சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The euro crisis: Major powers plan new bank bailout

யூரோ நெருக்கடி: பிரதான சக்திகள் புதிய வங்கி பிணையெடுப்பிற்கு திட்டமிடுகின்றன

Stefan Steinberg
28 September 2011
Use this version to print | Send feedback

பிரதான சக்திகள் மந்தநிலைக்குள் தடுமாறிக் கொண்டிருக்கையில், அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள அரசாங்கங்கள் வங்கிகளுக்கு மற்றொரு பெரும் பிணையெடுப்பை வழங்க திட்டமிட்டு வருகின்றன. ஒரு பிணையெடுப்பை எவ்வாறு ஒழுங்குப்படுத்துவதென்பதில் அங்கே கணிசமான கருத்துவேறுபாடுகள் நிலவுகின்ற போதினும், கிரீஸின் ஒரு அரசாங்க கடன் திவால்நிலைமையால் உண்டான வங்கிகளின் இழப்புகளை மூடிமறைக்க, பொதுநிதியிலிருந்து நூற்றுக்கணக்கான பில்லியன்களை ஒதுக்க வேண்டும் என்பதில் அங்கே பொதுவான உடன்பாடு உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய வோல் ஸ்ட்ரீட் முறிவைத் தொடர்ந்து நடந்ததைப் போல, (அப்போது இந்த முறை ஏற்பட்டதையும்விட பெரியளவில் ஏற்படவில்லை என்பது தான் விதிவிலக்காக இருந்தது) அதன் ஊகவணிக நடவடிக்கைகள் மூலமாக உலக நெருக்கடியைத் தூண்டிவிட்ட நிதியியல் மேற்தட்டிற்குத் தேவையான செல்வம், அரசு கருவூலங்களைச் சூறையாடுவதன் மூலமாக சுருட்டப்பட்டது. இது "நிதிநிலையை ஸ்திரப்படுத்துதல்" என்ற பெயரில் அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் மீது அவற்றின் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதன் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வங்கிகளுக்குக் கொடுக்கப்படும் புதிய நிதிஒதுக்கீடுகளை ஈடுசெய்ய, ஏற்கனவே மந்தநிலைமைக்குள்ளும், பரந்த சமூக அவலங்களினுள்ளும் தூக்கியெறியப்பட்டுள்ள கிரீஸிலும், அதிகளவில் கடன்பட்டுள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இன்னும் கூடுதலாக காட்டுமிராண்டித்தனமான அரசசெலவினவெட்டு முறைமைகள் நடைமுறைப்படுத்தப்படும். அதனோடு சேர்ந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஏனைய பகுதிகளுக்கும் சமூகநல வெட்டுக்கள் விரிவாக்கப்படும்.

ஐரோப்பிய மத்திய வங்கியால் நிதியியல் சந்தைகளுக்குள் பாய்ச்ச இன்னும் நிறைய தொகையை பிணைகொடுக்க, ஐரோப்பிய வங்கிகளை "மீண்டும் மூலதனங்களால் நிரப்புவதும்", 440 பில்லியன் யூரோ ஐரோப்பிய நிதிய ஸ்திரமாக்கும் திட்டத்தின் (EFSF) பலனை விரிவாக்குவதுமே வாரயிறுதியில் வாஷிங்டனில் நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்திலிருந்து வந்த கோரிக்கைகளின் அர்த்தமாகும்.

ஜேர்மனியினதும் மற்றும் ஏனைய வடக்கு யூரோ பிராந்திய நாடுகளின் எதிர்ப்பிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் மும்முரமாக ஊக்கப்படுத்தப்பட்ட இந்த முறைமைகள், கிரேக்க அரசு பத்திரங்களின் மதிப்பினை 50 சதவீதத்தால் மதிப்புக்குறைக்க செய்வதன் மூலமாக கிரேக்க அரசு கடனை "மறுகட்டமைக்கும்" ஒரு திட்டத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது. “முறையான திவால்நிலை" என்பது போன்ற ஒன்றின் விளைவாக உருவாகும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகள் பாரிய இழப்புகள், ஐரோப்பிய நிதிய ஸ்திரமாக்கும் திட்டம் -EFSF- மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி மூலமாக ஒழுங்குப்படுத்தப்படும் புதிய பிணையெடுப்பால் மூடிமறைக்கப்படும்.

ஐரோப்பா-பரவிய பிணையெடுப்பு திட்டம் போன்றவொன்று கொண்டு வரப்பட்டால் அதன் திட்ட செலவுகளின் பெரும்பகுதி ஜேர்மனியின் மேல் விழக்கூடும் என்பதால், ஜேர்மன் அதிகாரிகள் அதுபோன்றவொரு ஐரோப்பா-பரவிய பிணையெடுப்பு திட்டத்திற்கு எதிராக வந்துள்ளனர். அதற்குமாறாக, கிரேக்க திவால்நிலையோடு தொடர்புபடுத்தி, பேர்லின் ஜேர்மனி வங்கிகளின் அதன் சொந்த தேசிய பிணையெடுப்பிற்குத் திட்டமிட்டு வருகிறது.

ஐரோப்பிய கடன் நெருக்கடியைக் கையாள "பெருவெடிப்பு" (big bang) திட்டம் மற்றும் "அதிர்ச்சியூட்டும் பிரமிப்பு" என்றழைக்கப்படுவை குறித்து, வாரயிறுதிவாக்கில், பல அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் செய்தியிதழ்கள் எழுதின. ஐரோப்பிய நிதிய ஸ்திரமாக்கும் திட்டம்  வசமிருக்கும் ஆதாரவளங்கள் 2 ட்ரில்லியன் யூரோ வரைக்கும் தாக்குப் பிடிக்கக்கூடும். கிரீஸ், அயர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகியவற்றின் அரசு பத்திரங்களை அதிகமாக வாங்கவும், யூரோக்களை அச்சிடவும் ஐரோப்பிய மத்திய வங்கிகளுக்கு முழுஅதிகாரமும் வழங்கப்படக்கூடும்.

வங்கிகள் மற்றும் ஊகவணிகங்களுக்கு ஒரு புதிய பிணையெடுப்பு கிடைக்கும் என்ற அனுமானத்தில் திங்கள் மற்றும் செவ்வாயன்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும் வேலைவாய்ப்பின்மை மந்த அளவுகளை எட்டியிருந்த போதினும், பிரதான வங்கிகளும் பெருநிறுவனங்களும் அவற்றின் இலாபங்களை வியக்கத்தக்க அளவிற்கு அதிகரித்துக்கொள்ள, மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய பிணையெடுப்புகளின் முதல் அலை உதவியது. சம்பளங்களை குறைக்கவும், சமூகநல அரசில் எஞ்சியிருக்கும் மிச்சமீதிகளை அழிக்கவும் இந்த நெருக்கடியை முதலாளித்துவம் பயன்படுத்தி வருவதோடு சேர்ந்து, செல்வத்திற்கும், ஏழ்மைக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.

அண்ணளவாக 11 மில்லியன் "பெரும் செல்வந்தர்களின்" ஒட்டுமொத்த செல்வம், 2009இல் 17 சதவீதமும், 2010இல் மொத்தம் 42.7 ட்ரில்லியனைத் தொட்டு 9.7 சதவீதமும் உயர்ந்தது என்று மெர்ரில் லென்ச் மற்றும் கேப்ஜெமினியால் பிரசுரிக்கப்பட்ட மிக சமீபத்திய செல்வவள அறிக்கை குறிப்பிட்டது. இது சிக்கனநடவடிக்கை திட்டங்களின் விளைவாக மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டு வரும் வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அனைத்து நாடுகளின் ஒட்டுமொத்த அரசு பற்றாக்குறைகளையும் விட மிக அதிகமான கூட்டுத்தொகையாகும்.

ஐரோப்பா முழுவதும் சிக்கன முறைமை கொள்கைகளை நடைமுறைப்படுத்த இரக்கமில்லாமல் அழுத்தம் அளித்த ஜேர்மனியில், தனிநபர்களின் செல்வவளம் கடந்த 15 மாதங்களில் மொத்தம் 350 பில்லியன் யூரோவாக உயர்ந்துள்ளது. இது மிகத்துல்லியமாக கிரீஸின் மொத்த கடனுக்கு சமமாகும். கிரேக்க மில்லினியர்களின் சுவிஸ் வங்கி சேமிப்புகள் மொத்தம் 600 பில்லியன் யூரோக்களாகும் என்று Der Spiegel இதழ் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இந்த தொகை அந்நாட்டின் பொதுக்கடனைவிட அண்ணளவாக இரண்டு மடங்காகும்.

ஐரோப்பிய நிதிய ஸ்திரமாக்கும் திட்டத்தை நீடிப்பதன் மீது ஜேர்மனியில் வியாழனன்று நடந்த ஒரு முக்கிய வாக்கெடுப்பிற்கு முன்னர் அமெரிக்கா மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. திங்களன்று, அமெரிக்க கருவூல செயலர் திமோதி கைய்த்னர் எச்சரிக்கையில், “ஐரோப்பாவிற்கு "நிறைய கால அவகாசம்" இல்லை. அது "அதை விரைவில் செய்ய" வேண்டியுள்ளது, என்றார். ஐரோப்பாவின் செயல்படாமல் இருக்கும் தன்மை "உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது" என்று ஜனாதிபதி பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்தார்.

கால தாமதமின்றி பேர்லினில் இருந்து விடையிறுப்பு வந்தது. ஐரோப்பிய நிதிய ஸ்திரமாக்கும் திட்டம் தற்போது கொண்டிருக்கும் அதன் பொறுப்புக்களை விரிவாக்கும் திட்டங்கள் எதுவும் அரசிற்கில்லை என்று ஜேர்மன் நிதிமந்திரி வொல்வ்காங் ஷொய்பிள  அறிவித்தார். ஜேர்மன் தொழிலதிபர்களின் கூட்டமைப்பில் பேசுகையில் அதிபர் அங்கேலா மேர்க்கெல் கூறியதாவது, மேற்கொண்டு எவ்வித மீட்பு முறைமைகள் அல்லது கடன் உயர்வுகளை ஜேர்மன் எதிர்க்கிறது என்று அறிவித்தார்.

அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலும் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வருகின்ற நிலையில், அட்லாண்டிக்கிற்கு இடையிலான கூட்டாளிகளுக்கு இடையில் மோதல்கள் தீவிரமடைந்து வருகிறது. அதேநேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளேயே கூட போட்டிகள் தீவிரமடைந்து வருகின்றன. ஐரோப்பிய மண்டலம் உடைவதற்கான அபாயங்கள் அதிகரித்துவருவதாக வரலாற்று உணர்வுள்ள சில மூத்த ஐரோப்பிய அரசியல் பிரமுகர்கள் ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய திட்டத்தின் ஒரு பொறிவு என்பது ஒரு தசாப்தத்திற்கு உள்ளாகவே யுத்தத்தில் போய் முடியும் என்று போலந்தின் நிதியியல் மந்திரி ஜேசெக் ரோஸ்டொவ்ஸ்கி, இந்த மாதத்தின் தொடக்கத்தில் அளித்த அறிக்கைகளில் தெரிவித்திருந்தார். யுத்தம் சில மாதங்கள் வந்துவிடுமென்று தோன்றவில்லை, ஆனால் ஒரு பத்தாண்டு கால அளவில் ஏற்படலாம்" என்று ரோஸ்டொவ்ஸ்கி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

மந்தநிலை, சர்வாதிகாரம், யுத்தம் - இதுதான் முதலாளித்துவம் உலக மக்கள்மீது கொண்டிருக்கும் எதிர்காலமாக உள்ளது. தற்போதைய நெருக்கடி உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்வியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மக்களுடைமையின் அடிப்படையிலும், உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழும் உற்பத்தி கருவிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் மற்றும் தனிநபர் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல் சமூக தேவைகளுக்கு ஏற்றவொரு திட்டமிட்ட பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு புதிய அமைப்புமுறையால், அதாவது சோசலிசத்தால் பிரதியீடு செய்யப்பட வேண்டும்.

வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் தற்போதிருக்கும் தொழிலாளர்களின் அரசாங்கங்களின் இரும்புப்பிடியிலிருந்து முறித்துக்கொண்ட ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த புரட்சிகர ஐக்கியம் இதற்கு தேவைப்படுகிறது.