WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
Merkel, Sarkozy want to give the banks more capital
சார்க்கோசியும் மேர்க்கெலும் வங்கிகளுக்கு இன்னும் மூலதனத்தைக் கொடுக்க
விரும்புகின்றனர்
By Peter Schwarz
11 October 2011
Back
to screen version
பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியும் ஜேர்மனிய சான்ஸ்லர்
அங்கேலா மேர்க்கெலும் ஞாயிறன்று பேர்லினில் சந்தித்தனர்;
இது புதிய வங்கித் தோல்விகள்,
கிரேக்கத்தின் வரவிருக்கும் திவால்தன்மை மற்றும் யூரோ தவிர்க்க முடியாமல்
சரியக்கூடும் என்ற பின்னணியில் நடைபெற்றது.
பேச்சுக்களுக்குப் பின்னர் அவர்கள் இருவரும் யூரோப் பகுதியில்
இருக்கும் வங்கிகளுக்கு பொது நிதிகளைப் புதிதாக உட்செலுத்துவதற்கு தங்கள்
விருப்பத்தை அறிவித்தனர்.
இம்மாத இறுதிக்குள் நெருக்கடியை தீர்ப்பதற்கு திருப்திகரமான,
விரிவான பொதி ஒன்றை அளிப்பதாகவும் அவர்கள் உறுதிமொழி கூறினார்கள்.
ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை யூரோப்பகுதி,
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக் பொருளாதாரத்திற்குத் தங்களால் பகிர்ந்து
கொள்ளப்படும் பொறுப்பைப் பற்றி நன்கு அறிந்துள்ளதாக மேர்க்கெல் அறிவித்தார்.
தாங்கள் ஒன்றாக உழைக்க இருப்பதாகவும் ஐரோப்பிய வங்கிகள் மறுமூலதனம் பெறத் தேவையான
அனைத்தையும் செய்ய இருப்பதாகவும் கூறினார்.
மேர்க்கெலுடன் தன்
“முழு
உடன்பாட்டையும்”
சார்க்கோசி வெளிப்படுத்தினார்.
“நீடித்திருக்கும்,
உலகளாவிய,
விரைவான தீர்வுகள்”
யூரோ நெருக்கடிக்கு கண்டுபிடிக்கப்பட்டு கான் இல் நவம்பர்
3-4
திகதிகளில் நடக்கவிருக்கும்
G20
உச்சிமாநாட்டில் முன்வைக்கப்படும் என்றார்.
ஜேர்மனியும் பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடுகளின்
“கணிசமான
மாற்றங்களை”
முன்வைக்க உள்ளதாகவும்,
அது
“யூரோ
உறுப்பு நாடுகளின் நிதிய,
பொருளாதாரக் கொள்கைகளில் பிணைந்த ஒத்துழைப்பிற்கு”
வழிவகுக்கும் என்றும் கூறினார்.
ஆனால் மேர்க்கெலும் சார்க்கோசியும் குறிப்பான விவரங்கள் எதையும்
கொடுக்க மறுத்துவிட்டனர்.
அவர்கள் பகட்டாக ஒற்றுமையைக் காட்டியிருப்பது பங்குச்சந்தைகள் மற்றும் நிதியச்
சந்தைகளில் உள்ள பீதியைக் குறைத்து சமாதானப்படுத்தவேண்டும் என்பதுதான் முக்கிய
நோக்கமாக இருந்தது.
திங்களன்று ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஹெர்மன் வான் ரோம்பை
அக்டோபர்
17-18ல்
நடக்கவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய உச்சமாநாடு ஒரு வாரத்திற்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.
27
அரசாங்கத் தலைவர்கள் தொடர்புடைய இந்தச் சிக்கலான கூட்டத்தின் ஒத்திவைப்பு
முடிவிற்குப் பின்னணியில் மேர்க்கெல் மற்றும் சார்க்கோசிக்கும் இடையேயான அடிப்படைக்
கருத்து வேறுபாடுகள்தான் காரணம் என்ற சந்தேகங்கள் வெளிப்பட்டுள்ளன.
மேர்க்கெலுக்கும் சார்க்கோசிக்கும் இடையேயான ஐரோப்பிய வங்கிகளுக்கு
மறு மூலதனம் அளிப்பது பற்றிய உடன்பாடு பாரிய சர்வதேச அழுத்தத்தைத் தொடர்ந்து
வந்துள்ளது.
பைனான்சியல்
டைம்ஸ்
ஏட்டில்,
யூரோப்பகுதியில் சேர்ந்திராத
பிரிட்டனின் பிரதம மந்திரி,
ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தங்கள் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொண்டு யூரோ நெருக்கடியை
“ஏவுகணைத்
துப்பாக்கியை”
பயன்படுத்தி தீர்க்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.
“போதிய
கால அவகாசம் இல்லை,
நிலைமை ஆபத்தாக உள்ளது”
என்ற எழுத்துக்களே நிதிய ஒன்றியத்தின் நிலைப்பாடே அச்சுறுத்தலுக்கு உட்பட்டுவிட்டது
என டேவிட் காமெரோன் எச்சரித்தார்.
வங்கிகளுக்கு மறுமூலதனம் கொடுக்க ஒரு செயற்திட்டம்,
ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு நிறுவனம்
(Euro-bailout European Financial Stability Facility -EFSF)
யூரோப்
பிணை எடுப்பிற்காக மகத்தான முறையில் விரிவாக்கம் செய்யப்படுதல்,
அதிகம் கடனில் ஆழ்ந்துள்ள கிரேக்கத்திற்கு ஒரு தெளிவான வருங்காலம் பற்றிய மூலோபாயம்
மற்றும் சர்வதேச நாணய நிதியம் கூடுதலான ஈடுபாடு கொள்ளுதல் ஆகியவை தேவை என்று
காமெரோன் கூறினார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஓபாமா ஐரோப்பிய ஒன்றியம் கடன்
நெருக்கடியைச் சமாளிக்க தொலை நோக்குடைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று
வலியுறுத்தினார்.
“அவர்கள்
விரைவில் செயல்பட வேண்டும்.
பணிக்குத் தேவையான ஒரு தெளிவான,
உருப்படியான செயல் திட்டம் தேவை”
என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
வார இறுதியில்,
பெல்ஜியன்-பிரெஞ்சு
வங்கியான
Dexia
சரிந்தது;
இது நெருக்கடியை ஒட்டிய மிகச் சமீபத்திய பாதிப்பு ஆகும்.
திங்கள் இரவு நடந்த ஒரு கூட்டுக் கூட்டத்தில்,
பெல்ஜியம்,
பிரான்ஸ் மற்றும் லக்சம்பேர்க்கின் அரசாங்கங்கள் நலிந்துள்ள வங்கியின் முறிவு பற்றி
அறிவித்தனர்.
பெல்ஜிய அரசாங்கம் வங்கியின் பெல்ஜியப் பகுதிகளை
4
பில்லியன் யூரோக்களுக்கு எடுத்துக் கொள்ளும்.
டெக்சியாவின் இடர் நிறைந்த பத்திரங்கள்
“மோசமான
வங்கி”
ஒன்றுடன் மாற்றப்பட்டுவிடும்,
மூன்று நாடுகளும்
90
பில்லியன் யூரோக்கள் நிதிக்கு உத்தரவாதம் அளிக்கும் எனத் தெரிகிறது.
2008ம்
ஆண்டு பொது நிதிகளில் இருந்து
150
பில்லியன் அளிக்கப்பட்டு டெக்சியா மீட்கப்பட்டது.
அந்த நேரத்தில்,
இந்த வங்கி மிக அதிகமாக அமெரிக்கச் சொத்துக்களில் முதலீடு செய்திருந்தது.
இப்பொழுது ஐரோப்பிய அரசாங்கப் பத்திரங்கள் பிரிவும் சரிந்த நிலையில்,
குறிப்பாக இத்தாலிய,
கிரேக்கப் பத்திரங்களில்,
ஐரோப்பிய அரசாங்கக் கடன் நெருக்கடியின் பாதிப்பு மீண்டும் வங்கிக்கு பிரச்சினைகளைத்
தோற்றுவித்துள்ளது.
ஐரோப்பிய வங்கிகளிடையே சமநிலையை அதிகரிப்பது என்பது—மேர்கெல்
மற்றும் சார்க்கோசியினால் கொள்கையளவில் உடன்பாடு காணப்பட்டது,
கிரேக்கம் திவால் ஆவதற்கு அரங்கை அமைக்கிறது.
ஐரோப்பிய வங்கிகள் கிரேக்கப் பத்திரங்களின் மதிப்பில் ஏற்பட்டுள்ள பெரும்
இழப்புக்களைச் சமாளிப்பதற்குப் போதுமான மூலதன உதவியைப் பெறும்.
ஆனால் வங்கிகளுக்கு எப்படி மறுமூலத்திற்கான நிதியைக் கொடுப்பது
என்பது பற்றி ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் உள்ளன.
பிரெஞ்சு வங்கிகள் குறிப்பிடத்தக்க வகையில்,
கிரேக்கத்தில் ஆபத்திற்கு உட்பட்டுள்ளன;
சார்க்கோசி
EFSF
ஐப்
பயன்படுத்தி அவற்றைப் பிணை எடுக்க வேண்டும் என விரும்புகிறார்.
EFSF
க்குப்
பெரும் பகுதி பணம் கொடுக்கும் ஜேர்மனிய அரசாங்கம் அத்தகைய போக்கை நிராகரித்து
தேவையான மூலதனத்தை தேசிய அரசாங்கங்கள் தலையிடு முன்னரே பெறவேண்டும் என்பதற்கு
ஊக்கம் அளிக்க விரும்புகிறது.
–
மிகத்
தீவிர நெருக்கடியின்போதுதான்
EFSF
தலையிடலாம் என்று கூறுகிறது.
ஜேர்மனிய,
பிரெஞ்சு நிர்வாகங்கள் கிரேக்கத்துடனான வருங்கால நடவடிக்கைகள் குறித்தும் முரணான
கருத்துக்களை கொண்டுள்ளன.
செய்தி ஊடகத் தகவல்களின் அடிப்படையில்,
ஜேர்மனியின் நிதியமைச்சகம் கிட்டத்தட்ட
60%
வரை
கடன் தொகைக்கு உதவியளிக்க திட்டம் ஒன்றைத் தயாரித்துவருகிறது.
கிரேக்க அரசாங்கம் திவால்தன்மை அடையும்,
அதன் பொதுநலச் செலவுகள் வியத்தகு அளவில் குறைக்க வேண்டும்.
கடன் கொடுத்தவர்கள் பத்திர மதிப்பின் பெரும் பகுதியைக் கைவிட வேண்டும்;
இந்நிகழ்வு பிரெஞ்சு வங்கிகளை,
குறிப்பாக பாதிப்பிற்கு உட்படுத்தும்.
எனவே பாரிஸ் எவ்வளவு முடியமோ அந்த அளவிற்கு திவாலை ஒத்திவைக்கப் பார்க்கிறது;
அதில் இருந்து சற்று அவகாசத்தையும் கோருகிறது
இரு அரசாங்கங்களுக்கும் இன்னும் பல பில்லியன் கணக்கான பொதுப் பணத்தை
வங்கிகளுக்குக் கொடுப்பது என்னும் கொள்கை மக்களிடையே செல்வாக்கைப் பெரிதும்
குறைத்துவிடும் என்பனதை நன்கு அறியும்;
அதுவும் பொதுநலச் செலவுகள் பெருமளவு குறைக்கப்படுகையில்,
மற்றும் கிரேக்கம் திவால் தன்மைக்குத் தள்ளப்படும்போது.
வங்கிகளுக்கு விரோதப் போக்கு காட்டுவது அதிகரிக்கும்,
இது ஒரு பரந்த,
கட்டுப்படுத்தமுடியாத சமூக இயக்கமாக வளர்ந்து விடும் என்று செய்தி ஊடகமும் அரசியல்
வாதிகளும் அஞ்சுகின்றர்.
ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியின்
(SPD)
யின்
தலைவர்
Sigmar Gabriel
மேர்க்கெல் அரசாங்கம் இன்னும் கடுமையான விதிகளைச் சுமத்தாமலோ அல்லது தற்காலிகமாக
அவற்றை தேசியமயமாக்காமலோ வங்கிகளுக்கு மேலும் பணத்தைக் கொடுக்கக் கூடாது என்று
மேர்க்கெலை எச்சரித்தார்.
“அவற்றை
சீரமைக்காமல் வங்கிகளுக்கு நாம் இரண்டாம் முறை பிணை
எடுத்துக் காப்பாற்ற முடியாது”
என்று வர்
FAZ
செய்தித்தாளிடம் கூறினார்.
“நம்
குறிக்கோள்,
அடிப்படை மாற்றங்கள் இல்லாமல் வங்கிகளை பிணை எடுப்பிற்கு அரசாங்கம் ஒருசென்ட் கூட
அளிக்காது”
என இருக்க வேண்டும்.
யூரோவைக் காப்பாற்ற வங்கிகளுக்கு மறு முதலீடு அளிப்பதில் குவிப்புக்
காட்டுவது ஒரு தவறு என்று
Die
Zeit
கூறியுள்ளது.
“கொடுக்கப்படும்
தகவல்,
வங்கிகளைக் காப்பாற்றுவது அரசுகள் அழிக்கப்படுவதற்கு அல்ல”
என்பதுதான்.
Sueddeutsche Zeitung
வெளியிட்ட கட்டுரை ஒன்று நிதியத் தொழில்துறையின் ஆற்றலுக்கு எதிராக
“தெருக்களுக்கு
வந்து குடிமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்”
என்று கூறியுள்ளது.
“நிதிய
மூலதனத்திற்கு ஆதாயம் கொடுக்கும் வகையில் இந்த அப்பட்டமான மறு பகிர்வை எதிர்க்க
விரும்பும் அனைவரும் ஜேர்மனியக் கட்சிகளில் இடம் பெறமாட்டார்கள்”
என செய்தித்தாள் எழுதியது.
“முக்கிய
கட்சிகள் சந்தைகளின் விளையாட்டுக் கருவிகளாக இருப்பதுபோல் தெரிகிறது.”
பொருளாதாரப் பிரச்சினைகளில் மிகவும் பழமைவாதப் போக்கைக் கொண்ட
இச்செய்தித்தாள் முதலாளித்துவத்திற்கு எதிராக இயக்கம் ஒன்றையும் தொடக்கப் போவதில்லை
என்பது வெளிப்படை.
மாறாக இது பொது மக்களுடைய சீற்றம் கட்டுப்பாட்டை மீறி முதலாளித்துவத்தை உண்மையில்
அச்சுறுத்துவதற்கு முன் பாதுகாப்பு வால்வு ஒன்றை நிறுவ முற்படுகிறது.
“ஜேர்மனியில்
மக்கள் தெருக்களுக்கு வந்து கட்சிகளை மறுசிந்தனை செய்ய வைக்க வேண்டிய காலம்
வந்துவிட்டது.
என்று செய்தித்தாள் கூறி,
கட்டுரையின் கடைசியில்
“முதலாளித்துவத்தை
அழிப்பது என்று இல்லாமல் அதைச் சீர்திருத்துவதற்கு இது தேவை.”
எனத் தெரிவிக்கிறது. |