சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Egyptian military junta carries out deadly crackdown on protesters

எகிப்திய இராணுவ ஆட்சிக் குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பயங்கரமான நடவடிக்கையை பிரயோகிக்கிறது

By Johannes Stern 
21 November 2011
use this version to print | Send feedback

சென்ற வார இறுதியில் எகிப்தில் அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ ஆட்சிக் குழு கொடும் வன்முறைத் தாக்குதலை ஆர்ப்பாட்டக்காரர் மீது நடத்தி பலரைக் கொன்றதுடன் 700 பேருக்கும் மேலானவர்களைக் காயப்படுத்தியது. இந்த அடக்குமுறை நவம்பர் 28ம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்கூட்டியே வந்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச வன்முறைக்கு எதிராக எதிர்த்து நிற்பதுடன், சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கைக் கட்டாய இராஜிநாமா செய்ய வழிவகுத்த வெகுஜன ஆர்ப்பாட்ட எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு பத்து மாதங்களுக்கு பின்னரும் ஆயுதப்படைகளின் அதிஉயர் சபைக் (SCAF) குழு அதிகாரத்தை கைமாற்றாமல் வைத்திருப்பதை எதிர்த்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

23 வயதான அஹ்மட் முஹமட் அஹ்மட் சனிக்கிழமையன்று கெய்ரோவில் பொலிசாரால் உண்மையான துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் நெஞ்சில் குண்டடிபட்டதையடுத்து இறந்து போனார். மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் அலெக்சாண்ட்ரியாவில் ஸ்னைப்பர்களால் தலையில் சுடப்பட்டு இறந்து போனார். பொலிசாரின் வார இறுதித் தாக்குதல்களினால் பெருகியுள்ள இறப்பு எண்ணிக்கை இப்பொழுது 5 என்று உள்ளது, இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தஹ்ரிர் சதுக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்களில் இப்பொழுது வெளிப்படும் காட்சிகள்
ஜனவரி 28 ஐ நினைவுபடுத்துகின்றன; அப்பொழுது ஏராளமான ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்கள் முபாரக்கின் இழிந்த அம்ன் அல் மர்கசி (மத்திய பாதுகாப்புப் படைகள்) உடன் கடுமையான மோதல்களை மேற்கொண்டனர். இந்த மோதல்கள் பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் அடங்கிய ஒரு அமைதியான உள்ளிருப்புப் போராட்டத்தை தாக்கியபோது வெடித்தன. அவர்கள் இப்பொழுது தங்களைபுரட்சியில் காயமுற்ற கூட்டணியினர் என அழைத்துக் கொள்கின்றனர். வெறுக்கப்படும் இராணுவக் குழு மற்றும் அதன் தலைவர் பீல்ட் மார்ஷல் மஹமத் ஹுசைன் தந்தவி ஆகியோருக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

சதுக்கத்தில் இருந்து ஆர்பாட்ட எதிர்ப்பாளர்களை அகற்றுவதற்கு பொலிசார் தாக்குதலை தொடங்கியவுடன், இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் வெள்ளமென வந்து, உள்ளிருப்பு போராட்டத்தை பாதுகாக்க முற்பட்டனர். பாதுகாப்புப் படைகளும் இராணுவப் பொலிசும் பல மணி நேரம் எதிர்ப்பாளர்களை தொடர்ந்து தாக்கின; இரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள், எரிவாயுப் பிரிவு மற்றும் பொலிஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. உண்மையான தோட்டாக்கள் சுடப்பட்டன, கிரேப்ஸ்ஹாட், ரப்பர் தோட்டாக்கள் ஆகியவையும் உபயோகிக்கப்பட்டன.

ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்கள் கற்கள், பெட்ரோல் குண்டுகள் என்று தங்களைக் காத்துக்கொள்ள வைத்திருந்தனர்; கண்ணிர்ப்புகைக்குண்டை பொலிஸ் மீது திருப்பி வீசினர். அவர்கள் இராணுவக் குழுவும் தந்தவியும் விழ வேண்டும் என்ற கோஷங்களை முழக்கமிட்டனர் மேலும் பாதுகாப்பு படையினர்கள் காடையர்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர் என்னும் கோஷம், முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தின்போது புகழ் பெற்றது, இப்பொழுது சதுக்கம் முழுவதும் எதிரொலித்தது.

 

நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்களும் செய்தியாளர்களும் கைது செய்யப்பட்டனர்; பல சமயங்களில் அவர்களின் உடமைகளும் சூறையாடப்பட்டன மற்றும் அவர்கள் மிருகத்தனமாக தாக்கவும்பட்டனர். இவர்களுள் Al Ahram Online உடைய நிருபரான அஹ்மத் பெடெஹாவும் இருந்தார். “அவர்கள் எங்களை கடுமையாகத் தாக்கினர். பெண்கள், ஆண்கள் என்று பார்க்கவில்லை என்று ஒரு 32 வயது கணக்கியல் பேராசிரியர் ஒருவர் AFP  இடம் தெரிவித்தார்.

எகிப்திய மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரான கடா ஷாபெண்டர், AP இடம், “பொலிஸ் இரப்பர் தோட்டாக்களை நேரடியாக ஒரு நபரின் தலையைக் குறிபார்த்துச் சுடுகின்றனர். தலையை நோக்கிச் சுடுமாறு ஒரு அதிகாரி உத்தரவு கொடுத்ததை நான் கேட்டேன் என்றார்.

ஒரு முக்கிய ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளரான மாலெக் முஸ்தாபா, இரப்பர் தோட்டா ஒன்றினால் தாக்கப்பட்டதையடுத்து ஒரு கண்ணை இழந்துவிட்டார்.

பிரதம மந்திரி எசாம் ஷரப் ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்களை சதுக்கத்திலிருந்து அகலுமாறு கூறினார்; எகிப்திய அரச தொலைக்காட்சி, எதிர்ப்பாளர்களைகலகக்காரர்கள், “குண்டர்கள் என்று விவரித்தது.

வெகுஜன எதிர்ப்புக்கள் இப்பொழுது அலெக்சாந்த்திரியா, சூயஸ், மன்சோரா மற்றும் குப்ரா அல் மஹல்லா ஆகிய இடங்களிலும் வெடித்துள்ளன. அலெக்சாந்த்ரியாவில் அஹ்மத் அப்டெல் காதிர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், “நாங்கள்தான் ஆட்சியின் தலைவரை [ஹொஸ்னி முபாரக்] ஐ வீழ்த்துவதில் வெற்றி கண்டோம். மரத்தின் மற்ற பகுதிகள் இன்னும் அப்படியே நீடிக்கின்றன.

அரச தொலைக்காட்சி தஹ்ரிர் சதுக்க எதிர்ப்புக்களை அடக்கியதற்கு வோல் ஸ்ட்ரீட் முற்றுகை எதிர்ப்பாளர்கள் மீது அமெரிக்கப் பொலிஸ் எடுத்த நடவடிக்கைகளை மேற்கோளிட்டது. எகிப்தில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்ட்ட பல கண்ணீர்ப்புகைச் சாதனங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்பது முக்கியத்துவத்தை கொண்டது.

SCAF உறுப்பினரான ஜேனரல் மொஹ்சென் எப் பங்கரி, மார்ச் மாதம் உள்ளிருப்புக்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றை சட்டவிரோதமாக்கிய மார்ச்சில் வெளிவந்த சட்டத்தின்கீழ் பொலிசாரால் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறினார். “நடந்துகொண்டிருப்பதன் இலக்கு அரசின் முதுகெலும்பை அசைப்பதாகும்; அதாவது இராணுவத்தினுடையதை என்று அவர் அறிவித்தார். “பாதுகாப்பு முறையாக அமூல்படுத்தப்படவில்லை என்றால், நாம் சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்துவோம். தவறு செய்பவர்கள் அதற்கு விலை கொடுக்க வேண்டும்.

இராணுவ ஆட்சி எகிப்திய புரட்சியை இரத்தத்தில் மூழ்கடிப்பதற்கு மிகப் பெரிய வன்முறைக்கு தயாரிப்புக்களை நடத்துகிறது. இவ்வாறு செய்கையில், அது எகிப்திய இராணுவத்தின் முக்கிய ஆதரவாளரான வாஷிங்டனின் ஆதரவைக் கொண்டுள்ளது. நவம்பர் 15ம் திகதி, தந்தவி மற்றும் எகிப்திய ஆயுதப் படைகளின் தலைவரான சனி அனன் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்த அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டின் தலைவர் ஜேம்ஸ் என். மாட்டிஸ் கெய்ரோ வந்திருந்தார். SCAF  ஐ மாட்டிஸ் பாராட்டியதாக கூறப்படுகிறது; இவர்கள் அமெரிக்க-எகிப்திய இராணுவ உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் விவாதித்தனர்.

இராணுவத்தை, எகிப்திய முதலாளித்துவ அரசின் முதுகெலும்பாக அமெரிக்கா கருதுகிறது; அத்துடன் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்கிறது, மத்திய கிழக்கில் மேற்கத்தைய சக்திகளின் ஏகாதிபத்திய நலன்களையும் பாதுகாக்கும் எனக் கருதுகிறது. பெப்ருவரி 11ல் முபாரக்கை அகற்ற வழிவகுத்த வெகுஜன எழுச்சிக் காலத்தில் இருந்தே, ஒபாமா நிர்வாகம்  எகிப்திய தொழிலாளர்கள் சமூக சமத்துவத்திற்கும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் நடத்தும் வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க SCAF உடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது.

எகிப்திய தொழிலாளர் இயக்கத்தின் சுயாதீன இயக்கம் குறித்த இந்த அச்சம், முழு எகிப்திய ஆளும் உயரடுக்கினால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மேலும் முபாரக்கின் வீழ்ச்சிக்குப்பின், உத்தியோகபூர்வ, பகுதி உத்தியோகபூர்வ அரசியல் சக்திகள் அனைத்தும் அவைகள் இஸ்லாமியவாதிகள் என்றாலும், தாராளவாதிகள் அல்லது குட்டி முதலாளித்துவஇடது என்றாலும் இராணுவ ஆட்சிக்கு ஆதரவைக் கொடுத்து முபாரக்கின் தளபதிகள் ஒருஜனநாயக முறையிலான மாற்றத்திற்கு ஏற்பாடு செய்வர் என்று கூறுகின்றன.

புதுப்பிக்கப்பட்டுள்ள மோதல்கள் உத்தியோகபூர்வ எதிர்த்தரப்பின் முக்கிய நபர்களை அவர்களுடைய கவலையை வெளிப்படுத்தத் தூண்டியுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்களான முகம்மத் எல்பரடெய் மற்றும் அமி மௌசா ஆகியோர் SCAF பயன்படுத்தும் அதிக வன்முறையைக் குறைகூறியுள்ளனர்; இது இன்னும் பரந்த எதிர்ப்புக்களை தூண்டும் என்று அஞ்சுகின்றனர். மௌசா எச்சரித்தார்: “நாம் ஒரு ஆபத்தான நிலையில் உள்ளோம். நியாயப்படுத்தப்பட முடியாத வன்முறைப் பயன்பாட்டை நாம் நிறுத்த வேண்டும். உரையாடலில் ஈடுபட வேண்டும். அமைதியான உள்ளிருப்புக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் வன்முறையில் அடக்குவது நிலைமையை மோசமாக்கத்தான் செய்யும்.

 

முஸ்லிம் பிரதர்ஹுட்டின் (MB) தலைமை வழிகாட்டியான மஹ்மத் படிஅனைத்து எகிப்தியர்களும் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து ஜனவரி 25ம் தேதித் தீர்மானத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அல் மஸ்ரி அல் யுவாமின் பேச்சாளரான மஹ்முத் கோஸ்லான் எதிர்ப்பாளர்களும் எகிப்திய அதிகாரிகளும் கூட்டாகஎகிப்து ஒரு முடிவிலா வன்முறைத் தொடர்பூசல்களில் அகப்பட்டுக் கொள்ளும் நோக்கங்களை அடைய வேண்டும் என்று விரும்பவர்களை தடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

 

சனிக்கிழமை மோதல்கள் வெடிப்பதற்குமுன் முஸ்லிம் பிரதர்ஹுட்டின் இஸ்லாமியவாதிகளும் பல சலபிஸ்ட்டுக் குழுக்களும் வெள்ளியன்று தஹ்ரிர் சதுக்கத்தில்அரசியலமைப்பின் உயர்ந்த கொள்கைகளை கொண்டுள்ள ஆவணம் ஒன்றை எதிர்ப்பதற்கு வெகுஜன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. அந்த அறிக்கை துணை பிரதம மந்திரி அலி அல்-செல்மியினால் நவம்பர் 1 ம் திகதி வெளியிடப்பட்டது. இராணுவம் சட்டத்தைவிட உயர்ந்து நிற்பதாகவும் இராணுவப் படைகள் குறித்த சட்டம் எதற்கும் இசைவு தரும் உரிமையைக் கொண்டுள்ளதாகவும், புதிய அரசியலமைப்பு இயற்றப்படுவதின்மீது கட்டுப்பாடு கொள்ளும் உரிமை இருப்பதாகவும் அது கூறுகிறது.

இந்த ஆவணம், இஸ்லாமியவாதிகளால் தாங்கள் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவுவதில் இருந்து இராணுவம் தடுக்க முற்படும் ஒரு நடவடிக்கை என்று தாக்குதலுக்கு உட்பட்டது. வெள்ளிக்கிழமை இஸ்லாமியவாதிகள் முபாரக் அகற்றப்பட்டதற்குப்பின் ஜூலை 29ல் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குப்பின் ஏராளமாகக் கூடி ஆதிக்கம் செலுத்திய ஆர்ப்பாட்டம் ஆகும் இது.

பிரதர்ஹுட் மற்றும் அதன் அரசியல் பிரிவான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சி மற்றும் சலாபிஸ்ட்டுக்கள் அல் நூர், மற்றும் அல் அசலா கட்சிகளால் முக்கியமாக அமைக்கப்பட்டது ஜனவரி 25 வெகுஜன எதிர்ப்புக்களை எதிர்த்தது; அதுவோ இறுதியில் முபாரக்கின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. மேலும் அவருடைய அகற்றுதலைத் தொடர்ந்து மில்லியன் மக்கள் கொண்ட ஆர்ப்பாட்ட அணிவகுப்புக்கள் பலவற்றையும் புறக்கணித்தது.

இஸ்லாமியவாதிகள் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைக் கண்டித்து இராணுவ ஆட்சிக்குழு மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றனர்.

கடந்த வாரம் அமெரிக்க அரசாங்கத்தின் சிறப்பு மத்திய கிழக்கு விவகாரங்களின் ஒருங்கிணைப்பாளர் வில்லியம் டேலம் எகிப்தில் ஒரு இஸ்லாமியவாத அராசாங்கம் நிறுவப்பட்டால் அமெரிக்காதிருப்தி அடையும் என்று அறிவித்தார். வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவான அட்லான்டிக் குழு அரங்கு ஒன்றில் அவர், “மக்கள், கட்சிகள், இயக்கங்களை நாம் அவற்றின் செயல்படுகளின் மூலம் தீர்மானிக்க வேண்டுமே அன்றி, அவைகள் எப்படி அழைக்கப்படுகின்றன என்பதை ஒட்டி அல்ல என அறிவித்தார்.

சின் அபிடைன் பென் அலி துனிசியாவிலும், எகிப்தில் முபாரக்கும் வீழ்ச்சி அடைந்ததிலிருந்து துனிசியாவில் இஸ்லாமியவாத என்னஹ்டா கட்சி மற்றும் எகிப்தில் பிரதர்ஹுட் கட்சியுடனும் அதன் உறவுகளை அமெரிக்கா புதுப்பித்துக் கொண்டுள்ளது. லிபியாவில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் முயம்மர் கடாபியை அகற்றி இடைக்காலத் தேசியக் குழுவைப் பதவியில் இருத்தப் போரிட்டன; அதில் இஸ்லாமியவாதிகள், முன்னாள் கடாபி மந்திரிகள் மற்றும் சிஐஏ சொத்துக்கள் ஆகியோர் உள்ளனர்.

புரட்சி முன்னேறுவதற்கு எகிப்திய தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவைப்படுகிறது. சமீபத்திய மாதங்களின் அனுபவங்களானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவைக் கொண்டுள்ள எகிப்திய இராணுவக் குழுவை, எதிர்ப்புக்கள் அல்லது வேலைநிறுத்தங்கள் மூலம் ஜனநாயக, சமூக சீர்திருத்தங்களை செய்வதற்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்பதைக் காட்டுகின்றன. இது தூக்கியெறியப்பட்டு ஒரு தொழிலாளர் அரசாங்கம் இதற்குப் பதிலாக நிறுவப்பட வேண்டும்.

அத்தகைய முன்னோக்கிற்கு மிக உறுதியான எதிரிகள் எகிப்திய குட்டி முதலாளித்துவஇடது சக்திகள், புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS), மற்றும் சோசலிஸ்ட் மக்கள் கூட்டணிக் கட்சி (Socialist Popular Alliance Party) போன்றவை ஆகும். SCAF பெப்ருவரியில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டபின், இக்குழுக்கள் தொழிலாள வர்க்கம் அதன் நம்பிக்கையை புதிய ஆட்சி தொடக்கும் சீர்திருத்தங்கள், அது திரிக்கும் தேர்தல் வழிவகை ஆகியவற்றின்மீது வைக்க வேண்டும் என்று அறிவித்தன. பின்னர் அவை மே 27, ஜூலை 8 ஆகிய நாட்களில் நடைபெற்ற வெகுஜன எதிர்ப்புக்களின்போது முன்வைக்கப்பட்ட ஓர் இரண்டாம் புரட்சிக்கான மக்கள் கோரிக்கையை எதிர்த்தன.

புரட்சிகரப் போராட்டத்தின் ஆரம்ப மாதங்களில் அற்ப பங்குகளையே கொண்டிருந்த இஸ்லாமியவாத வலது தற்போதைய ஆட்சிக் குழுவிற்கு எதிரான எதிர்ப்பில் செல்வாக்கு பெற்றதற்கு இக்கட்சிகள் அரசியல் ரீதியாக பொறுப்பாகும், இவர்கள் இராணுவக் குழுவிற்கு ஆதரவு கொடுத்திருந்தனர்.

அக்டோபர் 16ம் திகதி RS தான் தேர்தல்களில் நிற்க இருப்பதாக அறிவித்து, இராணுவ சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தி, வலுப்படுத்தும் வழிவகைக்கு நெறித்தன்மை கொடுக்கிறது. தங்கள் முடிவை நியாயப்படுத்தும் வகையில், RS அக்டோபர் 23ம் திகதிதேர்தல்களும் புரட்சிகர அவசர செயல்களின் தவறும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. எகிப்திய தொழிலாள வர்க்கம் அதிக வன்முறையை எதிர்ப்பாளர்கள், வேலைநிறுத்தம் செய்வோர் ஆகியோருக்கு எதிராக இராணுவ ஆட்சி நடத்துவதை எதிர்கொள்ளும் நிலையில், தொழிலாளர்களிடம் அவர்கள் புரட்சிகர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும், தேர்தல்களில் குவிப்புக் காட்ட வேண்டும் என்று RS கூறுகிறது.