World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Occupy Wall Street protesters condemn US political establishment

‘வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும்’ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தைக் கண்டிக்கின்றனர்

By Sandy English
13 October 2011

 Back to screen version

லிபேர்ட்டி பிளாசா என்று மறுபெயரிடப்பட்டுள்ள Zuccotti Plaza வை நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நியூ யோர்க் நகர நிதியப் பகுதியின் இதயத்தானத்தில் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு அமெரிக்கா நெடுகிலும் மற்றும் நியூ யோர்க் நகரத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. கடந்த சில நாட்களில் மக்களின் உணர்வு நிதிய மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின்பால் அதிருப்தியும், விரோதப் போக்கும்தான் என்று உள்ளது.
 

புதன்கிழமையன்று உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்கள் அதன் கட்டுரைகளின் நூற்றுக்கணக்கான பிரதிகளை வினியோகித்ததுடன், முதலாளித்துவமுறை பற்றிச் சீற்றம் கொண்டுள்ள டஜன்கணக்கான மக்களுடன் உற்சாகமான விவாதங்களிலும் ஈடுபட்டனர். ஜனநாயகக் கட்சியின் மூலமாக அரசியல் ஸ்தாபனமானது வோல் ஸ்ட்ரீட்டின் பில்லியனர்களின் நலனுக்காக இயக்கத்தில் இணைந்து செயல்பட முயற்சிப்பதாக ஆதரவுதர வந்துள்ளவர்களில் பலர் கருதுகின்றனர்.

இந்த நடவடிக்கை ஓர் ஆழ்ந்த முரண்பாடான தன்மையைத் தொடர்ந்து பெற்றுள்ளது. ஒரு திட்டமில்லாமல் அது செயல்படுகிறதுதொழிற்சங்கங்கள் மற்றும் செய்தி ஊடகத்தின் மூலம் ஒரு ஜனநாயகக் கட்சி சார்பிற்கு ஆதரவு தரக்கூடும். ஆனால் வேலைகள் இல்லாத நிலை, கல்விக்காகக் கடன்பட்ட நிலை ஆகியவற்றால் அழுத்தம் கொண்டுள்ள பெருகிய எண்ணிக்கை உடையவர்களினால் கூட்டமும் அதிகரிக்கிறது. அமெரிக்கா ஈடுபட்டுவரும் போர்கள் குறித்துப் பலர் எதிர்ப்புக் காட்டுகின்றனர். இவர்களில் பலரும் இளைஞர்கள், போராடுவதற்கு ஒரு வழியைக் காண முற்படுபவர்கள்.

 

மே 12க்கும் அப்பால் என்னும் கூட்டணி, முன்னாள் இடதுகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூகக் குழுக்கள் என்று மே 12 அன்று நிதியப் பகுதியில் பல ஆயிரக்கணக்கானோர் அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்தவர்கள், புதன்கிழமையன்று ஒரு சில நூறுபேரைக் கொண்டு எண்.1, சேஸ் பிளாசாவிலிருந்து வோல் ஸ்ட்ரீட்டிற்கு அருகே செல்ல அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இது இந்த ஆண்டு JPMorgan Chase உடைய தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டயமண்ட் பெறும் 436,000 டொலர்கள் வரிக் குறைப்பை எதிர்த்து நடத்தப்படுகிறது.

 

வரியை இரத்து செய்வதை நிறுத்த டிசம்பர் 31 வரை அவகாசம் உள்ளது என்று அணிவகுப்பாளர்களிடம் கூறுகையில், கூட்டணி தன்னுடைய அறிக்கைகளிலோ, பதாகைகளிலோ எங்கும் வரி நிறுத்தம் நியூ யோர்க் மாநில கவர்னர் ஆண்ட்ரூ க்யூரோ மற்றும் ஜனநாயகக் கட்சியில் இருந்து ஒரு நன்கொடைதான் என்பதைச் சுட்டிக் காட்டவில்லை. ஜனநாயகக் கட்சியை சேர்ந்த க்யூமோ ஆண்டிற்கு 250,000 டொலருக்கும் மேல் வருமானம் உடைய தனிநபர்களின் விரிவிதிப்பு விகிதத்தில் இருந்து 8.97 ஐ அவருடைய அடுத்த ஆண்டிற்காக முன்வைக்கப்படும் திட்டத்தில் இருந்து அகற்றியுள்ளார்; மேலும் இந்நடவடிக்கையை பிடிவாதத்துடன் போற்றியுள்ளார்.

SEIU Local 32BJ உறுப்பினர்கள் பிற்பகல் கடைசியில் ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்து கொண்டனர். 60,000 அலுவலக-கட்டிட துப்பரவாளர்கள் பேரைக் கொண்டிருக்கும் இத்தொழிற்சங்கம் இப்பொழுது கிழக்குக் கடலோரப் பகுதி முழுவதும் பெரிய கட்டிடங்களின் உரிமையாளர்களுடன் ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமெரிக்கா நெடுகிலுமுள்ள பல தொழிற்சங்கங்களை போலவே SEIU Local 32BJ யும் வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள செய்தி ஊடகத் தகவலின்படி, இந்த அணிவகுப்புநல்ல வேலைகள், பெரும் செல்வந்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பெருகிய செல்வ இடைவெளி ஆகியவற்றை உயர்த்திக் காட்டுவதற்காக அழைப்பு விடப்பட்டுள்ளது என்று கூறுகிறது. ஆனால் SEIU வின் உண்மை வழக்கம் வங்கிகளைப் பிணை எடுத்தவர்கள், செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இடைவெளி பெருகுவதை மேற்பார்வையிடுவோர் ஆகியோருக்கு ஆதரவு கொடுப்பதுதான். SEIU ஆனது ஜனநாயகக் கட்சியின் வோல் ஸ்ட்ரீட் பிரதிநிதிகளுக்கு தாராள நிதிகளை அளித்துள்ளது. பாரக் ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மிக அதிக நன்கொடைகளாக 28 மில்லியன் டொலர்கள் அளித்ததின் மூலம் இத்தொழிற்சங்கம் அதிக நன்கொடை கொடுத்த அமைப்பு என்ற பெயரைக் கொண்டுள்ளது. இதன் முன்னாள் தலைவர் ஆண்டி சாம், ஒபாமாவை ஏப்ரல் 2010ல் தொழிற்சங்கப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதற்கு முன் 50 முறைகள் சந்தித்துள்ளார்.

அமெரிக்காவின் மூன்றாவது பெரிய வங்கியான சிட்டிக் குரூப்பின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் பண்டிட்டிடம் இருந்தும் நல்வாழ்த்துக்களும் ஆலோசனைகளும் வந்துள்ளன; அவர் Fortune இதழ் புதன் காலை ஏற்பாடு செய்திருந்த ஒரு காலைச் சிற்றுண்டி நிகழ்வில்நிதிய அமைப்புக்களுக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கும் இடையே இருந்த நம்பிக்கை முறிக்கப்பட்டுள்ளது; அதுதான் வோல்ஸ்ட்ரீட்டின் வேலை ஆகும்; முக்கிய தெருக்களில் இருப்பவர்களை அணுகுதல், அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டமைத்தல் என்று கூறினார்.

நாம் விரும்பக்கூடிய வகையில் பொருளாதார மீட்சி இல்லை. தாங்கள் சாதிக்கக் கூடியதைச் சாதிக்க இயலாமல் ஏராளமானோர் உள்ளனர்; அது நல்லது அல்ல என்று பண்டிட் தொடர்ந்து கூறினார். ஆனால் அத்தகையோரில் பண்டிட் ஒருவர் அல்ல. அவர் ஒரு 10-அறைகள் கொண்ட, 17 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அடுக்கு வீட்டை மான்ஹாட்டனில் உயர் மேற்குப் பிரிவில் கொண்டுள்ளார்.

இந்தபரிவுணர்வு மிக அதிகமாக பின்னாலிருந்து இயக்கப்படும் பொது உறவுகள் செயலின் ஒருபகுதிதான். இதன் நோக்கம் சிட்டிக் குரூப்பின் பெரும் இலாபங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்பதற்கும் வங்கிகளின் சர்வாதிகாரத்தை வினாவிற்கு உட்படுத்துவோரின் ஆயுதங்களை இழக்கச் செய்வதும்தான்.

உலக சோசலிச வலைத் தளம் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுக்கவும் அதைப்பற்றிக் கூடுதலாக  அறிய வந்தவர்கள் பலரையும் பேட்டி கண்டது.

நியூ பாட்ஸில் உள்ள நியூயோர்க் மாநில பல்கலைக்கழகத்தில் முதலாண்டில் படிக்கும் ஜூலியா ரெஜிஸ்டர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்:

தொழிலாளர்களின் வருமானங்கள் சரிகின்றன என நான் அறிகிறேன். பள்ளிக்குச் செல்லுதல், இரு வேலைகள் பார்த்தல் என்பதுடன் நான் போராடி வருகிறேன். வேலைகளில் ஒன்று என்னுடைய பள்ளியிலுள்ள நூலகத்தில் குறைந்தப்பட்ச ஊதியத்தில் வேலைபார்ப்பது ஆகும். மற்றொன்று திரைப்பட ஏற்பாடு செய்பவர்களுக்கு உதவியாக இருப்பது ஆகும்.

என்னுடைய கடன்களைத் தீர்ப்பதற்கும், கல்லூரியில் வசிப்பதற்கும், என்னுடைய புத்தகங்களை வாங்குவதற்குப் பணம் கொடுப்பதற்கும் நான் உழைத்தே தீரவேண்டும். நான் நாடக அரங்குத் துறை பற்றிக் கற்கிறேன். நான் ஒரு நடிகை, எழுத்தாளர், ஓவியர் மற்றும் இசைக்கலைஞர். நான் நாடக அரங்கத்தை நேசிக்கிறேன், அது தோற்றுவிக்கும் வாய்ப்புக்களை நேசிக்கிறேன். ஆனால் நான் பட்டப்படிப்பை முடிப்பதற்குள் எனக்கு 20,000 டாலர்கள் கடன் தேவைப்படும்; மற்ற இன்னும் அதிகக் கடன் உடைய மாணவர்களை விட இது பரவாயில்லை என்று பலரும் கூறுகின்றனர். என் நண்பர்கள் சிலருக்கு 50.000 டாலர்கள் அல்லது 60,000 டாலர்கள் என்று மாணவர்கள் கடன் உண்டு.

இந்நாட்டில் வசிக்கும் மக்கள், செல்வந்தர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது என்பதை ஒப்புக் கொள்ள விரும்பத் தயாராக இல்லை என்ற போக்கைத்தான் கொண்டுள்ளனர். நாம் அனைவரும் சமமான அமெரிக்கர்கள் என்று உணர அவர்கள் கற்பிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பொருளாதார, அரசியல் அளவில் நாம் ஒன்றும் சமமானவர்கள் இல்லை. வோல் ஸ்ட்ரீட் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. பல பில்லியன் மதிப்புள்ள பெருநிறுவனங்கள் அரசியல்வாதிகளுக்கு நிதி கொடுத்து அவர்களுடைய கருத்துக்களை உருவாக்குகிறார்கள். இது ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் இருவருக்குமே பொருந்தும். புஷ் கேட்ட அதே செல்வந்தர்களின் கருத்தைத்தான் ஒபாமாவும் கேட்கிறார். இதை எதிர்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம்.”

WSWS இடம் ரிக்கி ஷ்லாகெல் கூறினார்: “நான் இங்கு பிலடெல்பியாவிலிருந்து ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு முன் வந்தேன்; இது எப்போது முடியுமோ அதுவரை இருக்கப் போகிறேன். என்னுடைய சொந்த நிலைமை மோசமானதுதான்; முதலாளித்துவத்திற்கு எதிராக நான் தீவிரமாக எதையேனும் செய்யாவிடில் உலகெங்கிலுமுள்ள வறுமை, சுற்றுச் சூழல் நெருக்கடிக்கு நான் பங்களிப்பு கொடுப்பது என்ற முடிவிற்கு வந்துள்ளேன். முதலாளித்துவத்திற்கு மாற்றீடு தேவை என எனக்கு அப்பட்டமான தெளிவு வந்துள்ளது. ஒருகாலத்தில் அது முற்போக்கான தன்மை கொண்டிருந்தது. இப்பொழுது அதன் காலம் முடிந்துவிட்டது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது, முறையே முற்றிலும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியின் மீது கவனத்தைச் செலுத்துவதை நான் நிறுத்திவிட்டேன் என்பதுதான் நேர்மையான பேச்சு. நான் வாக்குப்போடவில்லை, ஏனெனில் இது எப்பொழுதுமே இரு தீமைகளில் குறைந்த தீமைக்கு வாக்கு என்றுதான் உள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு என்பது உலகெங்கிலுமுள்ள மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் என்று நான் உணர்கிறேன். என்னைப் போல், எங்களில் பலரும் பள்ளிக்குச் செல்லவும் ஒரு நல்ல வேலையைப் பெறுவதற்கும் மிகவும் கடுமையாக உழைத்தோம். இந்த முறை திரித்தலுக்கு உட்பட்டுவிட்டது என்ற முடிவிற்கு நான் வந்துள்ளேன். இது ஒரு பெரும் ஊழல் ஆகும்.

இரண்டரை ஆண்டுகளாக, நான் பழைய வீட்டுப் பொருட்கள் நிறுவனத்தில் உழைத்தேன்; மக்கள் அங்கு தங்கள் பழைய வீட்டுப் பொருட்கள், சோபாக்கள், மேசைகள் போன்றவற்றைக் கொடுக்கின்றனர். நான் ஒரு வாகனத்தில் செல்லுவேன், பொருட்களுக்கு மதிப்பைக் கூறுவேன், பொருட்களை எடுத்து வாகனத்தில் திரும்புவேன். வாரத்திற்கு 35-40 மணி நேரம் வேலை பார்ப்பேன். இதை வைத்துக் கொண்டு West Chester கல்லூரியில் முழுநேரப் படிப்புக் கட்டணத்தைச் செலுத்தி வந்தேன். நான் பணிபுரியும்போது, இன்னும் கடன்களை வாங்க வேண்டியதாயிற்று; பள்ளி அதிக செலவைக் கொடுப்பது என்று இல்லாவிட்டாலும்கூட. அதன்பின் வேலையிடத்தில் அவர்கள் என்னை காரணம் இல்லாமல் தற்காலிகப் பணிநீக்கம் செய்தனர். வேலையின்மை ஊதியத்தை நான் வசூலிக்க முடியாமல் அவர்கள் பொய்கூறுகிறார்கள்.

இவை அனைத்துமே ஒரு தோற்கும் முறையின் பகுதி என்று நான் உணர்கிறேன். அவர்கள் சரியான முறையைச் செயல்படுத்தவில்லை. மாணவர்கள் கடன் பெறுவதை அகற்றுவதற்கான கோரிக்கை நன்மை பயக்கும். இதில் சமரசத்திற்கு இடம் இல்லை.”

நோவா ஷஸ்டர் க்யூனி பட்டதாரிகள் மையத்தின் மாணவர், அங்கு நூலகத்திலும் வேலை செய்கிறார்.

இயக்கத்தில் ஒத்துழைப்பு பற்றி என்ன நடக்கிறது என்பது பற்றி நான் பெரிதும் கவலைப்படுகிறேன், குறிப்பாக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் தொடர்பு குறித்து.’’

எங்களுக்கு ஒபாமாவைப் பிடிக்கவில்லை. நாங்கள் ஒபாமாவிற்கு வாக்களிக்கவில்லை. தேர்தல்கள் ஒரு அரசியல் நாடகம்தான். யார் பதவியில் இருக்கிறார் என்பது பொருட்டு அல்ல. பெருநிறுவனங்களும் வங்கிகளும்தான் அனைத்தையும் நடத்துகின்றன. இது அடிமைக்காலத்திற்கு ஒப்பானது என நான் கூற விரும்புகிறேன். வயல்களில் அடிமைகள் இருந்தபோது, அவர்கள் உளைச்சல் கொண்டு, அமைதியற்று இருப்பர்; அதன் பின் அவர்கள் கண்காணிப்பாளரை மாற்றி மக்களிடம் இப்பொழுது முன்னேற்றங்கள் வந்துவிட்டன என்று கூறுவர்; ஆனால் தொடர்ந்து அடிமை முறை நடத்தப்படும். தேர்தல்களின்போது செய்தி ஊடகம் அனைத்தையும் காட்சிப்பொருள் போல் வைக்கும், ஒரு மாற்றம் ஏற்படுவது போல் காட்டும். ஆனால் அடிமை முறையைப் போலவே, என்ன மாற்றம் ஏற்பட்டாலும், அடிமைத்தனத்தின் கீழ் ஒருவர் வாழமுடியாது.

நாம் இப்பொழுது உள்ள கட்டம் வேலைகள் மற்றும் கட்சிகளைப் பற்றி ஆராயும் கட்டமாகும். அண்மையில் ஒரு வளரும் சோசலிசக் கட்சி என்ற கருத்திற்கு நான் ஆதரவு தருகிறேன். அதற்குப் பல படிகள் உள்ளன, அனைத்தையும் இப்பொழுதே கணிக்க முடியாது. ஆனால் இப்பொழுதுள்ள தடையற்ற சந்தை முதலாளித்துவ முறையில் நாம் சீர்திருத்தங்களை எதிர்பார்க்க முடியாது. முழு முறையையும் நாம் மாற்ற வேண்டும்.”

இதற்கு தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவது சாத்தியமானதே. தொழிற்சங்கங்களும் ஆதரவைக் கொடுக்கச் செய்ய முடியும், ஆனால் அவர்களைப் பொறுத்த வரை பிரச்சினை என்ன என்றால் அவை ஜனநாயகக் கட்சிக்குப் பணம் கொடுக்கின்றனர். தொழிற்சங்கங்கள் மக்களுக்கு ஆதரவாக இருந்து பணத்தை நமக்குக் கொடுத்தால் சிறப்பானது, ஆனால் இன்னும் நாம் அவர்களிடம் இருந்து சுயாதீனமாகத்தான் இருக்க வேண்டும்.

“CWA [அமெரிக்கத் தொடர்புத்துறை ஊழியர்கள்] அமைப்பிற்கு நான் உழைத்தேன்; இப்பொழுது முடிவுற்ற வெரிசன் வேலைநிறுத்தத்திலும் உழைத்தேன். ஏற்கனவே நான் வேலையின்றி இருந்தேன்; மெக்சிகோவில் அது நடைபெற்றபோது இந்த மின்னஞ்சல் அங்கிருந்து வந்தது, நாம் வேலைக்கு மீண்டும் வரவேண்டும் என.

குளிர்காலத்தில் என்ன நடக்க உள்ளது என நான் வியக்கிறேன். நாம் இங்கு தொடர்ந்து இருக்க வேண்டும். நமக்குப் பெரும் ஆதரவு உள்ளது, இது ஒரு நீடித்த இயக்கமாக விளங்கப் போகிறது. எந்த அளவிற்கு நாம் செல்வோம் என்பது இருப்புப் பிரச்சினை அல்ல. நாம் திறமையுடன் இருக்கிறோமா என்பது தெளிந்த சிந்தனைப் போக்கு உடைய தகவலைக் கொண்டுள்ளோமா என்பதைப் பொறுத்து உள்ளது.”

பிளோரிடாவில் இருந்து வந்துள்ள ஆவணத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜோஷ் வேகா WSWS இடம் கூறினார்: “நியூ யோர்க்கிற்கு வந்தது ஒரு எதிர்பாரா நிகழ்வு. நான் DC யில் முதலில் இருந்தேன், Zeitgeist உடன் சேர்ந்து ஒரு ஆவணப்படம் தயாரித்துக் கொண்டிருந்தேன்.

எண்ணெய்க் கசிவை ஒட்டி வளைகுடாவில் நாங்கள் பொருளாதார நெருக்கடியை உணர்ந்தோம். அவ்விடம் உண்மையில் சுற்றுலாத் துறையைத் தளமாகக் கொண்டது.

இங்கு வந்துள்ளதற்குப் பல காரணங்கள் உள்ளன. இன்னும் அதிக சுதந்திரம் தேவை என விரும்புகிறேன், நான் ஆதரவு கொடுக்காத போர்களுக்கு நான் வரிகளைக் கொடுக்க விரும்பவில்லை. இராணுவ வரவு-செலவுத் திட்டச் செலவுகளை நாம் குறைக்கும் தேவை உள்ளது; உள்நாட்டில் பலவற்றைக் கட்டமைக்க வேண்டும். இங்கு நான் கற்றுக் கொண்டதை நான் என் தாயகத்திற்கு எடுத்துச் செல்வேன்.

ஒபாமா நம்மை விற்றுவிட்டார். அவருக்கு இப்பொழுது பெருநிறுவன ஆதரவு வேண்டும். கட்டுப்பாடு இல்லாத, அதிகாரம் இல்லாத ஒரு கைப்பாவை அவர். விடயங்களை மாற்றுவதற்கு அதிகாரம் வேண்டும், எனவேதான் அவர் அங்கு உள்ளார்.

“[போஸ்டனில்] நடைபெற்ற கைதுகள் குற்றம் சார்ந்தவை. இன்னும் கைதுகள் நடந்தால், இன்னும் எதிர்ப்புக்கள்தான் வளரும். இது உத்வேகத்தைப் பெற்றுவருகிறது. பல மக்கள் இந்த இயக்கத்தை ஆதரிக்கின்றனர், இன்னும் ஆனால் இங்கு வரவில்லை. ஒன்று இது சிதைந்துவிடும் அல்லது வேறு ஒன்றிற்கு ஊக்கம் தரும். ஏற்கனவே அடுத்தக் கட்டத்திற்கு ஏற்பாடு வந்துவிட்டது.”