சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The euro crisis: Billions more for the banks

யூரோ நெருக்கடி: வங்கிகளுக்கு இன்னும் கூடுதலாக ஒதுக்கப்படும் பில்லியன்கள்

Peter Schwarz
12 October 2011

use this version to print | Send feedback

மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாக, ஐரோப்பிய அரசாங்கங்கள் பொதுப்பணத்திலிருந்து பெரும் தொகை அன்பளிப்புகளை எடுத்து வங்கிகளைக் "பாதுகாக்க" முயன்று வருகின்றன. இதுவே, கிரேக்க கடனை "வெட்டிக்குறைக்கும்" வேலையோடு (பகுதியாக தள்ளுபடி செய்வதோடு) சேர்ந்து, வங்கிகளுக்குள் "மீண்டும் மூலதனத்தைப் பாய்ச்சுவதே" ஐரோப்பிய கடன் நெருக்கடித் தீர்மானம் குறித்த விவாதத்தின் பின்புலத்தில்  உள்ளது.

ஞாயிறன்று பேர்லினில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பின்னர், சான்ஸ்லர்  அங்கேலா மேர்கெலும், ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும், இந்த மாத இறுதிவாக்கில் இந்த நெருக்கடியைத் தீர்க்க "நம்பிக்கையான  ஒரு பரந்த மீட்புப்பொதியை" வெளியிடவிருப்பதாக அறிவித்தனர். ஆனால் அவர்கள் அதுகுறித்து எந்தவொரு பிரத்தியேக விபரங்களையும் வழங்கவில்லை. ஜேர்மனியும், பிரான்சும் அவற்றிற்கு இடையில் நிலவும் கருத்துவேறுபாடுகளைக் கடந்துவர கால அவகாசம் கொடுக்கும் விதத்தில், அக்டோபர் மத்தியில் திட்டமிடப்பட்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடி பற்றிய ஒரு மாநாடு ஒரு வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது முக்கியமாக, கிரேக்க செலவுக்கான நிதிஒதுக்கீடு மற்றும் செலுத்துமதியின்மைக்கான கால அட்டவணையை என்ற இரண்டு பிரச்சினைகளை உட்கொண்டுள்ளது. பிரெஞ்சு வங்கிகள் கிரேக்க அரச பத்திரங்களில் 80 பில்லியன் யூரோவை அவற்றின் புத்தக கணக்குகளில் வைத்திருக்கின்றன. ஆகவே யூரோ மீட்பு நிதியிலிருந்து (European Financial Stability Facility--EFSF) புதிய மூலதனத்தை வங்கிகளுக்கு அளிக்க விரும்பும் பிரான்ஸ், கிரேக்கம் திவால் ஆவதையோ அல்லது கடன் மறுகட்டமைப்பையோ முடிந்தவரை தள்ளிப்போட விரும்புகிறது. ஜேர்மனியின் வங்கிகள் கிரீஸிற்கு சுமார் 18 பில்லியன் யூரோ கடன் அளித்திருக்கின்றன. அவற்றில் பகுதியை அவை ஏற்கனவே தள்ளுபடியும் செய்துவிட்டன. ஆகவே வங்கிகளுக்கும், தேசிய அரசுகளுக்கும் அளிக்கப்படும் ஆதரவை தடுத்து, கிரேக்கத்தில் முன்கூட்டியே "திட்டமிட்ட" ஒரு செலுத்துமதியின்மையை  ஒழுங்குப்படுத்த ஜேர்மனி விரும்புகிறது.

கருத்துவேறுபாடுகளுக்கு இடையில், மேர்கெலும் சார்க்கோசியும் ஒட்டுமொத்த நிலைநோக்கின்மீது உடன்பட்டுள்ளனர்: அதாவது, ஐரோப்பிய கடன் நெருக்கடி வங்கிகளின் நலன்களுக்காகவும், பொதுப்பணத்தின் செலவில் தீர்க்கப்பட வேண்டியுள்ளது என்பதில் உடன்பட்டுள்ளனர். உழைக்கும் மக்களை விலையாக கொடுத்து இன்னும் கூடுதல் சமூகநல வெட்டு முறைமைகளைக் கொணர்வதே இதன்விளைவாக இருக்கும்.

சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டீன் லகார்ட், அமெரிக்க நிதித்துறை செயலாளர் திமோதி கெய்த்னர், ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூட் போன்ற பிரதான சர்வதேச நிதியியல் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் நீண்டகாலமாகவே, ஐரோப்பிய மத்திய வங்கியும், யூரோ மண்டல அரசாங்கங்களும் பணப்புழக்கத்தைத் திறந்துவிட வேண்டுமென்றும், வங்கிகளுக்கு வரம்பில்லாமல் நிறைய பணம் கிடைக்கும்படி செய்யுமாறும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

பணவீக்க விளைவுகளுக்காக அஞ்சியதாலும், பலவீனமான நாடுகளின் கடன்களுக்கு அது நிதி செலுத்த வேண்டியதிருக்கும் என்று அஞ்சியதாலும், ஜேர்மன் அரசாங்கம் இப்போது வரையில் அந்த போக்கை எதிர்த்து வந்தது. பணம் செலுத்தும் பிரச்சினைகளை முகங்கொடுத்துவரும் நாடுகள், கடுமையான சமூகநல வெட்டு முறைகளைக் கையாண்டால் மட்டும், பேர்லின் அவற்றிற்கு கடன் உதவிகளை வழங்க விரும்பியது.

ஆனால் சர்வதேச நிதியியல் சந்தைகள், பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி மற்றும் வங்கி தோல்வியுறக்கூடிய அச்சுறுத்தல் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கும் அழுத்தங்களின்கீழ் ஜேர்மன் அரசாங்கம் தற்போது அதன் போக்கை மாற்றிக் கொண்டுள்ளது. வங்கிகளுக்குள் மீண்டும் மூலதனத்தை பாய்ச்சுவதற்கு (அதாவது பொதுநிதிகளிலிருந்து எடுத்து வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பது) ஆதரவாக, ஞாயிறன்று, மெர்கேல் ஸ்திரமாக பேசியிருந்தார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பொருளாதார மற்றும் நாணய விவகாரக்குழுவிற்கு முன்னால், செவ்வாயன்று, ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் ஜோன்-குளோட் திரிஷே கூட வங்கிகளுக்குள் மூலதனத்தைப் பாய்ச்சுவதை பலமாக ஆதரித்தார். உடனடியாக நடவடிக்கையில் இறங்க அரசியல்வாதிகளுக்கு அழைப்புவிடுத்த அவர், கடன் நெருக்கடி "அமைப்பு ரீதியிலான பரிமாணத்தை" எட்டியிருப்பதாக எச்சரித்தார். 2008 லெஹ்மென் பிரதர்ஸ் பொறிவினையும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளுக்கு சமமாக தற்போதைய நிகழ்வுகளை நிறுத்தினார்.

ஊடகங்களின் கருத்துப்படி, ஜேர்மன் அரசாங்க வட்டங்களும் யூரோ மீட்பு நிதியில் "முட்டுக்கொடுக்க", அதாவது பல்வேறு நிதியியல் நுட்ப உத்திகளின் மூலமாக அதன் சொத்துக்களைப் பெருக்க, விவாதித்து வருகின்றன. அவ்வாறு நடந்தால் பின்னர், வங்கிகளுக்கு ட்ரில்லியன் கணக்கான தொகைகள் கிடைக்கும், அதேவேளையில் மக்களின் வாழ்க்கை தரங்கள் இன்னும் காட்டுமிராண்டித்தனமாக வீழ்ச்சியடைய உந்தப்படும். அமெரிக்காவைப் போலவே, நிதியியல் பிரபுத்துவத்தைத் தவிர ஏனைய மக்கள் அவர்களின் அடிமட்ட தேவைகளைப் பூர்த்திசெய்ய போராடி வருகின்ற அதேவேளையில், நிதியியல் பிரபுத்துவமோ பணத்தில் நீச்சலடித்துக் கொண்டிருக்கும்.

ஜேர்மன் அரசாங்கம் தற்போது அறிவுறுத்தி வரும், கிரேக்க அரச பத்திரங்கள் வைத்திருப்போருக்கான ஒரு "வெட்டிக்குறைக்கும்" தீர்வு (இதில் 50-60 சதவீத கடன் தள்ளுபடி குறித்து பேசப்படுகிறது) கிரேக்க மக்கள் முகங்கொடுத்துவரும் நிலைமைகளை தீர்க்காது. அதற்கு மாறாக, கூடுதல் வெட்டுக்களுக்கான கோரிக்கைகளை இணைத்துக் கொள்ளும் அது, தொழில்நுட்பரீதியாக திவால்நிலைமைக்கே கொண்டு வரும். மேர்க்கெல் மற்றும் சார்க்கோசியால் அறிவுறுத்தப்பட்டு வரும் முழுமையான பொதி, ஐரோப்பிய உடன்படிக்கைகளில் செய்ய வேண்டிய மாற்றங்களையும் உள்ளடக்கி உள்ளது. அதன்படி அதிகமாக கடன்பட்டுள்ள அங்கத்துவ நாடுகளின் நிதியியல் கொள்கைகளை ஐரோப்பிய ஒன்றியமே தீர்மானிப்பதாக இருக்கும்.

பொதுநிதியைப் எடுத்து வங்கிகளுக்கு பயன்படுத்துவதற்கு, அங்கே பெரும் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகின்றது. அமெரிக்கா முழுவதிலும் வேகமாக பரவிவரும் வோல் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம், ஐரோப்பாவிலும் ஓர் எதிரொலியைக் காண்கிறது. எவ்வாறிருந்த போதினும், நிதிய மூலதனத்திற்கு எதிரான இந்த எதிர்ப்பிற்கு ஒரேயொரு அரசியலமைப்பு கட்சியோ அல்லது தொழிற்சங்கமோ கூட ஆதரவு காட்டவில்லை. தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களை எவ்வாறு சிறப்பாக நடைமுறைப்படுத்துவது, அதுபோன்ற தாக்குதல்களுக்கு எழும் எதிர்ப்பை எவ்வாறு மிகவும் துல்லியமாக ஒடுக்குவது என்ற கேள்விகளைச் சுற்றியே உத்தியோகப்பூர்வ அரசியல் விவாதங்கள் முழுவதும் சுழன்று வருகின்றன.

உத்தியோகபூர்வ அரசியலில், “இடது" “வலது" சொற்களெல்லாம் அவற்றின் நிஜமான முக்கியத்துவத்தை இழந்துவிட்டிருக்கின்றன. இத்தாலியில், “வலதுசாரி" பிரதம மந்திரி சில்வியோ பெர்லொஸ்கோனி பெருவியாபாரங்களிடமிருந்தும், அவரின் சொந்த கட்சியின் அணிகளிடமிருந்தும் இராஜினாமா செய்யக்கோரும் அழைப்புகளை முகங்கொடுத்து வருகிறார். ஆனால் அதேவேளை முதலாளித்து "இடது" முகாமோ, பெர்லொஸ்கோனி பலமிழந்திருப்பதால் பெரும் வெட்டுக்களைக் கொண்ட திட்டத்தை செயல்படுத்த தயாரிப்பு செய்து வருகின்றன.

பிரான்சில், சோசலிஸ்ட் கட்சியின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஹோலெந், பதவியிலிருக்கும் பழமைவாத ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியைவிட தம்மால் வரவு-செலவு திட்டத்தை சமப்படுத்தி, தேசியக் கடனை மிகவும் சிறப்பாக குறைக்க முடியுமென மிகவும் தயக்கமின்றி அறிவிக்கிறார்.

ஜேர்மனியில், முந்தைய சமூக ஜனநாயக கட்சி (SPD) அதிபர் அவருடைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய "திட்டநிரல் 2010” (Agenda 2010) என்பதைப் போன்ற முன்மாதிரியில் அமைந்த, சமூகநலத்திட்டம்  மற்றும், ஐரோப்பாவில் தொழிலாளர் "சீர்திருத்தங்கள்" பற்றிய ஒரு புதிய சுற்றினை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். அனைத்து ஐரோப்பிய அரசுகளும் "திட்டநிரல் 2010” போன்ற சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென, Financial Times Deutschland.இல் ஹெகார்டு ஷ்ரோடர் எழுதினார். ஷ்ரோடரின் "திட்டநிரல் 2010” ஒரு மலிவுக்கூலி துறையை ஜேர்மனியில் பரந்து வளர்ப்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அதன் அடிப்படையில் தான் பெரும்பான்மை இளைஞர்கள் இன்று வேலை செய்து வருகின்றனர்.

உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், மற்றும் அவர்களின் எவ்வித எதிர்ப்பையும் ஒடுக்குவதிலும் வங்கிகளின் உத்தரவுகளை நிறைவேற்ற உதவுவதில் தொழிற்சங்கங்களும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வருகின்றன. கிரேக்க தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரேயொரு ஆதரவு நடவடிக்கையையும் கூட ஏற்பாடு செய்யாத தொழிற்சங்கங்கள், சமூகநல வெட்டு முறைமைகளைக் கொண்டு வரும் அந்தந்த அரசாங்கங்களுக்குப் பின்னால் நிற்கின்றன.

இத்தகைய சூழல்களின்கீழ், ATTAC மற்றும் Democracy Now போன்ற அமைப்புகளோடு சேர்ந்து போலி-இடது குழுக்களும் மற்றும் ஜேர்மனியிலுள்ள இடது கட்சியினை சுற்றியுள்ள இதுபோன்ற அமைப்புகளும் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. பிற்போக்குத்தனமான தொழிற்சங்கங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அவை, வலதுசாரி அரசியலை "இடது" சொற்களுக்குப் பின்னால் மறைத்துக்கொள்ள ஆளும் மேற்தட்டிற்கு ஆலோசகர்களாக இருந்து உதவ முடியும் என காட்டிவருகின்றன.

அவை தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பதைக் கடுமையாக நிராகரிக்கின்றன. மாறாக, சமூக போராட்டங்களானது அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது வெறுமனே அழுத்தமளிக்க வேண்டுமென்றும், ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கை அபிவிருத்தி செய்யக்கூடாதென்றும் அவை வலியுறுத்துகின்றன. ஸ்பெயின் மற்றும் கிரீஸில் நடந்த indignados” போராட்டத்தில், அரசியல் கட்சிகள் அவற்றின் நோக்கங்களை வெளிப்படையாக பிரச்சாரம் செய்வதை தடுத்து, “அரசியல் கூடாதென" அவை வலியுறுத்தின.

இவ்விதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நிதியியல் மூலதனத்தின் ஆதிக்கம் குறித்த பகிரங்க விமர்சனங்கள்  நடைமுறையில் தீவிர வலதுசாரிகளிடம் கையளிக்கப்பட்டு, அதனை ஐரோப்பாவைத் துண்டாட இட்டுச் செல்லக்கூடிய தேசியவாத மற்றும் இனவாத வழிவகைகளுக்குள் இவ்எதிர்ப்பு நேரடியாக திசைதிருப்பப்படுகின்றன.

நிதியியல் பிரபுத்துவத்தால் சமூக ஆதாரவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதற்கும், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பாரிய தாக்குதல்களுக்கு எதிராகவும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பானது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் விடையிறுப்பைக் கோருகிறது. நியாயமாகவும் அவர்களின் நடைமுறையை மாற்றிக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுவதால் ஆளும் வர்க்கத்தை, ஒரு வேறுபட்ட கொள்கையைக் கையாளும்படிக்கு நகர்த்த முடியாது. முதலாளித்துவ அமைப்புமுறை பேரழிவுமிக்க நெருக்கடியில் உள்ளது; ஆளும்வர்க்கமோ அடிப்பட்ட மிருகத்தைப் போல உறுமிக் கொண்டிருக்கிறது.

முதலாளித்துவத்தை சீர்திருத்த முடியாது, அது தூக்கியெறியப்பட வேண்டும். பொதுநிதிகளைக் கொண்டு வங்கிகளுக்குள் மூலதனம் பாய்ச்சப்படக்கூடாது, மாறாக அவை கைப்பற்றப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அவை ஒருசிலரின் இலாபங்களுக்காக அல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

இத்தகையவொரு சோசலிச வேலைத்திட்டத்தை செயலாக்க, தொழிலாள வர்க்கம் ஐரோப்பாவை அடிமட்டத்திலிருந்து ஐக்கியப்படுத்த வேண்டும். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பிரதியீடாக, ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளை உழைக்கும் மக்கள் ஸ்தாபிக்க வேண்டும்.