சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

US-backed Egyptian junta massacres peaceful protesters

அமைதியான எதிர்ப்பாளர்களை அமெரிக்க ஆதரவு எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு படுகொலை செய்கிறது

By Johannes Stern
11 October 2011

use this version to print | Send feedback

கெய்ரோவில் ஞாயிறு மாலை எகிப்திய இராணுவம் எதிர்ப்பாளர்கள்மீது ஒரு மிருகத்தனத் தாக்குதலை நடத்திக் குறைந்தபட்சம் 35 பேரைக் கொன்று, நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்தியது. இத்தாக்குதல் 10,000 அமைதியான எதிர்ப்பாளர்கள் கெய்ரோவின் தொழிலாள வர்க்கப் புறநகரான ஷுப்ராவில் இருந்து கெய்ரோ நகர மையத்தில் உள்ள மாஸ்பிரோவில் அரசாங்கத் தொலைக்காட்சிக் கட்டிடத்திற்குச் செல்லும்போது நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் காப்ட்டுக்கள் (Copts) ஆவர்; இவர்கள் ஆளும் இராணுவக் குழுவிற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து எகிப்தில் கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கு மதத்துறையில் சமத்துவத்தையும் கோரினர்.

கடந்த வாரம் எகிப்தின் மேற்பகுதி நகரமான அஸ்வானில் ஒரு காப்டிக் திருச்சபை தாக்குதலுக்கு உட்பட்டது. பல எகிப்தியர்கள் ஆயுதப்படைகளின் தலைமைக் குழுதான் (Supreme Council of the Armed Forces -SCAF) நிகழ்விற்குப் பொறுப்பு எனச் சந்தேகப்படுகின்றனர். எகிப்திய செயலரில் ஒருவரான அப்தென் தவாம் ஹாசன் சுதந்திரக் கருத்து உடைய செய்தித்தாள் Daily News Egypt இடம் SCAF “எகிப்தியர்களுக்கு இடையே பிளவு இருப்பது போல் காட்டவும், அதையொட்டி தன் பிடியை தொடர்ந்து இறுக்க வேண்டும் என விரும்புகிறது என்று கூறினார். கூட்டத்தினர்திருச்சபைகள் எரிக்கப்படுதல் கூடாது என்று முழங்கினர்; இராணுவ ஆட்சிக்கும் நடைமுறைச் சர்வாதிகாரியான பீல்ட் மார்ஷல் மஹமத் ஹுசைன் தந்தவிக்கும் எதிரான கோஷங்களை எழுப்பினர். “பீல்ட் மார்ஷல் தந்தவி அகற்றப்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்”, “இராணுவ ஆட்சி ஒழிக என்ற கோஷங்கள் முழக்கப்பட்டன.

மாஸ்பிரோவிற்குச் செல்லும் வழியில், அணிவகுத்துச் சென்றவர்கள் கற்களை எறியும் குண்டர்களால் பல முறை தாக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் ஒரு கார் மிக வேகமாக கூட்டத்தினிடையே சென்றது; எதிர்ப்பாளர்கள்மீது குண்டூவீச்சு நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டங்காரர்கள் அரசாங்கத் தொலைக்காட்சிக் கட்டிடத்திற்கு அருகே வந்தபின், எகிப்திய இராணுவம் அவர்களை கண்ணீர்ப்புகை, தடியடி ஆகியவற்றின் மூலம் தாக்கியது. எதிர்ப்பாளர்கள் தங்களைக் காக்க முற்படுகையில், இராணுவம் உயிர்த்த குண்டுகளைக் கூட்டத்தின்மீது வீசியது; கவச வண்டிகள் எதிர்ப்பாளர்களைப் பொருட்படுத்தாமல் சென்றதில், பலரும் சிக்கித் தவித்தனர். யூ ரியூப்பில் வந்துள்ள வீடியோக் காட்சிகள் மிருகத்தனமான படுகொலைகளைக் காட்டுகின்றன; நேரில் பார்த்த சாட்சிகள் அதிர்ச்சிதரும் நிகழ்வுகள் குறித்து விவரங்களைத் தெரிவித்தனர்.

இராணுச்சீருடையில் இருந்தவர்கள் நாங்கள் ஏதோ ஈக்கள் போல் உயிர்த்த குண்டுத்தாக்குதல்களை நடத்தினர்; சிலர் தப்பி ஓட முடிந்தது, மற்றவர்கள் கட்டிடங்களுக்குள் பதுங்கினர் என்று சுதந்திர செய்தித்தாளான டெய்லி நியூஸ் எகிப்திடம் ஒரு பெண் பேராசிரியர் கூறினார். மற்றொருவர் கூறியது: “மக்கள் நசுக்கப்பட்டதையும், குருதி கொட்டிய போர்வைகளில் எடுத்துச் செல்லப்படுவதையும், குடும்பங்கள், குழந்தைகள் கூக்குரல் இடுவதையும் பார்த்தேன்; கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன; மக்கள்மீது உயிர்த்த வெடிப்பொருட்கள் வீசப்பட்டன; குருதி கொட்டிய வண்ணம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.”

சில எதிர்ப்பாளர்கள் இடத்தில் இருந்து தப்பியோட முடிந்தது; அவர்கள் பின்னர் தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச்சென்றனர். செல்லும் வழியில் அவர்கள் மீண்டும் குண்டர்களாலும், பாதுகாப்புப் படையினராலும் தாக்கப்பட்டனர். பெரிய குண்டர் குழுக்கள் எகிப்திய அருங்காட்சியகத்திற்கு அருகே கூட்டத்தினர் மீது கற்களை வீசினர், பொலிஸ் படைகள் நீர் பீச்சி அடித்துக் கூட்டத்தைக் கலைத்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளுக்கு எதிராகத் திணறுகையிலும், எதிர்ப்பாளர்கள்முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் ஒன்றுபட்டுள்ளனர்”, “பீல்ட் மார்ஷலுக்கு மரணம் என்று முழங்கினர்.

எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதலுடன் நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பிய தொலைக் காட்சி நிலையங்கள் மீதும் இராணுவத்தினரும் பொலிசாரும் வன்முறையைக் கட்டவிழ்த்தனர். எகிப்திய இராணுவம் Al Hurra TV. Channel25  ஆகியவற்றின்மீது சோதனைகள் நடத்தி, அவற்றின் ஒளிபரப்புக்களையும் நிறுத்தியது. எகிப்திய சுதந்திர நாளேடான அல் மஸ்ரி அல் யோம் இராணுவ வீரர்கள் செய்தியாளர்களின் அடையாள அட்டைகளைச் சோதித்து கிறிஸ்தவர்களை அடையாளம் கண்டு, ஒரு கர்ப்பவதி உட்பட பலரை அடிக்கவும் செய்தனர்.

அதே நேரத்தில் எகிப்திய அரசாங்கத் தொலைக்காட்சி எதிர்ப்பாளர்களுக்கு எதிரான பெரிய பிரச்சாரத்தைத் துவக்கியதுகுறிப்பாக கிறிஸ்துவச் சிறுபான்மையினருக்கு எதிராக. விமர்சகர்கள் காப்ட்டுக்கள் எகிப்திய வீரர்களைத் தாக்கிக் கொல்வதாகக் குற்றம் சாட்டி, முஸ்லிம் குடிமக்கள் தெருக்களுக்கு வந்து எகிப்திய இராணுவத்தைக் காக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர். சில தகவல்களின்படி, சில இஸ்லாமிய குண்டர் குழுக்கள், தடிகளை வீசிக் கொண்டும் இஸ்லாமிய நாட்டிற்கான கோஷங்களைக் கூறிக்கொண்டும் தெருக்களுக்கு வந்து எதிர்ப்பாளர்கள்மீதான தாக்குதலில் சேர்ந்து கொண்டனர்.

பின்னர் இரவில், தகவல்துறை மந்திரி ஒசாமா ஹீக்கல் அராசங்கத் தொலைக்காட்சியின் தோன்றி மோதலைத் தொடக்கியதற்குவெளிச் சக்திகளை குற்றம் சாட்டி, எகிப்துகுறும் பற்றாளர்களின் பூசல்களால் தீவிரமாக அச்சுறுத்தப்படுகிறது என்றார். பிரதம மந்திரி எசம் ஷரப்பும் அச்சுறுத்தும் வகையில் பேசி, எகிப்தின் பாதுகாப்பு ஆயுதப்படைகளுக்கு எதிரான ஒருசதித்திட்டத்தால் ஆபத்திற்கு உட்படுகிறது என எச்சரித்தார். காப்டிக் மற்றும் முஸ்லிம் மத பிரமுகர்கள், செய்தியாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள்தங்கள் தேசியக் கடமையை செய்யவேண்டும் என்று அழைப்புவிடுத்தார்; மேலும் எகிப்தியர்கள்உறுதியற்ற வதந்திகளைக் கேட்கக் கூடாது என்றும் எச்சரித்தார். இதன்பின், “உங்களுக்குள் மோதல்கள் வந்துவிடாமல் எச்சரிக்கையுடன் இருங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான தாக்குதல் இராணுவ ஆட்சியால் எதிர்ப்பாளர்கள்மீது நடத்தப்படுவது கடந்த வாரங்களில் அலையென வந்துள்ள வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் இவற்றின் நடுவே வந்துள்ளது. ரமழான் முடிவு அடைந்ததில் இருந்தே, நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள்ஆசிரியர்கள், பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், மருத்துவர்கள், தொழில்துறைத் தொழிலாளர்கள் உட்படஅற்ப ஊதியங்கள், நல்ல பணி நிலைமைகள், சமூக சமத்துவம் ஆகியவற்றைக் கோரி வேலைநிறுத்தங்களை செய்கின்றனர்.

வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவை நடைபெறுகையில், தொழிலாளர்கள் இராணுவ ஆட்சிக்குழு வீழ்ச்சியடைய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இந்த ஆட்சி முபாரக் ஆட்சியின் விரிவாக்கம்தான் எனப் பரந்த முறையில் காணப்படுகிறது; இது ஜனநாயக-விரோத மற்றும் சமூகநலக் கொள்கைகள்-விரோதப் போக்கு என்று முன்னாள் சர்வாதிகாரி கொண்டிருந்த கொள்கைகளைத்தான் தொடர்கிறது; அவரோ பெப்ருவரி 11ம் தேதி நடைபெற்ற வெகுஜன எதிர்ப்புக்களை ஒட்டி அதிகாரத்தில் இருந்து அகன்றுவிடும் நிலை ஏற்பட்டது.

தொடரும் எதிர்ப்புக்கள் எகிப்திய ஆளும் உயரடுக்கு முழுவதற்கும் அதிரச்சி அலைகளை அனுப்பியுள்ளன; முதலாளித்துவத்தின் செய்தித்தொடர்பாளர்கள்மற்றொரு புரட்சிக்கு எதிராக எச்சரித்து, வேலைநிறுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

எகிப்தில் இப்பொழுது நடப்பது “2, 3 பெப்ருவரி நாட்களில் பெற்றதைத்தான் நினைவுபடுத்துகிறது என்று அல் அரேபியா துணைக்கோள் தொலைக்காட்சியில் உள்ள செய்தியாளரான ராண்டா அப்துல் அஸ்ம் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்களில் முபாரக்கின் ஆட்சியும் சுதந்திரச் செய்தி ஊடகத்தைத் தாக்கி, குண்டர்களுடன் இணைந்து தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து எதிர்ப்பாளர்களை அகற்றுவதற்குஒட்டகப் போரை நடத்தியது. ஒரு பெண் எதிர்ப்பாளர் அல் அஹ்ரம் ஆன்லைனிடம்இராணுவம் எங்களை புரட்சிக்காலத்தில் முபாரக் எதிர்ப்பாளர்களை நடத்தியதைப் போல்தான் நடத்துகிறது என்றார்.

இராணுவ ஆட்சி உத்தியோகபூர்வக் கட்சிகள், “சுயாதீன தொழிற்சங்கங்கள் என்று அதன் ஆதரவாளர்களுன் இணைந்து வேலைநிறுத்தங்களை நிறுத்தி, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முற்படுகிறது. வேலைநிறுத்தங்களை எப்படியும் முறிக்க வேண்டும் என்று இராணுவம் முயற்சிக்கையில், சுயாதீன ஆசிரியர்கள் சங்கம் மற்றும் சுயாதீன பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஒன்றியமும் பெரும் வேலை நிறுத்தங்களை நிறுத்திவிட்டன இராணுவ ஆட்சி எச்சலுகைகளையும் கொடுக்க மறுத்தபோதிலும்கூட.

எகிப்தின் பெரும்பாலான முதலாளித்துவக் கட்சிகள் SCAF உடன்மாற்றுக்காலத்தில் இன்னும் சாதிக்கப்பட வேண்டிய எஞ்சிய பணிகளின் பட்டியல் பற்றி ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இந்த ஆவணம் 2012 இறுதிவரையிலேனும் இராணுவம் அதிகாரத்தை வைத்திருக்கும் என்று கூறுகிறது; இது தொடக்கத்தில் தளபதிகள் கொடுத்த உறுதிமொழியான ஜனநாயகத் தேர்தல்களுக்கு வகை செய்யும் வகையில் ஆறு மாதங்களுக்குப் பின் அதிகாரத்தில் இருந்து இறங்கிவிடுதல் என்பதை முரண்படுத்துவது ஆகும்.

தற்போதைய உடன்பாடு இராணுவ ஆட்சிக்குழுவிற்கு முட்டுக் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது; ஆனால் பெரும்பாலான எகிப்தியர்கள் SCAF ல் உள்ள முபாரக்கின் தளபதிகளிடம் முன் எப்பொழுதையும் விட விரோதப் போக்கைத்தான் கொண்டுள்ளனர்.

சமீபத்திய வாரங்களில் இராணுவ ஆட்சி அதிகாரத்தின் மீது அதன் பிடியைத் தொடர்ந்து இறுக்கியுள்ளது; எதிர்ப்பாளர்கள், வேலைநிறுத்தம் செய்வோர்கள்மீது வன்முறையை அதிகரித்துள்ளது. வேலைநிறுத்த-எதிர்ப்பு, ஆர்ப்பாட்ட எதிர்ப்புச் சட்டத்தை செயல்படுத்த தொடங்கி நெருக்கடிக்கால சட்டங்கள் விரிவாக்கப்படும் எனவும் அறிவித்தது; நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டு இராணுவ விசாரணைக்கு அனுப்பப்படுகின்றனர், பொலிஸ் மற்றும் இராணுவப் படைகளினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

ஞாயிறு அன்று இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட மகத்தான வன்முறை எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாகும்: புரட்சியை நசுக்குவதற்கு இன்னும் அதிக வன்முறைக்கு அது தயாரிப்புக்களை கொண்டுள்ளது என்பதே அது. காப்ட்டுக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சோவினிச பூசலைத் தூண்டிவிடும் முயற்சி பலமுறை எகிப்திய முதலாளித்துவத்தால் வர்க்கப் போராட்டத்தில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

எகிப்தியப் புரட்சி ஜனவரி 25ல் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்புதான், அலெக்சாந்திரியாவில் ஒரு காப்டிக் திருச்சபைக்கு எதிரான குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது; அதில் 20 பேருக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். எகிப்திய இரகசியப் பிரிவுகள் தீவிர சலாபிக் குழுக்களுடனை இணைந்து அத்தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தனர் என்பதற்கு பல அடையாளங்கள் உள்ளன.

மேற்கத்தைய அரசாங்கங்கள் எகிப்தின் இராணுவ ஆட்சி ஞாயிறன்று நடத்திய படுகொலையைப் பற்றிப் பெரிதும் மௌனமாகவே உள்ளன. அவை அனைத்தும் எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவைத்தான் முதலாளித்துவ ஆட்சிக்கு முதுகு எலும்பு போல் கருதுகின்றன; அதேபோல் எகிப்திலும் அப்பிராந்தியம் முழுவதும் தங்கள் ஏகாதிபத்திய நலன்களைக் காக்கும் முக்கிய கருவி என்றுதான் அதைக் கருதுகின்றன. அவர்களுடைய மௌனம், முபாரக்கிற்கு அவர்கள் கொடுத்த ஆதரவைப் போல் இந்த இராணுவ ஆட்சிக்கும் அதன் குற்றம் சார்ந்த செயல்களுக்கு அது ஆதரவைக் கொடுக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.

கடந்த வாரம்தான் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரியும் முன்னாள் CIA தலைவருமான லியோன் பனேட்டா, பீல்ட் மார்ஷல் தந்தவியைக் கெய்ரோவில் சந்தித்தார். செய்தி ஊடகத் தகவல்கள்படி, பனேட்டா, ஆட்சிக்குழு மாற்றுக்காலத்தில் வந்துள்ள அனைத்து தடைகளையும் கடக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று பாராட்டியதாக தெரிகிறது.

வாஷிங்டன் போஸ்ட் கூற்றுப்படி, பனேட்டாஅவருடைய விஜயத்தின்போது முழுமையாகப் பாராட்டி, ‘எகிப்திய இராணுவம் கண்காணிக்கும் வழிவகை பற்றி எனக்கு உண்மையில் முழு நம்பிக்கை உள்ளது; அவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டியுள்ளனர் என நினைக்கிறேன் என்று கூறினார்.”