WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The civil war in Syria and the fate of the Middle Eastern
revolution
சிரியாவில் உள்நாட்டுப் போரும் மத்திய கிழக்குப் புரட்சியின் விதியும்
Chris Marsden
26 November 2011
பஷிர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சிக்கு அதன் படைகளை சிரியாவிற்குள் நடக்கும்
போர்களில் இருந்து விலக்கிக் கொண்டு,
மேலைச்சார்புடைய குழுக்களுடன் பேச்சு நடத்துமாறு அரபு லீக்
கொடுத்துள்ள இறுதி காலக்கெடுவின் முடிவு சிரியாவில்
பெருகியுள்ள உள்நாட்டுப் போரில் வெளிநாட்டு இராணுவக்
குறுக்கீட்டை ஒரு படி மேலே எடுத்துச் செல்லுகிறது.
துருக்கி,
சௌதி அரேபியா மற்றும் கட்டார் ஆகியவை சிரிய ஆயுதமேந்திய எதிர்ப்புக்
குழுக்களுக்குக் கொடுக்கும் ஆதரவின் பின் அமெரிக்கா,
பிரிட்டன்,
மற்றும் பிரான்ஸ் ஆகியவை உள்ளன.
இவை பல மாதங்களாக அங்காரா,
ரியத் மற்றும்
சிரிய எதிர்த்தரப்பு ஆகியவற்றுடன் பின்புலத் தந்திரங்களில்
ஈடுபட்டு,
ஈரானிய சார்பு அசாத் ஆட்சியை
அகற்றி,
அதிகாரத்திற்கு டமாஸ்கஸில் மேலைக் கைப்பாவை அரசாங்கத்தை இருத்த
உறுதியாக உள்ளன.
ஆரம்பத்தில் இருந்தே,
சௌதி அரேபியா,
கட்டார்,
ஜோர்டான்,
துருக்கி மற்றும் வாஷங்டன் ஆகியவை சமூக இயக்கத்தை அசாத்திற்கு
எதிராகப் பயன்படுத்த முயன்றுள்ளன;
இது இந்த ஆண்டு எகிப்து மற்றும் துனிசியாவில் நடந்த புரட்சிகரப்
போராட்டங்களால் ஒரு வலதுசாரி,
ஏகாதிபத்திய சார்பு ஆட்சி மாற்றத்திற்கு உந்துதல் பெற்றது.
பிராந்திய,
மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் மாற்று முன்னணிச் சக்தியாக
செயல்படும் சிரிய தேசியக் குழு
(Syrian National Council)
துருக்கியில் தளம் கொண்டு,
இரு பிரிவுகளையும் கொண்டுள்ளது.
டமாஸ்கஸ் பிரகடனம் (Damascus Declaration)
அமெரிக்க சார்பு சக்திகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது,
சுன்னி முஸ்லிம் பிரதர்ஹுட் அரபு அரசுகள் மற்றும் துருக்கியின்
மாற்று அமைப்பு ஆகும்.
லிபியாவில் நடைபெற்ற ஏகாதிபத்தியப் போரைப் போன்றே,
இந்த ஏகாதிபத்திய செயலிலும் தொழிற்பகுப்பு முறை உள்ளது.
முற்றிலும் சுன்னி தடையற்ற சிரிய இராணுவம் போன்ற சக்திகள்,
துருக்கியிலும் நிலைப்பாட்டைக் கண்டு,
அலவிக்கள்
மற்றும் சிரியப் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக இராணுவச்
செயற்பாட்டிற்கு ஒரு கருவியாக உள்ளன.
இதற்கிடையில் பல தன்னைத்தானே
"தாராளவாதிகள்"
என அழைத்துக் கொள்ளுபவை செய்தி ஊடகத்தால் இயக்கத்தை குறுகிய பற்று
அற்றது என விளம்பரப்படுத்த உபயோகப்படுகிறது;
அதே நேரத்தில் மத மற்றும் இன விரோதங்களும் களத்தில்
தூண்டிவிடப்படுகின்றன.
Gulf News
ல் எழுதிய பாட்ரிக் சீல், "ஒருவரை
ஒருவர் கடத்துதல்,
சித்திரவதைகள்,
தலையைச் சீவுதல் மற்றும் அழியா நகரமான ஹொம்ஸில் நடக்கும் சுன்னி,
அலவி சமூக மக்களின் இடமாற்றங்கள்--பலநேரமும்
'புரட்சியின் தலைநகரம்'
என விவரிக்கப்படுவது--நாட்டின்
பிற பகுதிகள் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து பீதியான
அறிகுறிகளைக் காட்டுகின்றன."
என்று எழுதியுள்ளார்.
சிரிய ஆட்சியும்,
துனிசியாவில் ஜைன் எல் அபிடைன் பென் அலி,
எகிப்தில் ஹொஸ்னி முபாரக்,
லிபியாவில் முயம்மர் கடாபி ஆகியோரின் ஆட்சியைப் போன்றே
அழிக்கப்படுவதற்குத் தகுந்ததுதான்.
பல தசாப்தங்களின் அடக்குமுறை மற்றும் மக்களை வறிய நிலைக்குத் தள்ளுதல்
ஆகியவற்றின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டது;
நாட்டின் சனத்தொகையில் 32%
நாள் ஒன்றிற்கு
$2
அல்லது அதற்கும் குறைவான பணத்தில் வாழ்கின்றனர்.
ஆனால் இப்பொழுது வெகுஜனங்கள் அப்பட்டமாக எழுப்பவேண்டிய கேள்வி
இதுதான்:
அசாத்திற்குப் பதிலாக எது வரும்?
அங்காரா,
ரியத் மற்றும் வாஷிங்டன் ஆகியவற்றின் ஆணையில் இருத்தப்பட்ட ஒரு
குறுகிய குழுத்தன்மை உடைய ஆட்சி,
சிரியாவிலும் சர்வதேச அளவிலும்,
தொழிலாள
வர்க்கத்திற்கு ஒரு முன்னோக்கியபாதை என்று இல்லாமல்
பின்னோக்கியபாதை என்றுதான் பிரதிபலிப்பாகும்.
லிபியாவில் ஒரு மேற்கத்திய சார்பு கைப்பாவை அரசாங்கம்
இருத்தப்பட்டபின்,
மத்திய கிழக்குப் புரட்சிக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின்
எதிர்ப்புரட்சித் தாக்குதலுக்கு இன்னும் ஒரு வெற்றி
என்பதைத்தான் பிரதிபலிக்கும்.
துனிஸ் மற்றும் கெய்ரோவில் தங்கள் வாடிக்கை ஆட்சிகள்
விழுந்தபின்,
வாஷிங்டன்,
லண்டன் மற்றும் பாரிஸ் ஆகியவை எண்ணெய் வளம் உடைய மத்திய கிழக்கு
முழுவதும்
"ஆட்சிமாற்றம்"
தேவை,
தங்கள் நலன்களுக்கு ஏற்ப அதை அவர்கள் செய்வதற்கு உடனே செயல்பட
வேண்டும் என்ற முடிவிற்கு வந்தன.
எதிர்த்தரப்பு உணர்வுகள் ஏகாதிபத்திய நட்புகளுக்கு
அச்சுறுத்தல் கொடுத்த இடங்களில்,
எகிப்து,
பஹ்ரைன்,
சௌதி அரேபியா போன்றவற்றில்,
அவை எப்படியும்
எதிர்க்கப்பட வேண்டும்.
ஏகாதிபத்திய நலன்களுக்கு உதவும் என்று உள்ள இடங்களில்,
லிபியாவிலும் இப்பொழுது சிரியாவிலும்,
அது வலதுசாரி,
ஏகாதிபத்திய சார்புடையவற்றின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட
வேண்டும்.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் தெஹ்ரானில் இருந்து டமாஸ்கஸ்,
லெபனானில் ஹெஸ்பொல்லா மற்றும் இப்பொழுது ஈராக்கிலுள்ள
அரசாங்கம் என்ற படர்ந்து இருக்கும்
"ஷியா பிறைநிலாவை"
தன் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்கும் திறன் உடையது
என்று காண்கின்றன.
சுன்னி அரேபிய நாடுகள்,
துருக்கி மற்றும் இஸ்ரேல் ஆகியவையும் ஈரானை தனிமைப்படுத்தி,
குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இந்த விருப்பதைப் பகிர்ந்துள்ளன.
Stratfor
என்னும் தனியார் உளவுத்துறை நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக
அதிகாரியுமான ஜோர்ஜ் பிரிட்மன்,
ஈரானியச்
செல்வாக்கை எதிர்த்து நிற்பதற்கு சிறந்த இடம், "சிரியா.
சிரியாவில் முக்கியமாகச் செய்ய வேண்டியது,
அசாத் அகற்றப்படுவதற்கு அனைத்தும் செய்யப்பட வேண்டும்….
இதற்கு உகந்த தீர்வு சுன்னி எதிர்ப்பிற்கு இரகசிய ஆதரவை
லெபனான்,
ஒருவேளை துருக்கி மற்றும் ஜோர்டான் மூலம் அளிப்பதாகும்"
என்று குறிப்படுகிறார்.
"அசாத்தை
அகற்றுவது மிக முக்கியமனது.
அது விளையாட்டின் போக்கையும் வேகத்தையும் மாற்றிவிடும்."
என்று முடிக்கிறார்.
அசாத்திற்கு எதிரான இராணுவக் குறுக்கிட்டிற்கு மிக உகந்த தளம்
துருக்கியின் முன்னிலைத் திட்டமான எல்லையில் படரும் "இடைத்தடை
பகுதியை"
உருவாக்குவதுதான்.
பிரான்சின் ஆதரவைக் கொண்டு சுதந்திர சிரிய இராணுவம்
வரவிருக்கும் அதன் செயற்பாடுகளுக்கு பாலம் போட்டதுபோல் அத்தகைய "பறக்க
கூடாத பகுதி"
என்பதை நிறுவ வேண்டும் என்று கோரியுள்ளது.
Jerusalem Post
ல் எழுதிய அரசாங்க ஆலோசகர் ஜோனதன் ஸ்பெயர்,
அசாத்திற்கு எதிராக "சமநிலையைக் கொள்வது"
என்பதற்கு
"இன்னும் நேரடியான ஈடுபாடு தேவை."
"ஒரு இடைத்தடை பகுதி என்பது சிரிய எழுச்சியாளர்களுக்கு அசாத் ஆட்சிக்கு
எதிராக தங்களை அமைத்துக் கொள்ள,
சவாலைக் கட்டமைக்க உதவும்.
ஆனால் சிரிய-துருக்கிய
மோதல்களையும் அது ஏற்படுத்தக்கூடும்."
என்றார்.
சிரியாவில் ஒரு முழு உள்நாட்டுப் போர் என்பது பிராந்தியத்தில்
கொடூரப் போர் என்னும் ஆவியுருவை எழுப்புகிறது;
இதில் ஒரு பக்கம் ஈரான் மறுபக்கம் துருக்கி இன்னும் பல சுன்னி
நாடுகளும் இருக்கும்.
இதைப் பெரிய சக்திகள் பயன்படுத்தும்,
லிபியாவில் அவை செய்தது போல் நேரடிக் குறுக்கீடும் வரும்.
அத்தகைய ஆபத்தை,
அசாத்தையோ தெஹ்ரான்,
ரஷ்யா அல்லது சீனாவில் இருக்கும் அவருடைய ஆதரவாளர்களையோ
ஆதரிப்பதின் மூலம் தவிர்க்க முடியாது.
மாறாக அசாத் ஆட்சி அகற்றப்பட்டு ஒரு சோசலிச,
உண்மையான ஜனநாயக அரசாங்கம் அமைப்பதின் மூலம்தான் முடியும்;
அதற்கு தொழிலாள வர்க்கம் மத,
இன உணர்வுகள்
வேறுபாடுகளைக் கடந்து அடக்கப்பட்ட கிராமப்புற மக்களுடன்
ஐக்கியப்பட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடவேண்டும்.
இது வெறுமனே ஒரு தேசியப்பணி அல்ல.
சிரியாவின் விதி மத்திய கிழக்கு முழுவதும் வெளிப்பட்டுக்
கொண்டிருக்கும்,
எல்லாவற்றிற்கும் மேலாக எகிப்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்
நிகழ்வுடன்,
பிணைந்துள்ளது.
மேலைகத்தைய சக்திகளின் கணக்கீடுகள் அனைத்தும் தொழிலாள
வர்க்கத்தை அரசியல் வாழ்வில் இருந்து ஒதுக்குதல் என்ற
நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது;
அதைத்தவிர பல வட்டார அமைப்புக்கள்,
தேசிய அரசாங்கங்கள் மற்றும் முஸ்லிம் பிரதர்ஹுட் போன்ற அரசியல்
சக்திகளின் மேலாதிக்க பங்கும் நிறுவப்பட வேண்டும் என்றும்
உள்ளது.
இக்காரணத்தை ஒட்டி,
எகிப்தில் புரட்சிகரப் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது,
இது கெய்ரோவில் உள்ள அமெரிக்க ஆதரவு கொண்ட இராணுவ ஆட்சிக்குழுவிற்கு
அச்சுறுத்தல் என்பது மட்டுமின்றி,
லிபிய தேசிய
இடைக்காலக் குழுவின் மாதிரியில் வளைந்து கொடுக்கும் ஆட்சிகளை
எல்லா இடங்களிலும் நிறுவ வேண்டும் என்று கவனமாக இயற்றப்பட்ட
திட்டங்கள் அனைத்திற்கும் அச்சுறுத்தல் ஆகும்.
தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் வெகுஜன இயக்க
எழுச்சி முதலாளித்துவ,
குறுகிய குறுங்குழுவாத போக்குகளான பிரதர்ஹுட் போன்றவற்றின்
போலித்தனத்தை அம்பலப்படுத்த ஏற்கனவே உதவியுள்ளது.
அது இப்பிராந்தியித்தின் அனைத்து ஊழல் மிகுந்த முதலாளித்துவ
ஆட்சிகளையும் அகற்றுவதற்குத் தேவையான சூழ்நிலையை
தோற்றுவித்துள்ளது,
அதில்
வல்லாட்சி நடத்தும் வளைகுடா முடியாட்சிகளும் அடங்கும்
இதற்கு உலக சோசலிசப் புரட்சியை முன்னேற்றிச் செல்லும் ஒரு
புதிய தலைமையை உருவாக்குதல் தேவையாகும்;
மத்திய கிழக்கு முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்
பகுதிகள் கட்டமைக்கப்படுவதும் அவசியமாகும்.
பிராந்தியத்தின் பொருளாதாரத்தை சோசலிச மாற்றத்தின் மூலம்
கொண்டுவரும் பணியை இலக்காக கொண்ட தொழிலாளர் அரசாங்கங்கள்
நிறுவப்பட வேண்டும்;
அவை வெகுஜனங்களின் பொறுப்பில் அதன் பரந்த வளங்கள் அனைத்தையும்
கொண்டுவரும்.
இந்த மத்திய கிழக்கு,
வட ஆபிரிக்க ஐக்கிய சோசலிச அரசுகள் நிறுவப்படுவதற்கான போராட்டத்தில்,
அரபு,
பேர்சி,
குர்டிய,
யூதத் தொழிலாளர்களுக்கு முக்கிய நட்பு சக்தி அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் ஆகும்;
அவர்கள் ஏற்கனவே மத்திய கிழக்கில் நடக்கும் புரட்சிகர
நிகழ்வுகளினால் தங்கள் போராட்டங்களுக்கும் ஊக்கம் பெற்றுள்ளனர். |