WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
How to fight
Wall Street
வோல்
ஸ்ட்ரீட்டை எதிர்த்துப் போராடுவது எவ்வாறு
Joseph
Kishore
4
October 2011
Back to
screen version
கடந்த
இரண்டு வாரங்களாக எதிர்ப்பாளர்கள் வோல் ஸ்ட்ரீட்டில் ஓர் ஆக்கிரமிப்பு நடத்தி,
அமெரிக்கப்
பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வைக் கட்டுப்படுத்தும் மாபெரும் நிதிய நிறுவனங்களைக்
கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பரந்த மக்கள் ஆதரவை ஈர்க்கத் தொடங்கியுள்ளனர்.
அவர்கள்
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் நிதிய உயரடுக்கு மற்றும் அதன் அரசியல்
பிரதிநிதிகளின் கொள்கைகளைப் பெருகிய முறையில் எதிர்ப்பவர்களில் ஒரு பகுதியினர்தான்.
இதேபோன்ற
ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்கா முழுவதும் மற்ற நகரங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஒரு
புதுப்பிக்கப்படும் பொருளாதாரச் சரிவின் நிலமைகளின்கீழ் ஒரு பரந்த வெகுஜன அணிதிரளலை
இவை தூண்டக்கூடும் என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் அச்சம் என்பது ஆர்ப்பாட்டங்களை
அரசாங்கம் எதிர்கொள்ளும் தன்மையின் ஓர் அடையாளமாக உள்ளது.
வார இறுதியில்
700 பேர் ப்ரூக்லின்
பிரிட்ஜிற்கு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தும்போது கைதுசெய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்துகடந்த
வாரம் அமைதியான எதிர்ப்புத் தெரிவித்தோர் மீது மிளகுப் பொடி தூவப்பட்டது.
நியூயோர்க்
நகரப் பொலிஸ் பிரிவு எதிர்ப்பாளர்களுக்குக் காட்டும் அடக்குமுறைக்கு முற்றிலும்
மாறாக,
பெருமந்த நிலைக்குப்
பின் மிக மோசமான பொருளாதாரப் பேரழிவிற்கு முக்கிய அமெரிக்க வங்கியின் அல்லது நிதிய
நிறுவனத்தின் எந்த ஒரு தனி முக்கிய அதிகாரயோ பொறுப்புக்கூறுமாறு
கைதுசெய்யப்படவில்லை,
கட்டாயப்படுத்தப்படவும் இல்லை.
வங்கிகளின்
பொறுப்பற்ற ஊகமும் அப்பட்டமான மோசடியும்தான் உலக மந்த நிலையை ஆரம்பித்துவைத்தது.
இது பல மில்லியன்கணக்கான வேலைகளைத் இல்லைதொழித்துவிட்டது.
பொதுக்கருவூலங்கள்
டிரில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டு வங்கிகளின் மோசமான கடன்கள்
தீர்க்கப்பட்டன. ஆனால் முன்னர் புஷ்ஷின் தலைமையின் கீழும் பின்னர் ஒபாமாவின்
தலைமையிலும் இந்தப் பிணை எடுப்புக்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இதே அரசாங்க
அதிகாரிகள் வங்கியாளர்களுக்குத் தடையற்ற இயங்குவதை அனுமதித்துள்ளனர்.
வோல்
ஸ்ட்ரீட்-விரோத
எதிர்ப்புக்களுக்கு ஆதரவு பெருகுகையில்,
ஜனநாயகக் கட்சி
சார்பு உடைய அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் விரைந்து செயல்பட்டுக் கட்டுப்பாட்டை
மீட்க முயல்கின்றன.
சில
தொழிற்சங்கங்கள் புதன் கிழமை அன்று அணிவகுப்பு ஒன்றிற்குத் திட்டமிட்டுள்ளன.
இவற்றிற்கு
SEIU எனப்படும் பணி
ஊழியர்கள் தொழில்துறைச் சங்கம்,
போக்குவரத்துத்
தொழிலாளர்கள் ஒன்றியத்தின் உள்ளூர்
100, பாரவூர்தி
செலுத்துவோர் மற்றும் ஆசிரியர்கள் ஐக்கியக் கூட்டமைப்பு உட்படப் பல நியூயோர்க்
தொழிற்சங்கங்கள் இசைவு கொடுத்துள்ளன.
கடந்த வெள்ளியன்று,
சமீபத்தில் அமெரிக்க
வணிகப் பெருங்குழுவுடன் இணைந்து ஒபாமாவின் போலித்தன
“வேலைகள்
திட்டத்திற்கு”
உதவும்
AFL-CIO
வின் தலைவர் ரிச்சர்ட்
ட்ரும்கா “வோல்
ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு”
எதிர்ப்புக்களுக்கு
தன்னுடைய ஆதரவை அறிவித்தார்.
பல ஜனநாயகக்
கட்சி அதிகாரிகளும்,
ஜனநாயகக் கட்சி
சார்புடைய பிரமுகர்களும் எதிர்ப்புக்களில் கலந்து கொண்டனர்;
இதில் நியூயோர்க்
சட்டமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் ரங்கேல்,
நியூயோர்க் ஆளுனர்
மைக்கேல் பாட்டர்சன்,
திரைப்படத்தயாரிப்பாளர் மைக்கேல் மூர் ஆகியோர் அடங்குவர்.
பில்லியனர்
நிதியாளர் ஜோர்ஜ் சோரோஸ்கூட எதிர்ப்புக்களுக்குத் தன் ஆதரவை வெளிப்படுத்தினார்.
அவர்களுடைய நோக்கம்
வெகுஜன எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகத் திருப்ப வேண்டும்,
பாரக் ஒபாமா மறு
தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்பதாகும்.
வோல்
ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டங்களில் தொடர்பு கொண்டிருந்த பல குழுக்கள் ஸ்பெயினிலும்
கிரேக்கத்திலும் உள்ள
indignados
உடைய நிலைப்பாட்டை
எதிரொலித்து “அரசியல்
வேண்டாம்”,
தலைமை வேண்டாம்
என்று கூறிவிட்டன.
“அரசியல் வேண்டாம்”
என்னும் அழைப்பு
முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ இரு கட்சி முறைக்கு ஒரு கொள்கையளவில்,
சீரான அரசியல்
மாற்றீட்டை நிராகரிப்பதற்கு ஒப்பாகும். அதாவது சோசலிச அரசியல் நிராகரிப்பு ஆகும்.
இது ஜனநாயகக்
கட்சியின் கரங்களை நேரடியாக வலுப்படுத்துவது ஆகும். அதுதான் அரசியல் வெற்றிடத்தை
நிரப்பச் செயல்படும்.
மக்களின்
பரந்த பெரும்பான்மை எதிர்கொண்டிருக்கும் சமூக மற்றும் பொருளாதார நிலைமை ஒபாமா
நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சி மீது பேரழிவு தரும் குற்றச்சாட்டு ஆகும். மேலும்
ஒபாமாவை
“மாறுதலுக்கான”
வேட்பாளர் என
உயர்த்திக் காட்டிய அமைப்புக்களுக்கும் ஒரு பெரும் இழுக்கு ஆகும்.
நேற்று
அக்டோபர்
3ம் திகதி,
TARP எனப்படும்
பிரச்சனைக்குள்ளான சொத்துக்களுக்கான உதவித்திட்டத்தை காங்கிரஸ் இயற்றியதின்
மூன்றாம் ஆண்டு நிறைவாகும். இதன்மூலம்
750
பில்லியன் டாலர்
வரிசெலுத்துவோரின் பணம் வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பிற்குக் கொடுக்கப்பட்டது.
அப்பொழுது ஜனாதிபதி
வேட்பாளராக இருந்த ஒபாமா சட்டத்தை இயற்றுவதற்கு ஆதரவைக் கொடுத்து,
நிதிய உயரடுக்கிற்கு
உதவி செய்வதற்கு அரசியல் மறைப்புக் கொடுக்கும் வகையில் ஜனநாயகக் கட்சியின்
சட்டமியற்றுபவர்கள் எண்ணிக்கையைக் கொடுத்தார்.
ஜனாதிபதி என்னும்
முறையில்,
ஒபாமா ஆரம்ப
TARP
திட்டத்திற்கும் அப்பால
பிணை எடுப்பை விரிவாக்கிய பல டிரில்லியன் டாலர் செலவுகளையும் மேற்பார்வையிட்டார்.
மூன்று
ஆண்டுகளுக்குப் பின்,
அமெரிக்காவில்
மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கை நிலைமைகள் பொறுத்துக் கொள்ள முடியாத மோசமான
நிலையை எய்திவிட்டன.
பெரும்பாலான
அமெரிக்கர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் காணப்படாத வறுமையில் வாழ்கின்றனர்.
நிலைமை
இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் மோசமாக உள்ளன;
அவர்கள் கடன்,
வறுமை,
வேலையின்மை ஆகியவை
கூடிய எதிர்காலத்தைத்தான் முகங்கொடுக்கின்றனர்.
அமெரிக்க மக்கள்
எண்ணிக்கை அலுவலகம் கொடுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி,
37.3 இல்லங்கள்,
ஒரு பெற்றோர்
30 வயதிற்கு
உட்பட்டநிலையில் எனக் கொண்டவை,
கடந்த ஆண்டு
வறுமையில் வாழ்ந்தன.
சமூக
வறியநிலை பெருகியுள்ள நிலையில்,
வோல் ஸ்ட்ரீட்டின்
ஊக வணிகர்களின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன. மொத்தத்தில்
$1.53 டிரில்லியன்
கொண்ட அமெரிக்காவின் மிகப் பெரும்
400 செல்வந்தர்களின்
சொத்துக்கள் நெருக்கடிக்கு முந்தைய நிலையைக் கிட்டத்தட்ட உயர்ந்து அடைந்துவிட்டனர்.
ஆரம்பத்தில்
இருந்தே,
ஒபாமா நிர்வாகத்தின்
ஒவ்வொரு நடவடிக்கையும் வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களுக்கு உதவும் வகையில்தான்
அமைக்கப்பட்டது.
வங்கிகளின்
பிணையெடுப்பு,
கார்த்தொழிலை மறு
கட்டமைத்து,
அதற்காக
ஆயிரக்கணக்கான வேலை இழப்புக்களைச் சுமத்தி,
புதிதாக வேலைக்கு
எடுக்கப்படுபவர்களுக்கு வறுமைத்தர ஊதியங்களைக் கொடுத்து,
1930களுக்குப் பின்
வேலையின்மை நெருக்கடியில் மோசமான நிலை குறித்து எந்தத் தீவிர நடவடிக்கைகளையும்
எடுக்காமல் இருப்பது ஆகியவை இதில் அடங்கும்.
வெளியுறவுக்
கொள்கையில்,
நிர்வாகம் புஷ்
தொடக்கிய போர்களை விரிவாக்கியது. தற்பொழுது லிபியாவைக் இரத்தக்களரியில் ஆழ்த்தும்
போரில் ஈடுபட்டுள்ளது.
நிர்வாகம் மற்றும்
அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் குற்றம் சார்ந்த தன்மை கடந்த வாரம் யேமனில் அன்வர் அல்-அவ்லாக்கி
படுகொலை செய்யப்பட்டதில் முற்றுமுழுமையான வெளிப்பாட்டைக் கண்டது.
அரசாங்கமே
அவ்லாக்கியைக் கொல்ல உத்தரவிட்டு,
அதை மேற்பார்வையிட்ட
வகையில்,
ஒரு அமெரிக்கக் குடிமகனை
நீதித்துறைக்குப் புறத்தே கொல் செய்ய வெளிப்படையாக அனுமதி கொடுத்த முதல் அமெரிக்க
ஜனாதிபதியாக ஒபாமா விளங்குகிறார்.
இப்பொழுது
நிர்வாகம் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைச் சுகாதாரப் பாதுகாப்புத்
திட்டங்களில் இருந்து வெட்டும் பிரச்சாரத்தை நடத்துகிறது. இதில் மருத்துவப்
பாதுகாப்பு,
மருத்துவ உதவி
ஆகியவையும் அடங்கும்.
இது அடுத்த
தசாப்தத்தை ஒட்டி மத்திய வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை
$4 டிரில்லியன்
குறைக்க வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
ஒபாமா
நிர்வாகத்தின் செயல்கள் உலகெங்கும் ஆளும் வர்க்கம் நடத்தும் தாக்குதலின் ஒரு
பகுதிதான்;
இது
20ம் நூற்றாண்டில்
தொழிலாளர்களில் ஒவ்வொரு பிரிவும் பெற்ற சமூக நலன்களைத் தகர்க்கும் நோக்கத்தைக்
கொண்டது.
ஐரோப்பாவில் பெருகும் கடன்
நெருக்கடியுடன் வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்கள் தலைமையில் தீய தாக்குதலும்
நடைபெறுகிறது. இது கிரேக்கத்தையும் மற்ற நாடுகளையும் ஒரு மந்த நிலையில்
தள்ளிவிட்டது.
இத்தாக்குதலுக்கு வெகுஜன எதிர்ப்பின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது ஆகும்.
இந்த ஆண்டின்
நிகழ்வுகள்—எகிப்து
மற்றும் மத்திய கிழக்கில் எழுச்சிகள்,
இஸ்ரேலிய வரலாற்றில்
சமூக சமத்துவமின்மைக்கு எதிரான மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள்,
ஐரோப்பாவில் வெகுஜன
எதிர்ப்புக்கள்,
விஸ்கான்சினில்
நூறாயிரக்கணக்கானவர்கள் வரவு-செலவுத்திட்ட
குறைப்புக்களுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை எதிர்காலத்தில் என்ன
வரவுள்ளது என்பது பற்றிய அடையாளங்களாகும்.
வோல்
ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டங்கள் மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியின்
அடிப்படை மூலாதாரம் அமெரிக்க,
உலகப்
பொருளாதாரத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் பெரும் வங்கிகளின் சமூக நலன்களில் உள்ளன
என்பதைப் பரந்த மக்கள் பிரிவு உணர்ந்துவிட்டது என்பதின் வெளிப்பாடு ஆகும்.
அரசியல் இப்பொழுது
மக்கள் விருப்பத்தால் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பாலான மக்களை
வறியவர்களாக்குவதின்மூலம் தனது சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என உறுதி கொண்டு ஒரு
நிதிய பிரபுத்துவத்தின் நலன்களினால்தான் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆளும்
வர்க்கத்தின் அதிகாரம் ஒரு வெகுஜனப் போராட்டத்தில் சுயாதீனமாகத் தொழிலாள வர்க்கத்தை
அணிதிரட்டிப் போராடுவதின் மூலம்தான் எதிர்க்கப்பட முடியும். அது ஜனநாயகக் கட்சியின்
அரசியல் இரும்புப்பிடியை முறிப்பதின் மூலமும் நெருக்கடியை அதன் வேர்களில்
தாக்குவதின் மூலம்தான் முடியும்.
இது நிதிய
உயரடுக்கிற்கு கோரிக்கைகளை முன்வைத்தல் என்னும் பிரச்சினை அல்ல;
மாறாக வங்கிகள்
மற்றும் பெரிய நிறுவனங்களைப் பொது உடைமையாக்கி,
ஜனநாயகக்
கட்டுப்பாட்டின்கீழ் உள்ள நிறுவனங்களாக மாற்றுவது ஆகும். அதன் நோக்கம் தனியார்
இலாபம் என்பதற்குப் பதிலாக சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்தல் எனத் தளம்
கொண்டிருக்கும்.
வோல்
ஸ்ட்ரீட்டிற்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் சோசலிசம் இருத்தப்பட வேண்டும்.
சோசலிச சமத்துவக்
கட்சி தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் புரட்சிகரமாக
அணிதிரட்டுவதற்குப் போராடுகிறது.
இந்த முன்னோக்குடன்
உடன்படும் அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள்
SEP
யில் சேர்ந்து
தொழிலாள
வர்க்கத்திற்கு ஒரு புதிய சோசலிச தலைமையைக் கட்டமைக்க உதவுமாறு வலியுறுத்துகிறோம். |