சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Plans for anti-Wall Street protests spread across US and globally

வோல் ஸ்ட்ரீட் விரோத எதிர்ப்புக்களுக்கான திட்டங்கள் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் பரவுகின்றன

By Kate Randall
8 October 2011

use this version to print | Send feedback

வோல்-ஸ்ட்ரீட் விரோத எதிர்ப்புக்கள் நேற்று அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் பரவத் தொடங்கின. Occupy Together வலைத் தளத்தின் கருத்துப்படி, வெள்ளி மாலை வரை 900 நகரங்களுக்கும் மேலாக எதிர்ப்புக்களை திட்டமிடுவதற்கு கூட்டக்குழுக்கள்நிறுவப்பெற்றுள்ளன.

நியூ யோர்க்கில் கடந்த மாதம் தொடங்கிய வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கவும் என்னும் இயக்கம், இப்பொழுது பிளோரிடாவில் தம்பா, வேர்ஜீனியாவில் நார்போக், வாஷிங்டன் டி.சி., போஸ்டன், மிச்சிகனில் ஆன் ஆர்பர், சிக்காகோ, மிசௌரியில் செயின்ட் லூயி, மின்னியாபொலிஸ், டெக்சாஸில் ஹூஸ்டன், சான் ஆன்டோனியா மற்றும் ஆஸ்டின், நாஷ்வில்லே, ஒரேகானில் போர்ட்லாந்து, அலாஸ்காவில் ஆங்கரேஜ், இன்னும் பல கலிபோர்னிய நகரங்கள் உட்பட பல இடங்களிலும் விரிவடைந்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் சமூக சமத்துவமின்மை, வேலையின்மை, பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத்தரங்களில் பெரும் சரிவு ஆகியவற்றால் எரியூட்டப்பட்டு சர்வதேச ஆதரவையும் பெறத் தொடங்கியுள்ளது. அக்டோபர் 15ம் திகதி 15 நாடுகளுக்கும் மேலானவற்றில், டப்லினில் இருந்து மாட்ரிட், புவனர்ஸ் அயர்ஸில் இருந்து ஹாங்காங் வரை நகரங்களில் உலக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பேஸ்புக்கில் Facebook- அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் அக்டோபர் 15ம் திகதி நகரச் சதுக்கத்தில் மெல்போர்னை ஆக்கிரமிக்கவும்என்பது திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்ற அழைப்புக்கள் சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் பேர்த் ஆகியவற்றிலும் எதிர்ப்புக்களை அமைக்கப்பட வேண்டும் என்று பேஸ்புக்கில் வந்துள்ளன. லண்டன் பங்குச் சந்தையை ஆக்கிரமிக்கவும்என்னும் பேஸ்புக் பக்கத்தில் 6,000 ஆதரவாளர்கள் உள்ளனர். இது அக்டோபர் 15 தொடங்கி Paternoster சதுக்கத்தை ஆக்கிரமிப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் பெருவணிகத்திற்கு எதிரான தன்னியல்பான ஆத்திர வெளிப்பாடுகள், பரந்த மக்கள் அடுக்குகளிடையே உணர்வைத் தூண்டியுள்ளன. இதனால் கைதுகளும் பொலிஸ் தொந்திரவுகளும் மிருகத்தனச் செயல்களும் பல பகுதிகளில் வந்துள்ளன. அரசியல் நடைமுறையின் பிரிவுகளிடம் இருந்தும் இது தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. முக்கிய செய்தி ஊடகத்தில் பொதுவாக இது பற்றி அதிகம் குறிப்பிடப்படுவதில்லை.

வியாழன் அன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில்  வந்துள்ள கட்டுரைகளின்படி, குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் உள்ள ஹெர்மன் கைன் எதிர்ப்பாளர்களை முதலாளித்துவ-எதிர்ப்பினர்என்று கண்டித்ததுடன், வோல் ஸ்ட்ரீட்டின் மீது குற்றம் சுமத்தாதீர்கள். பெரிய வங்கிகள்மீது குறைகூறாதீர்கள். உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை, நீங்கள் செல்வந்தர்கள் இல்லை என்றால், உங்களையே குற்றம்சாட்டிக் கொள்ளுங்கள்என்று சேர்த்துக் கொண்டார்.

இவருடைய உணர்வுகள் வெள்ளியன்று அமெரிக்க மன்றப் பெரும்பான்மைத் தலைவர் எரிக் கான்டரால் (வேர்ஜீனியா, குடியரசுக் கட்சி) எதிரொலிக்கப்பட்டன. வாஷிங்டனில் மதிப்புக்கள் கொண்ட வாக்காளர் உச்சிமாநாட்டில்பேசிய அவர் வோல் ஸ்ட்ரீட் மற்றும் நாடெங்கிலும் பிற நகரங்களில் ஆக்கிரமிக்கும் மக்கள் கூட்டத்தின்போக்கை இழிவுபடுத்தினார்.

அதற்கு முந்தைய தினம் ஜனாதிபதி ஒபாமா கூறிய கருத்துக்களைத் தொடர்ந்து கான்டரின் கருத்துக்கள் வெளிவந்தன. எதிர்ப்பாளர்களின் வேதனைகளை உணர்வதாகஜனாதிபதி கூறினாலும், அவர் பிரச்சனைக்குள்ளான சொத்துக்களை பாதுகாக்கும் திட்டமான TARP மூலம் வங்கிகள் பிணை எடுப்பிற்குக் கொடுக்கப்பட்ட $750 பில்லியன் நிதிக்கு ஆதரவைத் தெரிவித்து, நாம் வளர்வதற்கு ஒரு வலுவான, திறமையான, நிதியத் துறை தேவைஎன்பதையும் உறுதிபடுத்தினார். வங்கிகள் மற்றும் ஊக வணிகர்களின் செயற்பாடுகள் சட்டவிரோதமானவை எனக் கூறுவதற்கில்லைஎன்றும் அவர்கள் மீது குற்றவிசாரணை நடத்துவது தன் வேலை இல்லை என்றும் தெரிவித்தார்.

வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் எதிர்ப்பு ஆரம்பித்த நியூயோர்க் நகரத்தில், மேயர் மைக்கேல் ப்ளூம்பேர்க் தன்னுடைய வாராந்திர வெள்ளிக்கிழமை வானொலி உரையில் வெளிப்படுத்திய கருத்துக்களில் எதிர்ப்பாளர்களை கடுமையாகச் சாடினார். ஆண்டு ஒன்றிற்கு 40,000 முதல் 50,000 டாலர்களை சம்பாதித்தாலும் வரவிற்குள் செலவைக்கட்டுப்படுத்த திணறுபவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்எனக் கூறினார்.

ஒருவேளை மேயர் வோல் ஸ்ட்ரீட் எதிர்ப்பிற்காக திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் சீற்றத்தைச் சம்பாதித்துள்ள பெருநிறுவன பில்லியர்களைப் பற்றி என்று இல்லாமல் பணி ஊழியர்களைக் குறிக்கிறார் போலும். மேலும் நாம் அனைவரும்பொருளாதார உருக்குலைப்பிற்கும்  மந்த நிலை நெருக்கடிக்கும் அதிக இடர்களை எடுத்துக் கொள்ளும் வகையில் பங்கு கொண்டவர்கள் என்ற மிக விந்தையான கூற்றையும் தெரிவித்தார்.

நியூயோர்க் நகரப் பொலிஸ் துறை எதிர்ப்பாளர்கள்மீது கட்டவிழ்த்த வன்முறைக்கு ப்ளூம்பர்க் ஆதரவு கொடுக்கும் வகையில் கூறியது: உங்களுக்கு நான் உறுதியாகக் கூறக்கூடிய ஒன்று, நகரத்தில் எவரேனும் சட்டத்தை மீறினால், நாங்கள் அவர்களைக் கைது செய்து மாவட்ட வக்கீல்களிடம் ஒப்படைத்து விடுவோம்.

நியூயோர்க்கின் வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கவும் இயக்கம் கடந்த மாதம் எதிர்ப்புத் தொடங்கியதில் இருந்து அதிகமான பொலிஸ் செயற்பாட்டை சந்தித்துள்ளது. கடந்த சனிக்கிழமைதான் கிட்டத்தட்ட 700 ஆர்ப்பாட்டக்காரர்கள் ப்ரூக்லின் பாலத்தில் பொலிசார் அமைத்திருந்த ஒரு பொறியில் சிக்கியபின் கைது செய்யப்பட்டனர்.

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்:

Occupy Wall Street and the Democratic Party