WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
எகிப்து
Mass protests intensify against Egyptian junta
எகிப்திய இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிராக வெகுஜன எதிர்ப்புக்கள்
தீவிரமாகின்றன
By Alex Lantier
24 November 2011
அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு
அகற்றப்பட வேண்டும் என்று கோரி வெகுஜன ஆர்ப்பாட்ட
எதிர்ப்புக்கள் எகிப்து முழுவதும் நேற்று ஐந்தாவது நாளாகத்
தொடர்ந்த போது மோதல்களும் தொடர்ந்தன.
சனிக்கிழமை பொலிஸ் உண்மையான
வெடிபொருட்களையும் ரப்பர் தோட்டாக்களையும் கெய்ரோவில் தஹ்ரிர்
சதுக்கத்தில் கூடியிருந்த சில நூறு ஆர்ப்பாட்ட
எதிர்ப்பாளர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தைக் கலைக்கப்
பயன்படுத்தியபோது ஆர்ப்பாட்ட எதிர்ப்புக்கள்
தொடங்கின.
நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் பரவியதுடன்,
நூறாயிரக்கணக்கான மக்கள் தஹரிர் சதுக்கத்தை நிரப்பியதோடு,
எகிப்தின்
வெறுப்பிற்குட்டபட்ட பொலிஸ் படைகளை மேற்பார்வையிடும் உள்துறை
அமைச்சரகத்திற்கு முன்பும் பொலிஸுடன் மோதினார்கள்.
அலெக்சாந்திரியா,
போர்ட் சையத்,
க்வேனா,
அஸ்வான்,
அசியுட் இன்னும் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் அதிர்வை
ஏற்படுத்தின.
நாளை மில்லியன் மக்கள் கெய்ரோவில் ஆர்ப்பாட்ட அணிவகுப்பிற்கான
அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.
பெப்ருவரி மாதம் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கைக் கட்டாயப்படுத்தி
வெளியேற்ற நடந்த வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும்
எதிர்ப்புக்களுக்குப் பின் இவை மிகச் சக்தி வாய்ந்த
ஆர்ப்பாட்டங்களாக உள்ளன.
அதன் தலைவர்கள் நாட்டின் செல்வத்தின் பெரும் பகுதி மீது
கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள இராணுவத்திற்கு எதிராகத்
வெகுஜனங்கள் திரும்பியுள்ளனர்;
அதன் தலைவர்கள் நாட்டின் செல்வத்தின் பெரும் பகுதி மீது
கட்டுப்பாட்டைக் கொண்டு,
முபாரக்கிற்குப் பதிலாக வந்த பீல்ட் மார்சல் மஹ்மத் ஹுசைன்
தந்தவி தலைமையில் ஆயுதப் படைகளின் அதிஉயர் குழுவை
(SCAF)
அமைத்துள்ளனர்.
செவ்வாயன்று ஒரு சிவிலிய இடைக்கால அரசாங்கம் அடுத்த ஆண்டு
நிறுவப்படலாம் என்று கூறிய தந்தவியின் திட்டங்களை
எதிர்ப்பாளர்கள் நிராகரித்தனர்;
அது இராணுவ ஆட்சியைத்
தொடர்வதற்கு ஒரு முகப்பைத்தான் கொடுக்கும் என்று சரியான
முறையில் அச்சமுற்றதுதான் இதற்குக் காரணம்.
இராணுவமும் பாதுகாப்புப் படைகளும் பெரும் வன்முறையுடன்
ஆர்ப்பாட்ட எதிர்ப்புக்களை நசுக்கும் வகையில் இவற்றை
எதிர்கொண்டன.
குறிப்பிடத்தக்க வகையில்,
எகிப்திய அரசச் செய்தி ஊடகம் இராணுவத்தின் எகிப்திய மக்களுக்கு
எதிரான பெரும் வன்முறையை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்காவில்
வால் ஸ்ட்ரீட் முற்றுகை எதிர்ப்பாளர்களை பொலிஸ் அடக்கியதை
மேற்கோளிட்டது.
நேற்று காலை வரை குறைந்தப்பட்சம் 35
எதிர்ப்பாளர்கள்
கொல்லப்பட்டனர்,
கிட்டத்தட்ட
2,000
பேர் ஐந்து நாட்களில் ஆர்ப்பட்ட எதிர்ப்புக்களில் பொலிசாரால்
காயமுற்றனர்.
நேற்றுக் காலை எதிர்ப்பாளர்கள் காயமுற்றவர்களை
அம்புலன்ஸ்களிலும் ஸ்கூட்டர்களிலும் மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்கையில்,
கெய்ரோவில் இன்னும் மூன்று
எதிர்ப்பாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள்
வந்துள்ளன.
பாதுகாப்புப் படையினர் ஒரு பத்து வயதுச் சிறுவனை தலையில்
துப்பாக்கியால் சுட்டனர்;
அச்சிறுவன் உயிர்பிழைக்கும் வாய்ப்பு இல்லை.
"மக்கள்
பீல்ட் மார்ஷல் அகற்றப்பட வேண்டும் என விரும்புகின்றனர்",
"வெட்கம்,
வெட்கம்,
வெட்கம்,
இராணுவம் புரட்சியாளர்களைக் கொல்கிறது"
என்று கெய்ரோவில் ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டனர்.
அரசிற்குச் சொந்த நாளேடான அல் அஹ்ரம் நேற்று மாலை
மகம்மத் மஹ்மூத் தெருவில் உள்துறை அமைச்சரகத்திற்கு அருகே
முஸ்லிம் மதகுருமார்கள் பேசிய இரண்டு மணி நேரச் சமாதானத்தையும்
முறித்தது என்று தகவல் கொடுத்துள்ளது. "நாங்கள் நீங்கமாட்டோம்,
SCAF
தான்
போகவேண்டும்",
"முஸ்லிம்களும்
கிறிஸ்துவர்களும் ஒரே பக்கத்தில் உள்ளனர்"
என்று கோஷமிட்ட எதிர்ப்பாளர்கள்மீது பொலிசார் அதிகக்
கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
அலெக்சாந்திரியாத் துறைமுக நகரில் எதிர்ப்பாளர்கள் பொலிஸ்
தலைமையகத்திற்கு வெளியே தடுப்புக்களை நிறுவினர்;
பாதுகாப்புப் படைகளால் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
ஒரு எதிர்ப்பாளர் சுட்டுக்
கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அல் ஜசீரா
எழுதியுள்ளபடி,
அலெக்சாந்திரியாவில் நடந்த பொலிஸ் தாக்குதல்களில் "தற்காப்பு"
கூறுபாடு இருந்தது;
இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிராகப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு
எதிர்ப்பாளர்கள் தங்கள் ஆயுதக் கிடங்கைத் தாக்கி அவற்றை
எடுத்துக் கொண்டுவிடக்கூடும் என்று பொலிசார் அச்சமுற்றனர்.
நிருபர் ரவ்யா ராகே,
"பொலிஸ்
தலைமையகம் சட்டம்,
ஒழுக்கின் இடம் என்பது
மட்டும் இல்லாமல் ஆயுதக்கிடங்கும் உள்ள இடம்.
பொலிசார் எதிர்ப்பாளர்கள் அதைக் கைப்பற்ற விட முடியாது"
என்று கூறியுள்ளார்.
பொலிஸ் படைகள் மிக அதிகமாக கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப்
பயன்படுத்துவது பற்றி வினாக்கள் வெளிப்பட்டுள்ளன;
குறிப்பாக பலர் இப்புகையினால் மூச்சுத் திணறி இறந்துள்ளது
பற்றிய தகவல்கள் வந்தபின்.
தஹ்ரிர் சதுக்கத்தில் ஒரு கள மருத்துவமனையில் வேலை செய்யும்
கலிட் ஹம்தி,
அல் ஜசீராவிடம் கூறினார்;
"பலர்
மயக்கமுற்றதை நாங்கள் கண்டுள்ளோம்,
இந்த அளவிற்கு அதை முன்னால்
பார்த்ததில்லை.
இங்கு மக்கள் ஆஸ்த்மா,
சில சமயம் உடல் அதிர்வுகளுடன் வருகின்றனர்--முன்னாள் இப்படி அடிக்கடி
ஏற்பட்டதில்லை."
ஆர்ப்பாட்டங்களுக்குச் செல்கையில் புகைத்தடுப்பு மறைப்புக்களை
அணியும் வழக்கத்தைப் பல எதிர்ப்பாளர்கள் பின்பற்றுகின்றனர்.
நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார மந்திரி அமர்
ஹெல்மி சனிக்கிழமையில் இருந்து எதிர்ப்பாளர்களுக்கு எதிராக
உண்மையான தோட்டாக்கள் பயன்படுத்தப்படுவதை ஒப்புக்கொண்டார்--முன்னதாக
இது பொலிசால் மறுக்கப்பட்டு வந்தது.
ஆனால் எகிப்தியப் பொலிஸ்
மூன்று வாயுக்கள் சேர்ந்த கண்ணீர்ப்புகைப் பொருட்களைப்
போட்டுள்ளனர் என்பதை அவர் மறுத்தார்;
கண்ணீர்ப்புகைத் தொகுப்புக்கள் அமெரிக்காவிலிருந்து வருபவை
என்றும் கூறினார்.
"கண்ணீர்ப்
புகைக் குண்டுதான் வலிப்பு,
மயக்க அடையாளங்களைக்
கொடுக்கிறது"
என்றும் அவர் கூறினார்.
Combined Systems Inc.
மற்றும்
NonLethal Technologies Inc.,
என்னும் இரு முக்கிய நிறுவனங்கள்தான்
எகிப்திற்கு கண்ணீர்ப்புகைத் தொகுப்பை ஏற்றுமதி செய்கின்றன.
இரண்டும் அமெரிக்காவில்
பென்சில்வானியா மாநிலத்தில் உள்ளன.
இந்த ஆண்டு மத்திய கிழக்கில் வெடித்துள்ள புரட்சிப்
போராட்டங்களுக்கு எதிராக மேற்கத்தையச் சக்திகள் கூறிவந்த
பொய்களை அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ ஆட்சிக் குழுவிற்கு
எதிரான வெகுஜன எதிர்ப்புக்கள் அம்பலப்படுத்திவிட்டன.
எகிப்திய இராணுவத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு 1.3
பில்லியன் டொலர்கள்
அளவிற்கு நிதியளிக்கும் வாஷிங்டன்
SCAF
எகிப்தில்
"ஒரு
ஜனநாயக மாற்றத்திற்கு"த்
தலைமை தாங்குகின்றது எனக் கூறி அதற்கு ஆதரவைக் காட்டி வருகிறது.
அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இராணுவத்தின்
சர்வாதிகார ஆட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறது.
அமெரிக்க அரசாங்கமும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் மீண்டும்
மேற்கத்தைய ஆதரவுடைய ஒரு கைப்பாவை ஆட்சிக்கு எதிரான
புரட்சிகரப் போராட்டங்களை நசுக்கவும் நிராயுதபாணியாக்கவும்
செய்வதற்குப் பெருமுயற்சி எடுக்கின்றன.
தற்பொழுது அமெரிக்க அரசாங்கம் இன்னும் தந்தவியின்
திட்டங்களுக்கு ஆதரவைத் தொடர்கிறது.
புதனன்று அமெரிக்க அரச அலுவலகச் செய்தித் தொடர்பாளர்
விக்டோரியா நூலண்ட் தந்தவி நிர்ணயித்துள்ள
தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு அதிகாரம்
ஒப்படைக்கப்படும் என்னும் காலக்கெடுவான ஜூலை
2012
க்கு ஒப்புதல் கொடுத்துள்ளார்.
மேற்கத்தைய செய்தி ஊடகம் பெருகிய முறையில் முதலில்
உத்தியோகபூர்வ
"எதிர்க்கட்சி"
அரசியல்வாதி மஹ்மத் எல்பரடெய் முன்வைத்த திட்டமான முறையான
அதிகார மாற்றம்,
இராணுவ ஆட்சி தேர்ந்தெடுக்கும் ஒரு தலைவரின் கீழ்
அமைக்கப்படும் ஒரு "தேசிய
புனருத்தாரண"
அரசாங்கத்திற்கு அளிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவைக்
கொடுத்துவருகிறது.
SCAF
கட்டுப்பாட்டில் நடக்கும் தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது,
உடனடியாக ஒரு சிவில் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்று
அழைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபென்
செய்பெர்ட் கூறினார்:
"ஒரு
சிவிலிய அரசாங்கத்திற்கு விரைவான மாற்றம் என்னும்
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை ஜேர்மனிய அரசாங்கத்தின்
பார்வையில் புரிந்து கொள்ளக்கூடியதே."
இத்திட்டங்கள்
SCAF
ஆட்சி விரைவில் சரியக்கூடும் என்ற அச்சத்தினால் பெருகிய
முறையில் உந்துதல் பெற்றுள்ளது.
"எகிப்தின்
தண்டனைத்தன்மைத் தேர்வுகள்"
என்ற தலைப்புடைய கட்டுரையில் நேற்றைய நியூ யோர்க் டைம்ஸ்
இல் ஆண்ட்ரூ ரேனால்ட்ஸ் எகிப்து
"நவம்பர்
28ல்
தொடங்கும் ஒரு பேரழிவு தரக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்களை
நோக்கிச் செல்கிறது;
இது நாட்டை உள்நாட்டுப்போரின் விளிம்பிற்குக் கொண்டு
செல்லக்கூடும்"
என்று எழுதியுள்ளார்.
எகிப்தி கோப்டிக் கிறிஸ்தவர்கள்
"வலதுசாரி
முஸ்லிம் பிரதர்ஹுட் ஆதிக்கம் நிறைந்த அரசாங்கம் குறித்து
அச்சப்படுகின்றனர் என்பதையும் தேர்தல் விதிகள் இன்னமும்
பதவியில் இருப்பவர்களுக்கு ஆதரவாகத்தான் பாராளுமன்றத்
தேர்தல்களில் உள்ளன என்று ரேனால்ட்ஸ் மேற்கோளிட்டுள்ளார்.
பிரிட்டனின் கார்டியனில் அஹ்டல் சௌவிப் எழுதினார்: "இப்பொழுது
முக்கியமான விடயம்
SCAF
அதிகாரத்தை ஒப்படைக்கும் வரை உறுதியாக இருப்பது என்பதாகும்.
ஆனால் யாரிடம்?
ஜனாதிபதி வேட்பாளர்களாக ஆகலாம் என்னும் திறனுடைய நால்வரில்
ஒருவரின் தலைமையிலுள்ள அரசாங்கத்திற்கு--அந்த
அரசாங்கம்தான் தேர்தல்களை நடத்த வேண்டும்."
இந்த விமர்சனங்கள் முக்கிய கருத்தைத் தவிர்க்கின்றன:
அதாவது அத்தகைய அரசாங்கம் பிற்போக்குத்தனமாக இருக்கும்,
எகிப்திய மக்களால் நெறியற்றது என நிராகரிக்கப்படும்--ஏனெனில் அது எகிப்திய
தொழிலாள வர்க்கப் புரட்சிப் போராட்டங்களில் இருந்து
வெளிப்படாது,
மாறாக
SCAF
ன் திட்டங்களில் இருந்து வெளிப்படும்.
அதன் இலக்கு எகிப்தின்
ஆளும் வர்க்கத்தின் செல்வம்,
அதிகாரம் ஆகியவற்றைபயும் அதன் முக்கிய ஏகாதிபத்திய
சக்திகளுடனான பிணைப்புக்களையும் பாதுகாக்கும்,
எகிப்திய இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான வெகுஜனப்
போராட்டங்களின் பொதுத் தர்க்கமானது எகிப்திய தளபதிகள்,
நேட்டோ அல்லது வாஷிங்டன் நிர்ணயிக்கும் மற்றொரு ஆட்சியை
ஏற்பதற்குப் பதிலாக,
தொழிலாள வர்க்கம் இராணுவ ஆட்சியை தூக்கியெறிந்து,
அதிகாரத்தை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
இதற்கு ஒரு புதிய சோசலிச முன்னோக்கு தேவைப்படுகிறது.
எகிப்தினதும் உலகத்தினதும்
பொருளாதார ஆதாரவளங்கள் தொழிலாள வர்க்கத்தினுடைய ஜனநாயகக்
கட்டுப்பாட்டின்கீழ் இருத்தப்படுவதை போராட்டத்தின்
அடிப்படையாகக் கொண்டு,
தொழிலாள வர்க்கம் அதன்
சொந்த அமைப்புக்களை நிறுவி இராணுவ ஆட்சியை தூக்கியெறிந்து,
அரச அதிகாரத்தை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
இந்த முன்னோக்கிற்கு மிக ஆபத்தான எதிர்ப்பாளர்கள் எகிப்தின்
"இடது"
எதிர்ப்புக் கட்சிகள் ஆகும்.
இவைகள் இஸ்லாமியவாதிகளுடன் சேர்ந்து ஒரு திவாலான முன்னோக்கை
வளர்க்கின்றனர்,
இராணுவ ஆட்சியின் கீழ்
"ஜனநாயக
முறைக்கு"
வலியுறுத்துகின்றனர்.
இஸ்லாமியவாதக் கட்சிகள் ஆட்சியின் முக்கிய எதிர்ப்பாளர்கள்
என்று தம்மைக் காட்டிக் கொள்ள அனுமதிக்கும் இத்தகைய அரசியல்
பெருகிய முறையில் தொழிலாள வர்க்கத்தால் வெறுக்கப்படுகின்றன.
செவ்வாய் இரவு,
எகிப்தின் சமூக ஜனநாயகக் கட்சியின் அபு எல்கார்,
கட்சியின் முடிவான
SCAF
ன் துணைத் தலைவர் சமி அனன் உடன் பேச்சுக்களில் பங்கு பெறுதல்
என்பதிலிருந்து தன்னை ஒதுக்கிவைத்துக் கொள்ளும் கட்டாயத்தை
உணர்ந்தார்.
இராணுவ ஆட்சியின்
கூற்றுக்களான
"வன்முறை
உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்"
என்பதைத் தான் நம்புவதாகக்
கூறிய அவர்,
"SCAF
உடனான பேச்சுக்களில் பங்குபற்றியதற்கு உண்மையில்
வருத்தப்படுகிறேன்"
என்றார். |