சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Wall Street hails UAW-GM deal

UAW-GM உடன்பாட்டை வோல் ஸ்ட்ரீட் பாராட்டுகிறது

use this version to print | Send feedback

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்திற்கும் (UAW), ஜெனரல் மோட்டார்ஸுக்கும் (GM) இடையே ஏற்பட்டுள்ள புதிய நான்கு ஆண்டு தொழிலாளர் உடன்பாட்டை வோல் ஸ்ட்ரீட்டின் ஆய்வாளர்கள் பாராட்டியுள்ளனர். ஜெனரல் மோட்டார்ஸின் திவாலுக்குப் பின் வந்துள்ள முதல் உடன்பாட்டில், கார்த்தயாரிப்பாளர்கள் ஊதியங்கள், நலன்கள் மற்றும் பணி நிலைமைகளில் பெரும் வெட்டுக்களை விரிவுபடுத்தியுள்ளனர். இவை 2009 பிணையெடுப்பின்போது நிபந்தனையாக ஜனாதிபதி பாரக் ஒபாமாவினால் கோரப்பட்டிருந்தன.

தொழிலாளர்களுக்கான மணிநேர கணக்கு ஊதியச் செலவுகளில் உயர்வு, GM இன் 48,500 ஊழியர்களுக்கு 1% என வரம்பு கட்டப்பட்டுள்ளது. இது நான்கு சகாப்தங்களில் இதுமிகக் குறைவான உயர்வு ஆகும். பணிநீக்கம் அல்லது மேலதிக கொடுப்பனவுகளுக்கான செலவு ஒதுக்கீடு, மற்றும் மிகக் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு சிறிய உயர்வு என்பது வாழ்க்கச் செலவு அதிகரிப்புக்கள், பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களின் வருமானப் பாதுகாப்புக்கள், மற்றும் பலவகைச் சலுகைகள் அகற்றப்படுவதின் மூலம் ஈடு செய்யப்படுகின்றன.

ஆறு காலாண்டு இலாபங்களை பதிவு செய்து $30 பில்லியன் ரொக்கத்தையும் கையில் வைத்திருக்கும் GM எட்டு ஆண்டுக்கால ஊதியத் தேக்கத்தில் துன்பமுற்றிருக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு எதையும் வழங்கவில்லை. தற்பொழுதைய பணவீக்க விகிதத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு தொழிலாளியும் இவ் ஒப்பந்தக்காலத்தின்போது உண்மை ஊதியங்களில் மேலும் $16,000 இனை இழப்பார். 1953ல் இருந்து முதல் தடவையாக நூறாயிரக்கணக்கான ஓய்வுபெறுவோருக்கு எந்தவித நல முன்னேற்றமும் இருக்காது.

ஒரு தொலைத்தொடர்புக் கூட்டத்தில், தலைமை நிர்வாக அதிகாரி டான் ஆக்கெர்சன்(இந்த ஆண்டு இவர் $11 மில்லியனைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது) முதலீட்டாளர்களிடம், “புதிய உடன்பாடு GMஐ நீண்டகாலக் கணக்கில் வெற்றியடையுமாறு செய்யும்.” என்றார். GM உடைய கடன் மதிப்புதரத்தை ஸ்டாண்டர்ட் & பூர்ஸ் நிறுவனம் உடனடியாக உயர்த்தியது.

இந்த உடன்பாடு இரு வணிக அமைப்புக்களுக்கு இடையே ஒரு சதியாகும்; அவற்றுள் ஒன்று இன்னும்தொழிற்சங்கம்என்று குறிக்கப்படுகிறது; இது கடிகாரத்தை 1930 களுக்குப் பின்னோக்கித்தள்ள உறுதியாக உள்ளது. துவக்கத்தில் இருந்தே UAW ன் தலைவர் பாப் கிங் GM இன்நிரந்தர செலவுகள்உயர்த்தப்படமாட்டா என்னும் உறுதியைக் கொடுத்துள்ளார்.  இதற்காகப் பெரு வணிகத்தின் இலபாங்களைக் கருத்திற்கொள்ளாமல்  தொழிலாளர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையையும் நிராகரித்தே வந்துள்ளார்.

2005ல் இருந்து மட்டும்  GM இற்கு மணிக்கணக்குத் தொழிலாளர்களை 111,000ல் இருந்து 48,000 எனக் குறைப்பதற்கும், உற்பத்திச்செலவுகளை அதிர்ச்சிதரும் வகையில் மூன்றில் இரு பகுதி குறைப்பதற்கும் UAW உதவியுள்ளது. தொழிலாளர்களுக்கு இதையொட்டி வாழ்க்கத்தரச் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இளம் தொழிலாளர்களுக்குக் கிட்டத்தட்ட வறுமை நிலை ஊதியங்கள் மற்றும் மிருகத்தனமான குறைப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

உடன்பாடு இருபிரிவினராலும் இசைவு கொடுக்கப்பட்டதை வரவேற்ற கிங், ஜனாதிபதி ஒபாமாவைஅமெரிக்காவில் நல்ல ஊதியம் கொடுக்கும் வேலைகளைத் தக்க வைத்திருப்பதற்காகப்பாராட்டினார்; மேலும் UAW அமெரிக்காவில் வேலைகளை அதிகரிப்பதற்கு GM நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்ற இருப்பதில் உறுதி கொண்டுள்ளதாகவும்கூறினார்.

ஊதியங்களைக் குறைப்பதின் மூலம் மெக்சிகோவில் சில ஆலைகளில் நடத்தப்படும் உற்பத்திகள் சிலவற்றை மீண்டும் அமெரிக்காவிற்குக் கொண்டுவரும் வகையில் GM இற்கு UAW ஊக்கம் கொடுத்துள்ளது. இதில்  டெனசீயில் ஆலை ஒன்று மறுபடியும் திறக்கப்பட உள்ளதும் அடங்கும். இதுபுதிதாக கண்டுபிடிக்கப்பட்டதொழில் உடன்பாட்டின்கீழ் செயல்படும். அதாவது மிக அதிகத் தொழிலாளர்கள், ஏன் பெரும்பாலான தொழிலாளர்கள்கூட  இரு-அடுக்கு ஊதிய முறைப்படி வேலை செய்வர்.

நல்ல ஊதியம் கொடுக்கும் வேலைகள்” UAW ஐ நடத்தும் ஊழல்வணிக முறையில் உள்ள அதிகாரிகளுக்குத்தான் தக்கவைக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் வறுமைவிகித ஊதியங்களை ஏற்க வேண்டும் எனக் கோருகையில், கடந்த இரு ஆண்டுகளில் கிங் மற்றும் உயர்மட்ட UAW  அதிகாரிகள் வாங்கும் 6 இலக்க ஊதியங்கள் 24% உயர்ந்துவிட்டன.

இந்த உடன்பாட்டின் பொருள் மில்லியன் கணக்கில் நிறுவனங்களுக்கு பணத்தை வருமானமாக சேகரிப்பதற்கும் மற்றும் ஐரோப்பிய, ஆசியக் கார்த்தயாரிப்பாளர்கள் தங்கள் தொழிலாளர் தொகுப்பைக் கண்காணிக்க UAW ஐ நாடுவும் ஊக்குவிக்கப்படுவர் என்பதாகும். இவ்வாறு செய்திருக்கையில், UAW தன் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள், முழுநேர அலுவலர்களின் ஊதியங்கள், பிற நலன்களைப் பெரிதும் உயர்த்தித் தக்க வைத்துக்கொள்ளவும், 1979ல் இருந்து அதன் உறுப்பினர் எண்ணிக்கையில் 80% சரிவு என்பதால் ஏற்பட்டுள்ள வருமானச் சரிவை ஈடுகட்டவும் முடியும் என எதிர்பார்க்கிறது.

தொழிலாள வர்க்கத்திற்கும் இப்பெருநிறுவன முறை அமைப்பிற்கும் தவிர்க்க முடியாத மோதல் ஏற்படும்.

65% ஆதரவு கொடுத்த உறுதிப்படுத்தும் வாக்கு என்பது பெரும் ஒப்புதல் என்று கிங் சுட்டிக்காட்டினார். உண்மையில், இத்தகைய காட்டிகொடுப்பிற்கு ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது.  மிச்சிகனில் டெல்ட்டா டௌன்ஷிப் மன்றம், வில்லோ ரன் டிஸ்ட்ரிபூஷன் மையம், மற்றும் இந்தியானாபொலிஸ் ஸ்டாம்பிங்  ஆகிய குறைந்தபட்சம் மூன்று ஆலைகள் இதற்கு எதிராக உறுதியாக வாக்களித்திருந்தன. டெட்ரோயிட் புறநகரிலுள்ள லேக் ஓரியன் பிரிவிலும் பிற ஆலைகளிலும் ஏராளமானவேண்டாம்வாக்குகள் போடப்பட்டன. தொழிலாளர்களுடைய Blogs, Facebooks ஆகியவை UAW ஐ கண்டித்து கட்டுரைகளை வெளியிட்டன; ஓய்வுபெற்றவர்கள் ஓய்வூதிய வெட்டுக்களை அடுத்து செலுத்தவேண்டிய கொடுக்குமதிகளை புறக்கணிக்க அழைப்பு விடுத்தனர்.

மிகவும் குறிப்பிடத்தக்கது ஏராளமானோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது எனலாம். சில பகுதிகளில் 10 சதவிகிதம்பேர்தான் வாக்களித்தனர் என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையைக் கொண்டன. இது UAWஇல் இருந்து தொழிலாளர்கள் ஆழ்ந்த விரோதப் போக்கைக் கொண்டிருப்பது குறித்து அம்பலப்படுத்துகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் நிறுவனத்திற்கும் தொழிற்சங்கம் என அழைக்கப்படுவதற்கும் இடையே அதிக வேறுபாட்டைக் காணவில்லை.

ஆனால் எதிர்ப்பு அடங்கியே இருந்துவிடாது. தொழிலாளர்களுக்கும் UAWக்கும் இடையே ஒரு வர்க்கப் போராட்டம் உள்ளது. Auto Worker Caravan and Soldiers of Solidariy மற்றும் அதன் போலி இடது ஆதரவாளர்கள் என்னும் UAW இடம் இருந்து பிளவுற்று வந்துள்ளவர்களின் கூற்றிற்கு மாறாக UAW போராட்டம் நடத்தவும் மாட்டாது, அதற்கு அழுத்தம் கொடுக்கப்படவும் முடியாது. அது ஒரு விரோத அமைப்பு, தொழிலாளர்களுக்குப் பொறுப்பை ஏற்காது. அது வெளிப்படையாக நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவாகத்தான் செயல்படுகிறது.

எனவேதான் போராட்டத்திற்கான புதிய அமைப்பு தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகிறது. கார்த்தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர்களும் அடங்கிய குழுக்களுக்கான தயாரிப்பை இப்பொழுது மேற்கொள்ள வேண்டும். இவை UAW வில் இருந்து சுதந்திரமாக இயங்கி அதற்கு எதிர்ப்பாகவும் செயல்படவேண்டும்; அது ஜி.எம். உடனான உடன்படிக்கையை அகற்றுவதற்கும், போர்ட், கிறைஸ்லர் ஆகியவற்றில் பேச்சுக்களின் மூலம் வரவிருக்கும் அழுகிய உடன்பாடு எதையும் தோற்கடிப்பதற்கும், இரு அடுக்கு முறை அகற்றப்படுவதற்கும், அனைத்து ஊதியங்கள், நலன்களை மீட்பதற்கும் போராடவேண்டும்.

இது ஒபாமா நிர்வாகம் மற்றும் பெருவணிகத்தின் இரு கட்சிகளுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டம் ஆகும்; அவை தொழிலாளர்கள் வெகுஜன வேலையின்மை மற்றும் வறுமையை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி, அதனால் பெறப்படும் பில்லியன்கள் பெருநிறுவன நிர்வாக அதிகாரிகள், வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் ஆகியோருக்குத் திசை திருப்பப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

தொழிலாளர்கள் தொழில்துறை அரசியல் போராட்டத்தை நடத்தவும், சமூகத்தின்மீது நிதிய உயரடுக்கின் இரும்புப் பிடியை முறிப்பதற்கும் பொருளாதாரத்தை தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு ஏற்ப மறுசீரமைக்கவும் ஒரு சுயாதீன சக்தியாக அமைக்கப்பட வேண்டும்.

75 ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரிப் போராளிகள் மற்றும் சோசலிஸ்ட்டுக்கள் நிறுவன சார்புடைய AFL தொழிற்சங்கங்களுக்கு எதிராக எழுச்சி செய்து, UAW ஐ பிளின்ட் இன்னும் பல நகரங்களில் உள்ளிருப்புப் போராட்டங்களின் மூலம் நிறுவினர். அப்போராட்டங்களுக்கு ஊக்கம் கொடுத்த போர்க்குணமிக்க, சோசலிச மரபுகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

பொருளாதார வாழ்வு ஒரு பகுத்தறிவார்ந்த திட்டத்தின் மூலம் அமைக்கப்பட வேண்டும். தனியார் இலாபங்கள் என்று இல்லாமல் மனிதத் தேவைகளை திருப்தி செய்யும் வகையில் சமூகத்தின் செல்வத்தை உற்பத்திய செய்பவர்களால் ஜனநாயக முறையில் அத்திட்டம் இயற்றப்பட வேண்டும். இதில் கார்த்தயாரிப்புத் தொழில் ஒரு பொது உடைமை முறையாக, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் திட்டமிட்ட சோசலிஸ்ட் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுதலும் அடங்கும்.

இந்தப் போராட்டம் தொடக்கப்பட வேண்டிய தேவையை உணரும் அனைத்துத் தொழிலாளர்களையும் சோசலிச சமத்துவக் கட்சி எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும், எங்கள் வேலைத்திட்டத்தை அறியுமாறும், தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைக்குமாறும் அழைப்பு விடுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் வேலைத் திட்டத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே அழுத்தவும்.