WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French teachers protest against savage
reduction in teaching posts
பிரெஞ்சு
ஆசிரியர்கள் ஆசிரியர் வேலைகளில் மிருகத்தனமான குறைப்புக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்ட
ஊர்வலம் செய்கின்றனர்
By Pierre
Mabut
30 September 2011
அரசாங்கத்தின் கல்வித்துறைக் குறைப்புக்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள்
விடுத்திருந்த ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு செப்டம்பர் 27 அன்று பெரும் ஆதரவை
பிரான்சின் ஆரம்ப, இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அளித்தனர். அரசாங்கம் பொதுத்துறை
ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில்,
இரு ஓய்வு பெறும் பணிகளில் ஒன்றிற்கு ஊழியர் நியமிக்கப்படமாட்டாது
என்னும் அரசாங்கத்தின் கொள்கை பெரும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. தொழிற்சங்க
மதிப்பீடுகளின்படி அன்று 800,000 பொதுத்துறை ஊழியர்களில் பாதிக்கும் மேலானவர்கள்
வேலைநிறுத்தம் செய்தனர், 165,000 பேர் பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் பங்கு
பெற்றனர்.
45,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் பாரிஸ் தெருக்களில் அரசாங்கத்தின் ஆசிரியர்
வேலைகளின் எண்ணிக்கைக் குறைப்புக் கொள்கைக்கு எதிராக தங்கள் விரோதப் போக்கை
தெரிவிப்பதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதலுக்கு பெருகியுள்ள எதிர்ப்பின்
அடையாளமாக, முக்கியமான கத்தோலிக்க தனியார்துறைப் பள்ளிகளின் ஆசிரியர்கள்,
பள்ளிகளில் 20 சதவிகிதத்தை பிரதிபலிப்பவர்கள், 1984க்கு பின்னர் முதல் தடவையாக
ஆசிரியர்கள் வேலைகளை பாதுகாக்கும் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றனர்.
2008ல்
இருந்து 150,000 அரசாங்க வேலைகள் வெட்டப்பட்டுவிட்டன; இவற்றில் 70,000 ஆசிரியர்கள்
வேலைகளும் அடங்கும். சிக்கனத் திட்டம் பிரான்சில்
AAA
ன் தரத்தைத் தக்க வைப்பதற்காக வங்கிகளின் ஆணைகள் மீது தொழிலாளர்கள்
வாழ்க்கைத் தரங்களை அழிக்கும் வகையில் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகளைக்
குறைக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
பிரெஞ்சுக்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு
(PCF)
நெருக்கமான
SNUiPP-FSU
என்னும் முக்கிய ஆரம்ப பள்ளித் தொழிற்சங்கக் கூட்டமைப்பிலுள்ள
செபாஸ்டியன் சிஹிருடைய கருத்தானது, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் “நாட்டில் நம் முக்கிய
முன்னுரிமைகளில் கல்வி மையமாக இருக்க வேண்டும் என்பதற்கான வலுவான செய்தி” அளிக்க
வேண்டும் என்று விரும்பியுள்ளது, வேலைநிறுத்தத்தின் குறைந்த வரம்பினால் பயனற்றுப்
போகிறது. வேலைநிறுத்தத்தை ஒரு நாள் நடவடிக்கை என்று வரம்பிற்குட்படுத்திய வகையில்
தொழிற்சங்கங்கள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் தொழிலாள வர்க்கத்தின் மற்ற
பிரிவுகளில் இருந்து ஒதுக்கும் கணக்கீட்டைக் கொண்டுள்ளன; பிரிவுகள் அனைத்துமே
அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளினால் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன.
இதுவும்
தொழிற்சங்கங்கள் 2003 மற்றும் 2010 ஆண்டுகளில் ஒய்வூதியங்கள், சமூக உரிமைகள்
பாதுகாப்புத் தொடர்பான வெகுஜன எதிர்ப்புக்களைக் காட்டிக் கொடுத்துள்ள வரலாறும்,
அதையொட்டி தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரச் சரிவை ஏற்படுத்தியது இன்னும் கணிசமான
தோல்விகள் நேரிட்டது ஆகியவை கல்வி மந்திரி
Luc
Chatel
ஐ ஒருநாள் வேலைநிறுத்தத்தை, “ஒரு வேலைநிறுத்தம்—செப்டம்பரில்
புரட்சிகர தாக்கங்கள் எதையும் கொண்டிராதது” என விவரிக்க வைத்துள்ளன. அரசாங்கத்தின்
சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு பற்றிய அவருடைய மதிப்பீடு அதை
அதன் உண்மையான பெயரில் கூறியிருப்பது ஆகும் —அதாவது தொழிற்சங்கங்களின் பங்கில் போலி
எதிர்ப்பைக் காட்டுவது என்பது; தொழிற்சங்கங்கள் ஏற்கனவே 2003 முதல் தங்கள்
உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரங்களை ஓய்வூதியப் போராட்டங்களின் போதே தியாகம்
செய்துவிட்டன.
தொழிற்சங்கங்கள் திறனற்றவை, அரசாங்கத்தின் கொள்கைகளை விருப்பத்துடன்
செயல்படுத்துபவை என்று அரசாங்கம் சரியாகவே கணித்துள்ளது. ஆசிரியர் தொழிற்சங்கங்கள்
காட்டும் போக்கு தொழிற்சங்கத் தேர்தல்களில் மிக அதிக எண்ணிக்கையில் வாக்குப் பெறும்
நோக்கத்தை உடையது; அதாவது அக்டோபர் தொடக்கத்தில் நிர்வாகத்தின் குழுக்களுக்குச்
சமமாக அமைப்புக்களில் இடத்தைப் பெறும் நோக்கம்தான்.
பிரெஞ்சு
ஜனாதிபதி சார்க்கோசி ஒருநாள் ஆசிரியர் அணிதிரள்விற்கு முகங்கொடுக்கும் வகையில்
தனியார்துறைத் தொழிலாளர்களைப் பொதுத்துறைத் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்தும்
நிலையில் கூறினார்: “பொதுத்துறை ஊழியர்கள் கடினமான பணிகளில் உள்ளனர்; ஆனால் அவர்கள்
தம்மை பாதுகாக்கும் அந்தஸ்தைக் கொண்டுள்ளனர். நீங்கள் [தனியார்துறையினர்] இடர்களை
எதிர்கொள்ளுகிறீர்கள்; நாட்டின் தலைவர் என்னும் முறையில் என்னுடைய கடமை அனைத்துத்
தொழிலாளர்கள், நிர்வாகிகளுடைய நலன்களையும் சிந்தித்தல், இவர்களோ சர்வதேசப்
போட்டியில் ஈடுபட்டுள்ளனர், அரசாங்கத்தின் ஆதரவைப் பெற வேண்டும்.” இங்கு
கொடுக்கப்படும் தகவல் ஆசிரியர்கள் உற்பத்தித்திறன் அற்றவர்கள், சந்தைத் தேவைக்கு
உட்படுத்தப்படவேண்டியவர்கள் என்பதாகும்.
பாரிஸில்
நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் ஆசிரியர்களுடன் கணிசமான உயர்நிலைப்பள்ளி மாணவர்களும்
சேர்ந்து, ஆசிரியர் வேலைகள் மீது அரசாங்கத்தின் தாக்குதல்களை நிராகரித்தனர்.
சார்க்கோசி அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்தே தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்த
அச்சங்களைப் பற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள்
WSWS
இடம் கூறினர்.
ஓர்
ஆர்ப்பாட்டக்காரர் கூறினார்: “எங்களுக்கு மிகக் குறைந்த ஓய்வூதியம்தான் கிடைக்கும்;
ஆனால் சமீபத்தில் செனட்டர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நன்றாக இருப்பவர்கள்.
அவர்கள் கைப்பெட்டிகளுடன் (நிறைய பணமானது லஞ்சமாக வணிக உடன்பாடுகளின் ஆதரவிற்காக
வருவது) நல்ல முறையில் ஓய்வு பெறுவார்கள். எங்களுக்குத் தீர்வு நிரந்தரமாகப்
போராடுவதுதான்—எச்சலுகைகளையும் கொடுப்பதற்கில்லை. சார்க்கோசியை ஜனாதிபதித்
தேர்தலில் முதல் சுற்றிலேயே அகற்றிவிட வேண்டும்.”
ஒரு விஞ்ஞான
ஆசிரியை தான் ஒரு மூன்றாண்டு காலத்தில் மாற்று ஆசிரியையாகத்தான் பல பள்ளிகளுக்குச்
சென்றதாகக் கூறினார். தற்பொழுதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதித் தேர்தல்
ஒன்றும் முடிவு அல்ல. “பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு சர்வதேச
ஒத்துழைப்பு மிகவும் முக்கியமாகும். பிரான்ஸிற்குள் இதற்குத் தீர்வு இல்லை.
வருங்காலம் இளைஞர்களுடையது; அதுதான் அடிப்படைத்தளம். ஆசிரியர்களின் வேலைகளை
அகற்றுவதன் மூலம், பின்தங்கிய நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கு நாம் உதவவில்லை.”
பொருளாதார
ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (OECD)
சமீபத்திய அறிக்கை ஒன்று பிரான்சின் கல்வித் தரங்களிலுள்ள சரிவை
அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. 100 மாணவர்களுக்கு 6.1 ஆசிரியர்கள் என்னும்
முறையில் பிரான்சானது கிரேக்கம் அல்லது போர்த்துக்கல்லையும் விடக் குறைந்த நிலையில்
உள்ளது. பிரான்சில் ஆசிரியர்களின் ஊதியம் “சர்வதேசத் தரங்களுடன் ஒப்பிடுகையில்
வலுவற்றது” என்றும் அறிக்கை முடிவுரையாகக் கூறியுள்ளது. கல்வித்துறையில்
வெட்டுக்கள் என்பது சமூகத்தில் பாதிப்பிற்குட்பட்டிருக்கும் இளைஞர்கள் பிரிவைத்தான்
அதிகம் தாக்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் எந்தத் தகுதியும் இல்லாமல் 135,000 இளைஞர்கள்
பள்ளியை விட்டு விலகுகின்றனர்.
ஆசிரியர்கள்
அணிதிரண்டு கூடியதின் அளவு இரண்டாம் உலகப் போருக்குப் பின் கிடைத்த அனைத்து சமூக
நலன்களையும் பாதுகாக்கவேண்டும் என்னும் தொழிலாளர்களின் உறுதிப்பாட்டை
வெளிப்படுத்துகிறது. ஆசிரியர் தொழிற்சங்கத்தின் நோக்கம், இதற்கு மாறாக, கல்வித்துறை
எதிர்ப்பை மற்ற தொழிலாளர்களுக்கும் அழைப்புவிட வேண்டும் என்ற நோக்கத்தைக்
கொண்டிருக்கவில்லை; இது பொருளாதார நெருக்கடியின் உலகளாவிய உட்குறிப்புக்களைப்
புறக்கணிக்கிறது; மேலும் தொழிலாளர்களின் எமாற்றத்தையும் சீற்றத்தையும்
PS
வேட்பாளருக்குப் பின்னே வடிகாலமைக்கிறது; அவர்தான் தற்போதைய
ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியை 2012 ஜனாதிபதித் தேர்தல்களில் முகங்கொடுக்கக்கூடிய
பிரான்சுவா ஹோலண்ட் ஆவார்.
சார்க்கோசி
அரசாங்கம் அழித்துள்ள 80,000 ஆசிரியர் பதவிகளில் பெரும்பாலானவற்றை மீட்டுவிடுவதாக
ஹோலண்ட் உறுதியளித்துள்ளார். இந்த வெற்று உறுதிமொழிகள்
PS
ன் திட்டமான பொதுப் பற்றாக்குறையை குறைத்தல், அதற்குத் தொழிலாள
வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்பதை பயனற்றதாக்குகின்றன; இவருடைய கருத்து
கிரேக்கத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதமர் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ மற்றும்
ஸ்பெயினில் ஜோஸ் லூயி சபாத்தெரோ ஆகியோருக்கு இணையாகத்தான் உள்ளது.
கல்வித்துறையில் அரசாங்கத்தின் வெட்டுக்கள் என்பது,
2007க்கும் 2012க்கும் இடையே ஆசிரியர்கள் பணிகளில் 80,000 ஐ அகற்றுவது என்பது
ஆகும்; இது பிரெஞ்சு முதலாளித்துவம் பெரும் பள்ளத்தில் விழுவதில் இருந்து அதைக்
காப்பாற்றும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பாகமாகும். |