
வெளிவந்துள்ளது. இதற்கு
காங்கிரஸ்
கிட்டத்தட்ட $400
மில்லியன்
அளவிற்கு
நிதி
கொடுத்தது.
இச்செயற்பாடு
ஒபாமாவின்
கீழும்
தொடர்கிறது.
ஆப்கானிஸ்தான்
மற்றும்
ஈராக்கில்
ஒரு
தசாப்தக்காலம்
இராணுவ
தோல்விகளுக்கு
உட்பட்டபின்,
வாஷிங்டன்
இப்பொழுது
அவற்றிற்கு
இடையே
உள்ள
நாட்டிற்கு
எதிராக
ஒரு
புதிய
போரைத்
தொடக்குவதாக
அச்சுறுத்துகிறது.
அதாவது
75
மில்லியன்
மக்களையும்,
உலகின்
நான்காம்
எண்ணெய்
இருப்புக்கள்
உடையது
என
நிரூபிக்கப்பட்ட
ஈரானுக்கு
எதிராக.
இத்தகைய
போருக்கான
முயற்சி
வாஷிங்டனின்
முந்தைய
செயற்பாடுகள்
மூலோபாய
வகையில்
தோல்வி
அடைந்ததை
ஒட்டி
உந்துதல்
பெறுகிறது.
மேலும்
அமெரிக்க
முதலாளித்துவத்தின்
நெருக்கடிகள்
நிறைந்த
முரண்பாடுகள்
எப்பொழுதும்
தீவிரமாக
இருப்பதாலும்
இது உந்துதல்
பெற்றுள்ளது.
ஈரானுக்கு
எதிரான
ஒரு
போர்
இதற்கு
முன்பு
இருந்ததைவிட
இன்னும்
குருதி
கொட்டும்
வகையிலும்,
பேரழிவைத்தரும்
வகையிலும்
நடத்தப்படும்.
வாஷிங்டனுடைய
தாக்குதலுக்கு
ஈரான்
பின்வாங்கிவிடவில்லை.
மாறாக
அது
இக்குற்றச்சாட்டுக்களை
“இழிந்தவை”,
“கற்பனை
செய்து
தயாரிக்கப்பட்டவை”
என்று
கண்டித்துள்ளது.
அதே
நேரத்தில்
உண்மையான
நியாயப்பாட்டுடன்
முழு
விவகாரமும்
அமெரிக்காவில்
உள்ள
மக்களின்
கவனத்தை
நாட்டின்
ஆழ்ந்த
பொருளாதார
நெருக்கடி,
பெருகும்
சமூக
அமைதியின்மை
ஆகியவற்றில்
இருந்து
திசைதிருப்பும்
நோக்கத்தைத்தான்
கொண்டுள்ளது
என
வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க
ஈரானுடன் வெளிப்படையாக மோதலுக்கு செல்லும் விதமும் மற்றும் அதன் உள்நாட்டுப்
பின்னணி
ஆகியவை
எப்படி 1930
களில்
நாஜி
ஆட்சி
உள்நாட்டு
நெருக்கடியை
ஒட்டி
ஏகாதிபத்திய
ஜேர்மனிக்கு
தலைமை
தாங்கிப்
போரில்
ஈடுபட்டது
என்பதைத்தான்
நினைவிற்குக்
கொண்டு
வருகிறது.
மறைந்த
பிரிட்டிஷ்
வரலாற்றாசிரியர்
டிம்
மேசன்
அவருடைய
நாஜிசம்,
பாசிசம் மற்றும் தொழிலாள வர்க்கம்
-Nazism,
Fascism and the working class-
என்னும்
நூலில்
ஹிட்லரின்
மூன்றும்
குடியரசு
எப்படிப்
போருக்கு
மாறியது
என்பது
பற்றிக்
கீழ்க்கண்டவற்றைக்
குறிப்பிட்டுள்ளார்:
“குடியரசுக்குள்
இருந்த
பொருளாதார,
சமூக
மற்றும்
அரசியல்
அழுத்தங்கள் 1937ல்
இன்னும்
அதிகமாகத்
தீவிரமடைந்தன;
ஹிட்லரே
அவற்றின்
தொழில்நுட்பப்
உள்ளடக்கம்
பற்றி
அதிகம்
அறிந்திருக்கவில்லை
என்று
கூறுவது
சரியானாலும்,
அவை
இருப்பது
பற்றி
அவருக்குக்
கூறப்பட்டதுடன்,
அவற்றின்
ஆபத்தான
தன்மை
பற்றி
அவர்
அறிந்திருந்தார்.
ஹிட்லரின்
மனத்தில்
இப்பொது
நெருக்கடிக்கும்,
இன்னும்
ஆற்றல்மிக்க வெளியுறவுக்
கொள்கை
பற்றிய
தொடர்பின்
தேவை
பற்றிய
நனவுபீர்வமான
தொடர்பு 1937-38
குளிர்காலத்தில்
இல்லை
என்பது
நிரூபிக்கப்படவில்லை
என்றாலும்,
இக்கூறுபாடுகளுக்கு
இடையே
உள்ள
செயல்முறை
உறவுகள்
இருந்தன
என்பது
உணரப்படலாம்…
“சர்வாதிகாரம்,
மீண்டும்
ஆயுதக்
குவிப்பு
ஆகியவற்றால்
தோற்றுவிக்கப்பட்ட
கட்டுமான
அழுத்தங்களும்
நெருக்கடிகளும்
நிறைந்த
இந்த
ஆட்சிக்கு
இருந்த
ஒரே
“தீர்வு”,
இன்னும்
கூடுதலான
சர்வாதிகாரமும்,
ஆயுதக்குவிப்பும்
அதன்பின்
விரிவாக்கமும்,
அதைத்தொடர்ந்து
போரும்
பயங்கரமும்தான்,
அதற்குப்
பின்னர்
சூறையாடுதலும்
அடிமைப்படுத்தலும்தான்.
அப்பட்டமான,
ஆனால்
எப்பொழுதும்
தயாராகவிருந்த மாற்றீடு
பெரும்
சரிவு,
பெரும்
குழப்பும்
என்பதாகவே இருந்தன.
எனவே
அனைத்துத்
தீர்வுகளும்
தற்காலிகமானவை,
பரபரப்புடன்
எடுக்கப்பட்டவை,
எப்படியோ
சமாளிக்க
வேண்டியவை
மற்றும்
ஒரு
மிருகத்தனத்
தளத்தில்
மிருகத்தனமான
மாற்றங்களுடன்
செயல்படுதல்
என
இருந்தது.”
ஒபாமா
ஒன்றும்
ஹிட்லர்
அல்ல,
அமெரிக்காவும்
பாசிசத்தில்
விழுந்துவிடவில்லை.
ஆயினும்கூட
ஒரே
மாதிரியான
“செயற்பாட்டு
உறவுகள்”
இவர்களுக்கு
இடையே
கண்டறியப்பட
முடியும்.
ஒரு
புறத்தில்
பொருளாதார,
சமூக
நெருக்கடி
அமெரிக்காவைக்
இடுக்கிப்பிடிக்குள்
கொண்டுள்ளது.
மறுபுறமோ
பெருகிய
முறையில்
அமெரிக்க
இராணுவம்
மற்றும்
உளவுத்துறைக்
அமைப்புகள்
உலக
அரங்கில்
நடத்தும்
செயல்களில்
பொறுப்பற்ற
தன்மையைக்
கொண்டுள்ளது.
எது
மாற்றப்பட
வேண்டுமோ,
அது
மாற்றப்பட்டு,
அதே
“தற்காலிக,
பரபரப்பான,
எப்படியோ
சமாளிக்கும்”
தன்மைதான்
அமெரிக்கக்
கொள்கைகளில்
காணப்படுகின்றன.
இவையும்
வெறித்தனமான,
“காட்டுமிராண்டித்தனமான”
மாறுபாடுகளைக்
கொண்டுள்ளவை.
ஆளற்றவிமானப் போரில்
இருந்து
பாக்கிஸ்தானில்
அரசியல்
ஆத்திரமூட்டல்,
லிபியாவில்
“ஆட்சி
மாற்றத்திற்கான”
போர்
வரை
–
இப்பொழுது
ஈரானுடன்
ஆவேசம்
நிறைந்த
மோதும்
அச்சுறுத்தல்
வெளிப்பட்டுள்ளது.
வெளிநாட்டில்
போர்,
உள்நாட்டில்
“பயங்கரவாதம்”
பற்றி
அச்சத்தை
வளர்த்தல்
என்பது
பெரிதும்
உள்நாட்டு
தேவைகளை
கருத்தில் கொண்டுள்ளன.
வெகுஜன
சமூக
அதிருப்தி
மற்றும்
புதுப்பிக்கப்படக்கூடிய
வர்க்கப்
போராட்ட
அச்சுறுத்தல்
ஆகியவை
நாடு
முழுவதும்
வோல்
ஸ்ட்ரிட்டிற்கு
எதிரான
ஆர்ப்பாட்டங்களில்
பிரதிபலிப்பாகின்றன;
அமெரிக்க
ஆளும்
உயரடுக்கு
எப்படியும்
போக்கை
மாற்றவேண்டும்
என்ற
திகைப்பைக்
கொண்டுள்ளது.
இக்கருத்து
ஐயத்திற்கு
இடமின்றி
ஈரானிய
“சதித்திட்டமான”
சவுதித்
தூரைக்
கொல்லுதல்
என்னும்
கிறுக்குத்தனக்
குற்றச்சாட்டுக்களை
முன்வைப்பதில்
முக்கிய
பங்கைக்
கொண்டிருந்தது.
இந்த
விந்தையான
விவகாரம்
ஒரு
தீவிர
எச்சரிக்கையையும்
கொண்டுள்ளது.
இதை
ஒரு
சர்வதேச மோதலாக
மாற்ற
வேண்டும்
என்னும்
முடிவு
அமெரிக்க
அரசாங்கத்தின்
மிக
உயர்ந்த
மட்டங்களில்
பெருகிய
நிலைகுலைந்த
தன்மை
இருப்பதைத்தான்
குறிக்கிறது.
இதில்
இருந்து
வெளிப்படும்
நிகழ்வுகளின்
போக்கு
எப்படி
இருக்கும்
என்பதை
எவரும்
துல்லியமாக
அறிய
முடியாது;
ஆனால்
அமெரிக்க
மக்கள்
மீது
மற்றொரு
முக்கியப்
போர்
சுமத்தப்படும். |