World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

NATO assault on Sirte inflicts more Libyan civilian casualties

சிர்ட்டேயின் மீதான நேட்டோத் தாக்குதல் இன்னும் கூடுதலான லிபியக் குடிமக்கள் இறப்புக்களை ஏற்படுத்துகிறது

By Patrick OConnor
4 October 2011

Back to screen version

கடலோர லிபிய நகரமான சிர்ட்டே வானில் இருந்து நேட்டோவின் வெறிபிடித்த குண்டுவீச்சு, தரையில் இடைக்கால தேசிய சபையுடன் (NTC) இணைந்துள்ள போராளிகளின் தாக்குதல் ஆகியவற்றிற்கு உட்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் இப்பகுதியில் பொறியில் அகப்பட்டுள்ளவர்கள் போல் உள்ளனர்; சிறிதும் பொறுப்பற்ற முறையில் ராக்கெட், வெடிகுண்டு, ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உட்படுகின்றனர். இராணுவ நடவடிக்கையில் நீண்டகாலமாக உள்ள முற்றுகையும் உள்ளதுஇதையொட்டி குடிமக்களுக்கு அடிப்படைப் பொருட்கள், உணவு, நீர், மருந்து, எரிபொருள் உட்படப் பல கிடைப்பதில்லை; இது மனிதாபிமான நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.

சமீபத்திய நாட்களில் சிர்ட்டேயில் இருந்து தப்பி ஓடிவந்துள்ள குடிமக்களிடம் இருந்து கணக்கிலடங்காகத் தகவல்கள் வீடுகள், பிற குடிமக்கள் கட்டிடங்கள், உள்கட்டுமானங்கள் ஆகியவை நேட்டோ குண்டுவீச்சால் தகர்க்கப்பட்டுள்ளது பற்றி வந்துள்ளன.

தன்னுடைய 11 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்துடன் தப்பிய பாக்கிஸ்தானியக் குடியேறியவர் அஷிக் ஹுசைன் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்: “இரு நாட்களுக்கு முன் நேட்டோ ஒரு பெரிய கட்டிடமான இம்ரத் தமிமை 12 அல்லது 13 குண்டுகளைப் போட்டுத் தாக்கியது. கிட்டத்தட்ட 600 அடுக்கு வீடுகளைக் கொண்ட முழுக்கட்டிடமும் தரைமட்டமாயிற்று. நேற்று ஒரு நேட்டோ குண்டுத் தாக்குதல் அவர்கள் வீட்டைத் தாக்கியதில் என் அண்டை வீட்டார் இருவர் இறந்து போயினர். அவர்களுக்குக் கூரை மீது கடாபியின் ஆட்கள் இருந்தனர் என்ற தகவல் கிடைத்தது போலும்.... ஆனால் பல குடிமக்களுடைய கட்டிடங்கள் தாக்கப்படுகின்றன. மேலும் இடைக்கால இடைக்கால தேசிய சபையின் படைகள் போடும் குண்டுகளும் குடிமக்கள் இல்லங்களைத் தாக்குகின்றன.”

நேட்டோ போர் விமானங்கள் சிர்ட்டே மீது வானில் இருந்து தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துகின்றன; முதலில் கண்காணிப்புச் செயல்கள், பின்னர் குண்டுத் தாக்குதல்கள், அதன்பின் குடிமக்கள் நகரத்தை விட்டு நீங்க வேண்டும் என்று கோரும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்படல், கடாபி ஆதரவாளர்கள் சரணடைய வேண்டும் என்று கோருதல் எனத் தொடர்ந்து வருகின்றன. பிரஸ்ஸல்ஸில் வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, 78 வான் தாக்குதல்கள் சனி, ஞாயிறு அன்று நடைபெற்றன; இவற்றில் இரண்டைத் தவிர மற்றவை சிர்ட்டேயில்முக்கிய இடங்களைத்தாக்கின.

தாக்குதலை முன்னின்று நடத்தும் அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாங்கங்கள் போர்க் குற்றங்களைச் செய்கின்றன. சிர்ட்டேயில் வெளிப்படுவது மீண்டும் லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காகமனிதாபிமானம்என்னும் போலித்தனமாக கூறப்பட்டதை அம்பலம் ஆக்குகிறது; இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளின் கொள்ளை முறை பொருளாதார, பூகோள-மூலோபாயக் நோக்கங்களின் உந்துதலினால்தான் நடைபெறுகிறது. நேட்டோ புள்ளிவிவரங்கள் அவர்களுடைய செயற்பாடுகள் லிபியாவில்உயிர்களைக் காப்பாற்றுவதுடன்தொடர்புடையவை என்ற போலித்தனத்தைக் கூட இப்பொழுது காட்டுவதில்லை. சிர்ட்டேயில் உள்ள மக்கள், நேட்டோ மற்றும் இடைக்கால தேசிய சபை ஆகியவற்றிற்கு அவர்கள் காட்டிய விரோதப்போக்கிற்குக் கூட்டுத் தண்டனையை அனுபவிக்கின்றனர். இந்த மிருகத்தன இராணுவ நடவடிக்கை லிபியா முழுவதிலும் இருக்கும் மக்களுக்கும் அப்பிராந்தியதிதல் இருப்பவர்களுக்கும் வாஷிங்டன், லண்டன், பாரிஸ் ஆகியவை முன்வைக்கும் செயல்பட்டியலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு எச்சரிக்கையாகத்தான் பயன்படுகின்றன.

கிட்டத்தட்ட 100,000 மக்கள் சிர்ட்டேயில் வசிக்கின்றனர்; இது லிபியத் தலைநகரான திரிப்போலிக்கும் கிழக்கே உள்ள பெங்காசி நகரத்திற்கும் இடையே உள்ளது. இன்னும் எத்தனை பேர் அங்கு இப்பொழுது உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை; ஆனால் உறுதியாக பல ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்க வேண்டும். நிலைமை ஏற்கனவே மோசமாகிவிட்டது. மக்களுக்கு குடிநீர் மற்றும் வாடிக்கையான மின்வசதி என்பது ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கிடைப்பது அரிதாகிவிட்டது. குழந்தைகள் ஊட்டமின்மையினால் வாடுவதும் ஆங்காங்கே கூறப்படுவதுடன், சுகாதாரமின்மைத் தொடர்பு நோய்களும் பரவியுள்ளன; இதில் வயிற்றுப் போக்கும் அடங்கும்.

கடந்த வாரம் சிர்ட்டேயில் இருந்த மருத்துவர் சிராஜ் அசௌரி கார்டியனிடம் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாமல் தீர்ந்துவிட்டன என்றும் தப்பிப் பிழைப்பதற்கு மக்கள் மாசுபடிந்த குடிநீரைக் குடிக்கத் தொடங்கிவிட்டனர் என்றும் கூறினார். “இதய நோய், இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு மருந்துகள் இல்லை; குழந்தைகளுக்கு பாலோ, சுகாதாரத் துணிகளோ இல்லைஎன்று அவர் விளக்கினார். “மிகச் சிறிய அளவு நீர்தான் குடிக்கக் கூடியதாக உள்ளது. பொதுவாக நீர் வீணாகிவிட்ட எண்ணெயினால் மாசுபடுத்தப்பட்டுவிட்டதுஎன்றார்.

சிர்ட்டேயின் முக்கிய மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்த அல்-சதக்கை ராய்ட்டெர்ஸ் செய்திநிறுவனம் பேட்டி கண்டது. “மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை தொடங்குகின்றனர், மின்வசதி நின்றுவிடுகிறது. ஜெனரேட்டர்களுக்கு ஒரு சில லிட்டர் எரிபொருள் உள்ளது; ஆனால் அறுவை தொடங்கும்போது விளக்குகள் அணைந்துவிடுகின்றன. அறுவையின்போது மின்வசதி போய்விட்டதால் அறுவைச் சிகிச்சை மேசையில் ஒரு 14 வயதுக் குழந்தை இறந்ததை நான் பார்த்தேன்.”

ஞாயிறன்று மருத்துவமனயில் இருந்து வெளியேறிவிட்ட உயிரியல் இரசாயன வல்லுனர் மகம்மது ஷ்னக் சேர்த்துக் கொண்டார்: “இது ஒரு பேரழிவு. நோயாளிகள் ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கின்றனர்.”

சிர்ட்டே முற்றுகையைச் செயல்படுத்தும் இடைக்கால தேசிய சபை  துப்பாக்கிதாரிகள், நகரத்திற்கு விநியோகங்களை அனுமதிக்க மறுப்பதின் மூலம் வேண்டுமென்றே மனிதாபிமான நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) பணியாளர்கள் சனிக்கிழமையன்று சிர்ட்டேயில் உடல் பைகள், போர்க் காயத்திற்கான தேவைகள் இவற்றை அளிக்க நுழைந்தனர்; ஆனால் இடைக்கால தேசிய சபை அதிகமாக சுட்டுத்தள்ளியதால் மருத்துவமனைக்குள் நுழையமுடிவில்லை.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் Hichem Khadhraoui, AP செய்திநிறுவனத்திடம் கூறினார்: “பல ராக்கெட்டுக்கள் நாங்கள் அங்கு இருக்கும்போது மருத்துவமனையில் விழுந்தன. பொறுப்பற்ற தன்மையில் தாக்குதல்கள் நடந்ததைக் கண்டோம். எங்கிருந்து இது வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.” அவருடைய குழுவின் உறுப்பினர்கள் தாக்குதலால்வியப்படைந்தனர்”, ஏனெனில்நாங்கள் நுழைவதற்கு முன் எல்லாத் தரப்பினருடனும் தொடர்பு கொண்டோம்என்று கட்ரௌவி கூறினார்.

இச்சம்பவம் இடைக்கால தேசிய சபை படைகளால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு முன்கூட்டிய போர்க்குற்றம் என்றுதான் தோன்றுகிறது. “இடைக்கால தேசிய சபை போராளிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவினர் நகரத்திற்கு மருத்துவ உதவிகளைத் வழங்குவதில் மகிழ்ச்சி அடையவில்லை; மாறாக அவர்கள் காயமுற்றோரை நகரத்தில் இருந்து அகற்றியிருக்க வேண்டும், காணாமற்போன மக்களைத் தேடவேண்டும்என்று அல்-ஜசீரா கூறியுள்ளது.

சனிக்கிழமை அன்று இடைக்கால தேசிய சபை தலைவர் முஸ்தாபா அப்தெல் ஜலீல் ஒரு இரண்டு நாட்கள்மனிதாபிமானபோர்நிறுத்தத்தை அறிவித்தார்; இது இன்னும் பல குடிமக்கள் நகரத்தை விட்டு விலக அனுமதிக்கும் எனக் கூறப்பட்டது. ஆயினும் சிர்ட்டே மருத்துவமனை மீதான தாக்குதல் இந்த மனிதாபிமானக் காலம் என்று அழைக்கப்பட்ட நேரத்தில்தான் நடைபெற்றது; நகரத்தின் வெளியில் இருந்து செய்தியாளர்கள் போராளிகளின் பொறுப்பற்ற எறிகுண்டு, ராக்கெட் தாக்குதல்களில் நிறுத்தம் இல்லை என்றனர். சனிக்கிழமை அன்று AFP கூற்றுப்படி, இரண்டு குழந்தைகளும் இரண்டு வயது வந்தவர்களும் சிர்ட்டேயை விட்டு போய்க் கொண்டிருந்த அவர்களுடை வாகனம் ஒரு ராக்கெட்டால் தாக்கப்பட்டபோது கொல்லப்பட்டனர்; இது இடைக்கால தேசிய சபை போராளிகளின் செயலாகத்தான் இருக்க வேண்டும். குழந்தைகள்துண்டு துண்டாகச் சிதறினர்என்றார் மருத்துவர் அஹ்மத் அபு ஔத்; இவர் சிர்ட்டேயின் மேற்குப் புறத்தில் தள மருத்துவர் ஆவார். “அவர்கள் உடல் உறுப்புக்களை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்றனர்.”

அமெரிக்க, ஐரோப்பிய செய்தி ஊடகத்தால் நம்பகமானது என்று ஏற்கப்பட்டிருந்த அறிவிக்கப்பட்டபோர்நிறுத்தம் பிரச்சார நோக்கங்களினால்தான் உந்துதல் பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவு. நேட்டோவும் இடைக்கால தேசிய சபை படைகளும் சிர்ட்டேயின் மீது இறுதித் தாக்குதல் நடத்தும்போது குடிமக்கள் கொலைக்குத் தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதால் அதற்கான போலித்தனங்களை மேற்கொண்டுள்ளனர். குடிமக்கள் தப்பியோட அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது என்ற காரணத்தை ஒட்டி, நகரத்தில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் இடைக்கால தேசிய சபை  போராளிகளால் முறையான இலக்கு என்றுதான் கருதப்படுவர்.

இதேபோன்ற பிரச்சாரம் நவம்பர்-டிசம்பர் 2004ல் ஈராக்கிய நகரமான பல்லுஜாவின் மீது அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்பாகவும் மேற்கொள்ளப்பட்டது. குடிமக்கள் நகரத்தை விட்டு விலக வேண்டும் என அறிவித்தபின், நகரத்தின் மீது படையெடுத்த 10,000 அமெரிக்கத் துருப்புக்கள், மரைன்களின் தளபதிகள் அங்கு இருக்கும் அனைவரையும், குறிப்பாக ஆண்களை, நியாயமான இலக்குகள் என்று கருதினர். முழுநகர மையமும் தடையற்று துப்பாக்கிச்சூடு நடத்தும் இடமாயிற்று; குடிமக்களின் கட்டிடங்கள் தொலைவிலிருந்து குறிவைத்து சுடுவோரை கொல்வதற்காகத் திட்டமிட்டு தகர்க்கப்பட்டன; ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போராளிகளை அகற்றவும் இம்முறை கையாளப்பட்டது. இதேபோல் சிர்ட்டேயிலும் தொலைவிலிருந்து குறிவைத்து சுடுவோர் இடைக்கால தேசிய சபை போராளிகளை நகர மையத்தில் இருந்து பினதள்ளுவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர்.

சிர்ட்டேயில் எஞ்சியிருப்பவர்களில் மக்களில் பாதிப்பிற்கு உட்பட்ட  தட்டுக்களும் அடங்குவர். தப்பியோடிக் கொண்டிருந்த ஒரு நகரவாசி BBC இடம், “இன்னும் வெளியேறாதவர்கள் போகமுடியாதபடி மோசமான காயங்களுக்கு உட்பட்டிருப்பர், அல்லது கார்கள், பெட்ரோல் இல்லாமல் இருப்பர்.” பெட்ரோல் விலை 600 டினர், அதாவது 450 டாலர்கள் 20 லிட்டர்களுக்கு ன்று கூறப்படுகிறது. மஹம்மத் தஹப் என்னும் 30 வயது பொறியியலாளர், சுடானில் பிறந்தவர், ஆனால் சிர்ட்டேயில் 5 வயது முதல் வசிப்பவர், Spiegel Online  இடம்ஏழைகள்தான் ஓட முடியாமல் அங்கு உள்ளனர்; இதில் பல ஆபிரிக்கக் குடியேறியவர்களும் அடங்குவர்என்றார்.

சிர்ட்டேயிலுள்ள ஆபிரிக்க குடியேறியவர்கள், கறுப்பு நிறத்தை உடைய லிபிய சமூகம் இப்பொழுது அண்டை தவர்க்காவில் இருந்து அகதிகள் பெருமளவில் வந்ததில் அதிக எண்ணிக்கை உடையதாகிவிட்டது. கிட்டத்தட்ட 10,000 மக்கள் வாழும் இச்சிறுநகரம் முற்றிலும் இடைக்கால தேசிய சபை போராளிகளால் மக்களின்றிச் செய்யப்பட்டது; ஆகஸ்ட் மாதம் இடத்தைக் கைப்பற்றியபின் அவர்கள் ஒரு இனவெறித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

சிர்ட்டே மக்களிடம் இதேபோல் பதிலடித் தாக்குதல் நேரும் என்ற அச்சத்திற்கான தக்க காரணங்கள் உள்ளன. இடைக்கால தேசிய சபை போராளிகள் நேற்று பௌஹதி மாவட்டம், சிர்ட்டேக்குள் போரிட்டுச் சென்றபோது, அவர்கள் கடாபிக்கு நெருக்கமாக இருந்தவர் எனக் கருதப்பட்டவர் வீட்டிற்கு நெருப்பு வைத்தனர் என்று ராய்ட்டர்ஸ் நிருபர் ஒருவர் கூறினார். மற்ற வீடுகளில், “சிலர் இருப்பதை எடுத்துக் கொண்டனர். இடைக்கால தேசிய சபையின் டிரக்குகள் அப்பகுதி முழுவதில் இருந்தும் திரட்டப்பட்ட கம்பளங்கள், உடைகள் மற்றும் மேசை, நாற்காலி, சோபாக்கள் போன்றவற்றுடன் சென்றன. ஒரு இடைக்கால தேசிய சபை வாகனத்தின் பின்புறத்தில் மேசைக் கால்பந்து விளையாட்டுப் பொருள் இருந்தது.”