World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US steps up sanctions and threats against Iran over alleged terror plot

பயங்கரவாத சதித்திட்டங்களை தீட்டுகிறது என்ற குற்றச்சாட்டில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை முடுக்கிவிடுகிறது

By Bill Van Auken
13 October 2011

Back to screen version

புதன்கிழமையன்று, வெள்ளை மாளிகை தான் புதிய சுற்றுப் பொருளாதாரத் தடைகளை ஈரானுக்கு எதிராக சுமத்துவதாக அறிவித்தது; துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் வாஷிங்டனில் சௌதி தூதரைப் படுகொலை செய்ய இருந்ததாகக் கூறப்படும் திட்டம் பற்றிக் கேட்கப்படுகையில்அனைத்து விருப்பங்களும் மேசை மீது உள்ளன என எச்சரித்தார்; இது இராணுவத் தாக்குதல்கள் நடத்தும் வாய்ப்பையும் தெரிவிக்கிறது.

ஈரானின் முதல் தனியார்மய விமான நிறுவனமான Mahan Air அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளில் புதிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது. இது 12 நாடுகளுக்கு விமான போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் இந்த விமான நிறுவனம் ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புக் குழுவினரின் உறுப்பினர்களைஇரகசியமாகப் பல இடங்களுக்கு அனுப்பவதில் ஈடுபட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் முயற்சி என்று இத்திட்டம் பற்றி குற்றம் சாட்டப்படுவதை வாஷிங்டன் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, ஈரானிடம் இருந்து வருவதாகக் கூறப்படும் தெளிவற்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக உலகந்தழுவிய பயண எச்சரிக்கையை வெளியிட்டதுடன், அமெரிக்காவிற்குள் தாக்குதல்கள் நடத்தப்படுவதும் சாத்தியமே என்று எச்சரித்துள்ளது.

வாஷிங்டனில் செவ்வாயன்று இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் எனப்படும் சதித்திட்டம் பற்றி அமெரிக்கத் தலைமை அரசாங்க வக்கீல் எரிக் ஹோல்டர் பகிரங்கமாக அறிவித்தார். நீதித்துறை கொடுக்கும் தகவலோ அதிகம் நம்பிக்கை தராத தளத்தைக் கொண்டுள்ளது; இதில் டெக்சாஸில் இருந்து மெக்சிகோவிற்கு சென்ற பழைய கார்கள் விற்பனையாளரும், ஈரானிய-அமெரிக்கருமான Manssor Arbasiar என்பவர் சௌதி தூதர் அப்டல் அல்-ஜுபீரை வாஷிங்டனில் பெயரிடப்படாத ஒரு ஹோட்டலில் வைத்துத் தகர்த்துவிடும் படுகொலைத் திட்டத்திற்காக மிகவும் அஞ்சப்படும் போதைபொருள் கடத்தல்குழு Los Zetas ஐ நாடுவதற்கு முயற்சி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. திட்டத்தின் மற்றொரு திரித்தல் லாஸ் ஜேடாஸின் பிரதிநிதி என்று கூறப்படுபவரும் அர்பசியரை தொடர்பு கொண்டவரும் DEA எனப்படும் அமெரிக்கப் போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்திற்கு இரகசியத் தகவல் கொடுப்பவர் என்பதாகும்.

செவ்வாய் செய்தியாளர் கூட்டத்தில் FBI இயக்குனர் ரோபர்ட் முல்லர் அரசாங்கத்தின் நிகழ்வு பற்றிய செய்திஹாலிவுட் திரைப்படக் கதையிலுள்ள பக்கங்களைப் படிப்பது போல் உள்ளது என்று ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.

அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் கூறினார்: “கருத்து என்னவென்றால் அவர்கள் ஒரு மெக்சிக்கோ நாட்டு போதைக் கும்பலை நாடி கூலிக்குச் சௌதித் தூதரைக் கொலை செய்ய முற்படுவர் என்பது; இதை யாரும் நம்ப மாட்டார் என நினைக்கலாம் அல்லவா, சரிதானே?”

இப்பிரச்சினைதான் இந்த முழு விவகாரத்திலும் எழுந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் பலமுறையும்பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் நடவடிக்கைப் போக்கில்தயாரிக்கும் சதித்திட்டம் பற்றிய குறிப்புக்களில் காணப்படும் அனைத்துக் கூறுபாடுகளும் இதில் உள்ளன; அமெரிக்க நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் முன் உண்மையில் இராத பயங்கரவாதத் திட்டங்களில் ஏதும் செய்ய இயலாத தனிநபர்களை பொறியில் தள்ளுவதற்கு இரகசிய முகவர்களைப் பயன்படுத்துதல் என்பதே அது.

ஆனால், இந்த விவகாரத்தில், திட்டம் எனக் கூறப்படுவது ஒரு சில தனிநபர்களை ஈடுபடுத்துவது என்று மட்டும் இல்லாமல் 75 மில்லியன் மக்கள் அதன் அரசாங்கம் ஆகியவற்றைக் கொண்ட நாடும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது; இது ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலையீடுகளால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளைவிட மிகக் கூடுதலான பேரழிவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட போருக்கு அரங்கை அமைக்கும்.

இத்திட்டம் தொடர்பாக பெயரிடப்பட்டுள்ள ஒரே மற்றொரு நபர் கோலம் ஷகுரி என்பவர்; இவர் Quds Brigade எனப்படும் 150,000 பேர் அடங்கிய ஈரானியச் சிறப்புப் படைகளின் புரட்சிப் பாதுகாப்புப் பிரிவில் ஓர் உறுப்பினர் ஆவார்.

தேசிய பாதுகாப்பு இரகசியம் என்னும் பெயரில் இந்த விவகாரத்தை வைப்பதற்கு அரசாங்கம் கொடுக்கும் சான்று மிகவும் பலவீனமான தன்மையைக் கொண்டுள்ளது; அச்சான்றுகளில் எதுவும் ஈரானிய அரசாங்கம் தீட்டியதாகக் கூறப்படும் சதித்திட்டம் பற்றி எந்த நேரடித் தொடர்போ அது பற்றிய தகவல்களோ குறிக்கப்படவில்லை. இந்த விவரங்கள் அனைத்துமே அர்பப்சியர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் இருந்து வெளிவந்துள்ளன; அவரோ ஒரு முன்னாள் வணிகக் கூட்டாளியால்கவரப்படுபவர்….சற்று சோம்பேறியானாலும்”, “பெரிய திட்டம் தீட்டமுடியாதவர் என்றுதான் இவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும்கூட, புதன்கிழமையை ஒட்டி அமெரிக்க அதிகாரிகள், “பெயர் கூறக்கூடாது என்ற நிபந்தனையில்”, ஈரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனி சௌதி தூதரைக் கொலை செய்யும் திட்டம் பற்றித்தெரிந்திருக்கக் கூடும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.

இத்தகைய தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்றுதான் எளிதில் அமெரிக்கப் பெருநிறுவனச் செய்தி ஊடகம் கருதுகிறது; ஏற்கனவே இது ஈரானிய அரசாங்கம் மீது குற்றம் சாட்டி, விசாரணை நடத்தி தண்டனை சுமத்தப்படுவதற்குத்தான் காத்திருக்கிறது. நல்ல பயிற்சி பெற்ற CIA சொத்துக்கள், CNN இன் வுல்ப் பிளிட்சர் போன்றவர்கள் இந்த விவகாரத்தைப் பற்றி ஆர்வத்துடன் பேசி அரசாங்கத்தின் குற்றங்களைப் பெரும் களிப்புடன், ஏதோ நிரூபிக்கப்பட்டுவிட்டது போல், ஆதரவைக் கொடுக்கின்றனர்.

செய்தி ஊடகம் இதை எதிர்கொண்டுள்ள விதம் ஈராக்கிற்கு எதிரான போருக்கு வழிவகுத்ததில் முக்கியப் பங்கைக் கொண்டிருந்தபேரழிவு ஆயுதங்கள் தொடர்பான நிரூபிக்கப்படாத குற்றச் சாட்டுக்களுக்குக் காட்டப்பட்ட விளைவில் இருந்து மாறுபடாத தன்மையைத்தான் இவை இயல்பாகக் கொண்டுள்ளன என்பதைத்தான் நிரூபிக்கிறது. செய்தி ஊடக நடைமுறை மீண்டும் போர்ப் பிரச்சாரத்தின் தேசபக்தவெறியை உமிழும் கருவியாகத்தான் செயல்படுகிறது.

வாஷிங்டனில் அவருக்குப் பிடித்த ஹோட்டலில் சௌதி அரேபியத் தூதரைக் கொல்வது பற்றிய படுகொலைத் திட்டத்தில், பெரும்பாலான செய்தி ஊடகத் தகவல்களில் விவரிக்கப்படும் கருத்துக்களில் ஒன்று ஏராளமான மற்றவர்களும் கொல்லப்படும் திறனைக் குண்டுத் தாக்குதல் கொண்டிருக்கும் என்பது பற்றி திட்டம் தீட்டியவர்களின் பொருட்படுத்தாத் தன்மை ஆகும். நீதித்துறை அதிகாரிகளைத் துல்லியமாக மேற்கோளிடத் தகவல்கள் அதிகம் அக்கறை கொள்ளவில்லை; அந்த அதிகாரிகள் குண்டுத் தாக்குதல் திட்டம் ஒருபோலியான ஹோட்டலை இலக்கு கொண்டுள்ளது எனக் கூறினார்; ஏனெனில் அரசாங்க முகவர்கள்தான் இத்திட்டத்தைப் பற்றிய தகவல்களைத் தயாரித்துள்ளனர், இத்தகைய ஹோட்டல் ஒன்றும் திரு அல்-ஜுபீரால் அடிக்கடி வருகைக்கு உட்படவில்லை. அமெரிக்க வக்கீல் ப்ரீத் பாட்டியா எந்த வெடிப்பொருட்களும் தற்பொழுது பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும்யாரும் உண்மையான ஆபத்தில் இல்லை என்றும் தெளிவாக்கினார்.

படுகொலைச் செய்தி என இருந்தது என்பது பற்றிய அறிவிப்பு பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்னும் அமெரிக்க அரசியல்வாதிகளின் பரபரப்பான கோரிக்கைகளைத் தூண்டியுள்ளது. பிரதிநிதிகள் மற்ற உறுப்பினர் Ileana Ros-Lehtinen, மன்ற வெளியுறவுக் குழுவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர், இந்த விவகாரம்ஈரான் தோற்றுவித்துள்ள அச்சுறுத்தல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது என்றார். இந்த அச்சுறுத்தல்ஈரானிய ஆட்சி, அதற்கு ஊக்கம் கொடுப்பார் மீதும் அவர்களை முடக்கிவிடும் அழுத்தத்தின் மூலம் சந்திக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மன்றத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புக் குழுவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர் பிரதிநிதி பீட்டர் கிங், கூறப்படும் திட்டம்ஒரு போர்ச்செயல் என்று விவரித்து, ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவில் எவரேனும் ஈரானிய அதிகாரிகள் இருந்தால் அவர்களை வெளியேற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

செனட் உளவுத்துறைக் குழுவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் டயேன் பீர்ஸ்டின் இத்திட்டம் ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களுடனும் தொடர்பு கொண்டிருக்கும் என்று உறுதியாகக் கூறினார். “வேறு எந்த வகையிலும் இத்தகைய திட்டம் தீட்டப்பட்டிருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன் என்றார் அவர்.

தன்னுடைய பங்கிற்கு ஜனாதிபதி ஒபாமா இத்திட்டம்அமெரிக்கா மற்றும் சர்வதேச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவது ஆகும் என்றார். துணை ஜனாதிபதி பிடென் இதுசீற்றம் தரும் செயல், ஈரானியர்களை இதற்குப் பொறுப்பு ஏற்க வைக்க வேண்டும் என்றார்.

அமெரிக்க உளவுத்துறைதான் இட்டுக் கட்டித் தயாரித்திருக்கக் கூடிய ஒரு படுகொலைத்திட்டம் என்ற போலிக்கருத்து பற்றி அறநெறி வகையில் சீற்றத்தை வெளிப்படுத்திருக்கையில், இவர்கள் அனைவரும் அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் அரசாங்கத்தின் பாசாங்குத்தனத்தைத்தான் வெளிப்படுத்துகின்றனர். அமெரிக்க அரசாங்கம் வாடிக்கையாக உலகம் முழுவதும் உண்மையான படுகொலைகளை நடத்துகிறது; தேசியப் பாதுகாப்புக் குழுவில் ஒரு இரகசியக் குழுவைக்கூட நியமித்து அமெரிக்கக் குடிமக்கள் உட்பட பலரும் இலக்கு கொள்ளப்படும் தாக்குதல் பட்டியலைத் தயாரிக்க முற்பட்டுள்ளது. ஈரானே அதன் முக்கிய விஞ்ஞானிகள் நாட்டின் அணுசக்தித்திட்டத்தைச் சேதப்படுத்துவதற்காக அமெரிக்க-இஸ்ரேலின் செயல் எனக் கருதப்படுவதில் கொலையுண்டிருப்பதைக் கண்டுள்ளது.

இத்தகையவேண்டுமென்று நடத்தப்படும் செயல்கள் மே மாதமே துவங்கிவிட்டன; இது பற்றி ஜனாதிபதி ஒபாமாவிற்கு ஜூன் மாதம் தெரிவிக்கப்பட்டது; அந்த நிலையில் பிரச்சினை ஏன் வெள்ளை மாளிகை இப்பொழுது அமெரிக்க மக்களிடம் இந்த சதித் திட்டம் பற்றிய தகவலைக் கூறத் தேர்ந்தெடுத்துள்ளது என்னும் வினாதான் எழுகிறது.

ஈரானிய அரசாங்கமே ஒரு உள்ளார்ந்த விளக்கத்தை அளித்துள்ளது. “அமெரிக்க அரசாங்கமும் CIA வும் இத்தகைய திரைப்படக் கதை போன்றவற்றைத் தயாரிப்பதில் நல்ல அனுபவம் கொண்டவை என்று ஈரானிய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் அல் அக்பர் ஜவன்பெக்கிர் டெஹ்ரானில் கூறினார். நாடு முழுவதும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான எதிர்ப்புக்கள் பரவி வருவதைக் குறிப்பிட்ட அவர், “இப்புதியப் பிரச்சாரம் அமெரிக்க மக்களுடைய கருத்துக்களை உள்நாட்டு நெருக்கடிகளிலிருந்து திசைதிருப்புவதற்கு எனத் தோன்றுகிறது என்றார்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கும் அதன் அரசியல் ஸ்தாபனமும் பெருகிய முறையில் அமெரிக்காவிலுள்ள சமூக, பொருளாதார நெருக்கடி பற்றி கவலை கொண்டுள்ளன, அதேபோல் தொழிலாள வர்க்கம், இளைஞர்களுடைய பெருகிய சீற்றம் பற்றிக் கவலை கொண்டுள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. இவைதான் வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் வெளிப்பாட்டைக் காண்கின்றன. ஒரு பயங்கரவாதத் தாக்குதல் ஏற்படுமோ என்ற அச்சத்தைத் தூண்டுதல், மீண்டும் ஒரு போருக்குத் தயாரிப்பு நடத்துதல் என்பது உறுதியான அரசியல் நோக்கம் ஒன்றிற்கு உதவும்; அதாவது வெகுஜன வேலையின்மை மற்றும் சமூக சமத்துவமின்மை என்ற நிலைகள் நாடுமுழுவதும் எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் திசைதிருப்புதல் என்பதே அது.

செய்தி ஊடகத்தால் திறனாயாத வகையில் ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் உலகம் முழுவதுமுள்ள ஈரான் பற்றிய வல்லுனர்களால் பெரும் அவநம்பிக்கையுடன்தான் முகங்கொடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய சதித்திட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஈரானிய அரசாங்கம் ஏன் காரணம் கொள்ள வேண்டும் என்று பலரும் வினாவை எழுப்பியுள்ளனர்.

அமெரிக்காவில் சௌதித் தூதரைப் படுகொலை செய்யும் முயற்சியில் ஈரான் ஈடுபடும் என்று நான் நம்பத்தயாராக இல்லை. இதில் அரசியல் பயன்பாடு இல்லை என்று கெய்ரோவின் அல் அஹ்ரம் அரசியல், மூலோபாயக் கூடத்தின் மூலோபாய வல்லுனர் ஒருவர் மஹமத் கட்ரி சயீத் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

 

அரபு உலகில் எழுச்சிக்கள் உள்ள சூழலில், குறிப்பாக ஈரானின் முக்கிய போட்டி நாடான சௌதி அரேபியாவில், சௌதித் துருப்புக்களால் அடக்கப்பட்ட பஹ்ரைன் எழுச்சிகள் மற்றும் சௌதி முடியாட்சியை தனிமைப்படுத்திக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய சௌதி அரேபியாவிலேயே கிழக்கு மாநில அமைதியின்மை இருக்கையில், இத்தகைய சதித்திட்டம் பற்றிய பேச்சு சௌதி ஆட்சியை வலுப்படுத்தவும் அமெரிக்க ஆதரவு இருமடங்காக அதற்கு அதிகரிக்கப்படுவதை ஊக்குவிக்கவும்தான் பயன்படும். வாஷிங்டனின் குற்றச்சாட்டுக்கள்ஈரான் பற்றிய சிறப்பு வல்லுனர்களிடையே புதிரை ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் அமெரிக்க மண்ணில் ஈரானிய அரசாங்கம் ஒரு திமிர்த்தன கொலை மற்றும் குண்டுத் தாக்குதல் திட்டத்திற்கு ஆதரவு தராது என்றுதான் கூறியுள்ளனர் என ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு நியூ யோர்க் டைம்ஸ் தள்ளப்பட்டது.

அமெரிக்காவின் கூற்றை வினாவிற்கு உட்படுத்துபவர்களுள் 21 ஆண்டுகள் CIA யின் மத்திய கிழக்கு விவகாரங்களில் அதிகாரியாக உள்ள ரொபேர்ட் பேர் உள்ளார். ABC News இடம் அவர் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளில்நம்பகத்தன்மை இல்லை என்றார். கூறப்படும் சதித்திட்டம்ஈரானியரின் வாடிக்கையான செயற்பாடு போல் இல்லை என்றார் அவர். “இது முற்றிலும் அவர்களுடைய செயல் தன்மையை ஒத்து இருக்கவில்லை. அவர்கள் இதைவிடத் திறமையாகத்தான் செய்வர். ஒரு அமெரிக்க வங்கி மூலம் பணம் அனுப்ப மாட்டார்கள். மெக்சிகோவிலுள்ள போதைக்குழுவிடம் அணுகமாட்டார்கள். அவர்கள் இவ்வகையில் செயல்படுவதில்லை என்று தொடர்ந்து கூறினார்.

அமெரிக்க நிர்வாகம் இருப்பதாகக் கூறப்படும் சதிக்குபதிலடி கொடுக்கும் வகையில், டெஹ்ரானில் Quds Force தளத்தைத் தாக்கலாம், அல்லது வேறு பலவற்றைச் செய்யலாம், ஆனால் இவை அனைத்தும் நிலைமையை பெரிதுபடுத்திவிடும் என்று Baer எச்சரித்தார்.

 

முன்னாள் CIA முகவர் இத்திட்டம் டெஹ்ரான் அரசாங்கத்தின் மீதுகுற்றம் சாட்டப்பட வேண்டும் என்ற கருத்துடைய யாருடையதோ செயலாகத்தான் இருக்க வேண்டும் என்றார்.

ஈரானுடைய உயரடுக்கு இரகசியப் பிரிவு எதற்காக ஒரு திவாலான முன்னாள் பழைய கார் விற்பனையாளரை, அதுவும் குற்றப் பின்னணி கொண்டவரை, அமெரிக்க மண்ணில் முதல் முறையாக நடத்தும் தன் திட்டத்தைச் செயல்படுத்த தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்த நபர் எதற்காக மெக்சிக்கோவிற்கு Loz Zetas ஐ ஏற்பாடு செய்யப் புறப்பட வேண்டும்? பிந்தையதோ போதைப் பொருளில் ஈடுபாடு கொண்டது; போட்டி போதைப் பொருள் விற்பனையாளர்களை கொல்லுமே ஒழிய, வாஷிங்டனில் உள்ள தூதரைக் கொல்லுவது அதன் வேலை இல்லை. அமெரிக்க நீதித்துறை இந்த வினாக்களுக்கு விடையளிக்கவில்லை.

ஓரளவு ஏற்கத்தக்க விளக்கம் அர்பபசியர் மெக்சிகோவிற்குச் சென்றது Quds படைகளுக்காக படுகொலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அல்ல, மாறாக போதைப் பொருள் திட்டத்திற்காக இருக்கலாம். DEA வினால் பிடிபட்ட நிலையில், அவர் ஈரானுக்கு எதிராக ஒரு போலி பயங்கரவாத விவகாரத்தைத் தயாரிப்பதற்கு உதவும் கருவியாகமாறியிருக்கலாம்.”

அவ்வாறு இருக்குமானால், எந்த தீவிர அளவிற்கு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் வாஷிங்டனின் அதனுடைய புவிசார் அரசியல் மூலோபாய நலன்களைச் செயல்படுத்த இடைவிடாத் தூண்டுதலுக்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தயார் என்பதற்கு மற்றும் ஒரு அடையாளம் ஆகும். ஆழ்ந்து வரும் பொருளாதார நெருக்கடி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பேர்சிய வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவிலுள்ள எண்ணெய் உற்பத்திப் பிராந்தியங்களில் மேலாதிக்கத்தை நிறுவ உறுதிகொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதற்காக அது கடந்த தசாப்தத்தில் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றில் போர்களை நடத்தியுள்ளது; தன் கொள்ளை நோக்கங்களுக்கு தடையாக இருப்பது அப்பிராந்திய சக்தியான  ஈரான் என்று அது காண்கிறது என்பதை இது தெரிவிக்கிறது.