WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
அமெரிக்க ஆதரவைக் கொண்ட எகிப்திய இராணுவ
ஆட்சிக்குழுவை அகற்ற
மில்லியன் கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
By Johannes Stern
23 November 2011
use this version to print | Send
feedback
செவ்வாயன்று மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும்
எகிப்து முழுவதும் எதிர்ப்புக்களையும் வேலைநிறுத்தங்களையும்
நடத்தி,
பீல்ட் மார்ஷல் மஹ்மத் ஹுசைன் தந்தவி மற்றும் அமெரிக்க ஆதரவு
பெற்ற இராணுவ ஆட்சி சரிய வேண்டும் என்று கோரினர்.
கெய்ரோவில் வெகுஜன ஆர்ப்பாட்டக்காரர்கள் தஹ்ரிர்
சதுக்கத்திற்கு கெய்ரோ மற்றும் அயன் ஷம்ஸ் பல்கலைக்கழகங்கள்,
தொழிலாள வர்க்கப் பகுதிகளான
Shubra,
Sayda Zeinab
மற்றும் தலைநகரில் பல பகுதிகளில்
இருந்து சென்றனர்.
அணிவகுப்பாளர்கள்
SCAF
என்னும் ஆயுதப் படைகளின் தலைமைக் குழுவிற்கு எதிராகவும்
முஸ்லிம்கள் காப்டுக்களுக்கு இடையே
ஐக்கியத்திற்கு
ஆதரவாகவும் கோஷமிட்டுச் சென்றனர்.
நேற்று மாலை முன்னதாக தஹ்ரிர் சதுக்கம் நூறாயிரக்கணக்கான
எதிர்ப்பாளர்களைக் கொண்டு நிறைந்திருந்தது.
அலெகசாந்திராயவில் நூறாயிரம் பேருக்கும் மேலானவர்கள் அல்க்வெட்
இப்ராஹிம் மசூதிக்கு முன்னே கூடி,
வடக்கு மாநில இராணுவக் கட்டுப்பாடு,
பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றை நோக்கிச் சென்றனர்.
சூயசில் பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அர்பயீன்
சதுக்கத்தில் கூடினர்;
இது இறுதியில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை பதவியில் இருந்து
வெளியேறக் கட்டாயப்படுத்திய ஜனவரி
25
எதிர்ப்புக்களின் முக்கிய மையங்களில் ஒன்றாகும்.
மற்ற அணிவகுப்புக்கள் எகிப்து முழுவதும் முக்கிய நகரங்களில்
நடைபெற்றது;
அவற்றுள்
Mansoura, Ismailia, Qena, Beni-Soueif, Al-Sharqiya, Al-Wadi
Al-Gadid, al-Minya
மற்றும்
Assiut.
ஆகியவையும் அடங்கும்.
அமைதியான எதிர்ப்புக்கள்,
இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளால் தொடர்ந்த வன்முறையை
எதிர்கொண்டன.
இவை மிருகத்தனமாக வன்முறையை சனிக்கிழமைக் காலையில் இருந்து
கட்டவிழத்துவிட்டுள்ளன;
டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்,
ஆயிரக்கணக்கானவர்கள்
காயமுற்றுள்ளனர்.
எதிர்ப்பாளர்கள் தஹ்ரிர் சதுக்கத்தில் கொல்லப்பட்ட
எதிர்ப்பாளர் ஒருவரின் சவப்பெட்டியைச் சுமந்து சென்றிருந்தனர்.
மூன்று அமெரிக்க மாணவர்கள் எதிர்ப்புக்களில் இராணுவ ஆட்சிக்கு
எதிராக பங்கு பெற்றபோது எகிப்தியப் படைகளால் கைது
செய்யப்பட்டனர்.
பொலிசார் மீது
Molotov cocktails
ஐ வீசியதாக அவர்கள்மீது
எகிப்திய அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
நீண்டக்கால சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை அகற்றிய
எதிர்ப்புக்கள் வேலைநிறுத்தங்கள் அதிகம் இருந்த புரட்சியின்
ஆரம்ப காலத்திற்குப் பின் எகிப்தில் நிலைமை மிகவும் வெடிப்புத்
தன்மை வாய்ந்ததாக உள்ளது.
முபாரக்கிற்குப் பின் வந்த இராணுவ ஆட்சி,
அவருடைய சமூக விரோத,
ஜனநாயக விரோதக் கொள்கைகளைத் தொடர்கையில் அது மாற்றப்பட
வேண்டும் என்று வெகுஜனங்கள் கோருகின்றனர்.
புதுப்பிக்கப்பட்டுள்ள எழுச்சியை முகங்கொடுக்கையில்,
எகிப்திய ஆளும் வர்க்கமும்
அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் ஜனவரி,
பெப்ருவரியில் காட்டிய பீதியைவிட அதிகமாகக் காட்டுகின்றனர்.
இராணுவத்தைத்தான் அரசாங்கத்தின் முதுகெலும்பாக அவர்கள்
காண்கின்றனர்.
அதுதான் எகிப்திய முதலாளித்துவத்தையும் முழுப்
பிராந்தியத்திலும் ஏகாதிபத்தியத்தின் நலன்களைக் பாதுகாக்கும்
என்று கருதுகின்றனர்.
ஜனவரி மாதம் அமெரிக்கா இயன்றளவு முபாரக்கை ஆதரித்தது போலவே,
இப்பொழுதும் அது முபாரக்கின்
SCAF
தளபதிகளை ஆதரிக்கிறது.
எகிப்திய இராணுவத்திற்கு முக்கிய ஆதரவை வாஷிங்டன் கொடுக்கிறது,
எதிர்ப்பாளர்களைக் கொன்று காயப்படுத்தும் வெடிப்பொருட்கள்
பெருமளவில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை.
"அனைத்துப்
புறமும் நிதானத்தைக் கைப்பிடிக்க வேண்டும்"
என்று ஒபாமா
நிர்வாகம் அழைப்புவிடுகிறது,
ஆனால் திரைக்குப்பின்னால் அது எதிர்ப்புக்களை கண்காணித்து
இராணுவக் குழுவின் வன்முறைக்கும் ஆதரவைக் கொடுக்கிறது.
அமெரிக்காவைப் போலவே உத்தியோகபூர்வ எகிப்திய அரசியல் கட்சிகள்--இஸ்லாமியவாதிகள்,
தாராளவாதிகள் அல்லது குட்டிமுதலாளித்துவ "இடது"
என எப்படி இருந்தாலும்--புரட்சிகரப்
போராட்டத்தின் மூலம் இராணுவ ஆட்சி கவிழந்துவிடக்கூடும் என்பது
குறித்து பெரும் அச்சம் கொண்டுள்ளன.
அவர்களுடைய நோக்கம் எதிர்ப்புக்களைக் கட்டுப்பாட்டின்கீழ்
கொண்டுவந்து,
வாஷிங்டன் ஆதரவிற்கு உட்பட்ட தளபதிகள் நடத்தும் "ஜனநாயகத்திற்கான
மாற்றுக்கால"
அரசாங்கத்தை தொடர வேண்டும் என்பதுதான்.
MB
எனப்படும் இஸ்லாமிய முஸ்லிம் பிரதர்ஹுட் திங்களன்று
"இன்னும்
கூடுதலான எதிர்ப்பு மோதல்களையும் நெரிசல்களையும்தான்"
ஏற்படுத்தும் என்று திங்களன்று பங்கு பெறுவோரை எதிர்த்து,
ஓர் அறிக்கையை வெளியிட்டது.
ஏப்ரல்
6
இயக்கம்,
ஜனநாயகத் தொழிலாளர்கள் கட்சி,
புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் ஆகிய மற்ற குழுக்கள்
எதிர்ப்புக்களை ஆதரிப்பதாகக் கூறுகின்றனர்.
ஆனால் சதுக்கத்தின் அரங்குகளில் காணக்கூடிய அளவிற்குக் கட்சி
அடையாளங்கள் ஏதும் இல்லை.
பல மாதங்கள் இராணுவ ஆட்சியுடன் ஒத்துழைத்தபின்,
முழு அரசியல் நடைமுறையும்
மக்களிடம் இருந்து ஆழ்ந்த நம்பிக்கை இன்மையை எதிர்கொள்கின்றன.
குறிப்பிடத்தக்க வகையில்
MB
யில் ஒரு முக்கிய நபராகிய மஹ்மத் எல்பெல்டகி தஹ்ரிர்
சதுக்கத்தில் இருந்து திங்கள் இரவு நுழைய முற்பட்டபோது
அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
எதிர்ப்புக்கள் வெளிப்பட்டதில் இருந்து இராணுவ ஆட்சிக்குழுவும்
அரசியல் தலைவர்களும் பெரும் திகைப்புடன் நிலைமையைக்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தந்திரங்களை செய்கின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி வேட்பாளரும் தாராளவாத எதிர்ப்பின்
தலைவர்களுள் ஒருவருமான எல்பரடேய் ஒரு
"தேசிய
புனருத்தாரண அரசாங்கம்
அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முனவைத்தார்; "நாடு
சிதைந்துக் கொண்டிருக்கிறது"
என்றும்
எச்சரித்தார்.
அவருடைய அழைப்பிற்கு
37
அரசியல் குழுக்களின் ஆதரவு கிடைத்துள்ளது:
இதில் ஏப்ரல்
6
இயக்கம்,
ஜனவரி 25
புரட்சிகர இளைஞர் கூட்டணி மற்றும் பல இஸ்லாமியக்
குழுக்களும் அடங்கும்.
திங்கள் மாலை,
முபாரக்கின் கீழ் முன்னாள் மந்திரியாக இருந்த,
தற்பொழுதைய பிரதம மந்திரி
எசம் ஷரப்பின் தலைமையிலுள்ள இடைக்கால அரசாங்கம் இராஜிநாமா
செய்தது.
செவ்வாய் அதிகாலை
SCAF
ஓர் அறிக்கையை வெளியிட்டு,
"அவசரக்கால
உரையாடல் ஒன்றிற்கு அனைத்து அரசியல்,
தேசிய சக்திகளுக்கு தற்பொழுதைய நெருக்கடிக்குப் பின் உள்ள
துயரப் பின்னணியை ஆராயுமாறும் விரைவில் நெருக்கடியைத்
தீர்க்குமாறும்"
அழைப்பு விடுத்துள்ளது.
முன்மொழியப்பட்ட அவசரக்கால கூட்டத்திற்கு,
செவ்வாய் பிற்பகல்
பின்பகுதியில் அரசியல் கட்சிகள்,
எகிப்திய இராணுவத்தின் தலைவரும்
SCAF
உறுப்பனருமான தளபதி சமி அனன் உடன் சென்றன.
பாராளுமன்றத் தேர்த்லகள்
திட்டமிட்டபடி நவம்பர்
28
நடத்தப்படலாம் என்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் ஜூன் 2012ல்
நடத்தப்படலாம் என்றும் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
ஒரு
"தேசிய
புனருத்தாரண"
ஒற்றுமை அரசாங்கம் என்பது அமைக்கப்படலாம் என்றும்
முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல் இராணுவப் படைகள் மீண்டும் முகாமிற்குச் செல்லலாமா
வேண்டாமா என்பது பற்றி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
என்றும் முடிவெடுக்கப்பட்டது. SCAF
எல்பரடேயை
"தேசிப்
புனருத்தாரண"
அரசாங்கத்திற்குத் தலைமைதாங்க அணுகியுள்ளது.
இரவு
8
மணிக்குச் சற்று முன்னதாக பீல்ட் மார்ஷல் மஹம்த் ஹுசைன் தந்தவி
அரசாங்கத் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டிற்கு உரையாற்றினார்.
அரசியல் கட்சிகளுக்கும் அனனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள
உடன்பாடுகள் குறித்து அவர் பேசி,
பின்னர்,
"இராணுவம்
எகிப்திய மக்களுக்கு எதிராக ஒருபோதும் செயல்படாது", "ஒரு
எகிப்தியக் குடிமகன்மீது ஒரு தோட்டாவைக்கூட இராணுவம்
சுட்டதில்லை"
என்றார்.
ஆனால் தந்தவி உரை நிகழ்த்திவருகையிலேயே,
பாதுகாப்புப் படைகள் கெய்ரோ,
அலெக்சாந்திரியா,
சூயஸ்,
இஸ்மைலியா,
மன்சௌரா,
இன்னும் எகிப்து முழுவதும் பல நகரங்களில் எதிர்ப்பாளர்களைத்
தாக்கிக் கொன்று கொண்டிருந்தனர்.
இதன் பின்
"கடந்த
சில மாதங்களாக அதன் புகழையும் நாட்டுப்பற்றையும் குலைக்கும் பல
நடவடிக்கைகளை இராணுவம் பொறுமையுடன் பார்த்துச் செயல்படுகிறது"
என்று தந்தவி
அச்சுறுத்தினார்;
இது இராணுவ ஆட்சி தேவையானால் பொதுமக்களை அடக்குவதற்கு இன்னும்
வன்முறையைப் பயன்படுத்தும் என்பதைத் தெளிவாக்கிற்று.
உரையின் முடிவில் அவர்
"ஆழ்ந்த
பொருளாதார நெருக்கடி பற்றி எச்சரித்து"
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்ப்புக்களினால் நாட்டை விட்டு
நீங்கி வருகின்றனர் என எச்சரித்தார்.
அவர் தன் உரையை முடித்தபின்,
நூறாயிரக்கணக்கான மக்கள்
"நீங்குக,
நீங்குக"
என்று கோஷமிட்டனர்;
அதேபோல் தந்தவி அகற்றப்படுவதற்கும் இராணுவ ஆட்சி
வீழ்த்தப்படுவதற்குமான கோஷங்கள் எழுந்தன.
பெப்ருவரி மாதம் முபாரக் பதவியை விட்டு விலக மறுத்தபோது நடந்த
காட்சிகளைப் போல் மக்கள் இகழ்ச்சியுடன் காலணிகளை அடித்து, "நீங்கள் நீங்க வேண்டும்.
நாங்கள் போக மாட்டோம்"
என்றும்
"கோழை
தந்தவியே,
தைரியம் இருந்தால் சதுக்கத்திற்கு வா"
என்றும் கூவினர்.
அவருடை உரைக்குப்பின்,
அமெரிக்க வெளியுறவுச் செயலகம் செய்தித் தொடர்பாளர் விக்டோரிய
நியூலாந்து அமெரிக்க இராணுவ ஆட்சிக்கு உறுதியான ஆதரவைத்
தருகிறது என்பதைத் தெளிவாக்கினார்.
எகிப்திய பொலிஸ்
"கூடுதான
வன்முறையை"
பயன்படுத்துவது குறித்து அவர் குறைகூறினார்.
அதன்பின் எகிப்திய இராணுவத்
தலைவர்களை தேர்தல்கள் நடந்த உறுதி மொழி கொடுத்ததற்கும்,
ஜூலை மாதத்திற்குள்
குடிமக்களுக்கு அதிகாரம் கொடுக்க இருப்பதற்கும் பாராட்டினார்.
எகிப்திய முதலாளித்துவத்தைப் போலவே,
அமெரிக்காவும் தேர்தல்கள் நடத்துவதில் தீவிரமாக உள்ளது;
ஏனெனில் முன்னாள் முபாரக் ஹுசைன் ஆட்சியின் அரசாங்கக் கருவியை
நெறிப்படுத்த தேர்தல்களை அது பயன்படுத்திக் கொள்ளும்.
எகிப்திய மக்களிடையே தேர்தல் வழிவகை ஒரு கேலிக்கூத்து என்று
சரியாக உணரப்படுகிறது.
தந்தவியின் உரைக்குப் பின் தொழிலாளர்களும் இளைஞர்களும்
அலெக்சாந்திரியா,
சூயஸ் இன்னும் பிற நகரங்களில் பொலிஸ் தலைமையகத்தை நோக்கியும்,
கெய்ரோவில் உள்துறை அமைச்சரகத்தை நோக்கியும் அணிவகுத்துச்
சென்றனர்--இரணுவ
ஆட்சியை வீழ்த்துவது என்றும் உறுதிப்பாட்டைத் தாங்கள்
தொடர்வோம் என்பதைத் தெளிவாக்கும் வகையில்.
இப்போராட்டத்தில் வெற்றி அடைவதற்கு,
எகிப்தியத்
தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு புதிய அரசியல்
முன்னோக்கு தேவையாகும்.
எகிப்திய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கிய பணி
புரட்சிகரப் போராட்டத்திற்காக சுயாதீனமான தங்கள்
அமைப்புக்களைக் கட்டமைத்தல்,
சர்வதேச சோசலிச முன்னோக்கைத் தளமாகக் கொண்ட ஒரு புரட்சிகரத்
தலைமையை கட்டமைத்தல் என்பதாகும்.
இது ஒன்றுதான் இராணுவ ஆட்சியை வீழ்த்தும் வழிவகையாகும்.
மக்களுடைய ஜனநாய,
சமூக விழைவுகளை சோசலிச அரசியல் அடிப்படையில் தீர்ப்பதற்குப்
போராட்டம் நடத்துதல்.
இப்பொழுது இராணுவ ஆட்சி மற்றும் அதன் அரசியல் ஆதரவாளர்கள்
தயாரிக்கும் பொறி,
எல்பரடேய் முன்வைத்த தேசிய புனருத்தாரண"
அரசாங்கம் என்று
அழைக்கப்படுவது,
பெரிதும் மற்ற அரசியில் கட்சிகள்,
இராணுவ ஆட்சிக்குழுவினரால்
ஒப்புக் கொள்ளப்பட்டதாகும்.
அத்தகைய அரசாங்கத்தின் பணி மக்கள் எதிர்ப்பைக் குறைக்கும்
வகையில் தளபதிகளுக்கு ஒரு போலி ஜனநாயத் திரையைக் கொடுப்பதாகும்;
அதன் பின் ஆளும் வர்க்கம் இராணுவ ஆட்சியின் கொள்களைகளுக்கு
ஆளும் வர்க்கத்தை அனுமதிக்க எஞ்சியுள்ள எதிர்ப்புக்களையும்
வேலைநிறுத்தங்களையும் நசுக்குவதாகும்--உயர்மட்டத்தில்
ஒருவேளை வேறு அரசியில் வாதிகள் வரலாம்.
ஒரு
"தேசியப்
புனருத்தாரண"
ஆட்சி என்பதை,
தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் முற்போக்கானது என்று கூறி
விற்கும் முக்கிய பங்கு,
குட்டி முதலாளித்துவப் போலி இடது குழுக்களிடம் செல்கிறது;
அவைதான் தவறாக தங்களைப்
புரட்சிகர,
ஏன் சோசலிஸ்ட் என்று கூடக் காட்டிக் கொள்ளுபவை.
ஜனநாயகத் தொழிலாளர்கள் கட்சி
--RS
ஆல் கட்டமைக்கப்பட்ட முதலாளித்துவ சார்பு கட்சி--
ஷரப் அராசங்கம் நீக்கப்பட வேண்டும் என்று கூறி அறிக்கை ஒன்றை
வெளியிட்டது.
மேலும்
"மாற்றுக்காலத்தை
நிர்வகிப்பதற்குப் புரட்சிகர அரசாங்கம் தேவை"
என்று கூறப்பட்டுள்ளது;
"அதற்கு
அரசியல் நிர்வாகம்,
சட்டமியற்றுதல்,
ஊழலை அகற்றுதல்,
முபாரக்கின் ஆகியவற்றில் தேவையான அதிகாரங்கள் வேண்டும்,
முபாரக் ஆட்சியில் இருந்து
எஞ்சியவர்கள் அகற்றப்பட வேண்டும்,
ஜனநாயக வழிவகைக்கு நாட்டைத் தயாரிக்க வேண்டும்"
என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது இராணுவ ஆட்சிக்கும் பல அரசியல் கட்சிகளுக்கும் இடையே
அரசாங்கம்
"தேசியப்
புனருத்தாரணத்திற்காக"
அமைப்பதற்கு ஒரு போலி
"இடது"
மறைப்பு என்பதைத்தவிர வேறு ஏதும் இல்லை.
ஜனநாயத் தொழிலாளர்கள் கட்சி
மற்றும்
RS
ஐப் பொறுத்தவரை,
"புரட்சிகர
அரசாங்கம்"
என்பது தொழிலாளர்களுடைய அரசாங்கம் அல்ல.
மாறாக இதில் பல
முதலாளித்துவக் குழுக்கள்,
எல்பரடேயின் ஆதரவாளர்கள்,
இஸ்லாமிய வலது என்னு நீண்டகாலமாக அவர்கள் ஒத்துழைத்த
வரலாறு உள்ளதும் இருக்கும்;
இப்பொழுது அவர்கள் இராணுவ ஆட்சிக்கு.ழுவுடன் பேச்சுக்களை நடத்துகின்றனர்.
நவம்பர்
20
அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், RS
தங்கள் நோக்கம்
"அனைத்துச்
சக்திகளையும் ஒன்றுபடுத்துதல்", "ஒற்றை அணியாக நிற்றல்"
என்பதைத் தெளிவு படுத்தியது.
இது முதலில் எல்பரடேய் முன்வைத்த "தேசிய புனருத்தாரண"
அரசாங்கம் போன்ற அமைப்பிற்கு வேறு பெயர் கொடுத்துள்ளது
என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை;
அது இப்பொழுது இராணுவ ஆட்சிக்கு.ழுவினாலேயே முன்வைக்கப்பட்டுள்ளது.
|