World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Millions demand downfall of US-backed Egyptian junta

மில்லியன் கணக்கானவர்கள் அமெரிக்கா ஆதரவு பெற்ற எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவை அகற்றக் கோருகின்றனர்

By Johannes Stern
26 November 2011
Back to screen version

வெள்ளியன்று மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டு அமெரிக்க ஆதரவு பெற்ற ஆயுதப்படைகளின் தலைமைக் குழு (SCAF) அகற்றப்படுதலைக் கோரினர். கெய்ரோவில் நூறாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தஹ்ரிர் சதுக்கத்தில் கூடினர். பிற்பகல் தொடக்கத்தில் சதுக்கம் " பீல்ட் மார்ஷல் அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்", "நாங்கள் போகமாட்டோம், அவர்தான் போகவேண்டும்", "வீழ்க, இராணுவ ஆட்சி வீழ்க" என முழக்கமிட்ட எதிர்ப்பாளர்களால் நிறைந்திருந்தது.

நாள் முழுவதும் வெகுஜன ஆர்ப்பாட்ட அணிவகுப்புக்கள் தலைநகரின் பல இடங்களில் இருந்து புறப்பட்டு, அனைத்தும் தஹ்ரிர் சதுக்கத்தில் குழுமின. ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்ட அணிவகுப்பாளர்கள் தஹ்ரிர் செல்லும் வழியில் இருந்த பாராளுமன்ற வேட்பாளர்களின் பதாகைகளையும், சுவரொட்டிகளையும் கிழித்து எறிந்து, SCAF  விதிகளின் கீழ் பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தும் முடிவிற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, அரசியல் ஸ்தாபனம் முழுவதையும் முற்றிலும் கண்டித்தனர்.

எகிப்தில் அனைத்து முக்கிய நகரங்களிலும் நூறாயிரக்கணக்கான மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர். அலெக்சாந்திரியாவில் பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அல்-க்வெட் இப்ராஹிம் மசூதிக்கு முன்பு கூடி இராணுவ ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டு, சிடி கபெருக்கு அருகே இருக்கும் வடக்கு இராணுவப் பகுதியை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சூயசில் அர்பீன் சதுக்கத்தில் கூடினர். தன்டா, மகல்லா, குப்ரா, சோஹக், இஸ்மைலியா, டமன்ஹௌர், மேற்கு எகிப்திய நகரங்களான லக்சர், மின்யா மற்றும் அசால்ட் ஆகியவற்றிலும் சினாயிலும்  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடரும் எதிர்ப்புக்களில் ஏழாம் நாளுடையவை ஆகும். கடந்த சனிக்கிழமை இழிந்த மத்தியப் பாதுகாப்புப் படைகளான அம்ன் அல் மர்காசி வன்முறையைப் பயன்படுத்தி தஹ்ரிர் சதுக்கத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய ஒரு சிறு குழுவைத் தாக்கியதைத் தொடர்ந்து வெடித்தது. ஆயிக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் தெருக்களில் சேர்ந்து முபாரக்கின் தளபதிகளுக்கு எதிரான உள்ளிருப்பை ஆதரித்தனர். அவர்களோ சர்வாதிகாரியை அகற்றிய அதே சமூக விரோத, ஜனநாயக விரோதக் கொள்கைகளைத்தான் தொடர்கின்றனர். சனிக்கிழமையிலிருந்து இராணுவ ஆட்சிக்குழு மிருகத்தனமான வன்முறையை எதிர்ப்பாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து, குறைந்தபட்சம் 38 பேரைக் கொன்று சில ஆயிரம் எதிர்ப்பாளர்களையும் காயப்படுத்தியுள்ளது. இராணுவம், மற்றும் மத்தியப் பாதுகாப்புப் படையினர் ரப்பர் தோட்டாங்கள், பறவைத் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைத் தொகுப்புக்களை எதிர்ப்பாளர்கள்மீது பாவித்தனர். சமீபத்திய பிரேத பரிசோதனைச் சான்றுகள் குறைந்தபட்சம் 22 எதிர்ப்பாளர்கள் உண்மையான வெடிபொருட்கள் மூலம் சுடப்பட்டனர் என்பதைக் காட்டுகின்றன. எகிப்திய இராணுவம் அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கவச வாகனங்களையும் பயன்படுத்துகிறது என்பதற்கான சான்றுகளும் அதிகரித்துள்ளன.

 

டாங்குகள் எதிர்ப்பாளர்களை சூயஸின் மேற்குக் கரையிலுள்ள தொழில் நகரான இஸ்மைலியா தெருக்களிலும் துரத்தி அடித்துள்ளதை ஒரு யூரியூப் வீடியோ காட்டுகிறது.

இத்தாக்குதல் எகிப்திய இராணுவத்திற்கு முக்கிய ஆதரவை அளிக்கும் வாஷிங்டனால் நெருக்கமாக மேற்பார்வையிடப்படுகிறது; எகிப்தியத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள்அமெரிக்கத் தயாரிப்பு என்ற முத்திரையைக் கொண்டுள்ளன. இராணுவ ஆட்சிக் குழுத்தலைவரும், நடைமுறைச் சர்வாதிகாரியுமான மஹ்மத் ஹுசைன் தந்தவியின் செவ்வாய் பேச்சுக்குப் பின்னர், அமெரிக்க வெளிவிவகார அலுவலகம் இழிவான முறையில் இராணுவ ஆட்சி பயன்படுத்தும்கூடுதலான வன்முறை குறித்துக் குறைகூறியது; ஆனால் எகிப்தின் இராணுவத் தலைவர்கள் தேர்தல் நடத்துவது குறித்த உறுதிமொழிகள் மற்றும் ஜூலைக்குள் சிவிலிய மக்களுக்கு அதிகாரத்தை மாற்றுவது குறித்த உறுதிமொழிகளையும் பாராட்டியுள்ளது.

அமெரிக்க மற்றும் எகிப்திய முதலாளித்துவத்தினரைப் பொறுத்தவரை, பணயம் அதிகமாக உள்ளது. எகிப்திலுள்ள நிலைமை ஜனவரி 25 அன்று தொடங்கிய புரட்சிக்காலத்தில் இருந்து மிக வெடிப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. முபாரக்கிற்குப் பதிலாக வந்துள்ள இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்எகிப்திய அரசாங்கத்தின் முதுகெலும்பான இராணுவத்திற்கு எதிராகத் திரும்பியுள்ளனர்; இராணுவமோ எகிப்திய முதலாளித்துவத்தையும் பிராந்தியம் முழுவதுமுள்ள ஏகாதிபத்தியத்தின் நலன்களையும்தான் பாதுகாக்கிறது.

இராணுவ ஆட்சிக்குழுவும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் SCAF அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். வியாழனன்று கெய்ரோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில், தளபதி மொக்டர் அல் மோலாவும் தளபதி மம்டௌ ஷாகின்னும் இது மக்கள் நம்பிக்கையைக்காட்டிக் கொடுப்பதாகும் என்று வலியுறுத்தி, அவர்கள்கோஷமிடும் கூட்டத்தினால் அகற்றப்பட முடியாது என்றும் கூறினர்.

நாட்டின் மிகப் பெரிய அரசியல் குழுவான இஸ்லாமியவாத முஸ்லிம் பிரதர்ஹுட் (MB) வெள்ளியன்று பிரார்த்தனைகளின்போது தேர்தல்களை ஆதரித்து துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தது. MB எதிர்ப்புக்களில் பங்குபெறவில்லை, ஆனால் அதன் தனி எதிர்ப்பை அல் அஷர் மசூதிக்கு முன் நடத்தியது.

ஏராளமான எதிர்ப்பாளர்களின் பார்வையில் MB  ஆழ்ந்த குறைமதிப்பைத்தான் கொண்டுள்ளது. திங்களன்று அதன் தலைவர்களில் ஒருவரான மஹ்மத் எல்பெல்லகி, எதிர்ப்பாளர்களைச் சமாதானப்படுத்துவதற்காக தஹ்ரிர் சதுக்கத்தில் நுழைய முற்பட்டபோது, அங்கிருந்து அகற்றப்பட்டார். சமீபத்திய மாதங்களில் MB நெருக்கமான பிணைப்புக்களை அமெரிக்காவுடனும், இராணுவ ஆட்சியுடனும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது என்பதுடன் புரட்சியை நிறுத்துவதற்கு அவர்களுடன் நெருக்கமாகவும் ஒத்துழைக்கிறது.

இந்த நோக்கத்தை அடைவதற்காக, எகிப்திய ஆளும் உயரடுக்கு ஒரு இரட்டை மூலோபாயத்தைப் பயன்படுத்துகிறது. ஒருபுறம், எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது. மறுபுறமோ, SCAF பேஸ்புக்கில் இழிந்த மன்னிப்பு ஒன்றை வெளியிட்டது –“எகிப்தில் உள்ள தியாகிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் என்று கூறப்பட்டுள்ளது; இது நிலைமையை உறுதிப்படுத்தும் முயற்சியாகும். வியாழனன்று எகிப்திய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி சமி அனன் ஒரு அவசரக் கூட்டத்தில் பல அரசியல் சக்திகளையும் சந்தித்தார். SCAF ஆனது மகம்மத் எல்பரடேயை தேசியப் புனருத்தாரண அரசாங்கம் என அழைக்கப்படுவதை நிறுவுவதற்குக் கேட்டுக் கொண்டது என்றும் தகவல்கள் வந்துள்ளன.

வியாழனன்று கமல் எல்-கான்ஜௌரி பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டார், புதிய அரசாங்கம் அமைப்பதற்குப் பொறுப்புக் கொடுக்கப்பட்டார். முன்னாள் முபாரக் ஆட்சி அதிகாரியான கான்ஜௌரி பிரதம மந்திரியாக 1996-99ல் பணிபுரிந்துள்ளார். அவருடைய அமைச்சரவை தடையற்ற சந்தைக் கொள்கைகளுக்கு ஆதரவைக் கொடுத்தது; அதன் உறுப்பினர்கள் பலர் இப்பொழுது சிறையில் உள்ளனர் வெறுக்கப்படும் முன்னாள் உள்துறை மந்திரி ஹபிப் எல் அட்லியைப் போலவே.

வெள்ளியன்று கான்ஜௌரி நியமனத்திற்குப் பின் முதல் செய்தியாளர் கூட்டத்தில் பேசி, புதிய அமைச்சரவை முந்தையதைவிட அதிகம் மாறுபட்டிருக்காது என்று குறிப்பிட்டார்; இதில் முன்னாள் காபினெட் உறுப்பினர்களும், அவருக்கு முன் பதவியில் இருந்த எசம் ஷரப்பும் கூட அடங்கியிருப்பர். “இந்த அமைச்சர்கள் சிலரைத் தக்கவைத்துக் கொள்ளுவதில் நான் தீவிரமாக உள்ளேன்; அதைத்தவிர, ஒரு சில புதிய நபர்களும் இருப்பர் என்று கான்ஜௌரி கூறினார்.

கான்ஜௌரி தன்னுடைய உரையில் தனக்கு முன்பு இருந்தவர்களைவிடத் தனக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தினார். “எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இதேபோன்ற முந்தைய நியமனங்களைவிட அதிகமாக இருக்கும். நாட்டிற்குப் பணிபுரிவதற்காக நான் முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொள்வேன்.”

இராணுவ ஆட்சியும் புதிய பிரதம மந்திரியும் தேர்தல்களை நடத்துவதற்கு இன்னும் கூடுதலான வன்முறையை எதிர்ப்பாளர்கள்மீது கையாள்வதற்கான தயாரிப்புக்களைக் கொண்டுள்ளனர் என்பதின் அடையாளம்தான் இது.

தஹ்ரிர் சதுக்கத்தில் இருக்கும் தொழிலாளர்களும் இளைஞர்களும் இராணுவ ஆட்சியின் இந்தச் சமீபத்திய உத்தியை நிராகரித்து, கான்ஜௌரியின் பேச்சுக்குப் பின்னர்நெறியற்றது, நெறியற்றது என்று கோஷமிட்டனர். கிட்டத்தட்ட 2,000 எதிர்ப்பாளர்கள் உடனடியாக காபினெட் கட்டிடத்திற்கு முன் உட்காரும் போராட்டத்தைத் தொடக்கி கான்ஜௌரி அங்கு நுழையாமல் தடுக்க முற்பட்டனர்.

 

எதிர்ப்பாளர் மஹ்மத் எல்-பயோமி AP இடம் கூறினார்: “முபாரக்கின்கீழ் அவர் பிரதம மந்திரியாக இருந்தார் என்பது மட்டுமில்லாமல், மொத்தம் 18 ஆண்டுகள் பழைய ஆட்சியின் பகுதியாகவும் இருந்தார். அப்படியானால் நாம் ஏன் புரட்சியை நடத்தினோம்?”. மற்றொருவர், “புரட்சி மீண்டும் கடத்தப்பட்டுவிட்டது. மறுமுறை இவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்ளுவோம் என்று சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தன்னுடைய முழு ஆதரவை புதிய அரசாங்கத்திற்கும் SCAF கட்டுப்பாட்டின்கீழ் நடக்கும் தேர்தல்களுக்கும் அறிவித்து, “புதிய எகிப்திய அரசாங்கத்திற்கு உடனடியாக உண்மையான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலுவாக நம்புகிறது…..ஜனநாயகத்திற்கான மாற்றத்தை எகிப்து தொடரவேண்டும், தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மிரட்டலைத் தடுக்கவும் எடுக்கப்பட வேண்டும்.”

இராணுவ ஆட்சிக்குழு, அமெரிக்கா, எகிப்திய முதலாளித்துவத்தின் பெரும் பிரிவுகள் ஆகியவற்றின் நோக்கம் எப்படியும் திட்டமிட்டபடி நவம்பர் 28ம் திகதி தேர்தல்களை நடத்திவிட வேண்டும் என்பதாகும். இந்தத் தேர்தல்கள் முன்னாள் முபாரக் ஆட்சியின் வாரிசாக இருக்கும் அரச கருவியை நெறிப்படுத்த உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர்; மேலும் எகிப்திய ஆளும் வர்க்கத்தின் செல்வம், உடைமைகளைப் பாதுகாக்கும் மற்றும் எகிப்திலுள்ள ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கும் இது என்றும் நம்பப்படுகிறது.

 “அனைத்துத் தேவையான நடவடிக்கைகளும் தேர்தல்களை நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டும் என்னும் வெள்ளை மாளிகையின் கோரிக்கை இராணுவ ஆட்சியும் புதிய அரசாங்கமும் திங்களன்று நடக்க இருக்கும் தேர்தல்களுக்கு முன் எதிர்ப்புக்கள் அடங்கவில்லை என்றால் அவற்றிற்கு எதிராகப் பெரிய அளவில் வன்முறை பயன்படுத்தப்படலாம் என்பதற்குக் கொடுக்கப்படும் தடையற்ற அனுமதிதான்.

எகிப்திய புரட்சி மீண்டும் ஒரு திருப்புமுனையில் உள்ளது. தொழிலாளர்களும் இளைஞர்களும் இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் நடக்கும் தேர்தல்கள் ஒரு கேலிக்கூத்து என்பதை உணர வேண்டும்; எந்ததேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் பெரும் பிற்போக்குத்தனத்தை கொண்டிருக்கும், SCAF மற்றும் அமெரிக்காவினால் கட்டுப்படுத்தப்படும் என்பதை உணர வேண்டும். வெள்ளியன்று நடைபெற்ற வெகுஜன எதிர்ப்புக்கள் மீண்டும் எகிப்திய வெகுஜனங்கள் புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் இராணுவ ஆட்சியை வீழ்த்த விரும்புகின்றனர் என்பதைக் காட்டுகிறது. ஆனால் இப்போராட்டங்கள் வெற்றிபெறுவதற்கு ஒரு புதிய மற்றும் சோசலிச முன்னோக்கு தேவைப்படுகிறது.

கடந்த 10 மாதங்களின் மொத்த அனுபவமும் எகிப்தியத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு காட்டப்படுவது ஒன்றுதான் ஒரு அரசாங்கம்அதாவது ஒரு தொழிலாளர் அரசாங்கம்தான் அதுதான் வெகுஜனங்களின் சமூக, ஜனநாயக விழைவுகளைச் சாதிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. அத்தகைய அரசாங்கம் சமூகத்தை ஒரு சோசலிச அடிப்படையில் மறுசீரமைப்பதற்குப் போராட்டம் நடத்துவதற்கு, தொழிலாளர்களும் இளைஞர்களும் அரச அதிகாரத்திற்கான தங்களுடைய சுயாதீன அமைப்புக்களை கட்டமைக்க வேண்டும். இராணுவ ஆட்சி மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அரச கருவியை அவர்கள் இதற்காக நம்பக்கூடாது, நம்பவும் தேவையில்லை.

அத்தகைய போராட்டத்திற்கு மிக ஆபத்தான எதிரிகள் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS), ஜனநாயகத் தொழிலாளர் கட்சி அல்லது சோசலிஸ்ட் மக்கள் கூட்டணிக் கட்சி போன்றஇடது எனப்படும் எதிர்ப்புக் குழுக்கள்தாம். இக்குழுக்கள் வெள்ளி எதிர்ப்புக்களில் ஒரு சோசலிச முன்னோக்கின் தேவைக்காகப் பங்குபற்றவில்லை, தொழிலாள வர்க்கத்தை அரசியல் அளவில் நிராயுதபாணியாக்கி, அதை முதலாளித்துவத்தின் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றிற்கு தாழ்த்தி, அதையொட்டி இராணுவ ஆட்சிக் குழுவிற்கு தாழ்த்தவும்தான் பங்குபெற்றன.

வியாழனன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் RS “சிவிலிய புரட்சிகர ஆட்சிக்கு உடனடியாக அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும்….புரட்சியாளர்களை கொன்றதை ஏற்ற கட்சிகள், அரசியல் சக்திகள் ஆகியவற்றுடன் இது அமரக்கூடாது என்று கூறியுள்ளது. இதுவும் அவ்வளவு நம்பகத்தன்மை கொண்டிருக்கவில்லை; ஏனெனில் பல பிரிவுகள் இராணுவ ஆட்சியுடன்அமர்வதை ஏற்கின்றன. செவ்வாய் இரவு எகிப்திய சமூக ஜனநாயகக் கட்சியின் அபு எல்-கார் “SCAF உடன் நடந்த கூட்டத்தில் பங்கு பெற்றதற்கு உண்மையில் வருந்துகிறேன் என்னும் அறிக்கையை வெளியிடும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.

 

அவர்களுடைய வலைத் தளத்தில் வந்துள்ள மற்றொரு அறிக்கைபுரட்சிகர அரசாங்கம் அமைத்திட வேண்டும் [….], அது இடைக்காலத்தை நிர்வகிக்கவும், ஒரு தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக அரசாங்கத்திற்கு அதிகாரம் மாற்றப்படுவதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்கவும் தேவை என்று அழைப்புவிடுத்துள்ளது. அல் அஹ்ரம் கருத்துப்படி, புரட்சிர இயக்கங்களின் பிரதிநிதிகள் வெள்ளி மாலை மஹ்மத் எல்பரடெய் பெயரை கசர் எல் ஐனி தெருவிலுள்ள காபினெட் அலுவலகங்களில் ஓர் தேசிய புனருத்தாரண மந்திரிசபை கொண்ட அரசாங்கத்தின் தலைவராக முன்வைத்தனர். அவர்கள் எல்பரடேயின் மந்திரிசபையில் நசரத் கரமாக் கட்சியின் தலைவர் ஹம்தீன் சபஹி, அவர்கள் எல்பரடேயின் மந்திரிசபையில் நசரத் கரமாக் கட்சியின் தலைவர் ஹம்தீன் சபஹி, MB யின் வழிகாட்டும் குழுவின் முன்னாள் உறுப்பினர் அப்டெல் மோநீம் அபௌல் புட்டௌ ஆகியோரும் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இவர்கள் அனைவருமே அனுபவம் மிக்க முதலாளித்துவ அரசியல்வாதிகள், ஜனாதிபதி வேட்பாளர்களாக தங்களை அறிவித்துக் கொண்டவர்கள், சமீபத்திய மாதங்களில் இராணுவ ஆட்சியுடன் நெருக்கமாக ஒத்துழைத்தவர்கள். இத்தகைய அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவர ஆட்சிக்குழு விரும்பினால், அது எகிப்திய ஆளும் உயரடுக்கின் நலன்களைப் பாதுகாத்து இப்பொழுது இராணுவ ஆட்சியும் செய்யத்துணியாத அளவிற்கு இரக்கமற்ற முறையில் எதிர்ப்புக்களையும் வேலைநிறுத்தங்களையும் நசுக்கும்.