சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Libya: “the jewel in the crown”

லிபியா: “மகுடத்தின் மீதிருக்கும் இரத்தினக்கல்"

Bill Van Auken
30 September 2011

use this version to print | Send feedback

லிபியாவிற்கான வாஷிங்டன் தூதர் அமெரிக்க தொழிலதிபருடனான ஒரு சமீபத்திய தொலைத்தொடர்பு உரையாடலில், வட ஆபிரிக்க நாடுகளின் எண்ணெய் வளங்களைக் குறித்த ஒரு அடைமொழியை உதிர்த்துள்ளார்.

முன்னர் திரிபோலியில் மூடப்பட்டிருந்த அமெரிக்க தூதரகத்தின் கொடிகம்பத்தில் அமெரிக்க தேசியக்கொடியை மீண்டும் அண்மையில் ஏற்றிய பின்னர்,  ஜீன் கிரிட்ஜ் சுமார் 150 அமெரிக்க தொழிலதிபர்களின் பிரதிநிதிகளுக்கு அளித்த அவருடைய உரையின் உள்ளடக்கங்களை பத்திரிகையாளர்களுக்கு விவரித்தார். அந்த நிகழ்ச்சியில் பொருளாதாரம், எரிசக்தி மற்றும் வியாபார விவகாரங்களுக்கான துணை செயலரும், அமெரிக்க பெருநிறுவனங்களின் வெளிநாட்டு நலன்களை, (குறிப்பாக எண்ணெய்வளங்களில்) பின்பற்றுவதில் முன்னனியில் நிற்கும் வெளிவிவகாரத்துறையின் முக்கிய நபருமான ஜோஸே பெர்னான்டஸூம் கலந்து கொண்டிருந்தார். ஈராக்கில் அமெரிக்க முதலீடுகளைக் கோருவதில் பொருளாதாரம், எரிசக்தி மற்றும் வியாபார விவகாரத்துறையும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருந்தது.

கிரிட்ஜ் கூறினார்: “லிபிய இயற்கை ஆதாரவளங்களிலேயே எண்ணெய்வளமானது, மகுடத்தில் பதிந்த இரத்தினக்கல்லாக இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் கடாபியின் ஆட்சிகாலத்திலேயே கூட உள்கட்டமைப்பு மற்றும் ஏனைய விஷயங்களைக் கட்டியெழுப்புவதை அடி முதல் முடிவரையில் அவர்கள் தொடங்கி இருந்தனர்.”

அந்த அமெரிக்க தூதர் தொடர்ந்து கூறியவை: “கணிசமாக பெரியளவிற்கு அமெரிக்க நிறுவனங்களால் அங்கே இடம்பிடிக்க முடியுமென்றால், பின்னர் நம்முடைய சொந்த வேலைகள் பொறுத்த வரையிலும் கூட, அமெரிக்காவின் நிலைமைகளை மேம்படுத்த அது நமக்கு உதவும்.”

மகுடத்தில் பதித்த இரத்தினக்கல்" (the jewel in the crown) என்ற அடைமொழி ஏகாதிபத்திய வரலாற்றிலும், சித்தாந்தத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு வாக்கியமாகும். அந்த அடைமொழி, முதன்முதலில் பிரதம மந்திரி பென்ஜமின் டிஸ்ரேலியால் 19ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய காலனிய உடைமைகளிலேயே இலாபகங்களுக்கான மிகவும் ஆதாயமான ஆதாரமாக விளங்கிய இந்தியாவையும், அதன் இடத்தையும் குறித்துக்காட்ட அந்த வாக்கியம் பயன்படுத்தப்பட்டது.

அத்தகைய மொழி திரிபொலிகான முதன்மை அமெரிக்க பிரதிநிதியின் உத்தியோகப்பூர்வ பேச்சுக்களில் தவழ்வதொன்றும் எதிர்பாராதொன்றல்ல. “மனித உரிமைகள்" மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க என்ற போலி வேஷத்தில் தொடுக்கப்பட்ட ஒரு யுத்தம் தொடங்கியதிலிருந்தே, அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் நேட்டோ கூட்டாளிகளும், குறிப்பாக பிரிட்டனும் பிரான்சும், பின்பற்றிய கொள்ளையடிக்கின்ற நோக்கங்களை அது வெளிக்காட்டுகிறது.

இப்போது, நேட்டோ யுத்த விமானங்களோடு, பலமாக ஆயுதமேந்திய "போராளிகள்" சர்தேயின் செர்ட்டின் கடற்கரை நகரைக் காட்டுமிராண்டித்தனமாக கைப்பற்றும் நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். வெடிகுண்டுகளும், ஏவுகணைகளும், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர்களை இல்லையென்றாலும் நூற்றுக்கணக்கான பொதுமக்களை அங்கே பலிகொண்டுவிட்டது. ஆபிரிக்க கண்டத்திலேயே மிகப்பெரியவை ஆன லிபிய எண்ணெய் வளங்களால் ஆன செல்வச்செழிப்பை சூறையாட, அனைத்து பிரதான சக்திகளின் முதலாளித்துவ நலன்களும் வெட்கங்கெட்ட போட்டாபோட்டியில் ஈடுபட்டுள்ளன.

தொழிலதிபர்களின் இதேபோன்ற நூற்றுக்கணக்கான கூட்டங்கள் இலண்டனிலும், பாரிசிலும் கூட்டப்பட்டுள்ளன. இலண்டனில் செவ்வாயன்று கூட்டப்பட்ட கூட்டத்தில் பெங்காசியின் தேசிய இடைக்கால சபை தூதர் உரையாற்றினார். இந்நிலையில் அந்நாட்டிற்கு யுத்த விமானங்களையும், சிறப்புப் படைகளையும் அனுப்பிய அரசாங்கங்கள், அதன் தலைநகரிலிருந்து இலாபங்களை உருவியெடுக்க, மூலதனத்தின் ஒரு புதிய தாக்குதலை இப்போது அணிதிரட்டி வருகின்றன.

வியாழனன்று அரிஜோனா செனட்டர் ஜோன் மெக்கெயினும், தெற்கு கரோலினா செனட்டர் லிண்ட்செ கிரஹாமும் மற்றும் அமெரிக்க செனட்டின் ஏனைய இரண்டு குடியரசு கட்சி உறுப்பினர்களும் லிபியாவிற்கு விஜயம் செய்தனர். கடந்த மார்ச்சில் நேட்டோ யுத்தம் தொடங்கிய பின்னர் அந்நாட்டிற்கு விஜயம் செய்திருக்கும் முதல் உயர்மட்ட அமெரிக்க பிரதிநிதிகளாவர்.

இந்த விஜயத்தின் நோக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. அதாவது, Associated Press செய்தியின்படி, “லிபியாவில் கடாபியின் கீழ் எந்த வியாபாரங்கள் நீண்டகாலமாக தடைவிதிக்கப்பட்டிருந்தனவோ, அந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆதாரவளங்களிலிருந்து செல்வவளத்தைக் கொண்டு வரக்கூடிய வியாபாரங்களைப் பெறமுடியுமென அமெரிக்க நிறுவனங்கள் நம்புவதாக செனட்டர்கள் தெரிவித்தனர்.”

தங்களுக்கு உதவியவர்களுக்கு தாங்களும் உதவ வேண்டுமென்ற விருப்பம் இங்கே லிபிய மக்களிடையே உள்ளது,” என்று திரிபொலியில் கிரஹாம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். “இங்கே, லிபியாவில் முதலீடு செய்ய அமெரிக்க முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு அதற்கான ஒரு வாய்ப்பு அளிக்கப்படுமென நாங்கள் நம்புகிறோம்,” இது மெக்கெய்ன் கூறியது.

கடந்தகாலத்தில், லிபிய எண்ணெய் தொழில்துறை ஐரோப்பிய கூட்டுநிறுவனங்களின் செல்வாக்கின்கீழ் இருந்தன. இருந்தபோதினும் கொனோகோ, ராத்தான், ஹெஸ், ஆக்சிடெண்டெல் (Conoco, Marathon, Hess,Occidental) போன்ற அமெரிக்க பெருநிறுவனங்களும் அந்நாட்டின் பல திட்டங்களில் ஈடுபட்டிருந்தன. அவை லிபிய ஆதாரவளங்களின்மீது அவற்றின் பிடியை அதிகரிக்க மிகவும் தீவிரமாக உள்ளன.

மெக்கெயினும், கிரஹமும் திரிப்போலிக்கு புதியவர்கள் அல்லர். ஆகஸ்ட் 2009இல் அவர்கள் கர்னல் மௌம்மர் கடாபியின், அவரது மகனின் மற்றும் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மௌதஸ்மின் விருந்தினர்களாக இருந்தவர்கள். விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட அமெரிக்க தூதரகத்தின் ஓர் இரகசிய ஆவணம், “இருதரப்பு உறவுகளில் கொண்டு வரப்பட்ட முன்னேற்றத்தை மேலெடுத்துக்காட்டி, அந்த சந்திப்பு வெற்றிகரமாக இருந்ததாக" விவரித்தது. கடாபியின் ஆட்சிக்கான அமெரிக்க ஆயுத விற்பனையை காங்கிரஸில் துரிதப்படுத்த, மெக்கெயின் கடாபிக்கு உறுதியளித்ததையும் அது மேற்கோளிட்டுக் காட்டியது.

"இரத்தங்குடிக்கும் சர்வாதிகாரி" என கடாபி குறித்து தற்போது கனைத்துக் கொண்டிருக்கும் இத்தகைய வெறுப்புக்குரிய அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு, அவர்களால் உந்தப்பட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான லிபிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையைக் குறித்து அப்போதையும் விட இப்போது சிறிதும் அக்கறை இல்லை.

பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களை ஊக்குவிக்க, முன்னர் கடாபிக்கு ஆதரவாக இருந்த வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும், துனிசியா மற்றும் எகிப்தில் எழுந்த மக்கள் எழுச்சிகளோடு சேர்ந்து லிபியாவில் கடாபிக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பித்திருந்ததும், அந்த எண்ணெய் வளம்மிக்க நாட்டின்மீது மறைமுக-காலனிய கட்டுப்பாட்டை கொண்டுவரும் நோக்கில், ஒரு சூறையாடும் யுத்தத்தைத் தொடங்க அவர்கள் அதையொரு வாய்ப்பாக கண்டனர்.

இந்த குற்றத்தனமான செயலின் தயாரிப்பு வேலைகளில், நடுத்தரவர்க்க முன்னாள்-இடதுகளும் மற்றும் தாராளவாத கல்வித்துறைகளின் ஒட்டுமொத்த அடுக்குகளும் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தன. உடனே நிகழவிருப்பதாக கருதப்பட்ட படுகொலைகளைத் தடுப்பதும், “மனித உரிமைகளைப்" பாதுகாப்பதுமே லிபியாவில் தலையீடு செய்வதில் இருக்கும் தங்களின் ஒரே நலன் என அமெரிக்க, பிரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களின் எரிச்சலூட்டும் முறையீடுகளையே அந்த அடுக்குகளும் ஒருசேர எதிரொலித்தன; அலங்காரப்படுத்திக் காட்டின.

ஈராக்கில் சுமார் ஒரு மில்லியன் ஈராக்கியர்களின் வாழ்க்கையைப் பறித்த, மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், யேமன் மற்றும் ஏனைய நாடுகளிலும் பொதுமக்களைத் தாக்குவதைத் தொடர்ந்து கொண்டிருக்கும் அதே அமெரிக்க அரசாங்கம், லிபியாவில் பொதுமக்களின் கதி குறித்து திடீரென அக்கறை காட்ட தொடங்கிய  வெளிப்படையான முரண்பாடு, பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியிலிருந்து, Nation இதழ் மற்றும் பப்லோவாத International Viewpoint இதழ்வரையில் ஒருவருக்கும் ஒரு அரிதான விடயமாக தோன்றவில்லை.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மத்தியகிழக்கு வரலாற்றுத்துறை பேராசிரியர் ஜூவான் கோலின் குரல் இந்த முகாமில் முக்கிய குரலாக இருந்தது. ஈராக் மீது புஷ் நிர்வாகம் கொண்டிருந்த யுத்த கொள்கையின் ஒரு விமர்சகராக பெற்ற அவருடைய செல்வாக்கை, லிபிய யுத்தத்திலும் விற்பனை செய்ய அவர் பயன்படுத்தினார். யுத்தம் ஆரம்பித்த போது, அன்னியநாடுகள் மீதான தலையீடு ஒரு "பேசக்கூடாதவிடயமாக" மாறிவிடக்கூடாது என்றும், “ஏகாதிபத்திய-எதிர்ப்பு" "ஏனைய அனைத்து மதிப்புகளையும் வென்றுவிட" அனுமதிக்கப்படக்கூடாது என்றும் எச்சரித்து, “இடதுகளுக்கு பகிரங்க கடிதம்" ஒன்றை கோல் வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் அவர், அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் லிபிய மக்களை பாதுகாக்க யுத்தம் தொடுக்கவில்லை, மாறாக "வினோதமான" ஒன்றாக "லிபியா மீது அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்ச் செல்வாக்கிற்கு வழியைத் திறந்துவிடுவதற்காகும்" என்ற வாதத்தை விவரித்திருந்தார்.

லிபியா மீது தொடர்ந்து கொண்டிருக்கும் பிடியானது, காலனித்துவ-வகையிலான அடிமைப்படுத்தலுக்கு இத்தகைய அனுதாபிகளை விலை செலுத்த வைத்துள்ளது. இந்த யுத்தமே முன்னாள்-இடதுகள் மற்றும் தாராளவாதிகளின் ஒட்டுமொத்த சமூக-அரசியல் அடுக்கும் ஏகாதிபத்திய முகாமிற்குள் செல்வதை அம்பலப்படுத்த  உதவியுள்ளது. அவர்கள் ஏகிதாபத்தியத்தின் ஆதரவாளர்களாகியுள்ளதுடன், அந்த ஆக்கிரமிப்பிற்கு ஓர் "இடது" மூடுதிரையை கொடுக்க முனைகின்றனர்.

இந்த அடுக்கின் போராட்டமே, ஆழ்ந்து-போகும் ஒரு சமூக மற்றும் வர்க்க துருவப்படுத்தலின் வெளிப்பாட்டாக உள்ளது. அது அமெரிக்க சமூகத்தை, உண்மையில் ஒட்டுமொத்த முதலாளித்துவ உலகத்தையே குணாம்சப்படுத்துகிறது. அடிமைப்படுத்தும் ஏகாதிபத்திய யுத்தங்களுக்கு பிரதான சக்திகள் திரும்பியதைப் போன்றே, முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று ரீதியிலான நெருக்கடியாலும் உந்தப்பட்டுள்ளது. மேலும் அது தொழிலாள வர்க்கத்தின் வரவிருக்கும் புரட்சிகர போராட்டங்களின் ஒரு முன்னறிவிப்பாகவும் உள்ளது.