தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Socialism and the global economic crisisசோசலிசமும், உலக பொருளாதார நெருக்கடியும்
Stefan Steinberg and Barry Grey use this version to print | Send feedback 1930களுக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் இந்த மிகவும் மோசமான உலக பொருளாதார நெருக்கடிக்குள் ஆழ்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், முதலாளித்துவ அமைப்புமுறை மந்தநிலைமைக்குள் மூழ்கி வருகின்ற நிலையில், உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தைகள் மீண்டும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. செப்டம்பர் 2008 நிதியியல் நிலைகுலைவினால் ஏற்பட்ட வங்கியாளர்கள் மற்றும் ஊக வணிகர்களின் செலுத்தமுடியா கடன்களை மூடிமறைக்க, அரசாங்கங்கள் பொது நிதியிலிருந்து ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வங்கிகளுக்குள் பாய்ச்சின. வங்கி பிணையெடுப்புகள் தேசிய கடன்சுமையை ஏறக்குறைய ஒரேயிரவில் சராசரியாக 30 சதவீதம் அதிகரித்துவிட்டதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் அந்த பிணையெடுப்புகளின் ஒரு விளைவாக, இப்போது பல நாடுகள் தொடர்ச்சியாக திவால்நிலைமையை முகங்கொடுத்துள்ளன. வங்கிகள் மற்றும் நிதியியல் நலன்கள் “தோல்வி அடைய முடியாதளவிற்கு மிகவும் பெரியவை" என்று கணிப்பிடப்பட்டு 2008இல் காட்டப்பட்டனவோ, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவை அதையும் விட பெரிதாகவும், மிகவும் பலமாகவும் உள்ளன. பாரிய வேலைவாய்ப்பின்மையும், தொழிலாளர் வர்க்கத்திடையே வறுமையும் அதிகரித்துவந்த அதே ஆண்டுகளில், அவற்றின் சர்வதேச சொத்துமதிப்பு பிரமாண்டமான அளவிற்கு உயர்ந்துள்ளது. அரசுகளின் திவாலாகிவந்த நிலைமைக்கு நிதியியல் மேற்தட்டிற்கு பிணையெடுப்பு வழங்குவதற்கு முதலில் ஐரோப்பாவிலும் பின்னர் சர்வதேச அளவிலும் அரசாங்கங்களால் காட்டப்பட்ட விடையிறுப்பானது, அரச கடன் நெருக்கடிக்கு தொழிலாளர் வர்க்கத்தை விலைகொடுக்க செய்ய கொடூரமான சமூகசெலவின வெட்டு முறைகளை தூண்டிவிட்டது. ஆழமடைந்துவரும் ஒரு வீழ்ச்சியும், வரிவருமானத்தில் ஏற்பட்டுள்ள படுமோசமான வீழ்ச்சியும், கடன் நெருக்கடி மோசமடைந்து வருவதும் பரந்த மக்கள் பிரிவினரின் வறுமைக்குக் காரணமாகவுள்ளன. திவால்நிலைமையை நோக்கிய கிரீஸின் தற்போதைய வீழ்ச்சியும், அதை தொடர்ந்த போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி போன்ற அதிக கடன்சுமையில் உள்ள ஏனைய நாடுகளுடன் சேர்ந்து இந்த நாடுகளின் மதிப்பற்ற அரசு பத்திரங்களிலும், பெருநிறுவன பத்திரங்களிலும் பில்லியன் கணக்கான டாலர்களைக் வைத்திருக்கும் வங்கிகளுக்கும் தாக்கங்களை உருவாக்கியுள்ளன. வியாபாரத்திற்கான கடன்கள் கிடையாமையாலும் மற்றும் அவர்களின் பங்கு விலைகளை வீழ்ச்சியடைந்ததாலும், பிரதான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகள் மீண்டும் பொறிவின் விளிம்பை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. இது பெரிய வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அவற்றின் சேவகர்களான சர்வதேச நாணய நிதியத்தையும், ஐரோப்பிய மத்திய வங்கியையும், வரிசெலுத்துவோர் நிதியிலிருந்து ஒரு புதிய மற்றும் இன்னும் பெரியளவிலான பிணையெடுப்பை வங்கிகளுக்கு வழங்குவதை நோக்கி நகர செய்துள்ளது. உண்மையில் இது கிரீஸிலும் ஏனைய திவாலாகிவரும் நாடுகளிலும் மட்டுமின்றி, மாறாக ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா மற்றும் ஆசியா முழுவதிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளின்மீது நடத்தப்படும் ஒரு தீவிர தாக்குதல் மூலமாக செலுத்தப்படவிருக்கிறது. அதே நேரத்தில், டாலர்களின் மதிப்பைக் குறைத்து உலக நிதியியல் சந்தைகளில் பாய்ச்சியது, சர்வதேச நாணய முறைக்குத் தவிர்க்கமுடியாமல் குழிபறித்ததோடு, உலக கையிருப்பாகவும், வர்த்தக செலாவணியாகவும் இருந்த அமெரிக்க டாலரின் நம்பகத்தன்மையையும் அழித்துவிட்டது. இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததிலிருந்து இதுவரையில் உலக செலாவணி முறையின் அச்சாணியாக விளங்கும் டாலருக்கு மாற்றாக வேறெந்த செலாவணியும் இல்லாத நிலையில், சர்வதேச கூட்டுறவுக்கான எந்த அடித்தளமும், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இல்லாமல் போய், உலகம் 1930களில் உலக சந்தையின் உடைவிற்கும், இரண்டாம் உலக யுத்தத்திற்கு இட்டுச்சென்றதை போன்ற செலாவணி மற்றும் வர்த்தக யுத்தங்களின் ஒரு புதிய காலக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. நெருக்கடி வெடித்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் உலக முதலாளித்துவத்தின் மேதாவிகள் இந்த பேரழிவைத் தான் உருவாக்கியுள்ளனர். பரஸ்பர கூட்டுறவிற்கு அவர்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் துதிபாடிக் கொள்வதும், “மீட்சி" என்று கூறி முதல் சில மாதங்களில் பொருளாதார தேசியவாதத்தைக் கைவிட்டுவதாக உறுதியளித்தபோதும், தற்போது மீண்டும் ஐரோப்பாவிற்கும் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலுயும், ஐரோப்பாவிற்குள்ளும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கு இடையிலும் கசப்பான பரஸ்பர குற்றச்சாட்டுக்களையும், கருத்து முரண்பாடுகளையும் உருவாக்கியுள்ளது. உண்மையில் அண்டையிலிருப்பவர்களிடம் பிச்சைக்காரனாக்கி மற்றும் அவரவர் அவரவரைப் பார்த்துக்கொள்ளும் மற்றும் கடைசியில் ஓடுபவனை நாய் கடிக்கும் என்ற சூழலையும் உருவாக்கி உள்ளது. இந்த நெருக்கடி வெறுமனே ஒரு தற்காலிகமானதோ அல்லது இடைப்பட்ட காலத்திற்குரியதோ அல்ல, மாறாக இது முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று தோல்வி என்பைதயும், அதன் நிலைமுறிவின் ஒரு வெளிப்பாடு என்பதையும் கடந்த மூன்று ஆண்டுகளின் புள்ளிவிபரங்கள் விவாதத்திற்கிடமின்றி தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. கடந்த நூற்றாண்டில் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக வெற்றிகள் அனைத்தையும் அழிக்கும் ஒரு சமூக எதிர்புரட்சியை நடத்த இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்வதே சர்வதேச முதலாளித்துவத்திற்குள் நிலவும் ஒரே உடன்பாடாக உள்ளது. இதுதான் ஒவ்வொரு அரசாங்கத்தின், அது பெயரளவிற்கு "இடது" என்றிருந்தாலும் சரி, அல்லது கிரீஸில் உள்ள சமூக ஜனநாயக PASOK ஆட்சி, ஸ்பெயினில் உள்ள சோசலிச கட்சி மற்றும் அமெரிக்காவிலுள்ள ஜனநாயக கட்சியின் நிர்வாகம் போன்ற "தாராளவாதமாக" இருந்தாலும் சரி, அல்லது ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் போன்ற முதலாளித்துவ வலதாக இருந்தாலும் சரி, இதுவேதான் அவற்றின் கொள்கையாக உள்ளது. கிரீஸைத் திட்டமிட்டு சூறையாடுவதென்பது இந்த செயல்முறையின் முன்மாதிரியாக உள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியாவிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் ஏகாதிபத்திய இராணுவ இயந்திரங்களால் பயன்படுத்தப்பட்ட கொலைகார "அதிரடி-ஆக்கிரமிப்பு" முறைகளுக்கு இணையாகவுள்ள ஒரு காட்டுமிராண்டித்தனத்தோடு, சர்வதேச முதலாளித்துவம் கிரேக்க மக்களுக்கு எதிராக ஒன்றன்பின் ஒன்றாக சமூகசெலவின வெட்டு முறைமைகளை திணித்து வருகிறது. எவ்வாறிருந்த போதினும், இந்த விஷயத்தில் ஸ்தூலமாக (physically) நாட்டின் உள்கட்டமைப்பை அழிப்பதல்ல அதன் நோக்கம், மாறாக அதன் தனியார்மயமாக்கலை திணித்து, மலிந்தவிலைக்கு அவற்றை சர்வதேச வங்கிகளிடமும், பெருநிறுவனங்களிடமும் ஒப்படைப்பதே ஆகும். ஒரு வாரத்திற்கு முன்னர் தான், கிரீஸிற்கு பிணையெடுப்பு நிதிகளைப் பங்கிட்டு அளிப்பதைக் கண்காணித்துவரும் ஐரோப்பிய ஆணைக்குழு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய "முக்கூட்டணி" (troika), மற்றொரு நிலுவைத்தொகைக்கான ஒரு முன்நிபந்தனையாக, அரசதுறையில் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு வேலை வெட்டுக்களை கொண்டு வந்தது. அதில்லாமல் இருந்திருந்தால் கிரீஸ் அதன் செலுத்துமதியின்மைக்காக வேகமாகவே திவாலாகி இருக்கும். பிரதம மந்திரி ஜோர்ஜ் பப்பான்ட்ரேயோவின் அரசாங்கம் அதற்கேற்றவாறு 30,000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியது. அவ்வாறிருந்தும் ஐரோப்பிய ஒன்றிய நிதிமந்திரிகள் நிதிகளை வழங்க மறுத்தனர். அந்நாட்டின் தேசிய சம்பள ஒப்பந்தத்தைக் கைவிடுவது, குறைந்தபட்ச கூலியை வெட்டுவது, அரசு உடைமைகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவது உட்பட அந்த "முக்கூட்டணி" புதிய முறையீடுகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கியது. இந்த முகமைகளின் செயல்பாடுகளில் உள்ள கொடூரத்தை புதனன்று பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு தலையங்கத்தில் தொகுத்து குறிப்பிட்டிருந்தது. அது இரத்தம் தோய்ந்தவகையில் குறிப்பிட்டதாவது: “புதிய கடன்கள் இல்லையென்றால், ஏதென்ஸ் சம்பளங்களை அல்லது ஓய்வூதிய தொகைகளை நிறுத்த வேண்டியதிருக்கும். ஒரு சோகமான விஷயம் தான். ஆனால் இது ஏனைய நாடுகளை கீழே இழுத்துவராது.” கிரேக்க தொழிலாளர்கள்மீது நடக்கும் தாக்குதல் ஒரு நிலைவிலகல் அல்ல. அது உலகம் முழுமைக்கும் வரவிருப்பதன் முன்மாதிரியாகும். இந்த கொள்கையின் தாக்கம், ஜனநாயக ஆட்சியின் முறைகளுக்கு சற்றும் பொருந்தாததாக உள்ளது. இராணுவவாத வளர்ச்சியோடு சேர்ந்து, சமூக எதிர்புரட்சியானது ஒடுக்குமுறையின் பொலிஸ்-அரசு வடிவங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது. உற்பத்தி கருவிகள் முதலாளித்துவ தனியார் உடைமையாக இருக்கும் இந்த கட்டமைப்பிற்குள்ளும் மற்றும் இலாப அமைப்புமுறை அடித்தளமாக கொண்டுள்ள போட்டி தேசிய அரசுகளின் அமைப்புமுறைக்குள்ளும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் போகும் இந்த வீழ்ச்சியிலிருந்து தொழிலாளர் வர்க்கம் வெளியே வருவதற்கு வழியே இல்லை. உலகிலுள்ள ஆளும் வர்க்கங்களும், அவற்றின் தலையாட்டி அரசாங்கங்களும் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளில் இதை தீர்மானமாக எடுத்துக்காட்டிவிட்டன. நேர்மையான உலக கூட்டிணைப்பு, சமூக சமத்துவம், சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மனிதவளங்களை அபிவிருத்தி செய்வதன் அடிப்படையில், பொருளாதார வாழ்க்கையை அடிப்படையிலேயே மாற்றியமைப்பது மட்டுமே உலக மக்களுக்கான ஒரே பதிலாக உள்ளது. சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான "பணமில்லை" என்ற வாதம், ஒரு பொய்யாகும். பணக்காரர்களும், பெரும்-பணக்காரர்களும் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அதை வைத்திருக்கின்றனர். தனது செல்வவளத்தை உயர்த்த உலக பொருளாதாரத்தைச் சூறையாடும் அந்த முதலாளித்துவ மேற்தட்டின் முற்றிலும் ஓர் ஒட்டுண்ணித்தனமான மற்றும் நாசகரமான ஆட்சியே இதற்கெல்லாம் பிரச்சினையாக உள்ளது. இந்த நெருக்கடியானது, மேலே குறிக்கோளை எட்டுவதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது. துனிசியா மற்றும் எகிப்தில் ஏற்கனவே பாரிய புரட்சிகர எழுச்சிகள் ஏற்பட்டுள்ளன. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவிலும் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. முதலாளித்துவ அமைப்புமுறை தோற்றுவிட்டது, அதை மாற்றியாக வேண்டுமென்ற கருத்து மில்லியன் கணக்கானவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்ற உதவும் வகையில், எழுந்துவரும் பாரிய போராட்டங்களை ஆயுதபாணியாக்க, நன்றாக தயாரிக்கப்பட்ட ஒரு சர்வதேச புரட்சிகர வேலைதிட்டத்தையும், மூலோபாயத்தையும் கட்டியெழுப்புவதே முக்கிய பிரச்சினையாக உள்ளது. முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளிடமிருந்தும் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக சுதந்திரம் பெறுவதற்கான கோட்பாடுகளின் அடித்தளத்திலும், தேசியவாதம், இனவாதம் மற்றும் ஏனைய நாடுகளை வெறுத்தல் ஆகியவற்றின் எந்தவொரு வடிவத்திற்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்துவதன் அடிப்படையிலும், இத்தகையவொரு தலைமையை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவ கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் (ICFI) மட்டுமே போராடி வருகிறது. ஆளும் வர்க்கத்தின் எதிர்புரட்சி தாக்குதலுக்கு எதிராக உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதன் தேவையை உணரும் ஒவ்வொருவரும், சோசலிச சமத்துவ கட்சியிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலும் இணைவதற்காகவும், அதை கட்டியெழுப்புவதற்காவும் முன்வர வேண்டும். |
|
|